Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1

BookDay18/02/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –1 (Books that overcame obstacles) | To Kill a Mockingbird (டு கில் எ மாக்கிங் பேர்ட் - https://bookday.in/

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–1

வெகுளியான அந்தப் பறவை கொல்லப்பட்டது ஏன்?

– அ. குமரேசன்

அரசியல், மதம், சமூகம் என எதை எடுத்துக்கொண்டாலும், அதில் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் தங்களுடைய எதிரிகளை விடவும் அஞ்சுகிற ஒன்று இருக்கிறது. அதுதான் புத்தகம்!

ஏன் அஞ்சுகிறார்கள் என்றால், புத்தகம் சிந்திக்க வைக்கிறது, கேள்விகள் கேட்கத் தூண்டுகிறது, சரியான கேள்விகளை எழுப்ப வழிகாட்டுகிறது, மக்களிடையே உண்மைகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது, மாற்றங்களை நிகழ்த்துவதற்கு சமுதாயத்தைத் தயார்ப்படுத்துகிறது. அடக்குமுறையாளர்களுக்கு இதுவெல்லாம் ஆகாதவையாயிற்றே, ஆகவே அவர்கள் புத்தகங்களை வெறுக்கிறார்கள், முடக்கிவைக்க விரும்புகிறார்கள்.

அவ்வாறு முடக்கப்பட்ட  புத்தகங்கள் பின்னர் காலத்தை வென்று புகழடைந்திருக்கின்றன. அவற்றில் பேசப்படும் நிலைமைகள் இன்றைக்கும் நீடிக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான இயக்கங்களும் தொடர்கின்றன.

கருத்துச் சுதந்திரம் மேலோங்கிய நாடு என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே முக்கியமான கதைப் புத்தகங்கள் முடக்கப்பட்ட கதைகள் உண்டு. இத்தனைக்கும் அந்த நாட்டின் அரசமைப்பு சாசனத்தில் செய்யப்பட்ட முதல் திருத்தமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான்! 1771 அது அங்கே நடைமுறைக்கு வந்தது. ஆயினும் அதில் உள்ள சில வாசகங்களுக்கு ஆளுக்காள் ஒரு புதிய விளக்கம் கொடுத்து, சில சிறப்பான புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கச் சட்டப்படி, மாநில அரசுகளுக்கும், மாவட்ட நிர்வாகங்களுக்கும், பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் தன்னாட்சி அதிகாரங்கள் உண்டு. அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தித்தான் உள்ளூரளவில் பல புத்தகங்கள் வாசகர்களுக்குக் கிடைக்காமல் தடுக்கப்பட்டன. இந்தியா உட்படப் பல நாடுகளிலும் இப்படி நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது.

தடைகளைத் தகர்த்து வரலாற்றில் இடம் பிடித்த சில புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம். இன்று முதலாவதாக–.

டு கில் எ மாக்கிங்பேர்ட் (ஒரு கிண்டல் பறவையைக் கொல்ல)

Postscript: Harper Lee, 1926-2016 | The New Yorker

ஹார்ப்பர் லீ (Harper Lee)

ஹார்ப்பர் லீ எழுதிய நாவல். 1960ஆம் ஆண்டில் ஜே.பி. லிப்பின்காட் அன் கோ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த ஆண்டிலேயே புலிட்சர் விருது பெற்றது. ஆனால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களின் நூலகங்களிலும் கல்விநிலையங்களிலும் அந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டது.

நாவல் கூறும் கதை என்ன?

1930களில் அலபாமா மாநிலத்தின் மேகோம்ப் (அது ஒரு கற்பனையான ஊர்) நகரத்தில் நடக்கும் நிகழ்வுகள் கதையாகப் பின்னப்பட்டுள்ளன. கொள்கை நெறியுடன் தொழில் நடத்துபவர் வழக்குரைஞர் அட்டிகஸ். அவருடைய மகள் ஸ்கவுட்., மகன் ஜெம். கோடை விடுமுறையில் அந்த நகரத்திற்கு வரும் குழந்தைகள் அங்கே டில் என்ற சிறுவனுடன் நட்புக்கொள்கிறார்கள். அண்டை வீட்டுக்காரரான பூ ராட்லி வெளியே யாருடனும் பழகாதவர், வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பவர். ஊரில் அவரைப் பற்றிப் பல கட்டுக்கதைகள். அந்தக் கதைகளை முதலில் நம்புகிற பசங்கள் அந்தப் பக்கம் போகவே பயப்படுகிறார்கள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

மயெல்லா ஏவெல் என்ற வெள்ளையினப் பெண்ணை வன்புணர்ந்ததாக டாம் ராபின்சன் என்ற கறுப்பின இளைஞன் கைது செய்யப்படுகிறான். நீதிமன்றத்தில் அவனுக்காக வாதாட அட்டிகஸ் நியமிக்கப்படுகிறார். விசாரணையில் டாம் குற்றவாளி அல்ல என்றும், மயெல்லாவின் தந்தை பாப் ஏவெல் கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்புடன் பொய்யாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் என்றும் அட்டிகஸ் நிறுவுகிறார்.

Harper Lee's To Kill A Mockingbird tops list of 100 of America's best-loved novels | CBC Books

உண்மையில் டாம் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தவன்தான். ஆனால் அவள்தான் அவனைப் பாலியல் இச்சையுடன் நெருங்குகிறாள். அதைப் பார்த்துவிடும் பாப் ஏவல், தன் மகள்தான் குற்றவாளி என்று வெளியே தெரிந்தால் தன் கௌரவம் குலைந்துவிடும் என்று அஞ்சுகிறான். ஏற்கெனவே அவன் கறுப்பின மக்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதி பகைமையோடு இருப்பவன்தான். மேலும், வெள்ளை இனத்திலேயே அவன் ஒரு கீழ்த்தட்டுச் சமூகத்தில் இருப்பவன். போலியாகக் குற்றம் சாட்டிக் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் தன் சமூக நிலையை உயர்வாகக் காட்டிக்கொள்ள முயல்கிறான். அதற்கு அவனுடைய மகளும் உடன்படுகிறாள்.

இதையெல்லாம் அட்டிகஸ் தன் விசாரணைத் திறமையாலும் ஆதாரங்களாலும் நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார். ஆனால், இன ஆணவம் கொண்ட வெள்ளையினத்தவர்கள் மட்டுமே இருக்கிற நடுவர்கள் (ஜூரி) குழு டாம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கிறது. மேல்முறையீடு முயற்சிகள் நடக்கிறபோதே சிறையிலிருந்து தப்பிக்க முயலும் டாம், சுட்டுக் கொல்லப்படுகிறான்.

முன்னதாக, ஒரு பாதிரியாரின் உதவியுடன், நீதிமன்றத்தில் கலப்பின மக்களுக்கான பிரிவில் அமர்ந்து விசாரணைகளையும் தீர்ப்பையும் கவனிக்கும் குழந்தைகள் அதிர்ச்சியடைகிறார்கள். இனவெறியின் கொடூரத்தையும் கேவலத்தையும் உணர்கிறார்கள்.

தனது பொய் அம்பலமானதால் ஆத்திரப்படும் பாப் ஏவல், குழந்தைகளைத் தாக்க முயல்கிறான். வெளியே வராதவனான பூ இப்போது வெளியே வந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறான்.

கொலை செய்யப்பட்ட பாப் ஏவெல் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. சிறுவன் ஜெம்தான் அதைச் செய்திருப்பான் என்று பலரும் நினைத்திருக்க, கொன்றவன் பூ ராட்லி என்று சரியாக ஊகிக்கிறார் நகரத் காவல்துறைத் தலைவர். அவனைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். உண்மையை மறைக்கிறார். மர்மக் கொலையாகவே அது போய்விடுகிறது.

இந்த நிகழ்வுகளையெல்லாம் சிறுமி ஸ்கவுட் சொல்வதாகவே இந்தக் கதை தொடங்கி முடிகிறது. மாக்கிங்பேர்ட் (கிண்டல் பறவை) எனப்படும் நம் ஊர் சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. மற்ற பறவைகளின் ஒலிகளைக் கேட்டு அதே போல் திரும்பவும் உச்சரிப்பதில், ராகம் போட்டுப் பாடுவது போல அந்த ஒலிகளைத் தொடர்ச்சியாக எழுப்புவதிலும் வல்லவை அந்தப் பறவைகள். யாருக்கும் கெடுதல் செய்யாமல், வெகுளித்தனமாகப் பேசுகிற, செயல்படுகிறவர்களை மாக்கிங்பேர்ட் என்று ஒப்பிடுகிறார் எழுத்தாளர்.

டாம் அப்படிப்பட்ட ஒரு வெகுளிதான். அந்த பூ ராட்லியும் கூட ஒரு மாக்கிங்பேர்ட் எனலாம். பொய்யான குற்றச்சாட்டும், வன்மமான இனப்பாகுபாடும் சேர்ந்து எளியவர்களையும், சமூகத்தின் உண்மையான மாண்பையும் ஒடுக்குகின்றன என்ற பொருளில், நாவலுக்கு இந்தத் தலைப்பு மிகவும் பொருந்துகிறது. இதில் நூலகங்களுக்கும் பள்ளிகளுக்கும் என்ன பிரச்சினை?

1930ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இனவெறி எந்த அளவுக்கு இருந்தது என்று அப்பட்டமாகப் பேசுகிறது நாவல். உழைப்பாளி மக்கள் சுரண்டப்படுவது பற்றிக் கூறுகிறது. பெண்கள் குறித்த ஆண் வக்கிரங்களைச் சாடுகிறது.

ஆனால், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சொச்சையான சொற்கள் நிறைய இருக்கின்றன. இது வளரும் தலைமுறைகளுக்கு ஆகாது என்று சிலர் விவகாரமாக்கினார்கள். உண்மையில் கசப்பான வரலாறுகள் நினைவூட்டப்படுவதை அவர்கள் விரும்பாததே தடைக்குக் காரணம் என்று நாம் புரிந்துகொள்ளலாம். காலப்போக்கில் தடைகள் நீர்த்துப்போயின என்றாலும், இப்போதும் சில பகுதிகளில் நீடிக்கின்றன. ஆனால்  புத்தகம் விற்பனைக் கூடங்களிலும் மற்ற நூலகங்களிலும் இப்போது இணைய வழியாகவும் தாராளமாகக் கிடைக்கிறது.

“ஒரு பெண்ணாக, மனித உரிமைகளுக்காக நிற்பவளாக, இனப் பாகுபாட்டின் இழிவை உலகமறியச் செய்ய விரும்பினேன். அதற்காகவே இந்த நாவலை எழுதினேன்,” என்றார் ஹார்ப்பர் லீ.

இந்த நாவலுக்குப் பிறகு புதிய நாவல் எதையும் எழுதவில்லை அவர். ஏனென்று கேட்கப்பட்டபோது, ”அந்த நாவலிலேயே நான் சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். அவற்றையேதான் திரும்பத் திரும்பச் சொல்வேன்,” என்றார். தடை நடவடிக்கைகள் கொஞ்சம் சோர்வை ஏற்படுத்தியிருந்தன. ஆயினும் நாவல் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்று வந்தார்.

தடைகளை மீறி நாவலுக்குக் கிடைத்த வரவேற்பும் விருதும் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து, அது போல இன்னொன்று எழுத முடியுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதாலும் அவர் தொடர்ந்து படைப்பாக்கத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆயினும், இதை எழுதுவதற்கு முன் தயாரித்து வைத்திருந்த, இதன் முதல் பாகம் என்று சொல்லத்தக்க ஒரு நாவலை (கோ செட் எ வாட்ச்மேன்) 2015இல் வெளியிட்டார். அதற்கடுத்த ஆண்டில் தமது 89ஆவது வயதில் காலமானார்.

இன்றும் அமெரிக்காவில் பல வகைகளில் இனப் பாகுபாடுகள் தொடரும் நிலையில் களப்போராளிகளுக்கும் இந்த நாவல் ஒரு கைவிளக்காக இருக்கிறது.

https://bookday.in/books-that-overcame-obstacles-written-by-kumaresan-asak/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல்

Bookday25/02/2025

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் (ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–2

– அ. குமரேசன்

நல்லதொரு இலக்கியப் படைப்பு வாசித்து மகிழ வைப்பதோடு தனது வேலை முடிந்ததென்று நிற்பதில்லை. சித்தரிக்கப்பட்ட உண்மைகளை உரசிப் பார்க்கச் செய்யும். பொய்மைகளைப் புரிந்துகொள்ள உதவும். நிலைமைகளை மாற்றுவதற்குப் போராடுகிறவர்களோடு இணைந்திருக்கத் தூண்டும். அதன் காரணமாகவே உண்மைகளை மறைத்துப் பொய்மைகளைப் பரப்புகிறவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும். யாரும் அதைப் படிக்க இயலாமல் தடை போட முடுக்கிவிடும்.

அப்படிப்பட்ட ஒரு நாவல்தான் ‘ஆயிரத்துத் தொள்ளாயிரத்து  எண்பத்து நான்கு’. பிரிட்டானிய எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய இந்த நாவல் ‘1984’ என்று  எண்ணாகக் குறிப்பிடும் தலைப்பிலும் வெளியானது. 1984ஆம் ஆண்டில் மைக்கேல் ரோட்ஃபோர்ட் இயக்கத்தில் திரைப்படமாகவும் அரங்குகளுக்கு வந்தது. அதற்கு முன் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன் உள்ளிட்ட சில நாடுகளில் புத்தகம் தடை செய்யப்பட்டது.  வேறு சில நாடுகளில் எதிர்ப்புக்கு உள்ளானது.  பிரிட்டனில்  அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை என்றாலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பள்ளிகளிலும் இதர நூலகங்களிலும் சிறிது காலம் புத்தகம் எளிதில் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது. சீனாவில் புத்தகம் கிடைத்தது, ஆயினும் அதன் மீதான விவாதங்கள், குறிப்பாக இணையவழி விவாதங்கள் கண்காணிக்கப்பட்டன, தணிக்கைக்கு உள்ளாகின. அத்தகைய முட்டுக்கட்டைகளைத் தாண்டி இன்று எங்கேயும் கிடைக்கிறது, உலகின் பல மொழிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

             ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)

இதில் ஒரு வேடிக்கையும் நடந்தது. சோவியத் யூனியனில், சோசலிசக் கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைகளை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த நாவலுக்கு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் கம்யூனிசச் சிந்தனைகளைப் பரப்புகிறது என்ற கண்டனத்துடன் தடை விதிக்கப்பட்டது! பாலியல் உறவைச் சித்தரிப்பதாகக் கூறி பள்ளி நூலகங்களிலிருந்து விலக்கப்பட்டது. பிரிட்டனில், அரசின் முழு அதிகாரத்தை நாவல் கேள்விக்கு உட்படுத்துகிறது என்ற அடிப்படையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

வெவ்வேறு கோணங்களில் எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொண்ட நாவலின் கதை இப்படியாக இருக்க, நாவல் சொல்லும் கதை என்ன? சுதந்திரமான பொன்மயமான எதிர்காலம் பற்றிய கற்பனை சூழ் கனவுலகத்தை ஆங்கிலத்தில் ‘உட்டோப்பியன்’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்கள். அதற்கு நேர்மாறான, அடக்குமுறைகளும் துயரங்களும் நிறைந்ததோர் எதிர்காலம் பற்றிய கற்பனையை ‘டிஸ்டோபியன்’ என்பார்கள். 1949இல் ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)   எழுதி வெளியான இந்த நாவல், 35 ஆண்டுகளுக்குப் பிந்தைய ஒரு வல்லாட்சி நாட்டையும் அதன் குடிமக்களையும் கற்பனையாக முன்வைக்கிறது. எதிர்காலக் கற்பனை என்றாலும், அது நாவல் வெளியான காலக்கட்டத்தின் மெய்யான நடப்புகள் பற்றிய மறைமுக விமர்சனம்தான்.

‘1984’ கதைச் சுருக்கம்

உறுதியாகத் தெரிய வராத, 1984 ஆக இருக்கலாம் என ஊகிக்கப்படும் ஆண்டில், போர்களாலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் உலகமே சீரழிந்து போயிருக்கிறது. எல்லா நாடுகளும் மூன்றே மூன்று அனைத்ததிகார வல்லரசுகளின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த மூன்றில் ஒன்றான ஓசியானியா பேரரசுக்கு உட்பட்ட ஏர்ஸ்ட்ரிப் ஒன் என்ற பகுதியாக பிரிட்டன் மாறியுள்ளது. ஓசியானியாவை “கட்சி” (தி பார்ட்டி) என்ற குழு ஆள்கிறது. அதன் கொள்கை “இங்க்சாக்” (இங்கிலீஷ் சோசலிசம் என்பதன் சுருக்கம்) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நவீன வசதிகளுடனும் (கிட்டத்தட்ட செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் போன்றவை) இருக்கும் பேரரசின் ஆகப்பெரும் அதிபதி “பெரிய அண்ணன்” (பிக் ப்ரதர்). அவர்  ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துக் குடிமக்களை ஒடுக்கி வைத்திருக்கிறார். கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனைகள் நிச்சயம். அதைக் கண்காணிக்க “சிந்தனைக் காவல்” (தாட் போலீஸ்) என்ற படையே இயங்குகிறது. ஆட்சிக்கு எதிராகச் செல்கிறவர்கள் “ஆளல்லாதவர்கள்” (அன்பெர்சன்ஸ்) என அறிவிக்கப்பட்டு அவர்கள் இருந்ததற்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். ஆகவே மக்கள் அச்சத்துடன் அவரைப் போற்றுகிறவர்களாக மாறியிருக்கிறார்கள்.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

 கட்சியின் வெளியமைப்பு உறுப்பினரான  விஸ்டன் ஸ்மித் அரசின் உண்மை அமைச்சகத்தில் ஊழியராக இருக்கிறான். வரலாற்று ஆவணங்களைத் திருத்தி தலைமை கூறுவது போலப் பதிவு செய்வது அவனுடைய வேலை. பழைய ஆவணங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிடும். வேலைகளில் ஈடுபடும்போது உண்மைகளை அறிய நேரிடும் வின்ஸ்டன் முந்தைய வரலாறுகளைத் தேடித் தெரிந்துகொள்ள முயல்கிறான்.   மனதளவில் தலைமையை வெறுக்கிறான். அதை  எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடப்பதாகவும் தானும் அவற்றில் பங்கேற்பதாகவும் கனவு காண்கிறான். தான் ஒரு “சிந்தனைக் குற்றவாளி” என்று புரிந்துவைத்திருக்கிற அவன் எதிர்காலத்தில் சிறைவாசம் உண்டு என்ற தெளிவோடும் இருக்கிறான்.

1950இல் நடந்த கலவரத்தில் பெற்றோரை இழந்தவனும், மனைவியைப் பிரிந்தவனுமான வின்ஸ்டன், பொதுமக்களுக்கு அரசியல் நிலைமைகளில் பெரிதாக அக்கறையில்லாமல் இருப்பதைக்  கண்டு ஏமாற்றமடைகிறான். இந்நிலையில் அமைச்சகத்தில், அரசின் நோக்கங்களுக்கு ஏற்ற கதைகளை எழுதிக்கொடுக்கும் எந்திரங்களைப் பராமரிக்கும் சக ஊழியரான  ஜூலியா அவனுடைய கவனத்திற்கு உள்ளாகிறாள். அவள் மீது தொடக்கத்தில் சந்தேகம் கொள்கிறான். அவள் தலைமையின் உளவாளியாக இருக்கலாம் என்று நினைக்கிறான். ஆட்சியின் உள்ளமைப்பில் இருக்கும்  ஒ’ப்ரையன் என்ற அதிகாரி, அரசுக்கு எதிரான “சகோதரத்துவம்”  என்ற ரகசிய இயக்கத்தின் உறுப்பினராக இருக்கக்கூடும் என்றும் ஊகிக்கிறான்.

நாட்களின் ஓட்டத்தில் ஜூலியாவும் ஆட்சியை வெறுப்பவள்தான் என்று அவனுக்குத் தெரியவருகிறது. இருவரும் நேசிக்கத் தொடங்குகிறார்கள். இங்க்சாக் சட்டப்படி, அரசின் அனுமதியின்றி யாரும் உறவுகொள்ள முடியாது. ஆகவே இவர்களது காதல் ரகசியமாகவே தொடர்கிறது. அவர்கள் சந்தித்துக்கொள்வதற்கு சாரிங்டன் என்ற கடைக்காரர் உதவி செய்கிறார். இருவரும் தங்களது குடும்பப் பின்னணிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

விஸ்டனைத் தனியாக வீட்டுக்கு வரவழைக்கும் ஓ‘ப்ரையன், அவன் ஊகித்தது போலவே  தன்னை சகோதரத்துவ இயக்கத்தின் உறுப்பினர்தான்   என்று வெளிப்படுத்திக்கொள்கிறார். எமானுவேல் கோல்ட்ஸ்டீன் என்பவர் எழுதிய ‘ஆட்சிக் கூட்டமைப்பின் கோட்பாடும் நடைமுறையும்’ என்ற புத்தகத்தைத் தருகிறார். 

இதனிடையே ஓசியானியாவின் எதிரி அரசாகிய யூரேசியா (ஐரோப்பிய ஆசியா) திடீரென ஈஸ்டேசியா (கீழை ஆசியா) என  மாறுகிறது, அது பெரிதாகக் கவனிக்கப்படாமல் போகிறது. விஸ்டன் அந்தப் புத்தகத்தை படிக்கிறான். ஆட்சிக்குழு எப்படி  அதிகாரத்தைக் கையாளுகிறது என்பதை அந்த நூல் விளக்குகிறது. அரசால் விளம்பரப்படுத்தப்படும் பல்வேறு முழக்கங்களின் உண்மை நோக்கங்களையும் கூறுகிறது. ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது எப்படி என்ற அத்தியாயத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது அவனும் ஜூலியாவும் கைது செய்யப்படுகிறார்கள். சாரிங்டன் உண்மையில் சிந்தனைக் காவல் படையின் கையாள் என்றும்,  ஒ’ப்ரையன் கூட அதிகாரபீடத்தின் அடியாள்தான் என்றும் அப்போதுதான் தெரியவருகிறது.  

சிறையில் விஸ்டன் பட்டினி போடப்படுகிறான். கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறான். சிறையதிகாரிகள் அவனை ஆட்சியின் விசுவாசியாக மாற்ற முயல்கிறார்கள். சகோதரத்துவம் என்ற இயக்கம் உண்மையிலேயே இருக்கிறதா என்று அவன் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாது    என்கிறார் ஓ‘ப்ரையன்.  கோல்ட்ஸ்டீன் எழுதியதாகக் கொடுத்த புத்தகமே கூட  அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டதுதான் என்று கூறுகிறார். லட்சியத்தை அடைவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தை அடைவதுதான் லட்சியமே என்றும்  தெளிவுபடுத்துகிறார்.

விஸ்டனை “அறை 101” எனப்படும் கூடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். கொண்டுவரப்படும் ஒவ்வொரு கைதியின் பயம்   என்ன என்று அறிந்து அந்தச் சூழல் ஏற்படுத்தப்படுகிற அறை அது. விஸ்டனின் மிகப்பெரிய பயம் எலிகள்.  எலிகள் நிறைந்த ஒரு கூண்டு அவன் முகத்தோடு சேர்த்துக் கட்டப்படுகிறது. அந்த எலிகள் கடித்துக் குதறிவிடும் என்ற அச்சத்தில் வின்ஸ்டன்  விஸ்டன் ஜூலியாவைக் கைவிடுகிறான், கட்சியை ஏற்பதாக அறிவிக்கிறான்.

விடுவிக்கப்படும் வின்ஸ்டன், உணவகத்திற்குச் செல்கிறான். அங்கே, பல ஐரோப்பிய ஆசிய நாடுகளை ஒசியானா கைப்பற்றிவிட்ட செய்தி ஒலிபரப்பாகிறது. அதைக் கேட்டு மகிழ்கிறான். ஒருநாள் அங்கே  ஜூலியாவைச் சந்திக்கிறான்.  இருவருமே ஒருவர்க்கொருவர் துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறார்கள். கடைசியில், முற்றிலுமாக ஆட்சியின் விசுவாசியாக மாறும் வின்ஸ்டன் பெரிய அண்ணனை முழுமையாக நேசிக்கவும் தொடங்குகிறான். 

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) 

நாவலாசிரியரின் முந்தைய நூல்களும் அதிகார அமைப்புகளை விமர்சிப்பவைதான். குறிப்பாக, அவருடைய ‘விலங்குப் பண்ணை’ (அனிமல் ஃபார்ம்) சோசலிசத்தின் சமத்துவக் கொள்கைகளைக் கிண்டலடித்து எழுதப்பட்டதுதான். புதிதாக உருவாகி வளர்ந்து வந்த சோசலிச சோவியத் யூனியனுக்கு ஏகாதிபத்திய நாடுகளால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல், உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டுவதற்கான சதி, அந்த நிலையில் மேற்கொள்ள நேர்ந்த கடுமையான சில நடவடிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டிருந்தால் அந்த நாவலை அப்படி எழுதியிருப்பாரா என்று தெரியவில்லை. 

ஆயினும், கலை இலக்கியப் படைப்பின் கருத்துச் சுதந்திரமும் விமர்சன உரிமையும் உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டியவை. சோசலிசத்தைக் கட்ட முயலும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற பிரச்சாரத்தைத் தங்களது ஆயுதமாக முதலாளித்துவ சக்திகள் பயன்படுத்துவது தெரிந்ததுதான். ஆனால், முதலாளிய நாடுகளில் அறிவிக்காமலே செயல்படுத்தப்படும் கருத்துரிமை ஒடுக்குமுறைகளை அந்த சக்திகளோ, அவர்களின் ஊடகங்களோ கண்டுகொள்வதில்லை. ‘1984’ நாவலைத் தழுவியே தமிழ்நாட்டில் எழுத்தாளர் சுஜாதா ‘ஜினோ’ என்ற, சமத்துவ அரசுக் கொள்கைகளைப் பகடி செய்யும் அறிவியல் புனைவை எழுதியது  கவனத்தில் கொள்ளத்தக்கது.

1903இல், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காள மாகாணத்தின் மோத்திஹரி நகரில் (இன்று  அது பிஹார் மாநிலத்தில் இருக்கிறது)  வெள்ளையின அதிகாரியின் குடும்பத்தில் பிறந்தவர் எரிக் ஆர்தர் பிளெய்ர். பின்னர் லண்டனுக்குத் திரும்பிச் சென்ற பிறகு, இலக்கியத்தில் ஈடுபட்டவர், ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)   என்ற புனைப்பெயரில் கவிதைகள்  எழுதலானார். ‘டௌன் அன் அவுட் இன் பாரிஸ் அன் லண்டன்’ (1933), ‘தி ரோட்  விகான் பியெர்’ (1937), ‘ஹோமேஜ் டு கட்டாலோனியா (1938), ‘அனிமல் ஃபார்ம்’ (1945) ஆகிய நாவல்களைப் படைத்தவர், 1949ஆம் ஆண்டில் ‘1984’ நாவலை வழங்கினார். அது வெளியான அடுத்த ஆண்டிலேயே, அதற்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்ப்பு இரண்டையுமே காணாமல், அவரை நெடுங்காலமாக வாட்டிவந்த எலும்புருக்கி நோய் முற்றிய நிலையில் காலமானார். இறப்புக்குப் பின் நாவல் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது.

அரசியல் களத்திற்குப் புதிய சொல்லாடல்களைக் கொடுத்த நாவல் | ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய நாவல் ‘1984’ | Political Novel - https://bookday.in/

இன்று அரசியலில் அடிக்கடி கையாளப்படுகிற, அதிகார ஆணவத்தைக் குறிப்பிடும் “பெரிய அண்ணன்”, அரசுப் பீடங்களால் மக்களிடையே புகுத்தப்படும் சொல்லாடல்களைக் குறிக்கும் “நியூஸ்பீக்”. முரண்பாடான இரண்டு நிலைபாடுகளைக் கொணடிருக்கும் போக்கை அடையாளப்படுத்தும் “டபுள்திங்க்”, கொடிய ஆட்சிக்கு எதிராகச் சிந்திப்பதைக் கூட குற்றமாக்கும் குதர்க்கத்தைச் சுட்டிக்காட்டும் “தாட்கிரைம்”, அரியாசனவாதிகளுக்குச் சாதகமாக வரலாற்றுத் தடயங்களும், ஆதாரங்களும் அழிக்கப்படும் சூழ்ச்சியின் குறியீடாக “மெமரிஹோல்” என்ற ஆங்கிலச் சொற்கள் மேற்கத்திய நாடுகளின் அரசியல் களத்தில் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அந்தச் சொற்கள் ‘1984’ நாவலிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டவைதான். 

பாசிசம், சர்வாதிகாரம் ஆகியவற்றையும்  சாடுகிற, ஜனநாயகப்பூர்வமான சமத்துவத்தையும், மதவாதங்களை மறுக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் வலியுறுத்துகிற கட்டுரைகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களைத் தந்தமைக்காக இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிறவர். இன்று அவரது நூல்கள் இடம்பெறாத நூலகங்களே உலகில் இல்லை எனலாம். கல்வி, மொழி என அனைத்திலும் அதிகாரக் குவிப்புகள் உறுத்தலே இல்லாமல் நிகழ்த்தப்படும் காலக்கட்டத்தில் ‘1984’ போன்ற படைப்புகள், இக்கட்டுரையின் தொடக்கப் பத்தியில் கூறப்பட்டுள்ள வேலையைச் செய்யும்தானே?

https://bookday.in/books-that-overcame-obstacles-series-2-written-by-kumaresan-asak/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக…

Bookday04/03/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 3: ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) | மார்க் ட்வெய்ன் (Mark Twain)

ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’…

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–3

– அ. குமரேசன்

“உண்மையைச் சொல், சொன்னபின் ஓடிவிடு.”

“எனது கல்வியில் எனது பள்ளிப் படிப்பு தலையிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை.”

“புன்னகை என்பது மின்சாரம். தருபவரை மங்கிவிடச் செய்யாமல் பெறுபவரை ஒளிரச் செய்யும் வாழ்க்கை.”

“எப்போதும் மற்றவர்களின் இறுதிநிகழ்வுகளுக்குச் செல்லுங்கள். இல்லையேல் உங்களுடையதற்கு அவர்கள் வர மாட்டார்கள்.”

– இப்படியெல்லாம் எழுதியவர் மார்க் ட்வெய்ன் (Mark Twain)  (1835–1910). தமது சமூக நையாண்டிப் படைப்புகளுக்காகவும் நகைச்சுவை இழையோடும் தெறிப்புகளுக்காகவும் உலகெங்கும் வாசிக்கப்படுபவர். ‘டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’, ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’, ‘அரசனும் ஆண்டியும்’, ‘மிசிசிப்பி வாழ்க்கை’, ‘முலாம் பூசிய காலம் – இன்றைய கதை’ ‘புடன்ஹெட் வில்சன்’ உள்ளிட்ட நாவல்கள் புகழ்பெற்றவை என இலக்கிய நேயர்கள் தெரிவிக்கிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 3: ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) | மார்க் ட்வெய்ன் (Mark Twain)

 மார்க் ட்வெய்ன் (Mark Twain)

டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer)’ நாவலின் தொடர்ச்சியாகவும், தனியாக வாசிக்க தக்கதாகவும் 1884இல் வந்தது ‘ஹக்கிள்பெர்ரி ஃபின் சாகசங்கள்’. இனவாதத்தைத் தூண்டுகிறது, கறுப்பின மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புகிறது, கெட்டவார்த்தைகளைப் பேசுகிறது என்று குற்றம் சாட்டப்பட்ட அந்த நாவல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. பிரிட்டன் உள்பட வேறு பல நாடுகளில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இன்று உலக இலக்கியங்களில் ஒன்றாக இடம் பிடித்திருக்கும் அந்த நாவல் கூறுகிற இருவரின் பயணக் கதைக்குள் நாமும் பயணிப்போம்.

கதைச் சுருக்கம்

1840களில் நடக்கிற கதை. மிசோரி மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்தைச் சேர்ந்த சிறுவன் ஹக்கிள் பெர்ரி ஃபின். நண்பனான டாம் சாயர் சாகசங்களின் பலனாகப் பெருந்தொகை ஒன்றைப் பெறுகிறான். கணவரை இழந்தவரான டக்ளஸ், அவரது சகோதரி மிஸ் வாட்சன் இருவரும் ஹக்கைத் தங்கள் பாதுகாப்பில் வளர்க்கிறார்கள். சுதந்திரமான வாழ்க்கையை விரும்பினாலும் அவன் டாம் சாயரின் கூட்டத்தோடு இருப்பதற்காக அங்கேயே தங்குகிறான்.
குடிகாரனான தகப்பன் பாப் தனது பணத்தைக் கைப்பற்ற முயன்றதைத் தடுக்கிறான் ஹக். ஆத்திரத்துடன் அவனை வெகுதொலைவில் ஒரு தனி அறையில் அடைத்து வைக்கிறான். பாப் நிதானம் இழந்த போதையில் ஹக்கைக் கொல்லவும் முயல்கிறான்.

ஹக் தான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக நாடகமாடி ஒரு தீவுக்குத் தப்பிச் செல்கிறான். அங்கே மிஸ் வாட்சனின் அடிமையான கறுப்பின இளைஞன் ஜிம் அவனுடன் பழகுகிறான். அவள் தன்னை விற்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்து தப்பி ஓடத் திட்டமிட்டிருப்பதைக் கூறுகிறான். அவனுடன், ஹக்கும் இணைகிறான்.
இருவரும் மிசிசிப்பி நதியில் ஒரு கட்டுமரத்தில் பயணம் செய்கிறார்கள். ஒரு வெள்ளப் பெருக்கின்போது கரையொதுங்கும், அவர்கள் ஒரு படகு வீட்டைக் காண்கிறார்கள், அங்கு ஜிம், துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடக்கும் ஒருவரது உடலைக் காண்கிறான். ஆனால், ஹக் அதைப் பார்க்க வேண்டாமென்று தடுத்துவிடுகிறான்.

நகருக்குள் செல்லும் ஹக் அங்கே ஜிம்மைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதை அறிகிறான். ஹக்கை ஜிம்தான் கொலை செய்துவிட்டதாக கதை பரவியிருக்கிறது. ஜிம்மிடம் திரும்பி வருகிறான். இருவரும் மறுபடியும் தங்கள் கட்டுமரத்தில் தப்புகிறார்கள். ஓரிடத்தில் தரைதட்டி நிற்கும் ஒரு நீராவிப் படகைப் பார்க்கிறார்கள். அதில் இரண்டு திருடர்கள், மூன்றாவது நபரைக் கொல்லப் போவதாகக் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹக்கும் ஜிம்மும் அந்தத் திருடர்களின் படகில் தப்பிச் செல்கிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 3: ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) | மார்க் ட்வெய்ன் (Mark Twain)

இதற்கிடையே பயணத்தில் பல சவால்கள் குறுக்கிடுகின்றன. சமாளித்துத் தொடர்கிறார்கள்.. திடீரெனப் படகு மூழ்கிவிடுகிறது. இருவரும் பனி மூட்டத்தில் பிரிந்துவிடுகிறார்கள். ஒருவழியாக மீண்டும் சந்திக்கிறபோது, இப்படி நடக்கும் என்று தன் கனவில் வந்ததாக ஹக் பொய்யாகச் சொல்கிறான். உண்மை தெரியவரும்போது ஜிம் மிகவும் வருத்தமடைகிறான். தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்தவனான ஜிம் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறான் என்று அறியும் ஹக் அவனைப் புண்படுத்திவிட்டதை எண்ணி தானும் வருந்துகிறான். இருவரும் நெருக்கமாகிறார்கள்.

சில வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். எசமானர்களிடமிருந்து ஓடிப்போன கறுப்பின அடிமைகளைப் பிடிக்க வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஹக் அப்படி யாரையும் பார்க்கவில்லை என்று கூறி, ஜிம்மைக் காப்பாற்றுகிறான். ஒரு கட்டுமரத்தில் பயணம் தொடரும் நிலையில் ஒரு நீராவிக் கப்பல் வந்து மோதுகிறது. ஹக்கும் ஜிம்மும் மீண்டும் பிரிகிறார்கள்.

வழியில், கிரேஞ்சர் ஃபோர்டு குடும்பத்தை சந்திக்கிறான் ஹக்.. அந்தக் குடும்பத்திற்கு சீப்பர்ட்சன் குடும்பத்துடன் முப்பது ஆண்டுகாலப் பகை. இப்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இருவர் காதலித்து ஓடிப்போன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.. இரு தரப்பினரின் மோதல் ஒரு கொலையில் முடிகிறது.அங்கிருந்து தப்பிக்கும் ஹக் மறுபடியும் ஜிம்முடன் இணைகிறான்.

மன்னர் குடும்பம் என்று கூறிக்கொள்ளும் இரண்டு மோசடிக்காரர்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மோசடிகளுக்கு ஹக்கையும் ஜிம்மையும் உதவ வைக்கிறார்கள். ஒரு நகரத்தில் மோசடிக்காரர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் மேடை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். மூன்றாம் நாள் இரவில், ஏமாற்றப்பட்டதை அறிந்து பழிவாங்கத் துடிக்கும் முந்தைய காட்சியின் பார்வையாளர்களிடம் தந்திரமாகக் கட்டணத்தை வசூலிக்கும், மோசடிக்காரர்கள் ஓடிவிடுகிறார்கள்.

அந்த இருவரும் அடுத்த நகரத்தில் அண்மையில் இறந்துவிட்ட பீட்டர் வில்க்ஸ் என்பவரின் சகோதரர்களைப் போல் நடித்து, அவரது சொத்தை திருட முயல்கிறார்கள். ஆதரவற்றவர்களாக நிற்கும் அவருடைய மருமகள்களுக்காக அந்தச் சொத்தை மீட்க ஹக் உதவுகிறான். வில்க்ஸின் சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு மேலும் இரண்டு பேர் வருகிறார்கள், குழப்பம் ஏற்படுகிறது. ஹக்கை மோசடிக்காரர்கள் பிடித்து வைக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஜிம்மைப் பிடித்து பெல்ப்ஸ் என்பவரிடம் விற்றுவிட்டதை ஹக் கண்டறிகிறான். அவனை விடுவிக்க உறுதியேற்கிறான். இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பித்து அங்கே போகிறான்.

பெல்ப்ஸ் ஹக்கை தங்கள் மருமகன் டாம் சாயர் என்று தவறாக நினைக்கிறார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுகிறான். திரும்பி வரும் டாம் சாயர் நடப்பதைப் புரிந்துகொண்டு ஹக்கின் நாடகத்திற்கு ஒத்துழைக்கிறான். மன்னர் குடும்பம் என்று ஏமாற்றி வந்தவர்கள் பற்றி எல்லோருக்கும் தெரிவிக்கிறான் ஹக். ஊரார் அவர்களின் முகத்தில் தார் பூசி இறகுகள் ஒட்டி நகரத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்.

ஜிம்மைத் தப்பிக்க வைக்கும் முயற்சியில் டாம் சாயர் காயமடைகிறான். தப்பித்துச் செல்ல இருந்த ஜிம் அவனைக் கவனித்துக் கொள்வதற்காகத் தங்குகிறான். அப்போது கைது செய்யப்பட்டு பெல்ப்ஸிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறான். அந்நேரம் டாமின் அத்தை பாலி வருகிறார். ஹக், டாம் இருவரது உண்மையான அடையாளங்களை வெளிப்படுத்துகிறார். மிஸ் வாட்சன் இறந்துவிட்டதையும், அவர் தனது உயிலில் ஜிம்மை விடுவித்துவிட்டதாக எழுதியிருப்பதையும் பாலி விளக்குகிறார். டாம் அந்த விசயம் தனக்குத் தெரியும் என்றும், வேண்டுமென்றே அதை மறைத்து ஜிம்மை ஒரு விறுவிறுப்பான முறையில் மீட்க விரும்பியதாகவும் தெரிவிக்கிறான். படகு வீட்டில் இறந்து கிடந்தது ஹக்கின் அப்பா பாப்தான் என்று கூறுகிறான் ஜிம். பெல்ப்ஸ் குடும்பத்தினரால் தத்தெடுத்து வளர்க்கப்படுவதிலிருந்து தப்பித்துச் சுதந்திரமாக வாழ விரும்பும் ஹக் பூர்வகுடிமக்கள் வாழும் பகுதிக்குச் செல்கிறான்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 3: ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) | மார்க் ட்வெய்ன் (Mark Twain)

உடைபட்ட தடை

குழந்தைகளின் ரசனைக்கான சாகசக் கதையாக எழுதப்பட்ட இந்த நாவல் உண்மையில் கறுப்பின மக்களை எப்படியெல்லாம் வெள்ளையினக் கனவான்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்று காட்டுகிறது. ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தை வைத்து, சமூக நிலவரங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. உண்மை நிலையைக் காட்டுவதற்காக, வசனங்களில் மக்களிடையே புழக்கத்தில் இருந்த கடுமையான சொற்களையும் வசவுகளையும் சேர்த்திருக்கிறார் மார்க் ட்வெய்ன் (Mark Twain).

வெள்ளைச் சமூகத்தினருக்கு அவர்களது இனவாத ஆணவங்களை அம்பலப்படுத்தியதால் நாவல் பிடிக்காமல் போனது. போலியான காரணங்களைக் கூறி தடை விதிக்க வற்புறுத்தினார்கள். மனசாட்சிப்படி செயல்பட விரும்பும் ஹக் பாத்திரம், மத போதனைகளை மீறுவதாக இருக்கிறது என்று அன்றைய கிறிஸ்துவ மதவாதிகளும் எதிர்த்தார்கள். இனவாத, மதவாதப் பார்வைகளுடன் இருந்த அமெரிக்க மாநிலங்களின் ஆட்சியாளர்கள் நாவலுக்குத் தடை விதித்தார்கள். பல ஆண்டுகள் கடந்த பின்னரே தடை விலக்கப்பட்டது.

‘தி அட்வெஞ்ச்சர்ஸ் ஆஃப் ஹக்கிள்பெர்ரி ஃபின்” (Adventures of Huckleberry Finn) நாவல் வெளியான காலத்தில் பெரிய விருதுகள் ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், காலப்போக்கில் இந்த நாவல் இலக்கிய உலகில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றது. அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான படக்கதை வடிவத்திலும், சில திரைப்படங்களாகவும் மக்களிடம் வந்திருக்கிறது. அமெரிக்க இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த புத்தகங்களில் ஒன்று என்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறது. அடிமைத்தனத்திற்கு, இனவெறிக்கு எதிராகக் களம் இறங்குவோருக்கு ஒரு இலக்கியத் துணை என்ற இடத்தையும் பிடித்திருக்கிறது.

எழுதியவர்:

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 3: ஒரு சாகசப் பயணக்கதை இனவெறிக்கு எதிரான இலக்கியமாக டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) | மார்க் ட்வெய்ன் (Mark Twain)

அ.குமரேசன்

https://bookday.in/books-beyond-obstacles-3-the-adventures-of-tom-sawyer-novel-oriented-article-written-by-a-kumaresan/

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கிருபன் . ......... ! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4

BookDay11/03/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 4 | மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) எழுதிய ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid's Tale) நாவல் - https://bookday.in/

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்– 4

எதிர்காலக் கதையைக் கூறி கடந்தகால, நிகழ்கால நடப்புகளைச் சாடிய நாவல் (The Handmaid’s Tale)

அ. குமரேசன்

கனடா நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கியத் திறனாய்வாளர் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). 18 கவிதை நூல்கள், 18 நாவல்கள் இவற்றுடன் சமூக நிலைமைகள் தொடர்பாகப் பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 85 வயதில் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார், இலக்கிய விவாதங்களில் பங்கேற்று வருகிறார். சுற்றுச்சூழல் இயக்கத்தில் ஒரு முன்னணிச் செயற்பாட்டாளர்.

1985ஆம் ஆண்டில் அவர் எழுதி வெளியிட்ட நாவல் ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்‘ (The Handmaid’s Tale) (ஓரு சேடியின் கதை). பெண்களின் ஒழுக்க வாழ்வு பற்றிய வழிகாட்டல்களை விமர்சிக்கிறது, ஒழுக்க விதிகளை மீறுவதற்குப் பெண்களைத் தூண்டுகிறது, மதத்திற்கு உள்ள அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்றெல்லாம் கூறி அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் இந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது. கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் இரண்டுமே நாவலுக்கு நிலையான தடை விதிக்க வற்புறுத்தின. அவருடைய சொந்த நாடான கனடாவில் தடை செய்யப்படவில்லை என்றாலும், பெண்ணின் உடல், பாலியல் உறவு சார்ந்த கொச்சையான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும், கட்டுப்பாடுகளை அவமதிக்கிறது என்றும் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. இந்தியாவில் தடை அளவுக்குப் போகவில்லை, ஆனால் சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. உலக அளவில் நாவலுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அந்தத் தடைகளும் எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் படிப்படியாக அடங்கிப் போயின.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 4 | மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) எழுதிய ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid's Tale) நாவல் - https://bookday.in/

உண்மையில் இன்றளவும் எல்லாச் சமுதாயங்களிலும், நவீன வாழ்க்கை முறைகளிலேயே, தாண்டவமாடுகிற ஆணாதிக்க ஆணவங்களைச் சந்தியில் நிறுத்துகிறாள் ஓர் உயரதிகாரி வீட்டுச் சேடியான ஆஃப்ஃப்ரெட். வெளியானது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். எதிர்காலத்தில் (21ஆம் நூற்றாண்டில்) ஒரு கற்பனையான நாட்டில் (கிலியட்) நடக்கும் சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை, குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வக்கிரங்களைப் பற்றிப் பேசுவது போல முக்காலத்திற்கும் உரிய பார்வையைப் பகிர்ந்திருக்கிறார் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood). ஒரு நாடு ஒற்றை மதவெறி ஆட்சியின் பிடியில் சிக்கினால் மக்கள் என்ன ஆவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார். கதைக்குள் போவோம்.

அழிவுக்குப் பின்னால்…

தடுக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் காரணமாக அமெரிக்க நாடு சிதைகிறது. ‘சன்ஸ் ஆஃப் ஜேக்கப்’ என்ற ஒரு கலவரக் குழு ஆட்சியைக் கைப்பற்றுகிறது. ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டுவதற்கு மாறாக, பழைய மதங்களிலிருந்து கடைந்தெடுத்த பிற்போக்குத்தனங்களை எல்லாம் எடுத்துத் தனதாக்கிக்கொண்டு, அனைத்து மதங்களையும் ஒடுக்கிவிட்டு ஒரு புதிய மதத்தை உருவாக்குகிறது. நாட்டின் அரியாசன மதம் அதுதான் என்று அறிவிக்கப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கே உரிய வழக்கப்படி முதலில் ஊடகச் சுதந்திரத்தை அந்த அரசு முடக்குகிறது. கடுமையான சமூக விதிகள், முக்கியமாகப் பெண்களைக் கட்டுப்படுத்தி வைக்கிற சடங்குகள் நடைமுறைக்கு வருகின்றன. பெண்கள் போராடிப் பெற்றிருந்த உரிமைகள் யாவும் விலக்கப்படுகின்றன. சட்டப்படியே எல்லாப் பெண்களும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நாட்டின் பெண்களிலேயே உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் யாரென்றால், உயரதிகாரிகளின் மனைவிமார்கள்தான். அவர்கள் உட்பட அனைத்துப் பெண்களும் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி நிறங்களில் சீருடைகள் கட்டாயமாக்கப்படுகிறது. அவர்களுக்கு சொத்துரிமை, பணம் வைத்திருக்கும் உரிமை, படிக்கும் உரிமை, எழுதும் உரிமை எதுவும் கிடையாது. அடிமட்டத்தில் உள்ள பெண்களுக்குக் கருவுறும் உரிமை கூடக் கிடையாது. அதிகார பீடத்திலிருந்து, எந்த ஆணுடன் ஒரு பெண் உறவுகொள்ள வேண்டும் என்று ஆணை வருகிறதோ அவனுடன்தான் அவள் செல்ல வேண்டும், அவனால் உருவாகும் கருவைத்தான் சுமக்க வேண்டும், பெற்றுத் தர வேண்டும். அப்படிப்பட்ட நிலைமையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ‘ஹேண்ட்மெய்ட்’ என்று பெயர். தமிழில் சேடி, பணிப்பெண், வேலைக்காரி, பெண் கையாள் என்று சொல்லலாம்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 4 | மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) எழுதிய ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid's Tale) நாவல் - https://bookday.in/

அப்படியொரு சேடிதான் ஆஃப்ஃப்ரெட். ஏற்கெனவே திருமணமாகிப் பிரிந்துவிட்ட ஒருவனோடு வாழ விரும்பி, தன் மகளுடன் ஊரை விட்டு வெளியேற முயலும்போது பிடிபட்டுவிடுகிறாள். அவளையும் சிறுமியையும் பிரிக்கிறார்கள். அவள் விபச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைக்கிறார்கள். யாருடன் தப்பிக்க முயன்றாளோ அவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை.

புதிய சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட பெண் மரண தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அரசாங்கம் சொல்கிறபடி யாருடைய வீட்டிலாவது சேடியாக வேலை செய்ய வேண்டும். அவளுடைய உண்மையான பெயர் மறைக்கப்பட்டு, யாருடைய வீட்டுக்கு அனுப்பப்படுகிறாளோ அவனுடைய பெயருடன் “ஆஃப்” என்ற முன்னொட்டு சேர்த்து அழைக்கப்படுவாள். உயிரோடு இருந்தால்தான் மகளைக் கண்டுபிடிக்க முடியும், இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிற மற்ற பெண்களுக்கும் உதவ முடியும். ஆகவே ஆஃப்ஃப்ரெட் அதை ஏற்கிறாள். குழந்தை பிறக்காதவனான, கமாண்டர் எனப்படும் ஓர் உயரதிகாரியின் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவனுடைய பெயர் ஃப்ரெட். ஆனவே இவளுடைய பெயர் ஆஃப்ஃப்ரெட்.

அவனுடைய மனைவிக்குத் தனது உடலில் குறையா அல்லது அவனிடம் குறைபாடா என்று தெரியாத நிலையில் இவளைக் கணவனின் இருப்பிடத்திற்கு ஒரு சடங்குக்காக அனுப்பி வைக்கிறாள். உண்மையில் அது வக்கிரமான வல்லுறவு ஏற்பாடுதான், ஆனால் சடங்கு என்பதாக அமைத்திருக்கிறார்கள் அதிகார பீடத்தினர்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 4 | மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) எழுதிய ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid's Tale) நாவல் - https://bookday.in/

ஆஃப்ஃப்ரெட் தனது கடந்த கால நினைவுகளுடன் வாழ்கிறாள். கணவன், மகள், நண்பர்களின் நினைவுகள் அவளை வாட்டுகின்றன. அவள் கிலியட் நாட்டின் கொடுமையான வாழ்க்கை முறையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறாள். அதற்காக மற்ற சேடிகளுடன் ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறாள். ஆஃப்க்ளென் என்ற சேடி ஒத்தாசையாக இருக்கிறாள். ஏற்கெனவே நாட்டில் ஆட்சிக்கு எதிரான சில குழுக்கள் ரகசியமாகச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. அவர்களோடும் இவள் தொடர்பு கொள்கிறாள். சுதந்திரத்தை மீட்கத் துடிப்போரின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுகிறாள்.

கமாண்டர் இவள் மீது மோகம் கொண்டவனாகத் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறான். அவளைப் பயன்படுத்திய பின்பு பாலியல் விடுதியில் அவளைத் தள்ளிவிடத் திட்டமிட்டிருக்கிறான். அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படிச் சந்திப்பதும் சட்டவிரோதம். அவனுடைய மோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதிகார அமைப்புகள் பற்றிய தகவல்களை அவனிடமிருந்து கறக்கிறாள் ஆஃப்ஃப்ரெட். மகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று எதையும் செய்யத் துணிகிறாள்.

இதனிடையே, கமாண்டரின் உதவியாளனான நிக் என்பவனுக்கும் இவளுக்கும் இடையே ஒரு நேசம் உருவாகிறது. ஆஃப்க்ளெய்ன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வருகிறது. இவளுக்குத் தானும் செத்துப் போவதா அல்லது எப்படியாவது தப்பிப்பதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. நிக் உண்மையிலேயே நம்பக்கூடியவனா அல்லது அரசாங்கத்தின் கையாளா என்ற சந்தேகமும் தோன்றுகிறது. திடீரென ‘கடவுளின் கண்கள்’ என்ற படைப் பிரிவினர் ஆஃப்ஃபிரெட்டைக் கைது செய்கிறார்கள். வெளியே கொண்டுசெல்லப்படும்போது அவளை நெருங்கும் நிக், தன்னை நம்புமாறு கேட்டுக்கொள்கிறான். வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு வாகனத்தில் ஏறச் சொல்கிறார்கள். தயங்கினாலும் பிறகு துணிந்தவளாக வாகனத்தில் ஏறுகிறாள்.

அதற்கப்புறம் என்ன ஆகிறது என்று நாவல் சொல்லவில்லை. அந்த வாகனம் அவளைத் தண்டனைக் கூடத்திற்குக் கொண்டு செல்ல வந்ததா அல்லது தப்பிப்பதற்காக நிக் செய்த ஏற்பாடா, அவன் தன் மகளைக் கண்டுபிடித்தாளா, மற்ற பெண்கள் என்ன ஆனார்கள் என்ற பல கேள்விகள் சூழ்கின்றன. எதிர்காலக் கற்பனை நாடு ஒன்றில் தொடங்கிய நாவல், எதிர்காலக் கற்பனை மாநாடு ஒன்றில் நிறைவடைகிறது. 2195ஆம் ஆண்டில் நடைபெறும் அந்த மாநாட்டில் ஒரு ஆய்வாளர், “இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய, அக்காலத்துத் தொழில்நுட்பம் சார்ந்த ஒலிப்பேழை ஒன்று ஆராய்ச்சியில் கிடைத்திருப்பதாகவும், அதில் ஆஃப்ஃபிரெட் என்ற பெண் தன் கதையைப் பதிவு செய்திருக்கிறாள்,” என்றும் அறிவிக்கிறார். அவளுக்கும் அவளைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை அவரும் ஊகமாகவே முன்வைக்கிறார்.

நிகழ்கால உண்மைகள்

நாவல் பற்றிய கருத்தரங்குகளில் மார்கரெட் அட்வுட் (Margaret Atwood), கதையில் வரும் நிகழ்வுகள் காலங்காலமாகப் பெண்கள் சந்திக்கிற அவலங்களின் சித்தரிப்புதான் என்று கூறியிருக்கிறார். பெண்களின் சுதந்திரத்தை மிதித்து நசுக்கும் மதங்களின் கட்டுப்பாடுகளோடு கலந்து தொடர்கிற ஆணாதிக்க வன்மங்களைச் சொல்வதற்குக் கற்பனையான எதிர்காலம் உதவியாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்று பல மதங்களில் பெண்கள் பற்றிய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்று அங்கீகரிக்கிற அவர், அந்த மாற்றம் மேலும் வலுப் பெறுவதற்கு இப்படிப்பட்ட படைப்புகள் உதவும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்திருக்கிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 4 | மார்கரெட் அட்வுட் (Margaret Atwood) எழுதிய ‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid's Tale) நாவல் - https://bookday.in/

‘தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்’ (The Handmaid’s Tale) நாவலுக்கு பல முக்கியமான விருதுகள் கிடைத்துள்ளன. கனடாவின் முக்கிய இலக்கிய விருதுகளில் ஒன்றான கவர்னர் ஜெனரல் விருது (1985), சிறந்த அறிவியல் புனைகதைக்கான ஆர்தல் சி. கிளார்க் விருது (1987), காமன்வெல்த் இலக்கிய விருது (1987), ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையின் புனைகதை விருது (1986) ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். பல நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும், இளையோருக்கான படக்கதைப் புத்தகங்களாகவும் ஆஃப்ஃப்ரெட் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறாள். 2019ஆம் ஆண்டில் இதன் இரண்டாவது பாகமாக ‘தி டெஸ்டமென்ட்ஸ்’ (சாட்சியங்கள்) வெளியானது. கிலியட் நாடு பிறகு என்ன ஆனது எனக் கூறும் அந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது. முதல் பாகம் புக்கர் பரிசுக்கான பரிந்துரையை மட்டும் பெற்றது. பின்னர், 2000ஆவது ஆண்டில், குடும்ப ரகசியங்கள் பற்றிப் பேசும் ‘தி பிளைண்ட் அசாசின்’ (கண்மூடித்தனமான கொலையாளி) புக்கர் பரிசைப் பெற்றது. ‘தி டெஸ்டமென்ட்ஸ் மூலமாக, இரண்டு முறை அந்தப் பரிசைப் பெற்ற படைப்பாளிகளின் வரிசையில் இவரும் சேர்ந்தார்.

https://bookday.in/books-that-overcame-obstacles-series-4-written-by-a-kumaresan/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 5 | ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் -உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)

உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 5

 – அ. குமரேசன்

இளம் தலைமுறையினரின் – குறிப்பாக முதிர் பதின்பருவத்தினரின் சுதந்திர மனநிலை, அவர்கள் இழக்க நேரிடுகிற குழந்தைத்தனம், சமூகத்தைப் புரிந்துகொள்வதில் அவர்களுடைய போராட்டம், அவர்களைப் புரிந்துகொள்வதில் சமூகத்திற்குத் தேவைப்படும் பக்குவம் ஆகியவற்றைப் பேசும் அருமையான நாவல் என்று ஆங்கில இலக்கிய உலகில் பாராட்டப்படுவது 1951இல் வெளியான ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye). கம்பு பயிரிடப்பட்ட வயலில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைக் கற்பனை செய்துகொள்ளும் இளைஞனைப் பற்றிய கதை. ‘கம்பு வயல் குழந்தைகளின் மெய்க்காவலன்’ என்று நாவலின் தலைப்பைத் தமிழில் சொல்லலாம். எழுதியவர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger).

1923ஆம் ஆண்டிலிருந்து வெளியான மிகச் சிறந்த 100 நாவல்களை 2005ஆம் ஆண்டில் பட்டியிலிட்ட ‘டைம்ஸ்’ ஏடு, அவற்றில் ஒன்றாக இதனைச் சேர்த்திருந்தது. ‘மாடர்ன் லைப்ரரி’ என்ற அமைப்பு 2003ஆம் ஆண்டில் தனது வாசகர்களிடையே 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த நாவல்கள் பற்றி ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. அதிலும் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) எழுதிய இந்த நாவல் தேர்வு பெற்றது. பெரிதும் படிக்கப்பட்ட நாவல்கள் பற்றி பிபிசி ஊடக நிறுவனம் நடத்திய ஆய்வில் 15வது இடத்தைப் பிடித்தது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் -உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)

இதுவரையில் சுமார் ஆறரைக் கோடிப் படிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல், வெளியான சில ஆண்டுகள் அமெரிக்காவின் பல மாநிலங்களில் நூலகங்களிலும் பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களிலும் தடை செய்யப்பட்டது. இளம் பருவத்தினரின் ஒழுக்கக் கேடுகளை நியாயப்படுத்துகிறது, அவர்கள் பயன்படுத்தக்கூடிய “கெட்டவார்த்தைகளை’‘ அப்படியே சொல்கிறது, கல்வி நிறுவனங்களிலும் சமூகத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சாடியதன் மூலம் கம்யூனிஸ்ட் கருத்துகளை விதைக்கிறது என்ற காரணங்கள் கூறப்பட்டன. ஒக்லஹோமா மாநிலத்தின் டுல்சா நகரப் பள்ளி ஆசிரியர் தனது வகுப்பு மாணவர்கள் படித்து வந்து விவாதிக்க இந்த நாவலைப் பரிந்துரைத்ததற்காகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். இலக்கிய அன்பர்களும் சமூக அக்கறையாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து. சில மாதங்களில் அவர் மறுபடியும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் புத்தகத்திற்கான தடை விலக்கப்பட்டது. இப்போது பல மொழிகளிலும் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாவலாசிரியர் ஜெரோம் டேவிட் சாலிங்கர் (J.D.Salinger) அமெரிக்காவின் அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டப்படி இரண்டாம் உலகப் போரில் பணியாற்றுவதற்கு முன்பு, 1940 ஆம் ஆண்டில் “ஸ்டோரி” என்ற பத்திரிகையில் பல சிறுகதைகளை வெளியிட்டார். 1948 இல், அவரது “எ பெர்ஃபெக்ட் டே ஃபார் பனானாஃபிஷ்”நாவல் ‘தி நியூ யார்க்கர்’ பத்திரிகையில் வெளியானது. “தி கேட்சர் இன் தி ரை” உடனடியாக பெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ‘நைன் ஸ்டோரிஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ஒரு குறுநாவல் மற்றும் ஒரு சிறுகதையை உள்ளடக்கிய ‘ஃப்ரானி அண்ட் ஜூயி’ என்ற தொகுப்பையும், இரண்டு குறுநாவல்களை உள்ளடக்கிய ‘ரைஸ் ஹை தி ரூஃப் பீம், கார்பென்டர்ஸ் அண்ட் சீமோர்: அன் இன்ட்ரோடக்ஷன்” என்ற தொகுப்பையும் வெளியிட்டார். சாலிங்கரின் கடைசிப் படைப்பான ‘ஹாப்வொர்த் 16, 1924’ என்ற குறுநாவல்1965இல் வெளியானது.

அதன் பிறகு கசப்பான அனுபவங்களுடனேயே வாழ்ந்தார். 1980களில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருடன் நீண்ட நாட்கள் சட்டப் போராட்டம், 1990களின் பிற்பகுதியில் அவருக்கு நெருக்கமான இருவர் எழுதிய சுயசரிதை தொடர்பான சண்டை என அவரது பிற்கால வாழ்க்கை கடந்து, 91 வயதில், 2010இல் மரணத்துடன் முடிந்தது.

கதை என்னவென்றால்…

ஹோல்டன் கால்ஃபீல்ட் என்ற இளைஞன் தன் கதையைச் சொல்கிற நடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன் கடந்த நாட்களின் நிகழ்வுகளை ஹோல்டன் நினைவுகூர்கிறான். கதை, பென்சில்வேனியா மாநிலத்தில் கற்பனையாக உருவகிக்கப்ட்ட அகர்ஸ்டடவுன் என்ற கற்பனையாக உருவகிக்கப்பட்ட நகரத்தின் ‘பென்சி பிரிபரேட்டரி அகாடமி’ என்ற உயர்நிலைப் பள்ளியில் தொடங்குகிறது. அங்கே அவன் ஆங்கிலம் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் பள்ளி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுகிறான்.

ஹோல்டன் தனது அறை நண்பனான வார்ட் ஸ்ட்ராட்லேடர் கேட்டுக்கொண்டதற்காக ஒரு ஆங்கிலக் கட்டுரை எழுதித்தர ஒப்புக்கொள்கிறான். அவனை எழுதச்சொல்லிவிட்டு ஜேன் கல்லாகர் என்ற பெண்ணுடன் டேட்டிங் செல்கிறான் ஸ்ட்ராட்லேடர். அவள் மீது காதல் கொண்டுள்ள ஹோல்டன் வருத்தப்படுகிறான். அவன் எழுதிய உணர்வுப்பூர்வமான கட்டுரையை ஸ்ட்ராட்லேடர் மதிக்கவே இல்லை. அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டானா என்று ஹோல்டன் கேட்க பதிலளிக்க மறுக்கிறான். கோபமடைந்த ஹோல்டன் அவனைத் தாக்குகிறான். அங்கே ஏற்படும் சண்டையில் ஸ்ட்ராட்லேடர் எளிதில் வெற்றி பெறுகிறான். அந்த ஊரிலும் பள்ளியிலும் உள்ள போலித்தனங்களை வெறுத்து, ஹோல்டன் நியூயார்க்கிற்கு ரயிலில் செல்ல முடிவு செய்கிறான். பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட செய்தி பெற்றோரைச் சென்றடையும் வரையில் வீட்டிற்கு வராமல் இருக்கத் திட்டமிடுகிறான்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் -உலகத்தை இளையோரும், அவர்களைப் பெரியோரும் புரிந்துகொள்ள ஒரு நாவல் ‘தி கேட்சர் இன் தி ரை’ (The Catcher In The Rye)

இரவில் ஒரு பாலியல் தொழிலாளியும், அவளுடைய தரகனும் மோசடியாக ஹோல்டனை ஏமாற்றுகின்றனர். ஊரைவிட்டுப் புறப்படுகிறவன், சாலி ஹேய்ஸ் என்ற பழைய தோழியை தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான், அவள் மறுத்துவிடுகிறாள். வகுப்பில் தன்னுடன் படித்தவன் ஒருவனைச் சந்திக்கும் ஹோல்டன் அவனுடைய பாலியல் வாழ்க்கை பற்றி தொடர்ந்து கேள்விகள் கேட்கிறான். இறுதியில் ஹோல்டன் குடித்துவிட்டு பெரியவர்களிடம் மோசமாக நடந்துகொள்கிறான்.
தனது தங்கை போபியைப் பார்க்க ஏங்கும் ஹோல்டன் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து அவளை எழுப்புகிறான். உடன்பிறந்தவனைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதைக் கண்டுபிடித்து வருந்துகிறாள். அவனது இலக்கில்லாத போக்கிற்காகவும், மற்றவர்களை வெறுக்கும் மனநிலைக்காகவும் அவனைக் கண்டிக்கிறாள்.

எதைப் பற்றியாவது அக்கறை இருக்கிறதா என்று அவள் கேட்கும்போது, ராபர்ட் பர்ன்ஸின் “காமின் த்ரூ தி ரை” என்ற கவிதையை தவறாகப் புரிந்துகொண்டு உருவாக்கிய ஒரு கற்பனையைப் பகிர்ந்துகொள்கிறான். அந்தக் கவிதையில் வருகிற கம்பு பயிரிடப்பட்ட வயலில் குழந்தைகள் ஓடுவதாகவும், அவர்கள் அருகிலுள்ள பாறையிலிருந்து கீழே விழுவதற்கு முன் பிடித்துக் காப்பாற்றுவதாகவும் கற்பனை செய்கிறான். போபி அந்தக் கவிதையின் உண்மையான பொருளை விளக்குகிறாள். கம்பு வயலில் காதலர்கள் சந்தித்துக்கொள்வதைத்தான் கவிஞர் சித்தரித்திருக்கிறார் என்று கூறுகிறாள். கவிதையைப் புரிந்துகொள்வதிலும் தோல்வியா என்று ஹோல்டன் கண்ணீர் விடுகிறான், போபி ஆறுதல் படுத்துகிறாள்.

பெற்றோர் வீடு திரும்பியதும் அவன் வெளியேறி தனது முன்னாள் ஆங்கில ஆசிரியரைச் சந்திக்கிறான்.. ஹோல்டன் ஒரு பயங்கரமான வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறான் என்று அவர் கவலைப்படுகிறார். கற்பனைகளை விடுத்து நடப்பு வாழ்வில் ஈடுபடுத்திக்கொள்ள அறிவுறுத்துகிறார். உறங்கி எழுந்திருக்கும்போது அவர் அவனுடைய தலை முடியைக் கோதிவிடுகிறார். அதை அவன் பாலியல் முயற்சி என்று தவறாகப் புரிந்துகொள்கிறான். அவரிடமிருந்தும் விலகி ரயில் நிலையக் காத்திருப்பு அறையில் மீதி இரவை மனம் நிறைய வெறுப்புடன் கழிக்கிறான்.

காலையில், நகரத்தில் நம்பிக்கையான தொடர்புகள் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இழந்தவனாக மேற்கு நோக்கிச் சென்று, ஒரு மரக் கிட்டங்கியின் எரிவாயு நிலையத்தில் காது கேளாத-வாய் பேச இயலாத தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்கிறான். தனது திட்டத்தைக் கூறுவதற்காக போபியைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறான். நகரத்தின் அருங்காட்சியகத்திற்கு ஒரு பெட்டியுடன் வருகிற அவள் தன்னையும் அழைத்துச் செல்லக் கேட்கிறாள். ஹோல்டன் மறுக்கிறான். வருத்தப்படும் அவளை, பள்ளிக்கு மட்டம் போட அனுமதிப்பதன் மூலம் உற்சாகப்படுத்த முயல்கிறான். அவள் கோபம் தணியாமல் இருக்கிறாள். சுழல் நாற்காலி ராட்டினத்தில் அவள் சுற்றிவர அனுமதிச்சீட்டு வாங்கித் தருகிறான். சமாதானமடையும் தங்கை சுழல் நாற்காலியில் சவாரி செய்வதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான்.

அன்றிரவு தனது பெற்றோர்களைச் சந்தித்ததையும், உடல் நலத்தில் கோளாறு என்று நினைத்துத் தன்னை அவர்கள் கலிபோர்னியாவில், தன் அண்ணன் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பியதையும், செப்டம்பரில் வேறொரு பள்ளியில் சேர இருப்பதையும் நம்மிடம் (வாசகர்களிடம்) சொல்கிறான். பள்ளி பற்றிய பேச்சு, தவறவிட்ட தனது முன்னாள் வகுப்பு தோழர்களை நினைவுபடுத்திவிட்டது என்றும், அதற்கு மேல் பேச விரும்பவில்லை என்றும் ஹோல்டன் கூறுவதுடன் நாவல் முடிகிறது.


போராட்டமும் பீதியும்

எளிதில் தனிமைப்பட்டுவிடுகிற பதின்பருவத்தினரின் மனப் போராட்டங்களையும், அதற்கான சூழல்களையும் பெரியவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியதன் தேவையை உணர்த்துகிற இந்த நாவல், இளைய தலைமுறைகளிடையேயும் கணிசமாக வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே, “முன்னேறிய” அமெரிக்க சமுதாயத்தில் எந்த அளவுக்கு கம்யூனிசச் சிந்தனைகள் பற்றிய பீதி பரப்பப்பட்டிருக்கிறது என்பதையும், நாவலுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம் அறிய முடிகிறது.

https://bookday.in/books-beyond-obstacles-j-d-salinger-novel-the-catcher-in-the-rye-oriented-article-written-by-a-kumaresan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World) நாவல்

BookDay25/03/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - Aldous Huxley | கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World)

கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்–6

அ. குமரேசன்

இந்தியாவில் 1967ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட நாவல். இங்கிலாந்து நாட்டவரான அல்டஸ் ஹக்ஸ்லே (Aldous Huxley) (1894 – 1963) எழுதிய ‘பிரேவ் நியூ வொர்ல்ட்’ (Brave New World). மக்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் கோழைத்தனமாக இருக்கும் ஒரு முட்டாள்தனமான அரசு பற்றி “துணிச்சலான புதிய உலகம்” என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறும் இந்த நாவல் அதற்கு முன் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்காவின் பல மாநிலங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்டது. பிற்காலத்தில் உலகின் சிறந்த அறிவியல் புனைவுகளில் ஒன்று, அரசியல் விமர்சனப் படைப்பு, இயற்கையான உறவுகளை உயர்த்திப் பிடிக்கும் சித்தரிப்பு, உழைப்பாளிகள் எந்திரமாக்கப்படுவதை எதிர்க்கும் வெளிப்பாடு என்ற பாராட்டுகளைப் பெற்றது. பல்கலைக்கழக ஆய்வுகளுக்கும் இந்த நாவல் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சுரண்டலையும் போலியான கட்டுப்பாடுகளையும் நாவல் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறது. ஆனால் அதை மறைத்து, பாலியல் உறவுகள் பற்றிப் பேசுகிறது என்றும், நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறது என்றும், சிறு வயதினர் படிக்க ஏற்றதல்ல என்றும் கரித்துக் கொட்டிப் புத்தகத்தைப் புதைத்துவிட முயன்றனர். அதுவோ புதைத்த மண்ணைப் பிளந்து முளைத்ததுடன், சிறந்த இலக்கியப் படைப்பாகவும் அடையாளம் பெற்றுவிட்டது.

உலகச் சந்தை ஆக்கிரமிப்புக் கார்ப்பரேட்டுகளின் முன்னோடியான ஹென்றி ஃபோர்டு, தனது தொழிற்சாலைகளில் புகுத்திய நடைமுறைகளை இந்த நாவலின் மூலம் எள்ளலுக்கு உள்ளாக்கியிருக்கிறார் ஹக்ஸ்லே. ‘கி.பி.’ என்று சொல்லப்படுவது போல, ‘ஃபோ.பி.’ (ஃபோர்டுக்குப் பின்) என்ற எதிர்காலத்தையும், அவர் ஒரு கடவுள் போல வழிபடப்படும் சூழலையும் கற்பனையாக உருவாக்கி அதில் கதாபாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறார் எழுத்தாளர். இந்தியாவின் சோமபானம் போன்ற மயக்கம் தரும் ஒரு திரவம் பற்றியும், அதை விடவும் போதையான சாதியப் பாகுபாடு பற்றியும் கூட இந்த நாவல் தொட்டுக் காட்டுகிறது. இந்த எழுத்தாக்கம் குறித்து இணையத்தின் தரவுத் தளங்கள் தெரிவிக்கும் தகவல்கள் சுவையானவை.

அப்படியோர் உலக அரசு!

நாவல் ஃபோ.பி. 632ஆம் (2540ஆம்) ஆண்டில், ‘உலக அரசு’ என்ற ஆட்சியின் கீழ் லண்டன் நகரில் தொடங்குகிறது. கடுமையான சட்டதிட்டங்களைத் திணித்து, மக்களுக்கு இயல்பாக நேசித்து, உறவு கொண்டு, குடும்பம் நடத்துகிற உரிமையைக் கூட மறுக்கிற அரசு அது. செயற்கையான கருப்பைகளில் உருவாக்கப்பட்டு, பிறந்தபின் சிறு வயதிலிருந்தே இப்படியிப்படித்தான் வாழ வேண்டும் என்று முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட திட்டத்தின்படி குடிமக்கள் வளர்க்கப்படுகிறார்கள். அறிவுத் திறன், உழைப்புத் திறன் என்ற அடிப்படைகளில் அல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, எப்சிலான் என்ற ஐந்து சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் அல்ஃபா மிக உயர்ந்த சாதி, மற்றவை அடுத்தடுத்த படிகளில் (வர்ணாஸ்ரம வகைப்பாடு போல) வைக்கப்பட்டிருக்கின்றன. சமுதாயம் வறுமை, துன்பம் என எந்தப் புகாரும் இல்லாமல் இருக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. எப்போதும் மகிழ்ச்சிகரமான மனநிலையிலேயே இருக்கச் செய்வதற்காக ‘சோமா’ என்ற பானத்தைப் பருகுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - Aldous Huxley | கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World)

கருப்பைத் தொழிற்சாலைப் பணியாளரான லெனினா பீட்டா சாதியைச் சேர்ந்தவள், பாலியலாக ஈர்க்கக் கூடியவள். அல்ஃபா சாதிக்காரனான பர்னார்ட் மார்க்ஸ், அந்தச் சாதிக்காரர்களின் உயரத்திற்கு வளராதவன், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவன். கல்வியறிவின் காரணமாகக் குடிமக்களை அமைதியாக வைத்திருக்க சோமா குடிக்கச் செய்வது உள்ளிட்ட உலக அரசின் வழிமுறைகளை எதிர்க்கிறான்.பர்னார்ட் தனது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுகிறான். அவனை ஐஸ்லாந்து நாட்டிற்குக் கடத்த அவனுடைய நிறுவனத்தின் இயக்குநர் திட்டமிடுகிறான். பர்னார்ட்டின் ஒரே நண்பன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் வாட்சன், அதே சாதியைச் சேர்ந்தவன், நல்ல எழுத்தாளர். ஆனால், வலிகளை உணராத சமுதாயத்தில் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்த முடியாத நிலைமை.

சுற்றுலா செல்லும் பர்னார்ட், லெனினா இருவரும் காட்டுமிராண்டிகள் தனிப்பகுதி என்று ஒதுக்கப்பட்ட ஒரு கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கே அவர்கள் இயற்கையாகப் பிறந்து வளரும் மக்களை முதல் முறையாகக் காண்கிறார்கள். அந்த மக்கள் காதல், இளமைத் துடிப்பு, நோய், முதுமை, தனி மொழி என்று வாழ்வதைப் பார்க்கிறார்கள். அவர்களிடம் முரட்டுத்தனமான மதச் சடங்குகளும் ஊறிப் போயிருக்கின்றன. சுற்றிவரும்போது இருவரும் நடுத்தர வயது லிண்டா, அவளுடைய மகன் ஜான் இருவரையும் சந்திக்கிறார்கள். உலக அரசின் பகுதியில் பிறந்து வளர்ந்து, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சுற்றுலாவின்போது, உடன்வந்தவர்களால் கவனக்குறைவாக விட்டுச் செல்லப்பட்டவள் அவள். சுற்றுலாக் குழுவோடு வந்த ஒருவனால் கருவுற்று, ஜானைப் பெற்றெடுத்தவள். அவளைக் கர்ப்பமாக்கியவன் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் இயக்குநர்தான் என்று பர்னார்ட் கண்டுபிடிக்கிறான்.

ஜான் பல ஆண்டுகளாக கிராமத்திலேயேதான் வாழ்கிறான் என்றாலும் ஊர் மக்கள் அவனை ஏற்கவில்லை. தனிமையில் வளர்ந்த அவனுக்குக் கிடைத்த இரண்டு புத்தகங்களே வழிகாட்டிகள். ஒரு  புத்தகம்‘அறிவியல் கையேடு’, இன்னொன்று ‘வில்லியம் ஷேக்ஸ்பியர் படைப்புகள்’. எப்போதும் அந்தப் புத்தகங்களில் படித்தவற்றை மேற்கோள் காட்டிப் பேசுவான்.

லிண்டா, தான் பிறந்த ஊருக்குத் திரும்ப விரும்புகிறாள். அவள் எப்போதும் புகழ்ந்து பேசும் புதிய உலகத்தைக் காண ஜான் ஆசைப்படுகிறான். பர்னார்ட், தான் நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, இருவரையும் லண்டனுக்கு அழைத்துச் செல்கிறான்.

லண்டனில், லிண்டாவைத் தாயாக்கிய நிறுவன இயக்குநரை ஜான் சந்திக்கிறான். “அப்பா” என்று அழைக்கிறான். செயற்கைக் கருத்தரிப்பு மட்டுமே நடைமுறையில் உள்ள ஊரில் அவன் இப்படி அழைப்பதைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். இந்த அவமானத்தால் இயக்குநர் பதவி விலகுகிறான்.
புதிய ஊரில் பண்டைக்கால மனிதனாக ஜான் புகழ் பெறுகிறான். அவனுடைய பாதுகாவலனாக பர்னார்ட் முன்னிலை பெறுகிறான் என்றாலும், படிப்பார்வம் கொண்ட ஜானுக்கு எழுத்தாளரான ஹெல்ம்ஹோல்ட்ஸ் மீது மட்டுமே அன்பும் மரியாதையும் இருப்பதைக் கண்டு பொறாமைப்படவும் செய்கிறான். லிண்டா மறுபடி சோமா பானத்தில் மூழ்குகிறாள்.

ஜான், லெனினா இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அவளைப் பிடித்திருந்தாலும், தன்னிச்சையான பாலியல் வாழ்க்கையை ஜான் ஏற்க மறுக்கிறான். லெனினா அவனைக் கவர முயலும்போது, அவன் அவளைக் தாக்குகிறான். லிண்டா மரண படுக்கையில் கிடக்கும் தகவல் வருகிறது. தாயைப் பார்க்க ஜான் மருத்துவமனைக்குச் செல்கிறான். செயற்கையான அந்த இலட்சிய உலகத்தில், மரணம் பொருட்படுத்தத் தேவையில்லாத நிகழ்வாகக் கற்பிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். இறப்பவர்களின் வலிகளும் அவர்களைச் சார்ந்தோரின் உணர்வுகளும் அலட்சியப்படுத்தப்படுவது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. கோபத்தில் ஒருவரை அடித்துவிடுகிறான். அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகிறான்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - Aldous Huxley | கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World)

அடித்தட்டு மக்களுக்கு சோமா விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முயல்கிறான். ஏற்கெனவே அதன் மயக்கத்தில் கிடக்கப் பழக்கப்படுத்தப்பட்டவர்கான அவர்கள் கலவரம் செய்கிறார்கள். காவல்துறையினர் மக்கள் மீது ‘சோமா’ நுரை பீய்ச்சி அமைதிப்படுத்துகிறார்கள்.

பர்னார்ட், ஹெல்ம்ஹோல்ட்ஸ், ஜான் மூவரும் முஸ்தபா மோண்ட் என்ற உயரதிகாரியின் முன் நிறுத்தப்படுகிறார்கள். சமூகச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக அவர்களை நாடுகடத்தித் தீவுகளுக்கு அனுப்ப இருப்பதை மோண்ட் தெரிவிக்கிறார். பர்னார்ட் மேலும் ஒரு வாய்ப்பளிக்கக் கோருகிறான். ஆனால் ஹெல்ம்ஹோல்ட்ஸ் தீவு வாழ்க்கையில் தனிமனிதச் சுதந்திரத்துடன் இருக்கலாம், பலவகை மனிதர்களைப் பார்க்கலாம், புதிது புதிதாக எழுதலாம் என்ற எதிர்பார்ப்புடன் அந்த முடிவை ஏற்கிறான். நாடுகடத்தல் உனக்கு ஒரு பரிசுதான் என்று அதிகாரியும் கூறுகிறார். ஜானிடம் மோண்ட் தற்போதைய சமுதாயம் உருவானதன் பின்னணிகளைக் கூறுகிறார். சாதிப் பிரிவினைகள் தேவை என்று வாதிடுகிறார். அந்த வாதங்களை ஏற்க மறுக்கும் ஜான், மகிச்சியின்றி வாழும் உரிமையைக் கோருகிறான் என்று மோண்ட் அறிவிக்கிறார். தன்னையும் ஏதாவது ஒரு தீவுக்கு அனுப்ப வேண்டுமென்ற அவனுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

நாகரிக சமூகத்தின் ஒரே மாதிரியான வாழ்க்கையில் வெறுத்துப் போனவனாக ஜான் ஒரு குன்றின் கைவிடப்பட்ட கலங்கரை விளக்குக் கோபுரத்தில் நுழைந்து தனியாக வாழ்கிறான். நாகரிகம் எனப்படுவதிலிருந்து தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ள தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்கிறான். அந்தக் காணொளிப் பதிவு எங்கும் பரவ, அதை வேடிக்கை பார்க்க ஏராளமானவர்கள் கூடுகிறார்கள். ஊடகவியலாளர்களும் குவிகிறார்கள். ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து லெனினா இறங்கி வருகிறாள். தனது நேசத்துக்கும் கோபத்துக்கும் ஆளானவளை அவன் சவுக்கால் அடிக்கிறான், மறுபடியும் தன்னைத்தானே அடித்துக்கொள்கிறான். மக்கள் சோமா பருகி வெறியாட்டம் போடுகிறார்கள். மறுநாள், அந்த வெறியாட்டத்தில் கலந்துகொண்ட குற்றவுணர்வுடன் எழுகிறான் ஜான். மக்கள் அவனைப் பார்க்க வருகிறார்கள். அவனுடைய உடல் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

அரவணைத்த அங்கீகாரம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - Aldous Huxley | கோழைத்தனமான அந்த ஆட்சியமைப்புக்குப் பெயர் ‘துணிச்சலான புதிய உலகம்’ (Brave New World)

மக்களின் துயரங்களுக்குத் தீர்வு கண்டு உண்மையான மகிழ்ச்சி வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியாத சுரண்டல் வர்க்க அரசுகள் சாதி–மதப் பிரிவினைகளையும் சடங்குச் சம்பிரதாயங்களையும் போதை மயக்கங்களையும் பயன்படுத்திப் போலியான கொண்டாட்டத்தில் வைத்திருப்பதைக் கூண்டில் நிறுத்துகிற “துணிச்சலான புதிய நாவல்” இது. உலகெங்கும் இருக்கிற இலக்கியவாதிகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் குரல்கொடுத்திராவிட்டால் இந்த நாவலை ஆளில்லாத் தீவுக்குக் கடத்தியிருப்பார்கள்.

அல்டஸ் லியோனார்ட் ஹக்ஸ்லே எழுதிய ‘டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்’ (நுண்ணுணர்வின் வாசல்கள்), ‘ஐலாண்ட்’ (தீவு) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நாவல்களையும் வழங்கியிருக்கிறார். துணிச்சலான புதிய உலகத்தைப் பகடி செய்யும் இந்த நாவல் எந்த அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதோ அதே அமெரிக்காவின் ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பு 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்து ஐந்தாவது இடத்தை அளித்தது. ‘தி அப்சர்வர்’ பத்திரிகை வெளியிட்ட, அனைத்துக் காலங்களிலும் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இது 53வது இடத்தைப் பெற்றது. நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது, இரண்டு முறை திரைப்படங்களாகவும் வந்திருக்கிறது.

நாவலாசிரியர் ஹக்ஸ்லே பற்றி ஒரு கூடுதல் தகவல்: சிறு வயதில் பார்வைத் திறனைப் பெரிதும் இழந்துவிட்டார்.  புத்தக வாசிப்புதான் அவருக்கு ஒரு துணையாக அமைந்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஓரளவுக்குப் பார்வை மீண்டது. உலகத்தையும் நிகழ்வுகளையும் உற்றுப் பார்க்கிற மாற்றுத் திறனைச் செழுமையாக வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகில் நடைபோட்டார். அறிவியல் வளர்ச்சியின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு, அதைத் தவறாகப் பயன்படுத்துவோர் பற்றிய எச்சரிக்கை இரண்டும் அவரது எழுத்துகளில் வெளிப்படுகின்றன என்று திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

https://bookday.in/books-beyond-obstacles-aldous-huxley-brave-new-world-novel-oriented-article-written-by-a-kumaresan/#google_vignette

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல்

Bookday01/04/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 7 | ‘லொலிடா’ (Lolita) நாவல்

ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை

அ. குமரேசன்

‘லொலிடா’ என்ற இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் ஜான் ரே ஜூனியர் என்ற உளவியலாளர். உளவியல் நூல்களின் தொகுப்பாளருமான அவர், சிறையில் இதய நோயால் இறந்துபோன ஒரு கைதியின் நினைவுக் குறிப்புகள் இந்தப் புத்தகமாக உருவாகியிருக்கிறது என்கிறார். ஹம்பர் ஹம்பர் (ஆங்கில எழுத்துகளின்படி ஹம்பர்ட், உச்சரிப்பின்படி ஹம்பர்) என்ற புனைப் பெயர் சூட்டிக்கொண்டவனான அந்தக் கைதி தன்னுடைய கதையை சொல்லத் தொடங்குகிறான்.

நாவலுக்குள் நேரடியாகச் செல்லாமல் எதற்காக அந்த முன்னுரையிலிருந்து தொடங்க வேண்டும்? காரணம் அந்த முன்னுரை நாவலின் முதல் அத்தியாயம்! உளவியலாளர் ஒரு கற்பனைப் பாத்திரம்!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/

                                                                                            விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov)

ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறி இறுதிக் காலத்தில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவரான எழுத்தாளர் விளாதிமீர் நபோகோவ் (Vladimir Nabokov) (1899–1977) இப்படியொரு புதிய உத்தியோடு நாவலை 1955இல் எழுதியிருக்கிறார். தி டிஃபென்ஸ்(பாதுகாப்பு), தி டெஸ்பெய்ர் (மனக்கசப்பு), இன்விடேஷன் டு எ பிஹெட்டிங் (தலையை வெட்டுவதற்கு அழைப்பு), தி கிஃப்ட் (அன்பளிப்பு), என்சான்ட்டர் (வசீகரன்), சைன்ஸ் அன் சிம்பல்ஸ் (குறிகளும் சின்னங்களும்), பேல் ஃபயர் (வெளிறிய நெருப்பு)ஆகிய நாவல்கள் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர் நபோகோவ்.

‘லொலிடா’ வெளியானபோது பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜன்டைனா, தென்னாப்பிரிக்கா, நியூஜிலாந்து உள்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. அமெரிக்க அஞ்சல் துறை இந்த நாவலை யாராவது யாருக்காவது அனுப்பினால் பட்டுவாடா செய்ய மாட்டோம் என்று அறிவித்தது. இந்தத் தடைகளுக்குக் காரணங்களாக பாலியல் உறவுகள் பற்றிச் சித்தரிக்கிறது, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் மீது ரசனையை ஏற்படுத்துகிறது, சமூக ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரான கருத்துகளைப் பரப்புகிறது என்றெல்லாம் கூறப்பட்டது. இலக்கிய உலகத்தினர், பத்திரிகையாளர்கள், சமூக அக்கறையாளர்கள் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்தினார்கள். தடை விலக்கப்பட்டது.

‘டைம்ஸ்’ ஏடு உலகின் சிறந்த 100 நாவல்கள் பட்டியலில் இதனைச் சேர்த்தது. மாடர்ன் லைப்ரரி, லே மோண்டி, போக்லுபென் ஒர்ல்ட் லைப்ரரி, தி பிக் ரீட் உள்ளிட்ட அமைப்புகளும் முக்கியமான நாவல்களின் வரிசையில் இது இணைவதாக அறிவித்திருக்கின்றன. பல முறை நாடக ரசிகர்களையும், இரண்டு முறை திரைப்பட ரசிகர்களையும் வந்தடைந்த லொலிடா யார்?

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/

கதைக்களம்

ஹம்பர் ஹம்பர் என்ன குற்றத்துக்காக அவன் கைது செய்யப்பட்டான் என்று முன்னுரையில் தெரிவிக்கப்படவில்லை. அவனுடைய உண்மைப் பெயரும் கடைசி வரையில் குறிப்பிடப்படவில்லை. நீதிமன்ற நடுவர்களுக்கு ஒரு வாக்குமூலமாக அவன் எழுதிய நினைவுக் குறிப்புகள் அவனுடைய பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, தனிப்பட்ட இழப்பு, அதை ஈடுசெய்வதாக எண்ணி ஏற்படுத்திக்கொண்ட பாலியல் ஈர்ப்பு ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசியல்–சமூகச் சூழல்களையும் பேசுகின்றன.

1910ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலேயத் தாய்க்கும் சுவிட்சர்லாந்துத் தந்தைக்கும் பிறந்த ஹம்பர் சிறார் பருவத்தில் அனபெல் லீ என்ற சிநேகிதி மீது ஈர்ப்பு கொள்கிறான். நச்சுக் காய்ச்சலால் அனபெல் அந்த வயதிலேயே இறந்து விடுகிறாள். இந்தப் பிரிவால் மனதளவில் வெகுவாகப் பாதிக்கப்படும் ஹம்பருக்கு 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளின் மீது வெறித்தனமான பாலியல் மோகம் வளர்கிறது. தனது மன இச்சைகளை நிறைவு செய்கிறவர்கள் என்று நினைக்கும் சிறுமிகளை அடையாளப்படுத்த அவனாகவே “நிம்பெட்” (கிட்டத்தட்ட ‘காமதேவதை’ என்று பொருள்) என்று புதிய சொல்லை உருவாக்குகிறான்.

பட்டப் படிப்புக்குப் பிறகு பிரெஞ்சு இலக்கிய ஆசிரியராக வேலைக்குச் சேர்கிறான். இக்காலத்தில் அவன் மனநல மருத்துவமனைகளுக்கு அடிக்கடி போக வேண்டியதாகிறது. வலேரியா என்ற பெண்ணுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறது. சிறிது காலத்தில் அவள் அவனிடமிருந்து விலகிவிடுகிறாள். இரண்டாம் உலகப் போர் சூழல்கள் உருவாகின்றன. அவன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்கிறான். 37 வயதில், அவன் அமெரிக்காவில் நியூ இங்கிலாந்து என்று குறிப்பிடப்படும் வட்டாரத்தில் தங்கி அமைதியாகத் தனது எழுத்துப் பணியில் மூழ்க எண்ணி வீடு தேடுகிறான். ஒரு வீட்டின் உரிமையாளரான சர்லோட் தன் வீட்டிற்குக் குடிவர விடுக்கும் அழைப்பை மறுக்க எண்ணுகிறான். ஆனால் அவளுடைய மகளான டோலெரெஸ் என்ற 12 வயதுச் சிறுமியைக் காண்கிறபோது அவளைத் தன் சிறுவயதுக் காதலியான அனபெல்லின் மறு உருவமாகக் கருதுகிறான். வீட்டிற்குக் குடி வருகிறான். பழகுகிறான். அவளை ‘லொலிடா’ (Lolita) (கவர்ச்சிக் கட்டழகி) என்று செல்லமாக அழைக்கிறான்.

அவளைத் தொடுவது, உரசுவது என்று தன் பாலியல் இச்சையைத் தணித்துக்கொள்ள ஹம்பர் முயல்கிறான். பள்ளியின் கோடை முகாமுக்காக அவள் சென்றபோது, சர்லோட்டிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவன் மீது தனக்கிருக்கும் காதலை வெளிப்படுத்தும் சர்லோட், அவன் தன்னை மணக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்று கெடு வைக்கிறாள். டோலெரெஸ்சின் வளர்ப்புத் தந்தையாக இருப்பதால் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை ஊகிக்கும் ஹம்பர் சம்மதிக்கிறான்..

திருமணத்திற்குப் பிறகு, சர்லோட்டுக்குப் போதை மருந்து கொடுக்கவும், டோலெரெஸ் திரும்பி வந்ததும் அவளையும போதையில் ஆழ்த்திப் பாலியல் உறவுகொள்ளவும் ஹம்பர் திட்டமிடுகிறான். தற்செயலாக ஹம்பரின் குறிப்பேட்டைப் படிக்கும் படிக்கும் சர்லோட் அவனுடைய உண்மை நோக்கங்களைக் கண்டுபிடிக்கிறாள். அதில் எழுதியிருப்பவை உண்மையல்ல, அடுத்த நாவலுக்கான குறிப்புகள்தான் என்று அவன் கூறுவதை ஏற்க மறுத்து, மகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். கடிதத்தை அஞ்சல் நிலையத்தில் சேர்க்கச் செல்கிறபோது சாலை விபத்தில் மரணமடைகிறாள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/

ஹம்பர் கோடை முகாமுக்குச் சென்று, டோலெரெஸ்சைப் பார்த்து, அவளுடைய தாய் கடுமையான உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைத்துப் போகிறான். ஒரு பணக்கார விடுதியில் அறையெடுத்துத் தங்க வைக்கிறான். அவளுடைய பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்கிறான். அவள் தூக்கத்தில் விழும் வரையில் விடுதிக்குள் சுற்றிவரக் கிளம்புகிறான். மையக் கூடத்தில் ஒரு ஆசாமியைப் பார்க்கிறான். அவனுக்கு இவனுடைய திட்டம் தெரிந்திருப்பது போல இருக்கிறது. அறைக்குத் திரும்பி வரும் ஹம்பர், தூக்க மருநது வேலை செய்யாததையும் அவள் விழித்திருப்பதையும் காண்கிறான். திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகிறது.

மறுநாள் பேசிக்கொண்டிருக்கும்போது டோலெரெஸ், முகாமில் இருந்தபோது வயதில் மூத்த பையனுடன் தனக்கு உறவு ஏற்பட்டதைச் சொல்கிறாள். ஹம்பர் அவளைக் கட்டாயப்படுத்தி வன்புணர்கிறான். பின்னர் அவளிடம் சர்லோட் இறந்துவிட்டதைத் தெரிவிக்கிறான். அவளை அழைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் பயணம் செய்கிறான். சிறுமியான அவளை நிறையப் பணம் கொடுத்தும் உளவியலாகக் கட்டுப்படுத்தியும் தன் இச்சைக்கு உட்படுத்துகிறான். நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் செய்கிறான்.அதே வேளையில் வெளி இடங்களுக்குப் போகக்கூடாது என்று தன் பிடியிலேயே வைத்திருக்கிறான்.

வேறொரு நகருக்குக் குடிவருகிறார்கள். அங்கே அவளைப் பெண்கள் பள்ளியில் சேர்க்கிறான். தன்னை அவளுடைய தந்தை என்று காட்டிக்கொள்கிறான். தலைமையாசிரியர், அவன் அவளைப் பழைய காலத்துப் பெற்றோர்கள் போலக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது சரியல்ல என்கிறார். ஆகவே பள்ளி நாடகத்தில் அவள் நடிக்க ஹம்பர் சம்மதிக்கிறான். நாடகத்தின் தலைப்பு, அவன் சந்தேகித்த அந்த மர்ம நபர் இருந்த விடுதியின் பெயராகவே இருப்பதைக் கவனிக்கிறான். நாடக நிகழ்வுக்கு முந்தைய இரவில் டோலெரெஸ் வெளியே ஓடுகிறாள். தேடிச் செல்லும் ஹம்பர் அவள் ஒரு கடையில் ஐஸ் கிரீம் சோடா குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். அவள் மீண்டும் ஒரு நீண்ட சாலைப் பயணம் போக விரும்புவதாகச் சொல்கிறாள். அவனுக்கு உற்சாகமாக இருக்கிறது என்றாலும், பயணத்தின்போது தங்களை யாரோ பின்தொடர்வது போல சந்தேகம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் உடல் நலம குன்றுகிற அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். மறுநாள் அங்கே போகிறபோது. அவள் குணமாகி, தன் மாமாவுடன் போய்விட்டதாக மருத்துவமனையில் கூறுகிறார்கள். எங்கே தேடியும் அவளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயது டொலரெஸ்சிடமிருந்து ஹம்பருக்கு ஒரு கடிதம் வருகிறது. தனக்கு ரிச்சர்ட் என்பவனுடன் திருமணமாகிவிட்டது என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து, சிரமமாக இருப்பதால் பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டு எழுதியிருக்கிறாள். ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான். அவள் அவனிடம், அந்த மர்ம நபர், நாடக எழுத்தாளர் க்ளேர் கில்டி என்றும், அவன்தான் பல இடங்களில் தங்களைப் பின்தொடர்ந்தவன் என்றும் கூறுகிறாள். மருத்துவமனையிலிருந்து தன்னை அழைத்துச் சென்றது அவன்தான், சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவனுடைய ஆபாசப்படத்தில் நடிக்க மறுத்ததால் தன்னைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரிவிக்கிறாள். . கில்டி, அவளை அவனுடைய ஆபாசத் திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்காகக் கழித்துவிட்டதாகவும் விளக்குகிறாள். ரிச்சர்டிடம் ஹம்பர் அவளுடனான தன் உறவை மறைத்துத் தகப்பனாகவே அறிமுகப்படுத்திக்கொள்கிறான். ஊர் திரும்புகிறவன், மதுப் பழக்கத்திற்கு அடிமையான ரீட்டா என்ற பெண்ணுடன் வாழ்கிறான். கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறான்.

ஹம்பர், நீதிமன்ற நடுவர்களுக்கான கடிதத்தில், “எனக்கு லொலிடா (Lolita) மீது காமம் மட்டுமல்லாமல் ஆழ்ந்த காதல் இருப்பதையும் இந்தக் கணத்தில்தான் உணர்கிறேன்,” என்று எழுதியிருக்கிறான். அவளைத் தன்னோடு வந்துவிடுமாறு அழைத்தபோது அவள் வர மறுத்துவிட்டதையும், தன் கட்டுப்பாட்டில் இருந்த, அவளுக்குச் சேர வேண்டிய, அவளுடைய தாயின் பணத்தையெல்லாம் அவளிடமே ஒப்படைத்துவிட்டுத் திரும்பியதாகவும் கூறுகிறான். அந்த கில்டியைத் தேடிச் சென்று போதையோடு இருந்தவனைச் சுட்டுக்கொன்றதாகவும் தெரிவித்திருக்கிறான். தனது நினைவுக் குறிப்புகளை டோலெரெஸ் உயிர்வாழும் வரையில் பொதுவில் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறான். சிறைவாசத்திலேயே ஹம்பர் மரணமடைந்துவிட்டதையும், டோலெரெஸ் பிரசவத்தின்போது உயிரிழந்ததையும் நாவலின் “முன்னுரை” ஏற்கெனவே தெரிவித்திருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 7 | விளாதிமிர் நபோக்கோவ் (Vladimir Nabokov) ‘லொலிடா’ (Lolita) நாவல் - ஒரு சிறுமியின் மீது காமமுற்றவன் கதை - https://bookday.in/

கருத்துகள்

முதலில் குறிப்பிட்ட விமர்சனங்களை நாவல் கடந்துவிட்டது. ஆயினும், சிறைக் கைதி தன் கதையைத் தானே சொல்கிற நடையில் எழுதப்பட்டிருப்பதால் இந்த நாவல் டோலெரெஸ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களின் இயல்புகள், சூழல்கள், மனநிலைகள் பற்றிப் பேசவில்லை என்ற இலக்கியத் திறனாய்வு சார்ந்த கருத்துகள் வந்துள்ளன. சமூக வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறார் நபோகோவ் என்று பாராட்டும் பகிரப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட சொல் விளையாட்டுகள், நுட்பமாக இரட்டைப்பொருள் தரும் சொல்லாடல்கள், ஒரே சொல்லின் எழுத்துகளை வேறு பொருள் தரும் வகையில் மாற்றியமைப்பது ஆகிய நயங்களைத் திறனாய்வுகள் சுட்டிக்காட்டியிருப்பதைத் தெரிவிக்கிறது ‘விக்கிபீடியா’. அந்த ”நிம்பெட்” என்ற சொல் பின்னர் அகராதிகளில் இடம் பிடித்ததாம்! இன்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத்தக்க குற்றத்தை நாவல் நியாயப்படுத்தவில்லை, மாறாக இப்படிப்பட்டவர்கள் இருப்பதை அடையாளம் காட்டுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

எழுதியவர் : அ. குமரேசன்

https://bookday.in/books-beyond-obstacles-vladimir-nabokovs-lolita-novel-oriented-article-written-by-a-kumaresan/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

Bookday

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 8 | போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) | புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

தடைகளைத் தாண்டிய  புத்தகங்கள் – 8 

புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

அ. குமரேசன்

1958ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago). ஆனால் அதை உருவாக்கிய எழுத்தாளர் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். நோபல் பரிசுத் தேர்வுக் குழுவின் அரசியல் நோக்கத்திற்கு இரையாவதைப் புரிந்துகொண்டு, அல்லது உலகில் அப்போது நடந்த ஏதேனும் அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மனசாட்சியின்படி மறுத்தாரா? அல்லது நாவலுக்கு சொந்த நாட்டில் எழுந்த எதிர்ப்புக்குப் பணிந்தாரா? கதையையும், கதை வெளியான கதையையும் தெரிந்துகொண்டால் இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கும்.

ரஷ்ய நாட்டவரான போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் (Boris Pasternak) (1890–1960) ‘தடை வேலிகளுக்கு மேலே மேகங்கள்’, ‘மேகங்களின் நடுவே இரட்டை நட்சத்திரம்’, ’இரண்டாவது பிறப்பு’, ‘கருத்துகளும் வெவ்வேறு வகைகளும்’ ஆகியவை உள்ளிட்ட கவிதை நூல்களை எழுதியவர். தனது காலகட்டத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, மக்களின் அவலம், முதலாம் உலகப் போர், ஜார் சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்களின் எழுச்சி, ஆட்சியைத் தூக்கி எறிந்து சோசலிச சோவியத் யூனியன் ஆட்சிக்கு அடிப்படை அமைத்த புரட்சி, கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள், இரண்டாம் உலகப் போர், சமுதாயத்தில் ஏற்பட்டிருந்த அசைவுகள் ஆகியவற்றின் தாக்கங்களை நேரடி அனுபவங்களாக உள்வாங்கினார். அவற்றில் அவருக்கு மாறுபட்ட சிந்தனைகளும்இருந்தன. அந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்தி அவர் முதலாவதாகவும் கடைசியாகவும் எழுதிய நாவல் இது.

1950ஆம் ஆண்டுகளில் நாவலைப் பகுதி பகுதியாக எழுதி, அப்போதைய வழக்கப்படி இலக்கிய மேடைகளில் வாசித்து வந்தார். முழுப் புத்தகமாகத் தொகுக்கப்பட இருந்த நிலையில் சோவியத் அரசு அதை அச்சிடவும் வெளியிடவும் தடை விதித்தது. ஜார் அரசின் கீழ் நாட்டு மக்கள் வறுமையிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வான நிலைமைகளிலும் மூழ்கடிக்கப்பட்டிருந்தது, அதற்கு எதிராக ஆவேசத்துடன் போராட்டங்கள் வெடித்தது. இவற்றைத் தொடக்கப் பகுதியில் சரியாகப் பதிவு செய்த நாவல், பின்னர் புரட்சி என்றாலே கொடூரமான வன்முறைகள் என்றும், மாற்றங்களுக்கான திட்டங்களை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்றும், அரசாட்சியிலும் சமூக வாழ்விலும் கட்டுப்பாடுகளின் பெயரால் கிறிஸ்துவத் திருச்சபைகள் ஆதிக்கம் செலுத்திய காலத்திற்குத் திரும்பிச் செல்வதன் மீது மோகத்தை ஏற்படுத்துகிறது என்றும், சோசலிசக் கட்டுமானத்தின் மேல் மனநிறைவின்மையை வளர்க்கிறது என்றும் தடைக்கான காரணம் கூறப்பட்டது.

கடத்தப்பட்டு வெளியீடு

சில நண்பர்களின் உதவியோடு தொகுப்பு இத்தாலிக்குக் கடத்தப்பட்டது. அங்கே புத்தகமாக அச்சிடப்பட்டு 1957இல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு கவனிக்கத்தக்க ஒரு தகவல் – நாவலை வெளியிட்ட ஜியாங்கியாகோமோ ஃபெல்ட்ரினெல்லி ஒரு இடதுசாரிப் பதிப்பாளர், இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்ட நாவலை வெளியிட்டதற்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நூலை அச்சிட்டு வெளியிட வைப்பதற்கு சிஐஏ வேலை செய்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்க அரசு நடத்தி வந்த கெடுபிடிப் போரில் நாவலும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பல மொழிகளிலும் கொண்டுவரப்பட்டது.

நாவலுக்குப் பல நாடுகளிலும் வரவேற்பளிக்கப்பட்டது. அரசியல், சமூக, பண்பாட்டுத்தள நிலைமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது, சோவியத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டுகள் குவிந்தன. இலக்கியப் படைப்பு என்ற முறையில் எதிர்க் கருத்துகளும் வந்தன. முன்னும் பின்னுமாகப் போகும் கதையின் நடை குழப்பத்தைத் தருகிறது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஏராளமான கதாபாத்திரங்கள், ஒவ்வொரு முக்கியக் கதாபாத்திரத்திற்கும் மூன்று பெயர்கள், பல இடங்களில் அவர்கள் வருகிறபோது ஒவ்வொரு முறையும் ஒரு பெயரில் குறிப்பிடப்படுகிறது, அது வாசிப்புக்குத் தடையாக இருக்கிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. மனித உணர்வுகளும் உறவுகளும் தொடர்பான சித்தரிப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற அங்கீகாரத்துடன், வரலாற்றைத் திரித்துக்கூறுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

ஆயினும், 1958இல் கூடிய நோபல் பரிசுத் தேர்வுக்குழு ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) மிகச் சிறந்த நாவல் என்று அறிவித்தது. நாவலுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதில், இலக்கியத் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு, மேற்கத்திய நாடுகளுக்கு சோவியத் யூனியன் மேல் இருந்த அரசியல் காழ்ப்பு ஒரு முக்கிய பின்னணியாக இருந்தது என்று கூறலாம். சோவியத் யூனியனில் உயர்ந்து பறந்த செங்கொடியும், அங்கே மேற்கொள்ளப்பட்ட முற்போக்கான நடவடிக்கைகளும் தங்களுடைய நாடுகளிலும் சுரண்டல் அமைப்புக்கு எதிராக மக்களைத் திரட்டும் என்ற அச்சம் முதலாளித்துவக் கும்பல்களுக்கு இருந்தது. ஆகவே சிவப்புச் சிந்தனையைத் தாக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கப்பட்டது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 8 | போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) | புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak)

இன்னொரு பக்கத்தில், பாஸ்டர்னாக் தன் சொந்தக் கருத்தின் அடிப்படையில் அல்லது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் எழுதியிருந்தாலும் கூட, அதற்குத் தடை விதித்திருக்கக்கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. நாவலைப் பற்றிய கூர்மையான விமர்சனங்களை நிகிதா குருசேவ் அரசாங்கமோ, கம்யூனிஸ்ட் கட்சியோ, இலக்கிய அமைப்புகளோ வலுவாகச் செய்து மக்களின் முடிவுக்கு விட்டிருக்கலாம். மாறாகத் தடை விதித்ததால், சோசலிசத்தில் கருத்துச் சுதந்திரம் இருக்காது என்ற எண்ணத்தைப் பரப்புவதற்குத் தோதான சூழல் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை.

மருத்துவக் கவிஞன் ‘டாக்டர் ஷிவாகோ’ நாவலின் கதைச்சுருக்கம் வருமாறு:

மருத்துவரான யூரி ஷிவாகோ ஒரு கவிஞனும் கூட. மன்னராட்சிக் கொடுமைகளைக் கண்டு வளர்ந்தவன் உள்நாட்டுப் போரின் கொந்தளிப்பையும் சந்திக்கிறான். மக்களின் கிளர்ச்சி பெரும் புரட்சியாக மாறுவதையும் காண்கிறான். டோன்யா என்ற பெண்ணை மணந்துகொள்கிறான். முதல் உலகப்போரின்போது ராணுவ மருத்துவராகப் பணியாற்ற ஆணையிடப்படுகிறது. மருத்துவ முகாமில் லாரா என்ற பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஒரு புரட்சிகர இளைஞனின் மனைவி லாரா. அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் அவனை தேடுகிறவளான அவள் ஷிவாகோ மீதும் அன்பு வைக்கிறாள்.

புரட்சியை நிலைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஷிவாகோவின் வாழ்க்கையை பாதிக்கின்றன. அந்த நடவடிக்கைகளை ஏற்க மறுக்கிறான். தன் மனைவியையும் குடும்பத்தையும் நேசிக்கிற அவன் தன் காதலைப் பாதுகாக்கவும் போராடுகிறான். கொந்தளிப்பான நிலைமைகளால் துரத்தப்பட்டவனாக வேறோர் இடத்தை அடையும் அவன் தன் எழுத்தாக்கங்களில் ஆறுதல் கொள்கிறான். கவிதைகளை வெளியிட முயல்கிறான். அதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

லாரா–ஷிவாகோ இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சூழ்நிலைகள் அவர்களைப் பிரிக்கின்றன. லாரா தனது கணவனைத் தேடிச் செல்கிறாள், ஷிவாகோ தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. (இதனிடையே நாட்டின் அரசியலிலும் சமுதாயத்திலும் பல வேகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. மத நிறுவனங்களின் பிடியிலிருந்து அரசு அமைப்புகள் விடுவிக்கப்பட்டன. சமுதாயத்திலும் தலையீடுகள் கட்டுப்படுத்தப்பட்டன.ஆனால், அவற்றை எதிர்மறையாகவே நாவல் சித்தரிக்கிறது).

பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தொடர்கின்றன. சோவியத் படையிலிருந்து வெளியேறும் யுரி ஷிவாகோ இறுதியில் மாஸ்கோ நகருக்குத் திருமபுகிறான். மனைவியும் மகனும் வேறெங்கோ இருக்க, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்கிறான், அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. ஆனால் யுரி மகிழ்ச்சியாக இல்லை. 1929ஆம் ஆண்டில், உடல்நலம் குன்றிய நிலையில் ஒருநாள் சாலையில் செல்லும்போது டிராம் விபத்தில் இறக்கிறான் ஷிவாகோ.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 8 | போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) | புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

பல ஆண்டுகளுக்குப் பிறகு யூரியின் சிறுவயது நண்பர்கள் அவனது கவிதைகளைத் தேடியெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார்கள். அந்தக் கவிதைகள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காதலும் ஏக்கங்களும் நிறைந்த அவனுடைய வாழ்க்கை ஒரு சோகமான காவியமாகப் பேசப்படுகிறது.

இலக்கியத்துக்காகவா அரசியலுக்காகவா?

’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) சோவியத் அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் எழுதப்பட்ட ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக மேற்கத்திய நாடுகளின் அரசுகளாலும் திறனாய்வாளர்களாலும் பார்க்கப்பட்டது. சோவியத் இலக்கியத்திற்கே எதிரான ஒரு குரலாகவும் இந்த நாவலுக்கான பரிசு கருதப்பட்டது. அரசின் அழுத்தத்தை மீறி பாஸ்டர்நாக் தனது படைப்புக்காக நின்றார் என்று போற்றும் குரல்கள் ஒலித்தன. அதில் ஒரு பகுதி உண்மையும் இருந்தது, மறுபகுதி உள்நோக்கமும் இருந்தது.

“நோபல் பரிசு வழங்கப்பட்டதில் அரசியல் காரணிகளுக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், அதன் ஆழமான தத்துவார்த்த சிந்தனைகள், கவித்துவமான மொழி மற்றும் மனித உணர்வுகளை சித்தரிக்கும் விதம் ஆகியவை இலக்கியப்பூர்வமாகப் பாராட்டுக்குரியவை. அன்று நிலவிய உலகளாவிய அரசியல் சூழல் நாவலின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்திருக்கலாம்,” என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நாவல் புரட்சியின் உன்னத நோக்கங்களை சிறுமைப்படுத்தியது, சுரண்டல் சக்திகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் ஆதரவாகப் பேசியது என்ற விமர்சனமும் முன்னுக்கு வந்தது.தனிமனிதனின் உணர்வுகள், காதல் மற்றும் ஆன்மீகத் தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிற நாவல் புரட்சியின் பொதுவான இலக்குகளை விட தனிமனிதனின் சுதந்திரம் முக்கியமானது என்ற கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறது. இது புரட்சியின் கூட்டு உணர்வுக்கு எதிரானது என்று போராட்டக்களத்தில் நின்றவர்களால் பார்க்கப்பட்டது.

நாவலின் கதாநாயகனான ஷிவாகோவின் கவிதைகளில் மதத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இது சோவியத் அரசு வளர்க்க முயன்ற அறிவியல் மனப்பான்மைக்கு எதிராக அமைந்தது. அதே போல், நிலப்பிரபுத்துவ கால சமூக அமைப்பின் மீதான ஒரு ஏக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்று மாற்றங்களுக்காக நிற்பவர்கள் கூறினார்கள். நம் ஊரில் கூட, எதற்கெடுத்தாலும் “அந்தக் காலத்திலேயெல்லாம்” என்று காலாவதியாகிப் போன கலாச்சார, சமூக நிலைகள் மறுபடியும் வர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறவர்ளையும், பழைய சடங்குகளை நியாயப்படுத்திப் புதுப்பிக்க விருமபுகிறவர்களையும் பார்க்கிறோம் அல்லவா?.

முடிவுரையாகச் சொல்வதென்றால், படைப்புச் சுதந்திரம் மிக முக்கியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) நாவலை அன்றைய சோவியத் அரசு தடை செய்தது ஒரு தவறான முன்னுதாரணம். அவர்கள் நாவலை கடுமையாக விமர்சித்திருக்கலாம், அதன் கருத்துக்களை மறுத்திருக்கலாம், ஆனால் தடை நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலானது..அதே நேரத்தில் ஒரு பெரிய சமூக மாற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தனிமனித நோக்கங்களை மட்டும் முதன்மைப்படுத்துவது புரட்சிக்கு எதிரானவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது. பிற்காலத்தில் சோவியத் யூனியனும் அதன் மாண்புகளும் தகர்க்கப்பட்டதற்கு ஆதரவான மனநிலையை வளர்த்ததில் இப்படிப்பட்ட சிந்தனைப் போக்குகளுக்கும் பங்கிருக்கிறது எனலாம்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 8 | போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) | புரட்சியைத் தாக்கியதற்காக நோபல் பரிசு பெற்ற நாவல் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago)

போரிஸ் பாஸ்டர்நாக் (Boris Pasternak) மறைந்தபிறகு, 1965இல் ஓமர் ஷெரீப் மையப்பாத்திரத்தில் நடிக்க, டேவிட் லீன் இயக்கத்தில் ’டாக்டர் ஷிவாகோ’ (Doctor Zhivago) திரைப்படமாகவும் வந்தது. உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று பல அமைப்புகளும் சான்றளிக்க, திரையரங்க வசூலிலும் உலக சாதனை நிகழ்த்திய படங்களில் ஒன்றாக தன்னைப் பதித்துக்கொண்டது. நாவலுக்குச் சற்றும் குறையாமல் சோவியத் அரசைக் குறைகூறியது. ஒரு நாவலை வெற்றிகரமான திரைப்படமாக்கிய முயற்சிகளில் ஒன்றாகவும் அடையாளம் பெற்றது.


https://bookday.in/books-beyond-obstacles-boris-pasternak-doctor-zhivago-novel-oriented-article-written-by-a-kumaresan/

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தினம் ஒரு புத்தகம் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் ஏன்று நினைக்கிறேன்...புத்தக இணைப்பிற்கு மிக்க நன்றி கிருபண்ணா.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு

Bookday15/04/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 9 | மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு | எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் ‘நோ லோகோ’ (No Logo)

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 9 | ‘நோ லோகோ’ (No Logo)

மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு

அ. குமரேசன்

“என்னை வாட்டிக்கொண்டிருப்பது உண்மையில் நேரடியாக இங்கே ஒரு வெளி இல்லை என்பதல்ல, மாறாக இவற்றை உருவகப்படுத்துவதற்கான வெளி இல்லையே என்ற ஏக்கம்தான்: விடுதலை, தப்பித்தல், ஒரு வகையான திறந்த சுதந்திரம்.” – இவ்வாறு பொருளாதார ஆய்வாளரும் களச்செயல்பாட்டாளருமான கனடா நாட்டு எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) தமது ‘நோ லோகோ’ (No Logo: Taking Aim at the Brand Bullies – வேண்டாம் இலச்சினை) என்ற நூலில் குறிப்பிடுகிறார். 1999இல் வெளியான அந்தப் புத்தகத்தைத் தடை செய்யப்பட்ட புத்தகங்களின் வரிசையில் சேர்க்க முடியாது முடியாது – ஏனெனில் நேரடியாக அது எந்த நாட்டின் அரசாங்கத்தாலும் தடை செய்யப்படவில்லை. ஆனால் தடை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்துடன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகித் தப்பிப் பிழைத்தது. யார் அவ்வாறு தாக்கினார்கள் என்றால் உலகளாவிய கார்ப்பரேட் சக்திகளும் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரச் சிந்தனையாளர்களும்.

“வேண்டாம் இலச்சினை” என்று நூலாசிரியர் கூறுவது கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிக இலச்சினைகளைத்தான். மக்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் என்பதற்கு மாறாக, குறிப்பிட்ட நிறுவனங்களின் விற்பனைச் சரக்குகள் மீது ஒரு விசுவாசத்தனமான மோகத்தை ஏற்படுத்துவதற்கு அந்த இலச்சினைகள் மூளைக்குள் பதிய வைக்கப்படுவதை அவர் அம்பலப்படுத்துகிறார். தி ஷாக் டாக்ட்ரைன் (The Shock Doctrine – அதிர்ச்சிக் கோட்பாடு), திஸ் சேஞ்ஜஸ் எவ்ரிதிங் (This Changes Everything – இது எல்லாவற்றையும் மாற்றுகிறது) என்ற புத்தகங்களையும் எழுதியுள்ள நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை நீதித்துறைப் பேராசிரியருமாவார்.

இந்த நூல் பற்றித் தெரியவந்தபோது செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அடிப்படையான புரிதலுக்கு உதவுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை விற்பது என்பதைத் தாண்டி, மக்களுக்கான வாழ்க்கை முறைகளையே விற்பனை செய்கின்றன. நுகர்வோர் கலாச்சாரத்தில் ஊடுருவி, பல்வேறு தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்காமல் குறிப்பிட்ட வணிகப் பெயர்கள் (பிராண்டுகள்) மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதற்குத் தங்களை ஒப்படைத்துக்கொள்ள வைக்கின்றன. உலகமயமாக்கலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளில் கிளை பரப்பியிருந்தாலும், அவர்களின் லாபம் பெருகிய அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகிடவில்லை, மாறாக வேலையிழப்புகள்தான் அன்றாடச் செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன. இதன் தாக்கங்கள் பலவகையான போராட்டங்களில் வெளிப்படுகின்றன.

புத்தகம் எதைப்பேசுகிறது?

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 9 | மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு | எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் ‘நோ லோகோ’ (No Logo)

இந்தச் செய்திகளைத்தான் புத்தகத்தில் எழுதியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein). இது நாவலோ தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்போ அல்ல. வணிக இலச்சினையை மையமாக வைத்து உலகளாவிய கார்ப்பரேட் சுரண்டலின் பரிமாணங்களை விளக்குகிற பொருளாதார–அரசியல்–சமூக ஆய்வு நூல் என்று கூறலாம்.

வெளி இல்லை (No Space), தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லை (No Choice), வேலைகள் இல்லை (No Jobs), இலச்சினை இல்லை (No Logo) என்ற நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பொருள்களின் தரம் என்பதை இலச்சினைகளோடு தொடர்புபடுத்துவது முதல், நிறுவனங்களில் பல்வேறு வேலைகள் வெளி ஒப்பந்ததாரர்களிடம் விடப்படுவது (outsourcing), மலிவான கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் தயாரிப்பு ஆலைகளை நிறுவுவது வரையில் புத்தகம் அலசுகிறது. நமது நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளோடு ஆலைகள் அமைக்க வழி செய்யப்பட்டதையும், மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த ஊதியத்தில் இங்கே தொழிலாளர்களை நியமிக்க முடியும் என்பதால் பல நிறுவனங்கள் வந்ததையும் சாட்சியங்களாகக் கொண்டுவரலாம். சாம்சங் தொழிலாளர் போராட்டம் உள்பட எத்தனை சான்றுகள்!

வணிகத்தோடும் வருமானத்தோடும் நின்றுவிடாமல் மக்களின் வாழ்க்கை முறை, நுகர்பொருள்களின் தேர்வு ஆகியவற்றில் கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்குவது பற்றியும் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) விவாதிக்கிறார். வியர்வைக் கொட்டகைகளாக இருக்கும் இயந்திரக் கூடங்கள், கார்ப்பரேட் பாணி தணிக்கைகள், கருத்துகளை வெளியிடுவதற்கான பொதுவெளி அரிக்கப்படும் நிலைமைகள் ஆகியவை தொடர்பான அவதானிப்புகளையும் பகிர்ந்திருக்கிறார். உலக சமுதாயத்தின் வேர்மட்டத்தில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு, உழைப்பாளி வர்க்கத்தின் எழுச்சி, அதில் தொழிலாளர் சங்கங்களின் பங்களிப்பு ஆகியவற்றை விவரிக்கிறார். அந்தப் போராட்டங்களோடு சமூகநீதி, சமத்துவ இலட்சியங்களும் இணைந்திருப்பதைக் காட்டுகிறார். அந்த இலட்சியங்களை நோக்கிச் செல்கையில் இந்த இலச்சினைகள் இனி இல்லை என்ற நிலை ஏற்படும் என்ற தன் கனவைப் பகிர்ந்துகொள்கிறார்.

தகவல்களையும் கருத்துகளையும் சொல்வதோடு, இத்தகைய மாற்றங்களுக்காகச் செயல்படவும், அவ்வாறு செயல்படுவோருக்கு ஆதரவாக இருக்கவும் வாசகர்களைத் தூண்டுகிறது என்று புத்தகம் பற்றிய பதிவுகள் தெரிவிக்கின்றன.

வெளிகள் ஆக்கிரமிப்பு

சுதந்திரமான விவாதங்களுக்கான பொதுவெளிகள் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப்படுவது, தங்களுடைய பிராண்டுகள் சந்தையில் முந்தியிருக்கச் செய்வதற்காக நிறுவனங்கள் கையாளும் மூர்க்கத்தனமான வழிமுறைகள், அதில் பலியிடப்படும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகள், அடிமைப்படுத்தப்படும் படைப்பாக்கத் திறன்கள், மறக்கடிக்கப்படும் வட்டாரப் பண்பாடுகள் ஆகியவற்றையும் புத்தகம் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

உலகமயமாக்கல் சூழலில் தன்னாளுமை உரிமைகளை மீட்பதற்கு ஒவ்வொரு தனிமனிதரும் முன்வர வேண்டுகோள் விடுக்கிறார் நூலாசிரியர்.

உலக மயமாக்கலின் ஆக்கப்பூர்வமான விளைவுகளை நாவோமி க்ளெய்ன் (Naomi Klein) பார்க்கத் தவறுகிறார், உலகப் பரப்பு இன்று எவரும் எளிதில் சென்றுவரக்கூடியதாக மாறியிருப்பதை, இதனால் தனிமனித வாழ்க்கையிலும் சமூகச் சூழல்களிலும் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றங்களை க்ளெய்ன் நிராகரிக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே கூறியது போல கார்ப்பரேட்டுகள் தரப்பிலிருந்தும் கார்ப்பரேட் ஆதரவுச் சிந்தனையாளர்களிடமிருந்தும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. சிலர், உலகமயமாக்கலால் நன்மைகளே ஏற்படவில்லையா என்று கேட்கிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 9 | மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு | எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் ‘நோ லோகோ’ (No Logo)

அந்தக் கேள்விக்குப் புத்தகத்தில் பதில் இருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாக்கலின் பல்வேறு நன்மைகளை மறுப்பதற்கில்லைதான். உலகின் சில பகுதிகளில் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வறுமைக்கோடு அளவு உயர்ந்திருக்கிறது. வட்டாரத்திற்குள் சுருங்கியிருந்த வாழ்க்கை பரந்த எல்லைகளுக்கு விரிவடைந்திருக்கிறது. குடியிருப்பு வசதிகள், நவீன வாகனங்கள் என்ற விளைச்சல்களையும், பாலின சமத்துவச் சிந்தனைகள் முன்னுக்கு வந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

என்ன விளக்கம்?

ஆனால், உலகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து பணியாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேற்றப்படுவதற்கும், அதனால் அவர்களது குடும்பங்களிலும் சமூகத்திலும் ஏற்படும் சிக்கல்களுக்கும் எப்படி விளக்கம் அளிப்பது? எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி செக்டார்) சார்ந்த ஊழியர்கள் நல்ல ஊதியம் பெறுகிறார்கள் என்ற தோற்றம் ஒரு புறமிருக்க, எல்லா ஐடி நிறுவனங்களிலும் அந்த நிலைமை இல்லை என்பது இன்னொருபுறமிருக்க, எந்த நேரத்திலும் வீட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற உறுதியற்ற நிலையில் தினமும் காலையில் கண்விழித்துக்கொண்டிருக்கிறார்களே – அதை எப்படி இல்லை என்று கூறுவது? அந்த நிறுவனங்களின் தேவைகளை ஏற்று, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் செய்துகொள்கிற சமரசங்கள், சட்டத் திருத்தங்கள் போன்றவற்றை எப்படி நியாயப்படுத்துவது? வறுமையின் அளவு மாறியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் சொல்லட்டும், ஆனால் வறுமையின் கொடுமைகளும் துயரங்களும் தற்கொலை உள்ளிட்ட அவலங்களும் மாறவில்லையே? பாலின சமத்துவத்தில் முன்னேற்றம் என்ற தோற்றத்திற்குப் பின்னால், பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான சுரண்டல்கள் அதிகரித்திருக்கின்றனவே? வேலையிழக்கும் ஆண்களால் அவர்களின் வீடுகளில் பெண்கள் தாக்கப்படுவது செய்தியாகிக்கொண்டிருக்கிறதே? முற்போக்கான மாற்றங்கள்தான் இனி நிகழும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மதவாத. சாதியவாத வன்மங்கள் தாண்டவமாடுகின்றனவே? இயற்கை வளங்களும் பசுமைப் பரப்புகளும் சூறையாடப்படுகின்றனவே? கட்டுப்பாடற்ற கரிம வெளியேற்றத்தால் சுற்றுச் சூழலுக்குப் பேராபத்து ஏற்படுத்தப்படுகிறதே?

சமுதாய வளர்ச்சியின் இறுதிக்கட்டம் முதலாளித்துவம் அல்ல, உலகமய கார்ப்பரேட் யுகம் அல்ல என்று மேலும் மேலும் தெளிவாகப் புலப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சியின் பின்னால் இருப்பது மூலதனக்காரர்களின் “தொழில் திறமை” மட்டுமல்ல, அரசாங்கங்களின் பங்களிப்பு, வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு, மதம், இனம், சாதி சார்ந்த சமுதாயத் தலைவர்களின் கைகோர்ப்பு ஆகியவை இருக்கின்றன.

பொருளாதார அடியாள் போல

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 9 | மக்களை ‘லோகோ’ விசுவாசிகளாக்கும் கார்ப்பரேட் வலைவிரிப்பு | எழுத்தாளர் நாவோமி க்ளெய்ன் ‘நோ லோகோ’ (No Logo)

2004ஆம் ஆண்டில் வந்த ‘கன்ஃபெஸ்ஸன்ஸ் ஆஃப் அன் எகனாமிக் ஹிட் மேன்’ (Confessions Of An Economic Hit Man) என்ற  புத்தகம் வந்தது. அமெரிக்கரான ஜான் பெர்க்கின்ஸ் என்ற வணிக ஆலோசகர் எழுதிய அந்தப் புத்தகத்தை அதற்கடுத்த ஆண்டிலேயே, இரா. முருகவேல் மொழிபெயர்ப்பில் தமிழில் கொண்டுவந்தது பாரதி புத்தகாலயம். உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசாங்கங்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதற்காக ஊழல் உட்பட மோசமான குற்றங்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பதை அந்தப் புத்தகம் கூண்டில் நிறுத்தியது. அப்படிப்பட்ட “அடியாள்” வேலைகளில் ஈடுபட்டு, பின்னர் மனசாட்சியோடு அதிலேயிருந்து வெளியேறி, வேட்டையாடப்பட்ட, ஆயினும் துணிந்து நின்றவர் ஜான் பெர்க்கின்ஸ். அவரே தன் கதையைச் சொல்வதாக எழுதப்பட்ட அந்தப் புத்தகம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கார்ப்பரேட் சுரண்டல் எதிர்ப்பாளர்களுக்கு ஒரு கையேடாகியிருக்கிறது.

அதே போல், உலகக் கார்ப்பரேட்டுகளின் வணிகச்சூது உலகத்தை சந்திக்குக் கொண்டுவரும் புத்தகம்தான் இது என புரிந்துகொள்ள முடிகிறது. “வேறுபட்ட கலாச்சாரங்கள் இருந்தபோதிலும், உலகம் முழுவதும் நடுத்தர வர்க்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வேறு ஏதோவொரு நிகர்நிலை உலகத்தில் வாழ்வது போலத் தோன்றுகிறது. அவர்கள் காலையில் எழுகிறார்கள், தங்கள் லெவிஸ் ஆடைகளையும் நைக் காலணிகளையும் அணிகிறார்கள், தொப்பிகளையும் முதுகுப் பைகளையும் சோனி பெர்சனல் சிடி பிளேயர்களையும் எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார்கள்.” –உலகமய கார்ப்பரேட் யுகம் எப்படி வளரும் தலைமுறைகளை ஒரு மாதிரியாக வார்த்து வைத்திருக்கிறது என்று தன் மனக்குமுறலை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் நாவோமி க்ளெய்ன் (Naomi Klein).

தமிழிலும் உலகின் அனைத்து மொழிகளிலும் வரவேண்டிய புத்தகம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. அந்த முயற்சியில் ஈடுபடக்கூடியவர்களை கைகுலுக்கி வரவேற்கலாம், வாழ்த்தலாம்.

https://bookday.in/naomi-klein-no-logo-taking-aim-at-the-brand-bullies-book-oriented-article-written-by-a-kumaresan/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘பாரன்ஹீட் 451’ நாவல் – புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) ‘பாரன்ஹீட் 451’ (Fahrenheit 451) நாவல் பற்றிய கட்டுரை

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 10 | ‘பாரன்ஹீட் 451’ நாவல்

புத்தகங்களைச் சாம்பலாக்கக் கிளம்பிய தீயெரிப்புப் படை!

அ. குமரேசன்

“ஒரு புத்தகத்தை எரிக்க வேண்டுமானால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் கையில் தீக்குச்சியை வைத்துக்கொண்டு அலைகிறவர்கள் இந்த உலகத்தில் நிரம்பியிருக்கிறார்கள்.”

நாவல், சிறுகதை, திரைக்கதை எழுத்தாளரான ரே பிராட்பரி (Ray Bradbury) (1920 – 2012) என்ற இவ்வாறு நொந்து போனவராகப் பேசினார். கட்டற்ற சுதந்திரத்திற்கு அடையாளமாகக் கைகாட்டப்படும் அமெரிக்காவின் அதிகார வர்க்க அத்துமீறல்களும் தணிக்கைக் கடுமைகளும் அவரை இப்படிப் பேச வைத்தன.

அந்த நிலைமைகளை வைத்தே அவர் எழுதி 1953ஆம் ஆண்டில் வெளியான நாவல்தான் ‘பாரன்ஹீட் 451’. அமெரிக்காவிலும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த தென்னாப்பிரிக்காவிலும் அந்த நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது, பள்ளிகளின் நூலகங்களில் அந்தப் புத்தகங்களை வாங்கி வைக்கக்கூடாது என்று அரசாங்கங்கள் ஆணையிட்டன. அமெரிக்காவில் 1967இல் ஆட்சி நிர்வாக அமைப்பு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது எனக் கூறி முதல் முறையும், பின்னர் 2006இல் மோசமான சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன எனக் கூறி இரண்டாவது முறையும் தடை விதிக்கப்பட்டது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) ‘பாரன்ஹீட் 451’ (Fahrenheit 451) நாவல் பற்றிய கட்டுரை

ஆனால் அந்தத் தடை நடவடிக்கைகள், தணிக்கை முறை பற்றிய விரிவான விவாதங்களுக்கு இட்டுச் சென்றன. அதற்கு எதிரான கருத்துகள் மேலோங்கின. தடை விலக்கப்பட்டது.

நாவலின் கதையே புத்தகங்களுக்கு எதிரான தடை பற்றியதுதான். ஆனால் அந்தத் தடை வெறுமனே புத்தகத்தை விற்கவோ வாங்கவோ கூடாது என்பதோடு நிற்கவில்லை. புத்தகங்களைக் கைப்பற்றி எரித்துச் சாம்பலாக்குகிற அளவுக்குப் போனது. அதற்கென்றே ஒரு ‘தீயெரிப்புப் படை’ அமைக்கப்படுகிறது! ‘பாரன்ஹீட் 451’ என்பது காகிதம் எரிவதற்கான வெப்பநிலையாகும். ஆகவே அந்தத் தலைப்பு புத்தகங்கள் எரிக்கப்படுவதன், அதன் மூலம் புத்தகத் தணிக்கையின், ஒடுக்குமுறையின் குறியீடானது. மேலும், கருத்துரிமை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் மனக் கொந்தளிப்பின் குறியீடாகவும் அந்தத் தலைப்பு அமைந்தது.

தடையின் கதை

உண்மையான நிகழ்கால அரசியலைத் தாக்குவதற்குக் கற்பனையான எதிர்கால சமூகத்தை நடமாட விடுகிற புனைவு உத்தியைத்தான் இந்த நாவலில் ரே பிராட்பரி (Ray Bradbury) கையாண்டிருக்கிறார்.

ஓர் எதிர்காலச் சமூகத்தில் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தீயணைப்புப்படை இருக்கிறது – ஆனால் அதன் ஒரு முக்கிய வேலை, எங்காவது யாராவது புத்தகங்கள் வைத்திருக்கிறார்களா என்று கண்டுபிடித்து அவற்றை எரிப்பதுதான். ஆம் உண்மையில் அது “தீயெரிப்புப்படை”! அதன் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள் அல்ல, தீயெரிப்பு வம்பர்கள்தான். அந்தப் படையில் கய் மோன்டாக் ஓர் எரிப்பாளன். கேள்வி கேட்காமல் தனது வேலையைச் செய்துவரும் அவனுக்கு, தனது மனைவி மில்ட்ரெட் எதையுமே கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்குகளில் மட்டும் ஆர்வமாக இருப்பது பற்றிய கவலை இருக்கிறது.

க்ளாரிஸ் மெக்லெல்லன் என்ற ஒரு மாறுபட்ட இளம் பெண்ணை அவன் சந்திக்கிறான். அவள் புத்தகங்களை நேசிக்கிறவள். அதனால் வளர்ந்த அறிவுக் கூர்மையும் அன்பின் இணக்கமும் நிறைந்தவள். உலகத்தைப் பற்றிய விரிந்த பார்வை கொண்ட அவளுடன் பேசப் பேச அவனுக்குத் தனது வாழ்க்கையைப் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் புதிய பார்வை ஏற்படத் தொடங்குகிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) ‘பாரன்ஹீட் 451’ (Fahrenheit 451) நாவல் பற்றிய கட்டுரை

ஒரு நாள், தீயெரிப்புப் படையினர் வைத்த தீயில் வயது முதிர்ந்த ஒரு பெண் அவரது புத்தகங்களுடன் சேர்ந்து எரிக்கப்படுவதை கய் பார்க்கிறான். அது அவனை ஆழமாகப் பாதிக்கிறது. தான் இதுவரையில் எரித்த புத்தகங்களைப் பற்றி யோசிக்கிறான். சில புத்தகங்களை மீட்டு வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கிறான்.

க்ளாரிஸ் திடீரென காணமாமல் போகிறாள். இது கய்யைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. அவள் ஒரு கார்விபத்தில் இறந்துவிட்டதாக மில்ட்ரெட் கூறுகிறாள். குறிப்பிட்ட பாதையில் க்ளாரிஸ் சென்றிருப்பாள் என்று கய் ஊகிக்கிறான். ஆனால் அதற்கான திட்டவட்டமான ஆதாரம் கிடைக்கவில்லை.

அவன் தன்னிடமுள்ள புத்தகங்களைப் பற்றி மில்ட்ரெட்டிடம் சொல்ல முயல்கிறான், ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. ஏமாற்றமடையும் கய் ஒரு புத்தகத்தை அவளுடைய நண்பர்களுக்கு வாசித்துக் காட்டுகிறான். அவர்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைகிறார்கள்.

ஆத்திரப்படும் மில்ட்ரெட் கய்யைக் காட்டிக் கொடுக்கிறாள். அவனும் தீயெரிப்புப் படையைச் சேர்ந்தவன்தான் என்றாலும், புத்தகங்களுடன் இருக்கும் அவனுடைய வீட்டைக் கொளுத்துவதற்குப் படைக் குழுவினர் வருகின்றனர். அங்கே நடக்கும் மோதலில் அவன் தனது மேலதிகாரியான குழுத் தலைவனைத் தாக்கிக் கொன்றுவிடுகிறான். ஊரைவிட்டுத் தப்பி ஓடுகிறான். நகரத்திற்கு வெளியே, அடுத்த சந்ததிகளுக்காகப் புத்தகங்களை மனப்பாடம் செய்து தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற, ஒதுங்கி வாழ்கிற ஒரு குழுவை அவர் சந்திக்கிறான்.

ஒரு போர் மூள்கிறது. அதில் நகரம் அழிக்கப்படுகிறது. கய்யும் அந்த குழுவினரும் தொலைவிலிருந்து அதைப் பார்க்கிறார்கள். அழிவின் இடிபாடுகளிலிருந்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். புத்தகங்களிலிருந்து பெற்ற அறிவையும் மானுட மாண்பையும் அவர்கள் சுமந்து செல்கிறார்கள்.

க்ளாரிஸ்சுக்கு என்ன ஆனது என்று நாவல் தெரிவிக்கவில்லை. படையாட்களால் அவள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வாசகர்கள் கருதுவதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

போராளிகளின் துணை

மக்களின் அறிவு வளம் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்குத் தடையாகிவிடும் என்று கருதும் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினரைச் சாடும் இந்த நாவல், சிந்தனைகளுக்கு எதிரான ஒடுக்குமுறை பற்றிய கூர்மையான விமர்சனத்தை முன்வைக்கிறது. உலகம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்களின் இலக்கியத் துணையாக அடையாளம் பெற்றிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் - 10 | எழுத்தாளர் ரே பிராட்பரி (Ray Bradbury) ‘பாரன்ஹீட் 451’ (Fahrenheit 451) நாவல் பற்றிய கட்டுரை

ரே பிராட்பரி

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் வாகீகன் நகரில் பிறந்த ரே டக்ளஸ் பிராட்பரி (Ray Bradbury) ‘தி மார்ஷ்யன் குரோனிக்கிள்ஸ்’, ‘சம்திங் விக்கெட் திஸ் வே கம்ஸ்’ உள்ளிட்ட படைப்புகளை அளித்திருக்கிறார். அவற்றிலும் அரசியல், சமூக விமர்சனங்கள் இருக்கின்றன என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி மறைந்த அவருடைய ஆனால் அவரது எழுத்துகள் இன்னும் உலகம் முழுவதும் வாசகர்களை ஈர்க்கின்றன என்று திறனாய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்காவில் 1940களில் குறிப்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டார்கள். சோவியத் யூனியன் கொள்கைகளின் செல்வாக்கு பரவுவதற்கு எதிரான திட்டமிட்ட அவதூறுகள் கிளப்பப்பட்டன. அரசியல், சமுதாய நிலைமைகளை விமர்சித்தவர்கள் சோவியத் கையாட்கள் என்று தாக்கப்பட்டார்கள். “இரண்டாவது சிவப்பு பீதி” என்று சித்தரிக்கப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட எண்ணங்கள்தான் இந்த நாவலை எழுதத் தூண்டின என்றார் ரே பிராட்பரி (Ray Bradbury). ஜெர்மனியில் ஹிட்லர் புத்தகங்களைக் குவியல் குவியல்களாக எரித்த அட்டூழியங்களும், அமெரிக்காவிலும் அதே போன்ற வெறியாட்டங்கள் வர வாய்ப்பிருக்கிறது என்ற தனது அச்சமும் ‘பாரன்ஹீட் 451’ கதைக்கு மூலமாகின என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். புத்தகங்களுக்கு எதிரான, சொற்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரப்போக்கு இன்றைய மெய்யான எதிரி என்றார்.

சொற்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கும் அப்படிப்பட்ட மெய்யான எதிரிகளை எங்கேயும் பார்க்க முடியும் – இங்கேயும்தான் – இல்லையா?

எழுதியவர் : 


அ. குமரேசன்

https://bookday.in/ray-bradbury-fahrenheit-451-novel-based-article-written-by-a-kumaresan/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கசாப்புக் கூடம்  ஐந்து (Slaughterhouse-Five)

Bookday29/04/2025

‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five) - போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்ன Kurt Vonnegut's Novels - https://bookday.in/

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –11

போரின் கொடூரத்தோடு அபத்தத்தையும் சொன்னதற்காகக் குப்பையில் வீசப்பட்ட நாவல்

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம். ஜெர்மனியின் டிரெஸ்டன் நகரில் ஒரு பழைய தொழிற்கூடம். அதுவோர் இறைச்சித் தயாரிப்புக் கூடம். ‘கசாப்புக் கூடம்  ஐந்து’ (Slaughterhouse-Five) என்று பெயர். போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்ட நேசப்படையைச் சேர்ந்த பல நாடுகளின் வீரர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாஜிகளின் தோல்வியை உறுதிப்படுத்துவதாக, அந்த நகரத்தின் மீது நேசப்படை விமானங்கள் குண்டுகளைப் போடுகின்றன. கட்டுமானங்கள் அனைத்தும் நொறுங்கிப் போன நிலையில், கசாப்புக் கூடத்தில் உயிரோடு மிஞ்சியவர்கள் வெளியே வருகிறார்கள். சாலையோரத்தில் ஒரு கழிப்பறை மட்டும் இடிந்து போகாமல் அப்படியே இருக்கிறது. ஒருவன், ஊரே அழிந்தபின் கழிப்பறை மட்டும் எஞ்சியிருப்பதில் உள்ள அபத்தத்தை எண்ணிச் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்து ஒன்றுக்கடித்துவிட்டுத் திரும்புகிறான்.

Slaughterhouse-Five

அன்றைய ஜெர்மனியின் இனவெறிச் சர்வாதிகார ஆட்சியைச் சிறிதும் நியாயப்படுத்தாமல், ஆனால் பொதுவாகப் போர் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு முட்டாள்தனமானது என்று முரண் நகை வடிவில் வேதனைச் சிரிப்பைப் பகிர்ந்துகொள்கிறது ‘ஸ்லாட்டர்ஹவுஸ் – ஃபைவ்’ நாவல் (1969). அவ்வாறு மனிதநேய வேதனையைப் பகிர்ந்துகொண்டது, அரசின் போர்க் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தாக்குவதாக இருக்கிறது என்று கூறி அமெரிக்காவின் பல மாநில அரசுகள் நாவலுக்குத் தடைவிதித்தன. பாலியல் உறவு பற்றிப் பேசுகிறது, ஆபாசமான சித்தரிப்புகள் இருக்கின்றன, மதத்தை விமர்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி தடை நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டது.

பள்ளி, கல்லூரி நூலகங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட புத்தகப் படிகள் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன. குப்பையில் கிடக்கிற புத்தகத்தை யாராவது எடுத்துப் படித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்துப் பல இடங்களில் புத்தகப் படிகளுக்குப் பள்ளிகள், கல்லூரிகளின் முதல்வர்களே தீ வைத்தார்கள். அரசியல்வாதிகள் நாவலைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். வேறு பல நாடுகளிலும் நாவல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதிலேயே ஒரு முரண் நகை என்னவென்றால், நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே தேசிய சிறந்த நூல் விருது வழங்கப்பட்டது, 1972ஆம் ஆண்டிலிருந்து தடை நடவடிக்கைகள் பாய்ந்தன.

நாவலாசிரியர்

The First Reviews of Slaughterhouse-Five Book Marks

இந்த நாவலை எழுதிய குர்ட் வோன்னேகட் (1922–2007) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார்.. முரண் நகை எள்ளல் நடையோடு கூடிய அறிவியல், அரசியல் புனைவுகளுக்காகவும், மனிதம் குறித்த ஆழ்ந்த பார்வைகளுக்காகவும் இலக்கிய உலகில் கொண்டாடப்படுபவர். கருப்பொருள்களாகப் போர்களின் விளைவு, தொழில்நுட்பத்தின் தாக்கம், தனிமை, மரணம், மனித நேயம் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டார்.. அதிகாரத்தையும், தலைவிதி நம்பிக்கை உள்ளிட்ட சமூகத்தின் போலித் தனங்களையும் கேள்விக்கு உட்படுத்தினார்.

தலைமுறைகள் கடந்தும் நேசிக்கப்படும் வோன்னேகட் எழுதத் தொடங்குவதற்கு முன், அமெரிக்கச் சட்டப்படி ராணுவத்தில் பணி செய்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். அப்போது உண்மையாகவே ஜெர்மன் படையிடம் சிக்கிக்கொண்டார், டிரெஸ்டன் நகரத்தில் குண்டு போடப்பட்டபோது நல்வாய்ப்பாகத் தப்பித்தார். அந்த அனுபவங்களின் தாக்கத்திலும், மனிதநேயச் சிந்தனையிலிருந்தும், ராணுவப் பணி ஓய்வுக்குப் பிறகு எழுத்துத்துறையில் ஈடுபட்டார். ‘பிளேயர் பியானோ’ என்ற நாவல் அவரிடமிருந்து 1953இல் வந்தது. ‘பூனையின் தொட்டில்’ (கேட்ஸ் கிரேடில் –1963), ‘கடவுள் உம்மை ஆசிர்வதிப்பாராக திருவாளர் ரோஸ்வாட்டர்’ (காட் பிளெஸ் யூ, மிஸ்டர் ரோஸ்வாட்டடர்– 1965), ‘காலை உணவு சாம்பியன்கள் (பிரேக்ஃபாஸ்ட் ஆஃப் சாம்பியன்ஸ் –1973), கலபாகோஸ் (1985) உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களையும் வழங்கியிருக்கிறார்.

‘ஸ்லாட்டர்ஹவுஸ்–ஃபைவ்’ ஒரு தனித்துவமான படைப்பு. இந்த நாவல் போர், மரணம், காலம், விதி நம்பிக்கை, மனித இருப்பு பற்றிய ஆழமான கேள்விகளை நகைச்சுவை கலந்து அறிவியல் புனைகதையாக ஆராய்கிறது என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மையக் கதாபாத்திரம் காலவெளியில் சிக்கிக்கொள்ள, கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமாக மாறி மாறிக் கால ஒழுங்கற்ற முறையில் பயணிக்கிறான். அந்தப் பயணத்தில் வேற்றுக் கோளில் வாழ்கிறவர்களையும் சந்திக்கிறான். முக்காலத்தையும் ஒரே நேரத்தில் காணக்கூடியவர்களாக இருக்கிற அவர்களோடு உரையாடுவதில், மரணம் இயல்பானது, தவிர்க்க முடியாதது என்று புரிந்துகொள்கிறான். அந்தப் புரிதல், வாழ்கிற வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொள்ள வழிசெய்கிறது. போர் எதிர்ப்புச் சிந்தனையும் அதிலிருந்து வலுப்பெறுகிறது. போர்களிலிருந்து உலகத்தைக் காப்பதோடு, அதிகாரக் கரங்களிலிருந்து புத்தகங்களைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணரலாம் என்று நாவல் அறிமுகக் கட்டுரைகள் கூறுகின்றன.

Slaughterhouse Five: Author's Intentions vs. Audience Insights – My Book  Rants

கதைத்துளி

இணையத்தில் ஏஐ வழியாகத் தேடியதில் கிடைக்கும் கதைச் சுருக்கத்தையும் கருத்தாக்கத்தையும் பார்ப்போம்:

கண் பரிசோதனைத் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவனான பில்லி பில்கிரீம், அமெரிக்க ராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாக இருக்கிறான்.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனிக்கு அனுப்பப்படுகிறான். 1944இல் பதுங்கு குழியில் இருந்த நேரத்தில் ஜெர்மன் சிப்பாய்களால் பிடிக்கப்படுகிறான். மற்ற போர்க் கைதிகளுடன் அவன் டிரெஸ்டன் நகருக்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவர்கள் ‘ஸ்லாட்டர்ஹவுஸ்-ஃபைவ்’ என்ற ஒரு கைவிடப்பட்ட கசாப்புக் கூடத்தில் அடைக்கப்படுகிறார்கள்.

Slaughterhouse-Five - film-authority.com

1945 பிப்ரவரி மாதம் டிரெஸ்டன் நகரம் நேசப்படை குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகிறது. பில்லியும் வேறு சில கைதிகளும் கசாப்புக்க கூடத்தின் சுரங்க அறையில் இருந்ததால் உயிர் பிழைக்கிறார்கள். அப்போதுதான் முதலில் குறிப்பிட்ட அந்தக் கழிப்பறையைப் பார்க்கிறார்கள். அந்த நிகழ்வுகளின் பயங்கரமும் இடிபடாத கழிப்பறைக் காட்சியும் அவன் மனதில் ஆழமான காயத்தையும் குழப்பமான எண்ணங்களையும் ஏற்படுத்துகின்றன.

கதை பின்னர் அறிவியல் கற்பனைக்குள் நுழைகிறது. பில்லி பில்கிரிம் காலவெளியில் “சிக்கிக் கொள்கிறான்”. அவனால் தனது வாழ்க்கையின் எந்த நேரத்திற்கும் – பிறப்பு, போர் அனுபவங்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகள், எதிர்காலத்தில் அவனைக் கடத்திச் செல்லும் டிரால்ஃபாமடோர் என்ற வேற்றுக் கோள்வாசிகள் என்று கட்டுப்பாடின்றி பயணிக்க முடிகிறது. கதையின் இந்த கால ஒழுங்கற்ற தன்மை போரின் அதிர்ச்சியையும், நினைவுகளின் பன்முகக் கூறுகளையும் பிரதிபலிக்கிறது.

SLAUGHTERHOUSE-FIVE Graphic Novel to Be Released This Year! - Nerdist

மனித இனமல்லாத, அறிவுக் கூர்மையுடன் உள்ள டிரால்ஃபாமடோர் கோள்வாசிகள் காலத்தை ஒரு நேர்கோடாகப் பார்க்காமல், ஒரே நேரத்தில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கக் கூடியவர்களாக இருப்பதை அறிகிறான். அவர்கள் மரணத்தை ஒரு முடிவாகக் கருதுவதில்லை, மாறாக ஒரு மோசமான பொழுது, அவ்வளவுதான் என்று நினைக்கிறார்கள். “இது இப்படித்தான் நடக்கும்” என்று அவர்கள் திரும்பத் திரும்பப் பேசுகிறார்கள். இந்தச் சொற்றொடர் மரணத்தையும், தவிர்க்க முடியாததாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையைக் காட்டுகிறது. அந்த மனநிலை பில்லிக்கும் ஏற்பட்டு, வாழ்க்கையை இயல்பாக ஏற்றுக்கொள்கிறான். இயல்பான வாழ்க்கைக்கு எதிரியாகப் போர்களைப் பார்க்கிறான்.

நாவல் பில்லியின் வாழ்க்கையின் பல்வேறு காலகட்டங்களில் முன்னும் பின்னும் நகர்கிறது. நாம் அவனுடைய குழந்தைப் பருவம், விரும்பித் தேர்ந்தேடுக்காமல் வாழ்க்கை வசதிகளுக்காகச் செய்துகொள்ளும் திருமணம், அதன் மூலம் கிடைக்கிற கண் பரிசோதகர் வேலை ஆகியவற்றைப் பார்க்கிறோம். போருக்குப் பிறகு அவனுடன் நாமும் காலச்சுழலில் சிக்கி எதிர்காலத்திற்குச் சென்று மாறுபட்ட வேற்றுக்கோள்வாசிகளுடனான அனுபவங்களைப் பெறுகிறோம். ஒரே நீரோட்டமாக அமையாத கதை உத்தி போரின் அபத்தத்தையும், மனித எண்ணங்களின் குழப்பத்தையும் வாசகர்களுக்கு எடுத்துக்கூறுகிறது.

போர் எதிர்ப்பு நாவலாக மட்டுமல்லாமல், நினைவுகள், அதிர்ச்சி, எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டபடிதான் நிகழ்கின்றன என்று கருதும் வேற்றுக்கோள்வாசிகளை அறிமுகப்படுத்தி, விதித் தத்துவம் பற்றிப் பேச விட்டு, பின்னர் அதை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இறுதியில் புதிய மாற்றங்களை நிகழ்த்தும் மனித முயற்சிகளை உயர்த்திப் பிடிக்கிறது. சுதந்திர வேட்கை போன்ற பெரிய கேள்விகளையும் ஆராய்கிறது.

நாவலுக்குப் பாராட்டு, படத்திற்கு விருது

Exploring Vonnegut and “Slaughterhouse-Five” | Roger Williams University

இத்தனை சிறப்புகள் இருப்பினும் இந்த நாவல் குறிப்பிடத்தக்க பெரிய விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் திரைப்படமாக வந்து கேன்ஸ் திரைப்பட விழா, ஹ்யூகோ, சாட்டர்ன் ஆகிய குறிப்பான விருதுகளைக் கைப்பற்ற்றியது. படக்கதைப் புத்தகமாகவும் வந்து சிறார்களிடமும் இளையோர்களிடமும் சென்றது.

குர்ட் வோன்னேகாட் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக இணைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க கலை மற்றும் இலக்கிய அகாடமி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போர் சூழ் உலகாக இருக்கிற, போர் மோகப் பேச்சுகள் ஒலிக்கிற நிலையில் இந்த நாவல் பற்றிய தகவல் தற்செயலாகக் கண்ணில் பட்டது.உடனே பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. தெரிந்துகொள்ளவும், தெரிந்துகொண்டதை சக மனிதர்களுக்குக் கதையாகச் சொல்லவும் வாழ்க்கை எத்தனை அனுபவங்களைக் குவித்து வைத்திருக்கிறது!


https://bookday.in/a-novel-that-was-thrown-into-the-trash-for-describing-the-horrors-and-absurdities-of-war-article-written-by-a-kumaresan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 12 | தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude)

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

தவறுகளைத் திருத்திக்கொள்ளாத தலைமுறைகளின் கதை

– அ. குமரேசன்

பெருந்தொழில் நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம், உழைப்புச் சுரண்டல், போர், அரசியல் கொந்தளிப்புகள் ஆகிய காரணங்களால் ஆட்டுவிக்கப்படும் ஒரு நகரத்து மக்களின் நூறாண்டு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது, ஸ்பானிஷ் மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல். கல்வித்துறையினர் “இலக்கியக் குப்பை” என்று தள்ளிவைத்தனர், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் “கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்து அந்தப் புத்தகம் நீக்கப்பட்டது. மோசமான சொல்லாடல்கள், பாலியல் சித்தரிப்புகள் என்றெல்லாம் கூறி அந்த நாவலைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. ஆனால் தனிமைப்படுத்தும் முயற்சிகளை மீறி தனித்து நிற்கிறது “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude).

கொலம்பியா நாட்டின் கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez 1927–2014) எழுதிய இந்தப் புத்தகம் 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஒரு கற்பனை நகரத்தில், ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை சந்திக்க வைக்கிற இந்நாவல் “மாய மெய்யியல்” உத்தியில் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இன்று மதிக்கப்படுகிறது.

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

மனிதர்களின் தனிமை, வரலாற்றின் சுழற்சி ஆகிய கருப்பொருள்களை ஆராய்ந்து, மெய்யியலின் அழகிய கூறுகளை இணைக்கிற நாவல், விதியை மாற்ற முடியாது என்ற நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறது என்ற விமர்சனம் கூட எழுந்தது. நாவல் என்னதான் சொல்கிறது?

கற்பனை நகரம்

ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியா, அவரது இணையர் உர்சுலா இகுவாரன் இருவரும் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியேறி மகோண்டோ என்ற புதிய நகரத்தைக் கட்டமைக்கின்றனர். தனிமையான சொர்க்கம் என்று சொல்லத் தக்கதாக இருந்த அந்த நகரத்தை ஒரு தனியார் நிறுவனத்தின் சுரண்டல்கள், உள்நாட்டுப் போர்கள், அரசியல் ஏற்ற இறக்கங்கள் ஆகியவை ஆழமாகப் பாதிக்கின்றன. புயேண்டியா குடும்பம் இயல்பான காதல், உறவு, இன்பம், சோகம் என எதிர்கொள்வதோடு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் அனுபவிக்கிறது. குறியீடுகளால் நிறைந்துள்ள நாவலில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட விதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

புயேண்டியா குடும்ப உறுப்பினர்கள், பலர் ஒரே விதமான பெயர்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் முன்னோர்களின் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், அந்தத் தவறுகளின் விளைவுகளும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. இது வரலாற்றின் சுழற்சி முறையை வலுப்படுத்துகிறது.

சுதந்திரமாக உலகெங்கும் சுற்றுகிற ஜிப்ஸி (நாடோடி) இனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அறிவியல் ஞானம் கொண்டவரான மெல்குயாடஸ் என்ற கலகலப்பான மனிதரின் தலைமையில் அடிக்கடி அந்த நகரத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வேதியியல் புதுமைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறார்கள், இது ஜோஸ் ஆர்காடியோ புயேண்டியாவை கவர்ந்திழுக்கிறது. மெல்குடயாஸ் ஒரு மர்ம மனிதராகவும், ரகசியக் குறிப்புகளாக ஏதோ எழுதிவைக்கிறார்.

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

புயேண்டியா இணையரின் மகன் ஜோஸ் ஆர்காடியோ வலிமையானவன் ஆனால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுகிறவன். மற்றொரு மகன் ஆரேலியானோ நிதானமானவன், ஆனால் புதிரானவன். இவன் பின்னர் அரசியல் கிளர்ச்சியில் பங்கேற்று தலைமைப் பொறுப்புக்கு வருகிறான். மகோண்டா நகரம் அரசியல் மோதல்களின் களமாகிறது. வியக்கத்தக்க மாற்றங்களுக்கும் உள்ளாகிறது.

நகரத்திற்கு ஒரு பெரிய வாழைப்பழ நிறுவனம் வருகிறது. விவசாயிகளிடமிருந்து வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து எந்திரங்களின் மூலம் பதப்படுத்தி, பல்வேறு பொருள்களையும தயாரிக்கிற அந்த நிறுவனம் நவீனமயமாக்கலோடு, அப்பட்டமான உழைப்புச் சுரண்டலிலும் இறங்குகிறது. ஆட்சி நிர்வாகம் அதற்கு ஒத்துழைக்கிறது. கொந்தளிக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அந்தப் போராட்டத்தின்போது ஒரு படுகொலை நடக்கிறது. நிறுவன உரிமையாளரின் செல்வாக்கால் அந்தக் கொலை பதிவிலிருந்தே நீக்கப்படுகிறது. இந்த நிகழ்வுப் போக்குகள் நகரத்தின் குழப்பத்தையும் வீழ்ச்சியையும் குறிக்கின்றன.

நகரத்தையே உருவாக்கிய புயேண்டியா குடும்பத்தின் தலைமுறைகள், புதிய அணுகுமுறைகள் இல்லாதவர்களாகப் பழைய தவறுகளைத் தொடர்கிறார்கள், அழிவைச் சந்திக்கிறார்கள். எஞ்சியிருக்கும் புயேண்டியா அந்த ஜிப்ஸி தலைவர் மெல்குயாடஸ் ரகசியமாக எழுதிவைத்திருந்த கையெழுத்துப் பிரதியை எடுத்து, புதிரான குறியீடுகளுக்குப் பொருள் கண்டுபிடிக்கிறான். அதில் தன் குடும்பத்தின் அழிவு குறித்து முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறான். தலைவிதி போல எழுதப்பட்டிருப்பது பற்றிய யோசனையோடு படித்துக்கொண்டிருக்கும்போதே புயல் தாக்குகிறது. ஊரை முற்றிலுமாகக் குலைத்துப் போடுகிறது.

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

ஒவ்வொரு தலைமுறையும் மகோண்டோவை எவ்வாறு பாதிக்கிறது என்று நாவல் சித்தரிக்கிறது. நகரம் உருவாக்கப்பட்ட லட்சியத்திலிருந்து அது முடிந்து போகும் சோகம் வரையிலான காலத்தின் ஓட்டமே கதையாகிறது. கதாபாத்திரங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா, தலைவிதித் தத்துவத்தை நாவல் போதிக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. ஆனால், மாற்றமே இல்லாமல் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாகச் செயல்படுகிறபோது அடுத்தடுத்த தலைமுறைகள் ஒரே மாதிரியான முடிவுகளை எதிர்கொள்ளத்தானே வேண்டியிருக்கும், அதை ஒருவர் கணித்து எழுதியிருப்பது வழக்கமான தலைவிதி நம்பிக்கையாகாது என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட புறச்சூழல்கள் தனி மனிதர்களின் காதல் உறவுகளைக் கூடச் சீர்குலைக்கின்றன; பல கதாபாத்திரங்களைத் தனிமைக்குக் கொண்டு செல்கின்றன; விதிப்படி நடப்பது போலக் காட்சியளித்து, நுட்பமான முறையில் மனிதச் செயல்களே எதையும் தீர்மானிக்கின்றன என்றும், மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றன என்றும் விளக்கமளிக்கிறார்கள்.

நாவலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் காரணம், உழைப்புச் சுரண்டலையும், பாரம்பரியத்தின் பெயரால் தொடரும் பழமைப் போக்குகளையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான் என்ற கருத்தும் பகிரப்பட்டிருக்கிறது.

முன்னோடி

நாவலின் படைப்பாளி கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் உண்மை நடப்புகளையும், கற்பனை வளர்ச்சிகளையும் இணைக்கிற மாய மெய்யியல் படைப்பாக்க உத்தியின் முன்னோடிகளில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவருடைய இந்த நாவல் பன்னாட்டு அளவில் பாராட்டுகளைப் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பெருமிதத்திற்குரிய படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. “காலரா காலத்தில் காதல்” (Love in the Time of Cholera –1985) “ஒரு மரண முன்னறிவிப்பின் காலவரிசை” (Chronicle of a Death Foretold – 1985) உள்ளிட்ட நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

லத்தீன் அமெரிக்காவின் வாழ்க்கையையும் சிக்கல்களையும் பிரதிபலிக்கும் நாவல்கள், சிறுகதைகளுக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1982 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்டது. அமெரிக்காவில் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்குக் கல்வி நிறுவனங்கள் தடைவிதித்ததை எதிர்த்து ஆங்கில ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். பின்னர் நாவல் நூலகங்களுக்குள் வந்தது.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எதிர்ப்புக்கு உள்ளானதன் பின்னணியில் அவரது சோசலிசக் கருத்துகளும், கியூபா தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பும் இருந்தன. அமெரிக்காவிற்குச் செல்ல முயன்றபோது அவருக்கு விசா மறுக்கப்பட்டது.

ஓடிடி திரையில்

கேப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) - “தனிமையின் ஒரு நூறு ஆண்டுகள்” (One Hundred Years of Solitude) நாவல்

இந்த புத்தகத்திற்கு பெரிய இலக்கிய விருது எதுவும் கிடைக்கவில்லை என்றாலும். 2007இல் நடந்த ஸ்பானிஷ் மாநாட்டில் இது அந்த மொழியின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இலக்கிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நாவல் 46 மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. உலகளவில் 5 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகியுள்ளன.

“தனிமையின் நூறாண்டுகள்” ஸ்பானிஷ் மொழியில் வலைத் தொடராகத் தயாரிக்கப்பட்டு, ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன், சென்ற ஆண்டிலிருந்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. கவிதையழகோடு உருவாகியுள்ளதாகப் பாராட்டப்படும் இந்தத் தொடர் மார்க்வெஸ் குடும்பத்தினரின் ஆதரவுடன் படமாக்கப்பட்டுள்ளது.

https://bookday.in/books-beyond-obstacles-gabriel-garcia-marquez-one-hundred-years-of-solitude-book-based-article-written-by-a-kumaresan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –13 | போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய நாவல் ‘கேட்ச்-22’ (Catch-22) 

– அ. குமரேசன்

போர் மீது ஒரு வசீகரம் கட்டப்படுகிற காலக்கட்டம் இது. உலகின் பல பகுதிகளிலும் போர்க் கூச்சல்கள் செவிகளைத் துளைக்கின்றன. இந்தியா–பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணிந்ததில் இருநாட்டு மக்களும் நிம்மதியடைகிறார்கள். அதற்குள் முடிந்துவிட்டதே என்று ஆதங்கப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். போரில் ஏதாவது அறிவுடைமை இருக்கிறதா என்று கேட்க வைக்கிறது, 1961ஆம் ஆண்டில் வெளியான ‘கேட்ச்–22’ என்ற நாவல்.

‘கேட்ச்-22’ (Catch-22) (பிடி–22) என்றால் என்ன? தப்பிக்க முடியாத, ஒரு சிக்கலிலிருந்து தப்புவதற்கான முயற்சியே மேலும் சிக்கல்களைக் கொண்டுவரும் இக்கட்டான நிலைமையைக் குறிப்பிடுவதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. “அவர்கள் கேட்ச்–22 நிலைமையில் மாட்டிக்கொண்டார்கள்” –இப்படி.

சுவையான தகவல் என்னவென்றால், கதையை எழுதிய ஜோசப் ஹெல்லர் (1923–1999), ஏற்கெனவே மக்கள் புழங்கிக்கொண்டிருந்த சொல்லைத் தனது நாவலுக்குப் பயன்படுத்தவில்லை, மாறாக அந்த நாவலில் வரும் சொல் மக்களிடையே புழக்கத்திற்கு வந்துவிட்டது!

விமானப் படையில் ‘கேட்ச்-22’ (Catch-22) என்றொரு விதி இருப்பதாக நாவல் சொல்கிறது. அதாவது, படையில் பணி புரிகிறபோது ஒரு விமானியின் மனநலம் குன்றிவிட்டால் அவர் தன்னை விடுவிக்குமாறு விண்ணப்பிக்கலாம். ஆனால், “பிடி–22” விதியின்படி மனநலம் குன்றிய ஒருவரால் அதை உணர்ந்து அப்படிக் கோர இயலாது, அவர் அப்படிக் கோருவதே அவர் மனநலத்தோடு இருப்பதால்தான், ஆகவே விண்ணப்பம் நிராகரிக்கப்படும்!

போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) ‘கேட்ச்-22’ (Catch-22 Novel) என்ற நாவல் பற்றிய கட்டுரை

“தேசவிரோத புத்தகம்”!

வேடிக்கையான இந்த வேதனை நிலைமையை வைத்து, அல்லது வேதனையான இந்த வேடிக்கை நிலைமையை வைத்து நாவலைப் புனைந்திருக்கிறார் ஹெல்லர். ஆம், வைத்துச் செய்திருக்கிறார்!

ஒருபுறம் அரசுகளால் போர்களில் இறக்கிவிடப்படும் படைவீரர்களோடு பொதுமக்களும் பேரிழப்புகளை எதிர்கொள்கிறார்கள். இன்னொருபுறம் ஆயுதத் தயாரிப்பு முதலாளிகளும் ஊழல் பேர்வழிகளும் ஆதாயம் அடைகிறார்கள். இந்த நிலைமையை எடுத்துக்காட்டுகிற நாவல் அப்படியே போகிற போக்கில், இதையெல்லாம் தடுத்து மக்களைக் காப்பாற்ற முடியாத கடவுள் கையாலாகாதவர் என்றும் சாடுகிறது.

இதெல்லாம் போதாதா? தேசப்பற்றுக்கு எதிராகப் பேசுகிறது, அமெரிக்க அரசின் போர் நடவடிக்கைகளைப் பகடி செய்கிறது, போர் சார்ந்த தொழில்துறையை இழிவுபடுத்துகிறது, படை அதிகாரிகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது, ராணுவப் பணிக்கு வர விரும்பும் இளைய தலைமுறையினரிடையே பாதுகாப்புத் துறை பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புகிறது, கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தி ஒழுக்க வாழ்வைச் சீர்குலைக்கிறது என்று கிளம்பிவிட்டார்கள். பல பள்ளி நூலகங்களின் அடுக்கங்களிலிருந்து புத்தகம் அப்புறப்படுத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பையும், கருத்தாளர்களின் கண்டனங்களையும் தொடர்ந்து மறுபடியும் வைக்கப்பட்டது.

நாவலுக்குள்…

இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியில் அமைக்கப்பட்ட அமெரிக்க விமானப்படைத் தளத்தில் விமானியாக இருப்பவன் யோசாரியன். தொடர்ந்து போர் விமானங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயம். ஆபத்தான அந்தப் பணிகளைத் தவிர்க்கப் பல முயற்சிகளை எடுக்கிறான். தனக்கு மனநலம் குன்றிவிட்டதாகக் கூறி தன்னை விடுவிக்கக் கோருகிறான். ஆனால் அந்த ‘கேட்ச்-22’ (Catch-22) விதி அவனுக்கு முட்டுக்கட்டை போடுகிறது. ஆகவே, நாள்பட்ட, கடுமையான ஈரல் சீர்குலைவு எனக் கூறி ராணுவ மருத்துவமனையில் சேர்கிறான்.

போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) ‘கேட்ச்-22’ (Catch-22 Novel) என்ற நாவல் பற்றிய கட்டுரை

உயரதிகாரிகள் படைவீரர்களின் உயிர் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பதையும், தங்களுடைய பதவி உயர்வு உள்ளிட்ட நோக்கங்களுடன் வீரர்களைப் பலிகொடுக்க அவர்கள் துணிவதையும் காண்கிறான். கர்னல் கேத்கார்ட் என்ற அதிகாரி, தனது பிரிவின் வீரர்களை, வேறு எந்த பிரிவையும் விடப் பல மடங்கு அதிகமான முறை தாக்குதல் விமானங்களைச் செலுத்துவதற்குக் கட்டாயப்படுத்துகிறான். அரசாங்கத்திடம் தன்னை ஒரு மகாவீரனாகக் காட்டிக்கொள்வதற்காக, வீரர்கள் வீடு திரும்ப முடியாதபடி, ஒரு சுற்றுப்பணியை முடிப்பதற்கு ஓட்டியாக வேண்டிய விமானங்களின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்த்துகிறான்.

யோசாரியன் ஆகாயச் சண்டைகளையும் நண்பர்கள் உள்ளிட்ட சக வீரர்களின் மரணங்களையும் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான்; ஒவ்வொரு பணி தரப்படும்போதும் எதிரிப்படையால் கொல்லப்படலாம் என்று அஞ்சுகிறான். அவனுடைய கோழைத்தனம் வெளிப்படுகிறது. நாவலின் போக்கில் செல்லச்செல்ல, அவன் கோழையல்ல, துணிவு மிக்கவன், கட்டுப்பாடு மிக்கவன் என்று தெரியவருகிறது. அவன் கவலைப்பட்டது எதிரிகளின் வலிமையைப் பற்றியல்ல, சொந்த நாட்டு ராணுவக் கெடுபிடிகள் பற்றித்தான்.

கதாபாத்திரங்களுக்கிடையில் துண்டாடப்பட்ட கதை போல, சில அத்தியாயங்களில் ஒற்றைக் கால வரிசைப்படி நகர்கிற கதை, மற்ற அத்தியாயங்களில் நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்குமாக மாறிமாறிப் பயணிக்கிறது. போர்க்காலத்தின் நியாயமான அச்சம் விமானிகள் எதிர்கொள்ளும் கடும் அதிர்ச்சிகளின் மூலமாக வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறது. தாக்குதல்களையும் மனித உயிர்கள் கொல்லப்படுவதையும் போற்றுதலுக்குரிய வீரச்செயலாக அல்லாமல், கவலைக்குரிய சோகச் சூழலாகச் சித்தரிக்கிறது என்று நூல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) ‘கேட்ச்-22’ (Catch-22 Novel) என்ற நாவல் பற்றிய கட்டுரை

பாதுகாப்பற்ற இத்தாலிய மலை கிராமத்தின் மீது அர்த்தமற்ற தாக்குதலுடன் திகில் தொடங்குகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் விரக்தி, போரில் மனிதர்கள் காணாமல் போவது என்று மேலேறும் நாவல், ஒரு வெகுளித்தனமான இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதோடு உச்சக்கட்டத்தை அடைகிறது.

நாவல் பல்வேறு கோணங்களின் போர்க்களத் துயரங்களைக் காட்டினாலும், செத்துவிட்டான் என்று நினைத்த நெருங்கிய நண்பனான ஓர், சாகசமான முறையில் வேறுநாட்டுக்குச் சென்றதை அறிந்து மகிழும் யோசாரின், தானும் வெளியேறி ஓடுவதாக இன்பியல் காட்சியுடனேயே நிறைவடைகிறது.

போர் வணிகமும் கடவுளும்

படையின் உணவுப் பிரிவு அதிகாரி மிலோ. போர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஒரு வணிகப் பேரரசையே கட்டுகிற மிலோ உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தளவாடங்களையும் விமானங்களையும் கூட வாங்கி விற்கிற அளவுக்குப் பணம் குவிக்கிறான். அது மட்டுமல்ல, வீரர்களுக்குத் தேசப்பற்றுடன் எதிரிகளோடு மோதுவதற்கு ஊக்கமளித்துவிட்டு, எதிரி நாட்டுடனேயே கூட தன் வணிகத்தை விரிவுபடுத்துகிறான். ஒரு கட்டத்தில் சொந்தப் படைப்பிரிவுத் தளத்தின் மீதே குண்டு வீசுவதற்குத் தயங்காமல் ஏற்பாடு செய்கிறான். லாபம்தான் குறி என்றான பின் தேசமாவது, பற்றாவது! மிலோ மூலமாக, போர் சார்ந்த பொருள்கள் தயாரிப்பின் வணிகமய வலைப் பின்னலை அறிய முடிகிறது என்று ஒரு வாசகர் பதிவிட்டிருக்கிறார். லாபத்திற்கான பீடத்தில் பலியிடப்படுகிறவர்கள் உயிருக்கு அஞ்சாத வீரர்களும், சண்டையில் மாட்டிக்கொள்ளும் பொதுமக்களும்.

நடப்பதையெல்லாம் கண்டு மனம் நோகிற யோசாரினிடம் யாரோ கடவுளின் சித்தம் இது என்று சொல்கிறார்கள். கடவுளின் செயல்கள் சாமானியமாகப் புரிந்துகொள்ள முடியாதவையாகப் புதிராகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள். ஆவேசமடையும் யோசாரின் இவ்வாறு பேசுகிறான்: “கடவுள் புதிரான வழிகளில் செயல்படுகிறார் என்று என்னிடம் சொல்லாதீர்கள். அதில் புதிர் ஒன்றுமில்லை. கடவுள் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் விளையாடுகிறாராக இருக்கும் நம்மை முற்றிலும் மறந்துவிட்டாராக இருக்கும் – கிராமத்தில் ஒரு மந்தமான, குழப்பமான, அறிவில்லாத, ஆணவம் பிடித்த, முரட்டுத்தனமான பண்ணையார் போல.”

போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) ‘கேட்ச்-22’ (Catch-22 Novel) என்ற நாவல் பற்றிய கட்டுரை

தன்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறவர்களிடம் தொடர்ந்து பேசுகிறான்: “நல்ல கடவுள் தனது படைப்பின் உடலில் சளி, பல் சிதைவு போன்ற தொந்தரவுகளை ஏன் சேர்க்க வேண்டும்? வயதானவர்களுக்கு மலத்தை கட்டுப்படுத்தும் சக்தியை அவர் ஏன் பறித்தார்? அவர் ஏன் வலியை உருவாக்கினார்? ஓ, வலியின் வாயிலாகவே ஆபத்தைப் பற்றி எச்சரிக்கிறாரா? அதற்குப் பதிலாக அவர் ஏன் ஓர் அழைப்பு மணியைப் பொருத்தியிருக்க முடியாது? ஆபத்து வரும்போது அவருடைய வானக கீதங்களில் ஒன்றை ஏன் ஒலிக்கச் செய்யக்கூடாது? ஒவ்வொருவரின் நெற்றியின் நடுவில்நீலம் சிவப்பு நியான் விளக்குகள் எரிந்து எச்சரிக்கிற அமைப்பை ஏன் பயன்படுத்தியிருக்க முடியாது? ஒரு ஜூக்பாக்ஸ் தயாரிப்பாளர் கூட இதைச் செய்திருக்க முடியும் என்றால் கடவுளால் ஏன் முடியவில்லை? ஒரு வேலையை சரியாகச் செய்ய அவருக்கு இருந்த வாய்ப்பையும் சக்தியையும் கருத்தில் கொண்டு பார்க்கிறபோது, அதற்கு பதிலாக அவர் உருவாக்கிய முட்டாள்தனமான, அருவருப்பான குழப்பங்கள்தான் கண்ணில் படுகின்றன. அவருடைய முழுமையான திறமையின்மை மலைத்துப்போய் நிற்க வைக்கிறது. …”

தப்பியோடிய யோசாரின் போரால் சிதைந்த இத்தாலிய நகரம் ஒன்றில் நடந்து செல்லும் காட்சியைபற்றி இவ்வாறு எழுதுகிறார் ஜோசப் ஹெல்லர்: “யோசாரியன் அங்கிருந்து விலகிச் செல்ல வேகத்தை அதிகரித்தான், கிட்டத்தட்ட ஓடினான். இரவு திகில்களால் நிறைந்திருந்தது. மேலும், கிறிஸ்து உலகெங்கும் நடந்து சென்றபோது எப்படி உணர்ந்திருப்பார் என்று அவன் நினைத்துப் பார்த்தான் – பித்தர்கள் நிறைந்த மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவர் நடப்பது போல, கொள்ளையர்கள் நிறைந்த சிறைக்குள் பாதிக்கப்பட்ட ஒருவன் நடப்பது போல! ஒருவரும் எஞ்சியிராத ஊரில் ஒரு தொழுநோயாளி எதிரே வந்தால் கூட எவ்வளவு வரவேற்புக்குரியவராக இருப்பார்!”

ஜோசப் ஹெல்லர்

போர்களின் மறுபக்கத்தைக் கூண்டில் நிறுத்திய ஜோசப் ஹெல்லர் (Joseph Heller) ‘கேட்ச்-22’ (Catch-22 Novel) என்ற நாவல் பற்றிய கட்டுரை

ஜோசப் ஹெல்லர் (Joseph Heller)

நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளினில் கான் ஐலேண்டில் ரஷ்யாவிலிருந்து வந்த ஏழை யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் எழுத்தாளர் ஜோசப் ஹெல்லர். இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படையில் குண்டுவீச்சு விமானியாகப் பணியாற்றியவர். போருக்குப் பிறகு ஆங்கிலம் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகவும், ஒரு விளம்பர நிறுவனத்தில் படியெடுப்பு எழுத்தராகவும் வேலை செய்தவர். “சம்திங் ஹேப்பண்டு”, “குட் அஸ் காட்”, “குளோசிங் டைம்” உள்ளிட்ட அவரது நாவல்களும் புகழ்பெற்றவை. அத்தனை புத்தகங்களும் அரசியல், சமூக நிலைமைகளையும் அதிகாரத்துவத்தையும் எள்ளி நகையாடுபவைதான் என்று தெரியவருகிறது.

தொடக்கத்தில் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட ‘கேட்ச்-22’ (Catch-22) பின்னர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதன் அடுத்த பாகமாகவே “குளோசிங் டைம்” நாவலை எழுதினார் என்று கூறப்படுகிறது.

 புத்தகம் வெளியானபோது விற்பனை மந்தமாகவே இருந்தது. இன்று, உலகில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது. திரைப்படமாகவும், வலைத்தொடராகவும் வந்து ஏராளமானோரிடம் சென்றடைந்திருக்கிறது..

https://bookday.in/books-beyond-obstacles-13-joseph-hellers-novel-catch-22-based-article-written-by-a-kumaresan/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘யுலிசிஸ்’ (Ulysses) – புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

Bookday20/05/2025

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) - யுலிசிஸ் (Ulysses) - புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

அ. குமரேசன்

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகப் போற்றப்படுகிற, நவீனத்துவ இலக்கிய முன்னோடியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிற நாவல் 1922ஆம் ஆண்டில் வெளியான ‘யுலிசிஸ்(Ulysses)., அந்நாளிலேயே புராணக் கதாபாத்திரத்தை வைத்து மாற்றுச் சிந்தனை உள்ளிட்ட புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தியதற்காகப் பாராட்டுகளைப் பெற்ற படைப்பு. அயர்லாந்து நாட்டின் ஜேம்ஸ் ஜாய்ஸ் – James Joyce (1882–1941) எழுதிய இந்தக் கதை, தொடக்கத்தில் கடுமையான முரண் விமர்சனங்களைச் சந்தித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இலக்கியவாதிகளின் கருத்துகளைத் தொடர்ந்து மற்ற நாடுகளில் படிப்படியாகத் தடை விலக்கப்பட்டது, அமெரிக்காவில் பதிப்பாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1934இல் தடையை நீக்கியது.

முரண்களாகக் கூறப்பட்டவை – வழக்கமான நாவல்களிலிருந்து மாறுபட்ட நடை, ஆகவே வாசிப்பதற்கு எளிதாக இல்லை. திடீர்த் திடீரென்று தத்துவம், உளவியல், அறிவியல், வரலாறு, மொழி இலக்கணம் என்று எங்கெங்கோ போகிறது, ஆகவே கதை என்னதான் சொல்கிறது எனப் புரியவில்லை. தடைக்கான காரணங்களாகக் கூறப்பட்டவை –பாலியல் உறவுகளைச் சித்தரிக்கிறது, அது அன்றைய சமூகக் கருத்துகளுடன் முரண்படுகிறது. ஒரு பெண்ணின் பாலியல் எண்ணங்களை வெளிப்படையாகப் பேசுகிறது, அது ஒழுக்க நெறிகளை மீறுகிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) - யுலிசிஸ் (Ulysses) - புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) & யுலிசிஸ் (Ulysses)

இந்த எதிர்ப்புகள் நியாயமற்றவை என்று எழுத்தாளரும், கதையின் புதுமையை ரசித்துக் கருத்தை ஏற்றுக்கொண்ட இலக்கியவாதிகளும் நிறையவே வாதிட வேண்டியிருந்தது. அதில் வெற்றியும் கிடைத்தது. நாவல் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சுவையானவை.

மூன்று பாகங்களாக வந்த இந்த நாவலில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. அத்தியாயம் என்று சொல்வது தவறு, ஏனென்றால் புத்தகத்தில் காட்சி (எபிசோட்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கப் பதிப்புகளில், காட்சிகளுக்குத் தலைப்புகளோ, வரிசை எண்களோ தரப்படவில்லை. ஆனால் ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவது வெவ்வேறு முறைகளில் உணர்த்தப்பட்டிருக்கும். ஒரு காட்சி உரைநடையாக இருக்கும், இன்னொரு காட்சி நாடக உரையாடலாக இருக்கும், மற்றொரு காட்சி கவிதை வடிவில் இருக்கும், வேறொரு காட்சி சொல் விளையாட்டுகளோடு ஆங்கில மொழியின் வரலாறு பற்றிப் பேசும்! பல இடங்களில் வாக்கிய அமைப்புகள் கரடு முரடாக இருக்கும். இதையெல்லாம் ஜேம்ஸ் ஜாய்ஸ் திட்டமிட்டே செய்திருந்தார்.

மூவரின் கதை

1904 ஜூன் 16 , அயர்லாந்து தலைநகர் டப்ளின். அந்த ஒரு நாளில் நடைபெறுகிற, குறிப்பாக மூன்று பேரின் அனுபவங்களும் சிந்தனைகளுமே கதை. பத்திரிகை விளம்பர முகவரான லியோபோல்ட் ப்ளூம் அதன் விற்பனையாளர். அவரது மனைவி மோல்லி ஒரு பாடகர். இளம் ஆசிரியரான ஸ்டீபன் டெடலஸ் ஓர் எழுத்தாளர்.
நகரத்தின் ஒரு கோபுரக் கட்டடத்தில் நண்பர்களோடு குடியிருக்கும் ஸ்டீபன் டெலஸ் தனது தாயின் மரணத்தை எண்ணி வருந்துகிறான். நண்பர்கள் அவனைக் கேலி செய்கிறார்கள். பள்ளிக்குச் சென்று வகுப்பில் வரலாற்றுப் பாடம் நடத்தும் ஸடீபன் பின்னர் கடற்கரைக்குச் சென்று தனியாக அமர்ந்து சிந்தனையில் மூழ்குகிறான். தனது தந்தையுடன் நல்ல உறவில் இல்லாத ஸ்டீபன் தனக்கொரு ஞானத் தந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

லியோபோல்ட் ப்ளூம் தனது மனைவிக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுக்கிறார். பிறகு வீட்டிலிருந்து வெளியே வந்து நகரத்தில் சுற்றுகிறார். மனைவிக்கு பிளேசஸ் போய்லான் என்ற, இசைக்குழு மேலாளருடன் தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகம் அவரை அப்படிச் சுற்ற வைக்கிறது. ஆனால், மார்தா கிளிஃபோர்ட் என்ற பெண்ணுக்குப் புனைப் பெயரில் காதல் கடிதங்கள் அனுப்புகிறவரான அவருக்கு, அந்தப் பெண்ணிடமிருந்து கடிதம் வருகிறது. தொழில் சார்ந்தும் நட்பு முறையிலும் பலரோடு உரையாடுகிறார். இன்னொரு பக்கம், தனது மகனை இழந்த துயரத்தில் இருக்கும் அவரும், தனக்கொரு ஞானப் புதல்வன் வேண்டுமென நினைக்கிறார்.

மோல்லிக்கு உண்மையிலேயே போய்லானுடன் தொடர்பு இருக்கிறது. அவருடைய பாலியல் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதது காரணமா அல்லது மிகுதியான வேட்கை கொண்டவரா என்பது வாசகர்களின் கருத்துக்கு விடப்படுகிறது. சிறுவயதில் தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக ஒரு தோழியுடன் பழகியவர் என்று நாவலின் பிற்பகுதியில் தெரியவருகிறது.

ஊரைச் சுற்றி வருகிற ப்ளூம் தனது செயல்கள் பற்றித் தனக்குத் தானே விமர்சித்துக்கொள்கிறார். தனிமை, மனைவியின் மீது சந்தேகம், தானே சந்தேகத்துக்கு உரியவராக நடந்து கொள்வது, மோல்லியின் விருப்பங்கள் பற்றிய மதிப்பீடு, மனசாட்சியின் விசாரணை ஆகியவற்றால் உந்தப்படும் உணர்ச்சி மேலீட்டுடன் அவர் அலைக்கழிக்கப்படுகிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) - யுலிசிஸ் (Ulysses) - புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

ஒரு மதுபானக் கூடத்தில் ப்ளூம், ஸ்டீபன் இருவரும் அறிமுகமாகிறார்கள். ஒருவர்க்கொருவர் பிடித்துப்போக பல சிந்தனைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். தான் தேடுகிற ஞான மகன் ஸ்டீபனாக இருக்கலாம் என்று ப்ளூமும், ஞானத் தந்தை ப்ளூமாக இருக்கலாம் என்று ஸ்டீபனும் நினைத்துக்கொள்கிறார்கள். ஸ்டீபனை ப்ளூம் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தன்னோடு தங்கச் சொல்கிறார்.

ஆயினும் தனது சுதந்திரமான பாதையில் பயணிக்க விரும்பும் ஸ்டீபன் மறுத்துவிட்டு மறுபடி தனிமையில் நகரத்திற்குள் செல்கிறான். ஒருநாள் பழக்கம்தான் என்ற நிலையில் வீட்டில் தங்குகிற அளவுக்கு நெருங்க வேண்டாம் என்ற எண்ணத்தாலோ, மோல்லியின் வெளிப்படைத் தன்மையால் ஏற்பட்ட தயக்கத்தாலோ ஸ்டீபன் அந்த முடிவை எடுத்திருப்பான் என்று வாசகர்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

கடைசிக் காட்சியில், மோல்லியும் ப்ளூமும் சேர்ந்தே படுத்திருக்கிறார்கள். அப்போது மோல்லி தனது கடந்தகால நினைவுகளுக்குள் பயணிக்கிறார். தன்னுரையாடல் வடிவில் அந்த நினைவுகள் வாசகர்களுக்குப் பகிரப்படுகின்றன. தனது பாலியல் வேட்கை, கணவரைப் பற்றிய மதிப்பீடு, அவருடைய பக்குவம், போய்லான் மீதான உடல் சார்ந்த கவர்ச்சி, அதற்கு முன் பல ஆண்களுடன் பழகியது, இளவயதினளாக இருந்தபோது ஒரு நண்பியிடன் தன்பாலின ஈர்ப்பு, திருமணத்திற்கு முன் ப்ளூம் தன்னை அணுகி சேர்ந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தியது, அப்போது நெருக்கமாக இழுத்தணைத்துத் தனது ஒப்புதலை அளித்த விதம்… இப்படியாக அந்தத் தன்னுரையாடல் வெளிப்படுகிறது.

செய்து வைத்தவர்களா?

இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துப்படி – மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்பு இது. கதையின் ஓட்டமே, இயற்கையான பாலியல் விருப்பத்தைச் சார்ந்திருப்பதால் அது பற்றிய சித்தரிப்புகளில் தவறில்லை. மேலும், ஒரு கதாபாத்திரம் என்றால் முழுக்க முழுக்க நல்லவர், அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவர் என வார்க்கப்படுவதிலிருந்த இந்த நாவல் மாறுபடுகிறது. அத்துமீறும் ஆசைகளும் அதைப் பற்றிய சுயவிமர்சனங்களுமாக இயல்பான மனிதர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். ப்ளூம் மனைவியின் மீது ஆத்திரப்படும் வழக்கமான கணவராக இல்லாமல், மோல்லியைப் புரிந்துகொள்ள முயல்வதும், தனது நிலையை மறுசிந்தனைக்கு உட்படுத்துவதும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய உளவியல் நுட்பங்கள்.

மோல்லியின் நினைவோட்டம் ஒரே சீராக இல்லாமல், தொடர்ச்சியாக அமையாமல் ஏறுக்கு மாறாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் தனியாகச் சிந்திக்கிறபோது எழுதிவைத்தது போலத் தொடர்ச்சியாக இருக்காது, ஒன்றைப் பற்றி யோசிக்கிறபோதே இன்னொன்றைப் பற்றிய யோசனை தொற்றிக்கொள்ளும். அதை அலசுகிறபோது தொடர்பே இல்லாத வேறொரு நிகழ்வு நிழலாடும். இதை ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறார்.

அந்த நீண்ட தன்னுரையாடலில் எங்கேயும் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி என எந்த நிறுத்தற்குறியும் இருக்காது. அது வாசிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், அதுவே ஒரு புதிய உத்தியாகவும் அமைந்தது. நினைவுப் பகிர்வில் மோல்லி இடையிடையே “ஆமா” (யெஸ்) என்ற சொல்லை அடிக்கடி சொல்வதாக வரும். “ஆமா… அவன் என்னிடம் நெருங்கி ஆமா அப்படிக் கேட்டான் ஆமா நான் அவனை ஆமா அப்படியே அணைச்சிக்கிட்டேன்…” இப்படி. இந்த “ஆமா” மிகவும் புகழ்பெற்ற சொல்லாக மாறியதாம்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) - யுலிசிஸ் (Ulysses) - புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

ஸ்டீபன் என்னாகிறான்? ப்ளூமும் மோல்லியும் இணக்கமானார்களா? இவ்வாறான பல கேள்விகளுக்கு கதையின் போக்கை வைத்து அவரவர் கண்ணோட்டத்தில் பதில் காண வைக்கிறது நாவல். இதன் மூலம் வாசகர்களைப் படைப்பின் பங்காளியாக்குகிறார் நாவலாசிரியர். தனிமனித சிந்தனையோட்டம், உளவியல் ஆய்வு, நகர வாழ்க்கை என இந்த நாவலை மூன்று கோணங்களில் ஆராயலாம்.

இப்படிப்பட்ட படைப்பு வெளியானபோது தடை செய்யப்பட்டதற்கு அரசியல் காரணம் ஒன்றும் உண்டு. ஸ்டீபன் மதுபானக்கூடத்தில் இருக்கிறபோது, தேசப்பற்று பற்றிய காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. அப்போது அவன் பிரிட்டிஷ் மன்னரைக் கடுமையாக விமர்சிக்கிறான். அயர்லாந்தில் சுதந்திரத்திற்கான கிளர்ச்சி ஏற்பட்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் இந்த விமர்சனம் அரசு மீதான தாக்குதலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காரணத்திற்காகவும் இங்கிலாந்தில் நாவலுக்குத் தடை விதிக்கப்பட்டது.

பிற்காலத்தில் அதே இங்கிலாந்தில் பல நாடகக்குழுக்கள் நாவலை மேடையேற்றியிருக்கின்றன. வானொலி நாடகத் தொடராகவும் ஒலிபரப்பானது. 1967இல் பிரிட்டன்–அமெரிக்க கூட்டுத் தயாரிப்பாக ‘ யுலிசிஸ் (Ulysses) ’ என்ற தலைப்பிலும், 2003இல் அயர்லாந்து–கனடா கூட்டுத் தயாரிப்பில் ‘ப்ளூம்’ என்ற தலைப்பிலும் திரைப்படங்களாக வந்தது. முதல் படம் வணிக அடிப்படையிலும் நல்ல வெற்றியைப் பெற்றது, இரண்டாவது படம் சுமாராகவே போனது.

பெயரிலேயே ஒரு கலகம்

1914இல் டப்ளின் நகர வாழ்க்கையைப் பல வகைகளில் பிரதிபலித்த ‘டப்ளினர்ஸ்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு, 1916இல் தன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ‘எ போர்ட்ரெய்ட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் மேனி’ என்ற நாவல், 1939இல் சிக்கலான மொழி விளையாட்டுக்காகப் பெரிதும் பேசப்படும் ‘ஃபின்னேகன்ஸ் வேக்’ என்ற நாவல் ஆகியவை ஜாய்ஸ்சின் குறிப்பிடத்தக்க இதர சில படைப்புகளாகும். டப்ளின் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –14 | ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) - யுலிசிஸ் (Ulysses) - புறக்கணிக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கிய முன்னோடி!

செவ்வியல் தன்மை, புதுமை முயற்சி, ஒரு காலத்தில் முரணாகப் பார்க்கப்பட்ட கதாபாத்திரங்கள், நுட்பமான அரசியல்–சமூக விமர்சனம், மொழி விளையாட்டுகள், அறிவியலும் வரலாறும் உள்ளிட்ட தேடல்கள், உளவியல் வெளிப்பாடுகள் இவற்றுக்காக இன்றளவும் இலக்கியம் மற்றும் கல்வி வட்டாரங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது ‘ யுலிசிஸ் (Ulysses) ’.

யுலிசிஸ் (Ulysses) கிரேக்கப் புராணக் கதைகளில் வருகிற ஒரு வீரர். ஹோமர் எழுதிய ‘ஒடிஸி’ காவியத்தில், பல சாகசங்களைச் செய்கிற முக்கியமான கதாபாத்திரம். அந்த வீரரின் பெயரை, ஜேம்ஸ் ஜாய்ஸ், எந்தப் பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் அசாத்தியமான சாகசங்களும் இல்லாத ஒரு சராசரி மனிதரான ப்ளூமின் ஒரு நாள் நிகழ்வுகளைக் கூறும் ஒரு நாவலுக்குச் சூட்டியதே கூட பேசுபொருளானது. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை ஒன்றும் சாதாரணமாதல்ல என்று உணர்த்தவே இந்தப் பெயராம்!

https://bookday.in/books-beyond-obstacles-14-james-joyces-ulysses-a-neglected-novel-based-article-written-by-a-kumaresan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் - Wuthering Heights வுதரிங் ஹெய்ட்ஸ் - https://bookday.in/

அ. குமரேசன்

நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் அது. கதையைத் தழுவி இந்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்கள் வந்திருக்கின்றன (கதையைப் படிக்கிறபோது அதே சாயலில் தமிழில் வந்த படங்களும் உங்கள் நினைவுக்கு வரும்). ஆனால், நாவல் வெளியானபோது கடுமையான மூன்று வகை எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஒன்று –அதுவரை வழக்கத்தில் இருந்த நேர்கோட்டு முறையிலிருந்து வெகுவாக விலகிய தனித்துவமான புதிய கதை சொல்லல் நடை படிப்பதற்குக் கடினமாக இருக்கிறது. இரண்டு –வன்முறையையும் பழிவாங்கல் உணர்வையும் நியாயப்படுத்துகிறது. மூன்று –திருச்சபையால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள சமூக நெறிகளை மீறுகிறது.

இந்த எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து, இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் சிறந்ததொரு காவியப் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அந்த நாவல் ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ (மூர்க்கச் சிகரங்கள்). 1847இல் வெளியான இந்த நூலை எழுதியவர் எமிலி பிரான்ட்டே. அவர் எழுதிய முதல் நாவல் மட்டுமல்ல, இதுவே அவருடைய கடைசி நாவலும் கூட. ஆம், ‘எல்லிஸ் பெல்’ என்ற புனைப் பெயரில் எழுதி வந்த அவரது ஒரே நாவல் இதுதான். மற்றபடி அதே புனைப் பெயரில் கவிதைகளும், உலகத்தைப் பற்றிய கருத்துக் குறிப்புகளும் எழுதியிருக்கிறார். 1818இல் பிறந்த எமிலி பிரான்ட்டே ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்றால், அவருடைய இலக்கிய மேதைமையைக் காட்டிய இந்த நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே, 30 வயதில், காசநோய்க்கு பலியாகிவிட்டார்.

Wuthering Heights (Barnes & Noble Leatherbound Classic Collection) eBook : Brontë, Emily: Amazon.in: Kindle Store

நாவலின் மூர்க்கக் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக எழுத்தாளர் தொடர்பான இன்னொரு சுவையான தகவலைத் தெரிந்துகொள்வோம். சகோதரிகளான எமிலி பிரான்ட்டே, சார்லோட் பிரான்ட்டே, ஆன் பிரான்டே மூவருமே எழுத்தாளர்கள். தமிழகக் கல்லூரிகளுக்கும் வந்த ‘ஜேன் அயர்’ நாவலை எழுதியவர் சார்லோட். ‘தி டெனன்ட் ஆஃப் ஒயில்டுஃபெல் ஹால்’ நாவலை வழங்கியவர் ஆன். மற்றுமொரு தகவல் – மூவருமே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

நாவலின் சுருக்கம்

‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கிலாந்தின் யோர்க்‌ஷைர் மூர்ஸ் எனப்படும் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எர்ன்ஷா, லின்டன் என்ற இரண்டு குடும்பங்களின் உறவுகள் பற்றிய கதை. வன்முறைகள் நிறைந்த ஆனால் உணர்வுப்பூர்வமான உறவுகளை அது சித்தரிக்கிறது.

Wuthering Heights | Faber

லாக்வுட் என்ற ஒரு பண்ணைக் குத்தகைதாரரின் அனுபவங்களிலிருந்து தொடங்குகிறது கதை. அவர் த்ரஷ்க்ராஸ் க்ரேன்ஜ் என்ற பண்ணையைக் குத்தகைக்கு எடுக்கிறார். அந்தப் பண்ணையின் உரிமையாளரான ஹீத்கிளிஃப் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள வுதரிங் ஹெய்ட்ஸ் பண்ணை வீட்டில் வசிக்கிறார். சூறாவளி போல் எப்போது வேண்டுமானாலும் கடுமையான காற்று வீசுகிற, எளிதில் நடமாட இயலாத உயரமான மேடுகள் நிறைந்த ஒரு மூர்க்கத்தனமான சூழலில் அந்தப் பண்ணையும் வீடும் இருக்கின்றன. அங்கே செல்கிற லாக்வுட் அந்த விசித்திரமான சூழலால் ஈர்க்கப்படுகிறார். ஆனால் அந்த வீட்டில் உள்ள கேத்தி, படிப்பறிவில்லாத பணியாளர் போல நடந்துகொள்ளும் ஹெர்ட்டன் பணியாளர் ஜோசப் ஆகியோர் லாக்வுட்டுடன் இணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள்.

வெளியே கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த வீட்டிலேயே இரவு தங்குகிற லாக்வுட், தனக்குத் தரப்பட்ட அறையில் இருந்த ஒரு நாட்குறிப்பேட்டைப் படிக்கிறார். அது, அந்த அறையில் முன்பு இருந்தவளும், பண்ணைவீட்டின் முன்னாள் உரிமையாளர் எர்ன்ஷா மகளுமான கேத்தரின் எழுதி வைத்தது. இரவில் கேத்தரின் சன்னலுக்கு வெளியே ஆவியாக வந்து, கதவைத் திறந்துவிடுமாறு கெஞ்சுகிறாள். அலறியடித்து உறக்கத்திலிருந்து எழுகிறார் லாக்வுட். அவருடைய அலறலால் தனது அறையில் இருக்கும் ஹீத்கிளிஃப் உளைச்சலடைகிறார்.

Wuthering Heights' withers on the heath

காலையில் கடும் பனியிலேயே தனது பண்ணைக்குத் திரும்பும் லாக்வுட்டின் உடல்நலம் குன்றிப் படுக்கையில் விழுகிறார். வீட்டைப் பராமரிக்கும் பெண்ணான நெல்லி டீன் அவருக்கு, வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டின் கடந்த காலக் கதையைக் கூறுகிறார்.

அந்தக் கதை முப்பது ஆண்டுகள் பின்னாலிருந்து தொடங்குகிறது. எர்ன்ஷாவின் மகன் ஹிண்ட்லி, மகள் கேத்தரின். ஒருநாள் எர்ன்ஷா நகரத்திலிருந்து ஆதரவற்ற ஒரு சிறுவனைத் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன்தான் ஹீத்கிளிஃப். அவனுடைய பிறப்பு மூலம் தெரியவில்லை, அநேகமாக ஒரு நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறும் எர்ன்ஷா அவனிடம் அன்பு காட்டுகிறார். அது ஹிண்ட்லிக்கு அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் கேத்தரினுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் காட்டிலும் காற்றிலும் சுற்றித் திரிகிறார்கள்.

ஹிண்ட்லி படிப்புக்காக வெளியூர் செல்கிறான். மூன்று ஆண்டுகளில் எர்ன்ஷா இறந்துவிட, அவன் மாளிகையின் உரிமையாளராகிறான். திருமணத்திற்குப் பிறகு ஹிண்ட்லி, அவனுடைய மனைவி பிரான்சஸ் இருவரும் ஹீத்கிளிஃபை மேலும் அவமதிக்கிறார்கள். வேலைக்காரர்களில் ஒருவனாக நடத்துவதுடன் தினமும் மோசமான சொற்களால் வசவுகளை வீசுகிறார்கள்.

த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணை வீட்டில் எட்கர் லிண்டன், அவனுடைய தங்கை இசபெல்லா வாழ்கிறார்கள். கேத்தரினும் ஹீத்கிளிஃபும் அவர்களை சிறுவயதுக் குறுகுறுப்புடன் வேவு பார்க்கிறார்கள். கேத்தரினை நாய் கடித்துவிட, வெளியே வரும் எட்கர் அவளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறான். வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டுக்கு எட்கரும் இசபெல்லாவும் வருகிறார்கள். அங்கே எட்கரும் ஹிண்ட்லியும் சேர்ந்து ஹீத்கிளிஃபை இழிவாகப் பேசிச் சிரிக்கிறார்கள். ஒரு மோதல் ஏற்படுவதைத் தொடர்ந்து, அழுக்கு நிறைந்த, சூடுபடுத்திக்கொள்ளும் வசதி இல்லாத மாடியறையில் தங்கவைக்கப்படுகிறான். அப்போதே அவனுக்குள் இவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடுகிறது.

வயது வளர வளர கேத்தரின் மீது அவன் கொண்ட நட்பு ஆழ்ந்த காதலாக வளர்கிறது.

ஹிண்ட்லி, பிரான்சஸ் இணையருக்கு ஒரு மகன் – ஹேர்டன் – பிறக்கிறான். நீண்ட காலமாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்சஸ் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிடுகிறாள்.

கேத்தரின் சமூகப் பெருமைக்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் எட்கரை மணக்க முடிவு செய்கிறாள். ஆனாலும் அவள் மனம் ஹீத்கிளிஃபையே நேசிக்கிறது. இதை அவள் நெல்லியிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு உதவ விரும்புவதாகக் கூறும் அவள், ஆனால் அவனுடைய தாழ்ந்த சமூக நிலை காரணமாக அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதவளாக இருப்பதையும் தெரிவிக்கிறாள். அவனைப் போன்றவனுடன் பழக வேண்டாம் என்கிறாள் நெல்லி. அறைக்கு வெளியே இருந்து அரைகுறையாக இந்த உரையாடலைக் கேட்கும் ஹீத்கிளிஃப் ஏக்கமும் ஆத்திரமுமாக அந்த ஊரிலிருந்தே வெளியேறுகிறான். கேத்தரின்–எட்கர் இருவருக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அவள் பெயர் கேத்தி.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹீத்கிளிஃப் திரும்பி வருகிறான். இப்போது அவன் ஒரு பெரும் பணக்காரன். எப்படிப் பணக்காரனானான்? அவனுடைய பிறப்பு மூலத்தைப் போலவே சொத்து மூலத்தையும் புதிராகவே விட்டிருக்கிறார் நாவலாசிரியர். அவன் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்திருக்கலாம் அல்லது ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று நெல்லி தன் ஊகங்களைக் கூறுகிறாள். ஆனால், தாழ்வான சமூகத்தைச் சேர்ந்தவனாகக் கருதும் மேட்டுக்குடியினர் அவன் தவறான முறையிலேயே பொருளீட்டியிருப்பான் என்று கருதுகிறது. பிற்பகுதியில் அவன் இரக்கமற்ற பழிவாங்கலில் இறங்குவதன் பின்னணியில் தவறான வழியில் பணம் ஈட்டியதும் இருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கும் இடமளிக்கிறார் எமிலி பிரான்டே.

தன்னை அவமானப்படுத்தியவர்களையும், தனது காதலைப் பிரித்தவர்களையும் பழிவாங்கத் தொடங்குகிறான் ஹீத் கிளிஃப். இசபெல்லாவுக்குத் தன் மீது இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவதைக் கண்டு அவனை விரட்டியிடிக்கிறான் எட்கர். அதை ஏற்காத கேத்தரின் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே உணவின்றி இருக்கிறாள். அவளுடைய உடல் நலம் சரிவடைகிறது.

ஹிண்ட்லியின் சூதாட்ட மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஹீத்கிளிஃப் பெருந்தொகையைக் காட்டி, ஆட்டத்துக்கு இழுத்துத் தோற்கடிக்கிறான். அதற்காகக் கொடுக்க ஒப்புக்கொண்ட பெருந்தொகைக்குப் பதிலாக பண்ணை வீட்டை ஒப்படைக்க வற்புறுத்தி வசப்படுத்திக்கொள்கிறான். எட்கரைப் பழி வாங்குவதற்காக, இசபெல்லாவைத் தன்னோடு ஓடிவர வைத்து, பின்னர் அவளை மணந்துகொண்டு உளவியலாகவும் உடலளவிலும் பல வகைகளில் துன்புறுத்துகிறான்.

கேத்தரின் நலிந்துகொண்டிருப்பதை அறியும் ஹீத்க்ளிஃப் அவளை ரகசியமாகச் சந்திக்கிறான். அவனைப் பார்த்தபின், பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் கேத்தரின் மரணமடைகிறாள். கொந்தளிக்கும் ஹீத்கிளிஃப், அவள் ஆவியாக வந்து தன்னைக் கடைசிவரை ஆட்டுவிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். செத்துப்போனவள் மீது அவன் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துக் கசப்படையும் இசபெல்லா வேறு ஊருக்குப் போய்விடுகிறாள். அங்கே அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, தன் அண்ணன–கணவன் இருவர் பெயரையும் இணைத்து லிண்டன் ஹீத்கிளிஃப் என்று பெயர் வைக்கிறாள். ஒரு நோயாளியாக அவன் வளர்கிறான்.

ஹிண்ட்லி மதுப்பழக்கத்தால் மரணமடைகிறான். அவனுடைய மகன் ஹேர்டன் படிப்பறிவற்றவனாகச் சுற்றிவருகிறான். ஹீத்கிளிஃப் வெறிபிடித்தவனாக அடுத்த தலைமுறையினரையும் தனது பழிவாங்கும் படலத்திற்கு இலக்காக்குகிறான். கேத்தி, லிண்டன் இருவரும் நேசத்துடன் பழகுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டால் த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணையையும் வளைத்துப் போடலாம் என்று ஹீத்கிளிஃப் திட்டமிடுகிறான்.

இதனிடையே லிண்டன் ஹீத்கிளிஃப் அவனுடைய மாமன் எட்கர் வீட்டில் வளர அனுப்பி வைக்கப்படுகிறான். தன்னுடைய மகன் தன்னுடன்தான் இருக்க வேண்டுமென்று தகராறு செய்கிறான் ஹீத்கிளிஃப். சில மாதங்களில் எட்கர் இறந்துவிட, கேத்தியையும் லிண்டனையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு இருக்கச் செய்கிறான். உடல்நிலை மோசமடையும் லிண்டன் திடீரென இறந்துவிட, கேத்தி வேறு வழியின்றி ஹீத்கிளிஃபுடன் வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டில் இருக்க வேண்டியதாகிறது. நாளுக்கு நாள் அவனுடைய வெறித்தனம் முற்றுகிறது. கேத்தரின் இறந்தபோது, அவளுக்கான கல்லறையை வெட்டியது தானேதான் எனத் தெரிவிக்கும் அவன், அதன் பிறகு தினமும் அவளுடைய ஆவி தன்னைப் பின்தொடர்வதாகவும் கூறுகிறான்.

காலப்போக்கில் கேத்திக்கும் ஹேர்டனுக்கும் காதல் மலர்கிறது. அவனுக்கு அவள் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறாள். அவர்களுடைய காதல் பழைய தலைமுறையின் காழ்ப்புணர்வு வன்மமும், மேலாதிக்கப் புத்தியும், பாகுபாட்டு வக்கிரமும், பழிவாங்கல் வேட்கையுமான மூர்க்கச் சுழற்சியை முறியடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஹீத்க்ளிஃப் தன் பழிவாங்கல் செயல்களாலும், கேத்தரினின் ஆவி பற்றிய எண்ணங்களாலும் மன அமைதி குலைந்தவனாகத் திரிந்து மடிகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின்னரும் சில நாட்களுக்குப் புதிரான, அமானுட நிகழ்வுகள் தொடர்கின்றன. பகை வளர்த்த பழைய தலைமுறையின் கதை முடிந்து, குடும்ப ரகசியங்களால் துரத்தப்பட்ட புதிய தலைமுறையின் அமைதியான வாழ்க்கை தொடங்குகிறது.

மூர்க்கம்

கேத்தரின், ஹீத்கிளிஃப் இடையேயான காதல் அன்றைய சமூக விதிகளை மீறிய, ஆழமான, உடைக்க முடியாத, கிட்டத்தட்ட மூர்க்கத்தனமான ஒரு பிணைப்பு. காதல் நிறைவேறாமல் போனதால், ஹீத்கிளிஃபுக்கு ஏற்படும் பழியுணர்வும் மூர்க்கத்தனமானது. அந்த இரண்டுமாகச் சேர்ந்து அடுத்த தலைமுறைகளையும் அலைக்கழிக்கின்றன. உச்சத்தைத் தொடும் அந்த இரண்டு மூர்க்கங்கள்தான் நாவலின் மைய விசைகள்.

வுத்தரிங் ஹெய்ட்ஸ் வட்டாரத்தின் இயற்கைச் சூழல் சார்ந்த மூர்க்கம், அந்த இரண்டு பண்ணை வீடுகளின் கதாபாத்திரங்கள் சார்ந்த மூர்க்கத்திற்கு ஒப்புவமையாகிறது. நாவல் சமூகக் கட்டுப்பாடும், வர்க்க வேறுபாடும் சார்ந்த மூர்க்கங்களையும் தொடுகிறது. விக்டோரிய காலச் சமூகப் படிநிலைகள் தனிமனித உணர்வுகளைச் சூறையாடுவதைச் சித்தரித்ததன் மூலம் அன்றைய மதிப்புகளைச் சாடுகிறது. அந்த நிலைமைகள் எப்படி மனித மனங்களில் வஞ்சத்தை வளர்க்கின்றன என்று யோசிக்க வைக்கிறது.

விக்டோரியன் சகாப்தம்: எமிலி ப்ரோன்டே

அமானுடம், ஆவி நாவல் ஒரு கட்டத்தில் கேத்தரின் ஆவியாக ஹீத்கிளிஃபை நெருங்க முயல்வதாகவும், மானுடத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்டுவிப்பதாகவும் சித்தரிக்கிறது. இது அமானுடம், ஆவி ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்கிறது என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால், அந்தச் சித்தரிப்புகள் சூழ்நிலைகளாலும் நிகழ்ச்சிப் போக்குகளாலும் சிதைந்துபோன மனநிலைகள் பற்றிய உளவியல் வெளிப்பாடுகளே என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் வாதிட்டனர். இப்போதும் அந்த இரு வாதங்களும் தொடர்கின்றன. ஆயினும், அந்த அமானுடங்கள் உளவியல் சித்தரிப்புகள்தான் என்ற கருத்திற்கே பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கான, மானுடத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளையும், புதிரான முறையில், வியக்க வைக்கும் வகையில் சித்தரிக்கும் இலக்கிய வகைப்பாட்டிற்கு “கோதிக் புனைவு” என்று பெயர். கோதிக் என்பது மையக் காலத்திய கட்டடக் கலை. கோட்டைகளும் தேவாலாயங்களும் அந்தக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டன. ஒரு வியத்தகு அமைப்புடன் இருந்த அந்தக் கட்டங்கள் சிதைந்தபோது ஒரு புதிரான தோற்றத்தைப் பெற்றன. அவற்றால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் அந்தப் புதிரையும், வியப்பையும், சிதைவையும் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சிக்கு “கோதிக் புனைவு” என்ற இலக்கிய அடையாளம் கிடைத்தது.

நாவல் வெளியான புதிதில், சமூக விதிகளை மீறி, பாலியல், வன்முறை மற்றும் தீவிரமான உணர்வுகளை வெளிப்படையாகப் பேசியதால், “காட்டுமிராண்டித்தனமானது” என்றும் “ஒழுக்கமற்றது” என்றும் கூறி அதைப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்தன. மதம் அறிவுறுத்தும் சமூக ஏற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியதால், நாவலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மதவாதிகள் பேசினார்கள். ஆயினும், கடுமையான வாக்குவாதங்களுக்குத்தான் நாவல் உள்ளாக்கப்பட்டதேயன்றி தடை விதிக்கப்படும் அளவுக்குப் போகவில்லை.

மாறாக, எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகு, தனித்துவமான கதைசொல்லல், ஆழமான உளவியல் பார்வை, கதாபாத்திரங்களின் நுட்பமான சித்தரிப்பு ஆகியவற்றிற்காக ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகப் பாராட்டுப் பெற்றது. காதலின் ஆக்க சக்தி–அழிவு சக்தி, மனித உறவுகளின் சிக்கல்கள், மனதின் இருண்ட பகுதிகள் ஆகியவற்றை எமிலி பிரான்ட்டே ஆராய்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு புதுமையான, துணிச்சலான படைப்புகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு என்று இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது இந்த நாவல்.

https://bookday.in/books-beyond-obstacles-15-wuthering-heights-based-article-written-by-a-kumaresan/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 | எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

19 வயதுப் பெண்ணால் இப்படியொரு அறிவியல் புனைவை எழுத முடியுமா என்று கேட்டார்கள்!

அ. குமரேசன்

எழுத்து நடை இவ்வளவு மோசமாகவா இருப்பது என்று ஒதுக்கப்பட்ட ஒரு நாவல், நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் அத்துமீறல்களை நியாயப்படுத்துவதாகத் தாக்கப்பட்ட அந்த நாவல், சிறந்த அறிவியல் புனைவுகளின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் இங்கிலாந்தின் மேரி ஷெல்லி (Mary Shelley) (1797–1851) எழுதிய, 1818ஆம் ஆண்டில் வெளியான ‘ஃபிராங்கென்ஸ்டைன்’  (Frankenstein) என்ற நாவல் தான் இப்படி விமர்சனத் தடைகளைத் தாண்டியது. அவர் வாழ்ந்த காலத்தில் இத்தகைய எதிர்ப்புகளால் மிகக் குறைவாகவே விற்பனையாகிய புத்தகம், பின்னர் உலக அளவிலேயே அதிகமாகப் பரவிய அறிவியல் புனைவாக அடையாளம் பெற்றது. 1818இல் வந்த இந்த நாவலுக்கு ‘தி மாடர்ன் புரோம்தியஸ்’ என்ற தலைப்பும் உண்டு.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

நாவலின் உள்ளடக்கம் சார்ந்து விமர்சித்தவர்கள் முன்வைத்த வாதங்கள்: மதம் கற்பித்து வந்துள்ள வாழ்க்கை நெறிகளை மீறுகிறது; கடவுளன்றி ஒரு புதிய உயிரினத்தைப் படைக்கிற மகத்துவம் மனிதனுக்குக் கிடையாது; பொறுப்பற்ற அறிவியல் ஆராய்ச்சியை உயர்த்திப் பிடிக்கிறது; பிசாச குணம், உயிரின உருவாக்கம் ஆகியவை குடும்ப இலக்கிய மரபுக்கு மாறானவை; கதையின் முடிவு உணர்வற்றதாக, தீர்வை முன்வைக்காததாக இருக்கிறது.

கதை நடை சார்ந்து விமர்சித்தவர்கள் கூறிய கருத்துகள்: (அந்நாளைய வழக்கப்படி) கவிதை நடையில் இல்லாமல் நேரடி உரைநடையில் எளிதாக வாசிக்கக்கூடியதாக இருக்கிறது; முந்தைய இலக்கியங்கள் போன்ற மொழிச் சிறப்புகள் இல்லை; கதையோட்டம் ஒரே சீராக இல்லாமல் பயணியின் நடை, ஆராய்ச்சியாளரின் நடை, அமானுடப் பிறவியின் நடை என மாறிக்கொண்டே இருக்கிறது; கதையை விட அதிகமாகத் தத்துவத்தைப் பேசுகிறது.

பாதுகாத்த திறனாய்வுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley)

பின்னர் வந்த இலக்கிய அன்பர்களும் திறனாய்வாளர்களும் இத்தகைய தாக்குதல்களிலிருந்து நாவலைப் பாதுகாத்தனர். மிகச் சிறந்த அறிவியல் புனைவு கிடைத்திருக்கிறது, ஆங்கில இலக்கியத்திற்கு ஒரு புதிய எழுத்துநடை அறிமுகமாகியிருக்கிறது, அறிவியல் பயன்பாடு பற்றிய ஆழ்ந்த விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது, பழமைச் சிந்தனைகளைக் கேள்விக்கு உட்படுத்துகிறது என்று பாராட்டினார்கள்.

இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்ற நாவலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, நாவலை எழுதிய மேரி ஒல்ஸ்டோன்கிராஃப்ட் ஷெல்லி பற்றித் தெரிந்துகொள்வோம். அன்றைய சமூக–இலக்கியச் சூழலில், பெண்களால் ஆழ்ந்த இலக்கியத்தைப் படைக்க முடியாது என்று சிறுமைப்படுத்தும் ஆணாதிக்க மனநிலையிலிருந்தும் அவர் மீது விமர்சனக் கற்கள் வீசப்பட்டன.

நாவலை எழுதியபோது மேரியின் வயது 19 மட்டுமே. அந்த வயதில் மனித வாழ்க்கையைப் பற்றியோ, சமூக மதிப்புகள் பற்றியோ, அறிவியலுக்கு உரிய இடம் பற்றியோ ஒரு பெண்ணுக்கு என்ன தெரிந்துவிடும் என்ற அலட்சியமும் விமர்சனங்களில் இருந்தது. உலகம் முழுவதுமே பெண் எழுத்தாளர்கள் இதைக் கடந்துதான் வரவேண்டியிருக்கிறது, இல்லையா? இத்தனைக்கும் மேரியின் தாய் பெண்களின் உரிமைகளுக்காக வாதாடியவர், எழுதியவர். தந்தை ஒரு தத்துவ அறிஞர், சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர். புதிய சிந்தனைக்கும் எழுத்தாக்க ஈடுபாட்டிற்கும் ஆதரவான குடும்பச் சூழலிருந்து வந்தவரானாலும் மேரி இந்த வேலிகளைக் கடக்க வேண்டியிருந்தது. புத்தகத்தின் தொடக்கப் பதிப்புகள் அவருடைய பெயர் இல்லாமல், “அனாமதேயர்” என்ற அடையாளத்துடன்தான் வெளியிடப்பட்டன!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) மற்றும் மேரி ஷெல்லி (Mary Shelley)

இன்னொரு முக்கியமான தகவல் – நீங்கள் பெயரை வைத்தே ஊகித்திருப்பீர்கள் – “ஷெல்லி” என்ற சுருக்கப் பெயரில் அறியப்பட்ட உலகப் புகழ்பெற்ற கவிஞர் பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) (1792–1822) நாவலாசிரியரின் இணையர்தான். ஆங்கில இலக்கியத்தில் “ரொமாண்டிசிசம்” எனப்படும் உணர்ச்சிப் புனைவியல் வகை ஒன்று உண்டு. அதைக் கொண்டுவந்த முன்னோடிகளில் ஒருவர் ஷெல்லி. மானுட விடுதலை, மனித நேயம், அரசியல் எழுச்சி, மதவெறி எதிர்ப்பு, இயற்கை மேன்மை, காதல் சுதந்திரம், மனித நேயம் ஆகியவற்றைத் தம் கவிதைகளின் உயிரோட்டமாக வைத்தவர்.

போட்டியில் பிறந்த நாவல்

இளம் வயதிலேயே ஷெல்லி–மேரி இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பல ஊர்களுக்குச் சுற்றினார்கள். அப்படியொரு பயணத்தின்போது 2016இல் சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது, இருவருக்கும் இடையே, ஒரு முற்றிலும் புதுமையான, பயங்கரமான புனைவை யாரால் உருவாக்க முடியும் என்ற போட்டி ஏற்பட்டது. அந்தப் போட்டிக்காக மேரி எழுதியதுதான் இந்த நாவல். அந்தப் புத்தகத்திற்கு ஷெல்லி முன்னுரை எழுதினார். 1822இல் ஒரு படகுப்பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் ஷெல்லி, தனது 30ஆவது வயதில் இறந்துவிட்டார். அவருடைய படைப்புகளைப் பின்னர் மேரி புத்தகங்களாகத் தொகுத்து வெளியிட்டார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

’வால்பெர்கா’ என்ற வரலாற்றுப் புனைவு (1823), ‘தி லாஸ்ட் மேன்’ என்ற எதிர்காலவியல் நாவல் (1826), ‘பெர்க்கின் வார்பெக்’ என்ற அரண்மனை வாழ்க்கை பற்றிய புதினம் (1830), ‘லோடோர்’ என்று பெண்ணின் கல்வி, மண வாழ்க்கை பற்றிப் பேசிய நெடுங்கதை (1835), ‘ஃபாக்னர்’ என்ற குடும்ப உறவுகளின் பின்னணியில் பெண்ணின் உள்ளுணர்வுகளில் வெளிச்சம் பாய்ச்சிய படைப்பு (1937) ஆகியவை மேரி ஷெல்லி எழுதியவையே. அத்துடன் மனித இயற்கை, சமூகச் சிக்கல்கள், பெண்களின் உரிமைகள், பயணக் குறிப்புகள் எனப் பல கட்டுரை நூல்களும் அவரிடமிருந்து வந்துள்ளன. ஷெல்லியின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தார். தன் சமகாலப் பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்த கடித வடிவிலான கட்டுரைகள் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. கடைசி ஆண்டுகளில் ஒரு தனிமை உணர்வால் தவித்து வந்தவர் 1851இல் 53 வயதில் புற்றுநோய் தன்னை விழுங்கக் கொடுத்தார்.

விமர்சனங்களால் விழுங்க முடியாத இலக்கியச் சிறப்பைப் பெற்ற நாவலின் கதைமாந்தர்களைச் சந்திப்போம்.

புதிய உயிர்

தென் அமெரிக்காவின் அலாஸ்கா அருகே பயணம் செய்கிற கடற்படை அதிகாரி ராபர்ட் வால்டன் எழுதிய கடிதங்களிலிருந்து கதை தொடங்குகிறது. பயணத்தின்போது உறைபனிக்குள் சாகும் நிலையில் கிடக்கும் ஒரு மனிதனை மீட்கிறார். அவன் பெயர் விக்டர் ஃபிராங்கஸ்டைன் – சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்தவன். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமும் செயல்திறனும் உள்ளவன். விக்டர் தனக்கு நேர்ந்ததையும் தன்னால் நேர்ந்ததையும் அவரிடம் சொல்கிறான். கேப்டன் வால்டன் மூலம் நாம் விக்டரின் கதையைத் தெரிந்துகொள்கிறோம்.

மரணத்தை ஒரு முடிவாக அல்லாமல் ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடையவனான விக்டர் ஃபிராங்கன்ஸ்டெய்ன், இறந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடுகிறான். புதிய உயிரை செயற்கையாக உருவாக்க முடியுமா என்ற ஆராய்ச்சி. ஒரு கட்டத்தில் அந்த ஆராய்ச்சியில் வெற்றி பெறுகிறான். அந்த உடல்களிலிருந்து எடுத்த உறுப்புகளை இணைத்து, உயிரணுக்களைச் சேர்த்து ஒரு புதிய உயிரினத்தையே உருவாக்கிவிடுகிறான்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

மனிதனும் அல்லாத மிருகமும் அல்லாத அந்த உயிரி அச்சமூட்டும் தோற்றத்துடன் கட்டுங்கடங்காத வலிமையைப் பெற்றிருக்கிறது. தான் உருவாக்கியதைப் பார்த்து தானே அஞ்சுகிற விக்டர், அதை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.

பெயர் எதுவும் சூட்டப்படாத அந்த உருவம் தன் சொந்த முயற்சியில் மொழியைக் கற்றுக்கொள்கிறது. என்ன செய்தாலும் மனிதர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உணர்கிறது. தன்னை நேசிக்கக்கூடிய ஒரு மனித உயிரையாவது காண முடியாதா என்று தேடுகிறது. பல இடங்களுக்கும் செல்கிறது, அங்கெல்லாம் அதைப் பார்த்துவிட்டு மனிதர்கள் அலறியடித்து ஓடுகிறார்கள்.

ஒரு விவசாயக் குடும்பத்தை ஒளிந்திருந்து கவனிக்கும் அந்த உயிரினம், அவர்களுடன் பழக முயல்கிறது. ஆனால் அவர்களும் அதைக் கண்டு ஓடிவிடுகிறார்கள். இப்படி எல்லோராலும் ஒதுக்கப்படுவதால் தனிமையாக உணரும் புதிய உயிரி தன்னுள் வெறுப்பையும் ஆத்திரத்தையும் வளர்த்துக்கொள்கிறது.

பழிவாங்கும் செயல்களில் இறங்கும் அந்த உயிரி விக்டரின் ஒரு நண்பரைக் கொல்கிறது. தம்பியைக் கொல்கிறது. பின்னர் அவனுடைய மனைவியையும் கொல்கிறது. ஒரு புனிதச் சடங்கு நிகழ்விலும், ஒரு திருமண விழாவிலும் புகுந்து பலரையும் தாக்குகிறது, சேதங்களை ஏற்படுத்துகிறது.

திரும்பி வரும் விக்டரிடம், தனக்குத் துணையாகத் தன்னையொத்த ஒரு பெண் உயிரியை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது. அவன் மறுத்துவிடுகிறான். இது அதனுடைய ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்கிறது. அவன் சார்ந்த எல்லோரையும் கொல்கிறது, கடைசியில் தன்னைப் படைத்தவனையும் கொன்றுவிடுகிறது.

விக்டரின் மரணத்திற்குப் பிறகு, கப்பலுக்கு வரும் உயிரி, கேப்டன் வால்டனைச் சந்திக்கிறது அந்த உயிரி. ஏற்கெனவே அவனிடமிருந்து அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற வால்டனுக்கு அதைப் பார்த்ததும் பயம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகள் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் அதன் மீது பரிவும் ஏற்படுகிறது. அந்த “அசுரன்” பாவம் செய்கிற குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்கிறார். அதேவேளையில், அது செய்த கொலைகளையும் மற்ற கொடூரங்களையும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவராகக் குழப்பத்தில் தவிக்கிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

அவரிடம், தன்னைப் படைத்தவன் தனக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்திருப்பான் என்று கூறும் உயிரி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புவதாகக் கூறுகிறது. “நான் இறந்துவிடுவேன், இப்போது நான் உணரும் எதுவும் இனி உணரப்பட மாட்டாது. இந்தத் துன்பத் தீ விரைவில் அணைந்துவிடும். என் சிதைக் குவியலின் மீது நான் வெற்றிகரமாக ஏறுவேன், வதைக்கும் தீப்பிழம்புகள் ஏற்படுத்தும் வேதனையில் மகிழ்வேன். அந்தப் பெரும் நெருப்பின் ஒளி மங்கிவிடும்; என் சாம்பலைக் காற்று கடலுக்குள் அடித்துச் சென்றுவிடும். என் ஆன்மா அமைதியாக உறங்கும், அல்லது அது சிந்திக்குமானால், நிச்சயம் இது போலச் சிந்திக்காது. விடைபெறுகிறேன்!”

இவ்வாறு கூறிவிட்டு, காட்டுக்குள் சென்று மறைந்துவிடுகிறது. அது தற்கொலை செய்துகொண்டதாக நாம் முடிவுக்கு வருகிறோம்.

கேள்விகள்

இணையத் தரவுகளில் கிடைக்கிற இந்தக் கதையும், தெரியவரும் பாத்திரங்களும் கற்பனை என்றாலும், உண்மை வாழ்க்கையில் அறிவியலைப் பொறுப்புடன் கையாளத் தவறினால் என்னாகும் என்ற வினாவை எழுப்புகின்றன. சிலர் இந்த நாவல் அறிவியலுக்கு எதிரானது என்றும் ஆராய்ச்சிகள் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்கள். ஆயினும், இது அறிவியல் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்கு ஆதரவான நாவல்தான் இது என்று திறனாய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள். இன்றைய ஏஐ தொழில்நுட்பத்தை சுயநலமிகளும் சுரண்டல் வேட்கையர்களும் தவறாகப் பயன்படுத்துவதால் மனித இனத்திற்கே ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள் அல்லவா?

இன்று நாம் காணும் மரபணு ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளுக்கான தொடக்கப் புள்ளிகளை அந்தக் காலத்திலேயே, அந்த வயதிலேயே ஒரு பெண் கற்பனை செய்து எழுதியிருப்பது எளிதாகக் கடந்துவிடக் கூடியதல்ல என்று இப்போது அந்த நாவல் பற்றிப் பேசுகிறவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவ்வகையில் மேரி ஷெல்லி தன் காலத்தை மீறிச் சிந்தித்துக் கதை புனைந்தவர் என்ற பாராட்டையும் வழங்குகிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –16 |  எழுத்தாளர் மேரி ஷெல்லி (Mary Shelley) எழுதிய ‘ஃபிராங்கென்ஸ்டைன்’ நாவல் (Frankenstein Novel in Tamil)

விக்டரிடம் பேசும் உயிரி, “நான் உன் ஆதாமாக இருக்க வேண்டியவன். ஆனால் வீழ்ந்த தேவதூதனாகிவிட்டேன்,” என்று கூறுகிறது. பைபிள் கதைப்படி, கடவுளின் கட்டளைக்கு எதிராகப் போகிற தேவதூதர்களை வீழ்ந்த தேவதூதர்கள் என்று குறிப்பிடுவது மதமும் இலக்கியமும் சார்ந்த மரபு. நல்ல நோக்கங்களிலிருந்து விலகித் தன்னலத்திற்காகத் தரம் தாழ்கிறவர்களைக் குறிப்பிடவும் “வீழ்ந்த தேவதூதர்” என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது.

மற்றொரு இடத்தில் விக்டர் இவ்வாறு கூறுகிறான்: “என்னிடமிருந்து கற்றுக்கொள், என் போதனைகளால் இல்லாவிட்டாலும், என்னை எடுத்துக்காட்டாகக் கொண்டாவது என்னிடமிருந்து கற்றுக்கொள் – அறிவைப் பெறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை.”

நுட்பமான எச்சரிக்கை

அறிவும் அறிவியலும் மனித மாண்புகளுக்காக அல்லாமல் சுய மோகங்களுக்கும் லாபத் தாகங்களுக்கும் கையாளப்படுமானால் அது அவ்வாறு கையாளுகிறவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தானதாக முடிந்துவிடும். இதை இந்த வரிகள் நுட்பமாக எடுத்துரைக்கின்றன. அறிவியல் மக்களுக்கே என்று சொல்லாமல் சொல்கிற இடம் இது.

இந்தக் கருத்தாக்கம் இந்த நாவலைத் தொடர்ந்து பிற்காலத்தில் வந்த பல இலக்கியப் படைப்புகளிலும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சியால் உருவாகும் ஆபத்தான உயிரிகளிடமிருந்து அல்லது ரோபோக்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் பற்றிய ஒற்றைக் கதைகளும் தொடர்களும் வலைத்தளத் திரைகளுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. உயிரினம் ஒன்று தனிமையில் விடப்படுவது எவ்வளவு அபாயகரமானது என்று சித்தரித்து, மனிதர்களும் என்றும் எங்கும் தனிமைப்பட்டுப் போகாமல் துணைகளோடு வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அந்தக் கதைகள் எடுத்துரைக்கின்றன.

மனித உணர்வும், மானுட அக்கறையும் அனைத்தையும் விட மகத்தானவை என்று இலக்கியமும் கலையும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அப்படிச் சொல்வதற்கு “ஸ்டார்ட்” பட்டனை அழுத்தியது ‘ஃபிராங்கன்ஸ்டெய்ன்’ நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம்.


https://bookday.in/books-beyond-obstacles-16-mary-shelleys-frankenstein-novel-based-article-written-by-a-kumaresan/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | “தி சாட்டனிக் வெர்சஸ்” நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

ஒரு கற்பனைக்காக எழுத்தாளரின் உயிரைக் கேட்க வைத்த நாவல்

அ. குமரேசன்

வேறு எந்தப் புத்தகமும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தடைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டதில்லை எனும் அளவுக்குத் தாக்குதல்களுக்கு உள்ளானது ஒரு நாவல். படைப்பாளி இப்போதும் பொது இடங்களுக்கு வர இயலாமல் பதுங்கி வாழ வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கும் அந்த நாவல் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses) (சைத்தான் வசனங்கள்).

இந்தியா விடுதலையடைவதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக, 1947 ஜூன் 19இல், அன்றைய பம்பாய் நகரில், பிறந்தவர் அஹமது சல்மான் ருஷ்டி (Salman Rushdie). குடும்பம் பிரிட்டனில் குடியேறியபோது அங்கே கல்வி பயின்றவர். ருஷ்டி தொடக்கத்தில் ஒரு பதிப்பகத்தில் படிதிருத்துநராக வேலை செய்தார். அது அவருக்குள் இருந்த எழுத்தாளரை உசுப்பிவிட்டது போலும்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

அவரது முதல் நாவல் ‘க்ரிமஸ்’ புராணக் கதைக் கூறுகளுடன் அறிவியல் புனைவாக வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பிறந்த இரண்டு குழந்தைகளின் மூலமாக சமூக மாற்றங்கள் பற்றிப் பேசும் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ (1981ஆம் ஆண்டுக்கான புக்கர் விருது பெற்ற இந்த நாவல், 1994, 2008 ஆகிய ஆண்டுகளில் ‘புக்கர் விருதுபெற்ற நாவல்களில் சிறந்த படைப்புக்கான விருதை இரண்டு முறை பெற்றது), பாகிஸ்தானின் அரசியல், சமூக நிலைமைகளை விமர்சிக்கும் ‘ஷேம்’, குழந்தைகளுக்காக எழுதிய ‘ஹாரூன் அன் தி ஸீ ஆஃப் ஸ்டோரீஸ்’, தென்னிந்தியப் பின்னணியில் பண்பாடுகள் பற்றி விவாதிக்கும் ‘தி மூர்ஸ் லாஸ்ட் சை’, கிரேக்கப் புராணக் கதைகளை இணைக்கும் ‘தி கிரவுண்ட் பினீத் ஹெர் ஃபீட்’, இந்தியப் பேராரியருக்கு நியூயார்க் நகரில் ஏற்படும் கலாச்சார அதிர்வுகளை சித்தரிக்கும் ‘ஃபியூரி’, காஷ்மீர் பின்னணியில் பயங்கரவாதத்துக்கு எதிராக அன்பின் வலிமையை முன்வைத்த ‘ஷாலிமர் தி க்ளோன்’, அக்பர்-பிளாரன்ஸ் காலக்கட்டங்களுக்குச் செல்லும் ‘தி என்சான்ட்டர்ஸ் ஆஃப் ஃபிளாரன்ஸ்’, சிறார் நாவலாகிய ‘லூகா அன் தி ஃபயர் ஆஃப் லைஃப்’, புராணக் கற்பனைகளையும் நிகழ்காலச் சிக்கல்களையும் நியூயார்க் பின்னணியில் ஆராயும் ‘டூ இயர்ஸ் அன் ட்வென்டி எய்ட் நைட்ஸ்’, டொனால்ட் டிரம்ப் காலக்கட்ட அமெரிக்கப் பின்னணியில் ஒரு மர்மமான குடும்பத்தை அறிமுகப்படுத்தும் ‘தி கோல்டன் ஹவுஸ்’, நவீன காலத்தில் அடையாளத் தேடல் பயணம் பற்றி விவரிக்கும் ‘குயிக்சோட்’, ஒரு பெண்ணின் ஆற்றல் ஓர் அரசாட்சியையே நிறுவுவதாகக் கூறும் ‘விக்டரி சிட்டி’ ஆகிய நாவல்களையும் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைத் தொகுப்பு, தன் வரலாறு, நினைவுக் குறிப்புகள் ஆகிய நூல்களும் வந்துள்ளன.

பதற்றங்களும் ஃபத்வாவும்

ருஷ்டியின் நாவல்கள் பெரும்பாலும் புராணக் கதைக் கூறுகளும், மதநூல்களின் கருத்துகளும் கலந்து நவீன வாழ்க்கையைப் பேசுகின்றன என்று செயற்கை நுண்ணறிவுத் துணைகள் தெரிவிக்கின்றன. இவரது நான்காவது நாவல்தான் “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses). 1988இல் லண்டனில் வெளியாகிப் பலநாடுகளுக்கும் பயணப்பட்ட இந்த நாவலுக்கு பாகிஸ்தானில் கடும் கண்டனங்கள் எழுந்தன. புத்தகப் படிகள் தீக்கிரையாக்கப்பட்டன. புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன பாகிஸ்தான் அரசு புத்தகத்தை இறக்குமதி செய்யவோ விற்கவோ கூடாதென்று தடை விதித்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவிலும், ராஜீவ் காந்தி அரசு, படைப்புச் சுதந்திரத்திற்குத் துணையாக நிற்பதற்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் மாறாக, புத்தகத்திற்குத் தடை விதித்தது. மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல அரசாங்கங்கள் தடை விதித்தன.

ஈரான் நாட்டு அரசுத் தலைவரும் இஸ்லாம் தலைமை குருவுமான அயதுல்லா கோமெய்னி, புத்தகத்திற்கு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் உயிர்வாழ்க்கைக்கே தடை விதித்தார். “ஃபத்வா” எனப்படும் அந்த ஆணையின்படி உலகில் எங்கேயும் இருக்கக்கூடிய மத விசுவாசிகள், ருஷ்டியை எங்கே கண்டாலும் கொலை செய்யலாம். கொல்ல வாய்ப்பில்லாதவர்கள் அவர் இருக்குமிடம், நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களைக் கொல்லக்கூடியவர்களுக்கு அளிக்கலாம். ஒரு புனிதக் கடமையாக அறிவிக்கப்பட்ட இந்த ஃபத்வாவைத் தொடர்ந்து வன்முறைகள் தீவிரமடைந்தன. ஜப்பான் நாட்டில் மொழிபெயர்ப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

இறைத்தூதரையும், மார்க்க போதனைகளையும் இழிவுபடுத்திவிட்டார் என்பதே ருஷ்டி மீதான குற்றச்சாட்டுகளின் சாரம். மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசு அவருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளித்தது. பல ஆண்டுகள் கழித்து, பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாகச் சுற்றிவர விரும்புவதாக அவர் அறிவித்தார். ஆனால் ஒரு பொதுநிகழ்ச்சிக்கு வந்திருந்தவர் இடுப்பில் கத்திக்குத்து பட்டு காயமடைந்தார். மறுபடி பாதுகாப்பு வளையத்திற்குள் பதுங்க வேண்டியதாயிற்று.

அவருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய திறனாய்வாளர்கள், நாவலில் அப்படி இழிவுபடுத்துகிற நோக்கம் எதுவும் இல்லை என்றார்கள். விமர்சிக்கப்படுகிற பகுதி இலக்கியப்பூர்வமான கற்பனைச் சித்தரிப்புதான் என்று கூறினார்கள். மார்க்கம் சார்ந்த பலர் புலம்பெயர்ந்தவர்களாகப் பல நாடுகளில் அவல வாழ்க்கை வாழ்கிறார்கள், அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற நாவல்தான் இது என்றார்கள். எந்த மக்களுக்காக அவர் தன் படைப்பின் மூலம் பேசுகிறாரோ அந்த மக்களைச் சேர்ந்தவர்களே அவரைக் கொலை செய்யத் துடிப்பது துயரமானது என்றும் கவலை தெரிவித்தார்கள். இவ்வாறு ருஷ்டிக்கு ஆதரவாக எழுதியவர்களில் மதம் சார்ந்தவர்களும் இருந்தது கவனத்திற்குரியது.

சமூகப் பொறுப்பு

படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எப்போதும் தோள்கொடுக்கிறவர்களிலும் சிலர், படைப்பாளியின் வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு சமூகப் பொறுப்பும் முக்கியமானது. நம்பிக்கைகள் சார்ந்தவற்றை விமர்சிக்கிறபோது கூட நம்புகிறவர்கள் ஏற்கத்தக்க வகையில் நுட்பமாக அந்த விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என்றார்கள். படைப்புச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா அல்லது தோழமையானவையா என்ற விவாதம் இன்றளவும் நடந்துகொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த நாவலையும் நாவலாசிரியரையும் எதிர்த்துக் கிளம்பியவர்கள் எல்லோரும் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசித்திருப்பார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. தாங்கள் நேரடியாகப் படித்து ஒரு முடிவுக்கு வராமலே, சமூகத் தலைவர்கள் அல்லது இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கிளப்புவதே வேலையாக இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே சுயமான சிந்தனை ஏதுமின்றி வன்முறைக்குத் தயாராகிறவர்கள் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் சாதிகளிலும் இன்னபிற அமைப்பிகளிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

இருவரின் கதை

ருஷ்டியின் மாய மெய்யியல் சித்தரிப்புத் தன்மையுடன் புத்தகம் சொல்கிற கதை என்ன? இந்தியாவில் இந்தித் திரைப்பட உலகம் சார்ந்த இருவர் இதன் நாயகர்கள். கிப்ரயீல் ஃபரிஷ்டா நட்சத்திர நடிப்புக் கலைஞர். சலாவுதீன் சாம்ச்சா இங்கிலாந்தில் வேலை செய்யும் பின்னணிக் குரல் கலைஞர். ஃபரிஷ்டா பக்திப் படங்களில் இந்து தெய்வங்களாக வந்து புகழ்பெற்றிருப்பவர். சாம்ச்சா தன் தந்தையுடனும் இந்தியச் சூழலுடனும் ஒத்துப்போக மறுத்து லண்டனில் குடியேறியவர்.

இவர்கள் இருவரும் பயணிக்கும் விமானத்தை மற்ற பயணிகளோடு சேர்ந்து கடத்துகிறது பஞ்சாப் தனிநாடு தீவிரவாதக் குழு. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் விமானத்தை ஆற்றின் மேல் பறக்க வைத்து வெடிக்கச் செய்கிறார்கள். மற்ற அனைவரும் மாண்டுவிட, ஃபரிஷ்டாவும் சாம்ச்சாவும் மாயமான முறையில் உயிர் பிழைக்கிறார்கள். ஃபரிஷ்டா இறைத்தூதர் கிப்ரயீல் போலவும், சாம்ச்சா ஒரு சாத்தான் போலவும் உருமாறுகிறார்கள். ஃபரிஷ்டா தலையின் பின்னால் அவ்வப்போது ஒளிவட்டம் தோன்றுகிறது, சாம்ச்சாவுக்கு ஆட்டுக் கொம்புகளும் கால்களும் முளைக்கின்றன.

சம்ச்சாவை ஒரு சட்டவிரோதக் குடியேறி என்று சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் கைது செய்து அவமதிக்கவும் செய்கின்றனர். ஃபரிஷ்டா தனது முன்னாள் காதலியான ஆலியா என்ற மலையேற்ற வீரரைக் கண்டுபிடித்துச் சேர்கிறார். இருப்பினும், தன்னை இறைத்தூதராகக் கருதுவதன் மனச்சிதைவுக்கு உள்ளாக அவர்களது உறவில் சிக்கல் ஏற்படுகிறது. லண்டனில் மதப் பரப்புரையில் ஈடுபட முயல்கிறார் ஃபரிஷ்டா. அந்த முயற்சி தோல்வியடைகிறது. தெருவில் இறங்கி நடக்கும் ஃபரிஷ்டா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சிசோடியா கார் மோதுகிறது. அவர் ஆலியாவுடன் சேர்ந்து ஃபரிஷ்டாவை மனச்சிதைவு சிகிச்சைக்கு அழைத்துச் செல்கிறார்.

சாம்ச்சாவின் தோற்றமும் நடத்தையும் தீவிரமடைகின்றன. விமான வெடிப்பில் அவர் இறந்துவிட்டதாக நம்பும் அவரது மனைவி பமீலா, நண்பர் ஜம்பி ஜோஷி இருவரும் உறவைத் தொடங்கியிருப்பது தெரியவர மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஜம்பி ஒரு விடுதியை நடத்தும் குடும்பத்தினருடன் அவரைத் தங்க வைக்கிறார். கைது செய்யப்பட்ட நடவடிக்கையிலிருந்து தன்னைப் பாதுகாக்காததாலும், விமான விபத்துக்குப் பிறகு கைவிட்டதாலும் ஃபரிஷ்டா மீது அ சாம்சாச்சாவுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவரது சாத்தான் தோற்றம் தீவிரமடைந்து பின்னர் மனித உருவத்துக்குத் திரும்புகிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

ஃபரிஷ்டாவின் திரையுலக வெற்றியிலும் காழ்ப்பு கொள்ளும் சாம்ச்சா அவரைப் பழிவாங்க எண்ணுகிறார். ஃபரிஷ்டாவின் மனச்சிதைவை அறியும் சாம்ச்சா, தொலைபேசி மூலம் வெவ்வேறு குரல் பதிவுகளையும், ஆலியா பற்றிய விவரங்களையும் பயன்படுத்தி , தவறான எண்ணம் வரச் செய்து. அவர்களுடைய உறவைச் சிதைக்கிறார்.

சாம்ச்சா, ஜம்பி, பமீலா மூவரும் கருப்பின மக்கள் நலச் செயல்பாட்டாளர் டாக்டர் உஹுரு சிம்பா ஆதரவுப் பேரணியில் பங்கேற்கிறார்கள். தொடர் கொலைகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்படும் சிம்பா,. சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துவிடுகிறார். சமூகக் கண்காணிப்பில் ஈடுபடும் சீக்கிய இளைஞர்கள் உண்மையான கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள் – அவன் ஒரு வெள்ளையன். ஒரு தெற்காசிய இரவு விடுதியில் காவல்துறை சோதனை நடத்துகிறது. அதனால் கலவரம் தூண்டப்படுகிறது. காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் தகவல்களை விநியோகிக்க பமீலாவும் ஜம்பியும் திட்டமிடுகிறார்கள், ஆனால் முகமூடி ஆசாமிகள் கட்டடத்திற்குத் தீவைத்து, ஆதாரங்களை அழித்து இருவரையும் கொல்கிறார்கள்.

கலவரக்காரர்களால் எழும் தீப்பிழம்புகள் தனது அற்புத மகிமையின் விளைவு என்று நம்புகிறார் ஃபரிஷ்டா. தொலைபேசியில் வந்த தவறான தகவல்களுக்கு சாம்ச்சாவே காரணம் என்பதை அறியும் ஃபரிஷ்டா அவரைக் கொல்லும் எண்ணத்துடன் புறப்படுகிறார். தீப்பற்றி எரியும் கட்டடத்திற்குள் சிக்கியிருக்கும் விடுதிக் காப்பாளரையும் அவரது மனைவியையும் காப்பாற்ற முயல்கிறார் சாம்ச்சா. அதைக் காணும் ஃபரிஷ்டா கொலை எண்ணத்திலிருந்து பின்வாங்குகிறார்.
இருவரும் இந்தியா திரும்புகிறார்கள். ஃபரிஷ்டா திரைப்படங்களில் நடிக்கிறார். அந்தப் படங்கள் தோல்வியடைகின்றன. சிசோடியா-ஆலியா இருவரும் கொல்லப்படுகிறார்கள்.

சாம்ச்சா, மனத்தாங்கலுடன் பிரிந்திருந்த தனது தந்தையைப் பார்க்கச் செல்கிறார். சிசோடியாவையும் ஆலியாவையும் கொன்றது ஃபரிஷ்டாதான் என்று அவரிடமிருந்து தெரியவருகிறது. சாம்ச்சாவின் தந்தை இருக்கும் பண்ணைக்குச் சென்று, அவரைக் சுடப் போவது போலத் துப்பாக்கியை நீட்டுகிறார். சில நொடிகளில் துப்பாக்கியைத் தன்னை நோக்கித் திருப்பிக்கொள்கிறார். தந்தையுடன் சமாதானமாகும் சாம்ச்சா தனது இந்திய அடையாளத்திலும் இணக்கம் கொள்கிறார்.

கோபத்திற்குக் காரணம்

இந்தக் கதையில் நம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டதாகக் கோபம் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஃபரிஷ்டாவின் மூன்று கனவுகள் இருக்கின்றன. முதல் கனவில், ஜாஹிலியா நகரில் (மெக்கா நகர அடையாளமாக இப்படியொரு நகரம்) இறைத்தூதர் தனக்கு இறைவனால் அருளப்பட்ட வசனங்களைச் சொல்கிறபோது, பழைய தெய்வ வழிபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். அதே போனற வேறு சில வழிகாட்டல்களையும் கூறுகிறார். பின்னர், அவை சாத்தானின் வேலையால் தவறாகச் சொல்லப்பட்டுவிட்டன என்றும், உண்மையில் அவை இறைவனால் சொல்லப்பட்டவையல்ல என்றும் கூறுகிறார். நகரத்தைக் கைப்பற்றும் தூதருக்கு இரண்டு எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஒருவர், வேற்று மதப் பூசாரி. இன்னாருவர் எதையும் சந்தேகிக்கிற பகடிப் புலவர். நகரம் கைப்பற்றப்படும்போது ஒரு பாலியல் விடுதியில் பதுங்கிக்கொள்கிறார் அங்குள்ள பெண்களுக்கு தூதரின் மனைவிகளுடைய பெயர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

தூதரிடமிருந்து தப்பிக்கும் ஒருவன், தனக்கு அவர் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறான். அவர் உண்மையிலேயே தனக்கு இறைவன் சொன்ன வசனங்களில் சிலவற்றை மாற்றிவிட்டார் என்றும் கூறுகிறான். இவையெல்லாம், இறைத்தூதர் மீதான நம்பிக்கையைச் சிதறடிப்பதாக இருக்கிறது என்பது குற்றச்சாட்டு.
இரண்டாவது கனவில், இந்தியாவைச் சேர்ந்த கிராமத்துப் பெண்ணான ஆயிஷா, தனக்கு இறைத்தூதரின் அருள் கிடைத்ததாகக் கூறி, மக்களை அழைத்துச் செல்கிறாள். அரபிக் பெருங்கடல் குறுக்கிடுகிறது. இறையருள் இருப்பதால் கடல்நீர் மீது அவர்கள் நடக்க முடியும் என்கிறாள். அதைக் கேட்டு கடல் மீது நடக்கிறபோது, அவர்கள் நீரில் மறைகிறார்கள். அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்றும், இல்லை இறையருளால் புனித நகரத்தை அடைந்துவிட்டார்கள் என்றும் இருவிதமாகப் பேசிக்கொள்ளப்படுகிறது. மூன்றாவது கனவில் மதவெறியரான இமாம் என்பவர் வருகிறார். அவர், இடைறத்தூதராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் ஃபரிஷ்டாவை, தன்னால் நாடுகடத்தப்பட்ட ஆயிஷா என்ற அரசியுடன் செயற்கையாகப் போரில் ஈடுபட வைக்கிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | சல்மான் ருஷ்டி (Salman Rushdie) எழுதிய “தி சாட்டனிக் வெர்சஸ்” (The Satanic Verses Novel in Tamil) நாவல்

இத்தகைய சித்தரிப்புகள் வரம்புமீறிவிட்டன, தூதரின் சொற்களில் அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனங்கள்தான் விபரீதங்களாக உருவெடுத்தன. இறைத்தூதர், புனித நகரம் ஆகிய பெயர்களைக் கற்பனையாகப் புனைந்தவர், இவற்றையும் வேறு வகையில் கொண்டுவந்திருக்க முடியும் என்ற கரிசனக் குரல்களும் கேட்கின்றன. ஆயினும், ஃபத்வா அறிவித்து ஒருவரின் வெளியுலகை இருட்டடிப்பு செய்வது ஏற்க முடியாதது என்ற படைப்புரிமைக் குரல்களும் உரக்க எழுகின்றன. ஒரு படைப்பில் தவறான சித்தரிப்பு இருப்பதாகக் கருதப்படுமானால், அது தவறு என்று சுட்டிக்காட்டவும், சரியானது எது என்று எடுத்துக்காட்டவுமான வாய்ப்பை விமர்சிக்கிறவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமேயன்றி இப்படி ஆளை ஒழிக்கும் பாதையில் செல்வது நாகரிகக் காலத்திற்குப் பொருந்ததாதது. மேலும் அது மார்க்கத்தினர் அனைவருமே சகிப்புத்தன்மையற்றவர்கள் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த உணர்வுகளும் மேலோங்க, அந்த “பத்வா” ஆணையை விலக்கிக்கொள்வதற்கான முயற்சி தொடங்கப்பட்டது. ஆனால் தொடரவில்லை. ஏனென்றால், மதவிதிகளின்படி ஃபத்வா ஆணையைப் பிறப்பித்தவர் யாரோ அவரேதான் விலக்கிக்கொள்ளவும் அதிகாரம் உள்ளவர். ஆனால் அயதுல்லா கோமெய்னி காலமாகிவிட்டாரே… எதிர்காலத்தில் எந்த மதம், எந்த அமைப்பானாலும் இப்படிப்பட்ட தண்டனை ஆணைகளைப் பிறப்பிக்கிற அதிகாரங்கள் இருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியை மனித நேய மத நம்பிக்கையாளர்கள் எழுப்புவது சிறந்ததொரு சேவையாக அமையும்.

அதற்கொரு இணக்கத் துணையாக, தி சாட்டனிக் வெர்சஸ் (The Satanic Verses) இந்த நாவல் 1988ஆம் ஆண்டுக்கான ஒயிட்பிரெட் விருது (இப்போது கோஸ்டா புத்தக விருது என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையையும் பெற்றது.

https://bookday.in/books-beyond-obstacles-17-salman-rushdies-the-satanic-verses-novel-based-article-written-by-a-kumaresan/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | “மோபி டிக் (Moby-Dick)” நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –18 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” நாவல் 

திமிங்கல வேட்டைக்குப் புறப்பட்டு தத்துவங்களுக்கு வலை வீசிய நாவல்

அ. குமரேசன்

மதம் கூறும் தத்துவங்களை விசாரணைக்கு உட்படுத்துகிற, இயற்கையில் மனிதரின் இடம் என்று விவாதிக்கிற ஆழ்ந்த உள்ளடக்கத்திலும், மாறுபட்ட சித்தரிப்பு வகையிலும் முத்திரை பதித்த படைப்பு என இலக்கிய உலகில் கொண்டாடப்படுகிற ஒரு நாவல், அது வெளியானபோது (1851) கரடு முரடான எழுத்து நடை என்று புறந்தள்ளப்பட்டது. மிக நீளமாக இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. புத்தகக் கடைகளில் விற்பனையாகாததால் பதிப்பகங்களால் புறக்கணிக்கப்பட்டவராக ஒரு துறைமுகப் பணியாளராக வேலை செய்தார் அதன் படைப்பாளி. இவரை எழுத்தாளர் என்று சொல்கிறார்களே என மற்றவர்களால் பேசப்படுகிற அளவுக்கே இருந்தவர் தனது மற்ற படைப்புகளும் ஏற்கப்படாத நிலையிலேயே காலமானார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

ஹெர்மன் மெல்வில் (Herman Melville)

அந்த அமெரிக்க எழுத்தாளர் பெயர் ஹெர்மன் மெல்வில் (Herman Melville) (1819–91). அவருடைய அந்த முக்கியமான நாவல் ‘மோபி டிக்’ (Moby-Dick).

கடல் சார்ந்த வாழ்க்கையே மையமாக இருக்கும் மாலுமிகளும் தொடர்ச்சியாகப் பயணிக்கிறவர்களும் கப்பல்களை அடிக்கடி தாக்கக்கூடிய குறிப்பிட்ட திமிங்கலங்களுக்கும் இதர பெரிய உயிரிகளுக்கும் அடையாளப் பெயர்கள் சூட்டுவதுண்டு. அப்படி, கடலில் அட்டகாசம் செய்யும் ஒரு வெள்ளைத் திமிங்கலத்திற்குச் சூட்டப்பட்ட பெயர்தான் மோபி டிக் (Moby-Dick). அக்காலத்தில் மெழுகு, சில வாசனைத் திரவங்கள், எந்திர உயவுப்பசை உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான கொழுப்பு எண்ணைக்காகவும், உணவுக்கான இறைச்சிக்காகவும், மருத்துவ ஆற்றல் உள்ளது என்ற நம்பிக்கையால் வெட்டியெடுக்கப்பட்ட உறுப்புகளுக்காகவும் திமிங்கல வேட்டைகள் கட்டுப்பாடின்றி நடத்தப்பட்டன. அதன் செரிமான மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் ஒரு பசை, கடல் நீரில் மிதந்து, சூரிய ஒளியால் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒரு நறுமணத்தைப் பெறும். அம்பரிஸ் எனப்படும் அந்தப் பொருள், மனிதர்களின் இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது!

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

குறிப்பாக ‘விந்துத் திமிங்கலம்’ (ஸ்பெர்ம் வேல்) எனப்படும் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டன. அவற்றின் தலை வழியாகக் கிடைக்கும் கொழுப்பு எண்ணெய் விந்து போன்ற நிறத்துடனும் பசைத்தன்மையுடனும் இருப்பதால், அது திமிங்கலத்தின் விந்து என்று தவறாகக் கருதப்பட்டு அவ்வாறு குறிப்பிடப்பட்டது. (கடலில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததைத் தொடர்ந்து நாடுகளிடை திமிங்கல ஆணையம் (IWC) அமைக்கப்பட்டு, 1986ஆம் ஆண்டில்தான் வணிக நோக்கத் திமிங்கல வேட்டைக்குத் தடை விதிக்கப்பட்டது. சில நாடுகளின் அரசுகளும் நிறுவனங்களும் அந்தத் தடையைக் கண்டுகொள்வதில்லை). கடலில் இறங்கும் கப்பலின் கேப்டன் அந்த மோபி டிக்கையும் தேடுகிற பயணத்தின் மூலமாக மனிதர்களுக்கும் இதர உயிரிகளுக்குமான உறவு பற்றியும் பேசுகிறது இந்த நாவல்.

வேட்டையின் கதை

சாகச வேட்கையும், ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து விடுபடும் விருப்பமும் கொண்டவனான இஸ்மேல் ‘பிக்வோட்’ என்ற திமிங்கல வேட்டைக் கப்பலில்,ஒரு மாலுமியாக வேலைக்குச் சேர்கிறான்.. அவனுடைய பார்வையில்தான் கதை சொல்லப்படுகிறது. கப்பலின் கேப்டன் அஹாப் ஒரு காலை இழந்து செயற்கைக் கால் பொருத்திக் கொண்டவர். மிகுந்த பிடிவாதக்காரரான அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தது மோபி டிக் (Moby-Dick) திமிங்கலத்தைப் பிடிக்க முயன்றபோதுதான். அதை எப்படியாவது கண்டுபிடித்துக் கொல்ல வேண்டும் என்ற பழியுணர்வோடு இருக்கிறார். அதற்காகவே உலகின் எல்லாக் கடல்களிலும் கப்பலைச் செலுத்தக் கட்டாயப்படுத்துகிறார்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

அவருடைய பணியாளர்களுடன் திமிங்கல வேட்டைக்காரர்களான மூன்று பேர் சேர்ந்துகொள்கிறார்கள். பின்னர், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஈட்டி எறிபவர்களான மூன்று பேர் அஹாப்பின் பழிவாங்கல் பயணத்தில் இணைகிறார்கள்.

அந்தப் பயணத்தை இஸ்மேல் சித்தரிப்பதன் மூலம் கடலின் பல்வேறு தன்மைகள், திமிங்கலம் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இயல்புகள், திமிங்கல வேட்டை நுட்பங்கள், அது சார்ந்த சந்தை நிலவரங்கள், சாகசமும் சோதனைகளும் நிறைந்த மாலுமிகளின் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். அஹாப்பின் பழி வெறி படிப்படியாக அதிகரித்து, அவரை ஒரு விசித்திரமான, கொடூரமான தலைவராக மாற்றுகிறது. அவர் திமிங்கலங்களால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களது கப்பல்களின் கேப்டன்களைச் சந்திக்கிறபோது அவர்கள் மோபி டிக் (Moby-Dick) பற்றி எச்சரிக்கிறார்கள். அவர் தன் நோக்கத்தில் பின்வாங்குவதாக இல்லை.

உச்சக்கட்டத்தில் பிக்வோட் கப்பல் மோபி டிக்கைக் கண்டுபிடிக்கிறது. அஹாப்பும் மற்ற மாலுமிகளும், உடன் வந்த வேட்டையர்களும் மூன்று நாட்கள் தொடர்ச்சியான, அழிவுகரமான தாக்குதல்களில் இறங்குகின்றனர். மோபி டிக்கும் மோதுகிறது. அதுவொரு கடற்போராகவே நடக்கிறது. அஹாப் தனது ஈட்டியால் தாக்க முற்படும்போது மோபி டிக் (Moby-Dick) கப்பலைத் தாக்குகிறது. கப்பல் முழுமையாக அழிகிறது. உயிரிழக்கும் நிலையில் இருக்கும் மோபி டிக், ஒரு படகை மீட்க முயலும் அஹாப்பைக் கையில் ஈட்டியோடு கடலுக்குள்ளே இழுத்துச் சென்றுவிடுகிறது இஸ்மேல் தவிர்த்து மாலுமிகள், திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள் எல்லோரும் மோபி டிக் (Moby-Dick) தாக்குதலில் சிக்கியும் கடலில் மூழ்கியும் உயிரிழக்கிறார்கள்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

பயணிக்கிறபோது இறந்துபோகக் கூடியவர்களை கடலிலேயே நல்லடக்கம் செய்வதற்காகக் கப்பலின் தச்சர் செய்து வைத்திருந்த ஒரு சவப்பெட்டி நீரில் மிதக்கிறது. அதில் தொற்றிக்கொள்ளும் இஸ்மேல் மட்டும் தப்பிக்கிறான். அந்தப் பகுதிக்கு வரும் மற்றொரு கப்பலின் மாலுமிகள் அவனை மீட்கிறார்கள்.

தத்துவ விசாரணைகள்

கூரிய ஆயுதம் இருந்தும் மோபியிடமிருந்து அஹாப் தப்பிக்க முடியாமல் போவது இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எந்த அளவுக்கு அழிவில் இறங்க முடியும் என்று நுணுக்கமாக யோசிக்க வைக்கிறது. இயற்கையின் வழங்கல்களைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கையோடு இணைந்து வாழலாமேயன்றி, இயற்கையோடு முரண்பட்டுப் பகைத்து வாழ முடியாது என்று நாவல் விவாதிக்கிறது. இயற்கையின் கட்டுக்கடங்காத வல்லமையின் பிரதிநிதிதான் மோபி டிக் (Moby-Dick) திமிங்கலம் என்று திறனாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

நாவல் நெடுகிலும் பைபிள் குறிப்புகள், தத்துவ விளக்கங்கள், மனிதரின் இருப்பு, நன்மை–தீமை பற்றிய கருத்தியல்கள், நீதிக் கோட்பாடுகள் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாவல் அப்போது எதிர்க்கப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். அஹாப் தன் விதியால் அலைக்கழிக்கப்பட்டாரா அல்லது தனது பழியுணர்வால் இழுத்துச் செல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டள்ளன. தலைமைப் பொறுப்பில் இருந்தவனின் மூர்க்கத்தாலும் முட்டாள்தனத்தாலும் மற்றவர்களும் அழிவைச் சந்திக்க நேரிடும் அரசியலும் நுட்பமாகப் பேசப்பட்டிருக்கிறது.

எதிர்ப்புகளையும் புறக்கணிப்புகளையுமே சந்தித்த மெல்வில் தனது நாவல் குறித்த இத்தகைய நல்ல மதிப்பீடுகளைப் பார்க்க முடியாமல் போனது ஒரு துயரம்தான். படைப்பு வெற்றி பெற்று படைப்பாளி தோற்றுவிட்ட கதையா? இல்லை, படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது படைப்பாளியின் வெற்றிதானே?

எழுத்தாளரின் சாகசங்கள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –17 | ஹெர்மன் மெல்வில் (Herman Melville) எழுதிய “மோபி டிக் (Moby-Dick)” (Whale Hunting Novel in Tamil) நாவல்

ஹெர்மன் மெல்வில் (Herman Melville) வாழ்க்கையே கூட சாகசங்கள் நிரம்பியதுதான். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையின் மரணத்தால் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, குடும்பத்திற்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல வேலைகளைச் செய்த அவர் பின்னர் ஒரு வங்கி ஊழியரானார். அதன் பின் பள்ளி ஆசிரியரானார். தனது 19ஆவது வயதில் ஒரு கப்பல் ஊழியராகச் சேர்ந்து கடல் பயணத்தைத் தொடங்கினார். அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் கப்பல் வாழ்க்கை சார்ந்த சில வெற்றிகரமான நாவல்களை எழுத உதவின.

வேறொரு கப்பலில் வேலை செய்தபோது ஒரு தீவில் நிறுத்தப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பித்து ஓடினார், சில காலம் பழங்குடி மக்களுடன் பழகி வாழ்ந்தார். இடையில் பிரிட்டிஷ் சிறையில் சில மாதங்கள் அடைக்கப்பட்டார். விடுதலையாகி நாடு திரும்பிய பிறகு, அமெரிக்கக் கடற்படைக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். இந்தக் கடல் அனுபவங்களின்போது ‘மோக்கா டாக்’ என்று பெயரிடப்பட்ட திமிங்கலம் பற்றி நிறைய விவரங்களை அறிந்தார். அது மோபி டிக்காகப் பரிணமித்தது என்று விக்கிபீடியா, ‘ஜெமினி’ ஏஐ தளங்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக் கழகங்களின் இலக்கிய ஆய்வுகளுக்குரிய ஒரு புத்தகமாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மௌன சினிமாக் காலத்திலேயே ‘தி ஸீ பீஸ்ட்’ என்ற பெயரில் திரைக்கு வந்தது. பின்னர் அதே திரைக்கதையின் பேசும் பதிப்பாக நாவலின் பெயரிலேயே இரண்டு முறை திரைப்படங்களாக வந்தது. இந்தக் கதையைத் தழுவிய, வேறு கதாபாத்திரங்களையும் அனுபவங்களையும் காட்டிய சில தொலைக்காட்சித் தொடர்களும் வந்திருக்கின்றன.

அறிவியலாளர்களும் பல்லுயிர்ப் பாதுகாப்பு அக்கறையாளர்களும் விடுக்கும் எச்சரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், வேட்டைச் சுரண்டல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிரான பொதுச் சீற்றத்தை வளர்ப்பதில் தனது பங்கையும் அளிக்கிறது மோபி டிக் (Moby-Dick).

https://bookday.in/books-beyond-obstacles-series-18-is-herman-melvilles-moby-dick-whale-hunting-novel-based-article-written-by-a-kumaresan/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 : அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

அதிர்ச்சியூட்டி இருண்ட பக்கங்களில் வெளிச்சம் பாய்ச்சும் திகில் நாவல்

அ. குமரேசன்

புத்தகக் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் தாளில் சுற்றி வேறு ஏதோவொரு பொருள் போலக் கொடுப்பார்கள். வாடிக்கையாளர்கள் அப்படியே வேறு ஏதோவொரு பொருள் போல எடுத்துச் செல்வார்கள். அந்த அளவுக்குக் கவனத்தோடு விற்கப்பட்டது, எச்சரிக்கையாக கொண்டுசெல்லப்பட்டது ஒரு நாவல். காரணம் ஆஸ்திரேலிய நாட்டின் பல மாநிலங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி, நியூஜிலாந்து உள்ளிட்ட நாடுகளில் புத்தக விற்பனைக்குக் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

பொதுவான வன்முறை மன நிலையையும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான கொடூரங்களையும் நியாயப்படுத்துகிறது, அத்தகைய வன்மங்கள் மீது ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று எதிர்மறை விமர்சனங்கள் மேலோங்கின. ஆனால், இலக்கியவாதிகளின் தொடர்ச்சியான விவாதங்கள், வாசகர்களின் வரவேற்பு உள்ளிட்ட ஆதரவுகளால் தடைகள் விலக்கப்பட்டன. இன்று, “வாசக சமூகத்தை ஈர்த்த செழுமையான படைப்பு” என்ற அடையாளத்தைப் பெற்று, உலகின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) என்ற புத்தகம் பற்றி தகவல் தொகுப்புப் பெட்டகமாகிய விக்கிபீடியா, செயற்கை நுண்ணறிவுக் கருவியாகிய ஜெமினி இரண்டும் தருகிற தகவல்கள் கவனிக்கத் தக்கவை. தீவிரமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஒரு வன்மமான நையாண்டிக்கு உட்படுத்தும் “கறுப்பு நகைச்சுவை” வடிவத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் 1991இல் வெளியானது.

1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நியூயார்க் நகர வாழ்க்கையோடு இணைந்ததாக ஒரு பணக்கார இளைஞனின் உளவியல் சிக்கல்களைக் கதையாக்கியிருக்கிறார் எல்லிஸ். குறிப்பாக பெரு முதலாளித்துவப் பங்குச் சந்தை வேட்டைக் களமான வால் ஸ்ட்ரீட், அதில் புரையோடிப் போயிருக்கும் மோசடிகள், அது கட்டமைக்கும் நுகர்வுக் கலாச்சார நிலவரங்கள், அதனால் பரவியிருக்கும் சமூகப் போலித் தனங்கள், தனி மனிதருக்கு ஏற்படும் எதிர்மறையான உளவியல் தாக்கங்கள் ஆகியவற்றை நாவல் துணிச்சலாகப் பேசுகிறது.

வால் ஸ்ட்ரீட் சந்தையின் பெரு நிறுவனங்களின் பங்குகள் விற்பனையால் “பேராசை பெருநன்மை” என்ற மனப்பான்மை வளர்க்கப்பட்டிருப்பதை நாவல் கடுமையாகச் சாடுகிறது. மனிதர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஆடைகள், கார்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்கள், புழங்குகிற பணக்கார உணவகங்கள் என்ற நிறுவன விற்பனை அடையாளப் பெயர்களில்தான் (பிராண்ட்) மதிப்பிடப்படுகிறார்கள். மனித உணர்வுகளும் உறவுகளும் அற்பமானவையாகத் தள்ளப்படுகின்றன. சமூகப் பொறுப்பைப் பொறுத்த மட்டில் கார்ப்பரேட் உலகத்தின் உள்ளீடற்ற மேலோட்டத் தன்மையை நாவல் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது என்றும் திறனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளும் பாலியல் துன்புறுத்தல்களும் விரிவாக, அதிர்ச்சியளிக்கும் வகையில், அப்படிப்பட்ட கொடுமைகள் மீது ஒரு ரசனையை ஏற்படுத்தும் விதத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று பெண்ணுரிமைக் கருத்தாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிமனிதர்களை சமுதாயம் கொடியவர்களாக மாற்றுவதைத்தான் எழுத்தாளர் இவ்வாறு சித்தரித்திருக்கிறார் என்று நாவலின் ஆதரவாளர்கள் விளக்கமளித்தார்கள். இன்றளவும் இந்த விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

கதையின் நாயகன் சித்தரிக்கப்படும் விதமும் விமர்சிக்கப்பட்டது. அவன் உண்மையிலேயே குற்றங்களைச் செய்கிறானா அல்லது குற்றங்களைச் செய்வது போன்ற மனதின் மாயக் கற்பனையில் மூழ்கி, அவனே அதை நம்புகிறானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே நம்பகத் தன்மையில்லாத கதையாடலாகவும், உண்மை வாழ்க்கை நடப்புடன் இணையாததாகவும் நாவல் அமைந்திருக்கிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். அப்படியில்லை, முதலாளித்துவம் திணிக்கிற நுகர்வுக் கலாச்சாரம் மனிதர்களை உண்மை நடப்புச் சூழல்களிலிருந்து துண்டித்துவிடுகிறது, அதைத்தான் நாவல் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் ஆதரவாளர்கள்.

நாவலை வெளியிட ஒப்பந்தம் செய்திருந்த நிறுவனம், அதன் உள்ளடக்கம் காரணமாக ஒதுங்கிக்கொண்டது. வெறொரு பதிப்பகம் வெளியிட்டது. அமெரிக்க நூலகங்கள் சங்கத்தால் 1990களில் அதிகமாகத் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இது இடம் பிடித்தது. எல்லிஸ்சுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இத்தகைய நிகழ்வுகள் உலகப் புத்தகச் சமூகத்தின் கவனத்தைப் பெற்றன. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் துறுதுறுப்போடு, புத்தகப் படிகளைக் கடத்தி வரச்செய்து பல நாடுகளின் வாசகர்கள் படித்தார்கள். படிப்படியாகத் தடை நீர்த்துப்போனது.

கதை என்னவெனில்…

1989 ஆம் ஆண்டில் வால் ஸ்ட்ரீட் வணிகம் உச்சத்தில் இருக்கிறது. பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பேட்மேன் ஒரு முதலீட்டு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான். அவன் பகல் நேரங்களில் வால் ஸ்ட்ரீட் உயரடுக்கு வட்டத்தில் பளபளப்பான வாழ்க்கையை வாழ்கிறான். இரவில் ஈவிரக்கமற்ற கொலைகளையும், பாலியல் அத்துமீறல்களையும், சித்திரவதைகளையும் செய்கிறான். தனது சகாக்களுடன் வெள்ளிக்கிழமை இரவுகளில் கோகெய்ன் எடுத்துக்கொள்கிறான். மற்றவர்களின் ஆடைகளை விமர்சிக்கிறான். நாகரிகமாக இருப்பது பற்றி ஆலோசனைகள் கூறுகிறான். நடத்தை விதிகள் குறித்துக் கேள்வி கேட்கிறான்.
அவனுக்கும் இன்னொரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த எவலின் எனும் பெண்ணுக்கும் அவனுடைய விருப்பத்தை விசாரிக்காமலே, திருமணத்தை நிச்சயிக்கிறார்கள் பணக்காரப் பெற்றோர்கள். தனது சகோதரனுடனும் மறதிநோயாளியான தாயுடனும் தகராறு செய்கிறான். ஒருநாள், சக ஊழியர்களில் ஒருவனான ஓவன் என்பவனைக் கொலை செய்கிறான் பேட்மேன்.. பிறகு ஓவனுடைய வீட்டைக் கைப்பற்றி, தன்னிடம் சிக்குகிறவர்களை அங்கே அழைத்து வந்து கொல்கிறான். தனது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும் பேட்மேன் முற்றிய உளவியல் சிக்கலுள்ளவனாக (சைக்கோ) மாறுகிறான். சாதாரண கத்திக் குத்துகளில் தொடங்கி, நீண்ட நேர பாலியல் வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புச் சிதைவு, கொல்லப்பட்டவர்களின் உடல் சதையை அறுத்து உண்ணுதல், சடலத்துடன் உடலுறவு என்று அவனுடைய உளவியல் நிலை கொடூரமாகச் சீர்குலைகிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

பல சமயங்களில் தனது கொடூரச் செயல்களை வெளிப்படையாகத் தனது சக ஊழியர்களிடம் கூறுகிறான். ஆனால் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கொலை, மரண தண்டனை என்று அவன் சொல்வதை, வால் ஸ்ட்ரீட் வர்த்தகத்தோடு இணைந்த “நிறுவன இணைப்பு”, “கையகப்படுத்துதல்” என்ற பொருளில் சொல்வதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

நிலைமை முற்றிக்கொண்டே போகிறது.தெருவில் சீரில்லாமல் சுற்றுகிறவர்களைக் கொல்கிறான். அவனைப் பிடிப்பதற்கு அதிரடிப்படையினர் ஹெலிகாப்டரில் அனுப்பப்படுகிறார்கள். பேட்மேன் தப்பி ஓடி தனது அலுவலகத்தில் ஒளிந்துகொள்கிறான். ஹரோல்ட் கார்ன்ஸ் என்ற தனது வழக்குரைஞருடன் தொலைபேசியில் தொடர்புகொள்கிறான். தொலைபேசியை அவர் எடுக்காத நிலையில் அதன் பதிலனுப்புக் கருவியில் தனது எல்லா குற்றங்களையும் சொல்ல்ப் பதிவு செய்கிறான்.
அந்தக் கொலை வீட்டுக்கு மறுபடியும் போகிறான். அங்கே அவன் ஏற்கெனவே இரண்டு பாலியல் தொழிலாளர்களைக் கொன்று சிதைத்திருந்தான். அழுகிய உடல்களை எதிர்பார்த்துச் செல்கிறவன் அந்த வீடு முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைக்கிறான். துர்நாற்றம் வீசுமானால் அதை மாற்றுவதற்குக வாச மலர்கள் நிரப்பப்பட்டிருகின்றன. வீட்டு மனை வணிக முகவர் ஒருவர், பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து அந்த வீட்டைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார். உண்மையில் அப்படி எந்த விளம்பரமும் இல்லை. அந்த வீட்டை விட்டு வெளியேறுமாறும் மீண்டும் வர வேண்டாம் என்றும் அந்த முகவர் பேட்மேனிடம் கூறுகிறார். விலை மதிப்புமிக்க அந்த வீட்டின் விற்பனை வாய்ப்பு குறையாமல் இருப்பதற்காகக் கட்டட உரிமையாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு, கொலைகள் மறைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

பேட்மேன் விசித்திரமான மாயத் தோற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகிறான். ஒரு உணவுத் துணுக்கிற்குள் தன்னை யாரோ நேர்காணல் செய்வதாக, ஒரு பூங்கா இருக்கை உயிர் பெற்று எழுந்து துரத்துவதாக, ஐஸ்கிரீம் பெட்டிக்குள் மனித எலும்புத்துண்டு கிடப்பதாக… இப்படியெல்லாம் மாயையான நிகழ்வுகளை அனுபவிக்கிறான். வழக்குரைஞரைத் தொடர்பு கொள்ளும் பேட்மேன், அவருடைய தொலைபேசி இயந்திரத்தில் பதிவு செய்திருந்த வாக்குமூலம் பற்றிக் கேட்கிறான். அவரோ அதை ஒரு வேடிக்கை என்று கருதிச் சிரிக்கிறார். வழக்குரைஞர் கார்ன்ஸ் தன்னோடு இப்போது தொடர்புகொண்டிருப்பவன் உண்மையான பேட்மேன் அல்ல என்றும், அவனுக்கு இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் துணிவு கிடையாது என்றும் கூறுகிறார்.

பேட்மேனும் நண்பர்களும் ஒரு புதிய விடுதியில் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பதோடு நாவல் முடிவடைகிறது. அங்கே எல்லோரும் பொருளாதார வெற்றிதான் உண்மையான மகிழ்ச்சி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சியில் அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு விழா மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. , பல்வேறு எழுத்துருக்களுடன் கூடிய ஒரு விளம்பரப் பலகையில் “இது வெளியேறும் வழியல்ல” என்று எழுதப்பட்டிருக்கிறது. நுகர்வுக் கலாச்சாரச் சூழல்களிலிருந்து அவனோ, அவன் உருவாக்கிய கொலைச் சூழல்களிலிருந்து மற்றவர்களோ தப்பித்து வெளியேறிவிட முடியாது என்று அந்த வாசகம் உணர்த்துகிறது.

பெயர்க் காரணம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் –19 | பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் (Bret Easton Ellis) எழுதிய ‘அமெரிக்கன் சைக்கோ’ (American Psycho) புத்தகம்

நாவலை எழுதிக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிகையாளர் எல்லிஸ்சிடம் அதன் தலைப்பு பற்றிக் கேட்டிருக்கிறார். 1980கள் வாக்கில் பல திரையரங்குகளும் கடைகளும் கொண்ட ஒரு பன்முக வளாகத்திற்குச் சென்றிருந்தாராம். ஒரு திரையரங்கப் பெயர்ப் பலகையில் பெரிய எழுத்துகளில் “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டப்பட்டிருந்ததாம். விசாரித்தபோது, “அமெரிக்கன் ஆந்த்தெம்“ (அமெரிக்க நாட்டுப்பண்), “சைக்கோ 3” (உளவியல் கொடூரன் 3) என்ற இரண்டு திரைப்படங்களின் தலைப்புகளைச் சேர்க்க முடியாததால், இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு “அமெரிக்கன் சைக்கோ” (American Psycho) என்று ஒட்டியதாகச் சொன்னார்களாம்! “அதைப் பார்த்ததும் எனக்கு ‘பூம்!,’ என்று தோன்றியது. நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் புத்தகத்திற்கு அதுதான் தலைப்பு,” என்று கூறினார் எல்லிஸ்.

இலக்கியத் திறனாய்வளரான ஜெஃப்ரி டபிள்யூ. ஹண்டர், “பெருமளவுக்கு முதலாளித்துவத்தின் மேலோட்டத்தனமான சமூகப் பொறுப்பையும் அதன் கொடிய கூறுகளையும் பற்றிய விமர்சனமே இந்த நாவல். கதைமாந்தர்கள் பெரும்பாலும் பொருள்சார் ஆதாயங்களிலும் வெளித்தோற்றங்களிலும்தான் அக்கறை காட்டுகின்றனர். இந்தக் கூறுகள் “மேம்போக்குத்தனம்” உச்சம் பெறுகிற ஒரு பின்நவீனத்துவ உலகின் அடையாளங்களே. அதுதான் பேட்மேன் போன்றோர் மற்ற மனிதர்களையும் வெறும் பண்டங்களாக நினைக்க வைக்கிறது,” என்று பதிவிட்டிருக்கிறார். நாவலின் ஒரு கட்டத்தில் பேட்மேன் ஒரு பெண்ணின் சதையை உண்ணும்போது, “எனது செயல்கள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை நான் உணர்ந்தாலும் இந்தப் பெண், இந்த உடல், இந்த சதை எதுவுமே ஒன்றுமில்லை என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன்,” என்று குறிப்பிடுகிறான்.

அடையாளச் சிக்கல்கள்

இளைஞர்களின் மனக்குழப்பங்கள், சமூகச் சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்தின் பாதக விளைவுகள் உள்ளிட்ட நிலைமைகளைத் தனது படைப்புகளின் கருப்பொருட்களாக எடுத்துக்கொள்கிறார் நையாண்டி எழுத்தாளரும் திரைக்கதையாளருமான பிரெட் ஈஸ்டன் எல்லிஸ். 1964இல் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரில் பிறந்தவரான எல்லிஸ் 1980களிலும் 90களிலும் மாறுபட்ட கலைப் பார்வைகளோடு முன்னணியில் இருந்த ‘இலக்கிய பிராட் பேக்’ என்ற இளம் எழுத்தாளர்கள் குழுவிலும் அங்கம் வகித்தார்.

அமெரிக்க இளைஞர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கியிருப்பதைக் கூறும் ‘லெஸ் தேன் ஜீரோ’, அதன் இரண்டாம் பாகமான ‘இம்பீரியல் பெட்ரூம்ஸ்’’ ஆகிய நாவல்களையும் சில ‘தி இன்ஃபார்மர்ஸ் என்ற சிறுகதைத் தொகுப்பையும், வாழ்க்கைப் பயண நினைவுக் குறிப்பு நூல்களையும் எழுதியிருக்கிறார். லெஸ் தேன் ஜீரோ, தி ரூல்ஸ் ஆஃப் அட்ராக் ஷன், தி இன்ஃபார்மர்ஸ், அமெரிக்கன் சைக்கோ (American Psycho) ஆகிய கதைகள் திரைப்பட வடிவமெடுத்துள்ளன.
எடுத்துச் சொல்லப்படும் உண்மை நிலைமைகளாலும், அப்பட்டமான சித்தரிப்புகளாலும் வாசகர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிற போதிலும், பிரெட் ஈஸ்டன் எல்லிஸ் தனது சர்ச்சைக்குரிய படைப்புகளின் மூலம், ஆழ்ந்த விமர்சனங்களை முன்வைத்து, நவீன அமெரிக்க சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று இலக்கிய உலகினர் சான்றளிக்கின்றனர்.

https://bookday.in/books-beyond-obstacles-series-19-about-bret-easton-ellis-american-psycho-written-by-a-kumaresan/#google_vignette

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 : மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல்

மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள்

அ. குமரேசன்

ஒரு இலக்கியப் புனைவின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அது முன்வைக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க மனமில்லாமல் அதைத் தாக்குவது ஒரு சமூக மூர்க்கம்தான், அதைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் வன்முறைதான்.

ஆனால், ஒரு புத்தகம் மனிதர்களின் இயற்கையான குணமே மூர்க்கம்தான் என்று கூறுகிறது; ஒழுங்குபடுத்தும் அரசியல் விதிகளையும் மத நெறிகளையும் கொச்சைப்படுத்துகிறது; வன்முறைகளை நியாயப்படுத்துகிறது; நம்பிக்கையின்மையைப் போதிக்கிறது என்றெல்லாம் கூறி அதற்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் அதைப் படிக்கக்கூடாது என்று அவர்களின் கைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

1954ஆம் ஆண்டில் வெளியோன ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (ஈக்களின் எசமான் – Lord of the Flies) நாவல் இந்த மூர்க்கத் தடைகளை மீறி வாசகர்களின் கைகளுக்குச் சென்றது. அதை எழுதியவர் வில்லியம் கோல்டிங் (1911–1993). அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1983ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியதில் இந்த நாவலுக்கும் சிறப்பான பங்கிருந்தது. அதற்கு முன் ‘ரைட்ஸ் ஆஃப் பாஸேஜ்’ (பயணவழிச் சடங்குகள்) என்ற நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்தது. இவற்றுடன் ‘தி இன்ஹெரிட்டர்ஸ்’ (வாரிசுகள்), ‘பின்ச்செர் மார்ட்டின்’ (இது இந்த நாவலில் மையக் கதாபாத்திரத்தின் பெயர்) உள்ளிட்ட படைப்புகளும் சேர்ந்தே நோபல் விருதுக்குரிய இடத்தை நிறுவின.

படைப்பாளிக்கொரு பின்னணி

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

வில்லியம் கோல்டிங் (William Golding)

இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் பிறந்தவரான வில்லியம் கோல்டிங் (William Golding) ஒரு நாவல் புனைவாளர், கவிஞர், நாடகாசிரியர். அவரது தந்தை ஒரு பகுத்தறிவாளர், அறிவியலாளர், அரசியல் இயக்க ஈடுபாட்டாளர். தாய் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமைக்காகப் போராடிய களச் செயல்பாட்டாளர். கோல்டிங் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின்படி கடற்படையில் சேர்க்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார்.

வளர்ந்த குடும்பச் சூழலிருந்து மாற்றுச் சிந்தனைகளையும், கட்டாயக் கடற்படைப் பணியிலிருந்து போரின் மோசமான விளைவுகளையும், பள்ளி ஆசிரியர் அனுபவத்திலிருந்து இளையோரின் குண இயல்புகளையும் கூர்மையாக உள்வாங்கினார். மனித வாழ்க்கையும், தத்துவக் கண்ணோட்டமும் சார்ந்த படைப்புகளை உருவாக்கியதில் இந்தப் பின்னணிகளுக்கும் அனுபவங்களுக்கும் அடிப்படையான பங்கிருந்தது என்று இலக்கிய உலகினர் குறிப்பிடுகின்றனர்.

தடைகளையும் கெடுபிடிகளையும் வென்ற அந்த நாவல் இன்று சிறந்ததொரு குறியீட்டுச் சித்தரிப்பாக, தத்துவப் படைப்பாக, அரசியல் புனைவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்களின் எசமான் எந்தப் ஈக்களைப் பறக்க விடுகிறது? எந்த எசமானை நடமாடவிடுகிறது?

தீவில் சிக்கிய சின்னப் பையன்கள்

இரண்டாம் உலகப் போர் பின்னணியில், அணுகுண்டுத் தாக்குதல்கள் வெடிக்கும் அபாயத்தில், பிரிட்டிஷ் அரசு பள்ளிச் சிறுவர்களை ஒரு விமானத்தில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுகிறது. ஒரு பள்ளியின் மாணவர்கள் செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி ஆளரவமற்ற, அழகானதொரு தீவில் விழுகிறது. உடன் பயணித்த ஆசிரியர்கள், விமானப் பணியாளர்கள் உள்பட பெரியவர்கள் அனைவரும் உயிரிழக்க, தப்பிப் பிழைக்கிறவர்கள் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

என்ன செய்வது என்று கலங்கும் சிறுவர்களுக்கு, ஓரளவு முதிர்ச்சியுள்ளவனான ராஃப் தலைமைப் பொறுப்பேற்கிறான். முதலில் அனைவருக்குமிடையே ஒரு நாகரிகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முயலும் ராஃப், ஒரு சங்கை எடுத்து ஊதி, சிறுவர்களைக் கூட்டி கூட்டம் நடத்துகிறான். அப்போது பகுத்தறிவு கொண்ட, ஆனால் உடல் சார்ந்த இயலாமை உள்ளவனான பிக்கி, ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவருக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான். இருவரும் இணைந்து தீவில் ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றனர்.

தீவிலிருந்து தப்பிப்பதற்காக, கடலில் செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சமிக்கை நெருப்பைத் தொடர்ச்சியாக எரிய வைக்க முடிவு செய்கிறார்கள். பிக்கி அணிந்துள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டுகிறார்கள்.

பள்ளியில் பாடகர் குழு தலைவனாக இருந்தவனான ஜாக் மெரிடியூ அடங்காத அதிகாரப் பசி கொண்டவன். விலங்குகளிளை வேட்டையாடிக் கொல்வதில் ஆர்வமுள்ள அவனால் ‘ராஃப் தலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. சமிக்கை நெருப்பை எரிய வைப்பதை விட, காட்டுப் பன்றிகளை வேட்டையாடி உணவாகச் சுடுவதே முக்கியம் என அவன் வாதிடுகிறான். சிறுவர்களில் அதிகமானோர் அவனுடைய குழுவில் சேர்கின்றனர். பன்றிகளை வேட்டையாடுவதில் அவர்கள் மனிதத் தன்மையற்ற வன்மமும் மூர்க்கமும் மிக்க ரசனையை வளர்த்துக் கொள்கின்றனர்.

கொடூர விலங்கு பயம்

தீவில் ஒரு கொடூரமான மிருகம் இருக்கிறது என்ற அச்சம் சிறுவர்களுக்கிடையே பரவுகிறது. முதலில் அது ஒரு கற்பனையாகத்தான் இருந்தது என்றாலும் படிப்படியாக அந்த அச்சம் உண்மையானது என்ற கவலை தொற்றுகிறது. ஜாக் அவர்களின் பீதியை சாதகமாக்கிக்கொண்டு, தன்னால்தான் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லி, ராஃபிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறான். ஒரு வேட்டைக்காரன் போலத் தனது முகத்தில் வண்ணக் கோடுகள் வரைந்து மிரளவைக்கும் சடங்குகளை நடத்துகிறான்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

சமிக்கை நெருப்புப் பராமரிப்பை விட்டுவிட்டு, ஜாக் குழுவினர் வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தீவுக்கு அருகாமையில் வரும் ஒரு கப்பல், அந்த நெருப்பு அணைந்துவிட்டதால், மக்கள் இருப்பதற்கான சமிக்கை கிடைக்காத நிலையில் திரும்பிவிடுகிறது. இது நாகரிகத்தோடு அணுகும் ராஃப், வன்மம் நிறைந்த ஜாக் இருவருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்துகிறது. பகுத்தறிவுள்ள பிக்கி, ஆன்மீகச் சிந்தனை கொண்ட சைமன் என சிலர் மட்டுமே இப்போது ராஃப் குழுவில் நிற்கின்றனர்.

“கொடூர விலங்கு என்பது வெளியே இல்லை, நம் மனதில்தான் இருக்கிறது,” என உணரும் சைமன் அதைப் பிற சிறுவர்களிடம் சொல்கிறான். “எனக்குள்ளேயும் அந்தக் கொடிய விலங்கு இருக்கிறது,” என்ற பொருளில் பேசுகிறான்.. ஆனால் அவன்தான் அந்தக் கொடூர விலங்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளும் ஜாக் குழுவினர் அவனை ஈவிரக்கமின்றித் தாக்கிக் கொல்கின்றனர்.

இப்படியாகப் போகும் கதையில், சிலர் மட்டுமே எஞ்சியிருக்க, பிக்கி சங்கை ஊதி மீண்டும் சிறுவர்களை ஒன்றுகூட்டிப் பகுத்தறிவுடன் பேச முயல்கிறான். அதை ஏற்க முடியாத ஜாக் குழுவினர் ஒரு பாறையை உருட்டி அவனையும் கொல்கின்றனர். நாகரிகத்தின் முழு அழிவையும், அநாகரிக வன்மத்தின் வெற்றியையும் குறிப்பது போல, அந்த ஒற்றுமைச் சங்கு உடைந்து நொறுங்குகிறது.

இப்போது தனியாக விடப்படுகிறான் ராஃப். அவனை வேட்டையாட முயல்கிறது கும்பல். அவனைச் சுற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறது. உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறான். குழுவினர் துரத்துகின்றனர். இறுதியாகக் கடற்கரையை வந்தடைகிறவனை அங்கே முகாமிட்டிருக்கும் கடற்படைத் தலைவர் மீட்கிறார். சிறுவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர், தீவில் நடந்த அட்டூழியங்களைக் கேட்டு உறைந்து போகிறார். அவரைக் கண்டதும் ராஃப், ஜாக் உள்பட எல்லோரும் மறுபடி சிறுவர்களாக மாறி அழத் தொடங்குகிறார்கள்.

எசமான் யாரெனில்…

எஞ்சிய சிறுவர்கள் மீட்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அவர்களை மீட்பவரே ஒரு போர்க் கப்பலின் தலைவர்தான். பெரியவர்களின் உலகம் ஏற்கெனவே வேறு வகையான வன்முறை அரசியலால் கட்டப்பட்டிருப்பதைக் கதை உணர்த்துகிறது என்று திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆயுதமோகிகள் மானுட மாண்புகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றவாளிகளே என்று சாடுகிறது. போர் வேண்டாம் எனும் இலக்கியக் குரலாக ஒலிக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

ஆதியில் மனிதர்கள் மூர்க்கத்தனமாக இருந்தார்கள் (இன்றும் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்!), படிப்படியாக மாறினார்கள் என்பது உண்மை. அந்த மாற்றத்தைத்தான் நாகரிகம் என்று கூறுகிறோம் என்பதும் உண்மை. அந்த நாகரிகத்தின் காவல் இல்லாமல் போகுமானால், மனிதப் பரிணாமத்தின் மாண்புகள் மறையும், புதைந்து போன தீமைகள் மேலெழும் என்ற எச்சரிக்கைச் சங்கையும் இந்த நாவல் ஊதுகிறது என இணையவழித் திறனாய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

அழுகிப்போன பொருள்களின் மீது ஈக்கள் மொய்க்கும். நாவலில், தரையில் ஊன்றப்பட்ட ஒரு குச்சியில் செருகப்பட்டிருக்கும் ஒரு பன்றித் தலையை ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்களைப் போல தீமைகள் எங்கும் பரவியிருப்பதைச் சொல்ல முயல்கிறது நாவல். சுயநலமும் வன்மமும் குடியேறிய மனம்தான் அந்த ஈக்களின் எசமான்.

ஏன் சிறுவர்கள்?
ஏன் ஆண்கள்?

தீவுக் காட்டுக்குள் சில வழிபாட்டு முறைகளைத் தொடங்குவதாகச் சித்தரித்திருப்பதும், சைமனின் கருத்து ஏற்கப்படாததும் மதத்தின் தோல்வியைக் குறிக்கின்றன, ஆகவேதான், போர் மோக அரசியல் சிந்தனையாளர்களோடு, மதவாதிகளும் இந்த நாவலை எதிர்த்தார்கள் போல!

வாழ்க்கை அனுபவத்தின் பிரதிநிதிகளான பெரியவர்களின் வழிகாட்டலும், பாலினத் துணைகளான பெண்களும் இல்லாதபோது மூர்க்கத்தின் இருண்மையில் மூழ்க நேரிடும் எனக் காட்டுவதே ஆண்கள் மட்டுமே உள்ள அந்தக் கூட்டம். அதே போல், இத்தனை தலைமுறைகள் கடந்தும் மனிதர்கள் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் காட்டாட்சி செய்வோர் சிறுவர்கள் என்ற சித்தரிப்பு.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் புத்தகம்

இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1963இல் பிரிட்டன் தயாரிப்பபாகக் கறுப்பு வெள்ளையில் வந்த முதல் படம் நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற வரவேற்பைப் பெற்றது. 1990இல் ஹாலிவுட் தயாரிப்பாக, இங்கிலாந்துச் சிறுவர்களை அமெரிக்கர்களாக மாற்றிச் சித்தரித்த பல வண்ணப் படம், நாவலின் ஆழத்தைத் தொடத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே நாவல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. படக்கதைப் புத்தகம், கார்ட்டூன் படம் என்ற வடிவங்களையும் இந்த நாவல் எடுத்திருக்கிறது.

ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற நாவல், தீங்குகளுக்குத் தீர்வு காணப் போராடுகிற சக்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கருத்தும் பகிரப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தில் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு கருத்துகளின் “போர்” நிற்காமல் தொடரும்தான் இல்லையா!

https://bookday.in/books-beyond-obstacles-20-about-william-goldings-lord-of-the-flies-written-by-a-kumaresan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21: ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல்

ஆபாசமெனத் தள்ளப்பட்டு அருமையான தன்வரலாறாக ஏற்கப்பட்ட ‘கடக ரேகை’

– அ. குமரேசன்

ஒன்று நாவலாக இருக்க வேண்டும், அல்லது தன் வரலாறாக இருக்க வேண்டும், அல்லது மற்றவர்கள் பற்றிய உண்மைக் கதையாக இருக்க வேண்டும் – இலக்கியத்தின் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் வரவில்லையே என்று தள்ளுபடி செய்யப்பட்டது ஒரு புத்தகம். ஆபாசம் என்றும் அதற்குத் தடை விதிக்கப்பட்டது. புத்தகத்தின் வெளியீட்டாளரும் விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத் தீர்ப்பில் அவர்கள் விடுதலையானதோடு, ஆபாசம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்கும் புதிய புரிதல்களுக்கும் இட்டுச் சென்றது அந்தப் புத்தகம்.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

நவீன இலக்கிய முத்துமணிகளில் ஒன்றாக மதிக்கப்படும் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer)அந்த இடத்திற்கு வந்தது ஒரு சுவையான அனுபவப் பயணம்தான். ஹென்றி மில்லர் (Henry Miller)எழுதிய தன் வரலாறும் சமூக விமர்சனமும் கற்பனையும் கலந்த அந்தப் படைப்பு, தணிக்கை வரலாற்றிலும் இடம் பிடித்தது.

1891இல் பிறந்து 1980இல் விடைபெற்ற (90 ஆண்டுகள்) அமெரிக்கரான ஹென்றி மில்லர் (Henry Miller) இளமைக் காலத்தில் பிரான்ஸ் நாட்டில், குறிப்பாக பாரிஸ் நகரில் வாழ்ந்தார். வறுமை, புறக்கணிப்புகள், பலவகை மனிதர்களோடு தொடர்புகள் என வாழ்ந்த அந்த அனுபவங்களையும், பிற்காலத்தில் அமெரிக்க வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளையும்தான் புத்தகங்களாக எழுதினார்.

அவரே தன் எழுத்துகளைப் புனைவிலக்கியம் என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆயினும், உண்மைகளும் கற்பனைகளும் கலந்த வெளிப்பாட்டிற்கு நல்ல முன்மாதிரிகளாக அந்தப் புத்தகங்கள் இன்று எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘டிராபிக் கேன்சர்’ தன்வரலாற்றுப் புனைவு என்ற புதிய வகை எழுத்துகளுக்கான ஒரு சான்றாக எடுத்துக்காட்டப்படுகிறது.

படைப்பாளிகள் அரவணைப்பு

ஆங்கிலத்தில் அவர் எழுதிய இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1934இல் பாரிஸ் நகரில் வெளியானது. அங்கே அது தடையையோ, கடும் நடவடிக்கைகளையோ சந்திக்கவில்லை என்றாலும், கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ளவே செய்தது. ஐக்கியப் பேரரசு (இங்கிலாந்து) தடை விதிக்க முடிவு செய்தது, ஆயினும் டி.எஸ். எலியட் உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் அந்த எழுத்தாக்கத்தை அரவணைத்தார்கள்.

ஆகவே சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இறக்குமதி செய்வதில் பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. கடத்தி வரப்பட்ட புத்தகப் படிகள்தான் வாசகர்கள் கைகளுக்குச் சென்றன.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

ஹென்றி மில்லர் (Henry Miller)

கனடா சுங்கத் துறை புத்தகத்திற்குத் தடை விதித்தது. புத்தகக் கடைகளிலிருந்த படிகளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தார்கள். ஆஸ்திரேலியாவில் 1970கள் வரையில் தடை செய்யப்பட்டிருந்தாலும், தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பிறகு, அச்சிடப்பட்ட நூல்களுக்கான தணிக்கை விதிகள் பெரிதும் தளர்த்தப்பட்டன. ஃபின்லாந்து நாட்டில் ஃபின்னிஷ் மொழிப் பதிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆங்கில, ஸ்வீடிஷ் மொழிப் பதிப்புகள் கிடைத்தன. பின்னர் அந்தத் தடையும் விலக்கப்பட்டது. பிற்காலத்தில் துருக்கி அரசு இந்தப் புத்தகத்திற்குத் தடை விதித்தது.

கைதுகளும் வழக்குகளும்

அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் ஆபாசம் என்ற குற்றச்சாட்டுடன், அதைப் பரப்பினார்கள் என்ற புகாரின் பேரில் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். 60க்கு மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. 1964இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் புத்தகத்தை விடுவித்தது. அந்தத் தீர்ப்பு, பாலியல் வக்கிரங்களைத் தூண்டாத, ஆனால் பாலியல் உண்மைகளையும் சிக்கல்களையும் சுரண்டல்களையும் சித்தரிப்பது எப்படி ஆபாசமாகும் என்ற விவாதங்களுக்கு வழியமைத்தது.

“நான் இந்த வாழ்க்கையை எதற்காகக் கண்டறிந்தேன்? எதற்காக உண்மையை மறைக்க வேண்டும்? எப்படி உணர்கிறேனோ அதைத்தான் எழுத முடியும்” என்று மில்லர் கூறியது எழுத்துலகில் பரவலாக எதிரொலித்தது. வழக்கமான நாவல் கட்டமைப்பிலிருந்து விலகிய, நேரடிச் சித்தரிப்பும் கவிதையும் கலந்த அவரது மொழி நடை கவனத்திற்கு உள்ளானதாக இணையப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

கடக ரேகைக் கதை

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) புத்தகம்

புத்தகத்தின் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்புக்கு, பூமியின் “கடக ரேகை” என்று பொருள்.

வறுமையில் வாடும் எழுத்தாளர் ஹென்றி, 1930களில் பாரிஸ் நகரின் வெளிச்சமற்ற பகுதிகளில் தன் இளமைக் காலத்தைக் கடக்கிறார். அந்த வாழ்க்கையில் எதிர்கொள்கிற இன்பங்களும் துன்பங்களுமாக அத்தியாயங்கள் விரிகின்றன. அந்த அனுபவங்களையே தனது கற்பனை வளமும் கவித் திறனும் கலந்து விவரிக்கிறார்.

ஹென்றி தனது நண்பர்களுடன் நடத்தும் உரையாடல்கள், தேடிச் செல்லும் காதலிகள், பாலியல் உறவுகள், பாலியல் தொழிலாளர்களின் நிலைமைகள், பணத்திற்காக அலையும் அவலங்கள், எதையாவது செய்யத் தூண்டுகிற பசி, யாருமற்ற தனிமை உணர்வு என அவருடைய அன்றாடப் போராட்ட அனுபவங்களை வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது இந்த நூல்.

அழகான ஆரம்பம், கதாபாத்திரங்கள் வருகை, அடுத்தடுத்து விறுவிறுப்பான நிகழ்வுகள், எதிர்பாராத திருப்பத்துடன் முடிவு என்று வழக்கமான நாவல் நடையில் புத்தகம் செல்லாது. பொதுவாக மனிதர்கள் சமகாலக் காட்சிகள், கடந்த கால நினைவுகள், எதிர்காலக் கனவுகன் என்று மாறிமாறிப் பயணிப்பது போலவே ஹென்றியின் வாழ்க்கை செல்கிறது. புத்தகமும் அதை அப்படியே பிரதிபலிக்கிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி

இதில் அவரது மன ஓட்டங்கள், தத்துவச் சிந்தனைகள், சமூக நையாண்டி, அதிர்வூட்டும் உண்மை நிலவரங்கள் ஆகியவற்றின் கலவையாகப் புத்தகம் உருவாகியிருக்கிறது. அதில், சமூகத்தின் பாசாங்குத்தனம் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. மனிதர்களின் அருவருப்பான பக்கமும் திறந்துகாட்டப்படுகிறது. கெடுபிடிக் கலாச்சாரம் கூண்டில் நிறுத்தப்படுகிறது.

கதையோட்டமோ, கதாபாத்திரங்களோ, நிகழ்ச்சித் திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ இல்லை என்பதால் புத்தக உள்ளடக்கத்திற்குள் இதற்கு மேல் செல்ல வேண்டியதில்லை. ஒரு தனிமனிதரின் சுய தேடலோடு இணைந்த, கயிறுகளால் கட்டிப் போடப்படாத வெளிப்பாட்டு முனைப்பாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது. இலக்கியம் என்பதற்கான பாரம்பரிய விதிகளை உடைத்து, களித்துக் கடக்கப்படும் வாழ்கையில் கழித்துக் கடக்கப்பட்ட மனிதர்கள் இருப்பதைத் துணிச்சலாகக் காட்டுகிறது.

பூமியை அளவிடவும், ஆராய்ந்திடவும் அதன் குறுக்கிலும் நெடுக்கிலும் நாம் கற்பனைக் கோடுகளை வரைந்து வைத்திருக்கிறோம். நில நடு ரேகைக்கு வடக்கே வரையப்பட்டிருப்பது கடக ரேகை. அது எப்படி கற்பனையானதோ அதே போல் மனித எதிர்பார்ப்பு கற்பனையாகிவிடுகிறது. சூரியனை பூமி சுற்றிவருகிறபோது, சூரியப் பாதை வடக்கே நகர்ந்து தெற்கே திரும்பும் எல்லையைக் கடக ரேகை என்று குறிப்பிடுகிறார்கள் புவியியலாளர்கள். மனிதர்களின் வாழ்க்கை அப்படி இருட்டாகிவிடுவதை கடக ரேகை புத்தகம் விவரிக்கிறது. கடக ரேகையின் மறுபகுதியில் ஒளி படர்வது போல, நம்பிக்கைகள் வெளிச்சம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உட்பொருள்கள் பொதிந்திருப்பதால் ‘‘டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) என்ற தலைப்பு பொருந்துகிறது.

தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 21 | ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதிய ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) நாவல் புத்தகம்

‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) திரைப்பட காட்சி

கடினமான வேலிகளைத் தாண்டிய புத்தகத்திற்கு முக்கியமான இலக்கிய விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் சார்ந்த முக்கியமான சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்த எழுத்து, பதுங்கிக்கொள்ளாத வெளிப்படையான எழுத்தாக்கத்திற்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த எழுத்து, இவ்வகையான புத்தகமாக்கலுக்கு ஒரு வெற்றிகரமான இலக்கிய முன்னோடி என்ற பெயர்களைப் பெற்றது.

டிராபிக் ஆஃக் கேப்ரிகான், பிளாக் ஸ்பிரிங், தி ரோஸி க்ரூசிஃபிகேஷன், தி கொலோசஸ் ஆஃப் மரூசி, கொயட் டேய்ஸ் இன் க்ளிச்சி, தி ஏர்கண்டிஷண்டு நைட்மேர் உள்ளிட்ட நூல்களையும் ஹென்றி மில்லர் (Henry Miller) எழுதியிருக்கிறார். அவையும் பல்வேறு கோணங்களில் சமூக விமர்சனம் செய்யும் படைப்புகளே.‘

முற்றிலும் புனைவு அல்லாத ஒரு படைப்புக்கு இலக்கியத் தகுதி அளிக்கப்படுவது அரிதான நிகழ்வு. அதைக் கடக ரேகை சாதித்திருக்கிறது. 1970 இல் இதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாகவும் வந்து கவனம் பெற்றது. ‘மாடர்ன் லைப்ரரி’ அமைப்பும் ‘தி கார்டியன்’ பத்திரிகையும் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆங்கில நாவல்கள் பட்டியல்களில் ‘‘தி டிராபிக் ஆஃப் கேன்சர்’’ (Tropic of Cancer) இடம் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது.

‘தடைகளைத் தாண்டிய புத்தகங்கள்’ என்ற நமது பட்டியலில் 21ஆவது புத்தகமாகக் கடக ரேகை இடம் பெற்றதோடு, தற்காலிகமாக விடைபெறுவோம். இந்தியாவிலும் இதர நாடுகளிலும் சவால்களைச் சந்தித்த புத்தகங்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டு, ஓர் இடைவெளிக்குப் பின் சந்திப்போம்.

இடைவேளை………………………

https://bookday.in/a-kumaresans-books-beyond-obstacles-series-about-henry-millers-tropic-of-cancer-novel/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.