Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 58 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'இலங்கையை ஆண்ட முதல் அரசி அனுலா [அனுலாதேவி]'

வட்டகாமினி மூன்று பிடகங்களையும் [திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல் ஆகும். பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும். அதன்படி மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது. அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில் அடங்கிய இருபத்தொன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.] அட்டகதாவையும் [அட்டகதா, பண்டைய இந்தியா மற்றும் இலங்கையின் சமூகம், கலாச்சாரம் மற்றும் மத வரலாறு பற்றிய பல தகவல்களை வழங்கும் பாலி பௌத்த நியதியின் வர்ணனைகள். / atthakatha, commentaries on the Pali Buddhist canon that provide much information on the society, culture, and religious history of ancient India and Sri Lanka.] புத்தக வடிவில் எழுதினார். ஆனால், இவை எந்த மொழியில் எழுதப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால் கட்டாயம் சிங்கள மொழியில் இல்லை, காரணம் அப்பொழுது சிங்கள மொழி என்று ஒன்று உலகிலேயே இல்லை.

மகசுழி மகாதிஸ்ஸ [மகசுழி மகாதீசன் / Mahaculi Mahatissa], வட்டகமணியின் மரணத்திற்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் நீதியாகவும் நேர்மையாகவும் ஆட்சி செய்தார். அவரும் பல நல்ல வேலைகளைச் செய்திருப்பதாகத் தோன்றியது. எனினும் அவருடைய பூர்வீகம் தீபவம்சத்தில் கூறப்படவில்லை. பின்னர் வட்டகமணியின் மகன் சோரநாகன் [Chora Naga also known as Coranaga or Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனாக ஆட்சி செய்தான். சோரநாகாவிற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

பின்னர் அரசன் முதலாம் சிவன் அல்லது சிவா [Siva I] அனுலாவுடன் இணைந்து ஓராண்டு இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். பின்னர் ஒரு வெளிநாட்டில் இருந்து வடுகன் [வடுகா / Vatuka / அனுலாவின் இன்னும் ஒரு துணைவன். பின்னர் அவளால் விஷம் கொடுக்கப்பட்டார். இவர் முதலில் அனுராதபுரத்தில் தச்சராக இருந்தார்.] என்ற பெயருடைய ஒரு ராஜா, ஒரு தமிழன், ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். இங்கு வடுகா ஒரு தமிழன், 21 - 27, வெளிநாட்டிலிருந்து வந்தவன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் ஒரு தமிழன் வெளிநாட்டிலிருந்து வந்ததாக உள்ள ஒரே ஒரு உதாரணம் இதுதான்!. அதன் பிறகு, திஸ்ஸ [தருபாதுக திச்சன் / Darubhatika Tissa] என்ற விறகு வெட்டுபவன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். அப்போது தமிழ் மன்னன் என்றழைக்கப்படும் நிலயா [நிலியன் / Nilaya or Niliya] என்ற நபர் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த தமிழ் மன்னன் இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படவில்லை. அனுலா என்ற பெண் இந்த சிறந்த மேற்கூறிய நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் இறுதியாக தானே ஆட்சி செய்தாள். அந்த சிறந்த மனிதர்கள் யார் என்று துல்லியமாக கூறப்படவில்லை என்றாலும், அவர்கள் திஸ்ஸ, சிவா, வடுகா, (மற்றொரு) திஸ்ஸ, மற்றும் நிலயா [Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya] என்று தெரிகிறது, சோரநாகன் ஒரு கொள்ளைக்காரனைப் போல ஆட்சி செய்ததால் சோரநாகனை சிறந்த நபராக விவரிக்கப்பட மாட்டார் என்று எண்ணுகிறேன். பின்னர் மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன திஸ்ஸன் அல்லது குடகன்ன தீசன் [Kutakanna Tissa, also known as Makalan Tissa] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அத்தியாயம் 21: குடகன்ன தீசனின் மகனான இளவரசர் பாதிகாபய அபயன் அல்லது பட்டிகாபய அபயா (Bhatikabhaya Abhaya), பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் நம்மை செய்து இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசனின் மற்றொரு மகன், இளவரசர் மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga], இவனும் பிக்குகளுக்கும் புத்த மதத்திற்கும் நிறையச் செய்தார். அவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். குடகன்ன தீசன் மற்றும் மகாநாகன் என்ற பெயர்கள் குறிப்பிடுவது போல், இவர்களும் தமிழர்களாக இருக்கலாம்? மகாதாதிக மகாநாகனின் மகன் அமந்தகாமினி அபயன் [Amandagamani Abhaya, also referred as Aḍagamunu] ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் ஆட்சி செய்தான். தட்டிக [Dathika] என்பது தமிழ்ப் பெயர், 20-18 ஐப் பார்க்கவும், எனவே மகாதாதிக [மகாதட்டிக] என்பதும் தமிழ்ப் பெயர். இவர் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அமந்தகாமினி தமிழரான மகாதாதிகாவின் மகன். எனவே அமந்தகாமினியும் தமிழர்தான். எனவே, அவரது தம்பி கனிராஜனு திஸ்ஸனும் [Kanirajanu Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த தமிழனாகத் தான் இருக்க வேண்டும். அமந்தகாமினியின் மகன் சூலபாயன் [Chulabhaya] ஓராண்டு ஆட்சி செய்தான். அமந்தவின் (அமந்தகாமினியின்) மகள் , சிவாலி ரேவதி [Sivali] நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். அமந்தகாமினியின் சகோதரியின் மகன் இளநாகா [Ilanaga, also known as Elunna] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

Part: 58 / Appendix – Dipavamsa / 'The first queen to rule Sri Lanka was Anula [Anuladevi]'

Vattagamani caused the three Pitakas and the Atthakatha to be written in book form. The language in which these were written is not specified. Mahaculi Mahatissa reigned, after the death of Vattagamani, fourteen years justly and righteously. He seemed to have done many meritorious works too. His ancestry is not given in the Dipavamsa. Then Coranaga, son of Vattagamani, ruled like a robber for twelve years. After Coranaga, Mahchuli’s son, Tissa, ruled three years. Then king Siva cohabited with Anula and ruled for one year and two months. Then a king from a foreign country, Vatuka by name, a Damila, ruled for one year and two months. This is clearly stated that Vatuka is a Damila, 21 – 27, and came from a foreign country. This is the only instance in the Dipavamsa that a Damila came from a foreign country. Then a wood cutter by the name Tissa ruled for one year and one month. Then a person called Nilaya, known as the Damila king, ruled for three months. It is not stated that this Damila king came from India. A woman, Anula, killed these excellent persons and ruled for four months. Though it is not stated precisely who those excellent persons are, but it seems that they are Tissa, Siva, Vatuka, (another) Tissa, and Nilaya, as Coranaga wouldn’t have been described as excellent person because he ruled like a robber. Then Mahachuli’s second son, Kuttikannatissa ruled for twenty two years.

Chapter 21: Prince Abhaya, the son of Kuttikanna, did quite a lot to the Bikkhus and to the Buddhism. He ruled for twenty eight years. Another son of Kuttikanna, prince Naga, also did quite a lot to the Bikkhus and the Buddhism. He reigned for twelve years. Kuttikanna and Naga could be Tamils as their names indicate. Amandagamani, the son of Mahadathika ruled for nine years and nine months. Dathika is a Tamil name, see 20-18, and therefore Mahadathika is also a Tamil name. He forbade the killing of animals. Amandagamani is the son of Mahadathika who is a Tamil. Therefore Amandagamani is also a Tamil. His younger brother Kanirajanu must also be a Tamil, ruled for three years. Amandagamani’s son, Culabhaya ruled for one year. The daughter of Amanda (gamani?), Sivali Revathi ruled for four months. Illanaga, a son of Amanda’s sister ruled six years.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 59 தொடரும் / Will follow

துளி/DROP: 1931 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 58]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32716283924686832/?

  • Replies 80
  • Views 3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இந்திய புராணக் கதைகளால் பின்னப்பட்ட சரித்திரத்தை மறுதலிக்கக் கூடிய நிலை தமிழகத்தில் உருவாகி வருகிறது. ஆனாலும் இது மிகக் கடினாமானது. ஆயிரம் வருடங்களாகளாகப் பு

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

  • kandiah Thillaivinayagalingam
    kandiah Thillaivinayagalingam

    அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil &

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 59 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'சந்தமுகன் சிவா ஒரு தமிழனும் ஒரு சைவனுமே!'

சந்தமுகன் சிவா [Chandamukha Siva] எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தார். தமிழாதேவி [Damilidevi / Damiladevi] என்று அழைக்கப்படும் அவரது ராணி மனைவி கிராமத்திலிருந்து கிடைத்த தனது வருவாயை தனது கணவர் மன்னனால் கட்டப்பட்ட அரமாவிற்கு [Arama / பௌத்தத்தில் அரமா என்பது ஒரு துறவற இல்லம்] வழங்கினார். கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக் கொண்டனர். அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன்?. இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.


மேலும் பலேசிமுண்டோ என்பது, தமிழ் சொல் 'பழைய முந்தல்' என்பதன் திரிபு ஆகவும் இருக்கலாம்? [Also Palaisi moundou may be a corruption of palaya mundal [பழைய முந்தல்]], முந்தல் என்பதன் ஒரு பொருள் முனை [promontory - கடல் முனை] ஆகும். அது மட்டும் அல்ல இலங்கையின் மேற்கு கடற்கரையில் முந்தல் என அழைக்கப்படும் பல கடல் முனைகள் உள்ளன. மேலும் பிடோலேமி அல்லது தொலமி கூட அப்படி ஒரு கடல் முனையை, அதாவது இன்றைய கற்பிட்டி தீபகற்பகத்தை, அனரிஸ் முண்டோ [Anarismoundou] என குறிப்பிட்டுள்ளார். [There are several promontories on the west coast called by the Tamil name Mundal, and Ptolemy himself mentions one of the name of Anarismoundou, now called Kalpitiya Peninsula]. முதலில் பலேசிமுண்டோ தலைமை நகரத்தை குறித்தாலும், காலப்போக்கில் அது முழு தீவையும் குறிக்கப் பாவிக்கப் பட்டதாக அறிகிறோம். உதாரணமாக, பெரிப்ளுசு இலங்கையை பலேசிமுண்டோன் [Palaisimoundon] என்றே குறிப்பிடுகிறார்.[according to the Periplus, Ceylon was then known as Palaisimoundon]

மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது.

இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது.

"பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு." (குறள்-1015)

எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக,
மதுரைக்காஞ்சி 494 - 498

"நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி,
அன்பும் அறனும் ஒழியாது காத்து,
பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த"

என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த[சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல், இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது , மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது.

யசலாலக்க என்ற குடும்பப்பெயர் கொண்ட திஸ்ஸ மன்னன் (Yassalalaka Tissa) எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தான். முந்தைய இரண்டு ஆட்சிகளின் நீளம் ஒரேயளவாக, எட்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் என்பது விசித்திரமானது. அதன் பின் வாசல் காவலாளியின் [royal gatekeeper] மகன் சுபகராஜன் அல்லது சுபா [Subha] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அத்தியாயம் 21-ல் உள்ள மேற்கண்ட அரசர்கள் அனைவரும் தமிழர்களாக இருக்கலாம்.? தமிழர் என்பதை அவர்களின் பெயர்களிலும் மற்றும் சிவா என்ற பெயர்களின் மூலம் சைவ மதத்தையும் காண்கிறோம்.

Part: 59 / Appendix – Dipavamsa / 'Chandamukha Siva is a Tamilian and a Shaiva or Shaivite!'

Siva Candamuki ruled for eight years and seven months. His queen consort who is known as Damiladevi bestowed her revenues from the village to the Arama built by her husband king. King Tissa with surname Yasalala ruled for eight years and seven months. It is strange that the lengths of the two previous reigns are eight years and seven months. Subha, the son of a doorkeeper, ruled for six years. All the above kings in the chapter 21 could be Tamils.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 60 தொடரும் / Will follow

துளி/DROP: 1932 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 59]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32721565764158648/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 60 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீபவம்சம் என்பது ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவு மட்டுமே, வேறு எதுவும் இல்லை!'

அத்தியாயம் 22: வசபா மன்னர் [வசபன் / king Vasabha] பல புத்த கட்டிடங்களையும், நீர்ப்பாசனப் பணிகளையும் கட்டினார். அவர் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். வசபாவின் மகன் திஸ்ஸன் [வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் / Vankanasika Tissa, also known as Vakunaha Tiss] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I, also known as Gajabahuka Gamani] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவன், பிரபல சேர (இன்றைய கேரள) மன்னன் செங்குட்டுவன் அழைப்பின் பேரில் இந்திர விழாவில் பங்கேற்க தமிழகம் சென்றார். அவர் திரும்பியவுடன் பத்தினி வழிபாட்டைக் இலங்கைக்கு கொண்டுவந்து, பத்தினி கண்ணகியைப் போற்றும் வகையில் பெரஹெரா விழாவைத் [Perahera festival] தொடங்கினார்.

சயாமிலிருந்து [தாய்லாந்து / Thailand அல்லது முன்னர் சயாம் / Siam ] வந்த துறவிகளின் தூண்டுதலின் பேரில் 1775 கி.பி.க்குப் பிறகுதான் புத்தரின் பல் தாது [Buddha’s tooth relic] திருவிழாவுடன் தொடர்புடையது. பதினெட்டு நூற்றாண்டு பழமையான பத்தினி வழிபாடு மற்றும் பெரஹெரா திருவிழாவுடன் ஒப்பிடும் போது, இந்த பிக்குகள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அத்தியாயங்களை மிக சமீபத்தில் தான் உருவாக்கினர். தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் பெரஹெரா விழா முதலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிய இராச்சியத்தின் தமிழ் மன்னன் சயாமிலிருந்து (தாய்லாந்து) இந்த துறவிகளை அழைத்தார் என்றும் மற்றும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பிரிவுகளின் துறவிகள் தான் பெரும்பாலும் அடுத்தடுத்து இலங்கை அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்ட தமிழர் விரோத படுகொலைகளில் கொடூரமான பங்கைக் கொண்டிருந்தனர் என்பது அண்மைய வரலாற்று உண்மை.

கஜபாகுக்க காமினி அல்லது முதலாம் கஜபாகுவின் [Gajabahukagamani or Gajabahu I ] மாமனார் மகல்லக்க நாகன் [Mahallaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். கஜபாகுவின் மகன் பதிக திச்சன் [Bhatika Tissa] இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அதன் பின், பதிக திச்சனின் இளைய சகோதரர் திஸ்ஸ (கன்னிததிஸ்ஸ / Kanittha Tissa) பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகன் குச்சநாகன் அல்லது சூளநாகன் [Cula Naga, or Khujjanaga, also known as Kuhun Na] தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது இளைய சகோதரர் குடநாகன், குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் [Kuda Naga or Kunchanaga] தனது சகோதரனைக் கொன்று ஓராண்டு ஆட்சி செய்தார். முதலாம் சிறிநாகன் [Sirinaga] குஞ்சநாகாவை தோற்கடித்து பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகன் அபயா [Abhaya] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான் [22 - 37. The son of Sirināga, the royal lord called Abhaya, .... 38. ... This king governed twenty-two years.] அவரது இளைய சகோதரர் திச்சன் [திஸ்ஸாக / Tissaka] இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [22 - 39. His younger brother, known as king Tissaka, ... 45. This royal ruler governed twenty-two years.] . திஸ்ஸாகவின் மகன் இரண்டாம் சிறிநாகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார் [46. Tissa’s own son, known by the name of Sirināga, reigned full two years over the Island.]. ஆனால், மகாவம்சத்தில், முதலில் திஸ்ஸாக [Tissaka] வையும் அடுத்ததாக அபயா [Abhaya] வையும் ஆட்சி செய்ததாக கூறுகிறது? இரண்டாம் சிறிநாகனின் மகன் விசயகுமாரன் [Vijaya Kumara] தந்தை இறந்த பின் ஒரு வருடம் ஆட்சி செய்தார். முதலாம் சங்க திச்சன் [Sangha Tissa I] நான்கு வருடங்கள் ஆட்சி செய்தார். இவன், விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் முதலாமானவன் ஆவான். அதன் பிறகு விசயகுமாரன் ஆட்சியின் போது இருந்த மற்ற இரு அமைச்சர்களான சிறிகங்கபோதி [Siri Sangha Bodhi I, also known as Siri Sanghabodhi] இரண்டு ஆண்டுகளும், அதன் பின் மற்ற அமைச்சரான கோதாபயன் அல்லது மேகவண்ணாபயன் அல்லது அபய மேகவன்னா [Gothabhaya, also known as Meghavannabhaya, Gothakabhaya, Abhaya Meghavanna and Goluaba,] பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவருடைய மகன் ஜெத்ததிஸ்ஸ [சேட்டதிச்சன் / Jettha Tissa I also referred to as Detu Tiss, Kalakandetu Tissa, and Makalan Detu Tissa] பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். சேட்டதிச்சனின் தம்பியான மகாசேனன் [Mahasena, also known in some records as Mahasen] இருபத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

அவரது ஆட்சியில் ஒருவித மத மோதல்கள் நடந்தன. உதாரணமாக, மகாசேனன் மற்றும் முதலாம் சேட்டதிச்சன் ஆகிய சகோதரர்கள் இருவரும் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவு மதத்தலைவரின் சீடர்களாவர். சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான முதலாம் சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் சங்கமித்ரர் முதலாம் சேட்டதிச்சனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார். ஆனால் மகாசேனனோ தன் அண்ணன் போல் அல்லாமல் சங்கமித்ரர் மகாயான பௌத்தத்தை இலங்கையில் பரப்புவதற்கு பேருதவிகளை செய்தான். சங்கமித்ரர் கையாலேயே இவனுக்கு முடிசூட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இவன் காலத்தில் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. மேலும் மகாசேனன் இலங்கையில் அக்காலத்தில் இருந்த சைவக்கோயில்களை இடித்து அழித்திருக்கிறான். இன்னும் ஒன்றையும் கவனியுங்கள் இங்கு சங்கமித்ரர், தமிழ் பேசும் ஆண் புத்த பிக்கு, இவரின் பெயர் பாளி: சங்கமித்தா, சம்ஸ்கிருதம்: சங்கமித்ரா வுடன் தொடர்பு படுகிறது. அந்த நேரம் தமிழர்களும் மகாயான பௌத்த தழுவியவர்கள் என்பதும் வெள்ளிடை மலை. இதை இலங்கையில், வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வு என்று இன்று ஈடுபடும் முழுக்க முழுக்க சிங்கள நபர்களைக்கொண்ட ஆய்வாளர்களுக்கு புரியாதது எனோ? அல்லது அவர்களுக்கு சரியான நேர்மையான அறிவு இல்லையா ? யாம் அறியேன் பராபரமே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை, மகாசேனன் மாதிரி, சைவக் கோயில்களை இடித்து அழிப்பதில் மட்டும், பச்சை, நீலம் அல்லது சிவப்பு கொடிகளை ஏந்தினாலும், கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

மொத்தம் 105 பக்கங்களில், அத்தியாயம் 18 முதல் அத்தியாயம் 22 வரை உள்ள சுமார் 16 1/2 பக்கங்களில் மட்டுமே மொத்தம் 61 மன்னர்களில் 54 மன்னர்கள் பற்றி, அதாவது சுமார் 89 சதவீத மன்னர்கள் பற்றி பேசுகிறது. மீதமுள்ள, ஆரம்ப ஆட்சியாளர்கள், நாம் முன்பே விளக்கமாக கூறியது போல, கண்டுபிடிக்கப்பட்ட மன்னர்களாக இருக்க வேண்டும்? எனவே தான் அதற்கான கதைகளை சோடிப்பதற்காக, பல பக்கங்களை எடுத்துள்ளார்கள் போலும்? மேலே காட்டப்பட்டுள்ள அரசர்களில் பெரும்பாலோர், பெயர்களின் அடிப்படையில், ஏற்கனவே விவரிக்கப்பட்ட வாறு, தமிழர்களுடன், தமிழ் பண்பாட்டுடன் தொடர்பு உடையவர்களாகவே தெரிகிறது. மேலும் தீபவம்சத்தின் பெரும்பாலான பக்கங்கள் வரலாற்றை விட, நம்பிக்கைக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. அதனால்த் தான் மொழிபெயர்ப்பாளர் ஹெர்மன் ஓல்டென்பர்க் [Hermann Oldenberg] தீபவம்சத்தை "ஒரு பண்டைய பௌத்த வரலாற்றுப் பதிவுகள்" என்று அழைக்கிறார். இது பௌத்தத்திற்கு ஆதரவானதே தவிர, என்றும் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. இருபதாம் நூற்றாண்டின் அல்லது அதற்குப் பிறகு, பெரும்பாலான மிகவும் பேராசை கொண்ட துறவிகளும் அரசியல்வாதிகளும், இந்த விசுவாசப் பதிவை, விஷமிகுந்த தமிழர் விரோதமாக மாற்றினார்கள் என்றே தோன்றுகிறது. இதற்கு அடியெடுத்து கொடுத்தது, இதன் பின் 150 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட மகாவம்சமாக இருக்கலாம்?

Part: 60 / Appendix – Dipavamsa / 'The Dipavamsa is just an ancient Buddhist historical record & nothing else!'

Chapter 22: The king Vasabha constructed many Buddhist buildings, and irrigation works. He ruled forty four years. The son of Vasabha, Tissa, ruled for three years. His son, Gajabahukagamani, ruled twenty two years. He went to Tamilnadu to participate in the Indra Vill(zz)a festival on the invitation of the famous Chera (present day Kerala) king Senggutuvan. He brought the Pattini cult on his return and initiated the Perahera festival to honour the Pattini, Kannagi. Buddha’s tooth relic came to be associated with festival only after 1775 A. D. on the instigation of the monks who came from Siam. These monks formed the Malwatte and the Askiriya Chapters of very recent origin when compared with the eighteen century old procession of the Pattini worship, and the Perahera festival. Perahera festival is first recorded in the Tamil Epic Silappthikaram. Ironically, the Tamil king of Kandyan kingdom invited these monks from Siam (Thailand) and the monks of the Malwatte and the Askiriya Chapters played diabolical role in the anti Tamil pogrom perpetrated by the successive Sri Lankan Governments.

Mahallakanaga, father in law of Gajabahukagamani, ruled for six years. His, Gajabahu’s, son, Bhatutissa, ruled for twenty four years. Younger brother of Bhatutissa, Tissa (Kannithatissa), ruled for eighteen years. His son Khujjanaga ruled for two years after the death of his father. His younger brother Kunjanaga put his brother to death and ruled for one year. Sirinaga defeated Kunjanaga and ruled for nineteen years. His son Abhaya ruled for twenty two years. His younger brother Tissaka ruled for twenty two years. His son Sirinaga ruled for two years. His son Vijayakumara ruled for one year after death of his father. Samghatissa reigned for four years. The king Samghabodhi reigned for two years. Abhaya Meghavanna ruled for thirteen years. His son Jetthatissa ruled ten years. Mahasena, the younger brother of Jetthatissa, ruled for twenty seven years. Some sort of religious conflict took place in his reign.

About 16 pages and a half page, from the Chapter 18 to the Chapter 22, out of the 105 pages speaks about 54 kings out of 61 kings, about 89 percent of the kings. The rest, the purported initial rulers, must be invented kings. Quite a large proportion of the kings, as shown above, are Tamils. The most of the pages of the Dipavamsa are devoted to the Faith than to the history. That is why the translator, Hermann Oldenberg, calls the Dipavamsa as “An ancient Buddhist Historical Records”. It is pro Buddhism, but not anti Tamil. Avaricious and greedy monks and the politicians of the twentyieth century and afterwards without any compunction turned this record of Faith into venomous anti Tamil hatred.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 61 தொடரும் / Will follow

துளி/DROP: 1934 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 60]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32744509148530976/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 61 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம்

மகாவம்சத்தில் குறிக்கப்ட்ட விடயங்களில், என் கருத்துக்களில் இருந்து, உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் / நம்பிக்கைகள் அல்லது வேறு சான்றுகள் இருக்கலாம். நான் கேள்விகள் அல்லது கருத்துகள் அல்லது பதில்களை இட்ட இடங்களில், உங்களுக்கு வேறுபாடு இருப்பின், அதற்கான உண்மையான ஆதாரங்களுடன் உங்கள் மதிப்புமிக்க கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. இது நமது புரிதல் / அறிவை மேலும் மேம்படுத்துவதோடு நமது எண்ணங்களை / செயல்களையும் சரி செய்யும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் / நம்பிக்கையையும் விமர்சிக்கவில்லை, மகாவம்சத்தின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமே எனது எண்ணங்களை அங்கு அறிவியல் ரீதியாக பகிர்ந்து கொள்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.

மகாவம்சமானது பாளி மொழியில் வேண்டுமென்றே, தேர்ந் தெடுக்கப்பட்ட நீக்குதல்கள் மற்றும் தாராளவாத சேர்த்தல்களுடன், தீபவம்சத்தின் மறுசீரமைப்பாகக் கருதப்படலாம். கி.பி. நான்காம் நூற்றாண்டில், தீபவம்சம் தொகுக்கப்பட்டு, நூற்று முதல் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகாவம்சம் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Ludwig Geiger) (1856-1943) , Ph. D., 1912 இல் மகாவம்சத்திதினை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு 271 பக்கங்களைக் கொண்டது. மகாவம்சம் தீபவம்சத்தின் அதே காலகட்டத்தை உள்ளடக்கியிருந்தாலும், தீபவம்சத்தை அடிப்டையாகக் கொண்டு தொகுத்து இருந்தாலும், அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மன்னன் மூலம், தமிழர் விரோத விடயத்தை விதைக்க அதிக எண்ணிக்கையிலான பிரிவுகள் அல்லது அத்தியாயங்கள் ஆக்கப்பட்டு, மிகவும் பெரிதாக்கப்பட்டுள்ளது. தீபவம்சத்தில் இருபத்தி இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளன. ஆனால் அதே காலகட்டத்தை உள்ளடக்கிய, மகாவம்சத்தில் முப்பத்தேழு பிரிவுகள் உள்ளன.

துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியின் விவரிப்பு அத்தியாயம் 22 முதல் அத்தியாயம் 33 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது; மகாவம்சத்தில் அத்தியாயங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் அது தான். பூர்வீகப் பெண்மணியான இயக்கர் குலம் சேர்ந்த [யக்கினி] குவேனி என்றும்‌ சொல்லப்படும்‌ குவண்ணாவின் அத்தியாயமும் மகாவம்சத்தில் கூடுதலாக உள்ளது. இந்த யக்கினி குவண்ணா பற்றி ஒரு அத்தியாயமும் கூட தீபவம்சத்தில் இல்லை. கதை மற்றப்படி ஒன்றுதான், ஆனால் தமிழருக்கு எதிரான நோக்கம் மகாவம்சத்தில் வலுக்கட்டாயமாக, வெளிப்டையாகக் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

அத்தியாயம் 1: 1-20 ‘... இந்த அத்தியாயத்தில், இயக்கர்களால் (Yaksha) நிரம்பிய இலங்கை நாட்டில், தனது நம்பிக்கையை நிரந்தரமாக நிலை நிறுத்த வேண்டும் என்றால், இயக்கர்கள் (முதலில்) விரட்டப்பட வேண்டும் என்று ஞானம் பெற்ற புத்தரின் இதயத்திலிருந்து வருகிறது. ஆகவே தான் புத்தர், இயக்கர்களை விரட்ட இலங்கை சென்றார். இயக்கர்கள் இலங்கையின் பல பூர்வீக குடிகளில் ஒரு குழுவாக அன்று இருந்தனர். மேலும் இந்த மகாவம்சத்தில், ஞானம் பெற்ற புத்தர், தனது நம்பிக்கையை நிலைநிறுத்த அவர்களை தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்ற விரும்பினார் என்று கூறுகிறது. தீவின் பூர்வீக குடிகளான இயக்கர்களை, அவர்கள் பாரம்பரியமாக ஒன்றுகூடிய போது, கனமழை, இருள், புயல் போன்றவற்றை உருவாக்கி, அவர்களின் இதயத்தில் பயங்கரத்தை உண்டாக்கி, தனது நம்பிக்கைக்காக, நிலத்தை கைப்பற்றுவதற்காக, அவர்களை பயமுறுத்தினார் என்கிறது. ஆதிவாசிகளான இயக்கர்கள், பயத்தில் மூழ்கி, கருணையுள்ள, அன்புவடிவான? புத்தரின் கட்டளைப்படி, கிரிதீபா [Giridipa] என்ற வேறு ஒரு தீவுக்கு [இடத்திற்குச்] செல்ல ஒப்புக்கொண்டனர். இதை 1-17 முதல் 30 வரை மகாவம்சத்தில் பார்க்கவும். இரக்கமுள்ள புத்தரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது அவரின் பலவந்தத்தின் கீழ், தீவின் பூர்வீக குடிகள் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற உலகத்தை துறந்த புத்தரால், இப்படித்தான் இலங்கைத் தீவு நம்பிக்கைக்குக் கொண்டுவரப்பட்டது என்கிறது?

தமிழர்களுக்கு எதிரான முதல் விஷம் 1 - 41 இல் இருந்து 43 வரை ஏப்பம் விடுகிறது; உதாரணமாக 1 - 41: ' துட்டகாமினி மன்னன் தமிழர்களுடன் போரிட்டபோது, இந்த இடத்தில் தங்கியிருக்க நேரிட்டது. அப்போது இந்தச் சேதியத்தை [ஒரு பௌத்த தூபி அல்லது நினைவுச் சின்னத்தை] எண்பது முழ உயரமுள்ளதாகக் கட்டினான். இந்த விதமாக, மஹியங்கனை தூபம் [Mahiyangana-thupa / மஹியங்கன தூபம் இலங்கையில் உள்ள ஒரு புனித பௌத்த தூபியாகும். இந்த இடம் தான், புத்தர் முதன்முதலாக இலங்கைக்கு வருகை தந்த இடமாக நம்பப்படுகிறது?] இறுதியாக பூர்த்தி ஆயிற்று என்கிறது.

தீபவம்சம் எல்லாளன் என்ற அரசனை தமிழன் என்று அடையாளப் படுத்தவில்லை, ஆனால் மகாவம்சம் துட்டகாமினியின் தமிழர் மீதான போர் என்று கூறுகிறது. தீபவம்சம் எல்லாளனை சோழ நாட்டிலிருந்து வந்தவன் என்று அடையாளம் காட்டவில்லை. அது மட்டும் அல்ல, தென் இந்தியா வரலாற்று குறிப்புகளோ அல்லது இலக்கிய குறிப்புகளோ சோழ இளவரசர்களில் ஒருவரான எல்லாளன் இலங்கைக்குச் சென்று நீண்ட காலம் ஆட்சி செய்ததாகக் எந்த பதிவுகளும் இல்லை. கரிகால் சோழன் [Karikaal Cholan] தமிழர்களின் அன்புக்குரிய மன்னன், நாம் அனைவரும் அறிந்த மூத்த சோழ மன்னன். கரிகால் சோழனுக்கு முந்தைய பிற சோழர்கள் வெறும் இதிகாச அல்லது புராணக்கதை மன்னர்களே [legendary kings]. இருப்பினும், இங்கு எல்லாளன் மன்னன் கரிகால் சோழன் மன்னனுக்கும் முந்தையவன். எனவே, மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமா சோழர்களின் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார் என்று எண்ணுகிறேன்? கரிகால் சோழன் கிபி 90 இல் இருந்தான், ஆனால் எல்லாளன் கி மு 145 முதல் 101 வரை இருந்தான். இன்னும் ஒன்றையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். மகாசேனன் (கி பி 277 - 304) காலத்தில் தான் தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவினர்களிடையே மதப்பூசல்கள் இருந்தன. இதற்கு முக்கிய காரணம், மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவரான சங்கமித்ரர் ஆகும். இவர், கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார் என்பது வரலாறு. ஆகவே அதன் பின் மகவாசம் எழுதிய தேரவாதத்தை சேர்ந்த மகாநாமாவுக்கு, கட்டாயம் சோழர்கள் மேலும் தமிழர்கள் மேலும் ஒரு வெறுப்பு இருந்து இருக்கும். அதன் விளைவு தான், அவர் கண்டுபிடித்த, பெரிது படுத்தப்பட்ட , தமிழ் சோழ மன்னனும் துட்டகாமினி போரும் என்று எண்ணுகிறேன்?



Part: 61 / Appendix – Summary of the Mahavamsa /

You may have different opinions / beliefs or evidences from me. Where ever I have arised Questions or posted comments / Answers, your valuable comments with true evidences are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought based on the incidents mentioned in each chapters of Mahavamsa, nothing more than else.

The Mahavamsa can be considered as the intentional re-arrangement of the Dipavamsa with selective deletions and liberal additions in choice Pali language. It is believed to be composed in the beginning of the sixth century, about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa. Any references given below is, unless stated otherwise, to the translation of the Mahavamsa by Wilhelm Geiger, Ph. D., 1912. The English translation runs into 271 pages. Though the Mahavamsa is covering the same period as the Dipavamsa, it is much enlarged to have greater number of Sections or Chapters to sow the seeds of anti-Tamil venom through a selected king. There are only twenty two Sections in the Dipavamsa, but there are thirty seven sections in the Mahavamsa, covering the same period. The narrative of Dutthagamani is elaborated from Chapter 22 to Chapter 33; the main reason for the increase in the chapters in the Mahavamsa. The episode of the native lady, Yakkhini Kuvanna, is also an addition in the Mahavamsa. This Yakkhini Kuvanna episode is not in the Dipavamsa. The story is otherwise the same, but the anti-Damila intent is forcefully expressed in the Mahavamsa.

Chapter 1: 1-20 ‘…Lanka filled with the Yakkhas, the Yakkhas must (first) be driven forth’; this is from the heart of the enlightened Buddha. The Buddha went to Lanka to drive out the Yakkhas to win Lanka for the Faith. The Yakkhas was one group of the many original inhabitants of Lanka, and the enlightened Buddha wanted to drive them out of their homeland to establish his Faith. He terrorized the original inhabitants of the island, the Yakkhas, just to win their land for his Faith, when they were having their traditional gathering, by causing terror into their heart by producing heavy rain, darkness, storm etc. The Actions of the Buddha, as described in the Mahavamsa, are despicable acts of terrorism to subdue the original inhabitant of the island. The Yakkhas, the original inhabitants, were overwhelmed by fear and agreed to go to another place as commanded the benevolent Buddha, to Giridipa, 1- 17 to 30. The original inhabitants of the Island were compelled to relocate under duress by the compassionate Buddha. This is how the island Lanka was won to the Faith by the renowned world renouncing Lord Buddha. The first venom against Tamils is belched in the 1 - 41; 'The king Dutthagamani, dwelling there while he made war upon the Damilas, built a mantle cetiya over it eighty cubits high.'

The Dipavamsa does not identify the king Elara as Damila, but the Mahavamsa says Dutthagamani’s war upon Damilas. The Dipavamsa does not identify Elara as from the Cola country. There are no records in the Cola annals that one of their princes, Elara by name, went to Lanka and ruled for a long time. Karikaal Cholan is a beloved king of Tamils, and he is the oldest Chola king we all know. Other Cholas prior to Karikaal Cholan are mere legendary kings. However, the king Elara is even earlier to the king Karikaal Cholan. Mahanama, the author of the Mahavamsa, created a new history of Cholas. Karikaal Cholan is around 90 A. D. but Elara is 145 to 101 B. C.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 62 தொடரும் / Will follow

துளி/DROP: 1935 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 61]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32760849530230271/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62

[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 62 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர், இந்த பயங்கரவாத செயலுக்குப் பிறகு வட இந்தியாவில் உள்ள உருவேலவுக்குத் [Uruvela] திரும்பினார். இலங்கையின் பூர்வீகக் குடிகளை விரட்டியடிக்கும் இந்த அத்தியாயத்தின் முடிவு எளிமையாகச் சொல்லப்படுகிறது அல்லது விளக்கப்பட்டுள்ளது: 1 - 42 & 43 பார்க்கவும் : "இவ்வாறு மஹியங்கனை-தூபம் முடிந்தது. அவர் [புத்தர்] எங்கள் தீவை மனிதர்களுக்குத் தகுந்த வசிப்பிடமாக மாற்றியதும், வலிமை மிக்க ஆட்சியாளரும், வீரம் மிக்க வீரருமான புத்தர் உருவேலவுக்குப் புறப்பட்டார்" என்று முடிகிறது. "என்ன ஒரு உருமறைப்பு [camouflage] இது!" அதாவது, வாசிப்பவர்களின் புலனுக்கெட்டாத வகையில், உண்மையை மறைப்பதற்கான ஒரு உத்தியாக இது தெரிகிறது. அதே நேரம், தீபவம்சத்தில், உண்மையை உண்மையாகவே, "இங்கே இயக்கர்களின் அடிபணிதல்" என்று வெளிப்படையாக முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில், குறிப்பாக இன்றைய பீகாரில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற பகுதிக்கு உருவேலா என்பது ஒரு பண்டைய பெயர், இது இப்போது புத்த கயா என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு முக்கிய பௌத்த யாத்திரைத் தளமாகும்.
தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரால் அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரால், இலங்கையின் பூர்வீக மக்களை அடிபணித்தலும் வெருட்டி பாரம்பரிய இடத்தில் இருந்து அகற்றுவதும் கட்டாயம் அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இதை ஞானம் பெற்ற புனித புத்தர் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!. என்ன பாவம் செய்தாரோ புத்தர் நான் அறியேன்?

இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படு கொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை [இனம், தேசம் அல்லது பழங்குடி] குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை ["கொலை, நிர்மூலமாக்கல்"] குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து 1944 ஆம் ஆண்டு "கைப்பற்றப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் ஆக்ஸிஸ் ஆட்சி" [Axis Rule in Occupied Europe] என்ற புத்தகத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும்.


இது முதலில் "ஒரு தேசம் அல்லது ஒரு இனக்குழுவின் அழிவு" [“the destruction of a nation or an ethnic group”] என்று பொருள் கொள்ளப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபையானது, தீர்மானம் 96 இல் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படு கொலையை ஒரு குற்றமாக உறுதி செய்தது, அதில் "கொலை என்பது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வதற்கான உரிமையை மறுப்பது போல, இனப்படுகொலை என்பது முழு மனித குழுக்களின் இருப்பு உரிமையை மறுப்பதாகும்; இவ்வாறு, மனித இருப்பதற்கான உரிமையை மறுப்பது, உண்மையில் மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாகும். மேலும் தார்மீக சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணர்வுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் முரணானது ஆகும். டிசம்பர் 9, 1948 இல், ஐ.நா பொதுச் சபை தீர்மானம் 260A நிறைவேற்றப்பட்டு, அல்லது இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய மாநாடு நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 12, 1951 இல் இவை நடைமுறைக்கு வந்தது [December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951.]

"வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இனப்படுகொலை மனிதகுலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தீர்மானம் குறிப்பிட்டது. இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 2ஆம் கட்டுரையின் படி:

ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்:

(அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்;

(ஆ) இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்;

(இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல் .... மற்றும் பலவற்றைக் கூறுகிறது.

அப்படியானால், (ஆ) & (இ) வின் படி, இலங்கையின் பூர்வீக குடிகளை விரட்டியடிக்கும் மேற்கண்ட புத்தரின் செயல் நிச்சயமாக மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். ஆனால், நிச்சயமாக இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த புத்தர் இந்தச் செயலைச் செய்யமாட்டார். ஆனால், மகாவம்ச ஆசிரியர் தான் புத்தரை முன்னிறுத்தி இந்த செயலுக்கு அத்திவாரம் போட்டுள்ளார் என்பதே உண்மை!

Part: 62 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The Buddha, after this terrorist act, returned to Uruvela, in North India. The end of this episode of driving away the original inhabitants of Lanka is simply said or glossed over as: "Thus was 42 the Mahiyangana-thupa completed. When he had thus made 43 our island a fit dwelling-place for men, the mighty ruler, valiant as are great heroes, departed for Uruvela. 'Here ends the Visit to Mahiyangana' ”. What a camouflage it is! The same visit is described as “Here ends the subjection of Yakkhas” in the Dipavamsa. The subjection of the native people of Lanka by a person from a faraway place is simply titled as a ‘Visit to Mahiyangana’ in the Mahavamsa. It is a crime against humanity.

The term “genocide”, made from the ancient Greek word genos (race, nation or tribe) and the Latin caedere (“killing, annihilation”), was first coined by Raphael Lemkin, a Polish-Jewish legal scholar, in his 1944 book Axis Rule in Occupied Europe. It originally means “the destruction of a nation or an ethnic group”. In 1946, United Nations (UN) General Assembly affirmed genocide as a crime under international law in Resolution 96, which stated that “Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind … and is contrary to moral law and the spirit and aims of the United Nations.” On December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951. The Resolution noted that “at all periods of history genocide has inflicted great losses on humanity”. Article II of the Convention clearly defines genocide as any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group. If so, the above act of driving away the original inhabitants of Lanka, Will definitely a crime against humanity. But Definitely The Buddha who was born in Lumbini, in what is now Nepal, would not do this act.

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 63 தொடரும் / Will follow

துளி/DROP: 1937 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32792834707031753/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 63 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை

புத்தர், ஞானமடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையில் இரண்டு நாகர் அரசர்களுக்கு இடையே இரத்தின அரியணை [சிம்மாசனம்] தொடர்பாக போர் ஏற்படப் போவதை உணர்ந்தார். உடனே, புத்தர் இலங்கைக்கு பறந்து சென்று, நாகர்களை பயமுறுத்தி, தனக்காக அந்த அரியணையைப் பெற்றார். இங்கு, உலகைத்தை துறந்த புத்தரின் கொள்கையை, மகாவம்சம் வெளிப்படையாக மீறுகிறது. புத்தர், தனது 29 வயதில், தனது சொந்த அரியணையைத் துறந்து, தனது இளம் மனைவி, மற்றும் பிறந்த குழந்தை ராகுலன் [ராகுலா / Rahula] மற்றும் அரச அரண்மனை வாழ்க்கையின் சுகம் போன்றவற்றை விட்டு வெளியேறினார். புத்தர் பிம்பிசார மன்னரின் [King Bimbisara] தலைநகரான ராஜகஹாவுக்கு [ராஜகஹா, ராஜ்கிர் என்றும் அழைக்கப்படுகிறது, இது மகத இராச்சியத்தின் தலைநகராக இருந்த இந்தியாவின் ஒரு பண்டைய நகரமாகும். / Rajagaha, also known as Rajgir, was an ancient city in India that was a capital of the Magadha kingdom.] கால்நடையாகச் சென்றார். அங்கு பிம்பிசார புத்தருக்கு தனது அரசை வழங்கினார். புத்தர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். எனவே புத்தர் இரண்டு முறை அரியணையைத் துறந்தார், புத்தர் ஞானம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிம்மாசனத்தை ஏற்றுக்கொண்டார் என்பது அபத்தமானது. 1- 58, 59 & 60 பார்க்கவும். போர்க் களத்துக்கு மேலாக வானவெளியில் சஞ்சரித்த வண்ணம் மன இருளை அகற்றும் மகானாகிய குருநாதர், நாகர்கள் மீது அடர்ந்த இருள் கவியச் செய்தார். பீதியினால் துயரமுற்றவர்களைத் தேற்றி மீண்டும் அங்கு ஒளி ஏற்படச் செய்தார். அருள் ஞானியைக் கண்டதும் அவர்கள் களிப்புடன் அவர்தம் பாதத்தைப் போற்றினர். பின்னர் அச்சந் தீர்க்கும் அண்ணல், அவர்களுக்குச் சமாதான நெறியைப் போதித்தார். போரிட்ட இரண்டு நாகர்களும் மகிழ்வுடன் ஒன்று பட்டு தங்கள் சண்டைக்குக் காரணமாக இருந்த சிம்மாசனத்தை புத்தருக்கே அளித்தனர். புத்தர் கீழே இறங்கி அங்கிருந்த அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாம தேரர், புத்தரின் புனிதம் அல்லது தெய்வீக ஒளியைக் குறித்துக் காட்டிட, வரையப்படும் தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் படத்தை உண்மையில் களங்கப்படுத்துகிறார். அது மட்டும் அல்ல, இந்த நிகழ்வும், "நாகதீப வருகை இதோ முடிவடைகிறது" என்று முடிவுக்கு வருகிறது. அதே நிகழ்வு தீபவம்சத்தில், "இங்கு நாகர்களை வெல்வது முடிவடைகிறது.". அதாவது தீபவம்சம் வெளிப்படையாக நாகர்களை அடக்கி வெல்வதை மறைக்காமல் கூறும் அதே நேரத்தில், மகாவம்சம், அதே நிகழ்வை, [புத்தரின்] நாக தீப வருகை முடிவுக்கு வருகிறது என்று முடிகிறது. மகாநாம தேரர், இராஜதந்திர வசனங்களால் குற்றச் செயல்களை மறைப்பதை எவரும் உணரமுடியும்? அது தான் நாம் இன்றும் இலங்கை அரசிடம் காண்பது?

நாக மன்னன் மணியக்கிகன் [Maniakkhika] புத்தரை கல்யாணியில் [Kalyani / இலங்கை பௌத்த மரபின்படி, இலங்கையில் "கல்யாணி" என்பது களனிப் பகுதியைக் குறிக்கிறது] உள்ள தனது இராச்சியத்திற்குச் வரும்படி கேட்ட அழைப்பை ஏற்று, புத்தர் தான் ஞானமடைந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கைக்கு மூன்றாம் தடவையாக, நாகத்தின் சக்தியின் இருப்பிடமான கல்யாணிக்குச் ஐந்நூறு தேரர்களுடன் பறந்து சென்றார். அங்கே இரத்தினங்கள் பதித்த மண்டபத்தின் கீழே பிக்குகளுடன் அமர்ந்தார். பின்னர், இரக்கமே உருவான பகவான், அங்கு உபதேசம் செய்த பின்பு எழுந்து அங்கிருந்து புறப்பட் டார் என்று மகாவம்சம் கூறுகிறது. இன்னும் ஒன்றையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இது புத்தரின் மூன்றாவது வருகையும் போதனையும் ஆகும்.

அவ்வாறாயின், புத்தரின் மூன்றாம் வருகையின் பொழுது, புத்தருடன் ஐந்நூறு தேரர்கள் ஏற்கனவே வருகை தந்து, கூடியிருந்த பெரும் கூட்டத்திற்கு சமய உரை நிகழ்த்தி, அனைவரையும் பௌத்த மதத்திற்கு மாற்றியபின், சுமார் இருநூற்று முப்பது வருடங்களின் பின்னர், இலங்கையில் புத்த மதத்தை போதித்து நிலை நாட்டிட, மகிந்த தேரரின் வருகையின் அவசியம் என்ன? ஒருவேளை தேரர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணமாக இருக்கலாம்! மகிந்த தேரர் ஒரு கற்பனையில் கண்டுபிடித்த நபர் என்பதற்கு இந்த நம்பமுடியாத நிகழ்வும் ஒரு காரணமாகும். மகாவம்சத்தின் அத்தியாயம் 1 புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை உள்ளடக்கியது. புத்தரின் காற்றில் பறந்து வரும் மூன்று பயணங்கள் வெறுமனே கற்பனையான நிகழ்வுகளாகத் தான் இருக்க வேண்டும். மேலும் இந்த அத்தியாயம் இலங்கை வரலாறுகளுடன் எந்த தொடர்பும் இல்லை. புத்தர், மனிதனாக இருந்ததால், 500 தேரர்களுடன் சேர்ந்து காற்றில் பறக்கும் திறன் இருந்திருக்க முடியுமா? 'பறவையை கண்டான்.. விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான்' இது தான் நான் அறிந்தது.

எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது லட்சக்கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டால், அவர்களுக்கு என்ன ஆனது? மீண்டும் அவர்களை மதமாற்றம் செய்ய மகிந்த தேரர் அனுப்பப்பட்டது ஏன் ? அல்லது புத்தர் சரியாக போதிக்கவில்லையா?

கேவத்தா (கேவாத்தா என்றும் உச்சரிக்கப்படுகிறது / Kevatta) புத்தரைப் பின்பற்றிய நாலந்தாவைச் சேர்ந்த ஒரு வீட்டுக்காரராக பௌத்த நூல்களில் கூறப்படுகிறது. இவர் புத்தரை அணுகி, மக்களில் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக அற்புதங்களைச் செய்ய தனது துறவிகளை ஊக்குவிக்குமாறு பரிந்துரைத்தார். இருப்பினும், புத்தர் இந்த யோசனையை நிராகரித்தார், அமானுஷ்ய சக்திகளின் அற்புதக் காட்சிகள் ஞானத்தின் உயர்ந்த வடிவம் அல்ல என்று விளக்கினார்.

அதற்கு பதிலாக, புத்தர் மிகப்பெரிய அதிசயம் "அறிவுரையின் அதிசயம்" என்று கற்பித்தார் - ஞானம் மற்றும் புரிதல் மூலம் மற்றவர்களை அறிவொளியை நோக்கி கற்பிப்பதற்கான திறன். அது என்றார்.

அதாவது,

புத்தர் பதிலளித்த போது, அங்கே மூன்று வகையான அமானுஷ்ய நிலைகள் இருப்பதாக கீழே உள்ளவற்றைக் கூறினார்:

1. பல மனிதர்களாகத் தோன்றுவது, கண்ணுக்குத் தெரியாமால் தன் உருவத்தை மறைப்பது, சுவர்களைக் கடந்து செல்வது, காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது போன்ற அமானுஷ்ய சக்தியின் அற்புதம். இவை அனைத்தும் சாதாரண மக்களால் செய்ய முடியாத உடல் ரீதியான செயல்கள்.

2. மற்றவர்களின் மனதைப் படிக்கும் அதீத சக்தி.

3. மனிதர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப, அவர்களின் நலனுக்காக, அவர்களுக்கு ஏற்ற தகுந்த முறைகளைப் பயன்படுத்தி வழிகாட்டும் அமானுஷ்ய சக்தி.

மக்களைக் கவர்வதற்காக முதல் இரண்டு அமானுஷ்ய சக்திகளை தங்கள் சொந்த நலனுக்காக வெளிப்படுத்தும் ஒரு துறவி, ஒரு ஷாமன் [ஒரு ஷாமன் என்பவர் அமானுஷ்ய சக்திகளை பாவித்து ஆன்மீக குணப்படுத்துபவர் மற்றும் அதை பயிற்சி செய்பவர் / A shaman is a spiritual healer and practitioner] அல்லது ஒரு மந்திரவாதியின் செயல்பாட்டிலிருந்து வேறுபட்டவர் அல்ல என்று அவர் கற்பித்தார். இவ்வாறான உலக அதிசயங்களைச் செய்யும் துறவி, அவமானம் மற்றும் அருவருப்புக்கு ஆளாவதாக புத்தர் கூறினார். ஏனென்றால், இத்தகைய செயல்கள் மதம் மாறுபவர்களையும் பின்பற்றுபவர்களையும் ஈர்க்கலாம் மற்றும் வெற்றி பெறலாம், ஆனால் அவை அவர்களின் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவாது. அதனால்த் தான், இதுபோன்ற அற்புதங்களின் ஆபத்தை கண்டு, நான் அவற்றை வெறுக்கிறேன், நிராகரிக்கிறேன், ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

இப்போது சொல்லுங்கள், புத்தர் மழை, இருள் மற்றும் பலவற்றால் அவர்களின் இதயங்களை பயமுறுத்தி, தீவின் பூர்வீக குடிமகனை விரட்டியடிப்பாரா? மேலும் அவர் பல சகோதர, தேரர்களுடன் வான்வழியாக இலங்கைக்குச் பறந்து செல்வாரா? நீங்களே முடிவெடுங்கள்.

Part: 63 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37

The Buddha, after five years of his enlightenment, perceived the potential war about to occur between two Naga kings in Lanka over a gem set throne. The Buddha, flew to Lanka, and terrorized the Nagas, and got the throne for himself. The Mahavamsa violates the principle of the Buddha who renounced the world. The Buddha, when he was 29 years of age, renounced his own throne and walked away leaving his young wife, and the just born infant son Rahula, the comfort of the Royal palace life etc. The Buddha went on foot to Rajagaha, the capital of King Bimbisara where Bimbisara offered his kingdom to the Buddha. The Buddha declined the offer. The Buddha therefore renounced throne twice and it sounds absurd that the Buddha accepted a throne again, five years after attaining the enlightenment, Please check, 1- 58, 59 & 60 [58 Hovering there in mid-air above the battlefield the Master, who drives away (spiritual) darkness, called forth dread darkness over the nagas. Then comforting those who were distressed 59 by terror he once again spread light abroad. When they saw the Blessed One they joyfully did reverence to the Master's feet. Then preached the Vanquisher to them the 60 doctrine that begets concord, and both [nagas] gladly gave up the throne to the Sage]. Mahanama, the author of the Mahavamsa, is really tarnishing the halo image of the Buddha hollow. This event is described as; “Here ends the Visit to Nagadipa”. The same event is described in the Dipavamsa as; here ends the conquering of the Nagas. Mahanama is camouflaging the criminal actions with diplomatic verses.

The Naga king Maniakkhika invited the Buddha to visit his kingdom at Kalyani, and the Buddha visited Kalyani, the seat of Naga’s power, eight years after his enlightenment. The Buddha again flew to Lanka along with five hundred brotherhoods, Theras. If so, What is the need for the visit by Mahinda Thera after about two hundred and thirty years as five hundred Theras have already visited, along with the Buddha and deliver religious address to an assembled large group of people to convert all of them to buddhism? Perhaps it was a pleasure trips for the Theras! This is also an indication that Mahinda Thera, is an invented personality. The Chapter 1 of the Mahavamsa covers the three visits of the Buddha to Lanka. The Buddha’s three flying visits are simply imagined events, and have no historical relevance to Ceylon. As the Buddha, being a human, couldn’t have had the ability to fly at all along with 500 Theras?

What I still don't understand is, if millions of souls were converted to Buddhism when the Buddha visit to Srilanka, what happened to them? Why was Mahinda sent to convert them again ? or did the Buddha not teach correctly?

When Buddha replied, "Kevatta, He said that there were three kinds of supernormal levels:

1. The marvel of supernormal power to appear as many persons, to pass through walls, to fly through the air, walk on water. All these are physical actions the ordinary people cannot perform.

2. The supernormal power to read other people's minds.

3. The supernormal power to be able to guide people according to their mental development, for their own good, using suitable methods that fit these people.

He taught that a monk who displays the first two supernormal powers for their own sake in order to impress people, is no different from the performance of a shaman or a magician. The Buddha said that a monk who practices such worldly miracles is a source of shame, humiliation and disgust. This is because such actions may impress and win converts and followers, but they do not help them put an end to their suffering. He further said That is why, seeing the danger of such miracles, I dislike, reject and despise them. Now tell me will Buddha struck terror to their hearts by rain, darkness and so forth & chased away the original inhabitant of the island? and further will he fly through air with many number of brotherhoods, Theras to Lanka?

நன்றி
Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

பகுதி / Part: 64 தொடரும் / Will follow

துளி/DROP: 1938 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 63]

https://www.facebook.com/groups/978753388866632/posts/32800741409574416/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.