Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-107.jpg?resize=750%2C375&ssl

கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி!

கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன.

கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார்.

தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இதில் 152,000 க்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வெற்றியின் பின்னர் கார்னி, டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்ளவதாக சபதம் செய்துள்ளார், மேலும் அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போரின் போது, தனது நாட்டை ஒன்றிணைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,

நமது பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கும் ஒருவர் இருக்கிறார்,” என்று கார்னி, ட்ரம்பைப் சாடிக் கூறினார்,”அவர் கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். அவர் வெற்றிபெற நாம் அனுமதிக்க முடியாது.

அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் எங்கள் கட்டணங்களைத் தொடரும் – என்றார்.

அரசியல் ரீதியாகப் புதியவரான கார்னி, கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், கனடாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை முடக்கக்கூடிய மேலதிக வரிகளை அச்சுறுத்தும் ட்ரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடவும் தான் சிறந்த இடத்தில் இருப்பதாக வாதிட்டார்.

ட்ரம்ப் கனடா மீது விதித்த வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரூடோ அமெரிக்காவின் மீது 30 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான பழிவாங்கும் வரிகளை விதித்துள்ளார்.

கார்னியின் வெற்றி, உண்மையான அரசியல் பின்னணி இல்லாத வெளிநாட்டவர் கனடா பிரதமராக வந்த முதல் முறையாகும்.

இரண்டு G7 மத்திய வங்கிகளான கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் ஆளுநராகப் பணியாற்றிய முதல் நபராக தனது அனுபவம், ட்ரம்பை சமாளிக்க அவர் சிறந்த வேட்பாளர் என்று அவர் கூறியுள்ளார்.

கார்னியின் கீழ் லிபரல் கட்சிக்கு ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு, ட்ரம்பின் வரிவிதிப்புகளுடன், கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பதற்கான அவரது தொடர்ச்சியான அவதூறுகளுடன் இணைந்து, லிபரல் கட்சியின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.

எவ்வாறெனினும், கருத்துக் கணிப்புகள் லிபரல்களோ அல்லது கன்சர்வேடிவ்களோ பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதைக் குறிக்கின்றன.

எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வரும் வாரங்களில் கார்னி ஒரு தேர்தலை அறிவிப்பார் என்றும், அதாவது தேர்தல் மிக விரைவில் நடக்கக்கூடும் என்றும் இரண்டு லிபரல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கார்னி சட்டப்பூர்வமாக பொது மன்றத்தில் இடம் இல்லாமல் பிரதமராகப் பணியாற்ற முடியும், ஆனால் நாட்டின் பாரம்பரியம் அவர் விரைவில் தேர்தல் ஒன்றை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (09) ஒட்டாவாவில் உள்ள கனடாவின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில், நூற்றுக் கணக்கான கனடியர்கள் உள்நாட்டு அரசியலைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் ட்ரம்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஜனவரி மாதம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார், ஏனெனில் அவரது செல்வாக்கு சரிந்தது, ஆளும் லிபரல் கட்சி அவரை மாற்றுவதற்கு விரைவான போட்டியை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424549

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள மார்க் கார்னி - யார் இவர்?

கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்க் கார்னி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ஜெசிக்கா முர்ஃபி

  • பதவி, பிபிசி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அடுத்து கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்ற போட்டியில், மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான வர்த்தகப் போரில் கனடாவை வெற்றிபெறச் செய்யப் போவதாக மார்க் உறுதி அளித்துள்ளார்.

கனடாவின் மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கியின் முன்னாள் தலைவராக மார்க் கார்னி இருந்துள்ளார். லிபரல் கட்சியிலிருந்து அடுத்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த மூன்று பேரை பின்னுக்குத்தள்ளி அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா மீது விதித்த வரிகளையும், அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை மற்ற விரும்புவதாக கூறியதையும் பிரதமர் பதவிக்காக போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆற்றிய உரையில் மார்க் கார்னி கடுமையாக விமர்சித்தார்.

"ஹாக்கியைப் போலவே வர்த்தகத்திலும் கனடாதான் வெற்றி பெரும்", என்று அவர் கூறினார்.

அடுத்து வரும் நாட்களில் மார்க் கார்னி பிரதமராக பதவி ஏற்பார் என்றும் அடுத்து வரும் பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை இவர்தான் வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமராக தேர்வாகியுள்ள கார்னி, எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்ததில்லை.

கனடாவில் விலைவாசி உயர்ந்ததாலும் வீட்டு வசதி சார்ந்த பிரச்னைகளாலும் அந்நாட்டு மக்களிடையே ட்ரூடோ மீதான ஆதரவு சரிந்தது. இதன் விளைவாக பதவியில் இருந்து விலகும் படி ட்ரூடோவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்தது.

இதனால் கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம், லிபரல் கட்சியில் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான பணி தொடங்கியது.

கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த வாக்கெடுப்பில் தனது போட்டியாளரான முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்டை வீழ்த்தி, மார்க் கார்னி 85.9% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் சுமார் 1,600 கட்சி ஆதரவாளர்களுக்கு முன்னிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கே கார்னிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் வாக்களித்ததாக லிபரல் கட்சி தெரிவித்திருந்தது.

கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசை வழிநடத்த இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டி தேர்தலை அறிவிப்பை வெளியிடலாம் அல்லது இந்த மாத இறுதியிலே எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளலாம்.

ட்ரூடோ பதவியில் இருந்து விலகியதிலிருந்து லிபரல் கட்சி பல்வேறு திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. அத்துடன் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி மற்றும் நாடு இணைப்பு மிரட்டல்களால் கனடா மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளில் பியர் பாலிவ் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சியை விட 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது.

அதன் பிறகு லிபரல் கட்சி நல்ல முன்னேற்றம் கண்டது. சில கணக்கெடுப்புகளில் இரு கட்சிகளும் கிட்டதட்ட ஒரே மாதிரியான வாக்குகளை பெற்றிருந்தன.

கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த பத்தாண்டுகளாக கனடாவின் பிரதமராக பதவி வகித்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக கனடா இருக்கிறது. இந்நிலையில் கனடா மீது டிரம்ப் விதித்த வரிகளை ''நியாமற்ற வரி'' என மார்க் கார்னி கூறினார்

கடந்த செவ்வாய்க்கிழமை கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவின் 25% வரி அமலுக்கு வந்தது. ஆனால் சில தினங்களிலே ஏற்கனவே கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்த பொருட்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்பட்டது.

கனடாவின் பொருளாதாரத்தை சீர்க்குலைக்க டிரம்ப் முயற்சிப்பதாக ட்ரூடோ குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரி விதித்தது.

"கனடா பணியாளர்கள், குடும்பங்கள் மற்றும் தொழில்கள் மீது டிரம்ப் கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் அவரை வெற்றியடைய விடமாட்டோம்", என்று பிரதமராக தேர்வான பின்பு தனது வெற்றி உரையில் கார்னி தெரிவித்தார்.

''அமெரிக்கா எங்களுக்கு மரியாதை காட்டும் வரை" தனது அரசாங்கம் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைத் தொடரும் என்று அவர் கூறினார்.

கனடாவின் பொருளாதாரம் பெரும்பான்மையாக அமெரிக்காவைச் சார்ந்தவையாக இருப்பதால், டிரம்பின் இறக்குமதி வரிகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், கனடா பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

"இது கனடாவின் இருண்ட நாட்கள். இதற்கு காரணமாக இருந்த நாட்டை நாம் இனி நம்ப முடியாது," என்றார் கார்னி.

"இந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் மீண்டு வருகிறோம், ஆனால் இதிலிருந்து கற்ற பாடங்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. வரவிருக்கும் கடினமான நாட்களில் நாம் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்", என்றார் மார்க் கார்னி.

கனடா, மார்க் கார்னி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கன்சர்வேட்டிவ் கட்சியைப் பற்றி பேசிய கார்னி, "பியர் பாலிவின் கொள்கைத் திட்டங்கள் நம்மை பிரித்து, நமது நாட்டை வேறொருவர் கைப்பற்ற வழிவகுக்கும்," என்று தெரிவித்தார்.

"ஏனென்றால் அவர் டொனால்ட் டிரம்பை வணங்குபவர், அவரை எதிர்த்து நிர்ப்பவர் இல்லை".

கார்னி மேடை ஏறும் முன்னர், 12 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் தலைவராக இருந்த ட்ரூடோ தனது அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருக்கமான உரையுடன் விடைபெற்றார்.

டிரம்பின் ஆட்சியில் கனடா ''இருப்பு சார்ந்த சவால்களை'' எதிர்கொண்டதாக அவர் கூறினார்

கார்னி மற்றொரு ஜஸ்டின் ட்ரூடோவைப் போன்றவர் தானே தவிர ஒரு மாற்றத்திற்கான நபர் அல்ல என்று கன்சர்வேட்டிவ் கட்சியினர் குற்றம்சாட்டினார்.

தலைவரை மட்டும் மாற்றியமைத்து நான்காவது முறை ஆட்சி அமைக்க லிபரல் கட்சி முற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மெண்ட் எனப்படும் முதலீடு சார்ந்த நிறுவனத்தின் தலைமையகத்தை டொரோண்டோவிலிருந்து நியூயோர்க்கிற்கு மாற்றுவதில் தனது பங்கு தொடர்பாக பொய் கூறியதாக கார்னி மீது கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம்சாட்டியது.

நிறுவனத்தை இடமாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவை, தான் அந்த நிறுவனத்தின் போர்டில் இருந்து வெளியேறியப் பிறகு பங்குதாரர்கள் மேற்கொண்டார்கள் என்று கார்னி தெரிவித்திருந்த நிலையில் இடமாற்றம் தொடர்பான முடிவை கடந்த டிசம்பர் மாதமே அவர் பரிந்துரைத்தது தொடர்பான கடிதம் ஒன்று வெளிவந்தது.

நாடாளுமன்றத்தில் 120 இடங்களை கொண்டிருக்கும் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, 33 இடங்களுடன் இருக்கும் பிளாக் கேபேக்வா, 24 இடங்களைக் கொண்ட நியூ டெமாக்ரட்ஸ் ஆகிய கட்சிகளை வரும் தேர்தலில் லிபரல் கட்சி எதிர்கொள்ள வேண்டும்.

கார்னியின் முக்கிய கொள்கைகள்

லிபரல் கட்சியை இடது சாரியாக மாற்றியமைத்த ட்ரூடோவிடம் இருந்து மாறுபட்டு, இவர் மையவாத கருத்துக்களைக் கொண்டவராக இருக்கின்றார்.

சமீப ஆண்டுகளில் பல அரசியல் தடங்கலை சந்தித்த எரிவாயு குழாய் திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

வீட்டு வசதி மற்றும் மாசு ஏற்படுத்தாத எரிசக்தி திட்டங்களுக்கான முதலீடு திட்டங்கள் அதிகரிக்கப்படும், கனடாவின் மாகணங்களுக்குள் இருக்கும் தடைகளை நீக்கி தாராளமயமாக வர்த்தகம் செய்யவும், அமெரிக்காவிடம் இருந்து விலகி புதிய பொருளாதாரத்தை அமைக்கவும் வழிவகை செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

ட்ரூடோவின் கீழ் 40% விரிவடைந்த மத்திய அரசாங்கத்தின் அளவை கட்டுப்படுத்தபோவதாக பிரதமர் பதவிக்கான போட்டியின்போது, கார்னி கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c4gepdmlmyvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.