Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Screen-Shot-2025-05-15-at-4.59.59-AM.png

கார்ணியின் மந்திரிசபை

சிவதாசன்

கனடிய மத்திய அரசைக் கைப்பற்றி லிபரல் கட்சியின் தலைவர் கார்ணி மந்திரிசபையை இவ்வாரம் அறிவித்திருக்கிறார். அதில் இரு தமிழர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. துர்ப்பாக்கியமாக அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியுடன் நான் எடுத்துக்கொண்ட படம் எதுவும் கைவசம் இல்லாமையால் அதை இக்கட்டுரையில் இணைத்துக்கொள்ள முடியவில்லை.

தேர்தலுக்குப் பின் சற்றே ஒதுங்கியிருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொய்லியேவ் கார்ணியின் மந்திரிசபை அறிவிக்கப்பட்டதும் மீண்டும் முனக ஆரம்பித்திருப்பது பரிதாபமாகவிருக்கிறது. பாவம், பின்னாலிருந்து முதுகில் இடி விழுகிறது போல; ஏதாவது சொல்லியாகவேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் போலிருக்கிறது. “இந்த மந்திரிசபையில் பலர் ட்றூடோவின் அமைச்சர்கள்” என மனம் வெதும்பி அழுதிருக்கிறார் பொய்லியேவ். அடுத்த தடவை ஆட்சி அமைக்கவேண்டுமென்றால் கன்சர்வேட்டிவ் கட்சி இப்போதே வேறு தலைவரைப் பார்ப்பது நல்லது.

தமிழ்ப் பூர்வீகத்தைக் கொண்ட இருவருக்கு கார்ணியின் மந்திரிசபையில் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருப்பது தமிழருக்குப் பெருமை. ஆனாலும் இவ்விரு பதவிகளும் மிகவும் ஆபத்தானவையும் கூட. வந்ததும் வராததுமாக வெளிவிவகார அமைச்சர் அனித்தா ஆனந்த் பாலஸ்தீன விடயத்தை இழுத்து இஸ்ரேலைக் கண்டித்திருக்கிறார். பாலஸ்தீன விடயத்தில் ட்றூடோ அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக அலைந்து திரிந்தது என்றாலும் ட்றூடோ பதவி விலகுவதற்கு முன்னர் “நான் ஒரு சயோனிஸ்ட்” எனப் பிரகடனப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார். தேர்தலுக்கு முன்பிருந்தே கார்ணி “இரு நாட்டுக் கொள்கையை” ஆதரித்ததன் மூலம் பாலஸ்தீனப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்தியிருந்தார். அமைச்சர் ஆனந்தின் ‘இஸ்ரேல் எச்சரிக்கை’ இவ்விடயத்தில் கார்ணி அரசு எப்படியான நகர்வுகளை மேற்கொள்ளலாம் என்பதைக் காட்டியிருப்பது நல்லது.

மறுபக்கத்தில் தெற்கின் மகாராஜா தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை அரேபியாவுக்கு மேற்கொண்டிருப்பது நெட்டன்யாஹுவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருக்கலாம். அரபுக்களிடமிருந்து ‘மிதக்கும் அரண்மனையைப்’ பரிசாகப் பெற்றுக்கொண்ட மகாராஜா விடப்போகும் அடுத்த வாண வேடிக்கை எப்படியாக இருக்கப்போகிறதோ தெரியாது. ஆனாலும் கார்ணி அரசு அமெரிக்காவைவிட ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது நெருக்கத்தை சொல் மூலமும் செயல் மூலமும் காட்டி வருவதே அமைச்சர் ஆனந்தின் இந்த அறிக்கை எனவே நம்ப வேண்டியிருக்கிறது. அமைச்சர் ஆனந்தின் இக்கொள்கை நகர்வு அவருக்கு எதிராகத் திருப்பிவிடப்படுமானால் அவரது பதவிக்கு நீண்ட ஆயுள் இருக்க வாய்ப்பில்லை. இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சராகவிருந்த மெலனி ஜோலி “இப்பதவி தனக்கு வேண்டாம்” எனக்கூறி வேறு பதவியைப் பெற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். ட்றம்பின் உலகில் இப்பதவி இலகுவான ஒன்றல்ல என்பதை ஜோலி உணர்ந்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண அரசில் முதல்வராகப் பதவியேற்பதற்குப் பலர் பின்னடித்த நிலையில் ‘இதோ நானிருக்கிறேன் பார்’ என வந்து குதித்தவர் உஷால் டொசாஞ் எனப்படும் ஒரு சீக்கிய வம்சாவளியினர். அப்போது ஒரு வலதுசாரிப் பத்திரிகையொன்றில் ” வேறொருவரும் முன்வராத போது அப்பதவிக்கு எங்காவது இருந்து ஒரு இந்தியர் வருவார்” என நக்கலடித்திருந்தது. அமைச்சர் ஆனந்த் விடயத்திலும் இப்படியொரு நையாண்டி அறிக்கை வராது என நம்புவோமாக.

அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி விடயத்திலும் நிலைமை இலகுவானதான ஒன்றல்ல. உள்நாட்டுப் பாதுகாப்பு சம்பந்தமான அமைச்சு இது. வெளிநாடு அரசுகளின் தலையீடுகள் பற்றி ட்றூடோ அரசுக்கு தொடர்ந்து தலையிடி கொடுத்து வந்தது கன்சர்வேட்டிவ் கட்சி. கனடிய பாராளுமன்றத்தில் இருக்கும் வெளிநாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் பூர்வீக நாடுகளோடு மென்போக்கைக் கடைப்பிடிப்பது வழக்கம். பல கனடிய யூதர்கள் இவ்விடயத்தில் இஸ்ரேல் நட்பைப் பேணுவதும் அதற்காகக் கனடிய அரசை வற்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கம். சீன அரசுக்குச் சார்பானவர்கள் பலர் இரண்டு பிரதான கட்சிகளிலும் இருக்கிறார்கள். காளிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானவர்களும், இந்திய அரசுக்கு ஆதரவானவர்களும், தமிழீழ விடுதலைக்கு ஆதரவனாவர்களும் என பலதரப்பட்டவர்கள் கனடிய பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அமைச்சர் ஆனந்தசங்கரியின் தமிழராதரவு நிலைப்பாடு வெளிப்படையானது. இந்நிலையில் அவருக்கு உள்நாட்டுப் பாதுகாப்புப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கோவிட் காலத்து பாரவண்டி ஓட்டுனர்களின் ஒட்டாவா நகர முற்றுகையைக் கையாண்ட விதம் ட்றூடோவின் வீழ்ச்சிக்கு முக்கியமானதொரு காரணம். அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளில் பெரும்பாலானவை, ஒரு வகையில், ‘உருவாக்கப்பட்ட பிரச்சினைகளாகவே’ (manufactured crisis) இருக்க வாய்ப்புண்டு. அனுபவமும் முதிர்ச்சியும் அவர் பக்கமிருந்து , வரக்கூடிய பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுமிருப்பின் அவரும் தப்பிப் பிழைக்க வாய்ப்புண்டு.

கார்ணி அமைச்சின் இன்னுமொரு முள்ளாக வந்திருப்பது, பல வகைகளிலும் புத்தம் புதியவரான, அமைச்சர் எவன் சொலொமன். ‘செயற்கை விவேகம் மற்றும் டிஜிட்டல் ஏதோ…’ என ஒரு அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எவன் சொலொமன் முன்னர் சீ.பீ.சீ. தொலைக்காட்சியிலும் பின்னர் சீ.ரீ.வி. தொலைக்காட்சியிலும் பணியாற்றிய ஒரு ஊடகவியலாளர். சீ.பி.சீ. யில் முக்கிய பதவியில் இருக்கும் போது பெறுமதி வாய்ந்த ஓவியமொன்றை விற்றார் எனவும் இதன் பின்னால் ஏதோ ஒரு திருகுதாளம் இருந்ததெனவும் குற்றச்சாட்டப்பட்டு ஒரே நாளில் இவர் பதவி நீக்கப்பட்டார். அந்த ஓவியத்தை வாங்கியவர் வேறு யாருமல்ல தற்போதைய பிரதமர் கார்ணியே. இந்த நட்பின் ரீதியாவே அவர் பாதுகாப்பான ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு , பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு இப்போது புதியதொரு அமைச்சையும் நிறுவி அவருக்குத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். இது கார்ணி மீது ஒட்டிக்கொண்டிருக்கும் பெரியதொரு அழுக்கு.

இவர்களை விட ‘பிரம்டன் வாசிகள்’ பலரும் அமைச்சரவையில் உலவுகிறார்கள் எனக் கேள்வி. காளிஸ்தான் கோட்டையாக விளங்கும் பிரம்டன் மாநகரம் கார்ணியின் அரசுக்கு, குறிப்பாக அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு பல தலையிடிகளைக் கொண்டுவர வாய்ப்புண்டு.

இதற்கிடையில் பாராளுமன்றத்தில் 168 ஆசனங்களுடன் பயணத்தை ஆரம்பித்த கார்ணி அரசு தனது ஆசனங்களை இப்போது 170 ஆக அதிகரித்திருக்கிறது. பெரும்பான்மைக்கு (172) இன்னும் இரண்டு ஆசனங்கள் தேவை. இன்னும் இரண்டு தொகுதிகளில் வாக்குகள் மீள எண்ணுப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்விரண்டையும் அபகரிக்காவிட்டால் எதிர்க்கட்சிகளிடமிருந்து இரண்டைப் பறிப்பதற்கான முயற்சிகள் / பேச்சுவார்த்தைகள் குச்சு ஒழுங்கைகளில் நடைபெற வாய்ப்புண்டு. அது தவறின் கார்ணியின் ஆட்சி நான்கு வருடங்களுக்கு இழுக்காது எனக் கன்சர்வேட்டிவ் கட்சி உறுதியாக நம்புகிறது. அதைச் சாத்தியமாக்கும் வேலைகளை கன்சர்வேட்டிவ் கட்சி ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதாகவும் கேள்வி.

எல்லாப் புகழும் பிரம்டனுக்கே!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.