Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்

வணக்கம்.

ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கும் இந்தியர்களாகிய உங்களுக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு வரலாற்றுக்கும் முந்தியது. நீங்களும் நாமும் ஒரு பொது மரபுரிமைக்கு சொந்தமானவர்கள். ஆங்கிலத்தில் long lost cousins என்பார்களே…அதைப்போல் இந்தியர்களின் long lost cousins இந்த உலகில் யார் எனப்பார்த்தால் அது நாமும், சிங்கப்பூர், மலேசியா, ரியூனியன், பர்மா, கயான, டிரினிடாட், தென்னாபிரிக்கா மற்றும் மேற்குலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் வம்சாவழியினருமே ஆகும்.

நம்மை இணைக்கும் மிக பெரும் பொதுக்காரணி இந்து சமயம் ஆகும்; அதில் எங்களில் பெரும்பான்மையானோர் சைவ உட் பிரிவைச் சார்ந்தோர் எனிலும் எம்மை இந்துக்கள் என்றே அடையாளம் செய்வதோடு வைஸ்ணவம், சாக்தம் உட்பட இதர தெய்வ வழிபாடும், பிரசித்தமான கோவில்களும் எம் வாழ்வியலோடு பின்னிபிணைந்தவையாகும்.

இது மட்டும் அல்ல. இராமகிருஸ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றைய பிந்தைய இந்திய ஆன்மீகவாதிகளும் எம்மண்ணில் மிகபெரும் செல்வாக்கு கொண்டிருந்தனர். இலங்கை எங்கனும் இராமகிருஸ்ண மடங்களை நிறுவி இந்து மதத்தை முன்னிறுத்தியவர் எமது மட்டகளப்பு மண் தந்த சுவாமி விபுலந்த அடிகள்.

அதேபோல் கிறிஸ்தவ மிசனரி பள்ளிகளுக்கு மாற்றாக ஈழத்தமிழர் நாம் கல்லூரிகளை உருவாக்கியபோது அவற்றை இந்து மத அடிப்படையில் “இந்து கல்லூரிகள்” என்றே உருவாக்கினோம். இன்றும் தமிழர் பகுதிகளில் ஊருக்கு ஒரு இந்து கல்லூரி இருப்பதை நீங்கள் காணலாம்.

இது மட்டுமா, இந்திய சுதந்திர போரை எமது போராகவே வரித்து கொண்டவர்கள் ஈழத்தமிழர். யாழ்பாணத்தின் முதல் அரசியல் இயக்கமான “Jaffna Youth Congress” காந்தியடிகளையே தமது வழிகாட்டியாக நிலை நிறுத்தியது.

1987 வரைக்கும் எமது வீடுகளில் காந்தி, நேரு, நேதாஜி படங்கள் தொங்குவதே வழமை. எந்த இலங்கை தலைவர் படமும் இராது.

அதேபோல் கிரிகெட் என வந்துவிட்டால், கபில்தேவ், கவாஸ்கரின் இந்திய அணியை எமது அணி போலவே எமது மக்கள் கொண்டாடினார். இலங்கை-இந்திய போட்டிகளில் கூட, இந்திய அணியையே பெரும்பாலான எம்மக்கள் ஆதரித்தனர்.

இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் போர்களில் இலங்கை நடுநிலை நாடகம் ஆடியது. ஆனால் பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வழி கொடுத்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் இந்த போர்களில் எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகள், கூட்டங்கள் நடத்தி தம் ஆதரவை வெளிக்காட்டினர்.

இவ்வாறு எமக்குள் இருந்த பிணைப்பு, தந்திரமான இலங்கையின் செயல்பாட்டால், 1987க்கு பின் உடைந்து போனது ஒரு வரலாற்று சோகம்.

இதில் இருபகுதியிலும் தப்பு உள்ளதை என்னால் மறுக்க முடியாது. குறிப்பாக பாரத முன்னாள் பிரதமர் ரஜீவ் கொலை ஒரு மன்னிக்க முடியாத செயல் என்பதில் நானும் உடன்படுகிறேன்.

ஆனாலும் புலிகள் மீது இந்தியாவுக்கு தனிப்பட்ட கோவம் இருப்பினும், ஈழத்தமிழரை இந்தியா கைவிடாது என நாம் கடைசி வரை நம்பினோம்.

ஆனால் ஈழப்போரின் போது எம்மக்களுக்கு இந்தியா துணையாக நிற்கவில்லை. எங்களை இனப்படுகொலைக்காளாக்கினீர்கள்; சிங்களவருக்கும் படைக்கலன்களையும் கலங்களையும் வழங்கி கொல்லவும் துணை நின்றீர்கள். இதனை நாங்கள் மறக்கவில்லை. அதேபோல் ரஜிவ் கொலை உட்பட்ட விடயங்களை நீங்கள் மறக்க வேண்டும் என்பதும் என் கோரிக்கை அல்ல.

ஆனாலும் பழையதை இருதரப்பும் மன்னித்து, அதை வரலறாக்கி விட்டு, புதியதோர் அத்தியாத்தை எம் உறவில் ஆரம்பிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இதனடிப்படையில் தற்போதுநடந்துகொண்டிருக்கும் சமரில், உங்களுக்கு பாக்கிஸ்தான் மீதான பரப்புரை போரிற்கோ இல்லை அவர்கள் ஊக்குவிக்கும் நாடுகடந்த எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்ட நான் உங்களுக்கு ஓர் ஆயுதத்தை வழங்குகிறேன். இது பன்னாட்டளவில் நீங்கள் செய்து வரும் பாக்கிஸ்தான் பயங்கரவாத நாடு என்ற உங்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும்.

ஆயுதம் யாதெனில், பல்லாண்டுகளாக தமிழீழத்தின் புலனாய்வுத்துறையின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்ட கமுக்க வேவு மற்றும் உளவு நடவடிக்கைகளின் பெறுபேறாய் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பாக்கிஸ்தான் நாட்டின் புலனாய்வு அமைப்பு தமிழீழத்தின் எல்லைக்குள் செய்துவந்த எல்லைகடந்த பயங்கரவாதம் தொடர்பான தகவல்கள் ஓர் அறிக்கையாக்கப்பட்டது. பின்னர் அதனை "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஜெனிவாவில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்திடமும் இணைத்தலைமை நாடுகளிடத்திலும் கையளித்தார். எனினும் இது ஊடகங்களிற்கு வழங்கப்படவில்லை என்றே என்னால் அறியமுடிகிறது.

ஊடகங்களில் வெளியாகவில்லையாதலால் இவ்வாயுதம் என்னிடத்தில் இல்லை. ஆயினும் உங்களின் எதேனும் ஒரு புலனாய்வு முகவரகத்திடமோ இல்லை சிங்களப் புலனாய்வுத்துறையிடமோ இருக்கக்கூடும். அல்லது 2002ம் ஆண்டில் ஈழத்தில் நடந்த அமைதி உடன்படிக்கையில் பங்கேற்ற இணைத்தலைமை நாடுகளிடமோ இருக்கக்கூடும்.

இவ்வறிக்கையிலிருந்து என்னால் தேடியெடுக்கக்கூடிய தகவல்களை என்னுடைய "ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள்" என்ற ஆவணக்கட்டின் முன்னுரையில் பாவித்துள்ளேன். அவை பின்வருமாறு:

Quote

"1990களில், ஒரு கட்டத்தில், முஸ்லிம் ஊர்காவல் படையினரின் கொலைவெறிக் கோரத் தாக்குதல்கள் ஓய்ந்தாலும், பின்னாளில் ஜெனீவா போர்நிறுத்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதன் பின்னர் மீண்டும் முளைவிட்டது. அது ஏற்கனவே செயலுற்றுக்கொண்டிருந்த ஏனைய ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து இயங்கத் தொடங்கியது. இத்தகவலானது 2006ம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் ஜெனிவாவில் வைத்து 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெருத்த சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

"ஆனால் இவ்வறிக்கையின் முழு விரிப்பும் புலிகளால் ஏனோ பொதுவெளியில் - ஊடகங்களுக்கு - வெளியிடப்படவில்லை. கசிந்த குறிப்பிடத்தக்க தகவல்களை சண்டே லீடர் வாரயேடு 2006ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வெளியிட்டது. இத்தகவலையெடுத்து பல்வேறு தமிழ் நாளேடுகள் வெளியிட்டிருந்தன.

"இவ்வறிக்கையில், குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் நூர்தீன் நிஜாம், நூர்தீன் ஷரோம், பஷீன் ஷரோம், குனேஸ் நஜீம் ஆகியோர் தலைமையில் இயங்கும் ஜிகாத் குழுக்கள் என்ற முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் முழு விரிப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).

"தென் தமிழீழத்தில் ஜிகாத் குழுக்களின் முதன்மைத் தளங்களாக மூதூர், கிண்ணியா, தோப்பூர், ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி, அக்கரைப்பற்று போன்ற சிறிலங்காப் படைகளின் வன்வளைப்பிற்குட்பட்ட பரப்புகள் விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது (தினக்குரல் வழியாக யாழ் கருத்துக்களம் 2: முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் பஃவ்ரல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, 19/03/2006).

"மேலும், அம்பாறை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவருடன் இந்த ஆயுதக் குழுக்கள் கமுக்கமாக செயற்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

"அத்துடன் இவ்வறிக்கையில் இவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதப் பயிற்சி வழங்கியோர் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்ததாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜிகாத் அமைப்புடன் தொடர்புடைய பல முக்கிய முஸ்லிம் பயங்கரவாதிகள் 2006ம் ஆண்டிற்கு முன்பு இஸ்லாமிய மதக் கல்வியைப் பெறுகிறோம் என்ற போர்வையில் பாக்கிஸ்தானிய புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் பாக்கிஸ்தானுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பாக்கிஸ்தானின் மலைச் சாரல்களில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சியை அவர்களிடத்தில் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2006ம் ஆண்டில் சிறிலங்காவிற்கான அரசதந்திரியாக பணியாற்றிய பாக்கிஸ்தான் உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் ஜிகாத் ஆயுதக்குழுவிற்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து உதவியதாகவும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது (வீரகேசரி வழியாக யாழ் களம் 2: புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு, 12/03/2006).

"முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கும் பாக்கிஸ்தானுக்குமான தொடர்பை பின்னாளில் கசிந்த விக்கிலீக்ஸ் தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

"விக்கிலீக்ஸின் தகவலின் படி, தமிழீழத் தலைநகர் திருகோணமலையில் நொக்ஸ் குழு (மதிப்பிற்குரிய ஆங்கிலேயன் ஒருவரின் பெயரால் பெயரிடப்பட்டது), ஒசாமா குழு, ஜெட்டி குழு (Jetty==இறங்குதுறை. இதில் துறைமுகத்தில் வேலை செய்யும் முஸ்லீம்களே பெருவாரியாக இடம்பெற்றிருந்தனர்.) ஆகியன செயற்பட்டன. அம்பாறையில், முஜாகிதீன் குழு செயலுற்றது. 2006இன் நிலைமையின் படி 150 ஆயுததாரிகள் இதில் உறுப்பினராய் இருந்துள்ளனர். இந்த ஆளணி எண்ணிக்கையானது ஒசாமா குழுவை விட அதிகமாகும். இந்தக் குழுக்களிடம் புலிகளிடமிருந்து பிரிந்து சென்று தேச வஞ்சகமிழைத்த கருணா குழுவினது ஆயுதங்கள் இருந்தனவாம் (விக்கிலீக்ஸ்: SOURCE REPORT ON MUSLIM MILITANCY IN SRI LANKA).

....................

"இவ்வாறாக முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் குறித்த ஆதாரங்கள் தவிபு ஆல் முன்வைக்கப்பட்ட போதிலும் அப்படி எதுவும் இல்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடியொட்ட மறுத்துரைத்தார். ஆயினும் பஃவ்ரெல் (PAFFREL) அமைப்பு தம்மிடம் இதற்கான ஆதரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளதென்று தினக்குரல் 19/03/2006 அன்று செய்தி வெளியிட்டுள்ளது."

Expand

இதனைக் கொண்டு நீங்கள் பாக்கிஸ்தான் மீதான உங்களின் எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்ற கூற்றை இந்தியாவிற்குள் மட்டுமின்றி இந்தியாவிற்கு வெளியிலும் நிலைநாட்டலாம்.

அதனை பொது வெளியில் வெளியிட்டால் நாங்களும் ஈழத்தமிழர்கள் மீது முஸ்லிம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் தொடர்பிலான தகவல்களுக்கு அதை உபயோகிப்போம்.

இலங்கை இஸ்லாமிய வன்போக்காளருக்கும், பாகிஸ்தானியருக்கும் மதத்தை தவிர வேறு எந்த ஒருமையும் இல்லை. ஆயினும் ஈழத்தமிழர்களையும், இந்தியாவையும் அவர்கள் ஒரு சேர எதிர்க நாம் இந்துக்கள் என்பதும், ஈழத்தமிழர்களை அவர்கள் இந்தியாவின் தொடர்ச்சி என காண்பதுமே காரணம் ஆகிறது.

ஆனால் ஈழத்தமிழருக்கு, புலம்பெயர் ஈழதமிழருக்கு இந்தியாவுடன் மதம் மட்டும் அன்றி பல்வேறு தொடர்புகள் உள.

இந்தியாவை ஒரு காலம் வரை தம் தந்தையர் நாடு என கருதிய ஈழத்தமிழரே இந்தியாவின் ஒரே இயற்கையான நண்பர்கள் (natural allies).

மேற்கு நாடுகளில் பலம்பெற்று வரும், அரசியல் அதிகாரத்தை நோக்கி மெல்ல நகரும் ஒரு இனக்குழு ஈழத்தமிழராகிய நாம்.

இந்தியாவுக்கு வெளியே, இந்தியர் அல்லாத - ஆனால் இந்தியாவுக்கு ஆதரவு குரல் கொடுக்க கூடிய, மனதார இந்தியாவை நேசிக்க கூடிய ஒரே இனக்கூட்டம் நாம் மட்டுமே.

இதை இந்தியா உணர்ந்து எம்மை அரவணைக்க வேண்டும். இலங்கையில் எமது வடக்கு-கிழக்கு தாயக பகுதிகளில், குறைந்த பட்சம், இலங்கையில் இருந்து பிரிந்து போக முடியாத ஆனால் மாநில சுயாட்சி உள்ள சமஸ்டி அரசு ஒன்றை நிறுவ இந்தியா முன்னின்று உழைக்க வேண்டும். இந்த தீர்வை, இலங்கையை நெருக்கி பெற்று கொடுக்க வேண்டும்.

இப்படி இந்தியா செய்யின் ஒரு மிகபெரும் பலம் பொருந்திய நட்பு சக்தியை உலகெங்கும் இந்தியா பெறும்.

ஐக்கிய அமெரிக்காவும், யூதர்/இஸ்ரேலும் போல, இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒரு பரஸ்பர நல்லுறவுக்கு வரவேண்டும் என்பதே என் அவா.

இதன் ஒரு அங்கமாகவே நான் இந்த அரிய தகவலை உங்களுக்கு வழங்குகிறேன்.

நன்றி

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

  • நன்னிச் சோழன் changed the title to 🟧⬜🟩 இந்திய புலனாய்வு முகவரகத்திற்கு உதவியும் திறந்த வேண்டுகோளும்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது.

தேவையானோர் கண்ணில் படுமா?

காதில் ஏறுமா?

பிகு

இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன்.

என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு.

இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும்.

நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன்.

இந்திய மாநிலங்களுக்கு இணையான இணைந்த வடக்கு-கிழக்கு என்ற அலகொன்றை இந்தியா பெற்றுத்தருமாயின் இந்திய எதிர்ப்பைக் கைவிட்டு கண்மூடித்தனமாக ஆதரிக்க நானும் ரெடி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன்.

என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு.

இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும்.

நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

நானும் தான்...

இந்தியா எமக்கு செய்திடில் வாழ்நாள் முழுக்க இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பேன். எனது தலைமுறைகளுக்கும் இதைச் சொல்லி வளர்ப்பேன்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இந்தியாவுக்கும், ஈழத்தமிழருக்கும் - காலத்துக்கு தேவையான வேண்டுகோள் இது.

தேவையானோர் கண்ணில் படுமா?

காதில் ஏறுமா?

பிகு

இலங்கையின் வடக்கு-கிழக்கில், எமக்கு குறைந்தபட்சம் இந்திய மாநிலங்களின் உரிமையை ஒத்த ஒரு அலகை இந்தியா பெற்றுதருமாயின் இந்தியாவை நான் வாழ்நாள் பூராவும் கண் மூடித்தனமாக ஆதரிக்க தயாராக உள்ளேன்.

என்னை போலவே 90 விடுக்காடு ஈழத்தமிழரின் சிந்தனையும் என்பது என்கணிப்பு.

இந்தியா இனியாவது தன் நண்பர்கள் யார் என உணர்ந்து செயல்படவேண்டும்.

நடந்தைவை நடந்தையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இதை செய்வதானால் இந்தியா தனியாக இதை செய்ய முடியாது. எப்படியும் 13 ம் திருத்த சட்டமூலத்தை ஏற்றுக்கொண்ட புள்ளியில் இருந்து தான் இதனைத் தொடங்க வேண்டும்.

தமிழ் தரப்பில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ இதை ஆரம்பிக்க வேண்டும். இதனை யாராவது ஆரம்பித்தால் தமிழர் தரப்பில் இருந்தே பாரிய எதிர்பபும் அவர்களுக்கு எதிராக துரோகிகள் என்ற பிரச்சாரமும் பாரியளவில் நடத்தப்படும் என்பதே இன்றைய நிலை. அண்மையில் கூட பெரடல் வந்தால் கூட ஏற்று கொள்ள கூடாது. கொன்பெரடல் வந்தால் அதனை வேண்டுமானால் பரிசீலிக்கலாம் என்ற குரல்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து வந்தது. இங்கு யாழிலும் அது பகிரப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

என்னை பொறுத்தவரை இந்தியா தனது நலன் கருதி நேரடியாக ஈழத்தமிழரை அரவணைக்க வேண்டும்.

அதற்கான காலம் வந்தே விட்டது.

அதாவது ஈழதமிழ் தலைவர்கள் எவருக்கும் எந்த வகிபாகமும் தேவையில்லை.

நான் மேலே சொன்னது போல குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த ஒரு தீர்வை இந்தியாவே தயாரித்து விட்டு.

இலங்கையிடம் அதை கொடுத்து…

குறித்த கால அவகாசத்தில் அதை நடைமுறைபடுத்தும் படி சொல்ல வேண்டும்.

இலங்கையில் வரவிருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

அண்மைய சண்டையில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பாவித்து, பொருளாதார அசமநிலையையும் மீறி இந்தியாவை சவாலுக்கு உள்ளாக்கியதை பார்கிறோம்.

இதே ஒரு நிலை இலங்கையில் வர அதிக காலம் எடுக்காது. பாகிஸ்தான் உதாரணத்தை இலங்கை கையில் எடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.

புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை தோற்கடிக்க இந்தியா செய்த இத்தனை உதவிக்கு பின்னும், இன்று இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட சொல்லவில்லை. கஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கூட கண்டிக்கவில்லை.

ஆனாலும் இன்றும் மெலிதாகவேனும் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எங்கே இருந்து வருகிறது எனபார்ப்பின் அது ஈழதமிழரிடம் இருந்தே. அதற்கு யாழ்கள கருத்துக்களே சாட்சி.

சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுள்ளது வெள்ளிடமலை.

கேந்திர ரீதியாக சீனாவும், மத அடிப்படையில் துருக்கி, பங்களாதேஷ், நாடுகளும் பாக்கிஸ்தான் பின்னால் நின்றன.

இந்தியாவுக்கு யாரும் இல்லை, இஸ்ரேலின் வெறும் சந்தர்ப்பவாத, ஆயுத விற்பனையின் பால்பட்ட ஆதரவு கூட மிகவும் சுரத்தில்லாமலே இருந்தது.

எங்கே நேபாளம்?

எங்கே ஈழத்தமிழர்கள்?

இந்தியா இழந்த நண்பர்களை மீள அரவணைக்க வேண்டியது, அவர்களை விட இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.

தன் வடக்கு, தெற்கு வாசல்களில் அசைக்க முடியாத நட்புசக்திகளை உருவாக்குவது இந்தியாவுக்கு இன்றி அமையாதது.

அதன் முதல்படியாக இலங்கையை பிரிக்காத, ஆனால் காத்திரமான ஒரு தீர்வை தமிழருக்கு கொடுப்பது அமையும்.

இப்படி ஒன்று நடக்குமாயின் உலகலாவிய தமிழ் இனமும், இலங்கை வாழ் தமிழரும், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழரும் இந்தியாவின் பின் பெரும் அளவில் அணி திரள சில மாதங்கள் கூட எடாது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

என்னை பொறுத்தவரை இந்தியா தனது நலன் கருதி நேரடியாக ஈழத்தமிழரை அரவணைக்க வேண்டும்.

அதற்கான காலம் வந்தே விட்டது.

அதாவது ஈழதமிழ் தலைவர்கள் எவருக்கும் எந்த வகிபாகமும் தேவையில்லை.

நான் மேலே சொன்னது போல குறைந்த பட்சம் தமிழ்நாட்டுக்கு இருக்கும் அதிகாரங்களை ஒத்த ஒரு தீர்வை இந்தியாவே தயாரித்து விட்டு.

இலங்கையிடம் அதை கொடுத்து…

குறித்த கால அவகாசத்தில் அதை நடைமுறைபடுத்தும் படி சொல்ல வேண்டும்.

இலங்கையில் வரவிருக்கும் அரசியல் அமைப்பு மாற்றம் ஒரு நல்ல வாய்ப்புகள் அமையும்.

அண்மைய சண்டையில் பாகிஸ்தான் சீன ஆயுதங்களை பாவித்து, பொருளாதார அசமநிலையையும் மீறி இந்தியாவை சவாலுக்கு உள்ளாக்கியதை பார்கிறோம்.

இதே ஒரு நிலை இலங்கையில் வர அதிக காலம் எடுக்காது. பாகிஸ்தான் உதாரணத்தை இலங்கை கையில் எடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.

புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை தோற்கடிக்க இந்தியா செய்த இத்தனை உதவிக்கு பின்னும், இன்று இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு சொல்கூட சொல்லவில்லை. கஸ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கூட கண்டிக்கவில்லை.

ஆனாலும் இன்றும் மெலிதாகவேனும் இந்தியாவுக்கு ஆதரவு குரல் எங்கே இருந்து வருகிறது எனபார்ப்பின் அது ஈழதமிழரிடம் இருந்தே. அதற்கு யாழ்கள கருத்துக்களே சாட்சி.

சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுள்ளது வெள்ளிடமலை.

கேந்திர ரீதியாக சீனாவும், மத அடிப்படையில் துருக்கி, பங்களாதேஷ், நாடுகளும் பாக்கிஸ்தான் பின்னால் நின்றன.

இந்தியாவுக்கு யாரும் இல்லை, இஸ்ரேலின் வெறும் சந்தர்ப்பவாத, ஆயுத விற்பனையின் பால்பட்ட ஆதரவு கூட மிகவும் சுரத்தில்லாமலே இருந்தது.

எங்கே நேபாளம்?

எங்கே ஈழத்தமிழர்கள்?

இந்தியா இழந்த நண்பர்களை மீள அரவணைக்க வேண்டியது, அவர்களை விட இந்தியாவுக்கு மிக அவசியமாகிறது.

தன் வடக்கு, தெற்கு வாசல்களில் அசைக்க முடியாத நட்புசக்திகளை உருவாக்குவது இந்தியாவுக்கு இன்றி அமையாதது.

அதன் முதல்படியாக இலங்கையை பிரிக்காத, ஆனால் காத்திரமான ஒரு தீர்வை தமிழருக்கு கொடுப்பது அமையும்.

இப்படி ஒன்று நடக்குமாயின் உலகலாவிய தமிழ் இனமும், இலங்கை வாழ் தமிழரும், குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழரும் இந்தியாவின் பின் பெரும் அளவில் அணி திரள சில மாதங்கள் கூட எடாது.

உங்களது கருத்தில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. அப்படி நடந்தால் நிச்சயபாக ஈழத்தமிழர்களாகிய நாம் மகிழ்சசியடையவேண்டும். ஆனால் தமிழர் தரப்பில் தீவிர தமிழ் தேசியம் பேசி அரசியல் செயவோர் இதனை குழப்ப தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வர் என்பதே இன்றைய ஜதார்த்தம். இது வெறும் அனுமனம. என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பட்டறிவு அப்படி உள்ளது. தமிழர் தரப்பில் இன்றும் நெகிழ்வு தன்மையுல்லாது கற்பனாவாதத்தை பரப்பும் இறுக்கமான மனநிலையில் இருந்தபடி மக்களுக்கும் அவ்வாறான அரசியல் தூண்டுதல்களை செய்யும் கருத்துக்களை சமூக ஊடகங்கள் மூலமும் மறைமுகமாக அமைப்புகள் மூலமும் விதைக்கும் பலர் புலம் பெயர் நாடுகளில் உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, island said:

நீங்கள் கொஞ்சம் “கடந்த காலத்தின் சிறையில்” இருந்து மீண்டு வர வேண்டும் என்பது என் நயமான வேண்டுகோள்.

இன்றைக்கு பொதுவெளியில் தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எண்ணிக்கை, குறிப்பாக புலம்பெயர் சமூகத்தில், அரிது என்றே நினைக்கிறேன்.

தமது உள்ளக அரசியலுக்காக உதாரணமாக சுமந்திரனை தாக்க, அல்லது சிறிதரனை பாதுகாக்க, அல்லது சம்பந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் தலையை போடும் ஒரு காவாலிக்கூட்டமே நீங்கள் சொல்லும் ஆட்கள்.

ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களில் இந்த காவாலிகள் மிக, மிக சொற்பமானவர்கள்.

இவர்களிடம் எந்த புலம்பெயர் அமைப்பும் இல்லை. இவர்கள் புலம்பெயர் நாடுகலில் உயர் நிலைகள் நோக்கி போவோரும் இல்லை.

கரி ஆனந்தசங்கரிகளுக்கும், உமா குமரனுகளுக்கும் மட்டும் அல்ல, பல அறியப்பட்ட தமிழ் அமைப்புகள், செயல்பாட்டாளர்களுக்கும் கூட இந்த காவாலிகளிடம் எந்த தொடர்பும் இல்லை.

இந்த காவாலிகளிடம் சிறிய தொடர்பை வைத்திருப்பது யார் எனில், தாம்தான் இப்போ புலிகள் என சொல்லி, பல்வேறு பெயர்களில் கொள்ளை அடிக்கும் முன்னாள் புலிவால்கள், இந்நாள் மாபியாக்கள்.

ஆனால் இவர்களுக்கும் புலம்பெயர் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.

மாவீரர்தின மக்கள் கூட்டம், போக இடம் இன்றி, வேறுவழியில்லாமல் போகும் கூட்டம். அது மாவீரர்களுக்கானது, அவர்களுக்காக போவது.

புலம்பெயர் தேசத்திலாவது கொஞ்சம் இந்த காவாலிகள், மாபியாக்களுக்கு செல்வாக்கு இருக்கிறது.

இலங்கையில் அறவே இல்லை.

அங்கே இவர்கள் போனால் தமிழ் மக்களே செருப்பை சாணியில் முக்கி அடிப்பார்கள்.

ஆகவேதான் சொல்கிறேன்.

இந்தியாவுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள், புலம்பெயர் அமைப்புகள், எவரும் தேவையில்லை.

நான் சொன்ன வகையில் ஒரு தீர்வை இலங்கையை நெருக்கி இந்தியாவே கொண்டு வர செய்யலாம். இதற்கு ஓம் படுங்கள் என சொன்னால் - இலங்கை தமிழ் எம்பிகள் பலர் ஓம் என்றே சொல்வாகள்.

சில நேரம் தன் ஒரு எம்பி சீட் பதவி கருதி பொன்னம்பலம் எதிர்க்கலாம்.

ஆனால் உண்மையில் தீர்வு காத்திரமானது எனில் - நாட்டில் வாழும் மக்கள், புலம்பெயர் மக்கள் - அதற்கு அமோக ஆதரவு கொடுப்பர்.

காவாலிகள்+மாபியாக்கள்+ கஜன் எதிர்ப்பு எடுபடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.