Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04 APR, 2025 | 08:56 PM

image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து இலங்கைக்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு மற்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (4) இரவு 8.33 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான உயர்மட்ட குழு பிரதமர் மோடியை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கான வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. 

பேச்சுவார்த்தைகளின் நிறைவில் இருவராலும் கூட்டு ஊடக அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு' என்ற எண்ணக்கருவை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த விஜயத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர்மட்ட இந்தியக் குழுவும் இணைந்துள்ளது. .

இதன்போது வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  மற்றும்  இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை பரிமாறிக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம் ஆரம்பிப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய 5,000 மெட்ரிக் தொன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம் (குளிர்பதன திட்டம்), 5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின்களங்களை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மெய்ந்நிகர் ஊடாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல், இந்தியப் பிரதமர் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு மேற்கொள்ள இருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட ரயில் பாதையை திறந்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் பகுதியில் அதிகபட்ச பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அநுராதபுரம் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலுள்ள தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, வெள்ளிக்கிழமை (04) மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதியை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சனிக்கிழமை (05)  காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை அபேகம ஆகிய பகுதிகளையும் அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (06) காலை 07.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அநுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் ஸ்ரீ மகாபோதியை அண்மித்த பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/211185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை - இந்தியப் பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

Published By: PRIYATHARSHAN 05 APR, 2025 | 07:47 AM

image

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (4) இரவு இலங்கை வந்தடைந்தார்.

இந்நிலையில், அவர் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் வரவேற்பளித்தனர்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி,

“கொழும்பிலுள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

modi_1.PNG

Gntd-8ZXAAAKeD4.jfif

Gntd6PnXEAAOmBH.jfif

Gntd9btWMAAiPuN.jfif

Gntd7yeXAAABcpn.jfif

அத்துடன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பொம்மலாட்டத்தினை பார்வையிட்ட இந்தியப் பிரதமர் மோடி அது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில்,

“சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை பிரதி பலித்த பொம்மலாட்டதினை இங்கு காண முடிந்தது. நளின் கம்வாரி மற்றும் ஸ்ரீ அநுர பொம்மலாட்ட கழகத்தினருக்கு அவர்களது ஆர்வம் மற்றும் ஆற்றலுக்காக எனது பாராட்டுகள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

GnteB2rWoAA1LR4.jfif

மேலும் தாஜ் சமுத்திர ஹோட்டலில் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, இது குறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையில்,

“சமூக வரவேற்பின்போது மகாபுருஷர் ஶ்ரீமந்த சங்கரதேவ், ஸ்ரீ ஸ்ரீ மாதப்தேவ் ஆகியோரின் சிந்தனைகளின் மொழிபெயர்ப்புகள் இசை தொடர்பான நூல்கள், இந்தியக் கதைகள் மற்றும் பாளி மொழியிலான கீத கோவிந்தத்தின்  சில அத்தியாயங்கள்  ஆகியவற்றையும் பார்வையிட முடிந்தது. இந்த கலாசார பிணைப்புகள் எப்போதும் செழிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

GnteFaeXAAAMhfT.jfif

GnteG2DXMAAmt_J.jfif

GnteIpZWkAAXnUh.jfif

GnteKFhX0AA8WAL.jfif

https://www.virakesari.lk/article/211187

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு

05 APR, 2025 | 11:11 AM

image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில்  இன்று சனிக்கிழமை (05) முற்பகல் நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. 

அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2025-04-05_at_10.57.54.jp

WhatsApp_Image_2025-04-05_at_10.57.55.jp

WhatsApp_Image_2025-04-05_at_10.57.55__1

WhatsApp_Image_2025-04-05_at_10.57.56.jp

https://www.virakesari.lk/article/211195

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமார - இந்திய பிரதமர் மோடிக்கிடையில் இருதரப்பு பேச்சு ஆரம்பம்

05 APR, 2025 | 11:39 AM

image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டது.

காலை 11.00 மணிக்கு இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/211198

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு விஜயம்

05 APR, 2025 | 11:54 AM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி  நாளை ஞாயிற்றுக்கிழமை (06) வரை நாட்டில் தங்கியிருப்பார்.

WhatsApp_Image_2025-04-05_at_11.36.39.jp

WhatsApp_Image_2025-04-05_at_11.36.40__1

WhatsApp_Image_2025-04-05_at_11.36.41.jp

WhatsApp_Image_2025-04-05_at_11.36.41__1

https://www.virakesari.lk/article/211206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இலங்கை மித்ர விபூஷண' விருது எனக்கு வழங்கப்பட்டமை பெருமைக்குரிய விடயம் - இந்திய பிரதமர் மோடி

05 APR, 2025 | 07:02 PM

image

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூஷண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என்றும், இது தனக்கு மாத்திரமன்றி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் கிடைத்த விருது என்றும் அது குறித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மக்களுக்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி தெரிவித்தார். 

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இந்தியாவும் இலங்கையும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவையும் ஆழமான நட்பையும் கொண்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட  விஜயம்  மிகவும் உணர்ச்சிகரமான நேரத்தில் இடம்பெற்றது என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது இலங்கைக்கு தாம் மேற்கொண்ட  04 வது பயணம் என்றும் தெரிவித்தார்.

மக்களின் துணிச்சல் மற்றும் தைரியம் பற்றி தாம் அறிந்திருப்பதால், இலங்கை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று தான் நம்புவதாகவும் இதன்போது இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை முன்னேற்றப் பாதைக்குத் திரும்புவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.

கொளரவமான நண்பராக இந்தியா தனது கடமையை நிறைவேற்றுவது பெருமைக்குரிய விடயம் என்றும், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், கொவிட் நோய்த்தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அனைத்து சூழ்நிலைகளிலும் தனது அரசாங்கம் இலங்கை மக்களுடன் இணைந்து நின்றுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

“திருவள்ளுவரின்” திருக்குறளை மேற்கோள் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி, உண்மையான நண்பனையும் அவனது நட்பையும் தவிர வேறு எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்பின் பிரதிபலிப்பாகும் என்றும், இலங்கை ஜனாதிபதியை தனது முதல் வெளிநாட்டு நண்பராகப் பெறும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், மஹாசாகர் நோக்கிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உள்ளதாகவும் கூறிய பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் முதல் திருகோணமலையை வலுசக்தி மையமாக நிறுவுவது வரை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் நன்மைகள் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

உயர் மின்னழுத்த மின் இணைப்பு தொடர்பான ஒத்துழைப்பு இலங்கைக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும், இலங்கையில் உள்ள மதத் தலங்களில் 5,000 சூரிய மின் கலங்களை நிறுவுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக இலங்கைக்கு 2.4 பில்லியன் ரூபாய் அன்பளிப்பு வழங்கயிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் நன்மைக்காக இலங்கையின் மிகப்பெரிய விவசாய களஞ்சியக் கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார். 

நாளைய தினம் நவீனமயமாக்கப்பட்ட மஹவ - ஓமந்தை ரயில் பாதை மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் சமிக்ஞை கட்டமைப்பை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும், இலங்கையின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 700 இளம் தலைவர்களுக்கு நல்லாட்சி பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் “சப்கா சாத் சப்கா விகாஸ்" நோக்குக்கு அமைய, அயல் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதன்படி, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பின் போது வட்டி விகிதங்களைக் குறைக்க தீர்மானித்திருப்பதாகவும், அதனூடாக  இலங்கை மக்களுக்கு சலுகை மற்றும் வழி கிடைக்கும் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பல நூற்றாண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுபூர்வமான உறவு இருப்பதாகவும், அதை உறுதிப்படுத்தும் வகையில், 1960ஆம் ஆண்டு குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்களை தரிசிக்க எதிர்பார்ப்பதோடு அதனை  இலங்கைக்கு வழிபாட்டுக்காக கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், அனுராதபுரம் புனித நகரம், சீதாஎலிய கோவில் போன்ற சமய வழிபாட்டுத் தலங்களின் மறுசீரமைப்பிற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இலங்கைக்கான தனது அரச விஜயத்தின் போது உயர் அரச கௌரவத்துடன் வரவேற்றமைக்காக  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார்.

486593426_614385491600714_15001380085130

WhatsApp_Image_2025-04-05_at_17.17.37.jp

WhatsApp_Image_2025-04-05_at_17.17.36.jp

WhatsApp_Image_2025-04-05_at_17.17.36__1

WhatsApp_Image_2025-04-05_at_17.17.35.jp

WhatsApp_Image_2025-04-05_at_17.17.35__1

https://www.virakesari.lk/article/211214

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு சென்றார் இந்தியப் பிரதமர்

Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 11:30 AM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில்,  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி,  இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்  வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ளார்.

WhatsApp_Image_2025-04-06_at_11.08.49_AM

WhatsApp_Image_2025-04-06_at_11.08.51_AM

WhatsApp_Image_2025-04-06_at_11.08.51_AM

WhatsApp_Image_2025-04-06_at_11.08.50_AM

WhatsApp_Image_2025-04-06_at_11.08.50_AM

https://www.virakesari.lk/article/211291

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ....

Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 10:30 AM

image

நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார்.

26.JPG

https://www.virakesari.lk/article/211284

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதியில் மோடி வழிபாடு

deccanherald%2F2025-04-06%2F5oprxdpa%2FG

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அனுராதபுரத்தை வந்தடைந்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் இந்தியப் பிரதமருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, இலங்கை விமானப் படையின் மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டுள்ளார்.

https://www.samakalam.com/அனுராதபுரம்-ஸ்ரீ-மகாபோதி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையிலிருந்து புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி

Published By: DIGITAL DESK 3 06 APR, 2025 | 02:42 PM

image

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்  மேற்கொண்டிருந்தார்.

Departure__2_.jpeg

இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த  உத்தியோகபூர்வ விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன. 

அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும்.

Departure__4_.jpeg

Departure__3_.jpeg

https://www.virakesari.lk/article/211312

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.