Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அல்தாப் அஹமட்

யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன.

கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாணம், செம்­மணி, சித்­துப்­பாத்தி மனிதப் புதை­கு­ழியில் இருந்து நேற்று வரை தொல்­லியல் ஆய்­வா­ளர்கள் 38 மண்டை ஓடு­களை அடை­யாளம் கண்­டுள்­ளனர். இவற்றுள் குறைந்­தது 10 மண்டை ஓடுகள் குழந்­தைகள் அல்­லது சிறு­வர்­க­ளுக்கு உரி­யவை என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் இந்த இடம் குற்­றச்­சம்­பவம் நடந்த பகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் சார்பில் அகழ்­வா­ராய்ச்சி பணி­களை மேற்­பார்­வை­யிடும் சட்­டத்­த­ரணி ரணிதா ஞான­ராஜா, “செம்­மணி மனிதப் புதை­குழி அகழ்வில் நேற்று முன்­தி­னத்­துடன் ஐந்­தரை நாட்கள் முடி­வ­டைந்­துள்­ளன. ஏற்­க­னவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பாட­சாலை புத்­த­கப்­பை­யோடு இருந்த மனித எலும்புக் கூடு முழு­மை­யாக மீட்­கப்­பட்­டுள்­ளது. அகழ்ந்­தெ­டுக்கும் பொழுது சிறு குழந்­தையின் எலும்புக் கூட்­டுடன் சப்­பாத்து, குழந்தை விளை­யாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதுவரையான அகழ்வுப் பணியில் ஐந்து வரை­யான மனித எலும்­புக்­கூ­டுகள் ஒன்­றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்­ப­டு­கி­றது. இதனால் அதில் உள்ள எலும்­புக்­கூ­டு­களின் எண்­ணிக்­கையை சொல்ல முடி­யாத குழப்­ப­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது” என்றார்.

தட­ய­வியல் தொல்­லியல் ஆய்­வாளர் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ அடை­யாளம் காட்­டிய சாத்­தி­ய­மான புதை­கு­ழிகள் உள்ள இடங்­களில் கடந்த திங்­கட்­கி­ழமை சுத்தம் செய்யும் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக தொல்­லியல் மாண­வர்­களின் உத­வி­யு­டனும், நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்­களின் உத­வி­யு­டனும் சுத்தம் செய்யும் பணிகள் நடை­பெற்­றன.

பேரா­சி­ரியர் சோம­தே­வவும் யாழ்ப்­பாண சட்ட மருத்­துவ அதி­காரி டாக்டர் செல்­லையா பிர­ண­வனும் மே 15 அன்று செம்­மணி சித்­துப்­பாத்தி மயா­னத்தில் அகழ்­வா­ராய்ச்­சியைத் தொடங்­கினர்.

நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்கள் செம்­மணி பகு­தியில் கட்­டிடம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­காக நிலத்தை சுத்தம் செய்யும் போது கடந்த பெப்­ர­வரி 20 அன்று மனித எலும்புக் கூடு­களை கண்­டு­பி­டித்­ததை அடுத்து, இந்த மனிதப் புதை­கு­ழிகள் மீண்டும் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

செம்­ம­ணியின் பின்­னணி
1998 ஆம் ஆண்டு இலங்­கையில் 18 வய­தான தமிழ் பாட­சாலை மாணவி கிருஷாந்தி குமா­ர­சா­மியின் பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொலை நாட்­டையே உலுக்­கி­யது. பரீட்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த அவர், கொண்­டா­விலில் உள்ள இரா­ணுவ சோதனைச் சாவ­டியில் தடுத்து நிறுத்­தப்­பட்டார். அதன்­பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. பின்னர், அவ­ரது சிதைந்த சடலம், அவரைத் தேடிச் சென்ற அவ­ரது தாயார், சகோ­தரன் மற்றும் அய­லவர் ஆகி­யோரின் சட­லங்­க­ளுடன் சேர்த்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கின் விசா­ர­ணையில் பல இரா­ணுவ வீரர்கள் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டனர். அவர்­களில் ஒரு­வ­ரான சோம­ரத்ன ராஜ­பக்ச, 1995-1996 இல் இரா­ணுவம் யாழ்ப்­பா­ணத்தை மீண்டும் கைப்­பற்­றி­யதைத் தொடர்ந்து காணாமல் போன நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பொது­மக்கள் செம்­மணி கிரா­மத்­திற்கு அருகில் கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­ட­தாக ஒரு அதிர்ச்­சி­யூட்டும் தக­வலை தெரி­வித்தார். இப் பகு­தியில் 300 முதல் 400 சட­லங்கள் புதைக்­கப்­பட்ட இடத்தை தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

இத­னை­ய­டுத்து 1999 ஆம் ஆண்டில், சர்­வ­தேச அழுத்­தத்தின் கீழ், அர­சாங்கம் செம்­ம­ணியில் நீதி­மன்றக் கண்­கா­ணிப்பில் அகழ்­வா­ராய்ச்­சி­களை தொடர அனு­ம­தித்­தது. உலகம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்க, மனித உரிமைக் குழுக்கள் கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்க, செம்­மணி நிலம் தனது உண்­மையை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யது.

பதி­னைந்து சட­லங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவற்றில் இரண்டு சட­லங்கள் 1996 இல் காணாமல் போன­வர்­க­ளு­டை­யவை என அடை­யாளம் காணப்­பட்­டன. ஆதா­ரங்கள் உறு­தி­யாக இருந்­தன. ஏழு இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் இந்த விசா­ர­ணைகள் ஒரு கட்­டத்தில் நிறுத்­தப்­பட்­டன. கோப்­புகள் தூசி படிந்­தன. மேல­திக அகழ்­வா­ராய்ச்­சிகள் நடத்­தப்­ப­ட­வில்லை. 2006 ஆம் ஆண்­ட­ளவில், உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை ஒன்றில் செம்­மணி விவ­காரம் கிட்­டத்­தட்ட முழு­மை­யா­கவே மறக்­கப்­பட்­டது.

ஆனால் முத­லா­வது அகழ்­வா­ராய்ச்சி நடந்து இரண்டு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் ஜூன் 2025 இல் மீண்டும் இந்த விவ­காரம் பேசு­பொ­ரு­ளா­னது. செம்­மணி புதை­கு­ழியில், நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் அகழ்­வா­ராய்ச்­சிகள் மீண்டும் தொடங்­கப்­பட்­டன. அங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டவை தேசத்தின் மன­சாட்­சியை மீண்டும் உலுக்­கின. மூன்று குழந்­தைகள் உட்­பட, 19 மனித எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவர்­களில் ஒருவர் ஒரு வய­துக்கும் குறை­வா­னவர் என்று நம்­பப்­ப­டு­கி­றது.

செம்­மணி ஒரு தனித்து நிற்கும் துய­ர­மல்ல. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் நடந்த மனிதப் படு­கொ­லை­களின் சாட்­சி­யாக நம்முன் காட்­சி­ய­ளிக்­கி­றது.
2013 ஆம் ஆண்டில், மன்னார் நகரில் கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிலத்தை தோண்­டிய போது 11 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. பின்னர் 2018 ஆம் ஆண்டில் மிகப்­பெ­ரிய மனிதப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இங்கு நடத்­தப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியில் 29 குழந்­தைகள் உட்­பட 346 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. தட­ய­வியல் தொல்­லியல் நிபு­ணர்கள் இந்த எச்­சங்கள் 30 வரு­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை என்­பதை உறு­திப்­ப­டுத்­தினர்.

ஆனால் தாம­தங்கள், அர­சியல் தலை­யீ­டுகள் மற்றும் நிதிப் பற்­றாக்­குறை என்­பன கார­ண­மாக மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. தடயப் பொருட்­களும் காணாமல் போயின. விஞ்­ஞான பரி­சோ­த­னைகள் தடைப்­பட்­டன, காலப்­போக்கில் பொது மக்­களும் இவற்றை மறந்­தனர். எவ­ருக்கும் பொறுப்புக் கூறப்­ப­ட­வில்லை. ஆனால்குடும்­பங்கள் தொடர்ந்து நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றன.

2000 ஆம் ஆண்டில் மிரு­சு­விலில் எட்டு தமிழ் பொது­மக்கள் இரா­ணு­வத்தால் கடத்­தப்­பட்­டனர். ஒருவர் அங்­கி­ருந்து தப்­பினார். அவர் மூல­மாக, ஏனைய ஏழு சட­லங்கள் கண்கள் கட்­டப்­பட்டும், சுடப்­பட்டும் ஆழ­மற்ற புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதற்குக் கார­ண­மான, ஒரு தலைமை பொலிஸ் சார்ஜென்ட், 15 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு 2015 இல் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டார். எனினும் எந்­த­வொரு உயர் அதி­கா­ரியும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

மட்­டக்­க­ளப்பில் உள்ள முரக்­கொட்­டாஞ்­சேனை மற்றும் முல்­லைத்­தீவில் உள்ள கொக்­குத்­தொ­டுவாய் ஆகிய இடங்­களில், கட்­டிட நிர்­மாணப் பணி­களின் போது எலும்­புக்­கூ­டுகள் வெளிப்­பட்­டன. எனினும் அவை மூடி மறைக்­கப்­பட்­டன.

குருக்­கள்­மடம் புதை­குழி
தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் மக்­களும் இவ்­வாறு கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ளனர். மட்­டக்­க­ளப்பு, குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதை­குழி இதற்­கான சாட்­சி­யாகும்.

விடு­த­லைப்­பு­லி­களால் 1990 ஆம் ஆண்டில், கடத்திக் கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் முஸ்­லிம்­களின் புதை­கு­ழிகள் இப் பகு­தியில் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்­டக்­க­ளப்பு – கல்­முனை ெநடுஞ்­சாலை வழி­யாக வாக­னங்­களில் பயணம் செய்த குறிப்­பாக காத்­தான்­குடி பிர­தேச முஸ்­லிம்கள் 165 பேர் குருக்­கள்­மடம் என்­னு­மி­டத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் வழி­ம­றிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு கட­லோ­ரப்­ப­கு­தியில் புதைக்­கப்­பட்­ட­தாக முஸ்­லிம்கள் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர்.

படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­ப­வர்­களின் உற­வி­னர்கள் சிலர் கடந்த 2014 ஆம் ஆண்டு இப் புதை­கு­ழி­களில் புதைக்­கப்­பட்­டுள்ள சட­லங்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய மார்க்க முறைப்­படி அடக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு களு­வாஞ்­சிக்­குடி பொலிசில் முறைப்­பா­டு­களை செய்­தனர். இத­னை­ய­டுத்து களு­வாஞ்­சிக்­குடி மஜிஸ்­திரேட் நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப் பகு­தியில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதற்­காக சட்ட மருத்துவ நிபுணர், புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து சென்று அந்த இடத்தை பார்வையிட்டிருந்தனர். எனினும் புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இங்கு இதுவரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

வடக்கு கிழக்கில் இவ்­வாறு இரா­ணு­வத்­தி­ன­ராலும் விடு­தலைப் புலி­க­ளாலும் ஏனைய ஆயுதக் குழுக்­க­ளாலும் கொன்று புதைக்­கப்­பட்ட ஆயிரக் கணக்­கான மக்­களின் எலும்புக் கூடுகள் அவர்­க­ளது இறப்­பு­க­ளுக்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் இன்­னமும் புதையுண்டு கிடக்­கின்­றன. தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இவ்­வா­றான படு­கொ­லை­களின் பின்­ன­ணி­களைக் கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களைத் தண்­டிப்­ப­தற்­கான விசேட பொறி­முறை ஒன்றை வகுக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் இந்த தேசத்தில் இவ்­வா­றான மோச­மான அநீ­திகள் நிகழாதிருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli

https://www.vidivelli.lk/article/19561

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, colomban said:

அட இதை சொல்ல்வதற்குத்தான் இந்த பிடப்பு...ஜபினா முசுலிம் செய்தியை காவி ...இங்கு போட்டால் ..உள்ள வாந்தி எல்லாம் வெளியில் வரும் ...அதிலை மிகப்பெரும் சந்தோசமடையலாம் ...எப்பிடியும் அரசுக்கு குடைபிடித்து .. நாலு அமைச்சர் பதவி எடுக்கவேணும் என்ற நப்பாசைதான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையின் தரவுகளில் பல தவறுகள் இருக்கின்றன.

முதலாவது கிருசாந்தி குமாரசாமி கைதுசெய்யப்பட்ட இடம், கால, வயது என்பன முற்றிலும் தவறானவை.

இரண்டாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் குருக்கள்மடத்தில் புலிகளால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் என்று இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் என்பது ஒருபோதும் நடக்கவில்லை. ஆனால், ஜூலை 1990 இற்குப் பின்னர் முஸ்லீம்கள் மீது பல தாக்குதல்களை புலிகள் நடத்தியிருக்கின்றனர் என்பது உண்மையே.

இலங்கை அரசுக்குச் சார்பாக எழுதும் முஸ்லீம் எழுத்தாளர் (எஸ் எம் எம் பஸீர்) ஒருவரால் பதியப்பட்ட முஸ்லீம்கள் மீதான புலிகளின் தாக்குதல்கள் எனும் பட்டிய‌லில் இங்கு குறிப்பிடப்படும் சம்பவம் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

Catalogue of LTTE atrocities on the Muslims in the East in 1990.

• On 23 July 1990 5 Muslims who were staying in the Jariya Mosque in Sammanthurai were killed by the LTTE and three others injured.

• On 29 of June 1990 the LTTE killed 6 Muslims including the chief Trustee of the Hijar Mosque, Oddamavadi .

• On 2 July 1990 14 farmers were shot and hacked to death at Akkaraipatttu.

• On the 3rd July 1990, (on the eve of Eid- Ul- Fithr) UL Dawood , the member of Citizen Committee of the Batticaloa District, and the Cluster Principal of Alighar Central school , Eravur, Al Haj M.L.A Gafoor .J.P and Quazi and his father in law U.L.Ali Mohamed were kidnapped and killed by the armed LTTE cadres.

• On 7 July 1990, !7 Muslims were killed at Puthur , a border Muslim village in Polonnaruwa

• On the 14th July 1990 , 69 Muslims who were on their way back from Hai pilgrimage were kidnapped and killed by the LTTE at Onthachimadam in the Battiucaloa District..

• On 19th July 1990 , Muslim passengers were abducted and killed at Ampilanthurai in the Batticaloa District.

• On the 3 August 1990, 140 Worshippers at Kattankudy Meeraniya and Hussainiya mosques were murdered and sixty six were injured.

• On 11th August 1990 (Early morning of 12th August 1990) 127 Muslims were massacred at Eravur.

• On 12 August 1990 four farmers who were working in the paddy fields in Sammanthurai were killed by the LTTE.

• 1n August 1990 eight Muslims were shot to death at Akkraipattu. Town.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது.

இதன்போது  சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது.

குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர்.

Jaffna Muslim
No image preview

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது.

இதன்போது  சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது.

குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர்.

சம்மந்துரை...வீரமுனைபடுகொல்லை உங்கள் கணக்கில் இல்லையோ...அல்லது சண்கிளாஸ் போட்டிருக்கிறியாளோ... கடந்த 5 வருடத்தில் உங்கடை ஆட்கள் அமச்ச்சுப்பதவி வகித்தவையே,,, அதிவிட கிழக்கில் ஆட்ட்சியும் செலுத்தினவை....அப்ப எங்கை போனது இந்த குரலற்றவை அமைப்பு... செம்மணி தோண்டி உண்மைகள் வெளிவர உங்களுக்கு கடி தொடங்கியிட்டுது...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.