Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 JUL, 2025 | 09:12 AM

image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. 

உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும். உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/220419

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதியில் பரப்புவதற்கான மணலை வழங்குவதில் இடர்ப்பாடு - அகில இலங்கை இந்து மாமன்றம் விடுத்த கோரிக்கை 

24 JUL, 2025 | 04:25 PM

image

(எம்.நியூட்டன்)

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அவ்வீதிக்கு மணல் வழங்குவது அவசியமாகும். எனவே அதன் இடர்ப்பாட்டை கவனத்தில் எடுக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழாவை முன்னிட்டு அடியவர்களின் நன்மை கருதி வீதிக்கு மணல் பரப்புவது வழக்கம். 

இந்த ஆண்டு மணல் பெறுவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என அறிகிறோம். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகள் செய்யும் திருவீதி தார்வீதியாக உள்ளது. உடனடியாக மணல் வழங்குவதற்கான ஏற்பாட்டை பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்யவேண்டும். 

இவ்விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர ஆணையாளர் துரித நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காலந்தோறும் நான்கு வீதியும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து தெய்வீகமாக நடைபெறும் திருவிழாச் சிறப்பை பேணுவதற்கு அனைவரும் உடன் அக்கறை எடுங்கள். இந்து சமய திணைக்களம், சமய விவகார அமைச்சு இத்தகைய விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். 

பல ஆயிரம் மக்கள் கூடும் திருத்தலங்களில் நடைபெறும் திருவிழாக் கால ஒழுங்குகளை பேண உதவுங்கள். இவ்விடயம் தொடர்பாக அனைத்து பொறுப்பு வாய்ந்தவர்களும் கூடிய அக்கறை எடுக்குமாறு சைவ மக்கள் சார்பில்  அனைவரது கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/220835

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் ஆலயத்தில் வருகிற செவ்வாய் கொடியேற்றம் - ஏற்பாடுகள் மும்முரம்

25 JUL, 2025 | 05:49 PM

image

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியினை சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதியும்,

24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும்,

மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் நிகழ்த்தப்படுவதோடு, மகோற்சவம் நிறைவு பெறும்.

https://www.virakesari.lk/article/220939

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.