Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது.

இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன்.

கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது.

இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம் உறுதிப்படுத்திய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எந்த விதமான அறிவியல் அறிவும் இதற்கு தேவையில்லை. ஒரு கைத்தொலைபேசி போதும்.

சந்தைக்கு வந்து முதல் நாளே எதிர்பார்ப்பினை விட அதிக விலைக்கு சென்றது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி Web3 நோக்கியது.

யாழ் உறவுகள் யாராவது இந்த coins வைத்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

pi சிறிதளவு mine செய்து இருக்கிறேன்

ஆனாலும், PI அவ்வளவு பெரிதாக கூடவில்லை

எதிர்பார்க்கப்பட்ட விலைஅளவில் அடைந்து உள்ளது

ஆனல், கடந்த்த 24 மாதங்களில், PI (இப்போதைய tge க்கு முன்), P2P ஊடக, $40 க்கும் விலைபோனது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

pi சிறிதளவு mine செய்து இருக்கிறேன்

ஆனாலும், PI அவ்வளவு பெரிதாக கூடவில்லை

எதிர்பார்க்கப்பட்ட விலைஅளவில் அடைந்து உள்ளது

ஆனல், கடந்த்த 24 மாதங்களில், PI (இப்போதைய tge க்கு முன்), P2P ஊடக, $40 க்கும் விலைபோனது.

உத்தியோக பூர்வமாக சில நாட்களிற்கு முன்னர் தான் சந்தைக்கு வந்திருந்தது. நீங்கள் சொல்வது எல்லாம் fake coins. ஒரு வருடத்திற்கு முன்னர் சீக்கிரமாக சந்தைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பு வந்ததுமே பல தளங்கள் அதன் பெயரில் விற்கத்தொடங்கிவிட்டார்கள் (IOU ) என்று சொல்வார்கள் இதனை.

உங்களின் miningrate மிக குறைவு தான். அது தொடர்ச்சியாக குறைந்து கொண்டே போகும். இது சர்வ சாதாரணம் தான். முயற்சியை கைவிடாமல் தொடருங்கள். தொலைநோக்கில் பயன் தரலாம். தராமல் போனாலும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. Web3 இணைய வடிவம் பரவலாக தொடங்கும் பொழுது இதன் விலை அதிகரிக்கலாம். 10 வருடம் கூட ஆகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஊர்க்காவலன் said:

நீங்கள் சொல்வது எல்லாம் fake coins.

fake coins அல்ல என்று தான் நினைக்கிறன். 24 மாதங்களுக்கு முதலே கைமாறு தொடங்கி விட்டது.

அனால், PI செய்தது, mining cycle செய்து முடித்தவுடன், mine செய்யப்பட்ட pi coins உங்களின் PI wallet க்குள் வந்துவிடும்.

stake செய்தலே mining system இல் இருக்கும்.

அனால் , அங்கீகாரம் இல்லை. அனால், coins ஐ பரிவதனை செய்யலாம், விடயம் தெரிந்தால்.

(பல mining இல் உங்கள் சொந்த wallet க்குள் வராது, உங்கள் mining account இல் இருக்கும், பின் அவர்கள் claim பண்ண சொன்ன நேரத்தில் எடுக்க வேண்டும்)

இப்படி இல்லாமல், mining முடிவில் mining செய்த PI உங்களின் wallet இல்.

இது நான் புரிந்தது, என்னிடம் சொல்லியவர்களிடம் இருந்து,

நான் ஆய்ந்து பார்க்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

fake coins அல்ல என்று தான் நினைக்கிறன். 24 மாதங்களுக்கு முதலே கைமாறு தொடங்கி விட்டது.

அனால், PI செய்தது, mining cycle செய்து முடித்தவுடன், mine செய்யப்பட்ட pi coins உங்களின் PI wallet க்குள் வந்துவிடும்.

stake செய்தலே mining system இல் இருக்கும்.

அனால் , அங்கீகாரம் இல்லை. அனால், coins ஐ பரிவதனை செய்யலாம், விடயம் தெரிந்தால்.

(பல mining இல் உங்கள் சொந்த wallet க்குள் வராது, உங்கள் mining account இல் இருக்கும், பின் அவர்கள் claim பண்ண சொன்ன நேரத்தில் எடுக்க வேண்டும்)

இப்படி இல்லாமல், mining முடிவில் mining செய்த PI உங்களின் wallet இல்.

இது நான் புரிந்தது, என்னிடம் சொல்லியவர்களிடம் இருந்து,

நான் ஆய்ந்து பார்க்கவில்லை.

24 மதங்களிற்கு முன்னர் தான் அவர்கள் அறிவித்திருந்தார்கள் விரைவில் சந்தைக்கு வரும் என்று. அன்று தொடக்கம் சில தளங்கள் அதன் பெயரில் விற்பனையை தொடங்கியிருந்தார்கள். அதாவது முற்பதிவு போன்றது. கையில் இல்லாத ஒன்றை மாறிமாறி விற்றுக்கொள்வது போன்றது. இதில் இப்பொழுது உள்ள சிக்கல் என்னவென்றால் Pi Network அவர்களை (இன்னும்) அங்கீகரிக்கவில்லை. அதாவது Pi wallet இல் இருந்து அவர்களிற்கு coins அனுப்ப முடியாது.

உங்களின் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் உறுதிப்படுத்தியவுடன் அது வரை மைனிங் செய்தவை உங்களின் wallet க்கு வந்து விடும்.

இப்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பட்ட விற்பனை தளங்களை இங்கே சென்று பார்வையிடலாம்.
https://minepi.com/kyb-list/?_gl=1*ioiuju*_up*MQ..*_ga*NDQxMDE2ODU2LjE3NDA0MDczMDM.*_ga_3HN8DY36WY*MTc0MDQwNzMwMy4xLjEuMTc0MDQwNzMwNS4wLjAuMA..

நான் கிட்டத்தட்ட இதில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டு வந்திருக்கிறேன். உதவிகள் தேவை என்றால் அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஊர்க்காவலன் said:

உங்களின் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் உறுதிப்படுத்தியவுடன் அது வரை மைனிங் செய்தவை உங்களின் wallet க்கு வந்து விடும்.

ஆம், நான் அறிந்தது சரி என்றே நினைக்கிறன்.

ஏனெனில், இது சில Telegram channel களில் 36- 48 மாதங்களுக்கு முதல் வந்து விட்டது, ஆயினும் பிரபலம் அடையவில்லை. நான் நினைக்கிறன் அதன் முதலே வெளிவந்து இருக்கும்.

அதுவரை mine பண்ணியவர்கள் KYC செய்து PI coins ஐ அவர்களின் wallet இல் பெற்றுக்கொண்டு இருப்பார்கள், தொடர்ந்த்து mine செய்து இருப்பார்கள்; அவர்களின் wallet க்கு PI coins, mining முயற்றசிக்கு ஏற்ப வந்தபடி இருந்து இருக்கும்.

ஆகவே, பரிவர்த்தனை செய்யப்பட்ட pi coin கள் உண்மையானவை (என்றே நினைக்கிறன்).

ஆம், layer 1 தானே, ஆகவே pi ஏ gas (வேறு ஏதாவது gas ஆக இருந்ததா இடைக்கால gas ஆக)

எனவே சொ wallet இல் வந்த பின், பரிவ்ரஹானை செய்ய முடியும்.

Edited by Kadancha
add info.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PI காயின் விலை கிட்டத்தட்ட 300% வரை உயர்வு!. இந்த ஏற்றத்திற்கு என்ன காரணம்?

By Vignesh Rathinasamy Published: Thursday, February 27, 2025, 18:57 [IST]

கிரிப்டோ கரன்சிகளில் ஒன்றாக ஆதிக்கம் செலுத்தப்படும் என அறியப்பட்ட PI காயின் விலை இப்பொழுது 300% உயர்வு ஏற்றம் கண்டுள்ளது. பை நெட்வொர்க்கால் உருவாக்கப்பட்ட பை நாணயம், கடந்த பிப்ரவரி 20 அன்று 1.84 டாலருக்கு (சுமார் ரூ. 160) க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ மார்கெட்டில் ஹிட் அடித்த பை நெட்வொர்க் காயின், கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்தநிலையில், பை காயின் (Pi Coin) அதன் சமீபத்திய Open Mainnet துவக்கத்திலிருந்து 290% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதன் விலை $2.16 ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக பிட்காயின் (Bitcoin) மற்றும் எத்தெரியம் (Ethereum) போன்ற முக்கிய கிரிப்டோகரன்சிகளை பை நாணயம் மிஞ்சியுள்ளது. பை நாணயத்தின் அதிரடி ஏற்றம், பிட்காயின், எத்தெரியம் மற்றும் டோகோயின்( Dogecoin) போன்ற முக்கியமான நிறுவனங்களைவிட முன்னிலையில் உள்ளது. இந்த மூன்று க்ரிப்டோகரன்சிகளும் கடந்த வாரத்தில் 9-20% வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

ஓபன் மெயின்நெட் வெளியீடு இப்போது பயனர்கள் தங்கள் பை நாணயங்களை பை நெட்வொர்க்கிற்கு வெளியே மாற்ற அனுமதிக்கிறது, இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மைல்கல் ஆகும். கூடுதலாக, OKX, Bitget மற்றும் CoinDCX உள்ளிட்ட முக்கிய பரிமாற்றங்களில் அதன் பட்டியலிடல், அணுகல் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரித்துள்ளது. ஆனால் இந்த வளர்ச்சி நிலையானதா, அல்லது பை காயின் என்பது மற்றொரு Crypto Bubble என்று கேள்வி எழுந்துள்ளது. Crypto Bubble என்பது கிரிப்டோகரன்சிகளின் மதிப்புகள் திடீரென உயர்ந்து, பின்னர் மிக விரைவாக விழும் பரபரப்பான சந்தை நிலை. Bubble மதிப்பில் வீழ்ச்சி ஏற்படும் போது, பல முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

பை நாணயத்தின் வளர்ச்சிக்கு என்ன காரணம்: Open Mainnet அறிமுகம் Pi Coin-இன் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. ஏனென்றால், பை நாணயங்களை மூடிய நெட்வொர்க்கிற்கு வெளியே முதல் முறையாக வர்த்தகம் செய்ய அனுமதித்தது. இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது மற்றும் சந்தை செயல்பாட்டைத் தூண்டியுள்ளது. வளர்ந்து வரும் பரிமாற்றப் பட்டியல்கள்: தற்போது பல பிளாட்பார்ம்கள் Pi Coin-ஐ ஆதரிக்கின்றன, இதனால் பரிவர்த்தகர்கள் எளிதில் வாங்கவும் விற்கவும் முடிகின்றது. அதிகமான அணுகல் வாய்ப்பு, இந்த உயர்ந்த ஈர்ப்பு, Pi Coin-இன் விலை அதிகரிப்புக்கும், முதலீட்டாளர்களின் ஈர்ப்பையையும் அதிகரிக்கும்.

Read more at: https://tamil.goodreturns.in/news/pi-coin-has-risen-by-around-300-since-its-recent-open-mainnet-launch-060025.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.