Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

சென்னை அணிக்கு தோனி மாதிரி யாழ்கள விளையாட்டு திரிக்கு நிங்கள் இருக்கிறீர்கள், இரண்டு பேரும் சரியான நேரத்தில் மீள வந்ததால் இந்த போட்டி சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.

அஸ்வினுக்கு தற்போது கொடுத்துள்ள இடைவேளை அவர் மீண்டும் சிறப்பாக சென்னை ஆடுகளத்தில் மீண்டும் ஆட வழிவகுக்கலாம், அவரை சென்னை போட்டியில் பயன்படுத்துவார்கள், ஆனால் அடுத்த போட்டி மும்பாயில் நடைபெறும் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

நூர் அகமட், குல்டீப் இருவரும் இடதுகை மணிக்கட்டினால் பந்து வீசும் பந்து வீச்சாளர்கள், இவர்களின் தாக்கம் 20 ஓவர் போட்டிகளில் அதிகமாக காணப்படும்.

உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, நான் தெரிவு செய்த அணிகள் கூட நினைவிருப்பதில்லை, கிருபன் போடும் அந்தந்த நாளுக்குரிய தெரிவுகளை பார்க்கும் போதுதான் தெரியும் எனது தெரிவுகள்.

நான் உற‌வுக‌ளின் ப‌திவை மேல் ஓட்ட‌மாய் மீண்டும் பார்வையிட்டேன் அண்ணா

ம‌ற்ற‌ம் ப‌டி நான் தெரிவு செய்த‌ அணிக‌ள் நினைவில் இருக்கும்...............அஸ்வினை வ‌ள‌த்து விட்ட‌து டோனி தான் அது உங்க‌ளுக்கும் ந‌ன்றாக‌ தெரியும்

டோனி இல்லை என்றால் அஸ்வினை எப்ப‌வோ கிரிக்கேட்டில் இருந்து ஓர‌ம் க‌ட்டி இருப்பின‌ம் , இந்திய‌ அணிய‌ டோனி வ‌ழி ந‌ட‌த்தின‌ கால‌ க‌ட்ட‌த்தில் டோனி அஸ்வினை மூன்று வ‌கை விளையாட்டிலும் விளையாட‌ விட்ட‌வ‌ர்....................ஆனால் அன்மைக் கால‌மாய் அஸ்வின் ப‌ந்து வீச்சு பாராட்டும் ப‌டியாக‌ இல்லை அண்ணா.................அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கிறார்

ஆம் அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரின் ப‌ந்து வீச்சு மிக‌ அருமை...................

நேற்று சென்னை அணியில் அறிமுக‌மான‌ தொட‌க்க‌ வீர‌ர் ந‌ல்லா விளையாடினார் , இள‌ம் வீர‌ர்க‌ள் தான் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ட்டைய‌ கில‌ப்பின‌ம்.............................

  • Replies 3.3k
  • Views 98.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

தல மட்டுமல்ல அஸ்வினும் காரணம், வழமையாக பவர் பிளேயில் 20 ஓட்டங்களையாவது விட்டுக்கொடுப்பார்.

இனிமேல் ஆறுமுகத்திற்கு ஏறுமுகம்தான்.🤣

இவ்வருடம் நடைபெற்ற ஐபிஎல்லில் பவர் பிளேயில் பந்து வீசிய அஸ்வின், Overton ,முகேஷ் சவுத்திரி போன்றோர்கள் அதிக ஒட்டங்களை குடுத்தார்கள். ஆனால் நேற்றைய போட்டியில் Khaleel Ahemed உடன் Anshul Kamboj சிறப்பாக பவர் பிளேயில் குறைந்த ஒட்டங்களை குடுத்தார்கள். குறிப்பாக பூரான், ஏய்டன் மார்க்கம் போன்றோர்கள் பவர் பிளேயில் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க செய்தது.

நேற்று சென்னை அணியின் களத்தடுப்பு (fielding) சிறப்பாக இருந்தது . குறிப்பாக Markram அடித்த பந்தை ராகுல் திருப்பதிபிடித்த விதத்தை சொல்லலாம். முந்தைய போட்டிகளின்போது எதிரணியினர் அடித்த பந்துகளை பிடிக்கத்தவறியதினால் அதிக ஒட்டங்களை விட்டுக் குடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பஞ்சாப் அணியின் ஆர்யா அடித்த பந்தினை இருமுறை பிடிக்க சென்னை அணி வீரர்கள் தவறிவிட்டார்கள். இதனால் ஆர்யா அப்போட்டியில் 103 ஒட்டங்களை பெற்றார். முதலில் பிடித்திருந்தால் சென்னை சிலவேளை அப்போட்டியில் வென்று இருக்கலாம். தோனியும் நேற்று நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல் சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்தார்.

வழமை போல நேற்று நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். shaik ரஷீத் சச்சின் ரவீந்திர போன்றோர்கள் முதன்முறையாக இந்தவருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பவர்பிளேவில் 50 ஓட்டங்களுக்கு மேல் சென்னை அணி எடுக்க உதவினார்கள். சிவம் துபே ஆரம்பத்தில் மெதுவாக அடித்து விளையாடினார். ஆனால் தோனி வந்து வேகமாக அடித்து அணி வெல்வதற்கு உதவி செய்தார்.

LSG அணியின் Ravi Bishnoi யும் சிறப்பாக 3 ஓவரில் 18 ஓட்டங்கள் குடுத்து 2 விக்கட் எடுத்தார். அவருக்கு ஏன் 4 வது ஓவர் வழங்கப்படவில்லை என வர்ணனையாளர் மைக்கல் கிளாக் கேள்வி எழுப்பி இருந்தார். விரைவாக அடிக்க கூடிய டேவிட் மில்லருக்கும் அடிப்பதற்கு LSG சந்தர்ப்பம் வழ்ங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 30வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் விக்கெட்டுகளை இழந்ததனால் ரிஷப் பந்தின் 63 ஓட்டங்களுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களையே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் நிலைத்து ஆடாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தமையால் வெல்லும் வாய்ப்பு குறைந்திருந்தது. எனினும் ஷிவம் டுபேயின் நிதானமான 43 ஓட்டங்களுடனும் இறுதியில் வாணவேடிக்கை காட்டிய தோனியின் 26 ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

large.IMG_0631.jpeg

போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் சுவி அவர்களுக்கு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

நேற்று விஜ‌ய‌ச‌ங்க‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகின‌து ந‌ல்ல‌தா போச்சு ந‌ண்பா😁👍..................................

இல்லையேன் விளையாட்டு தோல்வியில் முடிந்து இருக்கும்

டோனி வ‌ந்த‌ கையோட‌ அடிச்சு ஆட‌த் தான் ப‌ந்து அங்கும் இங்குமா ப‌ற‌ந்த‌து , ஓவ‌ருக்கு 11ர‌ன்ஸ் ப‌டி அடிக்க‌ இருந்த‌து................

நீங்கள் சொல்வது போல துடுப்பாட்டமும் , நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல்சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்த காரணத்தினாலும் தோனிக்கு போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசினை வழங்கி இருக்கலாம். நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். வெறும் 13 ஓட்டங்கள் கொடுத்தார். ஒன்று, இரண்டு விக்கெட் எடுத்திருந்தால் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி, சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது, ஜடேஜா போன்றவர்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

உண்மை நேற்று அப்கானிஸ்தான் வீர‌ர் ந‌ல்லா ப‌ந்து போட்டார் , விக்கேட் இர‌ண்டு எடுத்து இருந்தால்

அவ‌ருக்கு தான் விருது கிடைச்சு இருக்கும்.....................

ராகுல் திருப்த்தி பிடிச்ச‌ கைச் பார்த்து ர‌சிக்கும் ப‌டி இருந்த‌து................................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

விளையாடின‌ இர‌ண்டு மைச்சிலும் இவ‌ர் சாதிக்க‌ வில்லை ந‌ண்பா அதோட‌ கூப்பில் உக்கார‌ வைச்சு விட்டின‌ம்

ஏதாது சாட்டை சொல்லி நாடு திரும்புவ‌து த‌ங்க‌ட‌ மான‌த்தை காப்பாற்ற‌

விளையாடும் வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்டால் வீர‌ர்க‌ள் குடும்ப‌த்தை சாட்டி வில‌கி இருக்கின‌ம் , இன்னும் சில‌ கார‌ண‌ங்க‌ளை சொல்லி வில‌கி இருக்கின‌ம்

இல‌ங்கை வீர‌ர் க‌மென்டு மெடின்ஸ்ச‌ SRH வேண்ட‌ கார‌ண‌ம் இர‌ண்டு கையாலும் ப‌ந்து போடும் திற‌மை அவ‌ரிட‌ம் இருக்கு அதோட‌ ம‌ட்டையாலும் அடிப்பார்...................அவ‌ரும் இர‌ண்டு விளையாட்டில் விளையாடினார் அதோட‌ வாய்ப்பு ம‌றுக்க‌ப் ப‌ட்ட‌து...........................

அடம் சம்பா நீங்கள் சொல்வதுபோல 2 போட்டிகளிலும் சாதிக்கவில்லை. ஆனால் அணியில் இருக்கும் ராகுல் சகாருக்கு (இவரும் சூழல் பந்து வீச்சாளர்)இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

அடம் சம்பா நீங்கள் சொல்வதுபோல 2 போட்டிகளிலும் சாதிக்கவில்லை. ஆனால் அணியில் இருக்கும் ராகுல் சகாருக்கு (இவரும் சூழல் பந்து வீச்சாளர்)இன்னும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

SRH அணியில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ச‌த்திய‌மாய் தெரியாது...............ப‌ந்து வீச்சு சுத்த‌மாய் ச‌ரி இல்லை................சாமின்ட‌ ப‌ந்துக்கு 20ஓவ‌ருல் 4 சிக்ஸ்ச‌ அவுஸ்ரேலியா வீர‌ர் அடிச்சார்

உண்மை அந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீர‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ல‌...............................

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

பையன் வந்தாச்சு திரி கலகலப்பாகப் போகுது.

100% உண்மை

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, நான் தெரிவு செய்த அணிகள் கூட நினைவிருப்பதில்லை, கிருபன் போடும் அந்தந்த நாளுக்குரிய தெரிவுகளை பார்க்கும் போதுதான் தெரியும் எனது தெரிவுகள்.

எனக்கும் இதே பிரச்சனை.

ஆனபடியாலேயே முதல்நாள் போட்டியில் நான் எந்த அணியை பதிந்தேன் என்று தெரியாமல் நீங்கள் தான் வெற்றியாளர் என்று வாழ்த்தியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

சென்னை முதற் சுற்றில் வெளியேறினால் வியாபாரம் பாதிக்கப்படும்

முதல் சுற்றில் 70 போட்டிகள். மிகுதியாக இருப்பவை வெறும் 4 போட்டிகள் மட்டுமே. சென்ற வருடம் சென்னை முதல் சுற்றில் மட்டுமே விளையாடியது. மிகுதி 4 நான்கு போட்டிகளும் ( Qualifier 1, Eliminator, Qualifier 2, இறுதி போட்டி) அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருந்தன.

உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆரம்ப சுற்றில் வெளியேறினால், அதற்கு பிறகு நடைபெறும் சூப்பர் 8, சூப்பர் 6 போட்டிகளில் இந்தியா விளையாட விட்டால் வருமானம் குறைந்து இருந்தது. குறிப்பாக 2007 இல் மேற்கிந்தியா தீவில் நடைபெற்ற உலகக்கோப்பையினை சொல்லலாம்.

சென்னை நல்லாய் விளையாடுதே இல்லையோ இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடரில் உள்ள மொத்தமாக உள்ள 74 ( 70 ஆரம்ப சுற்று + 4 இறுதி போட்டிகள்) போட்டிகளில் குறைந்தது 69 வது வரை சென்னை விளையாடும். ( 69 வது போட்டிதான் சென்னை இம்முறை ஆரம்ப சுற்றில் விளையாடும் இறுதி போட்டி). ஐபிஎல் போட்டிகளின் இறுதி போட்டிகள் யார் விளையாடினாலும் எப்பொழுதும் அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருக்கும்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

நீங்கள் சொல்வது போல துடுப்பாட்டமும் , நன்றாக விளையாடிய ரிஷப் பண்ட் , ஆயுஷ் பதோனி, அப்துல்சமித் ஆட்டமிழக்க காரணமாக இருந்த காரணத்தினாலும் தோனிக்கு போட்டியின் சிறந்த வீரருக்கான பரிசினை வழங்கி இருக்கலாம். நூர் அகமது சிறப்பாக பந்து வீசினார். வெறும் 13 ஓட்டங்கள் கொடுத்தார். ஒன்று, இரண்டு விக்கெட் எடுத்திருந்தால் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் முரளி கார்த்திக் கேட்ட கேள்விக்கு தோனி, சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது, ஜடேஜா போன்றவர்களுக்கு விருது வழங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் நன்றாக பந்துவீசிய ஜடேஜா, கம்போஜ் ஆகியோருக்கு ஏன் நான்காவது ஓவர் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வீரப் பையன்26 said:

SRH அணியில் என்ன‌ ந‌ட‌க்குது என்று ச‌த்திய‌மாய் தெரியாது...............ப‌ந்து வீச்சு சுத்த‌மாய் ச‌ரி இல்லை................சாமின்ட‌ ப‌ந்துக்கு 20ஓவ‌ருல் 4 சிக்ஸ்ச‌ அவுஸ்ரேலியா வீர‌ர் அடிச்சார்

உண்மை அந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீர‌ருக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ல‌...............................

மொஹமட் சாமிக்கு பட்ஸ்மனுக்கு சாதகமான மைதானங்களில் பந்துபோட முடியவில்லை! ஜோக்கர் போடுகிறார் இல்லை! அத்துடன் பந்து வீசும் வேகத்திலும் மாற்றங்கள் செய்வதில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

முதல் சுற்றில் 70 போட்டிகள். மிகுதியாக இருப்பவை வெறும் 4 போட்டிகள் மட்டுமே. சென்ற வருடம் சென்னை முதல் சுற்றில் மட்டுமே விளையாடியது. மிகுதி 4 நான்கு போட்டிகளும் ( Qualifier 1, Eliminator, Qualifier 2, இறுதி போட்டி) அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருந்தன.

உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆரம்ப சுற்றில் வெளியேறினால், அதற்கு பிறகு நடைபெறும் சூப்பர் 8, சூப்பர் 6 போட்டிகளில் இந்தியா விளையாட விட்டால் வருமானம் குறைந்து இருந்தது. குறிப்பாக 2007 இல் மேற்கிந்தியா தீவில் நடைபெற்ற உலகக்கோப்பையினை சொல்லலாம்.

சென்னை நல்லாய் விளையாடுதே இல்லையோ இந்த முறை நடைபெறும் ஐபிஎல் தொடரில் உள்ள மொத்தமாக உள்ள 74 ( 70 ஆரம்ப சுற்று + 4 இறுதி போட்டிகள்) போட்டிகளில் குறைந்தது 69 வது வரை சென்னை விளையாடும். ( 69 வது போட்டிதான் சென்னை இம்முறை ஆரம்ப சுற்றில் விளையாடும் இறுதி போட்டி). ஐபிஎல் போட்டிகளின் இறுதி போட்டிகள் யார் விளையாடினாலும் எப்பொழுதும் அரங்கு நிறைந்த போட்டிகளாகவே இருக்கும்.

உண்மை தான் க‌ந்த‌ப்பு அண்ணா

2007 உல‌க‌ கோப்பையில் இந்தியா வ‌ங்கிளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைந்து ஆர‌ப சுற்றுட‌ன் வெளிய‌ போன‌து☹️..........................இந்தியா க‌ப்டன் ராகுல் ராவிட் க‌ண்ணீர் விட்டு அழுதார் ம‌ன‌ம் உடைந்து போய்☹️........................

கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியாவில் இருந்து தான் அதிக‌ ப‌ண‌ம் கிடைக்குது , அடுத்த‌தாக‌ இங்லாந்திட‌ம் இருந்து........................பாக்கிஸ்தானில் வீர‌ர்க‌ளுக்கு ஊதிய‌ம் க‌ம்பி

2010ம் ஆண்டு மூன்று பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் இங்லாந்தில் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு பிடிப‌ட்டு சிறையில் அடைத்த‌வை

அப்போதே எழுந்த‌ விம‌ர்ச‌ன‌ம் பாக்கிஸ்தான் கிரிக்கேட் நிர்வாக‌ம் வீர‌ர்க‌ளுக்கு பெரிதாக‌ ஊதிய‌ம் கொடுப்ப‌தில்லை அத‌னால் தான் வீர‌ர்க‌ள் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌டுகின‌ம் என்று..............................

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஷ்குமார் ரெட்டி பந்து வீசாமல் இருப்பது SRHஇற்கு பெரிய இழப்பு!!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:

ஆனால் நன்றாக பந்துவீசிய ஜடேஜா, கம்போஜ் ஆகியோருக்கு ஏன் நான்காவது ஓவர் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது!!

Overtone க்கு ஏற்கனவே 2 ஓவர் குடுத்ததினால் இவர்களுக்கு 4 ஓவர்கள் வழங்கவில்லை. அவருக்கு குடுக்காமல் விட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் 4 வது ஓவர்கள் கிடைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Eppothum Thamizhan said:

மொஹமட் சாமிக்கு பட்ஸ்மனுக்கு சாதகமான மைதானங்களில் பந்துபோட முடியவில்லை! ஜோக்கர் போடுகிறார் இல்லை! அத்துடன் பந்து வீசும் வேகத்திலும் மாற்றங்கள் செய்வதில்லை!

பார்த்தேன் இப்ப‌டியான‌ மைதான‌ங்க‌ளில் ப‌ந்தின் வேக‌த்தை குறைக்க‌னும் சாமி அதை செய்ய‌ வில்லை

ப‌ல‌ வித‌மாய் ப‌ந்தை வேக‌த்துட‌ன் வீசினார் எடு ப‌ட‌ வில்லை , முன்ன‌னி ப‌ந்து வீச்சாள‌ர் 4ஓவ‌ர் போட்டு 75ர‌ன்ஸ் விட்டு கொடுத்த‌து அதிக‌ம் ந‌ண்பா.............................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கந்தப்பு said:

Overtone க்கு ஏற்கனவே 2 ஓவர் குடுத்ததினால் இவர்களுக்கு 4 ஓவர்கள் வழங்கவில்லை. அவருக்கு குடுக்காமல் விட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் 4 வது ஓவர்கள் கிடைத்திருக்கும்.

Overtone விட‌ இந்த‌ கிரிக்கேட் உல‌கில் ப‌ல‌ சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் இவ‌ரை சென்னை ஏல‌த்தில் வேண்டி இவ‌ர் சாதிச்ச‌து என்ன‌

2ஓவ‌ர் ப‌ந்து போட‌ ஒரு வீர‌ரை ஏல‌த்தில் எடுக்கின‌ம் என்றால் இதில் பிழை யாரில்

முத‌ல் மைச்சிலும் இவ‌ருக்கு இர‌ண்டு ஓவ‌ர் தான் போட‌ விட்ட‌வை கார‌ண‌ம் இவ‌ர் அள‌வுக்கு அதிக‌மா ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வ‌ர்

இவ‌ரின் ப‌ந்துக்கு அவுஸ்ரேலியா கில‌ப் வீர‌ர்க‌ள் அடி அடியென‌ அடித்தார்க‌ள் , இப்போது இந்தியாவில்....................அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை சென்னை க‌ல‌ட்டி விடும்..................................

  • கருத்துக்கள உறவுகள்

PBKS' batting-first XI: 1 Prabhsimran Singh, 2 Priyansh Arya, 3 Shreyas Iyer (capt), 4 Josh Inglis (wk), 5 Nehal Wadhera, 6 Shashank singh, 7 Glenn Maxwell, 8 Marcon Jansen, 9 Xavier Bartlett, 10 Arshdeep Singh, 11 Yuzvendra Chahal

PBKS' impact sub options: Vyshak, Yash Thakur, Shedge, Harpreet, Pravin Dubey

KKR's bowling-first XI: 1 Quinton de Kock (wk), 2 Sunil Narine, 3 Ajinkya Rahane (capt), 4 Venkatesh Iyer, 5 Rinku Singh, 6 Andre Russell, 7 Ramandeep Singh, 8 Harshit Rana, 9 Anrich Nortje, 10 Vaibhav Arora, 11 Varun Chakravarthy

KKR's impact sub options: Angkrish Raghuvanshi, Manish Pandey, Anukul Roy, Rovman Powell, Luvnith Sisodia.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

மோன் அலி இன்று விளையாட‌ வில்லை ந‌ண்பா மோன் அலிக்கு ப‌தில் தென் ஆபிரிக்கா வேக‌ப்ப‌ந்து வீச்சாள‌ர் விளையாடுகிறார்..................................

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

Overtone விட‌ இந்த‌ கிரிக்கேட் உல‌கில் ப‌ல‌ சிற‌ந்த‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் இவ‌ரை சென்னை ஏல‌த்தில் வேண்டி இவ‌ர் சாதிச்ச‌து என்ன‌

2ஓவ‌ர் ப‌ந்து போட‌ ஒரு வீர‌ரை ஏல‌த்தில் எடுக்கின‌ம் என்றால் இதில் பிழை யாரில்

முத‌ல் மைச்சிலும் இவ‌ருக்கு இர‌ண்டு ஓவ‌ர் தான் போட‌ விட்ட‌வை கார‌ண‌ம் இவ‌ர் அள‌வுக்கு அதிக‌மா ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வ‌ர்

இவ‌ரின் ப‌ந்துக்கு அவுஸ்ரேலியா கில‌ப் வீர‌ர்க‌ள் அடி அடியென‌ அடித்தார்க‌ள் , இப்போது இந்தியாவில்....................அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை சென்னை க‌ல‌ட்டி விடும்..................................

நேற்று அஸ்வினுக்கு பதிலாக இவரை எடுத்ததற்கு காரணம் இவரின் துடுப்பாட்டம்தான். இவர் தோனி, துபே போல 6 ஓட்டங்கள் அடிக்கக் கூடியவர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் அடித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

கே கே ஆர் இன்று தோக்க‌க் கூடும்

பாப்போம் விளையாட்டு எப்ப‌டி போகுது என்று.................................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

மோன் அலி இன்று விளையாட‌ வில்லை ந‌ண்பா மோன் அலிக்கு ப‌தில் தென் ஆபிரிக்கா வேக‌ப்ப‌ந்து வீச்சாள‌ர் விளையாடுகிறார்..................................

மொயின் அலி சூழல் பந்துக்கு சாதகமான மைதானங்களில் மட்டுமே விளையாடுகிறார் போல இருக்குது. இதுவரை நடந்த 6 போட்டியில் 3 போட்டியில் விளையாடினார். அதிலும் 2 போட்டியில்தான் பந்து வீசினார்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

நேற்று அஸ்வினுக்கு பதிலாக இவரை எடுத்ததற்கு காரணம் இவரின் துடுப்பாட்டம்தான். இவர் தோனி, துபே போல 6 ஓட்டங்கள் அடிக்கக் கூடியவர். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் அடித்தார்.

அப்ப‌டி பார்த்தால் ஆம் அந்த‌ விளையாட்டில் ஒரு 4ம் ஒரு 6 அடிச்சார்.................நேற்று விஜ‌ய‌ச‌ங்க‌ருக்கு ப‌தில் இவ‌ரை விளையாட‌ விட்டு இருந்தால் இவ‌ரின் திற‌மை தெரிந்து இருக்கும்

அவுஸ்ரேலியா விக்வாஸ் தொட‌ரில் இவ‌ர் ம‌ட்டையால் பெரிசா அடிக்க‌ வில்லை வெறும‌ன‌ ப‌ந்து ம‌ட்டும் தான் போட்ட‌வ‌ர்............................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

அப்ப‌டி பார்த்தால் ஆம் அந்த‌ விளையாட்டில் ஒரு 4ம் ஒரு 6 அடிச்சார்.................நேற்று விஜ‌ய‌ச‌ங்க‌ருக்கு ப‌தில் இவ‌ரை விளையாட‌ விட்டு இருந்தால் இவ‌ரின் திற‌மை தெரிந்து இருக்கும்

அவுஸ்ரேலியா விக்வாஸ் தொட‌ரில் இவ‌ர் ம‌ட்டையால் பெரிசா அடிக்க‌ வில்லை வெறும‌ன‌ ப‌ந்து ம‌ட்டும் தான் போட்ட‌வ‌ர்............................

விஜய் சங்கர் நிதானமாக விளையாடக்கூடியவர். overton இறுதி நேரத்தில் கண்டபடி அடித்து ஓட்டங்கள் பெறக்கூடியவர். முன்பே இவரை விட்டால் கண்டபடி அடித்து விரைவில் ஆட்டமிழப்பார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.