Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

20 JUL, 2025 | 12:42 PM

image

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/220451

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

Published By: DIGITAL DESK 3

20 JUL, 2025 | 12:42 PM

image

திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள்   கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/220451

கக்கீமின் குரலற்ற குரலமைப்பு ...இப்ப பைலுடன் அங்கு நிற்பினமே

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

கக்கீமின் குரலற்ற குரலமைப்பு ...இப்ப பைலுடன் அங்கு நிற்பினமே

சொல்லத்தான் வந்தேன் தேவையில்லை என்றாகி விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அன்று அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது, இன்று அது அப்படி நடந்திருக்காவிட்டால் இன்று இதை தவிர்த்திருக்க முடியாதுஎன எண்ணத் தோன்றும். அன்று உண்மை தெரியாமல் தவித்த உள்ளம் இன்று அது வெறும் தந்திரம் என தெளிவடைகிறது. நாம் ஒரு நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறோம், காலம் தன் நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறது. அறியப்படாத உண்மையுமில்லை, வெளிவராத ரகசியமுமில்லை. அன்று காதோடு காதாக பேசியது, இன்று கூரை மீதிருந்து அறிவிக்கப்படுகிறது. நேற்று தீயாகி எனப்பட்டவன் இன்று துரோகம் வெளிப்பட்டு நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குழப்பமா, ஒருவருக்குத்தானா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் மனித எச்சங்கள்; எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு

Published By: DIGITAL DESK 3

23 JUL, 2025 | 03:06 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும்  30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர்.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. 

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம்  குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது.

WhatsApp_Image_2025-07-23_at_2.12.48_PM.

WhatsApp_Image_2025-07-23_at_2.12.55_PM.

WhatsApp_Image_2025-07-23_at_2.12.47_PM.

WhatsApp_Image_2025-07-23_at_2.12.28_PM_

https://www.virakesari.lk/article/220726

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் மனித எச்சங்கள் வழக்கு; விசேட மாநாடு 06ஆம் திகதி

Published By: DIGITAL DESK 3 30 JUL, 2025 | 04:08 PM

image

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது வழக்கு மாநாடு ஒன்றிற்காக எதிர்வரும் 06ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாநாட்டுக்கு வர வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கானது கடந்த தவணை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தலுக்கு அமைய இன்று புதன்கிழமை (30) அழைக்கப்பட்டபோது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து நீதிமன்ற அறிக்கையினை கோரியிருந்து. குறித்த அறிக்கைகளை ஆராய்ந்த நீதிபதி  எச்.எம். தஸ்னீம் பௌசான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்படி, குறித்த மனித எச்சங்கள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாகவும், அவற்றை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தி குறித்த எச்சங்கள் காயங்களினூடாக ஏற்பட்ட மரணமா, அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பிலும் குறித்த எச்சங்கள் குற்றத்தின் ஊடான மரணத்தின் மூலம் சம்பந்தப்பட்டவையா? என அறிய வேண்டி இருப்பதால் இதனை மேலும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று தொல்பொருளியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த பிரதேசத்தில் மயானம் இருந்ததாகவோ அல்லது மயானமாக பயன்படுத்தப்பட்டது சம்பந்தமாகவோ அல்லது தொல்லியல் திணைக்களத்திற்குரிய பிரதேசமாக இருந்ததாகவோ எவ்வித துல்லியமான தகவல்கள் இல்லை எனவும் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த அறிக்கைகளின் பிரகாரம் குறித்த பிரதேசத்தில் அகழ்வுப்பணியை மேற்கொள்வதா, இல்லையா, என்பது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றின் மூலம் அதற்கான தீர்மானத்தை எடுப்பதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி புதன்கிமை வழக்கு மாநாடு ஒன்றை நடாத்துவதற்காக திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி குறித்த பகுதியை மூதூர் நீதிமன்ற நீதிபதி மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன்போது சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகின்றது.

https://www.virakesari.lk/article/221381

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு: சட்டத்தரணிகள் குழு நேரில் ஆய்வு

Published By: DIGITAL DESK 2

31 JUL, 2025 | 09:25 PM

image

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில், சட்டத்தரணிகள் குழுவினர் வியாழக்கிழமை (31) நேரில் விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது.இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.

புதன்கிழமை (30)மூதூர் நீதிமன்ற நீதிபதி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அதன்படி, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையைப் பெற்று, எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக சட்ட மாநாடு ஒன்றை நடத்த அவர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் (ஜூலை 31) சம்பூர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழுவினர், குறித்த பகுதியை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அப்பகுதி கிராம மக்களுடனும் விரிவாக உரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.  

WhatsApp_Image_2025-07-31_at_13.37.41.jpWhatsApp_Image_2025-07-31_at_13.37.43.jpWhatsApp_Image_2025-07-31_at_13.37.49.jp

https://www.virakesari.lk/article/221454

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' அல்ல

Published By: VISHNU

31 JUL, 2025 | 09:56 PM

image

கிழக்கு மாகாணத்தில் அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு அருகில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் 'ஒரு மயான பூமி' என்ற கூற்றை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

3000.jpeg

அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களின் உரிமையாளர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய மேலும் ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

4000.jpeg

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம் ஜூலை 20 அன்று மண்டை ஓடு உள்ளிட்ட எலும்புகளைக் கண்டுபிடித்தது.

1000.jpeg

ஜூலை 30 ஆம் திகதிக்குள் அந்த இடத்தின் வரலாறு குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு உத்தரவிட்ட மூதூர் நீதிபதி, அகழ்வாய்வு குறித்த அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

புதன்கிழமை (ஜூலை 30) வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மனித புதைகுழி இருந்ததா அல்லது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணியா என்பதை துல்லியமாக உறுதிப்படுத்தக்கூடிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித எலும்புகள் நீண்டகாலத்திற்கு உட்பட்டவையாக இருப்பதாக திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி நிர்மால் பொறுக்கம தனது அறிக்கையில் மூதூர் நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அந்த எச்சங்களுக்குரிய நபர்களின் மரணம், காயங்களினூடாக ஏற்பட்டதா அல்லது இயற்கை மரணமா அல்லது ஏதாவது குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புபட்டவையா? என்பதை  தீர்மானிக்க மேலும் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

சம்பூர் கடற்கரையில் கண்ணிவெடி அகற்றும் பணியை மேற்கொள்ளும் பிரித்தானியாவைச் சேர்ந்த MAG நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்திற்கு நிபுணர் அறிக்கையை வழங்குவதற்காக சட்ட வைத்திய அதிகாரி கள ஆய்வு நடத்தியுள்ளதாகவும், அந்த இடத்தில் பல மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை கண்டுள்ளதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டு நிபுணர் அறிக்கைகளின் அடிப்படையில், அரச பகுப்பாய்வுத் திணைக்களம், திருகோணமலை சட்ட வைத்திய அதிகாரி, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், தொல்பொருள் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் பொலிஸார் உள்ளிட்டோரை, அந்த இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றத்தில் கூடுமாறு நீதவான எச். எம். தஸ்னீம் பௌசான்  உத்தரவிட்டதாக எமது நீதிமன்ற ஊடகவியலாளர் குறிப்பிடுகின்றார்.

57 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரியூட்டியும் கொலை செய்யப்பட்ட, இலங்கை இராணுவத்தின் மீது குற்றம் சாட்டப்படும், ஜூலை 7, 1990 சம்பூர் படுகொலையின் நினைவாக பாதிக்கப்பட்ட கிராம மக்களால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

https://www.virakesari.lk/article/221496

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

02 Aug, 2025 | 04:27 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

திருகோணமலை சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோரத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (2) மூதூர் நீதிமன்ற நீதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அக்காணியின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அந்தப் பகுதியில் அகழ்வு மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 6ஆம் திகதி சட்ட மாநாடு ஒன்றுக்கு திகதியிடப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு இன்றைய தினம் திடீர் விஜயம் மேற்கொண்டு காணி உரிமையாளர்களுடன் மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் கலந்துரையாடினார்.

WhatsApp_Image_2025-08-02_at_3.56.53_PM_

கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை MAG என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளைக் கண்டெடுத்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் திகதி மூதூர் நீதிமன்ற நீதிபதி, அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம், குற்றவியல் தடயக் காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.

WhatsApp_Image_2025-08-02_at_3.56.53_PM_

அதன் பின்னர் அப்பகுதியில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் இருந்து நீதிபதியால் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன. 

அந்த அறிக்கைகள் கடந்த 30ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது அதனை ஆராய்ந்த நீதிபதி எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சட்ட மாநாடு ஒன்றிற்கு திகதியிடப்பட்டுள்ளதுடன் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேலும் சில மண்டை ஓடு, கை, கால், முள்ளந்தண்டு மற்றும் விலா என்புத் தொகுதிகளைக் கொண்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வருகிறது.

WhatsApp_Image_2025-08-02_at_3.56.54_PM.

https://www.virakesari.lk/article/221628

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் - அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு 

06 AUG, 2025 | 08:20 PM

image

மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 - 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 - 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி,

இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-08-06_at_6.12.23_PM.

WhatsApp_Image_2025-08-06_at_6.12.22_PM.

WhatsApp_Image_2025-08-06_at_6.12.22_PM_

WhatsApp_Image_2025-08-06_at_6.12.22_PM_

https://www.virakesari.lk/article/221981

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.