Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம்!

adminJune 21, 2025

0-1-3.jpg?fit=1170%2C1170&ssl=1

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு”போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0-2-3.jpg?resize=800%2C800&ssl=10-3-2.jpg?resize=640%2C800&ssl=1

https://globaltamilnews.net/2025/217105/

  • கருத்துக்கள உறவுகள்

0-1-1.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம்
திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும்,
செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன்
போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2025/1436493

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு

22 Jun, 2025 | 10:30 AM

image

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி  அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால்,  திங்கட்கிழமை (23) முதல் புதன்கிழமை (25) வரையிலான மூன்று நாட்கள் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’  போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிவில் சமூக அமைப்புகள் இணைந்து அணையா விளக்கு என்ற போராட்டத்தை மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

நாங்கள் ஒரு பங்காளராக பங்கேற்று முற்றுமுழுதாக வடக்கு கிழக்கில் மிகப்பெரிய அழைப்பை முன்னெடுக்கின்றோம்.

எமது உறவுகளுக்காக உயிரிழந்த உறவுகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தமிழ் தேசமாக திரண்டு போராட்டத்தில் ஒன்றுசேர வேண்டும்.

இலங்கைக்கு தற்போது வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது. 

மிக முக்கியமாக செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்க வேண்டும். 

தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேசத்தின் முற்று முழுதாக  தலையிட்டு அகழ்வாய்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை திசை திருப்பவே மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. 

வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எங்கள் பிரச்சினைகளையும் மனித புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படும் விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/218106

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணையா விளக்கு போராட்டம்- அணிதிரளுமாறு எஸ் ஸ்ரீதரன் அழைப்பு!

Sritharn-.webp

செம்மணி பகுதியில் (23) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் அணிதிரளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் 23ஆம்
திகதி முதல் 25ஆம் திகதி வரை செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில் முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும்,செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும் நாடக அளிக்கையும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன்
போராட்டத்தின் இறுதி நாளன்று ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்டர்க் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://akkinikkunchu.com/?p=329904

  • கருத்துக்கள உறவுகள்

நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் : செம்மணியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்

Published By: DIGITAL DESK 2

23 JUN, 2025 | 04:58 PM

image

தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை  உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும்  போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.

செம்மணியில்  திங்கட்கிழமை (23) ஆரம்பித்த அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

உணர்வுபூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டுள்ளோம். தமிழ்மக்களின் வாழ்வில் நிண்டகால ஏற்படுத்தப்பட்ட பல அழிவுகளுக்கு நிநீகோரி இப்போராட்டம் நடாத்தப்படுகிறது.

இது மக்களின் மனங்களில்  அழியாத தாகமாக இருக்கிறது. இதுவரை காலமும்  நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதனை உலக மக்கள் அனைவரும் சேர்ந்து செயற்படுத்த முன்வர வேண்டும்.

உலக நாடுகள் எல்லாம் எங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளை அறிந்திருந்தாலும் அதைப்பற்றி எந்தவிதமான நீதியும் கிடைக்காமல் மக்கள் நிண்டகாலமாக அணையாத தாகத்தோடு  அலைந்து கொட்டிருக்கிறார்கள்.

ஆகவே இவற்றுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தோடு இந்த அணையா தீபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 

குறிப்பாக நாங்கள் நிக்கின்ற செம்மணி பிரதேசத்திலே மனித புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  பல அப்பாவி மக்களது  மனித எலும்புக்கூடுகள், எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுவரும் இந்த சூழலில் இந்த நிகழ்வு  மிகவும் முக்கியமானதாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுகின்ற இந்த வேளையில் யுத்தத்தின் இறுதி நாட்களில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது  என்று தேடுகின்ற, கேள்விகேட்கின்ற இந்த நாட்களில் மனித புதை குழிகள் பயங்கரமான ஒரு பதிவுகளை, கதைகளை எங்களுக்கு செல்லிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இவற்றை நாங்கள் உதாசினம் செய்து கொண்டிருக்காது  இந்த அரசாங்கமும் உலக நாடுகளும் இந்த சந்தர்பத்தில் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியை வழங்க வேண்டும்.

இனிமேலும்  தாமதிக்க கூடாது,  நீதியை பெறுவதற்கு தடையாக இருக்கின்ற எல்லாவிதமான தடைகளையும் நீக்கி நியாயமான முறையில் நீதிகிடைக்க வேண்டி இப்போராடம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் உணர்வோடு பங்குபற்றி இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/218238

  • கருத்துக்கள உறவுகள்

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம் படச்செய்வோம் - அணையா விளக்கினை பலப்படுத்துவோம் - மக்கள் செயல் அமைப்பும் சிவில் சமூகத்தினரும் வேண்டுகோள்

Published By: RAJEEBAN

23 JUN, 2025 | 02:54 PM

image

இருண்டு கிடக்கும் செம்மணி மீது வெளிச்சம்படச்செய்வதற்காக முன்னெடுக்கப்படும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு  அனைத்து தமிழ் மக்களினதும் ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணையா விளக்கினை பலப்படுத்துவோம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மெய்நிகர் கலந்துரையாடலின்போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.

தமிழ்  இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை  தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும் என தமிழ் சிவில் சமூக அமையத்தின் பொன்சிங்கம் தெரிவித்தார் 

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

thumb_chemmani-mass-grave.png

அண்மையில் செம்மணியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது எங்களுக்கு புதிய விடயமல்ல, எத்தனை படுகொலைகளை எங்கள் மக்கள் சந்தித்துள்ளனர்.

சமீபத்தைய அறிக்கையொன்றின் படி ஜேவிபி கிளர்ச்சி காலத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய மனித புதைகுழிகள் உட்பட  இலங்கையில்  59 மனித புதைகுழிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குகிழக்கில் 13 பாரிய மனித புதைகுழிகள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு இனம் தன்னுடைய விடுதலையை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவேளை  தமிழ் மக்களிற்கு கிடைத்த பரிசுதான் காணாமலாக்கப்படுதலும், மனித புதைகுழிகளும்.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தை மனித புதைகுழிகளில் இருந்து பிரிக்க முடியாது.

அதன் ஒரு வெளிப்பாடே  மனிதப்புதைகுழிகள்.

செம்மணி மனித புதைகுழிகளை பொறுத்தவரை  மிகவும் ஆச்சரியமளிக்கின்ற விடயம் என்னவென்றால் உடைகள் அகற்றப்பட்ட பின்னர் பிண்டங்களாக  கொண்டுவந்து புதைக்கப்பட்டுள்ளனர்.

எந்த அடையாளத்தையும் காணமுடியவில்லை – எந்த அடையாளத்தையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. திட்டமிட்ட இனப்படுகொலைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

600 பேரை புதைத்தோம் என  கிருஷாந்தி படுகொலையாளி தெரிவித்திருந்தார்.

12000 பேரை ஒரு சமூகம் தேடி அலைகின்றது.

7 வருடங்களிற்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்ற சமூகம் இந்த புதைகுழிகள் குறித்து கேள்விப்பட்டதும், அனைவரும் அங்கு சென்று தேடியிருக்கவேண்டும் - அதற்கான தேவை உள்ளது.

ஆனால் நாங்கள் எங்கள் இனம் அதனை செய்யவில்லை.

மரணங்களை மதித்து விடைகாண்பதற்கு இந்த விடயம் மிக முக்கியமானது.

இதே காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் செப்டம்பரில் காலாவதியாவதன் காரணமாக  அடுத்த கட்டத்தை நோக்கி செல்வதற்குஅதனை பற்றி அவர் அறிக்கையிடவுள்ளார்.

அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதை அறிந்த கொழும்பை தளமாக கொண்ட சிவில் சமூகத்தினர் அவரது வருகையை பிற்போடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

வடக்குகிழக்கை சேர்ந்த சிவில் சமூகத்தினரும் தனிநபர்களும் இதேகோரிக்கையை விடுத்தனர்.

இலங்கை சில விடயங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அவர் இங்கு வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்துள்ள இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அதிகாரிகள் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்தால் தான் ஆணையாளர் இலங்கை வரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.

மனித உரிமை ஆணையாளருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டோம், வருவதை எதிர்க்கவில்லை அவர் வந்தால் செம்மணிக்கு செல்லவேண்டும், இலங்கை அதிகாரிகளிடம் இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

509420867_122144970020637056_54382225605

சுஜீவன் ( மக்கள் செயல்)

கிருஷாந்தி குமாரசுவாமி குற்றவாளி செம்மணியில்  400 உடல்களை புதைத்தாக தெரிவித்தார்.

பல வருடங்களாக இது தொடர்பில் நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம்.

எமது இளைஞர்கள் மத்தியிலும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

நாங்கள் இனப்படுகொலையை  எதிர்கொண்ட இனம், எதிர்கால சந்ததிக்கு இதனை கடத்துவதன் ஊடாக நினைவுகளை கடத்த முயல்கின்றோம் நினைவுகளை பாதுகாப்பது இனப்படுகொலையை எதிர்கொண்ட இனத்தினை பொறுத்தவரை மிகவும் அவசியமான விடயம்.

பல படுகொலைகளை தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது.

செம்மணி இதற்கான ஒரு உதாரணம். இந்த போராட்டத்தின் ஊடாக அனைத்து பிரஜைகளையும், இளையோரையும் தனிநபர்களையும் உள்ளீர்க்க முயல்கின்றோம்.

இதுவரை காலமும் குறிப்பிட்ட சிலரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளனர், பலரை உள்ளீர்த்தல் என்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.

மக்களை நோக்கி எங்கள் கருத்துக்களை கொண்டு செல்ல முயல்கின்றோம். மக்கள் திரட்சியை ஏற்படுத்த முயல்கின்றோம். 

சமூக ஊடகங்கள் ஊடாகவும் எங்கள் போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம், இணையவழி மூலம் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை முன்னெடுக்கின்றோம்.

அணையா விளக்கு போராட்டத்தின் போது கவிதைகள், கட்டுரைகள், சித்திரங்கள்,  ஆவணப்படங்கள் என பல வழிமுறைகள் ஊடாக நினைவுகளை நடந்தவற்றை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டுள்ளோம்.

உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.

நாடக ஆற்றுகைக்கும் திட்டமிட்டுள்ளோம். அரசியல் சிவில்சமூக பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் நாங்கள் இதனை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.

மூன்று நாட்களும் உங்கள் ஒத்துழைப்பு அவசியம். ஒன்றிணைதல் கட்டாய தேவை.

மறுக்கப்பட்ட நீதியை முன்னெடுக்கும் களமாக இதனை பயன்படுத்துவோம்,

3 நாட்களும் தொடர்ச்சியாக மக்கள் போராட்டமாக இது இடம்பெறும்.

ஜெரா( சிவில் சமூக செயற்பாட்டாளர்)

511817029_1251857396730968_8538280088456

நாங்கள் பொதுவெளியில் எல்லா தரப்பினதும் ஆதரவை கோரினோம். அந்த வழியில் சகல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம் அதற்கும் எங்களிற்கும் நேரடி தொடர்பில்லை.

ஆனால் அதனை வரவேற்கின்றோம், இங்கு நாங்கள் செய்கின்ற மாதிரி அங்கும் செய்வதை நாங்கள் ஆத்மார்த்தமாக வரவேற்கின்றோம்,

மூன்று நாட்கள் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்,

கடந்தகாலத்தில் எங்கள் பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவேளை எல்லோரும் ஒரு குடையின் கீழ் செயற்பட்டோம், அதன் அடிப்படையிலேயே இந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முயற்சி உருவானது.

அணையா விளக்கு மூலம் மனித புதைகுழி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதும் எங்களின் நோக்கம்.

அணையாள விளக்கு  இருண்டு கிடக்கும் செம்மணிக்கு வெளிச்சம் போடுவதற்கான ஒரு முயற்சியாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிந்து பாத்திக்கு வந்தால்  அவரை சந்தித்து ஒரு பட்டயத்தை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மருத்துவர் உதயசீலன்

வாகனங்களில் விலங்குகள் அடிபட்டால் துடித்துப்போகின்ற சமூகத்தவர்கள் நாங்கள் ஆனால் இவர்கள் எங்கள் உறவுகள் ஆனால் யார் என்று தெரியவில்லை.

எதற்காக எந்தவித அடையாளங்களும் இல்லாமல் மறைத்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விடயத்தை மக்கள் மயப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, எல்லோரும் வரவேண்டும், நீதி கேட்கும் மக்கள் என்ற அடிப்படையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்.

ஒரு நாள் கதவடைப்பு குறித்து சிலர் கருத்து தெரிவித்தார்கள், ஆனால் தற்போதுள்ள களநிலைமையில்  அது சாத்தியமில்லை, அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

இதன் காரணமாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தை சட்டத்திற்கு உட்பட்ட விதத்தில் முன்னெடுக்க தீர்மானித்தோம்.

பலதரப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்வார்கள், அவர்களிற்கு ஆபத்துள்ளது. ஆனால் அதனையும் மீறி இந்த செய்தியை உரத்துசொல்லவேண்டும்.

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள்  ஆதரவை எவ்வழியிலாவது வெளியிடுங்கள். கருப்பு பட்டியை அணியுங்கள், விளக்கை ஏற்றுங்கள்  மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற்றுவோம்.

வடக்குகிழக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படுகொலைகள் இடம்பெற்றன, பலரை கொலை செய்து புதைத்துள்ளனர்.

உள்ளுராட்சி தேர்தலில் அனேக கட்சிகள்  தமிழ்தேசியத்தை சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தன  அவர்கள் அந்த பகுதியில் காணாமல்போனவர்கள் குறித்த தகவல்களை திரட்டவேண்டும், நினைவுச்சின்னங்களை எழுப்பவேண்டும்.

வரலாற்றினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம்.

https://www.virakesari.lk/article/218217

  • கருத்துக்கள உறவுகள்

unnamed-2-scaled.jpg?resize=750%2C375&ss

இன்று இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்!

தமிழ் மக்கள் பலரது உடல்களைத் தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்துச் செல்கின்றன.

எனினும் இதற்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே குறித்த விடயத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் தலைமையில், முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

நேற்று காலை 10.10 மணியளவில் ஆரம்பிக்கப்பட குறித்த போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுகிறது.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை தேடி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, நாளை யாழ் வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு தமிழ் மக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகனாதன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1436821

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக  தீப்பந்தம் ஏந்திய போராட்டம்

Published By: VISHNU

24 JUN, 2025 | 02:48 AM

image

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் திங்கட்கிழமை (23) மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனித புதைகுழிகள், இனப்படுபவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்று தர வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டது.

f30c6f6c-445c-4ea4-a495-fa6bd30dee19.jpe

b2101d97-8889-4541-b51b-4f7f568e224c.jpe

adb21687-9fda-437c-8115-5082dbdf6790.jpe

adb4470d-4922-4674-a562-2ba8d25d7271.jpe

2661763f-bbf2-482c-8c25-01dc3dd44acf.jpe

507d058a-9bec-4313-b7e6-caaf401d6d58.jpe

23dc8428-5702-4f82-bb20-9c4504c3b4f8.jpe

3b27a012-a2ed-4366-9813-eb1a6c96dc21.jpe

https://www.virakesari.lk/article/218274

  • கருத்துக்கள உறவுகள்

“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் - தமிழ் சிவில் சமூக அமையம்  

24 JUN, 2025 | 09:29 PM

image

(எம்.நியூட்டன்)

“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவுட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. 

செம்மணியில் நடைபெற்றுவரும் இந்த போராட்டம் தெடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

செம்மணியில் அண்மைக்காலத்தில் புதிதாக அகழப்பட்ட மனிதப் புதைகுழிகளை முறையாக அகழ்வு செய்ய வேண்டும் எனக் கோரி, நேற்றிலிருந்து மூன்று நாட்கள் “அணையா விளக்கு” என்ற பெயரில் நடைபெறுகின்ற போராட்டத்துக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்றது.

பதினாறு வருடங்களாக தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தில் செம்மணியில் புதைகுழிகள் அண்மையில் மீளக் கண்டறியப்பட்டதும் அதன் அகழ்வின்போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஒரு திருப்புமுனையாக அமைகின்றது.

பொறுப்புக்கூறலுக்கான தேவையையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையைப் புரிந்தவர்கள் நீதியின் முன்னால் கொண்டு நிறுத்தப்படவேண்டிய தேவையையும், பொறுப்புக்கூறல் தொடர்பிலான தமிழ் மக்களுடைய அவாவினையும் குறித்த மனிதப் புதைகுழிகள் மீள ஞாபகமூட்டுகின்றன.

மனிதப் புதைகுழிகளை மனித கௌரவத்தோடும் (human dignity) இறந்தவர்களுக்கு உரிய மரியாதையோடும் (respect for the dead) அணுகுவது என்பது அவசியமானது என சர்வதேச சட்டம் கூறுவதோடு, அவ்வாறான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுமிடத்து அவற்றை முறையாக அகழ்வது தொடர்பிலும், அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எச்சங்களை முறையான விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பிலும், முறையான விசாரணையின் தொடர்ச்சியாக, அந்த மனிதப் புதைகுழிகளில் இடப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்களை விசாரித்து பொறுப்புக்கூறலை சாத்தியப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச சட்டத்தில் வழிகாட்டல் குறிப்புகள் தாராளமாக உண்டு. அவற்றைப் பின்பற்றி குறித்த அகழ்வு நடைபெற வேண்டும் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது.

மேலும், செம்மணியில் மாத்திரம் அல்லாமல் மன்னாரிலும் கொக்கட்டிச்சோலையிலும், இன்னும் பல்வேறு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய அப்புதைகுழிகளும் முறையாக விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதும், உண்மைகள் வெளிக்கொணரப்படுவதும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூகம் வலியுறுத்துகிறது.

தமிழ் மக்கள் அரசினுடைய அங்கங்கள் தொடர்பில் நம்பிக்கையற்று இருப்பது புதிய விடயமல்ல. எனவே இவ்வாறான மனிதப் புதைகுழி அகழ்வின் போது சர்வதேச பங்குபற்றலும், சர்வதேச கண்காணிப்பும், சர்வதேச உள்ளீடும் இருப்பது அவசியம் என தமிழ் சிவில் சமூக அமையம் கருதுகிறது. 

மனிதப் புதைகுழி அகழ்வு, அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தல், பின்னர் அது தொடர்பிலான குற்ற முறை, விசாரணை ஆகிய மூன்று கட்டங்களின் போதும் சர்வதேச கண்காணிப்பும் பங்களிப்பும் உள்ளீடும் அவசியம் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகின்றது.

மேலும், இவ்விடத்தில் தமிழ் மக்களுடைய பொறுப்புக்கூறல் தொடர்பான தேவையானது ஒரு சர்வதேச விசாரணை மூலமாகவே பூர்த்தியடையும் என்பதனை தமிழ் சிவில் சமூக அமையம் இவ்விடத்தில் மீள ஞாபகப்படுத்துவதோடு, 2021ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு முன்னர், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக தலைவர்களால் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மீள ஞாபகப்படுத்தி, அதாவது ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இருந்து முறையாக இலங்கை பொறுப்புக்கூறல் விடயமானது ஐ.நா பொதுச்சபைக்கு பலப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பொறுப்புக் கொடுக்கப்பட்டு, ஐ.நா பாதுகாப்புச் சபை இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை இவ்விடத்தில் நாம் ஞாபகப்படுத்துகிறோம். 

குறித்த விடயங்களை இந்த போராட்டம் நடைபெறுகின்ற மூன்று நாட்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கவனத்தில் கொண்டு இது தொடர்பிலான தனது பரிந்துரைகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்திலும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்துகிறது.

இறந்தவர்களுடைய நினைவுக்கும் இறந்தவர்கள் மீது எங்களுக்கு உள்ள மரியாதையையும், அந்த இறப்புக்கான காரணங்களை தேடி அறிவதற்கான எமது தொடர் பொறுப்புக்கூறலுக்கான போராட்டத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் பெருமளவில் நாம் இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென தமிழ் சமூக அமையம் தமிழ் மக்களை உரிமையோடு கேட்டு நிற்கிறது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/218336

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ஏராளன் said:

மட்டக்களப்பில் செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக  தீப்பந்தம் ஏந்திய போராட்டம்

இதே போல் புலம்பெயர் நாடுகளிலும் ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அணையா விளக்கு" : எழுச்சி பேரணிக்கு பேரெழுச்சியாக கலந்து கொள்ளுங்கள் - ஏற்பாட்டாளர்கள்

25 JUN, 2025 | 09:02 AM

image

அணையா விளக்கு போராட்டமானது இன்றைய தினம் புதன்கிழமை (25) மனித சங்கிலி முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள "அணையா விளக்கு"  போராட்டத்தின் மூன்றாம் நாளான இன்றைய தினம் புதன்கிழமை காலை 10.10 மணியளவில் சுடரேற்றல் உடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை தொடர்ந்து மலரஞ்சலி இடம்பெறும்.  தொடர்ந்து, மதியம் 12 மணியளவில் யாழ். வளைவுக்கு அருகில் உள்ள போராட்ட இடத்தில் பேரணி ஆரம்பிக்கப்பட்டு ,  செம்மணி வீதி வழியாக ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்திற்குசென்று மகஜர் கையளிக்கப்படவுள்ளது. 

அங்கிருந்து தியாகி திலீபனின் நினைவிடத்திற்கு சென்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். அங்கிருந்து தமிழாராய்ச்சி படுகொலை நினைவிடம் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு சதுக்கம் ஆகியவற்றுக்கும் சென்று, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்படும். இறுதியாக அணையா விளக்கு காற்றுடனும் நீருடனும் கலக்கவிடப்படும். 

குறித்த பேரணி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி , மக்களின் இயல்வு வாழ்க்கையை குழப்பாத வகையில் மனித சங்கிலி முறையில் இடம்பெறவுள்ளமையால் , அனைத்து தரப்பினரும் ஒருமித்த ஆதரவை வழங்கி பேரணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். 

https://www.virakesari.lk/article/218383

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2025 at 07:17, கிருபன் said:

அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

large.IMG_8529.jpeg.f3c7d98d44c1f8e445a5

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் ஏற்றப்பட்ட அணையா தீபம் தொண்டமனாற்று கடலில்

26 JUN, 2025 | 05:12 PM

image

செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக அணையா தீபமாக எரிந்து கொண்டிருந்த தீபம் நேற்றைய தினம் புதன்கிழமை (26)  தொண்டமனாற்று கடலில் விடப்பட்டது. 

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, யாழ் , வளைவுக்கு அருகில் அணையா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தீபம் அணையாது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மூன்றாம் நாளான நேற்றைய தினம் மாலையுடன் போராட்டம் நிறைவு பெற்றதனை அடுத்து, அணையா தீபம் தொண்டமனாற்று பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டு, கடல் நீரில் விடப்பட்டது 

மூன்றாம் நாள் போராட்டமான நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் வருகை தந்து, அணையா தீபம் முன் நின்று வணங்கி மலரஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/218554

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை பத்தாம் குறிச்சியில் அணையா விளக்கு தீப்பந்த போராட்டம்

Published By: VISHNU

29 JUN, 2025 | 09:51 PM

image

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதியை வலியுறுத்தி திருகோணமலை பட்டணத்தெரு மக்களால் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

WhatsApp_Image_2025-06-29_at_21.07.22_78

குறித்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள்  கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp_Image_2025-06-29_at_21.07.21_e6

இதன்போது சுடர்கள் ஏற்றப்பட்டு பின்பு தீபந்தங்களை கைகளில் ஏந்தி  ஊர்சுற்றி  கடற்கரைக்கு கொண்டு சென்று கடலில் விடப்பட்டன.

WhatsApp_Image_2025-06-29_at_21.07.22_0a

https://www.virakesari.lk/article/218796

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.