Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர்

07 JUN, 2025 | 10:28 PM

image

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப" இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/216886

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

Published By: VISHNU

08 JUN, 2025 | 07:51 PM

image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 ஆம் திகதியன்று சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி செயலகம் சனிக்கிழமை (7) தெளிவுப்படுத்தல் ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தது. இந்த முறைப்பாடு குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறைகைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதன்போது சிறைகைதிகள் பலருக்கு முறையற்ற வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக 2025.06.06 ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆவணங்களை பரிசீலனை செய்து உரிய தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட சிறைக்கைதிகளுடன் அனுமதியளிக்கப்படாத அல்லது பெயர்குறிப்பிடப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

https://www.virakesari.lk/article/216964

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுர சிறை அதிகாரி கைது!

adminJune 9, 2025

get-arrested.jpg?fit=1170%2C593&ssl=1

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8.06.25) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

4 மில்லியன் ரூபாவை மோசடி செய்து தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பிரதிவாதியை விடுவிக்க உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன என்ற பிரதிவாதி, மே 12 ஆம் திகதி வந்த வெசாக் பெளர்ணமி நாளில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறைச்சாலை அத்தியட்சகரின் அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அனுராதபுரம் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர், இன்று (9) அனுராதபுரம் பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

https://globaltamilnews.net/2025/216541/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை!

09 JUN, 2025 | 07:55 PM

image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பெயரிடப்படாத கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடனான தொடர்பிலேயே சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217018

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு விளக்கமறியல்

09 JUN, 2025 | 06:26 PM

image

கைது செய்யப்பட்ட அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையின் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைதானார் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர்!

Published By: VISHNU

09 JUN, 2025 | 09:20 PM

image

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/217055

  • கருத்துக்கள உறவுகள்

2025-06-09 16:00]

http://seithy.com/siteadmin/upload/Thushara-Upuldeniya-090625-seithy.jpg

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிதி குற்றவாளி ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து துஷார உபுல்தெனியவின் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

http://seithy.com/breifNews.php?newsID=334418&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

adminJune 10, 2025

கடந்த ஆண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சில சிறைச்சாலைத் கண்காணிப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடவடிக்கைகள் குறித்து CID சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில், ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட அனுராதபுரத்தைச் சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபரைக் கைது செய்ய பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2025/216582/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல்தெனியவிற்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 2

10 JUN, 2025 | 04:18 PM

image

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவை நாளை புதன்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட தரவுகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் போது அனுமதியற்ற முறையில் சிலரை விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

https://www.virakesari.lk/article/217099

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

11 JUN, 2025 | 02:15 PM

image

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மொஹான் கருணாரத்ன, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 08 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/217164

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொது மன்னிப்பில் ஆள்மாறாட்டம் - இலங்கையில் ஜனாதிபதி பெயரிலேயே நடந்த முறைகேடு

ஜனாதிபதி பொது மன்னிப்பு: இலங்கையில் ஜனாதிபதி அனுமதிக்காதவர் விடுதலையானது எப்படி?

பட மூலாதாரம்,PMD

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 10 ஜூன் 2025

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பில் இம்முறை பாரிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பில் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகம், கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் பொறுப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

என்ன நடந்தது?

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர், இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தண்டனை முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர், மீண்டும் முறைப்பாடு ஒன்றைச் செய்த நிலையிலேயே இந்தச் சம்பவம் மீண்டும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெசக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்திருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதில்

ஜனாதிபதி பொது மன்னிப்பு: இலங்கையில் ஜனாதிபதி அனுமதிக்காதவர் விடுதலையானது எப்படி?

பட மூலாதாரம்,PMD

இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலில், அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிதி மோசடியுடன் தொடர்புடைய நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது முறைகேடான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனம் எடுத்தள்ளது.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவின்படி, கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

எவ்வாறாயினும், மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 தேதியிடப்பட்ட மற்றும் (06ஃ01 යෝජිතஃ ජ.පො.සමාஃ 05-12ஃ2025) இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன.

அத்துடன், அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாகச் சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஜூன் 06ஆம் தேதி 'ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக' என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா?

ஜனாதிபதி பொது மன்னிப்பு: இலங்கையில் ஜனாதிபதி அனுமதிக்காதவர் விடுதலையானது எப்படி?

கடந்த காலங்களில் நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சிறைக் கைதிகளில் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், ஃபேஸ்புக் பதிவொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இது நிச்சயமாக முதல் சம்பவமாக இருக்க முடியாது எனவும், முன்னைய ஆட்சிக் காலத்திலும் நடந்த இத்தகைய விடுவிப்பு சம்பவ வரலாறுகள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xgkdrdkqeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.