Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-171.jpg?resize=750%2C375&ssl

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவிற்கு ட்ரம்ப் 50 நாள் காலக்கெடு!

உக்ரேன் போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது அமெரிக்கா “மிகக் கடுமையான” வரிகளை விதிக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (14) தெரிவித்தார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் கூறினார்.

“ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில் நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். 50 நாட்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், நாங்கள் 100% வரிகளை விதிப்போம்” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாக சர்வதேச ஊடச் சேவையான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை “இரண்டாம் நிலை வரிகள்” என்றும் ட்ரம்ப் விவரித்தார்.

அதாவது உலகப் பொருளாதாரத்தில் மொஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவுடன் தொடர்புகளை பேணும் வர்த்தக பங்காளிகளையும் குறிவைப்பது ஆகும்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து வொஷிங்டனுக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான நேரடி வர்த்தகம் சரிந்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான இந்த இரண்டாம் நிலை வரிகள் செயல்படுத்தப்பட்டால், அது மேற்கத்திய தடைகள் கொள்கையில் ஒரு பெரிய மாற்றமாக இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போர் முழுவதும், மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவுடனான தங்கள் சொந்த நிதி உறவுகளில் பெரும்பாலானவற்றைத் துண்டித்துவிட்டன.

ஆனால் ரஷ்யா தனது எண்ணெயை வேறு இடங்களில் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற வாங்குபவர்களுக்கு எண்ணெய் அனுப்புவதன் மூலம் மொஸ்கோ நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை தொடர்ந்து சம்பாதிக்க அனுமதித்துள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் என்ன செய்யும்?

நேட்டோ உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்குவார்கள் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட இந்த ஆயுதங்கள் பின்னர் உக்ரேனுக்கு அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு, அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக உள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார்.

நேட்டோவின் விரைவான நடவடிக்கை முக்கியமானது என்று கூறி மார்க் ரூட் இந்த திட்டத்தை ஆதரித்தார்.

ஜெர்மனி, பின்லாந்து, கனடா, நோர்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பங்கேற்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

1110412183_0%3A163%3A3065%3A1887_1920x0_

உக்ரேன் என்ன சொல்கிறது?

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கீத் கெல்லாக், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார்.

உக்ரேனின் வான் பாதுகாப்பு, கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் மேலும் அமெரிக்க ஆதரவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் “பயனுள்ள உரையாடலை” நடத்தியதாக ஜெலென்ஸ்கி கூறினார்.

ukraine-crisis-kellogg.JPG?resize=1063%2

அடுத்து என்ன நடக்கும்?

பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உக்ரேனுக்கு வழங்குவது குறித்து விவாதிக்க ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது சில நாட்களுக்குள் நடக்கலாம் என்று ட்ரம்பும் ரூட்டும் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர் அறிவித்த 30% வரிகள் உட்பட ட்ரம்பின் பரந்த கட்டணத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஐரோப்பாவின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பதாகவும் AP செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று கூறினார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று அவர் பிரஸ்ஸல்ஸில் கூறினார்.

https://athavannews.com/2025/1439192

  • கருத்துக்கள உறவுகள்

'100% வரி': ரஷ்யாவை மிரட்டும் டிரம்ப் - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

அமெரிக்கா - ரஷ்யா, யுக்ரேன், புதின், டிரம்ப், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின்

கட்டுரை தகவல்

  • லாரா கோஸி

  • பிபிசி செய்திகள்

  • 15 ஜூலை 2025, 07:09 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் மூலம் யுக்ரேனுக்கு "உயர் தர ஆயுதங்களை" அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார்.

50 நாட்களுக்குள் யுக்ரேன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

"யுக்ரேனால் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்"என்று வாஷிங்டனில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் கூறினார்.

"நேட்டோ வழியாக யுக்ரேனுக்குத் தேவையானவற்றை பெருமளவில் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான செலவை ஐரோப்பிய நாடுகள் ஏற்கும்"என்பதை ருட்டே உறுதிப்படுத்தினார்.

"ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள யுக்ரேன் எதிர்பார்க்கும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை, ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு அனுப்பும். பின்னர், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா மாற்று ஆயுதங்களை வழங்கும்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

யுக்ரேனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் குறித்து ரூட்டேவோ அல்லது டிரம்போ விரிவாகக் கூறவில்லை, ஆனால் ஒப்பந்தத்தில் "ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள்" அடங்கும் என்று ரூட்டோ கூறினார்.

இருப்பினும் பில்லியன் டாலர் மதிப்புள்ள "உயர்மட்ட ஆயுதங்கள்" யுக்ரேனை வலுப்படுத்த "போர்க்களத்தில் விரைவாக" விநியோகிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

"நான் இன்று விளாடிமிர் புதினாக இருந்திருந்தால், யுக்ரேன் பற்றிய பேச்சுவார்த்தைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வேன்," என்று ருட்டே கூறியபோது, டிரம்ப் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.

"ரூட்டேவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்புடன் பேசினேன். யுக்ரேனை ஆதரிக்கவும், வன்முறையை நிறுத்தி, நீடித்த மற்றும் நியாயமான, அமைதியை நிலைநாட்ட இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்த அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.

"ரஷ்ய தாக்குதல்களிலிருந்து மக்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிக்கவும், எங்கள் நிலைகளை வலுப்படுத்தவும் தேவையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை அதிபருடன் விவாதித்தோம். அமைதியை அடைய முடிந்தவரை பயனுள்ள முறையில் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா - ரஷ்யா, யுக்ரேன், புதின், டிரம்ப், இந்தியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே திங்களன்று டிரம்பை சந்தித்தார்.

இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

யுக்ரேனுடன் 50 நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவின் மீதமுள்ள வர்த்தக பங்காளிகளை குறிவைத்து அமெரிக்கா 100% இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் என்று டிரம்ப் கூறினார்.

இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் தங்களது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பினால், அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும்.

உதாரணமாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியப் பொருட்களை வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள், அந்தப் பொருட்கள் அமெரிக்காவை அடையும் போது 100% இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இதனால், பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக மாறும். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க வணிகங்கள் அவற்றை மலிவாக வாங்க, வேறு இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விளைவாக இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதே இதன் நோக்கம் . கோட்பாட்டளவில், ரஷ்யாவால் மற்ற நாடுகளுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் பணம் ஈட்ட முடியாவிட்டால், யுக்ரேன் போருக்கு நிதியளிக்க குறைவான பணம் இருக்கும்.

எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கையும், ஏற்றுமதியில் 60%க்கு மேலும் பங்களிக்கின்றன. எனவே, 100% வரி விதிப்பு என்பது ரஷ்யாவின் நிதியை கணிசமாகப் பாதிக்கக்கூடும்.

ரஷ்ய பங்குச்சந்தைகளில் உயர்வு

ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவின் பங்குச் சந்தை குறியீடு கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரம் ரஷ்யா குறித்து "முக்கிய அறிவிப்பை " வெளியிடுவதாக டிரம்ப் கூறியிருந்ததால், அவர் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.

வரிகள் மற்றும் நேட்டோ ஆயுத ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு முதல் முறையாக யுக்ரேனுக்கு புதிய ராணுவ உபகரணங்களை வழங்குவதாக திங்கட்கிழமையன்று உறுதியளித்தார்.

விளாடிமிர் புதின் மீதான டிரம்பின் விமர்சனங்கள் கடுமையாகி வருவதால், இந்த அறிவிப்பின் தொனி குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

அமெரிக்கா - ரஷ்யா, யுக்ரேன், புதின், டிரம்ப், இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதிய ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை யுக்ரேனுக்கு அனுப்பும் (கோப்பு புகைப்படம்)

புதின் மீது டிரம்ப் அதிருப்தி

பிப்ரவரி 2022 இல் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்க ரஷ்யா எடுத்த முடிவிற்கு யுக்ரேனும் சில விஷயங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறுவது இது முதல் முறையல்ல.

ஆனால், மோதலை எளிதில் தீர்க்க முடியும் என ஒரு காலத்தில் நம்பிய அவர், அதை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் இல்லாததால் விரக்தியடைந்ததாகத் தோன்றியது.

புதினுடனான உறவு குறித்து கேட்கப்பட்ட போது, "இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது பற்றி நாங்கள் நிறையப் பேசுகிறோம்" என்று டிரம்ப் கூறினார். ஆனால், புதினுடனான "நல்ல தொலைபேசி அழைப்புகளைத்" தொடர்ந்து, யுக்ரேன் மீது பேரழிவு தரும் வான்வழித் தாக்குதல்கள் நடப்பதாகவும், அவை தீவிரமாகவும், அதிகரித்து வருவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.

"நான் அவரை கொலைகாரன் என்று அழைக்க விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு கடினமான மனிதர். பல ஆண்டுகளாக அவர் கிளிண்டன், புஷ், ஒபாமா, பைடன் ஆகியோரை ஏமாற்றியுள்ளார். ஆனால், அவர் என்னை ஏமாற்றவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சு பலனளிக்காது, செயல் தான் தேவை" என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே இரண்டு சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இதுவரை வேறு எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை. இதற்கு ரஷ்யா யுக்ரேனை குற்றம் சாட்டியுள்ளது.

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போது யுக்ரேனில் அமெரிக்க தூதர் கீத் கெல்லாக்கை சந்தித்து வருகிறார். திங்கட்கிழமை அவர் அந்த "பயனுள்ள சந்திப்பை" பாராட்டி, டிரம்பின் ஆதரவுக்கு "நன்றி" தெரிவித்தார்.

கிரெம்ளின் இந்த அறிவிப்பு குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மாஸ்கோவிலிருந்து வரும் கருத்துகள் ஓரளவு நிம்மதியைக் குறிப்பதாகத் தோன்றியது.

வரி அறிவிப்பை "ஏமாற்று வேலை" என்று என்று அழைத்த கிரெம்ளின் ஆதரவு நிபுணரும், புதினின் முன்னாள் உதவியாளருமான செர்ஜி மார்கோவ், இது டிரம்ப் "யுக்ரேனில் அமைதியை அடைய முயற்சிப்பதை கைவிட்டுவிட்டார்" என்பதைக் குறிக்கிறது என்றும் கூறினார்.

"இன்று டிரம்ப் யுக்ரேனைப் பற்றி சொன்னதெல்லாம் இதுதான் என்றால், இது பெரிய பேச்சாக இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை," என்று செனட்டர் கான்ஸ்டான்டின் கோசச்சேவ் கூறினார்

50 நாட்களில், "போர்க்களத்திலும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் மனநிலையிலும் பல மாற்றங்கள் நிகழலாம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சி வரவேற்பு

டிரம்பின் முடிவு, போட்டியாளரான ஜனநாயகக் கட்சியினர் உட்பட விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது.

"ஐரோப்பிய பங்காளிகளின் முதலீடுகளால், யுக்ரேனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்பும் முடிவு, புதினின் கொடூரத் தாக்குதல்களில் இருந்து எண்ணற்ற யுக்ரேனிய உயிர்களைக் காப்பாற்றும்"என்று சக்திவாய்ந்த செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜீன் ஷாஹீன் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை, "நல்ல முடிவு, ஆனால் தாமதமானது" என்று குறிப்பிட்ட அவர், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, புதினை சம்மதிக்க வைக்க, அமெரிக்கா யுக்ரேனுக்கு நீண்டகால, நிலையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

யுக்ரேனைச் சேர்ந்த 39 வயதான யுக்ரேனிய பல் மருத்துவர் டெனிஸ் போடில்சுக், டிரம்பை சம்மதிக்க வைத்த ஐரோப்பிய தலைவர்களைப் பாராட்டினார்.

"இறுதியாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் தங்கள் பொறுமையாலும், நம்பிக்கையாலும் டிரம்பை எங்கள் பக்கம் சற்று நகர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர் எங்களுக்கு உதவ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது"என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

கூடுதல் தகவல்: டியர்பைல் ஜோர்டான்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c79q44rv1vdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-191.jpg?resize=750%2C375&ssl

ட்ரம்பின் அச்சுறுத்தலால் கலங்காத புட்டின் மேலும் போராடுவார் – ரஷ்ய வட்டாரங்கள் தகவல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான தடைகள் குறித்த அச்சுறுத்தல்களால் கலங்காத மேற்குலகம், தனது அமைதிக்கான நிபந்தனைகளில் ஈடுபடும் வரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரேனில் தொடர்ந்து போராட திட்டமிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யப் படைகள் முன்னேறும்போது அவரது பிராந்திய கோரிக்கைகள் விரிவடையக்கூடும் என்று கிரெம்ளினுக்கு நெருக்கமான மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2022 பெப்ரவரியில் உக்ரேனுக்குள் ரஷ்ய படைகளை அனுப்ப உத்தரவிட்ட புட்டின், ரஷ்யாவின் பொருளாதாரமும் அதன் இராணுவமும் எந்தவொரு கூடுதல் மேற்கத்திய நடவடிக்கைகளையும் தாங்கும் அளவுக்கு வலிமையானவை என்று நம்புவதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க புட்டின் மறுத்ததால் திங்களன்று (14) ட்ரம்ப் விரக்தியடைந்தார்.

மேலும், பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் உட்பட உக்ரேனுக்கான ஆயுத விநியோக அலையை அறிவித்தார்.

அத்துடன், 50 நாட்களுக்குள் ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.

கிரெம்ளினின் உயர்மட்ட சிந்தனையை நன்கு அறிந்த மூன்று ரஷ்ய வட்டாரங்கள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தின் கீழ் புட்டின் போரை நிறுத்த மாட்டார் என்றும், மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளுக்கு மத்தியில் ரஷ்யா, மொஸ்கோவின் எண்ணெய் வாங்குபவர்களை குறிவைத்து அச்சுறுத்தப்பட்ட அமெரிக்க வரிகள் உட்பட மேலும் பொருளாதார நெருக்கடியைத் தாங்கும் என்று நம்புவதாகவும் கூறின.

ட்ரம்ப் மற்றும் புட்டினுக்கு இடையே பல தொலைபேசி அழைப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போதிலும், அமைதித் திட்டத்திற்கான அடிப்படை குறித்து விரிவான விவாதங்கள் எதுவும் இல்லை என்று ரஷ்யத் தலைவர் நம்புவதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

AP24162802449279-1-e1720950199748.jpg?ss

அமைதிக்கான புட்டினின் நிபந்தனைகளில் நேட்டோ கிழக்கு நோக்கி விரிவடையாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி, உக்ரேனிய நடுநிலைமை மற்றும் அதன் ஆயுதப் படைகள் மீதான வரம்புகள், அங்கு வசிக்கும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் பிராந்திய ஆதாயங்களை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பது குறித்து விவாதிக்கவும் புட்டின் தயாராக உள்ளார், இருப்பினும் இது எவ்வாறு செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உக்ரேன் தனது கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீதான ரஷ்யாவின் இறையாண்மையை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும், நேட்டோவில் சேர விரும்புகிறதா என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை உரிமையை கெய்வ் தக்க வைத்துக் கொள்கிறது என்றும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

கிரெம்ளின் சிந்தனையை நன்கு அறிந்த இரண்டாவது வட்டாரம், மேற்கத்திய அழுத்தத்தால் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார இழப்புகளையும் விட மொஸ்கோவின் இலக்குகளை புட்டின் மிக முக்கியமானதாகக் கருதினார் என்றும், ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்காக சீனா மற்றும் இந்தியா மீது வரிகளை விதிக்கும் அமெரிக்க அச்சுறுத்தல்கள் குறித்து அவர் கவலைப்படவில்லை என்றும் கூறியது.

போர்க்களத்தில் ரஷ்யாவின் கை மேலோங்கியுள்ளதாகவும், போரை நோக்கிச் செல்லும் அதன் பொருளாதாரம், பீரங்கி குண்டுகள் போன்ற முக்கிய ஆயுதங்களில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியின் உற்பத்தியை விட அதிகமாக உள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உக்ரேன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கை ஏற்கனவே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷ்யா, கடந்த மூன்று மாதங்களில் சுமார் 1,415 சதுர கிமீ (546 சதுர மைல்) முன்னேறியுள்ளது என்று உளவுத்துறை வரைபடமான DeepStateMap இன் தரவுகள் தெரிவிக்கின்றன.

chart.png?ssl=1

ஷ்யா தற்போது கிரிமியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, அதை 2014 இல் இணைத்துக் கொண்டது.

மேலும் லுஹான்ஸ்க் கிழக்குப் பகுதி முழுவதையும், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் பகுதிகளின் 70% க்கும் அதிகமான பகுதிகளையும், கார்கிவ், சுமி மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பகுதிகளின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான மோதலான ரஷ்ய – உக்ரேன் போரில் 1.2 மில்லியன் மக்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்கா கூறுகிறது.

ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தங்கள் இழப்புகளுக்கான முழு புள்ளிவிவரங்களையும் வழங்கவில்லை.

மேலும் மொஸ்கோ மேற்கத்திய மதிப்பீடுகளை நிராகரிக்கின்றது.

போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த பின்னர் 2025 ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப், ரஷ்யாவுடனான உறவுகளை சரிசெய்ய முயன்று வருகிறார்.

புட்டினுடன் குறைந்தது ஆறு முறை தொலைபேசியில் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439332

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.