Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025

பட மூலாதாரம்,TN ASSEMBLY

14 மார்ச் 2025, 03:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருக்குறளை மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கீடு

திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் "வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய பெருநகரங்களான புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளிநாடுகளிலும் புத்தகக் கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X

வெளிநாடு வாழ் இளம் தமிழர்களுக்கு தமிழ் மரபை அறிமுகம் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி குறித்து அறிவிப்பு

"தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்" என்று தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தொல்லியல் துறைக்கான நிதி அறிவிப்பு

வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், "தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப் பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று அறிவித்தார்.

ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,@CMOTAMILNADU

படக்குறிப்பு,மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள்

  • இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ. 3500 கோடி ஒதுக்கீடு

  • முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6100 கி.மீ கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு

  • கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ. 120 கோடி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி-2இன் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.

நகராட்சி நிர்வாகம்

  • கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ. 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகளை ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை மாநகராட்சியில் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.

  • ரயில்வேதுறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும்.

  • சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

சமச்சீர் வளர்ச்சி

சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ. 6858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதின் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

மகளிர் நலன்

விடியல் பயணம் என்து மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். அந்த ஆண்டு அத்திட்டத்திற்கான மானியத் தொகை ரூ. 3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ. 77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

'ரூ' தொடர்பாக எழுந்த சர்ச்சை

காணொளியில் நிதிநிலை அறிக்கை குறித்த இலச்சினையில் ரூபாயை குறிக்கும் '₹' என்ற தேசிய சின்னத்திற்குப் பதிலாக தமிழில் 'ரூ' என்று தமிழ்நாடு அரசு பயன்படுத்தி இருந்தது.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பள்ளி கல்வித்துறைக்குத் தேவையான நிதியை வழங்க இயலும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,MK STALIN

படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் நீடித்த வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் 'ரூ'வை பயன்படுத்தியது தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப், டேப்

தமிழ்நாடு பட்ஜெட் 2025

பட மூலாதாரம்,TN ASSEMBLY

14 மார்ச் 2025, 03:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.

திருக்குறள் மொழிபெயர்ப்புக்கு ரூ.133 லட்சம் ஒதுக்கீடு முதல் சென்னை அருகே புதிய நகரம் உருவாக்கப்படுவது வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சிக்கான பட்ஜெட்

  • திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

  • வருங்காலங்களில் தமிழ் புத்தகக் கண்காட்சிகளை இந்திய பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளி நாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  • வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலக தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்கு தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,THANGAM THENNARASU/X

படக்குறிப்பு, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (கோப்புக் காட்சி)

தொல்லியல் துறை அறிவிப்பு

  • தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

  • அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்த பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்டவியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும்.

  • தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபிய தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழ்வாய்வுகளை தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாக காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2025: பள்ளிக் கல்விக்கு ரூ.46,767 கோடி, உயர் கல்விக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு - நேரலை

பட மூலாதாரம்,TNDIPR

படக்குறிப்பு, ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் (சித்தரிப்புப் படம்)

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கான அறிவிப்புகள்

  • இந்த நிதியாண்டில் (2025-26) ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கீடு

  • முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6,100 கிலோமீட்டருக்கு கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ. 2100 கோடி ஒதுக்கீடு

  • கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு

  • தமிழ்நாட்டின் அனைத்து குக்கிராமங்களும் தன்னிறைவு அடையும் வகையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 2329 கிராம ஊராட்சிகளில் ரூ.1087 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

நகராட்சி நிர்வாகம்

  • கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டுள்ள பணிகளுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 6483 கி.மீ. நீளமுள்ள சாலைகள் ரூ.3750 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை மாநகராட்சியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் ஒரு பகுதியாக வேளச்சேரி மற்றும் கிண்டியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வேளச்சேரி பிரதான சாலை துவங்கி, குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ரூ. 310 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும்.

  • ரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடி மதிப்பில் கட்டப்படும்.

  • சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்காக ரூ. 3450 கோடி திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,@CMOTAMILNADU

படக்குறிப்பு, மார்ச் 13ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்

சமச்சீர் வளர்ச்சி

சென்னை மாநகரத்தின் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்திட வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிதியாண்டில் அதற்காக ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்குவதன் முதல்கட்டமாக சென்னைக்கு அருகே ஒரு புதிய நகரம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

மகளிர் நலன்

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

  • விடியல் பயணம் என்பது பேருந்தில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டம். அந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான மானியத் தொகை ரூ.3600 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தற்போது, 4.76 லட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும்.

  • மேலும், எதிர்வரும் நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • காஞ்சிபுரம், ஈரோடு, கரூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் புதிதாக தோழி மகளிர் விடுதிகள் கட்ட ரூ.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • உயர் கல்விக்காக பெரு நகரங்களுக்கு வருகை புரியும் மாணவிகளுக்காக சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் தலா ஆயிரம் மாணவியர் தங்கும் வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாணவியர் விடுதிகள் ரூ.275 கோடி மதிப்பில் கட்டப்படும். இந்த விடுதிகளின் மாணவியர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.

  • புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை திருநர் சமூகத்தினருக்கும் விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக்கல்வி துறை

  • இந்த நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பொருட்டு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

  • பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர் கல்வியைப் பெறும் வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம், கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

  • சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு லட்சம் புத்தகங்கள் மற்றும் மாநாட்டுக் கூடங்களுக்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் அமைக்கப்படும்.

உயர்கல்வி

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,MK STALIN

படக்குறிப்பு,தேசிய இலச்சினை நீக்கப்பட்டு தமிழில் 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது

  • இந்த நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்காக ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • அரசுப் பல்கலைக் கழங்களில் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில், பல்கலைக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி நல்கை ரூ.700 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் தற்போது 41,038 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் ரூ.550 கோடி ஒதுக்கீடு.

  • குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதூர், பெரம்பலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்

  • அறிவியல் சிந்தனையை வளர்த்திடவும், புதிய தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகம் செய்திடும் நோக்கத்தோடும் சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பில் உருவாக்கப்படும்.

  • செயற்கை நுண்ணறிவு இந்த உலகை மாற்றும் சூழலில், தொழில்நுட்ப அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் லேப்டாப் அல்லது டேப்லட் வழங்கப்படும். இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 2000 கோடி ஒதுக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசி - ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண் குழந்தைகளுக்கு வழங்க ரூ. 36 கோடி நிதி

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 21,906 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 14 வயது பூர்த்தியான அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ஹெச்.பி.வி. தடுப்பூசியை படிப்படியாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • அதில் தேசிய நலவாழ்வுக் குழுமம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு ரூ.2754 கோடியும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.1092 கோடியும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 1461 கோடியும், அவசர ஊர்தி சேவைகளுக்காக ரூ.348 கோடியும் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறை

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னையில் ரூ.100 கோடி மதிப்பில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் உருவாக்கப்படும்.

கோவை-சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும்.

ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் புதிய மினி டைடல் பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.

கடலூரில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

9 இடங்களில் ரூ. 366 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (SIDCO) உருவாக்கப்படும்.

மாறிவரும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவு செய்ய விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் அவற்றிற்கான முதலீடுகளை ஜவுளி நிறுவனங்கள் மேற்கொள்வதை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் செயல்படுத்தப்படும்.

மெட்ரோ ரயில் திட்டங்கள்

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர்வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிப்பு

கோவையில் ரூ.10,740 கோடிக்கும், மதுரையில் ரூ.11,368 கோடியிலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை விமானநிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலும், பூந்தமல்லியிலிருந்து திரும்பெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையும் நீட்டிக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் மத்திய அரசின் மூலாதன பங்களிப்பிற்காக அனுப்பப்படும் எனவும் அறிவிகப்பட்டுள்ளது.

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையும், கலங்கரை விளக்கத்திலிருந்து உயர்நீதிமன்றம் வரையும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அறிவிப்பு

சென்னை-செங்கல்பட்டு- திண்டிவனம்- விழுப்புரம் வழித்தடம் உட்பட 3 வைழித்தடங்களில் அதிவேக ரயில்வே அமைப்பை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு.

மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானலில் ரோப்வே போக்குவரத்தை ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் ஆய்வுசெய்யப்படும்

ரூ.2,000 உதவித்தொகை

இன்றைய முக்கிய செய்திகள், செய்திகள், பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினர்கள் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் உள்ள 50,000 குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி பள்ளி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை.

கோயில்களுக்கு சொந்தமான 7,327 ஏக்கர் நிலங்களும், 36.38 லட்சம் சதுர அடி மனைகளும், 5.98 லட்சம் சதுர அடி கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.7,185 கோடி எனவும் அறிவிப்பு

சுற்றுலாத்துறையில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், சுற்றுலா துறையில் ஈடுபடும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம் கொண்டுவரப்படும், உதகமண்டலத்தில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு

கால்நடை வளத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க ஏதுவாக கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj92rxdxpzeo

  • கருத்துக்கள உறவுகள்

637788836180562976thbXYR.jpg?resize=750%

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்!

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என தமிழக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதன்போது மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில் சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும் எனவும்,  சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் சீராக குடிநீரை விநியோகிக்க ரூ.2,423 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதற்கிணங்க   சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும்,  இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 88 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரத்தில் நிறுவப்படும் எனவும்,  அடையாறு நிதி சீரமைப்பு பணியில் சைதாப்பேட்டை முதல் திரு.வி.க பாலம் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1425148

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்கடலில் அகழாய்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.