Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 APR, 2025 | 05:07 PM

image

உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தே உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டிருக்கிறார். ஜனாதிபதி அவ்வாறு கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதி நியமிக்கப்படுகின்றார். அவ்வாறு இல்லாது ஜேவிபிக்கு மாத்திரம் சேவையாற்றுவதற்காக நியமிக்கப்படவில்லை. 

ஜனாதிபதியானவர் கட்சி, சாதி, இனம், மதம் பாராமல் அனைவருக்கும் சமமான சேவையை வழங்க வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் அச்சுறுத்தல்களை கண்டு சளைக்க வேண்டாம். 

சமீபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பலஸ்தீன மக்கள் குறித்து அவர் கருதிய கருத்தை ஸ்டிக்கர் ஒட்டி வெளிப்படுத்தியிருந்தார். அவ்விளைஞர் பலஸ்தீன மக்கள் சார்பாக தனது கருத்துக்களை முன்வைத்த போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்து கைது செய்தார். 

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முன்நின்றார். ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்தார். பலஸ்தீன மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் முன்னெடுக்கப்பட்ட சமயங்களில், பாரிய படுகொலைகள் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், அப்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திஸாநாயக்க குரல் எழுப்பினார். 

இன்று பலஸ்தீன மக்கள் சார்பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் குரல் எழுப்பிய சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அவருக்கு எதிரான தடுப்புக் காவலில் வைக்கும் பத்திரத்தில் கையொப்பமிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்துள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தியிடம் இரட்டைக் கொள்கைகளும் இரட்டை நாடகங்களும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி பலஸ்தீன மக்களுக்காக நின்றது. இஸ்ரேலிய அரசும் பலஸ்தீன அரசும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் . 

ஜே.வி.பி அரசாங்கத்திற்கு பொய் சொல்லவும் ஏமாற்றவும் மட்டுமே தெரியும். அன்று தேர்தல் மேடையில் சொன்னதை இன்று செய்ய முடியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர். இன்று மக்களுக்கு வறுமையும், அசௌகரியமும் அதிகரித்துள்ளன.

 இவ்வாறான நிலையில் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதற்கான வலுவான முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் முன்னெடுக்க வேண்டும் என்றார். 

WhatsApp_Image_2025-04-16_at_15.09.01.jp

WhatsApp_Image_2025-04-16_at_15.09.03.jp

WhatsApp_Image_2025-04-16_at_15.08.59__1

WhatsApp_Image_2025-04-16_at_15.09.00.jp

https://www.virakesari.lk/article/212138

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்தியிடம் இருந்தாலே உள்ளூராட்சிக்கு நிதி என ஜனாதிபதி பொய்யுரைப்பதால் அதிகாரப் பகிர்வு, உள்ளூராட்சி தத்துவம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது

உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும்  எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ரீதியில் உள்ளுராட்சி தத்துவத்தையும்  மீறுகின்றார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிதி விடயத்தில் அந்தந்த சபைகளின் தலைவர்களுக்கே அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் தங்கி வாழும் நிறுவனங்கள் அல்ல. உள்ளூராட்சி என்பது ஆட்சி முறைமை. அது வரிகளையும் வருமானங்களையும் திரட்டுவதற்கும் தீர்மானிப்பதற்கும் செலவிடுவதற்கும் அதிகாரம் பொருந்திய சட்ட ரீதியான ஆட்சி அலகாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் உலகளவில் வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பகிர்வைப் பெற்றுள்ளன. ஐனநாயக மற்றும் சட்ட ரீதியிலான அந்தஸ்தாக உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இலங்கையிலும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்களின் ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் அதிகாரத்தினைப் பெற்றுள்ளன. சட்டரீதியில் உள்ளராட்சி மன்றங்கள் சோலைவரி, மாற்றம் ஆதனப் பெயர்மாற்றங்களின் போதான முத்திரைத் தீர்வை, நீதிமன்ற குற்றப்பணம், சேவைகளுக்கான அறவீடுகள், தண்டப்பணங்கள் என பல மில்லியன்களுக்கு உரித்தாளர்களாகவுள்ளன. வசதிக்குறைவான உள்ளூராட்சி மன்றங்களும் காணப்படுகின்றபோதும் அவ்வாறாக வசதிக்குறைவுக்கு மத்திய அரசின் எடுபிடியாக அல்லது ஆதிக்கத்தினுள் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பது தீர்வல்ல.

மத்திய அரசாங்கம் சர்வதேசத்திடம் பெறும் அதிக உதிவிகள் மக்களின் நலன்புரி விடயங்களை மையமாகக் கொண்டுள்ளன. அந் நிதி உதவிக்கான முன்மொழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சேவைப்பரப்புக்களாகக் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்வதேச தாபனங்களிலும,; நாடுகளிலும் இருந்து மானியங்களைப் பெறுகின்றது. அவ் உதவிக் கோரிக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய சேவைப்பரப்புக்களை காரணங்காட்டியே உதவிகள் பெறுகின்றன. அவ்வாறு அரசாங்கம் பெறும் உதவிகளை ஜனாதிபதி தனது கட்சிக்காரரின் சபைக்கு மட்டும் தான் கொடுப்பேன் எனக் கூற முடியாது. அவ்வாறு ஜனாதிபதி செய்தால் உதவிகளை சர்வதேசம் வழங்காது. அப்படி அரசாங்கம் செயற்பட்டால் இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச கொடையாளர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதனால் நாட்டிற்கான சர்வதேச உதவிகளே தடைப்பட்டுவிடும்;. சர்வதேச உதவி தடைப்பட்டால் அது மத்திய அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும். வெளிநாட்டு உதவிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கு தேவை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பகிர்ந்தே ஆகவேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணியினருக்கான சம்பள விடயங்கள் மத்திய அரசு சார்ந்திருந்த போதும் அவற்றிற்கான மானிய உதவியை இன்றைய ஜனாதிபதி நினைத்தால் மாத்திரம் நிறுத்திவிட முடியாது. உத்தியோகத்தர்களின் நியமனம் மற்றும் சேவை அடிப்படையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் தொழில் உரிமையும் உள்ளது. ஆகவே அரசாங்கம் போதையில் பேசுகின்ற தெருச் சண்டியர்கள் போல விலாசம் எழுப்பக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/317108

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான நிதி ஒதுக்க முடியும் என்பது அநுரகுமார திசாநாயக்கவின் மோசமான சர்வாதிகார மிரட்டல் கருத்து தானே சஜித் , முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவாகளை தவிர பெரிய எதிர்ப்புக்களை காண முடியவில்லையே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.