Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை

காணாமல் போனவர்களும் செம்மணியும்

Jun 26, 2025 - 12:57

 0  355

செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை

"அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா "

சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா

சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன்.

அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான்.

சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான்.

பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான்.

புதைக்கப்பட்ட இடம் செம்மணி!

இதை சொன்னது வேறு யாருமல்ல 

சோமரத்ன ! 

சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி .

1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுகிறது.

அந்தக் காலத்தில் குறுகிய காலப்பகுதியில் யாழ்பாணத்தில் அண்ணளவாக 600 பேர் காணாமல் போகிறார்கள்.

அப்போது அரியாலையில் இருந்த இராணுவ முகாமில் கடமையில் இருந்தவர்தான் சோமரத்ன.

செம்மணியில் உள்ள இராணுவ காவலரணில் சோமரத்ன தலைமையில் இருந்த குழு கிருசாந்தியை ரேப் பண்ணி கொலை செய்தது உறுதியான போது சோமரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் போது சோமரத்ன , தான் கிருசாந்தியை கொலை செய்யவில்லை , மேலதிகாரிகள் கொலை செய்த பின் உடலை புதைத்தது மட்டுமே நான் என்கிறார் சோமரத்ன.

அத்தோடு மட்டும் நிறுத்தவில்லை சோமரத்ன !

என்னால் மேலதிகாரிகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொலை செய்து புதைத்த இடத்தை செம்மணியில் அடையாளம் காட்ட முடியும் என்று நீதிமன்றில் நீதிபதிகள் முன்பே சொல்கிறார்.

1997 - 1998 காலம். சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலம்.

சோமரத்ன இப்படி ஒரு பெரிய குண்டை நீதிமன்றின் முன் தூக்கி போட்டது ஜுலை 1998 ஆனாலும் அது பெரிய அதிர்வலைகளை நீதிமன்றில் ஏற்படுத்தவில்லை.

மாறாக அப்போது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை உருவாக்கி இருந்த கிருசாந்தி கொலைவழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்குவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள்.

சோமரத்ன சொன்ன 600 பேர் புதைக்கப்பட்ட செம்மணி அமைதியாக உறங்கிய படி இருந்தது.

சோமரத்னவிடம் வாக்குமூலம் பெறவேண்டும் செம்மணியில் அகழ்வு நடக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பலமான அழுத்தம்.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஒரு வருடகாலம் ஓடியது.

அந்தக்காலம் பகுதியில் விசாரணைக்காக மூன்று நீதிபதிகள் வெவ்வேறு காலங்களில் நியமிக்கப்பட்டார்கள்.

மூன்று நீதிபதிகளும் அச்சுறுத்தல் என்று அந்த விசாரணையை மேற்கொள்வதில் இருந்து விலகி விட்டார்கள்.

கடைசியாக மன்னாரில் வேலை செய்த ஒரு நீதிபதி வழக்கை பொறுப்பெடுத்தார் 

யாழ்ப்பாண நீதிமன்றம் கூடியது.

சோமரத்ன கொழும்பு சிறையில் இருந்து யாழ்பாணம் அழைத்து வரப்பட்டார்.

கொழும்பில் இருந்து 40 ஊடகவியலாளர்களும் விசேட விமானம் மூலம் யாழை அடைந்தனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்

ஜுன் மாதம் 1999

சோமரத்ன நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகிறார் .

அங்கே சோமரத்ன ஒரு மணிநேர வாக்குமூலத்தை நீதிபதி முன் சொல்கிறார்.

சோமரத்ன சொன்ன வாக்குமூலம் முழுவதுமாக கீழே, 

" நான் அரியாலையில் உள்ள முகாமில் வேலை செய்துகொண்டு இருந்தேன். அப்போது எனது கடமை ஊரில் உள்ள ஆட்களின் விபரத்தையும் அட்ரசையும பதிவு செய்வதும் , முகாமுக்கு கொண்டு வரப்படும் தமிழர்களின் விபரங்களை பதிவு செய்வதுமாகும்.

ஒருநாள் கப்டன் லலித் ஹேவாவும், அதிகாரி விஜயவர்த்தனவும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் லிஸ்டை தந்து அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க உதவி கேட்டனர். 

எனக்குப் பழக்கமான இடம் என்பதால் வீடுகளை காட்டினேன். அங்கே ஒரு படையணி சென்று பல இளைஞர்களை பிடித்து வந்தது.

அந்த இளைஞர்கள் ஒரு முகமூடி போட்ட ஆட்காட்டி முன் நிறுத்தப்பட்டு புலிகளா என்று கேட்கப்பட்டனர். 

ஆட்காட்டி புலி என்று சொன்ன இளைஞர்கள் கிட்டத்தட்ட 50 பேரை மேஜர் வீரக்கொடியும், குணசேகரவும் வேறாக முகாமுக்கு அழைத்துப் போனார்கள்.

சிலரை பாடசாலை ஒன்றில் அடைத்து வைத்தார்கள் .

இதற்கான கட்டளையை கொடுத்தது இராணுவ அதிகாரிகளான லலித் ஹேவா , விஜேவர்த்தன மற்றும் துடுகல.

ஒரு நாள் செல்வரத்னம் என்ற கல்வித்திணைக்கள அதிகாரியை காணவில்லை என அவருடைய மனைவி தேடி வந்தாள். அப்போது செல்வரத்னம் எங்கே எனக்குத் தெரியாது.

பிறகு சித்ரவதை செய்யும் இடத்துக்கு சென்றபோது சித்திரவதைக்கு உள்ளாகிக்கொண்டிருந்த 25 பேரில் ஒருவராக செல்வரத்னம் இருந்தார். செல்வரத்னத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தனர்.

செல்வரத்னம் தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்னை விடுங்கள் என்று கெஞ்சினார். அவரை விடச் சொல்லி லலித் ஹேவாவிடம் சொன்னேன். ஆனால் அடுத்தநாள் செல்வரத்னம் உட்பட 10 பேரின் பிணத்தைக் தான் கண்டேன்.

அடுத்த நாள் உதயகுமார் என்ற நபரை பிடித்து வந்தனர்.

அவரது குடும்பம் அவரைத் தேடிவந்து கெஞ்சியது. அவரை விடச் சொல்லி மேலதிகாரி விஜேவர்த்தனவிடம் சொன்னேன். ஆனால் உதயகுமார் அன்றிரவு வேறு முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரை விடச் சொல்லி மேலிடத்தில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனாலும் உதயகுமார் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்க பட முடியாத நிலையில் இருந்ததால் அன்றிரவு கொலை செய்யப்பட்டார்.

அங்கே சித்ரவதை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களைக் கூட என்னால் அடையாளம் காட்ட முடியும்.

ஒருநாள் கப்டன் லலித் ஹேவா ஒரு மண்வெட்டி எடுத்து வரச் சொன்னார்.

நான் மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நின்றாள். பக்கத்தில் அவள் கணவன்.

அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான்.

 மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தார்.

பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைத்தோம்.

என்னால் செம்மணியில் உடல்கள் புதைக்கப்பட்ட 10 இடங்களைக் காட்ட முடியும். என்னோடு கிருசாந்தி வழக்கத்தில் தண்டனை பெற்றவர்களால் மேலும் ஆறு இடங்களைக் காட்ட முடியும் .

ஒரு கராஜில் வேலை செய்த இரு இளைஞர்களை கொலை செய்தது புதைத்தது தெரியும் அந்த இடத்தையும் என்னால் காட்ட முடியும்.

கிருசாந்தியை நான் கொலை செய்யவில்லை. மேலதிகாரிகள் கொலை செய்தபின் உடலை புதைத்தது மட்டுமே நான்.

இராணுவத்துக்கு எதிராக நான் இந்த கருத்துக்களை சொல்லக்கூடாது என்று எனக்கும், என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

இலங்கை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காது விட்டால் நான் சர்வதேச நீதிமன்றுக்கு செல்வேன்."

இதுவே யாழ் நீதிவான் நீதிமன்றில் சோமரத்ன கூறிய முழுமையான வாக்கு மூலம்.

வாக்கு மூலம் முடிந்ததும் சோமரத்ன

செம்மணி க்கு அழைத்நுச்செல்லப்படார். அங்கே அவர் மனித பீதைகுழிகளை அடையாளம் காட்டினார்.

அன்று நேரமாகி விட்டதால் புதைகுழிகளை தோண்டுவது அடுத்த நாளுக்குப் பிற்போடப்பட்டது.

17 June 1999

நான்கு மணிநேரம் தோண்டிய பின் முதலாவது உடலின் பாகங்கள் கிடைத்தது.

முழங்கால் பகுதி எழும்பும் அதைச்சுற்றி இருந்த ட்ரவுசரின் பகுதியும் முதலாவதாக கிடைத்தது.

அன்று பின்னேரம் இரண்டு முழுமையான எழும்புக்கூடுகள் கிடைத்தன.

image_870x_685cf0a6cbfd4.jpg

படம் : செம்மணி அகழ்வு 1999

இரண்டு எழும்புக்கூடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இரண்டு எழும்பு கூடுகளுக்கும் இடையே தண்டவாளங்களுக்கிடையே இருக்கும தடி இருந்தது.

ஒரு எழும்புக்கூட்டின்.கை பின்னால் கட்டப்படு இருந்தது. மற்ற எழும்பு கூட்டின். கண்கள் கட்டப்பட்ட துணி காணப்பட்டது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண அடுத்தநாள் யாழ் பொலிஸ் நிலையத்தில் 300 பேர் கூடினார்கள்.

அந்த இரு எழும்புக்கூடுகளும் சுப்பையா ரவி கராஜில் வேலை செய்த ராசையா சதீஸ்குமார் மகேந்திரன் பாபு என்ற இளைஞர்கள் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அரியாலை முகாமில் 19/8/1996 அன்று கைது செய்யப்பட்டவர்கள். உடலை கராஜ் உரியையாளரும், கொலையான வரின் மனைவியும் அடையாளம் காட்டினார்கள்.

அதன்பிறகு செம்மணி புதைகுழி தோண்டப்படுவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது . எதையையோ மூடிமறைக்க அரசு முனைந்தாதா?

image_870x_685cf0e4c1483.jpg

படம் : செம்மணி புதைகுழிகள் இருந்த இடத்திற்கான வரைபடம் 1999

அதன்பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டு மெத்தனமாக 6 புதைகுழி தோண்டப்பட்டது. ஒவ்வொரு புதைகுழியிலும் 1 தொடக்கம் ஆறு உடல்களுகான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக 15 உடல்களில் பத்து உடல்களின் எச்சங்கள் கண்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தது.

அதன்பின் அரசாங்கம் சோமரத்ன சொன்னபடி மேலதிக புதைகுழிகள் அங்கே இல்லை என்று அறிவித்து புதைகுழி தோண்டுவதை நிறுத்தியது.

image_870x_685cf12f97431.jpg

படம் : செம்மணி தோண்டப்பட ஆயத்தம் 1999

image_870x_685cf4366586a.jpg

சோமரத்ன 20 இராணுவ அதிகாரிகளை இந்த படுகொலைகளுக்கு காரணமாக சொல்லியிருந்த போதும் 2000 ஆம் ஆண்டு வெறுமனே 7 பேர் மீது மட்டும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது . பிறகு ஏழு பேருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2006 ஆம் ஆண்டு CID சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக அறிவித்தது. இந்த தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு நீதிமன்றம் 2006 அறிவித்தது.

2007 யில் கிருசாந்தி விடயத்தை பேசுபொருளாக்கி அரசுக்கு அழுத்தம் ஏற்பட காரணமாக இருந்த S.T. ஞானநாதன் என்பவர் அரியாலை இராணுவ முகாமுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 ஆனாலும் அதற்கு பிறகு அந்த வழக்குக்கு என்ன நடந்தது என்று தகவலை அறிய முடியவில்லை.

சோமரத்ன சொன்னது போல் அங்கே புதைகுழிகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் மூடி மறைத்தது.

அப்படியே கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு கடந்தபின் ,

13 பிப்ரவர் 2025

அரியாலை சிந்தபதி மயானத்திற்கான கட்டுமான வேலைக்காக தோண்டியபோது மனித உடல்களின் எச்சங்கள் தென்பட்டது.

விடயம் நீதி மன்றுக்கு போக நீதிமன்றம் அதை மனித புதைகுழி என அடையாளப்படுத்தி அதை சட்ட ரீதியாக தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது.

இதுவரை 19 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் மூன்று ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என சந்தேகிக்கப்படுகிறது.

இப்போதைய கேள்வி :

சோமரத்ன வெளிக்காட்டிய 20 பேரும் யார்?

2000 ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட ஏழு இரானுவத்தினரூக்கு எதிரான வழக்குக்கு என்ன நடந்தது ?

இத்தனை காலமாக இது பற்றி எந்த தமிழ்தலைவராவது கேள்வி எழுப்பி உள்ளனரா ?

https://tjsnews.online/Chemmani-mass-grave?fbclid=IwQ0xDSwLJ-otleHRuA2FlbQIxMQABHjwnZ5lJNOZl9EZ_-iiOYfK7CuyCb-Vc8lMPw3RxJcJMfamZql8mMD9V1gBe_aem_lhyvrtVjQaUBxYQnBn1h_g

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

சோமரத்ன சொன்னது போல் அங்கே புதைகுழிகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் மூடி மறைத்தது.

அந்த காலகட்டத்தில், இரவிரவாக செம்மணி மயானத்திற்குள் கனரக வாகனங்கள் வந்து சென்றதாகவும், பெரிய நெருப்பு வெளிச்சம் தெரிந்ததாகவும் சுற்றாடலிலிருந்த மக்கள் தெரிவித்திருந்தனர். அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் வலுவாக இருந்தது அப்போ. அந்த புதை குழி பலர் முன்னனிலையில் தோண்டப்பட்டபோது அங்கே எலிகள், இன்னும் பிராணிகளின் எச்சங்கள் காணப்பட்டதாக கூறப்பட்டது. அப்படியெனில் அந்த எச்சங்கள் அங்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? அவை யாரால் கொண்டுவரப்பட்டது எனும் கேள்வியை யாரும் கேட்க முன்வரவில்லை. நம்ம அரசியற்றுதலைவர்களும் அதை மறந்து, மறைத்து சிங்களத்துக்கு காவடி தூக்கி வெள்ளை அடித்தனர். இப்போ அங்கே போக வேண்டுமென்று அடம்பிடிக்கின்றனர். இத்தனையும் தெரிந்த மனித ஐ. நா. மனித உரிமையாளருக்கு இவர்களின் தில்லாலங்கடி வேலை தெரியாமலா இருந்திருக்கும்? வர வர நம்ம அரசியற் தலைவர்களெல்லோரும் நகைக்சுவை பேச்சாளராகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.