Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் - நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்

486973016_1069435222028653_8092596753130

  • கருத்துக்கள உறவுகள்

25-67e2c7082e957.webp

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.

மனோஜ் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார்.

1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மஹால்' என்ற படத்தின் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார் மனோஜ் பாரதிராஜா. 

அதன் பின்னர் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், மகா நடிகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கார்த்தியின் நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் நடித்திருந்தார்.

மாரடைப்பால் உயிரிழப்பு

2023 ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இந்நிலையில் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று காலமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கு நந்தனா என்ற பெண்ணுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது.

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

https://news.lankasri.com/article/director-bharathirajas-son-manoj-passes-away-1742915335

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

Published By: VISHNU 25 MAR, 2025 | 08:46 PM

image

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று செவ்வாயக்கிழமை மாலை காலமானார். 

அவருக்கு வயது 48, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வைத்தியரின் ஆலோசனையின் படி ஓய்வெடுத்து வந்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.

அவருக்கு சமீபத்தில் தான் இதய அறுவை சிகிச்சை நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/210193

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நடிப்பில் ஒருசில படங்கள் பார்த்துள்ளேன். செய்தியை அறிய துயரமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மனோஜ் சவப்பெட்டி மீது ஏறியது கொடுமையான செயல்!

manoj-780x470.jpeg

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான பங்களிப்பை அளித்த இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, கடந்த மார்ச் 25, 2025 அன்று தனது 48-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இவரது திடீர் மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மனோஜின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அவரது மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலரும், அது உண்மையல்ல என்று மற்றவர்களும் பேசி வருகின்றனர்.

இதனிடையே, மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி வீடியோ எடுத்த சிலரின் அநாகரிக செயலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் பாரதிராஜா, மார்ச் 25 அன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தார். வெகு நேரமாகியும் அவர் எழாததால் குடும்பத்தினர் பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வைத்திய பரிசோதனைக்கு சென்றபோதும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரை பறித்துவிட்டது. இது அவரது குடும்பத்தினரையும், திரையுலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மனோஜின் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என்று சிலர் கூறி வந்தனர். சிறு வயதிலிருந்தே இயக்குனராக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த மனோஜ், தனது தந்தை பாரதிராஜாவின் விருப்பத்தால் நடிகராக மாறினார்.

1999-ல் ‘தாஜ்மஹால்’ படம் மூலம் அறிமுகமான அவர், ‘சமுத்திரம்’, ‘கடல் பூக்கள்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகராக வெற்றி பெற முடியாத நிலையில், பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

2023-ல் ‘மார்கழி திங்கள்’ படத்தை இயக்கி, இயக்குனராகவும் அறிமுகமானார். இருப்பினும், இயக்குனராக பெரிய வெற்றியைப் பெற முடியாத வருத்தம் அவருக்கு இருந்ததாகவும், அதுவே மன அழுத்தத்திற்கு வழிவகுத்து, இதய நோயை ஏற்படுத்தியதாகவும் சிலர் பேசினர்.

ஆனால், இயக்குனர் பேரரசு இதை மறுத்து, மனோஜின் மறைவுக்கு மன அழுத்தம் காரணமல்ல என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், “மனோஜ் மன உளைச்சலில் இறந்தார் என்று பேசுபவர்களிடம் அவர் தனது மன உளைச்சலை பகிர்ந்தாரா? நான் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன்.

அங்கு மனோஜை பார்க்கும்போது, அவர் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். அவரது மறைவுக்கு உடல்நிலை மட்டுமே காரணம், மனநிலை அல்ல. தேவையில்லாமல் பழி சுமத்தக் கூடாது,” என்று தெரிவித்தார். பேரரசுவின் இந்த கருத்து, மனோஜின் மரணம் குறித்து வெளியாகியிருந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்தது.

மனோஜின் மறைவு செய்தி அறிந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல பிரபலங்கள் வந்திருந்தனர். அவர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். சூர்யா, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தபோது, சிலர் மனோஜின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது ஏறி, அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர்.

இதைப் பார்த்து பிரபலம் ஒருவர் கடும் வருத்தம் தெரிவித்தார். “இதெல்லாம் எவ்வளவு மோசமான செயல் தெரியுமா? மதியம் வரை சாப்பிட்டு தூங்கியவர், உயிர் இல்லாமல் இருக்கிறார்.

அந்த வருத்தத்தில் குடும்பமே அழுது கொண்டிருக்கும்போது, சிலர் வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அடுத்தவர்களின் கஷ்டத்தை கூட காசு பார்க்க பயன்படுத்துகிறார்கள்,” என்று அவர் குமுறினார்.

இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற செயலாக கண்டிக்கப்பட்டது.

https://akkinikkunchu.com/?p=318401

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.