Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் சம்பளமாக கிடைத்தது ஐந்து ரூபாய் காசு.

கோவை காவல் நிலையத்தில் இரவு ஒன்பது மணிக்கு காவல்துறை அதிகாரிகளுடன் நீதிக்காக பேசிய அந்த தருணத்தில், தன்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற உண்மை உரைத்த அந்த நொடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்களில் இருந்து துளிர்த்த கண்ணீர் எனக்குள் ஏற்படுத்திய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல.

சட்டப் போராட்டம் என்பது அவ்வளது எளிதானதல்ல. காவல்துறை அதிகாரமிக்கது. ஆளும் கட்சியின் ஆளுமையின் கீழ் உள்ளது. அது என்ன குற்றம் செய்தாலும், அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது சாதாரணமல்ல. ஜெய் பீம் படம் பார்த்திருப்பீர்கள். ஆளும் கட்சியின் அசுர பலத்துக்கு முன்னால் யாரால் என்ன செய்ய முடியும்?

இது ஒரு வகை என்றால் சிவில் வழக்குகள் இருக்கிறதே அது இதை விடக் கொடுமையானது. படிக்காதவர்கள் என்றால் சிவில் வழக்குகளின் கொடூரமென்பது கொலையை விட கொடுமையான தாக்கத்தை அவர்கள் வாழ்வில் உண்டாக்கும். ஒரு வி ஏ ஓ செய்யும் ஒரு தவறை சரி செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என நினைத்துப் பாருங்கள். எத்தனை ஊழல் கைதுகள், எத்தனை சஸ்பெண்டுகள் நடக்கின்றன. செய்திகளைப் படித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். ஆனால் உண்மையில் பாதிக்கப்படுபவர்களின் மன நிலையும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், துயரமும் எதை வைத்து சரி செய்ய முடியும்?

நான் இறந்து விட்டேன் என சொல்லி ஒரு வி ஏ ஓ பட்டாவில் இருந்து பெயரை நீக்கி விட்டான். ஜமா பந்தியில் என் அம்மா, என்னைத் தூக்கி கொண்டு போய் டி. ஆர். ஓவிடம் விட்டு இவனை இங்கேயே கொன்னு போடுங்க. இவன் பெயரில் சொத்து பத்திரம் இருக்கிறது, இந்தப் படுபாவி இவன் இறந்து விட்டான் என பட்டா கொடுத்திருக்கிறான் என்று கதறியது. இப்படியெல்லாம் சொத்தினால் துன்பத்தில் ஆழ்ந்தவன் நான்.

இதுவே பணம் இல்லாதவர்கள் எனில் என்ன நடக்கும் என நினைத்துப் பாருங்கள். நிலத்தின் மீது நடத்தப்படும் அக்கிரமங்கள் கொஞ்சமா நஞ்சமா? ஒரு சாதாரணன் இனி ஒரு வீடு வாங்க முடியுமா? இப்போது சம்பளம் 12000 ரூபாயிலிருந்து 25000 வரைக்கும்தான் கொடுக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, வீடு வாடகை உயர்வு, போக்குவரத்து கட்டணம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இப்படி சம்பாதிக்கும் பணமெல்லாம் வயித்துபாட்டுக்கே சரியாக இருக்கும் போது வீடு வாங்க முடியுமா?

கல்லில் கடவுளைக் காணும் ஒவ்வொருவரும் பூக்களுக்காகவும், பூசைக்காகவும், பார்ப்பான் தட்டுக்களில் போடும் காசினால் அந்தக் கடவுள் அவர்களுக்கு எதையும் தருவதில்லை. கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை மட்டும் அவை தரும். நம்பிக்கையோடு வாழ்க்கையை வாழ்ந்து விட போராடும் ஒவ்வொருவரும் தன் வாழ் நாள் வரையிலும் ஏதோ நடக்கும் என்ற ஒரே ஒரு எண்ணத்துடன் வாழ்வை வாழ்ந்து விடுகிறார்கள்.

முப்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீடு, இனி உனக்கு சொந்தமில்லை என ஒருவர் சொல்லும் போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும் ஒரு சாதாரண குடும்பத்தால்? இப்படியான ஒரு பிரச்சினை வந்தது. இரண்டு நாட்கள் ஆகின. உண்மை என்ன என கண்டுபிடிக்க. அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தார்கள். அவர்களின் நிலை அப்படி. அது என்ன, எப்படி சரி செய்ய வேண்டுமென சரியான விபரங்களுடன் அவர்களுக்குப் புரிய வைத்து, அது தொடர்பான பணிகளைச் செய்ய சொன்னேன். அவர்களுக்கு இதை எப்படி கையாளனும் என சொல்லிக் கொடுத்தேன்.

இனி அந்தப் பிரச்சினை தொடர்ந்து நடக்கும். சிவில் பிரச்சினை அல்லவா? ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதம். எல்லோருக்கும் அது எளிதில் புரிந்து விடாது. சிவில் வழக்குகள் என்பவை சரியான ஆதாரங்களுடன் நடத்தப்பட வேண்டியவை. அப்படி இருக்கலாம், இப்படி இருக்காலம் என்பதற்கெல்லாம் வேலையே இல்லை.

ஆவண சாட்சியங்கள் வேண்டும். அது இல்லாமல் சிவில் வழக்குகள் சரியான தீர்வைத் தராது. பணம் எல்லா இடத்திலும் வேலை செய்யாது. அதிகார மீறலும் வேலை செய்யாது. புத்திசாலித்தனமும், நிதானமும் வேண்டும்.

இன்று காலையில் அவர்கள் எனக்கு கட்டணமாக பெரிய தொகை கொடுத்தார்கள். அது அவர்களுக்கு ரொம்பவும் பெரியது.

"ஒரு ரூபாய் மட்டும் கொடுங்கள்" என்றேன்.

திகைத்து நின்றார் அவர்.

சட்டைப் பாக்கெட்டுக்குள் இருந்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து டெஸ்கில் வைத்தார்.

திடீரென்று என் கையைத் தொட்டு வணங்கினார்.

"அய்யா, அதோ என் குருநாதர் அவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னேன்.

அவர் என் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமியை வணங்கிவிட்டு சென்றார்.

கோதையிடம் "இதை எடுத்துக் கொண்டு போய் பத்திரமாக வை" எனச் சொன்னேன்.

படிக்காதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் தொண்டு செய்வதை விட வேறு என்ன பெரியதாய் செய்து விட முடியும்?

என்னால் நடக்க முடியாது. என் உடலே எனக்கு எதிரி. என் உடலை வெற்றி கொள்வதில் தான் என் வாழ்க்கை அமைந்திருக்கிறது. 

இல்லையெனில் இந்தியா இன்னொரு சேகுவேராவைப் பார்த்திருக்கும். 

Screenshot%202025-05-06%20at%202.02.38%E2%80%AFPM.png

ஒரு சக மனிதன் - இல்லாதாவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதிகாரத்தினால், சதியால் வாழ்வை இழந்தவர்களுக்கும் ஆதரவாய் போராடிக் கொண்டிருப்பான்.

இதைப் படிக்கும் எவராவது ஒருவர் துன்பத்தில் உழலும் சக மனிதனுக்கு உதவினால் அதை விட பெரியது எனக்கு எதுவும் இல்லை. 

இதை விட இன்னும் ஒன்று இருக்கிறது. எவருக்கும் எந்த துன்பமும் தராமல் இருந்தாலே அதுவே கடவுளை விட பெரியது. 

கருணை உள்ளம் கடவுள் இல்லம் அல்லவா?

வளமுடன் வாழ்க.

https://thangavelmanickadevar.blogspot.com/2025/05/blog-post_6.html

  • கருத்துக்கள உறவுகள்

சிவில் வழக்கு மூன்று நான்கு தலைமுறை செத்துப் போனாலும் அது ஒரு முடிவுக்கு வராது ........ வழக்கு போட்டவர்களும் சரி முதல் வழக்கை நடத்திய புறக்கிராசிமார் மற்றும் நீதிபதியாயிருந்தவர் யாவரும் பரலோகம் போயிருப்பார்கள் ....... வழக்கு காகிதங்கள் மட்டும் எங்கெங்கோ குறை உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கும் . ........ !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சிவில் வழக்கு மூன்று நான்கு தலைமுறை செத்துப் போனாலும் அது ஒரு முடிவுக்கு வராது ........ வழக்கு போட்டவர்களும் சரி முதல் வழக்கை நடத்திய புறக்கிராசிமார் மற்றும் நீதிபதியாயிருந்தவர் யாவரும் பரலோகம் போயிருப்பார்கள் ....... வழக்கு காகிதங்கள் மட்டும் எங்கெங்கோ குறை உயிரில் வாழ்ந்து கொண்டிருக்கும் . ........ !

இன்று சலூனுக்கு சென்று வந்தேன். அங்கே கனடாவில் வசிக்கும் தம்பி ஒருவர் தந்தையின் மரணத்திற்கு வந்து கடமைகளைச் செய்துவிட்டு நாளை கீரிமலையில் தெர்ப்பைச் சூடு, சலூன் வைத்திருப்பவரோடு நல்ல நட்பு. அப்ப காதில விழுந்தது இங்க எழுத்தில போடுறன்!

தாய், தந்தை இருவரும் 3 மாத இடைவெளியில் இறந்துவிட்டார்கள். இவருக்கு ஒரு அண்ணா பிரான்சில் இருந்து வந்து அவரும் பெற்றோருக்கான கடமைகளைச் செய்தவர். கொழும்பு, யாழில் வீடுகள், வங்கியில் நிலையான வைப்புகள், லொக்கரிலும் நகைகள் என்று தந்தையார் சேமித்து வைத்துள்ளார். அண்ணன் பேராசையில் நிற்கிறார். தந்தை உயிரோடு இருக்கையில் தம்பிக்கு உரியவற்றை எழுதி வைக்க கேட்க தம்பி இப்ப ஒன்றும் அவசரம் இல்லை என மறுத்துவிட்டார். இப்போது அண்ணனின் பேராசையால் பெரிய குழப்பத்தில் இருக்கிறார். கொழும்பு வீடு அண்ணனுக்கு, யாழில் உள்ள வீட்டிலும் பங்கு கேட்கிறாராம்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இன்று சலூனுக்கு சென்று வந்தேன். அங்கே கனடாவில் வசிக்கும் தம்பி ஒருவர் தந்தையின் மரணத்திற்கு வந்து கடமைகளைச் செய்துவிட்டு நாளை கீரிமலையில் தெர்ப்பைச் சூடு, சலூன் வைத்திருப்பவரோடு நல்ல நட்பு. அப்ப காதில விழுந்தது இங்க எழுத்தில போடுறன்!

தாய், தந்தை இருவரும் 3 மாத இடைவெளியில் இறந்துவிட்டார்கள். இவருக்கு ஒரு அண்ணா பிரான்சில் இருந்து வந்து அவரும் பெற்றோருக்கான கடமைகளைச் செய்தவர். கொழும்பு, யாழில் வீடுகள், வங்கியில் நிலையான வைப்புகள், லொக்கரிலும் நகைகள் என்று தந்தையார் சேமித்து வைத்துள்ளார். அண்ணன் பேராசையில் நிற்கிறார். தந்தை உயிரோடு இருக்கையில் தம்பிக்கு உரியவற்றை எழுதி வைக்க கேட்க தம்பி இப்ப ஒன்றும் அவசரம் இல்லை என மறுத்துவிட்டார். இப்போது அண்ணனின் பேராசையால் பெரிய குழப்பத்தில் இருக்கிறார். கொழும்பு வீடு அண்ணனுக்கு, யாழில் உள்ள வீட்டிலும் பங்கு கேட்கிறாராம்!

பெற்றோர் எழுதி வைக்காத விடத்து அனைத்திலும் எல்லா பிள்ளைகளுக்கும் பங்கு கொடுக்க வேணும் . அந்த கனடா பிள்ளைக்கு தெரியாது போலும்..அண்ணன் காரன் தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பார் போலும்.பேராசை அதிகம் தான்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது எப்படியோ தெரியாது

முன்னர் முக்காவாசி வழக்குகள் பங்கு காணி பங்கு கிணறு என்று சகோதரம் சொந்தம் பந்தத்தின் வழக்குகள் தான் என்பார்கள்.

ஊரிலே ஒரு முதுமொழி சொல்வார்கள் யாரும் குறை எண்ண வேண்டாம்.

நன்றாக இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்றால்

மூன்றேமூன்று விசயத்தை செய்தால் காணும் என்பார்கள்.

1)மூளை சுகமில்லாத பெண்ணை திருமணம் செய்து கொடுத்தல்

2) பங்குக் காணியை வாங்கிக் கொடுத்தல்

3) பழைய காரை வாங்கிக் கொடுத்தல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.