Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் முதல் மொழி தமிழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களுக்கு வணக்கம்!

தமிழ் பழமையான, இனிமையான, செழுமையான, மொழி. ஆனால் நெடுங்காலமாக சமஸ்கிருதம் என்னும் மொழியின் பெயரால் பல செயல்கள் அரங்கேறின. இன்றும் தொடர்கிறது, எனவே இதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்

தமிழ்மொழி நமது தாய்மொழி. பல்வேறு சிறப்புக்களைக்கொண்ட பண்பட்ட மொழி. அமிழ்தினும் இனியது தமிழ்மொழி என்று பலமொழிகளைப் பயின்ற அறிஞர்கள் பாராட்டுகின்றார்கள். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என்றார் மகாகவி பாரதியார். உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள்.

இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது.

இன்றைக்கு எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்கிறார்கள்.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தாம் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழ்மொழியை வளர்த்தார்கள். பண்பாட்டைப் பேணினார்கள். இனப்பற்றை இழக்காமல் வாழ்ந்தார்கள். ஆனால் நாளாக நாளாக எல்லாமே நலிவடைந்து போகின்றன. வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் அந்நிய நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்துவிட்டது. அதனால் தாய்மொழி ஆர்வம் குறைந்துவிட்டது.

முன்னாளில், நமது தாயகத்திலே அந்நியரின் ஆக்கிரமிப்பால் தமிழ்மொழி சிதைந்தது பின்னாளில், ஆட்சியாளரின் புறக்கணிப்பால் பயன்பாடு குறைந்தது. இந்நாளில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உளம் பெயர்ந்த காரணத்தால் மொழி மறைந்து போகின்றது.

இந்த நிலை நீடிக்கக்கூடாது. இனத்தால் தமிழர்களாகிய நமது எதிர்காலச் சந்ததி மொழியால் அனாதைகளாகக் கூடாது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கின்ற உயரிய பண்பை உலகிற்குச் சொல்லிக்கொடுத்த நமது உன்னத மொழியை நாமே மறத்தல் கூடாது.

தமிழராய்ப் பிறந்து, தமிழராய் வளர்ந்து தமிழராய் வாழுகின்றது இன்றைய பரம்பரை. நாளைய பரம்பரையும் தமிழராய்ப் பிறக்கவேண்டும், தமிழராய் வளரவேண்டும், தமிழராய் வாழ வேண்டும். அனுதினமும் அதனை நினைக்க வேண்டும். அதற்கு வழி சமைக்கவேண்டும்.

வீடுகள் தோறும் தேன் மொழி பேசுவோம் - கூடி

விளையாடுவோம் தமிழ் இசை பாடுவோம்

ஆடுவோம் நண்பர்கள் கூடுவோம் தமிழர்கள்

அனைவோரும் தமிழினில் உரையாடுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆண்ட ஒரு மொழியா?

தமிழக வரலாற்றில் தமிழ் என்று ஆட்சியிலிருந்தது என்பதே கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் இலக்கியங்களில் தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரமான மதுரையில் வேள்விப்புகையின் நடுவே வடமொழி வேதங்களின் ஒலியே நிறைந்திருந்ததைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் காட்டும் பூம்புகாரில் இந்திரவிழாவில்கூட அந்த அளவுக்கு வேதங்களின் ஆதிக்கம் காணப்படவில்லை. ஆனால் சேரனின் வஞ்சியில் அரண்மனைக் கோயிலின் உள்ளிருந்து வடமொழிப் பூசை செய்யும் பூசாரி தலையை நீட்டுவதைக் காண்கிறோம்.

பொதுவாக உலக வரலாற்றில் ஆளுவோரும் பூசாரிகளும் மக்களுக்குப் புரியாத மொழிகளையே விரும்பி வந்துள்ளனர். ஐரோப்பாவில் ஏறக்குறைய 13 நூற்றாண்டுக் காலம் ஆட்சியிலும் கோயில்களிலும் மக்களுக்குப் புரியாத கிரேக்கமும் இலத்தீனும் தான் பயன்பட்டன. இங்கிலாந்தின் நான்காம் என்ரியும் செருமனியின் மார்ட்டின் லூதரும் கிளப்பிய புயலினால் வெடித்த போர்களில் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஓடிய குருதியாறுதான் இவ்விரண்டு மொழிகளைக் கரைத்து மக்களின் தாய் மொழிகளுக்கு இடமளிக்கத் தொடங்கியது.

தமிழகத்திலும் கழகக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாயிருந்திருக்கக் கூடும். ஆனால் கழகத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சியினுள் வேதமொழி ஆதிக்கம் புகுந்துவிட்டதற்குத் தடயங்கள் உள்ளன.

கழக இலக்கியங்களைத் தொகுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் உருத்திர சன்மனின் பெயர் ருத்ரசர்மா என்பதன் தமிழ் வடிவமே. இந்தப் பின்னணியில் களப்பிரர்களின் காலத்திலும் பல்லவர்களின் காலத்திலும் சமற்கிருதம் ஆட்சி மொழியானது ஒரு நிகழ்முறைத் தொடர்ச்சியின் விளைவேயன்றி மாற்று மொழியாளர் படையெடுப்பின் விளைவென்று கொள்வதற்கில்லை.

பல்லவர்கள் காலஞ் செல்லச் செல்ல தமிழ் மீது கவனம் செலுத்தியதிலிருந்து மக்களின் செயற்பாடு அதன் பின்னணியில் இருந்திருக்க வேண்டுமென்பது புரிகிறது. பல்லவர்களின் இறுதிக்காலத்தில் அரசனின் ஆதரவோடு தோன்றிய நந்திக் கலம்பகம் அவனுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகப் பொதுமக்கள் ஆதரவை நாடிநின்றதன் ஒரு அடையாளமே.

களப்பிரர், பல்லவர் காலங்களுக்குப் பின்னர் தோன்றிய சிவனிய எழுச்சியில் ஒரு தனித்தமிழ் இயக்கமும் அடங்கியிருக்கிறது. ஆனால் அவ்வியக்கத்தையொட்டி உருவான சோழப்பேரரசு தமிழில் பொறித்த கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் குறிப்பாக அவற்றின் மெய்சீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது.

அரசுகளும், கோயில்களும் முற்றிலும் சமற்கிருதக் கல்விக்கே அனைத்து உதவிகளும் செய்தன. மடங்களும் அம்மொழிக்கே முதலிடம் தந்தன. அதனால் பொதுமக்கள் அறிவதற்காகத் தமிழில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் எழுத்து, இலக்கணம் என்று அனைத்துவகையிலும் தரம் இழந்திருந்தன. இக்காலகட்டத்தில் செப்புத் தகடுகளில் அரசனின் மெய்சீர்த்திகள் பொறிக்கப்பட்டு அவை உள்ளூர் ஆட்சியமைப்புகளுக்கு வழங்கப்பட்டனவென்றும் அவற்றில் ஆவணச் செய்திகளை உள்ளூர் மக்கள் எழுதிக் கல்வெட்டுகளிலும் பொறித்தவர் என்றும் பர்ட்டன் றீன் என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாவணங்களில் காணப்படும் கழகக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் சில சொல்லாட்சிகள் இன்று வரையிலும் கையாளப்படுகின்றன.

சோழர்களின் காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் விளைவாகவே கலிங்கத்துப் பரணி, மூவருலா, வீரசோழியம் போன்ற நூல்கள் அரசனின் ஆதரவுடன் தோன்றின. சோழனின் அமைச்சரான சேக்கிழாரைக் கொண்டு பெரிய புராணத்தை அரசனே எழுதுவித்ததற்கும் அரசியற் பின்னணி உண்டு.

கம்பராமாயணம் அரசனின் எதிர்ப்புக்கு நடுவே எழுந்ததென்று கருத இடமுள்ளது. அதுபோலவே தமிழில் இடைக்காலத்தில் உருவான பல இலக்கியங்களும் சிற்றரசர்கள் மற்றும் உயர்குடியினரின் ஆதரவினாலும் ஆட்சியாளரை அண்டியும் அகன்றும் நடைபெற்று சமய வடிவிலான மக்கள் இயக்கங்களிலிருந்தும் தோன்றியவையே.

மொத்தத்தில் சென்ற ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் அரசுகளினால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. அதையும் மீறி மக்கள் அம்மொழியின் சீரிளமைத் திறம் குறையாது வைத்திருக்கின்றனர். வெவ்வேறு காலங்களில் மேல்மட்டத்திலுள்ள வெவ்வேறு குழுக்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காகத் தமிழை, அதிலும் குறிப்பாக, ஒதுக்கப்பட்ட மக்களின் தமிழை மீட்டிருக்கின்றன. சிவனிய(சைவ), மாலிய(வைணவ), சமண, புத்த இலக்கியங்கள், பிற்காலத்தில் தோன்றிய குறவஞ்சி, பள்ளு போன்ற இலக்கியங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள். இறுதியில் கிறித்தவர்கள், அதிலும் கத்தோலிக்கத் கிறித்தவர்கள் தமிழை மீட்டெடுப்பதில் தைரியநாதராயிருந்து தன்னை உயர்த்திக் கொள்வது மூலம் தமிழை உயர்த்திய வீரமாமுனிவரின் வழிகாட்டலில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர்.

ஆனால் இவர்களின் முயற்சிகளுக்குக் காரணமாகவும் மூலவளமாகவும் இருந்தது உழைக்கும் பெருங்குடி மக்களின் தமிழே. ஒதுக்கப்பட்டிருந்த அவர்களின் கோட்டையினுள் பிறமொழி ஆதிக்கம் ஊடுருவ முடியவில்லை. வெட்ட வெட்டத் தளிர்க்கும் உயிர்மரமாகத் தமிழ் அவர்களிடம் வேர்கொண்டிருந்தது. ஆனால் இன்றைய நிலை மாறிவிட்டது. அறிவியலின் விளைவான திரைப்படங்களும் வானொலியும் தொலைக்காட்சியும் தமிழின் வேரில் வென்னீர் ஊற்றுகின்றன. இந்த நிலையில் தமிழைக் காக்கவும் மீட்கவும் நாம் அதிக முனைப்போடும் ஆழ்ந்த சிந்தனையோடும் செயற்பட வேண்டியுள்ளது.

″விடுதலைக்கு″ப் பின் பதவியேற்ற அரசுகள் தமிழ் ஆட்சி மொழியாவதற்குப் பெரும் முயற்சிகள் மேற்கொண்டன. படிப்படியாகத் தமிழ் ஆட்சிப் பணிகளில் இடம் பிடித்து முன்னேறியது. ஆனால் அதற்குப் பல தடைகள் போடப்பட்டன. எடுத்துக்காட்டாக உயர்நீதி மன்றத்தில் தமிழில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அதே வேளையில் நடுவணரசு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநிலத்துக்கு மாநிலம் மாற்றப்படுவார் என்று ஆணை பிறப்பித்தது. எனவே தீர்ப்புகளைத் தமிழில் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்படவே இல்லை.

ஐந்தாண்டுத் திட்டம் போன்று ஏறக்குறைய மாநிலத்தின் அனைத்துத் துறைத் திட்டங்களும் நடுவணரசிடமிருந்து உதவி பெறும் வகையில் இந்திய அரசின் நிதி ஆள்வினை மாற்றப்பட்டது. எனவே உருவாக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உருவாக்கப்பட்டன.

மாற்றம் என்பது கடினமான உழைப்பும் கவனமும் தேவையான நிகழ்முறை. அதனைச் செயற்படுத்துவது எளிதல்ல. இந்தச் சிக்கலான நிலையில் மேற்கூறியவாறான தடைகள் இந்த மாற்றத்தைச் செயற்படுத்தும் எண்ணத்தையே இல்லாமலாக்கி விடுகிறது.

இந்த மாற்றத்தைச் செய்ய பொதுமக்களின் எழுச்சி தேவை. ஆனால் இந்த எழுச்சி தோன்றுவதற்குரிய சூழ்நிலையும் இல்லை. அதாவது தமிழக மக்களின் வாழ்வுக்குத் தமிழ் அறிவு இன்றியமையாதது என்ற சூழ்நிலை இல்லை. குறைந்தது தமிழால் வாழமுடியும் என்ற நிலை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தரங்கம் நிகழ்த்துவோர் தவிர, சராரசித் தமிழ் மகனுக்கு இல்லை. உள்நாட்டில் வேலை வாய்ப்பில்லை; எனவே பிற மாநிலம், ஏதாவது அயல்நாடு ஒன்றுக்கு ஓடுவதுதான் வாழ வழி என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் தமிழ் ஆட்சிமொழி அல்லது கல்வி மொழியாக இருக்க வேண்டும் என்ற உந்துதலுக்கு வழியில்லை.

இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்? நம் நாடு பொருளியலில் தற்சார்பு பெற நாம் போராட வேண்டும். மக்களின் மூலதனத்தையும் முன் முயற்சியையும் உழைப்பையும் முடக்கும் வகையில் அமைந்திருக்கும் வருமானவரிக் கெடுபிடிகள், தொழில் உரிமமுறை, மூலப்பொருட்களுக்கு ஒதுக்கிட்டுமுறை, இசைவாணை(பெர்மிட்) முறை ஆகியவை ஒழியப் பாடுபட வேண்டும். ஏற்றுமதி என்ற பெயரில் அரும்பொருட்கள் எல்லாம் மூலப்பொருள் நிலையில் ஏற்றுமதி செய்யப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் தான் இங்கு பிழைக்க முடியாமல் பிற நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடுவதற்கும் அவ்வாறு ஓடிய இடங்களில் பன்றிகளைப் போல் இருட்டறைகளில் அடைக்கப்பட்டும் நாய்களைப் போல் கொலை செய்யப்பட்டும் அழிவை நோக்கி நடைபோடும் இளைய தலைமுறையின் கவனம் நம் நாட்டின் மீதும் அதன் இன்றைய அவலநிலைக்குரிய காரணங்கள் மீதும் திரும்பும். அவற்றின் விளைவாக எழும் செயலூக்கங்களில் ஒன்றாக கலை இலக்கிய மலர்ச்சி தோன்றும். பிற மொழிக் கல்விக்கு மக்களிடையில் இருக்கும் நாட்டம் குறையும்; அவர்களின் ஆதரவை நாடும் நம் முயற்சியும் வெற்றி பெறும்.

ஆட்சியாளர்கள் எப்போதுமே மக்களுக்குப் புரியாத மொழியொன்று ஆட்சி மொழியாக இருப்பதைத் தான் விரும்புவர் என்று மேலே குறிப்பிட்டோம். நம் நாட்டில் நேற்று சமற்கிருதம். இன்று ஆங்கிலம், மக்களிடையில் ஆங்கிலக்கல்வி பரவினமையால் அது பலருக்கும் புரிந்து கொள்ளத்தக்க மொழியாகி விட்டது. எனவே இப்போது இந்தியைப் பற்றிக்கொள்ள முனைகின்றனர். இத்தகைய சூழலில் நாம் உரிய வகையில் செயலாற்றாமலிருந்தால் அடுத்து இந்தி மொழி தான் ஆட்சிமொழி கல்விமொழியாகும்.

எனவே நாம் ஆட்சியும் கல்வியும் தமிழ் இடம் பெற வேண்டுமென்று நினைத்தால் பொருளியல் தற்சார்புக்கான போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்து அத்துடன் தமிழ் மொழி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

சொல்லாக்கத்தைப் பொறுத்த வரையில் அதற்குத் தேவையான மனித வளத்தைப் பெறுவது பெரும் சிக்கலில்லை. மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட திறன் தேவையாயிருந்து அத்திறனை வெளிப்படுத்துவோருக்குச் சிறப்பு கிடைக்கும் நிலையிருந்தால் திறனுள்ளோர் தாமே வெளிப்படுவர்.

இருந்தாலும் இன்று மொழிபெயர்ப்புப் பணியிலிறங்குவோர் முதலில் கழக இலக்கியங்கள் தொடங்கி வெள்ளையர் வரும் வரை எழுந்த இலக்கியங்கள் அவற்றிலும் சிறப்பாக அந்நூற்களுக்குப் பண்டை உரையாசிரியர்கள் எழுதிய பல்வேறு வகைப்பட்ட உரையாக்கங்கள், கல்வெட்டுகள், பட்டயங்கள் ஆகிய அனைத்தையும் அலச வேண்டும். அவை அனைத்துக்கும் சொல்லடைவு, பொருளடைவு உருவாக்க வேண்டும். அவற்றிலிருந்து ஆட்சித்துறையில் தேவைப்படும் சொற்களை அப்படியே பெற்றுக்கொள்ள முடியும். அறிவியல்துறையிலும் கலையியல், மொழியியல் துறையிலும் பலவற்றுக்கு பொருள் விளக்கமும் தமிழ் வடிவமும் கிடைக்கும். அவற்றுக்கு உட்படாத சொற்களுக்கு மட்டுமே புதிய சொற்களை வடிக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு புதிதாகப் புனைய வேண்டிய சொற்களை அதன் நடைமுறைக் கருத்தின் அடிப்படையிலும் மூலமொழிச் சொல்லின் வேர்ப் பொருளைக் கண்டும் புனையலாம்.

அவையன்றி கலைக்கதிர் போன்ற இதழ்களும் பாவாணர், பெருஞ்சித்திரனார், வா.மு.சேதுராமன், இராமலிங்கனார் போன்று இயக்கமாகச் செயற்பட்டவர்களும் கே.என்.இராமசந்திரன், இல.க.இரத்தினவேலு போன்ற எண்ணற்ற தனி ஆர்வலர்களும் உருவாக்கியுள்ள சொற்களைத் தொகுத்துத் தெரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணிகளை எல்லாம் அரசாங்கம் செய்ய முடியாது, செய்யவும் கூடாது. கடந்த காலம் போல் தமிழகத்துப் பொதுமக்களே அமைப்புகளை ஏற்படுத்தி பணமும் நல்ல மனமும் படைத்த பெருமக்களின் ஆதரவை நாடிப் பெற்றுச் செயற்படுத்த வேண்டும். மதுரை பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியொன்று மிகச் சிறப்பான ஒரு செயல்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிகிறது. அத்தகைய உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவது பயனுடையதாயிருக்கும். அதே வேளையில் இந்நாட்டின் பொருள் வளஞ்சிறக்கத் தேவையான முயற்சிகளின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அதற்குரிய வழிகாட்டுதலும் கூட இன்றியமையாதது, முதன்மையானது.

நிலமும் காலமும் முதற்பொருளென்பது பொருளிலக்கணம். மொழி மரமானால் அம்மொழி பேசும் மனிதன் அம்மரத்தை ஈன்று வளர்த்துத் தாங்கி நிற்கும் நிலமாகும். நிலம் பாழாகிப் போனால் மரம் வாழாது. பேசும் மக்கள் வளங்குன்றி வறுமையுற்று வேரற்று நிற்பார்களானால் மொழி எவ்வாறு வளம் பெறும்? எனவே தமிழை வளர்க்க வேண்டுமென்று நெஞ்சார விரும்புவோர் தமிழ் மக்களின் பொருளியல் வாழ்வு சிறக்கத் தேவையான நடவடிக்கைகளில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

http://kumarimainthan.blogspot.com

உலகிலேயே முதல் முதலில் தோன்றிய மூத்த மொழி தமிழேதான் என்று பலநாட்டு ஆராய்ச்சியார்கள் கண்டுபிடித்துள்ளார்கள். கணனித் தொடர்புகளுக்கும் மிகவும் இசைவான, இலகுவான மொழியும் தமிழே என்று இன்றைய அறிஞர்கள் இயம்புகின்றார்கள்.

இவ்வாறு நமது தாய்மொழி பழமைக்குப் பழமையாக இருக்கிறது. புதுமைக்குப் புதமையாகவும் இருக்கிறது. என்றும் இளமையாக இருக்கிறது. அதனால் நமக்குப் பெருமையாக இருக்கிறது.

இப்படி நாங்களே எங்களைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான். இதற்கான ஆதாரங்கள் எவை ?

இன்றைக்கு எங்கெங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்றுகூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளிலே வாழ்கிறார்கள்.

கூலிகளாகவும் அகதிகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் சொந்த நாட்டை உதறித் தள்ளிய எமக்கு இப்படி ஒரு பெருமை தேவைதானா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இக்கட்டுரை ஒவ்வொருவரும் எப்படி சிந்திக்கிறார்கள் தங்களைப்பற்றி என்பதை பொறுத்தது.நீங்கள் தமிழர்களை பற்றி என்ன நினக்கிறீர்கள் என்பதை நான் உங்களது மண்டைக்குள் புகுந்து என்ன நினக்கிறீர்கள் என்பதை என்னால் எழுத முடியாது.எந்த ஒரு இனமும் தங்களை பற்றி பெருமையாக தான் சொல்லுவார்கள்.அதற்காக நீங்கள் அப்படி நினக்கவில்லை என்பதற்கு நான் ஜவாப்தாரியல்ல.இக்கட்டுரையை நான் எழுதியது ஒவ்வொருவரினதும் கருத்துக்களையும் உள்வாங்கி ஒரு விவாதமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

"கூலிகளாகவும் அகதிகளாகவும் பஞ்சம் பிழைக்கவும் சொந்த நாட்டை உதறித் தள்ளிய எமக்கு இப்படி ஒரு பெருமை தேவைதானா ?"

இப்படி பார்த்தால் உலகில் பல இனங்கள் எதோ ஒரு காலத்தில் அகதியாக இருந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கட்டிப்பிடித்து மாரடித்து அழுதுகொண்டு இருக்கிறார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். எழுத்தளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதால் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திச்சூடி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. தமிழ் திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.

கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

சங்க காலம் (கி.மு 200 - கி.பி 300)

சங்கம் மருவிய காலம் (கி.பி 300 - கி.பி 700)

பக்தி இலக்கிய காலம் (கி.பி 700 - கி.பி 1200)

மத்திய காலம் (கி.பி 1200 - கி.பி 1800)

இக்காலம் (கி.பி 1800 - கி.பி 2007)

பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீழுள்ள ஆங்கில இணைப்பில் தமிழ் மொழி, கலாச்சாரம் என்பன பற்றி கூறப்படுகிறது.

http://our_legacy.pitas.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி வரலாறு

மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.

தமிழ் பேசப்படும் இடங்கள்

தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.

அத்துடன், இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் குறிப்பாக, பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களுடையதும் முயற்சிகளைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில், இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். ஆனல் மட்டக்களப்பு பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கிலும் பெரிதும் வேறுபட்டது.

http://www.canterburytamilsociety.org/tham...amilhistory.htm

எழுத்து முறை

தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்துப் பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.

எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டுச் சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. இது ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.

எழுத்துச்சீர்திருத்தம்

வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட்டன. 1975-ல் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன. எதிர்காலத்தில் உகரம், ஊகாரம் ஏறிய மெய்யெழுத்துக்களில் மாற்றங்கள் வரக்கூடும். உதாரணம்: ஜ- ஜு – ஜூ, ஸ-ஸு-ஸூ போன்று க – கு- க ூ , ச-சு -சூ என்று உகரத்திற்கும் ஊகாரத்திற்கும் பொதுவான modifier வரக்கூடும் என்று எதிர் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.