Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 MAY, 2025 | 03:18 AM

image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார்.

IMG_20250515_135809.jpg

புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட  குடிநிர் நிலையம்  திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை   குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது.

IMG_20250515_150655.jpg

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்துக்கொள்ளும் விகிதம் குறைவடைந்து வருகிறது. உண்மையில் இது கவலை தருகின்ற விடயமாகும். பொது அறிவு என்பது அனைத்து வகையிலும் எதிர்காலத்திற்கு பங்காற்றக்கூடியது. அதனை வளர்த்துக்கொளள அக்கறை செலுத்தவேண்டும். உயர் பதவிகளை வகிப்பதற்கான அடிப்படைகூட பொது அறிவுத் தேடல் தான் என்றால் அது மிகையில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

IMG_20250515_145651.jpg

புளியங்கூடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு குடிநீர்த் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் இன்று இலவச குடிநீர் வழங்கும் திட்டம் திறக்கப்பட்டுள்ளமை பாராட்டுதற்குரியது. இன்றைய சூழலுக்கு ஏற்ப இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் சமூக அக்கறை கொண்ட மக்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். இதனை பயன்படுத்துபவர்கள் இதன் முக்கியத்துவதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ஙில் மண்டபத்தில் நடைபெற்ற தையல் பயிற்சி ஆரிவேக் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கும், வினாடி விடை போட்டிகளில்  கலந்து கொண்டவர்களுக்கு  சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர் உட்பட்ட அரச அதிகாரிகள், மக்கள் எனப் பலரும் பங்குகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/214848

  • கருத்துக்கள உறவுகள்

குடிநீர் என்பது மனிதர் உட்பட சகல உயிரினங்களினதும் வாழ்வாதரப் பிரச்சினை ........அவற்றை நிவர்த்தி செய்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள் . ........ ! 👍

நன்றி ஏராளன் ...........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்குமா @Justinஅண்ணை?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்குமா @Justinஅண்ணை?

எதைச் சுத்திகரிக்கிறார்கள் என்பதைத் பொறுத்து இருக்கிறது. இந்த நிலையத்தில் என்ன முறையைப் பாவிக்கிறார்கள் (filtration or osmosis) என்று தெரிந்தால் தெளிவாகச் சொல்லலாம்.

அனேகமாக இலங்கையில் நீரைச் சுத்திகரிக்கும் போது வடிகட்டிகள் மூலம் பக்ரீரியாக்களை (Coliform) அகற்றுவர், இது நல்லது. பக்ரீரியாக்களும், அமீபாக்களும் குடி நீரில் இருந்தால் நோய்கள் வரும். அதை விட சில கனிமங்கள் (minerals) மிகையாக இருந்தால் உயர் தொழில் நுட்பங்கள் மூலம் அகற்றலாம், இலங்கையில் செய்கிறார்களா என்பது தெரியாது. உதாரணமாக, புளோரைட் (fluoride) மிகையாக இருந்தால் பல் ஆரோக்கியம் கெடும். அகற்றுவது அவசியமாகும்.

சுத்திகரிப்பில், தீங்கு தரும் என்று நிரூபணமான நச்சுக்களும் அகற்றப் படலாம். பார உலோகங்களான ஈயம், குரோமியம் என்பனவும் அகற்றப் பட வேண்டும். இலங்கையில் மிக முக்கியமான நீர் வழி நச்சாக நைட்ரஜன் உரக்கழிவு இருக்கிறது. எனவே, நைட்ரேற்றுகளை அகற்றுவதும் நீரைச் சுத்திகரிப்பதாகும். எனவே இதுவும் குடி நீரை ஆரோகியமாக்கும்.

30 minutes ago, Justin said:

உதாரணமாக, புளோரைட் (fluoride) மிகையாக இருந்தால் பல் ஆரோக்கியம் கெடும். அகற்றுவது அவசியமாகும்.

முன்னர் நான் இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் நாம் வழக்கமாக வாங்கும் பற்பசைகளை வாங்குவதில்லை. ஏனென்றால், அவற்றில் இந்த புளோறைட் (fluoride) உள்ளது என்றும், வர்த்தக மாபியாக்கள் தான் இதனை பற்களுக்கு நல்லது என சொல்லி விற்கின்றார்கள் என்றும், என்னையும் அப்படியான பற்பசைகளை தவிர்க்குமாறும் ஆலோசனை சொன்னார்.

Off topic என்றாலும் ஒரு கேள்வி. இந்த புளோறைட் (fluoride) பற்பசைகள் உண்மையாகவே உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

முன்னர் நான் இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர் நாம் வழக்கமாக வாங்கும் பற்பசைகளை வாங்குவதில்லை. ஏனென்றால், அவற்றில் இந்த புளோறைட் (fluoride) உள்ளது என்றும், வர்த்தக மாபியாக்கள் தான் இதனை பற்களுக்கு நல்லது என சொல்லி விற்கின்றார்கள் என்றும், என்னையும் அப்படியான பற்பசைகளை தவிர்க்குமாறும் ஆலோசனை சொன்னார்.

Off topic என்றாலும் ஒரு கேள்வி. இந்த புளோறைட் (fluoride) பற்பசைகள் உண்மையாகவே உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

இல்லை. கடைகளில் கிடைக்கும் புளோரைட் பற்பசையின் புளோரைட்டினால் பல்லுக்கும், உடலுக்கும் ஆபத்து இல்லை. இது ஒரு போலி விஞ்ஞானத் தகவல், அண்மைக் காலமாக விஞ்ஞானத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டவர்களால் பரப்படும் ஒரு விடயம்.

Fact: புளோரைட் என்ற கனியுப்பு பல்லின் மேற்படையான எனாமலுக்கு அவசியமான ஒன்று. இந்த மேற்படை பலவீனமானால், பற்களிடையே தேங்கும் உணவுத் துணிக்கைகளில் பக்ரீரியா வளர்ந்து அமிலம் சுரக்க, அது இன்னும் பல்லைப் பலவீனமாக்கும் (பல்லுக் கூசுதல் இதன் அறிகுறி). எனவே, குடிக்கும் நீரில் ஒரு குறிப்பிட்ட அளவு புளோரைட் இருக்கும் படி மேற்கு நாடுகளில் நகரங்கள் பார்த்துக் கொள்கின்றன. சில நேரங்களில், நீரில் புளோரைட் சேர்ப்பார்கள். மறு பக்கம், புளோரைட் பற்பசையில் இருப்பது மிகக் குறைந்த வீதமான புளோரைட் அயன். உதாரணமாக, மிகக் கூடிய புளோரைட் % கொண்ட ஒரு பற்பசையில் கூட, ஒரு தடவை பல் விளக்கும் பசையில் 2 மில்லிகிராம் புளோரைட் தான் இருக்கிறது. இந்த அளவு பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு தரும் என ஆதாரங்கள் இல்லை.

இந்தப் போலி விஞ்ஞான புளோரைட் வதந்திகளுக்கு பல தோற்றுவாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சில ஆபிரிக்க நாடுகளில் இருக்கும் புளோரைட் செறிந்த குடி நீர் பற்றிய தகவல்கள். உதாரணமாக சாம்பியா (Zambia) வில், சில பகுதிகளில் புளோரைட் செறிவு குடிநீரில் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால், பல்லும், எலும்பும் புளோரைட் நச்சினால் பாதிக்கப் படுகின்றன அந்த மக்களில். இத்தகைய புளோரைட் நச்சு நிலைமை மேற்கு நாடுகளில் ஏற்பட சாத்தியமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

எதைச் சுத்திகரிக்கிறார்கள் என்பதைத் பொறுத்து இருக்கிறது. இந்த நிலையத்தில் என்ன முறையைப் பாவிக்கிறார்கள் (filtration or osmosis) என்று தெரிந்தால் தெளிவாகச் சொல்லலாம்.

Reverse osmosis (RO) is a water purification process that uses a semi-permeable membrane and pressure to separate water molecules from contaminants. It's essentially the reverse of natural osmosis, where water moves across a membrane from an area of lower solute concentration to an area of higher concentration. 

இங்கே பெருமளவு வடிகட்டிகள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குபவை.

RO WITH UV FILTER எமது கிராமத்தில் உள்ளது.

இந்த வடிகட்டும் முறையில் உட்செலுத்தப்படும் நீரில் 1/3 நன்னீராகவும் 2/3 கழிவு நீராக வெளியேற்றப்படும் என தம்பி சொன்னவன்.

  • கருத்துக்கள உறவுகள்

On 16/5/2025 at 12:51, ஏராளன் said:

Reverse osmosis (RO) is a water purification process that uses a semi-permeable membrane and pressure to separate water molecules from contaminants. It's essentially the reverse of natural osmosis, where water moves across a membrane from an area of lower solute concentration to an area of higher concentration. 

இங்கே பெருமளவு வடிகட்டிகள் இந்த தொழில்நுட்பத்தில் இயங்குபவை.

RO WITH UV FILTER எமது கிராமத்தில் உள்ளது.

இந்த வடிகட்டும் முறையில் உட்செலுத்தப்படும் நீரில் 1/3 நன்னீராகவும் 2/3 கழிவு நீராக வெளியேற்றப்படும் என தம்பி சொன்னவன்.

ஓம், இது நவீன முறை தான். இந்த முறையில் முக்கியமான பல இரசாயனக் கழிவுகள் நீரில் இருந்து அகற்றப் படும். உரக்கழிவுகளோடு தொடர்பான நைட்ரேற்றுகளும் அகற்றப்படும் கழிவுகளில் அடங்கும், எனவே இலங்கையின் வடக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு மிகவும் பொருத்தமான வடி கட்டல் முறை இது.

ஆனால், நான் குறிப்பிட்ட பக்ரீரியாக்களை இந்த வடிகட்டல் அகற்றாது. எனவே, இந்த மென்சவ்வு வடி கட்டலோடு, நீரை UV light கொண்டு தொற்று நீக்கவும் வேண்டியிருக்கும். இதனால் தான் உங்கள் கிராமத்தில் இரண்டையும் இணைத்த முறையைப் பாவிக்கிறார்கள்.

இந்த நவீன முறையின் மூன்று தீமைகள்: செலவு அதிகம் (மின்சாரப் பாவனை, பராமரிப்பு என்பன காரணம்), சரியாக பராமரிக்காமல் விட்டால் வடி கட்டும் மென்சவ்வில் பக்ரீரியாக்கள் மிகவும் சௌகரியமாக வளரும், வரட்சியான இடங்களில் நீரை விரயம் செய்ய வேண்டிவரும் (ஆனால், நீரை மீள் சுழற்சி செய்து சமாளிக்கலாம்).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.