Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராகுல், பந்த் சதம்: கடைசி நாளில் பும்ராவை சமாளித்து இங்கிலாந்தால் 350 ரன் எடுக்க முடியுமா?

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹெடிங்லியில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 371 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது.

கடைசி நாளான இன்று (ஜூன் 24) இங்கிலாந்து அணி வெற்றி பெற 350 ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில், அந்த அணியின் கைவசம் 10 விக்கெட்டுகள் இருக்கின்றன.

கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்த ஆடுகளத்தில் இதற்கு முன்பு 300 ரன்களுக்கு மேல் இலக்கு வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதா? முதல் இன்னிங்சைப் போலவே இன்றும் பும்ரா சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தருவாரா?

ராகுல் - ரிஷப் பந்த் அபாரம்

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடனும் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய சுப்மன் கில், கார்ஸ் பந்துவீச்சில் பேட்டில் இன்சைட் எட்ஜ் எடுத்து கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். முதல் செஷனில் இந்திய அணி 63 ரன்கள்தான் சேர்த்தது. ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்சராகி எகிறியதால் ராகுலும், ரிஷப் பந்தும் சற்று பொறுமையாக பேட் செய்தனர்.

முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் ராகுல் கவர் ட்ரைவ், ஸ்குயர் ட்ரைவ், புல்ஆ-ஃப் ஷாட், ஆன்ட்ரைவ் ஷாட்களை அழகாக ஆடி ரன்களைச் சேர்த்தார். அவர் பெரிய ஷாட்களுக்கு முயற்சிக்கவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்று பேட் செய்த ராகுல், முதல் செஷனில் 44 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 87 பந்துகளில் ராகுல் அரைசதத்தை எட்டினார். பந்து தேய்ந்து பழையதானபின் ராகுல் தனது பேட்டிங் கியரை மாற்றி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

ராகுலுக்கு இங்கிலாந்து பீல்டர்கள் 3 முறை கேட்சை கோட்டைவிட்டனர். ராகுல் 59 ரன்களில் இருந்தபோதும், 99 ரன்களில் இருந்தபோதும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் நழுவவிட்டனர். முடிவில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,202 பந்துகளில் ராகுல் சதத்தை நிறைவு செய்தார்

137 ரன்கள் சேர்த்த ராகுல், கார்ஸ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

தொடக்க வீரராகக் களமிறங்கி இங்கிலாந்து மண்ணில் ராகுல் 3வது சதத்தை நிறைவு செய்துள்ளார். ராகுல் டிராவிட், கவாஸ்கர், விஜய் மெர்ச்சன்ட் ஆகியோர் தொடக்க வீரராக 2 சதங்களைத்தான் அடித்திருந்தனர்.

கே.எல்.ராகுலைப் பொருத்தவரை ஆசிய நாடுகளை தாண்டியும் கடந்த 5 சுற்றுப்பயணங்களிலும் சிறப்பாகவே பேட் செய்துள்ளார். 2021ல் இங்கிலாந்து டெஸ்டில் 84, 129 ரன்களும், தென் ஆப்ரிக்காவில் 123 ரன்களும், ஆஸ்திரேலியத் தொடரில் 77, 26 ரன்களை ராகுல் சேர்த்துள்ளார்.

இந்த டெஸ்டிலும் 2வது இன்னிங்ஸில் இக்கட்டான சூழலில் சதம் அடித்து அணியை ராகுல் மீட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இக்கட்டான சூழலில் சதம் அடித்து அணியை ராகுல் மீட்டுள்ளார்

2வது சதம் அடித்த ரிஷப் பந்த்

ராகுல் ஒருபுறம் நிதானமாக பேட் செய்ய, அவருக்கு ஈடு கொடுத்து ஆடிய ரிஷப் பந்த் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடி ரன்களைச் சேர்த்து 83 பந்துகளில் அரைசதம் எட்டினார். அடுத்த 50 பந்துகளில் வேகமாக ரன்களைச் சேர்த்த ரிஷப் பந்த் 50 ரன்களை சேர்த்து 130 பந்துகளில் தனது 8-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோயிப் பஷீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 18 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு கட்டத்தில் பஷீர் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கினார். இதற்கு நடுவர் பால் ரீஃபில் அவுட் வழங்காத நிலையில் இங்கிலாந்து அப்பீல் சென்றது. ஆனால், ரிஷப் பந்த் பேட்டில் பந்து பட்ட பின் கால்காப்பில் பட்டதால் இங்கிலாந்தின் ரிவியூ வீணானது. இதன்பின், சுதாரித்துக்கொண்ட ரிஷப் பந்த் தனது ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நிதானமாக பேட் செய்தார்.

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் ஒருவர் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்தது இது 2வது நிகழ்வாகும். இதற்கு முன்பு ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ஆன்டி பிளவர் 2001ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹராரேவில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியிருந்தார். அதன்பின் 24 ஆண்டுகளுக்குப்பின் ரிஷப் பந்த் சதம் விளாசியுள்ளார். இந்திய அளவில் முதல் முறையாக ரிஷப் பந்த் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், இங்கிலாந்துக்கு பயணம் செய்த வெளிநாட்டு அணிகளில் ஒரு பேட்டர் ஒரு டெஸ்டில் இரு சதங்களை விளாசிய 9-வது பேட்டராக ரிஷப் பந்த் பெயரெடுத்துள்ளார். கடைசியாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2019ல் இரு சதங்களை விளாசியிருந்தார்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சதம் எடுத்த மகிழ்ச்சியில் ரிஷப் பந்த்

ரிஷப் பந்த் முதல் டெஸ்டிலேயே 252 ரன்களைக் குவித்து, ஒரு டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். உலகளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பந்த் பெற்றார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் (17), ஆன்டி பிளவர் (12) இருவருக்கு அடுத்தபடியாக அதிக சதங்களை அடித்த விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார்.

கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 333 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என வலுவான நிலையில் இருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தபின் அடுத்த 31 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷர்துல் தாக்கூர் இந்த முறையும் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரிசை வீரர்கள் 3 பேரும் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரிஷப் பந்த், ராகுல் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் 25 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. மிகவும் எதிர்பார்ப்பு அளித்த கருண் நாயர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கில் 8 ரன்னில் போல்டாகி அதிர்ச்சியளித்தார்.

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 6 ரன்களைச் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. கிராவ்லி 12 ரன்களுடனும், டக்கெட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்?

லீட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை கடைசி நாளில் பேட் செய்ய அற்புதமான மைதானமாகும். கடந்த 11 ஆண்டுகளில் இங்கிலாந்து மண்ணில் கடைசி நாளில் பேட் செய்ய 2வது சிறந்த ஆடுகளமாக லீட்ஸ் திகழ்ந்து வருகிறது.

ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகள் மேலும் அதிகமாகும் என்பதால் பும்ரா, ஜடேஜாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். ஆனால், ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டிவிட்டால், இங்கிலாந்து பேட்டர்களுக்குத்தான் முழுமையாக ஆடுகளம் ஒத்துழைத்து எளிதாக சேஸ் செய்துவிடுவார்கள். அதிலும், 2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் அதிரடி ஆட்ட முறையை கையாண்டு வரும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக இந்த இலக்கை எட்டக்கூடும்.

லீட்ஸ் ஆடுகளத்தில் 300 ரன்களுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இங்கிலாந்து 4 முறை சேஸ் செய்துள்ளது. கடைசியாக 2019 ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் 359 ரன்கள் இலக்கை இங்கிலாந்து வெற்றிகரமாக சேஸ் செய்தது. ஆதலால், இங்கிலாந்து நிச்சமயாக 350 ரன்களை சேஸ் செய்யும் என்று அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இந்தியா - இங்கிலாந்து, பும்ரா, ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2022ம் ஆண்டுக்குப்பின் பாஸ்பால் ஆட்டத்தைக் கையில் எடுத்தபின் 23 டெஸ்ட் போட்டிகளில் 15 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொருத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜாவை நம்பியே இருக்கிறது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர்களை பெரிதாக அச்சுறுத்தவில்லை. பும்ரா ஏதேனும் தனது பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தினால், சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்து ஜடேஜாவின் பந்துவீச்சும் எடுபட்டால் இந்தியாவின் பக்கம் வெற்றியை எதிர்பார்க்கலாம்.

கைவசம் 10 விக்கெட்டுகளுடன் வலுவாக இருக்கும் இங்கிலாந்து அணியின் பக்கமே வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd0vjdljgg5o

  • Replies 101
  • Views 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nunavilan
    nunavilan

    மிக குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியின் தலைவராக கில் வந்தது நம்ப முடியவில்லை. டெஸ்ட் போட்டியில் மிக்க அனுபவம் உள்ளவர்களையே பல நாட்டு குழுக்கள் உள்வாங்குகின்றன. இந்தியா ரி 20 போட்டிக்கு தெரிவு ச

  • vasee
    vasee

    இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் டூக் பந்து பாவிக்கின்றது இது குக்கபாரா பிங்க் பந்தினை விட அதிக விசம் கொண்டது, இந்தியணியிற்கு பந்தும் ஆடுகளமும் உயிர்ப்புடன் இருந்தால் தலைவலியாக இருக்கும் இந்த மாதிரியா

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    இந்தியாவின் தொட‌க்க‌ம் மிக‌ அருமை த‌மிழ‌க‌ வீர‌ர் அவ‌ரின் முத‌ல் டெஸ்ட் போட்டியில் ர‌ன்ஸ் எதுவும் அடிக்காம‌ அவுட் ஆகி விட்டார்..................................

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வீர‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடி வெல்ல‌ப் போராங்க‌ள் , ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டிய‌ மைச்சை இந்தியா பின்ன‌னி வீர‌ர்க‌ள் சுத‌ப்பின‌தால் வெற்றி வாய்ப்பு இங்லாந்துக்கு..................... விக்கேட் இர‌ண்டை எடுத்து , மெடின் ஓவ‌ர் சில‌ போட்டால் கூட‌ வெற்றி ச‌ம‌ நிலையில் முடியும்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

LIVE

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

471 & 364

England FlagEngland

(80 ov, T:371) 465 & 349/5

Day 5 - Session 3: England need 22 runs.

Current RR: 4.36

 • Min. Ov. Rem: 16

 • Last 10 ov (RR): 41/0 (4.10)

வெற்றியை நெருங்கிவிட்டது இங்கிலாந்து அணி...

கோச் பிரண்டன் மெக்கலமின் அணுகுமுறைக்கு வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வடக்கத்தியானுகள்!

வடபோச்சே!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

471 & 364

England FlagEngland

(T:371) 465 & 373/5

England won by 5 wickets

PLAYER OF THE MATCH

Ben Duckett, ENG 62 & 149

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வெற்றி....................இந்தியா பின்ன‌னி வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டையால் அடிக்க‌த் தெரியாது...............தோல்விக்கு இதுவும் ஒரு கார‌ண‌ம் , ச‌ம‌ நிலையில் முடிக்க‌ வேண்டி மைச்சை தோத்து விட்டின‌ம் இந்தியா வீர‌ர்க‌ள்....................சுல்ம‌ன் கில் க‌ப்ட‌ன‌ ஆன‌ பின் முத‌ல் மைச்சு தோல்வியில் முடிந்து இருக்கு.................இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ அவுஸ்ரேலியாவால் ம‌ட்டும் தான் முடியும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

LIVE

1st Test, Leeds, June 20 - 24, 2025, India tour of England

India FlagIndia

471 & 364

England FlagEngland

(80 ov, T:371) 465 & 349/5

Day 5 - Session 3: England need 22 runs.

Current RR: 4.36

 • Min. Ov. Rem: 16

 • Last 10 ov (RR): 41/0 (4.10)

வெற்றியை நெருங்கிவிட்டது இங்கிலாந்து அணி...

கோச் பிரண்டன் மெக்கலமின் அணுகுமுறைக்கு வெற்றி.

49 minutes ago, வாலி said:

பாவம் வடக்கத்தியானுகள்!

வடபோச்சே!😂

49 minutes ago, வாலி said:

பாவம் வடக்கத்தியானுகள்!

வடபோச்சே!😂

பின்ன‌னி வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் பூச்சிய‌த்தில் அவுட் ஆகின‌தால் தோல்வி....................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் நிதான‌மாக‌ நின்று விளையாடுவார் , அவ‌ரை விளையாட‌ விட்டு இருக்க‌னும் , பெடிய‌ன் ப‌ந்தும் போடுவார் ம‌ட்டையாலும் அடிப்பார்............................

  • கருத்துக்கள உறவுகள்

😁😁😁😁😁😁😁😁

  • கருத்துக்கள உறவுகள்

கியா வாலி பையா?

வடா பவ் ஹோகயா?🤣

2 hours ago, வாலி said:

பாவம் வடக்கத்தியானுகள்!

வடபோச்சே!😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியை தாரை வார்த்த இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக 5 சதங்கள் அடித்தும் தோற்றது ஏன்?

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் சேர்த்தனர். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், முதல் இன்னிங்ஸில் பெற்ற 6 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து 371 ரன்களை இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்திருந்தது.

4வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து ஆட்டத்தை முடித்தது. கடைசி நாளான நேற்று 350 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.

பேஸ்பால் ஃபார்முலாவை கையில் எடுத்து இங்கிலாந்து அணி பெறும் வெற்றியாகும். லீட்ஸ் மைதானம் மீண்டும் சேஸிங்கிற்கு சொர்க்கபுரி என்பதை நிரூபித்துள்ளது .

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆன்டர்ஸன்-டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி இன்னும் புள்ளிக்கணக்கை தோல்வியால் தொடங்கவில்லை.

இங்கிலாந்து சாதனை தொடக்கம்

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட், கிராவ்லி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். புதிய பந்தை பயன்படுத்திய போதும் இந்திய பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜடேஜா மாறிமாறிப் பந்துவீசியும் இருவரின் விக்கெட்டுகளை நீண்டநேரம் எடுக்க முடியாதபோதே ஆடுகளத்தின் தன்மை புலப்பட்டது.

பென் டக்கெட் ஒருநாள் போட்டி போன்று பேட் செய்து 66 பந்துகளில் அரைசதத்தையும், 121 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இங்கிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எந்தவிதமான சிரமத்தையும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் வழங்கவில்லை. ஓவருக்கு சராசரியாக 3 முதல் 4 ரன்களை பவுண்டரி மூலமோ அல்லது ஒற்றை அல்லது இரு ரன்கள் மூலம் எடுக்க வழியமைத்துக் கொடுத்தனர்.

ஷர்துல் தாக்கூர் வீசிய ஓவரில் அடுத்தடுத்து பென் டக்கெட், ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த போது, ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. உயிரைக் கொடுத்து இந்தியப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 121 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த பென் டக்கெட்

பென் டக்கெட் சேர்த்த 149 ரன்கள் என்பது டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு எதிராக எந்த பேட்டரும் சேர்க்காத அதிகபட்சமாகும். இதற்கு முன் ஜோ ரூட் 142 ரன்களை 2022ம்ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களில் 4வது இன்னிங்ஸில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தவர் என டக்கெட் பெருமை பெற்றார். இதற்கு முன் 1995ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக மைக் ஆதர்டன் 185 ரன்களை கடைசி நாளில் தொடக்க வீரராக இருந்து சேர்த்தார்.

188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸில் சேர்க்கப்பட்ட 5வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இங்கிலாந்தைப் பொருத்தவரை கடைசி நாளில் சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இதற்கு முன் 1991ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிரஹாம் கூச் - ஆதர்டன் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தோல்விக்கான காரணம் என்ன?

இந்திய அணியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 சதங்கள் ஒரே டெஸ்டில் விளாசப்பட்டன. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை விளாசியிருந்தார். 5 சதங்களை விளாசியும், ஒரு டெஸ்டில் இந்திய அணி தோற்றது என்பது வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும்.

இந்த டெஸ்டில் சுப்மன் கில், ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இந்த 4 பேட்டர்களைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் ரன்கள் சேர்க்கவில்லை. ஆல்ரவுண்டர்கள் என்று சேர்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், ஜடேஜாவும் ஏமாற்றினர், ஸ்பெஷெலிஸ்ட் பேட்டர்களாக எடுக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சனும் ஜொலிக்கவில்லை.

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேப்டன் சுப்மன் கில்லுடன் உரையாடும் ஜஸ்பிரித் பும்ரா

கடைசி வரிசை 4 பேட்டர்கள் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 9 ரன்கள்தான் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது, பேட்டிங்கில் மற்ற வீரர்களால் ஏற்பட்ட தோல்வியாகும். அதிலும், லீட்ஸ் போன்ற தட்டையான ஆடுகளத்தில் பேட்டர்கள் இந்த அளவு மோசமாக பேட் செய்தது தோல்விக்கான காரணங்களில் முக்கியமானதாகும்.

அடுத்ததாக கேட்சுகளை இந்திய வீரர்கள் கோட்டை விட்டது தோல்விக்கான பிரதான காரணங்களில் ஒன்று. கடந்த 20ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியும் இதுபோன்று அதிகமான கேட்சுகளை ஒரு போட்டியில் கோட்டைவிட்டதில்லை என்ற பெயரை இந்திய வீரர்கள் பெற்றனர். பும்ரா பந்துவீச்சில் மட்டும் முதல் இன்னிங்ஸில் 3 கேட்சுகள் கோட்டை விடப்பட்டன.

மோசமான பந்துவீச்சு

அடுத்ததாக பும்ரா, சிராஜ் தவிர 3வது, 4வது பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் பங்களிப்பு குறித்து பெரிய கேள்வி தொக்கி நிற்கிறது. ஐபிஎல் தொடரில் கூட 3 ரன் ரேட்டில் பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பந்தவீசியுள்ளார். இந்திய டெஸ்ட் வரலாற்றிலேயே ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளராக பிரசித் கிருஷ்ணா உருவெடுத்து, ஓவருக்கு 6.28 ரன்களை வாரி வழங்கியுள்ளார். பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.

அதேபோல, ஷர்துல் தாக்கூர் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசி 90 ரன்கள் கொடுத்து ஓவருக்கு சராசரியாக 5.60 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இருவரின் பந்துவீச்சும் இங்கிலாந்து பேட்டர்கள் எளிதாக ரன்கள் சேர்க்க ஏதுவாக இருந்தது, இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணிக்கு 310 ரன்கள் வரை வாரி வழங்கியுள்ளனர்.

பந்துவீச்சில் ஒருவிதமான கட்டுப்பாடு, ஒழுங்கு இருக்க வேண்டும். ஆனால், பிரசித், ஷர்துல் இருவரும் இங்கிலாந்தின் காலநிலை, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொண்டு பந்துவீசவில்லை.

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா 35 ஓவர்கள் பந்துவீசி 220 ரன்களை வாரி வழங்கியுள்ளார்

பும்ரா எனும் பிரமாஸ்திரம்

பந்துவீச்சில் பும்ரா ஒருவரை நம்பித்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பயணித்து வருகிறது. அடுத்த 2 போட்டிகளுக்குப்பின் பும்ரா இல்லாத நிலையை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது, எப்படி தயாராகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சர்வதேச பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பும்ரா மட்டுமே பந்துவீசி எகானமி ரேட்டை 3 ரன்களுக்குள் இரு இன்னிங்ஸிலும் வைத்திருந்தார்.

கடைசி நாளில் 350 ரன்களை டிஃபெண்ட் செய்வதற்காக எந்த மாதிரியான திட்டத்துடன் பந்துவீச்சாளர்கள் வந்தனர் என்பது புலப்படவில்லை. இதில் பும்ரா மட்டுமே சரியான அளவில் பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறவிட்டார்.

முகமது சிராஜ் கடைசி நாளில் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. அதேபோல, புதிய பந்து எடுத்தபின் கடைசி 15 ஓவர்களில் பும்ராவுக்கும் அவர் ஓவர் வழங்கவில்லை.

பீல்டிங் மோசம்

பீல்டிங்கில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக மோசமாக செயல்பட்டனர். அதிலும், ஸ்லிப்பில் நின்று ஏராளமான கேட்சுகளை தவறவிட்டு அவப்பெயரைப் பெற்றனர். அடிக்கடி ரிஷப் பந்த் பேசியது மைக்கில் நன்றாக எதிரொலித்தது, "பீல்டிங்கை தவறவிட்டீர்கள், பரவாயில்லை, சீக்கிரம் தவறை திருத்தி மீண்டு வாருங்கள், தொடர்ந்து தவறு செய்யாதீர்கள்" எனப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வெற்றிக்கு முதல் இன்னிங்ஸிலிருந்து பல வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் எதையுமே முறையாக பயன்படுத்தவில்லை. அது வெற்றிக்கான வாய்ப்புகளாக வீரர்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதுதான் நிதர்சனம்

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, முகமது சிராஜ் சிறப்பாக பந்தவீசினாலும் அவருக்கு 42வது ஓவரில் இருந்து 80வது ஓவர்களுக்கிடையே ஏன் கேப்டன் கில் பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது

தவறவிட்ட வாய்ப்புகளால் தோல்வி

இந்திய அணியைப் பொருத்தவரை இளம் வீரர்கள், அனுபவமற்ற வீரர்கள் என்ற ஒற்றை வார்த்தையுடன் தோல்விக்கான காரணத்தை பூசி மெழுகிவிட முடியாது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு தொடக்கம் முதல் கடைசிவரை ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. அதை அனைத்தையுமே இந்திய வீரர்கள் பயன்படுத்தவில்லை, தவறவிட்டனர் என்பதுதான் நிதர்சனம்.

ஒரு அணியில் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 5 சதங்கள் அடிக்கப்பட்டும், அந்த அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது இதுதான் வரலாற்றில் முதல் முறையாகும். ஏராளமான கேட்ச் மிஸ்ஸிங், பீல்டிங்கில் கோட்டை, டி20 போட்டியைவிட ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்துவீச்சாளர்கள், கடைசி வரிசை வீரர்களின் மட்டமான பேட்டிங் முதல் இன்னிங்ஸில் 41 ரன்களுக்கு 7 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 31 ரன்களுக்கு 6 விக்கெட் என தோல்விக்கான காரணங்களாகப் பட்டியலிடலாம்.

டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக முதல்முறையாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில்லுக்கு வெற்றி பெற கிடைத்த அருமையான வாய்ப்பை தனது அனுபமின்மையால் வெற்றியாக மாற்ற தவறவிட்டார்.

பும்ரா இன்னும் இரு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதால், கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் என்ன செய்யப் போகிறது இந்திய அணி என்பது மாபெரும் கேள்வியாக இருக்கிறது.

இந்தியா vs இங்கிலாந்து, சுப்மன் கில், பும்ரா, ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்துக்கு 6-வது வெற்றி, ஸ்டோக்ஸ் நிம்மதி

லீட்ஸ் மைதானத்தில் தொடர்ந்து 6-வது முறையாக இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், இந்திய அணி கடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக பெறும் 7வது தோல்வியாகும்.

டாஸ் வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது, இந்திய வீரர்கள் இரு இன்னிங்ஸிலும் அடித்த சதம் ஸ்டோக்ஸின் முடிவை கடுமையாக விமர்சிக்க வைத்தது. ஆனால், இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் ஸ்டோக்ஸுக்கு பெருத்த ஆறுதலையும், நிம்மதியையும் இப்போது கொடுக்கும்.

இங்கிலாந்து சாதனை

ஹெடிங்லி மைதானத்தில் 371 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்தது என்பது டெஸ்ட் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்ச சேஸிங்காகும், இந்திய அணிக்கு எதிராக 2வது பெரிய சேஸிங்காகும். 2022ம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டனில் இந்திய அணிக்கு எதிராக 378 ரன்களை இங்கிலாந்து அணி சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹெடிங்லி மைதானத்தில் கடைசி நாளில் 350 ரன்களை இங்கிலாந்து அணி எட்டி வெற்றி பெற்றது. லீட்ஸ் மைதானத்தில் இதுவரை கடைசிநாளில் பெரிய ஸ்கோரை ஆஸ்திரேலியா மட்டுமே 404 ரன்களை 1948ம் ஆண்டு எட்டியிருந்தது. அதன்பின், இப்போது இங்கிலாந்து அணி 350 ரன்களை எட்டியுள்ளது.

இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியி்ல் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 835 ரன்களைச் சேர்த்து தோற்றுள்ளது. அதிகமான ஸ்கோர் செய்தும் இந்திய அணிக்கு ஏற்பட்ட 4வது தோல்வியாகும்.

இரு அணிகளும் சேர்ந்து இந்த டெஸ்டில் 1673 ரன்கள் சேர்த்தனர். இது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 1990ம் ஆண்டில் மான்செஸ்டரில் 1614 ரன்கள் சேர்க்கப்பட்டு அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1673 ரன்கள் என்பது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது அதிகபட்ச ஸ்கோர், டிராவில் முடியாத டெஸ்டாகும்.

லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 350 ரன்களுக்கு மேல் 5-வது முறையாக சேஸ் செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 2வது முறையாக 350 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் சேஸ் செய்துள்ளது இங்கிலாந்து.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd1xdq6pvxo

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ மைச் பிரின்ஹ‌ம் மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்..........பாப்போம் போட்டி முடிவில்...................................

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலி வெஸ்சின்டீஸ் டெஸ்ட் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம் , ஒரே நாளில் இர‌ண்டு அணிக‌ளும் batப‌ன்னின‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2025 at 02:13, ஏராளன் said:

ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள பட்டோடி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான புதிய கேப்டன் பெயரும் பிசிசிஐ தேர்வுக் கூட்டத்தில் இன்று (மே24) அறிவிக்கப்பட்டது

ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.

ஆரம்பத்திலேயே பும்ரா மூன்று டெஸ்ட் மேட்சுகளில் மட்டும்தான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதைவைத்துத்தான் டெண்டுல்கர் சொன்னாரோ தெரியவில்லை! இப்போ பும்ரா விளையாடிய மேட்சே தோல்வி!!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.

அப்ப‌டி ந‌ட‌க்க‌ வாய்பில்லை அண்ணா

அடுத்த‌ மாத‌ம் இங்லாந்தில் அடிக்க‌டி ம‌ழை வ‌ரும் , ஒரு மைச்சாவ‌து ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும் ,

இங்லாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல‌ முடியாது.......................

அவ‌ர் த‌ன‌து ம‌ருமோன் த‌ல‌மைக்கு ஊக்க‌ம் கொடுக்க‌ சொல்லி இருப்பார் அண்ணா..............................

  • கருத்துக்கள உறவுகள்

கில்/ஜில் என்பவர் தெண்டூல்கரின் மருமகனா? மருமகன் என்றால் எந்த முறையில் மருமகன்? நான் இப்போதுதான் இதுபற்றி அறிகின்றேன்.

20/20 துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனை 5நாள் போட்டியில் சேர்த்தது பயன் அளிக்குமா? இவரால் தனது திறமையை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெளியில் நிரூபிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

கில்/ஜில் என்பவர் தெண்டூல்கரின் மருமகனா? மருமகன் என்றால் எந்த முறையில் மருமகன்? நான் இப்போதுதான் இதுபற்றி அறிகின்றேன்.

20/20 துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனை 5நாள் போட்டியில் சேர்த்தது பயன் அளிக்குமா? இவரால் தனது திறமையை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெளியில் நிரூபிக்க முடியுமா?

அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்...............................

5 hours ago, நியாயம் said:

கில்/ஜில் என்பவர் தெண்டூல்கரின் மருமகனா? மருமகன் என்றால் எந்த முறையில் மருமகன்? நான் இப்போதுதான் இதுபற்றி அறிகின்றேன்.

20/20 துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனை 5நாள் போட்டியில் சேர்த்தது பயன் அளிக்குமா? இவரால் தனது திறமையை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெளியில் நிரூபிக்க முடியுமா?

அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்....................................

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, நியாயம் said:

கில்/ஜில் என்பவர் தெண்டூல்கரின் மருமகனா? மருமகன் என்றால் எந்த முறையில் மருமகன்? நான் இப்போதுதான் இதுபற்றி அறிகின்றேன்.

20/20 துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனை 5நாள் போட்டியில் சேர்த்தது பயன் அளிக்குமா? இவரால் தனது திறமையை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெளியில் நிரூபிக்க முடியுமா?

சாய் சுதர்சன் இங்லாந் உள்ளூர் கில‌ப்புக்கு போன‌ வ‌ருட‌ம் விளையாடின‌வ‌ர் , இங்லாந் மைதான‌ங்க‌ளில் ஏற்க‌ன‌வே விளையாடின‌ அனுப‌வ‌ம் இருக்கு...................அடுத்த‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்....................................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்...............................

அவ‌ரின் ம‌க‌ளை கில் தான் திரும‌ண‌ம் செய்ய‌ போகிறார்....................இர‌ண்டு பேரும் ஒன்னாக‌ தான் இப்போது எல்லா இட‌ங்க‌ளும் போய் வ‌ருகின‌ம் , இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்வின‌ம் என‌ நான் ந‌ம்புகிறேன்......................இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌ தொட‌ரில் அவ‌ர்க‌ள் இருவ‌ரின் ப‌ட‌த்தை இணைத்து இருந்தேன்....................................

சிறிது தேடல்கள் செய்து பார்த்தேன். இது உண்மை இல்லை போல தெரிகின்றது. தெண்டூல்கர் தனது மகனை கிரிக்கெட்டில் முன்னிலைக்கு கொண்டு வர பாடுபட்டார். சரிவரவில்லை. தற்போதைய இந்தியன் கிரிக்கெட் கப்டனுக்கும் இவர் மகனுக்கும் ஒரே வயதுதான். மகள் மகனை விட வயதில் மூத்தவர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நியாயம் said:

சிறிது தேடல்கள் செய்து பார்த்தேன். இது உண்மை இல்லை போல தெரிகின்றது. தெண்டூல்கர் தனது மகனை கிரிக்கெட்டில் முன்னிலைக்கு கொண்டு வர பாடுபட்டார். சரிவரவில்லை. தற்போதைய இந்தியன் கிரிக்கெட் கப்டனுக்கும் இவர் மகனுக்கும் ஒரே வயதுதான். மகள் மகனை விட வயதில் மூத்தவர் என நினைக்கின்றேன்.

கில்லின் காதலி ச‌ச்சினின் ம‌க‌ள் அண்ணா

இணைய‌த்தில் அடிச்சு பாருங்கோ இவ‌ர்க‌ளுடைய‌ ப‌ல‌ அழ‌கிய‌ ப‌ட‌ங்க‌ள் வ‌ரும்..................................

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.........................................

அடுத்த‌ விளையாட்டு பிரிங்க‌ம் மைத்தான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் , இந்த‌ மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம் - இந்தியா ஒருமுறை கூட வெல்லாத ஆடுகளம் எப்படி உள்ளது? பும்ரா ஆடுவாரா?

இந்தியா - இங்கிலாந்து, 2வது டெஸ்ட், சுப்மன் கில், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் கில்லும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும்

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 1 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சச்சின்-ஆன்டர்சன் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2வது டெஸ்ட் போட்டி பிரிமிங்ஹாமில் இன்று(ஜூலை2ம் தேதி) தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் போட்டியில் வெற்றிக்கு உதவிய அதே வீரர்களோடு, மாற்றமில்லாமல் 2வது டெஸ்டிலும் களமிறங்குகிறது. ஆனால், இந்திய அணி இதுவரை ப்ளேயிங் லெவனை வெளியிடாமல் சஸ்பென்சாக வைத்திருப்பது ஏன் எனத் தெரியவில்லை.

பிரம்மாஸ்திரம் பும்ராவை விளையாட வைக்கலாமா அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிக்கு இடம் கிடைக்குமா என கணிப்புகள் வந்தாலும் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் நிர்வாகத்திடம் இருந்து இல்லை. டாஸ் நிகழ்வுக்குப்பின்புதான் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.

ஏமாற்றாத இளம் அணி

விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இல்லாத, நிலையில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. முதல் டெஸ்டில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷப் பந்த் இரு சதங்கள், கேப்டன் கில், ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் சதம் ஆகியவை மனநிறைவை அளித்தன.

ஆனால், இவர்கள் தவிர இந்திய அணியில் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்பு குறிப்பாக கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்பு ஏமாற்றத்தை அளித்தது. பந்துவீச்சிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில்தான் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததேத் தவிர 2வது இன்னிங்ஸில் பெரிதாக பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.

வேகப்பந்துவீச்சில் பும்ரா தவிர பிரசித் கிருஷ்ணா, ஷர்துல், சிராஜ் ஆகியோரின் எக்னாமி ரேட், விக்கெட் வீழ்த்தும் திறன் கவலைக்குரியதாக முதல் டெஸ்டில் இருந்தது. ஷர்துல் தாக்கூர் அணியில் கொண்டுவந்ததே கேள்விக்குரியதாக மாறிவிட்டது.

இந்தியா - இங்கிலாந்து, 2வது டெஸ்ட், சுப்மன் கில், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வீரர் சுப்மன் கில்

கேப்டன்ஷிப் மீதான கேள்வி

இளம் இந்திய அணி பேட்டிங்கில் ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் இருந்தாலும், பந்துவீச்சில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கேப்டன் ஷுப்மன் கில், பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாள வேண்டும், எந்த சூழலில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துவது, புதிய பந்தில் யாரை பந்துவீசச் செய்வது, யாருக்கு அதிக ஓவர்கள் வழங்குவது என்பதில் முடிவெடுப்பதில் இன்னும் தடுமாற்றத்தைச் சந்திக்கிறார்.

இந்த சூழலில் 2வது டெஸ்ட் போட்டி இன்று பிர்மிங்ஹாமில் தொடங்குகிறது. இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று துணைப் பயிற்சியாளர் ரேயன் டான் டஸ்சே தெரிவித்துள்ளார். ஆனால், எந்த வகையான மாற்றம் என்பதில்தான் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

புதிய வரலாறு படைக்குமா?

இந்தியா - இங்கிலாந்து, 2வது டெஸ்ட், சுப்மன் கில், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி விளையாடும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

2011ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் இன்னிங்ஸ் 242 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது, 2018ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 18 ரன்களில் இந்திய அணி தோற்றது. 2022ம் ஆண்டில் பும்ரா கேப்டன்ஷிப்பில் நடந்த போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 1986ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணி டிரா செய்துள்ளது.

பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து எப்போதுமே இந்திய அணிக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து பதிலடி கொடுத்தாலும் இதுவரை இந்த மைதானத்தில் வெற்றிக்கொடி நாட்டியதில்லை.

பிரிம்மிங்ஹாமில் நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி வென்றால் அது வரலாற்று வெற்றியாக, இந்த நூற்றாண்டிலேயே முதல் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

'பாஸ்பால்' உத்தியில் தொடர் வெற்றி

இந்தியா - இங்கிலாந்து, 2வது டெஸ்ட், சுப்மன் கில், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிராண்டம் மெக்கலம்

இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக பிரெண்டம் மெக்கலம் வந்தபின் பாஸ்பால் உத்தியை கையில் எடுத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக ஸ்டோக்ஸ் வந்தபின், உள்நாட்டில் நடந்த 21 டெஸ்ட் போட்டிகளில் 16 டெஸ்ட்களில் இங்கிலாந்து வென்றுள்ளது.

கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து 4 வெற்றிகளையும், ஒரு போட்டியை டிராவும் செய்துள்ளது. நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்று, ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்திருக்கிறது இங்கிலாந்து அணி. ஆஷஸ் தொடரில் மட்டும் இங்கிலாந்து பேட்டர்கள் 3938 பந்துகளைச் சந்தித்து 2920 ரன்கல் சேர்த்தனர். 85 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 93 விக்கெட்டுகளை வீழ்த்தியது.

ஆஷஸ் தொடரில் இருந்தே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் 41% "குட்லென்த்"தில்(6முதல்8மீட்டருக்குள்) வீசிவருகிறார்கள். பேட்டர்களும் சராசரியாக 39 ரன்களும், ஓவருக்கு 3.69 ரன்களும் சேர்த்து வருகிறார்கள். இது ஆஷஸ் மட்டுமல்ல, அடுத்து நடந்த நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கைத் தொடர்களிலும் இங்கிலாந்து வீரர்களின் நிலைத்தன்மை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சீராக இருந்து வருகிறது.

இங்கிலாந்து அணி வோக்ஸ், ஸ்டோக்ஸ், கார்ஸ், டங்க் ஆகிய இளம் பந்துவீச்சாளர்களை வைத்துதான் முதல் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களும் இரு இன்னிங்ஸிலும் 47% பந்துகளை "குட்லென்த்தில்" வீசியதாக கிரிக்இன்ஃபோ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் டெஸ்டில் மைதானம் தட்டையாக இருந்தபோதிலும் அதில் ஸ்விங் செய்த சதவீதமும் இந்திய அணியைவிட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதிகமாகவே பந்தை திருப்பினர்.

ஒட்டுமொத்தத்தில் பாஸ்பால் உத்தியைக் கையாண்டு இங்கிலாந்து தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. அதனால்தான் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் அந்த அணி செய்யாமல் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைந்தபோதிலும் அவரை 2வது டெஸ்டில் பயன்படுத்தாமல் மாறாத ப்ளேயிங் லெவனில் இங்கிலாந்து களமிறங்குகிறது

பேட்டிங்கில் பிளங்கெட், போப், ஜோ ரூட், ஹேரி ப்ரூக், ஸ்டோக்ஸ், ஸ்மித் என பேட்டிங்கிலும் வலுவாக இருக்கிறார்கள். இதில் டெய்லெண்டர்கள் வோக்ஸ், கார்ஸ் வரை சிறப்பாக பேட்செய்வது அந்த அணிக்கு பெரிய பலமாகும். அதனால்தான் முதல் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களால் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர்.

டெஸ்ட் போட்டியில் கூட பாஸ்பால் உத்தியில் வேகமாக ரன்களைச் சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்வது இந்திய அணிக்கு பெரிய சவாலாகும். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோருக்கு இணையாக முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்து பேட்டர்கள் பேட் செய்தனர், 2வது இன்னிங்ஸிலும் 370 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்து வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பேட்டிங் வரிசையை உடைக்க ஆடுகளம், காலநிலை சாதகமாக இல்லாதபட்ச்தில் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாகவே 2வது டெஸ்ட் போட்டி இருக்கும்.

'ப்ளேயிங் லெவனில் சஸ்பென்ஸ்'

இந்திய அணியின் ப்ளேயிங்கில் லெலவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்து நீடிக்கிறது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும், அவரை பயன்படுத்துவது என்பது கடைசி நேரத்தில்தான் முடிவாகும்.

ஏனென்றால் 3 டெஸ்டில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதால் அவருக்கு சுமையைக் குறைக்கும் வகையில் சரியாக பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்துவரக்கூடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ராவின் பங்களிப்பு தேவை என்பதையும் உணர்ந்துள்ளது நிர்வாகம்.

ஆதலால், பும்ரா அணியில் இடம் பெறுவது என்பது கடைசி நேரத்தில் ஆடுகளத்தின் தன்மை, காலநிலையைப் பொருத்துதான் முடிவாகும். அதேநேரம், வேகப்பந்துவரிசையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

கடந்த டெஸ்டில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஷர்துல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால், அவருக்குப் பதிலாக நிதிஷ் ரெட்டி அழைக்கப்படலாம். நிதிஷ் ரெட்டி ஆஸ்திரேலியாவில் சதம் அடித்து, பந்துவீச்சிலும் ஓரளவு 5வது பந்துவீச்சாளர் பணியை சிறப்பாகச் செய்தார் என்பதால் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கலாம்.

இந்தியா - இங்கிலாந்து, 2வது டெஸ்ட், சுப்மன் கில், பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர் பும்ரா

நிதிஷ் ரெட்டியை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நடுவரிசை பேட்டிங் இன்னும் ஸ்திரமாகும்.

எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்படலாம். பும்ரா அல்லது கருண் நாயர் இல்லாத பட்சத்தில் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வரலாம்.

சுந்தர் வருகையால் பேட்டிங் வரிசையும் ஸ்திரமாகும், அதேநேரம் கூடுதலாக சுழற்பந்துவீச்சாளர் கிடைக்கக்கூடும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசித் கிருஷ்ணா, சிராஜ் ஆகிய இருவரும் தங்களின் எக்கானமி ரேட்டை குறைக்கும் வகையில் 2வது டெஸ்டில் பந்துவீசுவது அவசியமாகும். கடந்த டெஸ்டில் இருவரும் ஓவருக்கு 6 ரன்ரேட்டை சராசரியாக விட்டுக்கொடுத்தனர்.

ஐபிஎல் தொடரில்கூட இருவரும் இந்த அளவு ரன்களை வழங்கியதில்லை. கடந்த டெஸ்டில் வெற்றி இந்திய அணியிடம் கைநழுவி சென்றதற்கு பந்துவீச்சில் சொதப்பியது முக்கியக் காரணமாகும்.

அதேசமயம், பீல்டிங்கிலும் கடந்த டெஸ்டில் இந்திய வீரர்கள் மோசமாக செயல்பட்டு பல கேட்சுகளை கோட்டைவிட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு டெஸ்டில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் வந்தது.

ஜெய்ஸ்வால், மட்டும் 3 கேட்சுகளை கோட்டைவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாக தீவிரமான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டார். இந்த டெஸ்டில் பீல்டிங்கில், குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் கூடுதல் கவனத்தை இந்திய வீரர்கள் செலுத்துவது அவசியமாகும்.

ஆடுகளம் எப்படி உள்ளது?

பிர்மிங்ஹாமில் இருக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் வரலாற்று ரீதியாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு நிலவும் காற்று, காலநிலையால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய முடியும். ஆனால், இவை அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக மாறிவிட்டன.

டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆடுகளத்தில் இருக்கும் புற்கள் வெட்டி குறைக்கப்படும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று 2வது டெஸ்ட் போட்டியும் இரு அணிகளின் பேட்டர்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கக்கூடும்.

முதல் இருநாட்களில் காலநிலையை நன்கு பயன்படுத்தினால் வேகப்பந்துவீச்சாளர்களால் பந்தை நன்கு ஸ்விங் செய்ய இயலும், நன்கு பவுன்ஸ் செய்யலாம். அதிலும் டியூக் பந்தில் தொடக்கத்தில் 30 ஓவர்கள் வரை டாப்ஆர்டர் பேட்டர்கள் நிதானமாக பந்து சற்று தேயும் வரை ஆடுவது அவசியமாகும்.

ஆனால், பெரும்பாலும் 3வது நாளில் இருந்து ஆடுகளம் வறண்டு இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஓங்கக்கூடும். குளிர்ந்த காலநிலை, மழை சூழல், காற்றின் வேகம் ஆகியவற்றைப் பொருத்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தும் தன்மை மாறக்கூடும்.

முதல் நாளிலும், கடைசி நாள் ஆட்டத்திலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடைசி நாளில் ஆடுகளத்தில் இருக்கும் வெடிப்புகள், பிளவுகளால் பந்து திடீரென பவுஸ்ஆகலாம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கலாம். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வதுதான் இந்த மைதானத்தில் சிறந்ததாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1ljj2yyz80o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

STUMPS • Starts 3:30 PM

2nd Test, Birmingham, July 02 - 06, 2025, India tour of England

Day 1 - England chose to field.

India FlagIndia

(85 ov) 310/5

Current RR: 3.64

 • Last 10 ov (RR): 48/0 (4.80)

Shubman Gill* 

(rhb)

114

216

12

0

52.77

Ravindra Jadeja 

(lhb)

41

67

5

0

61.19

England FlagEngland

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கில்லின் 2வது சதம், கைகொடுக்கும் ஜடேஜா: இந்திய அணி 400 ரன்களை கடக்குமா?

கில்லின் 2வது சதம், கைகொடுக்கும் ஜடேஜா: இந்திய அணி 400 ரன்களை கடக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 3 ஜூலை 2025, 02:18 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக நங்கூரமிட்டுள்ளனர்.

வலுவான ஸ்கோர்

இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 3வது செஷனில் பல்வேறு முயற்சிகள் செய்தும் ஏதும் பலிக்கவில்லை. 125 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கில், 199 பந்துகளில் சதத்தை எட்டினார். லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த கில், தொடர்ந்து அடிக்கும் 2வது சதமாகும்.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் (25), நிதிஷ் குமார் ரெட்டி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால், கேப்டன் கில், ஜடேஜா ஜோடிதான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா

ஹோம் ஓர்க்கில் வெற்றி

சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர்.

கேஎல்.ராகுலை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் "ஹோம் ஓர்க்" செய்து வந்திருந்தனர். அவருக்குரிய வலையை சரியாக விரித்து அவரை தவறு செய்யத் தூண்டினர். ஆனால் ராகுல் அதற்குரிய வாய்ப்பை வழங்காமல் தவறு செய்யாமல் தவறான ஷாட்களை ஆடாமல் தவிர்த்தார்.

ஆனால், பவுன்ஸரில்தான் வலை விரிக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் கணிக்கவில்லை. வோக்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஆப்திசையில் போடப்பட்ட பவுன்ஸரை ராகுல் விளையாட முற்பட்டபோது பேட்டில்பந்து பட்டு க்ளீன் போல்டாகியது. ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார்.

IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வீரர் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார்.

பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால்

கடந்த டெஸ்டில் 4வது வீரராகக் களமிறங்கிய கருண் நாயர், இந்த முறை 3வது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கருண் நாயர் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.

நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசினார்.

குறிப்பாக ஜோஷ் டங் ஓவரில் டி20 ஆட்டத்தைப்போன்று தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசி, ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான சராசரி வைத்திருக்கும் பிராட்மேனுக்கு அருகே 84 சராசரியில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது செஷனில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் இருவரும் கட்டுக்கோப்புடனே பேட் செய்தனர், தவறுகள் பெரிதாக செய்யாததால் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர்.

ஆனால், கார்ஸ் பவுன்ஸரில் கருண் நாயர் அவ்வப்போது தடுமாறியதையும், பவுன்ஸரை ஹூக் ஷாட்டில் அடிக்காமல் திணறுவதையும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கண்டறிந்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அரை சதம் அடித்ததை கொண்டாடுகிறார்.

கருண் நாயர் ஏமாற்றம்

கருண் நாயரை பிரன்ட்புட் எடுத்து ஆடவைக்கும் வகையில் கார்ஸ் தொடர்ந்து பந்துகளை வீசினார், ஆனால் தனக்கு வலை விரிக்கப்பட்டுவிட்டது என்பதை கருண் நாயர் உணரவில்லை. கார்ஸ் திடீரென ஒரு பந்தை பவுன்சராக வீசவே, இதை கருண் நாயர் எதிர்பார்க்கவில்லை. இதனால் மார்புக்கு அருகே வந்த பந்தை பேட் வைத்து தடுக்கவே 2வது ஸ்லிப்பில் இருந்த ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கருண் நாயர் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேப்டன் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் இருந்தது. 2வது செஷனில் கில், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். ஜெய்ஸ்வால் மெதுவாக ரன்களைச் சேர்க்க, கில் நிதானமாக பேட் செய்தார்.

IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இங்திய வீரர் கருண் நாயர்

கில் பொறுப்பான பேட்டிங்

முதல் டெஸ்டில்கூட கில், வேகமாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஷாட்களை அவ்வப்போது ஆடினார். ஆனால், இந்த டெஸ்டில் முதிர்ச்சியடைந்த டெஸ்ட் பேட்டர் போன்று மிகுந்த கவனத்துடன் டிபென்ஸ்ப்ளே செய்தார். இதனால் சுப்மன் கில் தவறு செய்யவைக்க இங்கிலாந்தின் திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது.

2வது சதத்தை நோக்கி நகர்ந்த ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கில்,ஜெய்ஸ்வால் கூட்டணி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விக்கெட் சரிவு

அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்தமுறை களமிறங்கியபோது, மிரட்சியுடனே இங்கிலாந்து வீரர்கள் பார்த்தனர்.

ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்புவரை சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு குறைவான ஓவர்கள் வழங்கப்பட்டநிலையில், பண்ட் வந்தபின் பஷீருக்கு கூடுதலாக ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் வழங்கினார். நிதானமாக பேட் செய்த சுப்மன் கில் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடக்கம்.

ரிஷப் பந்தை அடித்து ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் பஷீர் பந்தை நன்கு "டாஸ்" செய்து வீசினார். அதற்கு ஏற்றார்போல் ரிஷப் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பஷீர் வீசிய பந்தை லாங்ஆன் திசையில் ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கவே கிராலி அதை கேட்ச் பிடித்தார். ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். வோக்ஸ் பந்துவீச்சை சரியாகக் கணிக்காமல் பந்தை லீவ் செய்ய நிதிஷ் ரெட்டி முயன்றார். ஆனால் பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஆப்ஸ்டெம்பை பதம்பார்த்துச் சென்றது. நிதிஷ் ரெட்டியின் தவறான கணிப்பால்விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.

கில்-ஜடேஜா ஜோடி

IND Vs ENG

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா

ஆனால், ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய கில், 3வது செஷசன் ஆட்டம் தொடங்கியதும் ரன் சேர்க்கும் விதத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடிக்க 125 பந்துகளை எடுத்துக்கொண்ட கில், அடுத்த 50 ரன்களை 74 பந்துகளில் எட்டினார். 6 பவுண்டரிகளையும் கில் அடித்து, ஸ்கோரை வேகமாக உயர்த்தி 199 பந்துகளில் சதம் அடித்தார்.

சுப்மான் கில்லுக்கு துணையாக ஆடிய ஜடேஜா, சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டினார், அவ்வப்போது இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தவறவில்லை. ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் களத்தில் உள்ளனர்.

புதிய பந்து நேற்று மாலை எடுக்கப்பட்டும் விக்கெட்டை இங்கிலாந்தால் வீழ்த்த முடியவில்லை, அதே பந்து 2வது நாளிலும் பயன்படுத்தப்படும் என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். இதில் கட்டுக்கோப்பாக பேட் செய்து 30 ஓவர்களை நகர்த்திவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்லக்கூடும்.

இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஜடேஜா, கில் கூட்டணி பேட் செய்தால், நிச்சயமாக 400 ரன்களை எட்டும். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் என இரு பேட்டர்கள் இருப்பதால், முதல் டெஸ்டைப் போன்று 400 ரன்களுக்கு மேல் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp82z1zy600o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND 569/7 (142)

  CRR: 4.01

Day 2: 3rd Session

Shubman Gill *

268

383

30

3

69.97

Akash Deep

4

8

1

0

50.00

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.