Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய வெப் தொடரை இயக்கியுள்ளார். புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் புத்தத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

Published:20 Jun 2025 9 PMUpdated:20 Jun 2025 9 PM

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள The Hunt - The Rajiv Gandhi Assassination Case (வேட்டை - ராஜீவ்காந்தி கொலை வழக்கு) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொடரை குக்குனூர் மூவீஸுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பலகோணங்களில் கதைகள் இருக்கும் சூழலில், புலனாய்வு பத்திரிகையாளரான அனிருத்யா மித்ராவின் Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins (தொண்ணூறு நாள்கள்: ராஜிவ் காந்தியின் கொலையாளிகளைத் தேடிய உண்மைக் கதை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடரை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் தொடரில், அமித் சியால், சாஹில் வைத், பகவதி பெருமாள், டேனிஷ் இக்பால், கிரிஷ் சர்மா, வித்யுத் கார்கி, ஷபீக் முஸ்தபா, அஞ்சனா பாலாஜி, பி. சாய் தினேஷ், ஸ்ருதி ஜயன், கௌரி மேனன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அமித் சியால், "இது வெறும் க்ரைம் விசாரணை ட்ராமா இல்லை, எப்படிக் கண்ணுக்குப் புலப்படாத கைகள் வரலாற்றை வடிவமைக்கின்றன என்பதைப் பற்றியது.

இந்தக் கதாபாத்திரம் அதிகாரத்தையும் துக்கத்தையும் நீதியின் இருண்ட மூலைமுடுக்குகளையும் ஆராய்வது எனக்குச் சவாலானதாக இருந்தது.

உண்மை மற்றும் எதிர்த்து நிற்கும் தன்மையில் வேரூன்றியிருக்கும் ஒரு பாத்திரத்தில் நடித்ததற்குப் பெருமைகொள்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

தேசிய விருது வென்ற இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இவருடன் ரோஹித் பனவாலிகர் மற்றும் ஸ்ரீராம் ராஜன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வருகின்ற ஜூலை 4ம் தேதி இந்தத் தொடர் வெளியாகவிருக்கிறது.

Also Read

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு? - Vikatan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

he Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ்.

புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால்.

லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார்.

இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு!

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது.

நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்!

ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி.

இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார்.

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர்.

நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

Also Read

ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன.

இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா!

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Reviewஇந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு.

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்!

ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்!

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review

ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம்.

அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள்.

யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. "உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது" என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.!

இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மிக முக்கியமான சம்பவத்தின் சில அறிந்திடாத பக்கங்களை விளக்கும் இந்த சீரிஸ் நிச்சயமாகக் குறிப்பிடத்தகுந்த ஓ.டி.டி படைப்புகளில் ஒன்றாகத் திகழும்!

The Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்! | Rajiv Gandhi | LTTE | Nalini | Dhanu - Vikatan

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

518361472_754869487213555_22039020129343

ஹன்ட் ( The Hunt )என்னும் பெயரில் ராஜீவ் காந்தி கொலை விசாரணை பற்றிய வெப் தொடர் ஒன்று வந்துள்ளது.

நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அது பற்றி எழுத முடியவில்லை.

ஆனால் பொதுவாக இவ்வாறான நடந்த சம்பவங்களை படமாக்குபவர்கள் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து படமாக்குவதில்லை.

பொலிஸ் என்ன சொல்கிறதோ அதையே ஊடகங்கள் வெளியிடும். ஊடகங்கள் என்ன வெளியிடுகின்றனவோ அதையே இவர்கள் படமாக்குவார்கள்.

உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரணம் பற்றி ஊடகங்கள் உண்மையை கண்டறிந்து எழுதவில்லை.

கமிசனர் தேவாரம் தலைமையில் 300 பொலிசார் பாதுகாப்பில் வேதாரணியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார் என்று தேவாரம் கூறியதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன.

நீதிமன்றம்கூட அது குறித்து கேள்வி எழுப்பாமல் அது தற்கொலை மரணம் என்று ஏற்றுக்கொண்டது.

ஆனால் உண்மை என்னவெனில் விசாரணையின்போது கோடியாக்கரை சண்முகம் வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் பெயரைக் கூறிவிட்டார். ராஜேந்திரன் மூப்பனாரைக் கைகாட்டுவார்.

அதனால் ராஜேந்திரனையும் மூப்பனாரையும் காப்பாற்றுவதற்காக கோடியாக்கரை சண்முகம் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார் என்றே அன்று பேசப்பட்டது.

தோழர் பாலன்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவின் மரணம் தொடர்பான இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிர்த்து இந்தியாவிலிருந்து எவருமே படம் ஒன்றினை எடுக்கமுடியும் என்று யாராவது நம்புகிறீர்களா? இன்றுவரை இந்தியாவும் அதன் ஊடகங்களும் கூறிவரும் ரஜீவின் மரணம் தொடர்பான கதைகளுக்கும் இப்படத்திற்கும் இடையே என்ன வேறுபாடு இருக்கப்போகிறது? அல்லது இது எவ்விதத்தில் வேறுபடப் போகின்றது? இந்திய அரசின் தணிக்கைக் குழுவினைத் தாண்டி ஏதாவது உண்மைகளோ, ரஜீவின் மரணத்திற்கான உண்மையான காரணமோ, அல்லது ரஜீவ் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட படுகொலைகளோ இப்படத்தில் காட்டப்படுவதற்குச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்றால், இந்திய அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினைத் தழுவி எடுக்கப்படும் இப்படத்தினை நாம் கொண்டாடி மகிழவேண்டிய தேவை என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.