Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 06 APR, 2025 | 10:24 AM

image

சண்டேடைம்ஸ்

1987ம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டமை குறித்து தான் வருத்தப்படவில்லை என முன்னாள் கடற்படைவீரர் விஜிதரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையில் காணப்பட்ட இரகசிய தன்மை ஜேவிபி அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1987ம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி மீது தனது துப்பாக்கியின் பிடியினால்  தாக்குதலை மேற்கொண்ட விஜிதரோஹன விஜேமுனி இலங்கை குறித்த இந்தியாவின் நோக்கங்கள் குறித்து தொடர்ந்தும் சந்தேகம் கொண்டவராக காணப்படுகின்றார்.

இந்தியாவுடனான உடன்படிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.

1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டவேளை அது குறித்து இரகசிய தன்மை காணப்பட்டது, இலங்கை அரசாங்கம் தற்போது இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கைகள் குறித்து பொதுமக்களிற்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார்.

vijitha_muni.jpg

இந்திய இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்பிலிருந்து புறப்படவிருந்த ராஜீவ்காந்திக்கு இராணுவஅணிவகுப்பு மரியாதையை வழங்குவதற்காக 21 வயது விஜித ரோகன விஜயமுனி தெரிவு செய்யப்பட்டவேளை அவர் இலங்கை கடற்படையில் கனிஷ்ட தரத்தில் காணப்பட்டார்.

இந்திய பிரதமர் தன்னை கடந்து சென்றதும் விஜயமுனி அவரை தனது துப்பாக்கி பிடியினால் தாக்கினார். ஆனால் ராஜீவ்காந்தி தனது எச்சரிக்கை உணர்வினால் அந்த தாக்குதலில் இருந்த தப்பினார், அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

தாக்குதலை மேற்கொண்டவரை ஏனைய கடற்படை வீரர்கள் உடனடியாக மடக்கிபிடித்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், பின்னர் அவர் இராணுவ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார், ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடற்படையிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இடம்பெற்று 38 வருடங்களாகிவிட்ட போதிலும், இலங்கையின் அரசமைப்பின் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமாகயிருந்த இந்திய இலங்கை உடன்படிக்கையை விஜேமுனி தொடர்ந்தும் எதிர்க்கின்றார்.

மாகாணசபை முறை தோல்வியடைந்து விட்டது, மாகாணசபைகள் கடந்த மூன்று வருடங்களாக இயங்கவில்லை, அவை இல்லாமலே அரசசேவைகள் சிறப்பாக இயங்குவதை நாங்கள் பார்க்கின்றோம் என அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு அதிகாரங்களை மாவட்ட மட்டத்தில் அல்லது உள்ளுராட்சி அளவிலேயே பகிரவேண்டும், தமிழ் நாடு மாத்திரமே இலங்கையை விட இரண்டரை மடங்கு பெரியது என அவர் தெரிவித்துள்ளார்.

விஜேமுனிக்கு ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர் இரண்டரை வருட கால தண்டனயை பூர்த்தி செய்திருந்த நிலையில்  முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாச அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்தார்.

அதன் பின்னர் அவர் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை  பூர்த்தி செய்தார், அரசியலில் ஈடுபட்டார், ஜோதிடத்தையும் கற்றார். தற்போது அதில் ஈடுபாடு கொண்டவராக காணப்படுகின்றார்.

விஜேமுனி தான் இந்திய இலங்கை உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைசாத்திடுவதற்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த ஜேவிபியின் உறுப்பினரில்லை என்கின்றார்.

indo_lanka.jpg

இந்தியாவுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம் நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் குறித்து தான் கடும் சீற்றம் கொண்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர்  தெரிவிக்கின்றார்.

நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினர் சிந்தனை அந்த நாட்களின்  எவ்வாறானதாக காணப்பட்டதோ அதனை எனது நடவடிக்கை வெளிப்படுத்தியது  என்கின்றார் அவர்.

https://www.virakesari.lk/article/211282

  • கருத்துக்கள உறவுகள்

thumb_large_rajiv_ghandi_colombo_atta.jp

ராஜீவ் காந்தி மீது... தாக்குதலை மேற்கொண்டமைக்காக இன்று வரை உறுதியாக இருக்கும் விஜேமுனிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

488613605_682972674403237_12287167893969

இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள்.

தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂

துவக்குப் பிடியால்... பிடரியில் அடிக்கவில்லை என்று, நன்றி தெரிவித்தாரோ. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.