Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரேயொரு வட்ஸ் அப் செய்தி மூலம் 1400 குடும்பங்களின் வயிற்றிலடித்த ஆடை தொழிற்சாலை : வேலை இல்லை, கையில் காசுமில்லை, செல்வதற்கு இடமுமில்லையென கண்ணீர் விடும் தொழிலாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

21 MAY, 2025 | 12:31 PM

image

Revolutionary Existence for human Development -red

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஆடைதொழிற்சாலையொன்று திடீரென இழுத்து மூடப்பட்டுள்ளதால் 1461 தொழிலாளர்கள் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில்இகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இயங்கும் முன்னணி ஆடைதொழிற்சாலை முன்னறிவித்தல் இன்றி தனது தொழிற்சாலையை மூடியுள்ளது.

ஒரே இரவில் 1461 தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கியுள்ளதுடன் நிர்க்கதி நிலைக்கு தள்ளியுள்ளது.

மே 19ம்திகதி இந்த தொழிற்சாலை மூடப்பட்டது.

499468929_1007019548274050_1477613259481

பலவருடங்களாக அந்த தொழிற்சாலைக்காக தங்களை அர்ப்பணித்த தொழிலாளர்கள் பலர் ஆறு மணிவரை வேலைபார்த்துக்கொண்டிருந்தனர். இரண்டு மணிநேரம் கழித்து 8 மணியளவில் நாளை முதல் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படும் என்ற தகவல் வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கப்பட்டது.

எந்த வித முன்கூட்டிய தகவல்களும் இன்றி இந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிற்கு அடுத்தவாரம் ஆடைகளை அனுப்பும் பணிகளை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் நள்ளிரவு தாண்டியும் வேலைபார்த்துக்கொண்டிருந்தோம் என தெரிவிக்கும் தொழிலாளர்கள், நாங்கள் எதனையும் எதிர்பார்க்கவில்லை வழமை போல மறுநாளும் வேலை தொடரும் என்றே நினைத்திருந்தோம் என தெரிவிக்கின்றனர்.

என்னிடம் 4000 ருபாய் மாத்திரம் இருந்தது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நேற்று 2500 ரூபாய் கடன் வாங்கினேன். நாளைக்கு எனது பிள்ளைகளிற்கு சமைப்பதற்கு கோழி இறைச்சியும் வாங்கினேன். தற்போது எனக்கு வேலை இல்லை. கையில் காசும் இல்லை. செல்வதற்கு இடமும் இல்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ள பெண்ணொருவர், நாங்கள் எங்கள் உயிரை கொடுத்து பணிபுரிந்த இந்த நிறுவனம இதனை செய்யும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை எனகுறிப்பிட்டுள்ளார்.

இது வெறுமனே தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழத்தல் மாத்திரமல்ல 1400 குடும்பங்கள் திடீரென ஸ்திரதன்மை இழக்கும் நிலை.

தொழிலாளர்கள் தாங்கள் முன்கூட்டியே எதனையும் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.

498686265_1007019498274055_9898838077668

நிறுவனம் இழப்பீடுகள் குறித்து தெரிவித்துள்ள போதிலும், பொருளாதார, உணர்வுரீதியான தாக்கங்கள் அதனையும் மீறியவையாக காணப்படுகின்றன.

எந்த வித முன்கூட்டிய தகவலும் இன்றி தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்துவது வாழ்வதற்கான உரிமையை பறிக்கும் செயல் என தெரிவித்துள்ள தொழிலாளர் ஒருவர் இழப்பீடு என்பது சிலநாட்களிற்கே போதுமானது, அதன் பின்னர் என்ன செய்வது, எங்களிற்கு பிள்ளைகள் உள்ளனர் வீட்டு வாடகை கட்டவேண்டும் வேறொரு வேலையை தேட நேரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நிறுவனங்கள் சட்டரீதியில் தங்கள் நடவடிக்கைகளை முடித்துக்கொள்ளலாம் என்றாலும்உரிய முன்னறிவிப்பு வெளிப்படை தன்மையின்றி இதனை செய்வது, மனிதாபிமானமற்றது, ஒழுக்கமற்றது.

இந்தவகையான திடீர் பணிநிறுத்தம் குறிப்பாக பெண்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத் தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, அவர்களில் பலர் ஏற்கனவே இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழலில் விளிம்புகளில் வாழ்கின்றனர்.

அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற கவலை அதிகரித்து வருகிறது. சுதந்திர வர்த்தகவலயத்தில் தொழிற்சாலை மூடல்கள் நியாயமாகவும் முன்கூட்டியே தகவல் வழங்கப்படுபவையாகவும் கண்ணியமாகவும் நடப்பதை உறுதிசெய்ய முதலீட்டு வாரியமும் இலங்கை அரசாங்கமும் விசாரணை செய்து முதலீட்டாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கொள்கைகளை வகுக்க வேண்டும்.

499994330_1007019454940726_3430201223181

இந்த கடினமான நேரத்தில் மனித மேம்பாட்டுக்கான புரட்சிகர இருப்பு (red) பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. எங்கள் உதவி மையம் மூலம் எங்கள் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தகவல் வழிகாட்டுதல் மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம்.

இருப்பினும்இ ஒரு சிறிய இலாப நோக்கற்ற அமைப்பாக red 1461 தொழிலாளர்களின் முழு சமூக மற்றும் மனநலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கவில்லை. எனவே அனைத்து சிவில் சமூக அமைப்புகள் தொழிலாளர் உரிமைகள் குழுக்கள் - தொழிற்சங்கங்கள் மனநல நிபுணர்கள் மற்றும் அரசாங்கம் இந்த நெருக்கடியான தருணத்தில் ஒன்றிணைந்து இந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்களை ஆதரிக்குமாறு நாங்கள் அவசரமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

https://www.virakesari.lk/article/215311

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நட்ட ஈடு - நெக்ஸ்ட் குழுமம் அறிவிப்பு

Published By: VISHNU

22 MAY, 2025 | 07:55 PM

image

(எம்.மனோசித்ரா)

பிரித்தானிய குழுமமொன்றுக்கு சொந்தமான நெக்ஸ்ட் உற்பத்தி, அதிக இயக்கச் செலவுகள் காரணமாக கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையை மூட தீர்மானித்துள்ளதாகவும், எனினும் இதனுடன் தொடர்புடைய ஏனைய இரண்டு தொழிற்சாலைகள் குறைந்தளவான ஊழியர்களுடன் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

தமது தீர்மானத்தின் காரணமாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இலங்கை தொழிலாளர் சட்டத்துக்கமைய நட்டஈட்டு தொகை வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செயற்பாடுகளை முடிவுறுத்தும் தீர்மானம் நிறுவனத்திற்கு மிகவும் கடினமான முடிவாக அமைந்துள்ளது. அனைத்து மாற்று வழிகளையும் ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில ஆண்டுகளாக, இந்த தொழிற்சாலை இலாபகரமானதாக இல்லை. மேலும் நிலைமையை சரிசெய்ய நாங்கள் கணிசமான முயற்சிகள் எடுத்த போதிலும், தொழிற்சாலையை பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக மாற்ற முடியவில்லை.

அந்த வகையில் சமீபத்தில், இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. தொழிலாளர்களுக்கான செலவுகள் மிக அதிகமாக இருந்தால், வேறு எந்த முதலீட்டாளரும் அத்தகைய நிறுவனத்தை பொறுப்பேற்று நடத்த முடியாது. மற்ற நாடுகளுடன் போட்டியிடவும் முடியாது. இதனால் தொழிற்சாலையை மூடுவது மாத்திரமே ஒரே வழியாகும்.

இலங்கையின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவர்களின் சேவை விதிமுறைகளின் அடிப்படையில் நிறுவனமானது 2.5 மில்லியன் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும். மேலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள அலங்கார மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு தொழிற்சாலைகள் செயல்பாட்டில் இருக்கும்.

எனினும் அவை குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடனேயே இயங்கும். ஆண்டிகம மற்றும் நவகத்தேகமவை தளமாகக் கொண்ட பிற உற்பத்தி செயல்பாடுகளும் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும்.

இந்த தீர்மானம் துரதிர்ஷ்டவசமாக ஒட்டுமொத்தமாக 1,416 பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும். நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்கள் மாற்று உள்ளுர் வேலைவாய்ப்பைக் கண்டறிய உதவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த நோக்கத்திற்காக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளைக் கண்டறிய உதவுவதற்காக நாங்கள் பிற உள்ளூர் உற்பத்தி தளங்களைத் தொடர்புகொள்வோம்.

இலங்கையில் எமது நிறுவனத்தின் உற்பத்தி வரலாற்றை அங்கீகரிக்கும் விதமாக, பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நிறுவனம் செலுத்தும் சட்டப்பூர்வ பணிநீக்க கொடுப்பனவை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்த விரும்புகிறது.

அதற்கமைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்கள் பிற உரிமைகளுடன் மேலதிகமாக குறைந்தபட்சம் 2மாத ஊதியத்தைப் பெறுவார்கள்.

சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சூத்திரத்தின் அடிப்படையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த கொடுப்பனவுகள் 2.5 மில்லியன் இலங்கை ரூபா உச்ச வரம்பிற்கு உட்பட்டவையாக இருக்கும்.

அது மாத்திரமின்றி மே மாதம் இறுதி வேலை நாள் வரை சம்பளம் வழங்கப்படும். சம்பளம் வழக்கம் போல் உரிய தினத்தில் செலுத்தப்படும். அத்தோடு நிலுவையில் உள்ள அனைத்து விடுமுறை ஊதியங்களும் செலுத்தப்படும். அனைத்து உற்பத்தி மற்றும் வருகை போனஸ் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/215438

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெக்ஸ்ட் நிறுவனம் ஒரு பில்லியன் யூரோ இலாபம் ஈட்டுகிறது; எமக்கு நஷ்ட ஈடு வேண்டாம்; தொழிலே வேண்டும் - சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கம்

24 MAY, 2025 | 01:09 PM

image

(எம்.மனோசித்ரா)

பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது. எனவே தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து தொழிலாளர்களுக்கு தொழிலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுதந்திர வர்த்தக வலய சேவையாளர் சங்கத்தின் இணை செயலாளர் அன்டன் மார்கஸ் தெரிவித்தார்.

பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவுடன் தொழில் அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நெக்ஸ்ட் தொழிற்சாலை கடந்த 19ஆம் திகதி மாலை 5 மணியிலிருந்து மூடப்பட்டமை தொடர்பில் இரண்டாவது முறையாக பிரதி தொழில் அமைச்சருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த வியாழனன்று அமைச்சர் நெக்ஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். அந்த பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை எமக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைய முகாமைத்துவத்தினால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை காரணிகளுடன் அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இருதரப்புக்குமிடையில் கையெழுத்திடப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் காணப்படுகிறது. அந்த ஒப்பந்தத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய நிறுவன முகாமைத்துவம் செயற்படவில்லை என்பதையும் அமைச்சரிடம் தெரிவித்திருக்கின்றோம்.

இருதரப்பினரையும் ஒரே சந்தர்ப்பத்தில் அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு அமைச்சிடம் கோரியுள்ளோம்.

அதற்கு அமைச்சரால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. எனவே நஷ்டஈடு செலுத்துவதற்கான நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு மீண்டும் தொழிற்சாலையை திறக்கும் நோக்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமைச்சிடம் வலியுறுத்தியிருக்கின்றோம்.

நாம் நஷ்டஈட்டைக் கோரவில்லை. தொழிலையே கோருகின்றோம். தொழில் ஆணையாளரிடம் செல்லாவிட்டால் மேலதிகக் கொடுப்பனவை செலுத்துவதாக நிறுவனம் முன்வைத்துள்ள முன்மொழிவையும் நிராகரித்துள்ளோம். இந்த நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் யூரோ இலாபம் காணப்படுகிறது.

பிரித்தானியாவில் அதிக இலாபமீட்டும் நிறுவனங்களில் நெக்ஸ்ட் நிறுவனம் நான்காவது இடத்திலுள்ளது. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எமக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். அந்த வகையில் அமைச்சரும் குறித்த ஒப்பந்தத்துக்கு அமைய செயற்படுவார் என நம்புகின்றோம்.

https://www.virakesari.lk/article/215560

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.