Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

01 JUL, 2025 | 08:18 PM

image

செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்டது. 

அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன் காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள் காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை செவ்வாய்க்கிழமை (1) முன்னெடுக்கப்பட்ட மேலதிக பணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது என தெரிவிக்கப்பட்டது. 

அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

4__8_.jpg

4__7_.jpg

4__6_.jpg

4__3_.jpg

4__4_.jpg

4__1_.jpg

4__2_.jpg

https://www.virakesari.lk/article/218971

  • கருத்துக்கள உறவுகள்

514541645_9927181640664723_5809387585181

514434616_9927182047331349_6553027534293

கண்விழித்தபடியே காத்திருந்த இந்த பொம்மைக்கு தெரியும் அங்கு நடந்த அத்தனையும்.

நீல நிற புத்தகப்பை, கண்ணாடி வளையல், காலணி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளோடு ஒரு மழலையவள் செம்மணி மண்ணுக்குள் புதைக்கப்பட்டுள்ளாள்.

காலக்கண்ணாடியாக மாறப்போகும் பொம்மை இது.

இதே தோற்றமுடைய பொம்மை என்னிடமும் இருந்தது. நல்ல தடிப்பான ரப்பரால் செய்யப்பட்ட பொம்மை, அதிலிருக்கும் நிறங்கள் மேற்பூச்சாக பூசப்பட்டிருக்காது. நன்றாக ஊற வைத்து எடுக்கப்பட்டு ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையாக இருக்கும். அன்றைய நாட்களில் தரமான பொம்மைகளில் ஒன்று. அது எனது அக்கா தன் மழலைக்காலத்தில் பாவித்து பின் நான் பாவித்த பொம்மையாகும்.

அக்காவின் இரண்டாவது பிறந்தநாள் (1985) நிகழ்வில் அப்பொம்மை இருக்கிறது.

80 களின் நடுப்பகுதியில் வெளியான தமிழ் சினிமாக்களில்கூட இப்படியான பொம்மைகளை காணமுடியும்.

இந்த பொம்மையும் இடப்பெயர்வுக்கு முன்பாக கோவில் திருவிழா கடைகளிலோ, பொம்மை கடைகளிலோ வாங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பொம்மையை இந்த மழலையின் சகோதர/ சகோதரி பாவித்து தன் தங்கைக்காக வைத்திருந்ததாகவே இருக்க முடியும். இடப்பெயர்வு காலத்தில் என்னைப்போல இந்த குழந்தையும் இந்த பொம்மையையும் கையோடு கொண்டுசென்றிருக்கும் என்பதை என்னால் நம்பமுடிகிறது.

அச்சகோதர இரத்தம் உயிரோடு இருந்தால் இந்த குழந்தை இனங்காணப்படும். அதன்வழி இப்புதைகுழியின் காலம் வெளிப்படும்.

நன்றாக வாழ்ந்த ஒரு குடும்பம் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளதாக என் உள்மனது சொல்கிறது.

இயற்கை தன் கணக்கை தீர்க்கும் கணத்துக்காக இவற்றையெல்லாம் தன்னோடு வைத்துக்கொண்டது போலும்.

Janakan Sivagnanam

  • கருத்துக்கள உறவுகள்

இது சிங்கள இராணுவ, பொலிஸாருடைய உடல்கள் என அடம்பிடிக்கும் அரசியல்வாதிகள் பிக்குகளின் வாயை அடைக்க வெளிப்பட்டிருக்கிறது. நன்றாக அவர்களைபேசுங்கள், நீங்களாகவே உங்களையுமறியாமல் உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். இறைவா! ஒரு பாவமுமறியாத எங்கள் குழந்தைகளுக்கு இந்த நிலையா? ஒருவரை ஒருவர் பாதுகாக்க, காப்பாற்ற இறந்தவர்கள் அணைத்திருந்திருப்பார்களோ? அன்றி புதைகுழியில் ஒன்றோடு ஒன்றை பிணைத்து போட்டிருப்பார்களோ? எப்படியெல்லாம் கதறியிருப்பார்கள், கெஞ்சியிருப்பார்கள்? அந்த நிமிடத்தை, இதை செய்தவர்கள் நினைத்திருந்தால்; இந்த நிலை தொடர்ந்திருக்காது. இன்றுவரை இந்த புதைகுழி மௌனமாய் இருந்திருக்காது. புதைகுழி திறந்ததுபோல் கொடியவர்கள் மனதும் திறந்து உண்மையை கொண்டுவரவேண்டும். ஒரு சிங்கள இராணுவம் உண்மையை சொல்லியும் ஏற்காமல் விதண்டாவாதம் பண்ணும் ஒவ்வொருவரும் இதனோடு சம்பந்தப்பட்டவர்களே! இதன் பின்னும் நம்மவர் சிங்களத்துக்கு வெள்ளையடிப்பார்களா? ஆம்! அருண் சிர்த்தாத் வெளிக்கிட்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

514178501_1148927820605522_9043761564584

514447123_1148927133938924_6303314495183

515278936_1148965127268458_4119105568742

515260488_1148964537268517_3150727488569

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 38 எலும்புக்கூடுகளில் குறைந்தது 10 சிறுவர்கள், குழந்தைகளுடையதென சந்தேகம்!

02 JUL, 2025 | 10:02 AM

image

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு அருகில், நீல நிறத்தில் ஆங்கில எழுத்துக்கள் எழுதப்பட்ட ஒரு நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு செருப்பு கண்டெடுக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள  38 எலும்புக்கூடுகளில், குறைந்தது 10 சிறுவர்கள் அல்லது குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் அடங்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது நீதிமன்றத்தால் குற்றம் நடந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஏற்கனவே ஒரு பையுடன் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு, நாள் முழுவதும் தோண்டப்பட்டு முழுமையாக மீட்கப்பட்டது," என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில், புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் குறிப்பிடுகின்றார்.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 33 மனித எலும்புகளுக்கு மேலதிகமாக ஐந்து மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டாலும், எலும்புகள் பின்னிப் பிணைந்திருப்பதாகத் தோன்றுவதால் சரியான எண்ணிக்கையைக் கூற முடியாது என அவர் மேலும் கூறினார்.

"முழு நாள் அகழ்வுப் பணியில் சுமார் ஐந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த எலும்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியாது. குழப்பமாக காணப்படுகிறது."

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் அடையாளம் காணப்பட்டு, மனித எலும்புகள் இருக்கக்கூடிய இடங்களாக நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்யும் பணிகள், திங்கட்கிழமை (01) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

1990 களில் செம்மணி அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த சட்ட வைத்திய அதிகாரி கிளிபர்ட் பெரேரா அகழ்வு பணிகளை பார்வையிட்டதோடு, அகழ்வாராய்ச்சிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் அகழ்வாராய்ச்சி தொடர்பான பழைய தகவல்களைப் பற்றி விவாதித்ததாகவும் சட்டத்தரணி ரணிதா குறிப்பிடுகின்றார்.  

செம்மணிப் பகுதியில் முன்னூறு முதல் நானூறு வரையிலான புதைகுழிகள் இருப்பதாக, செப்டம்பர் 7, 1996 அன்று பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக இலங்கை இராணுவத்தின் நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ச, கொழும்பு உயர் நீதிமன்ற சாட்சிக்கூண்டில் இருந்தவாறு தெரிவித்திருந்தார்.  

1999 ஆம் ஆண்டு அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்ட 15 உடல்களில், இரண்டு உடல்கள் 1996 இல் காணாமலாக்கப்பட்ட இளைஞர்களின் உடல்கள் என அடையாளம் காணப்பட்டன. எஞ்சிய 13 உடல்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

எலும்புக்கூடுகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வாராய்ச்சிகள் மே 15 ஆம் திகதி தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பமானது. 

105.jpg

102.jpg

106.jpg

108.jpg

https://www.virakesari.lk/article/218984

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள்

செம்மணி மனிதப் புதைக்குழி

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையில் யாழ்ப்பாணம் - செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலான சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன நடக்கிறது?

அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் எலும்புக்கூடு

நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு இரு தினங்களுக்கு முன்பு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்ட இடத்திலிருந்து பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

''ஏற்கெனவே அடையாளப்படுத்தி பாடசாலை புத்தக பையுடன் இருந்த மனித உடல், முழுமையாக நாள் முழுவதையும் செலவிட்டு, நிலத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளது, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலுடன் காலணியும், அதேநேரத்தில் சிறிய குழந்தைகள் விளையாடுகின்ற பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.'' என வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

செம்மணி மனிதப் புதைகுழி

படக்குறிப்பு,மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம் - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றைய தினம் பின்னிப் பிணைந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 5 எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தென்படுகின்ற நிலையில், அந்த தொகுதியில் சரியாக எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளமை குறித்து தற்போதைக்கு சரியாக கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.

''இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வு பணிகளில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததான மேலதிக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக சொல்ல முடியாது. அதுவொரு குழப்பமான முறையில் அந்த உடலங்கள் காணப்பட்டுள்ளன.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

செம்மணி மனிதப் புதைக்குழி

படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பொம்மை

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை ஒன்றாக தொட முயற்சி

யாழ்ப்பாணம் - செம்மணி பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி வழக்கையும் ஒன்றாக இணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

'செம்மணி பழைய புதைகுழி தோண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பெரேரா அகழ்வு நடந்த பிரதேசத்துக்கு வருகைத் தந்தார். தற்போது அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்ற சட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடி கடந்த அகழ்வு பணிகளின் தகவல்களை வழங்கியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.

"கிட்டத்தட்ட அந்த வழக்கும் இந்த வழக்கும் இருவேறு வழக்குகளாக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புப்படுத்த வேண்டிய நிலைமை இருக்கின்றது. இதனால், முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய வழக்கை இந்த வழக்குடன் சேர்ந்து அழைப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் செய்வதற்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது" என அவர் குறிப்பிடுகின்றார்.

செம்மணி மனிதப் புதைக்குழி

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம் 1995ம் ஆண்டு காலப் பகுதியில் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுவோர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

செம்மணி மனிதப் புதைக்குழி

படக்குறிப்பு,புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன

'செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரித்தால் சட்ட நடவடிக்கை'

சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் வெவ்வேறு விதங்களில் சித்தரித்து வருகின்றமையை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதாரங்களை சித்தரிக்கும் செயற்பாடு தொடரும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.

''இந்த புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எலும்பு மாதிரிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக பிழையான விதத்திலான படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான தகவல்கள் வெளியிலும் பரப்பப்படுகின்றது. இதுவொரு குற்றவியல் விசாரணை நடவடிக்கையின் ஊடாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், இனிவரும் காலங்களில் அப்படியானது வருமாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நாங்கள் உத்தேசித்திருக்கின்றோம்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக படங்கள் வெளியிடப்படும் பட்சத்தில், அது விசாரணைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பகரமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வழக்கறிஞர் மேலும் தெரிவிக்கின்றார்.

செம்மணி மனிதப் புதைக்குழி

ஐநா மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்

இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க், செம்மணி பகுதிக்கு அண்மையில் சென்றிருந்தார்.

செம்மணி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய மனித உரிமை ஆணையாளர், நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததையும் காண முடிந்தது.

இலங்கையில் தொடரும் மனிதப் புதைகுழிகள்

இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி மற்றும் யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளன.

புதைகுழிகள்

  • யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்

  • யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி

  • யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைகுழி

  • கிளிநொச்சி - மனிதப் புதைகுழி

  • கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைகுழி

  • முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி

  • முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழி

  • மன்னார் - மன்னார் மனிதப் புதைகுழி

  • மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி

  • குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைகுழி

  • கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை

  • கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைகுழி

  • கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழி

  • கொழும்பு - கோகந்தர மனிதப் புதைகுழி

  • கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைகுழி

  • மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழி

  • இரத்தினபுரி - இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைகுழி

  • மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழி

  • மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழி

  • கண்டி - அங்கும்புர மனிதப் புதைகுழி

  • முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி

  • கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி

  • அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9dg05qgl3wo

  • கருத்துக்கள உறவுகள்

514477774_1149024500595854_3034494176005

515017809_1149707207194250_2120493618529

  • கருத்துக்கள உறவுகள்

515945236_1150655080432796_4060874957359

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.