Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபத‌மிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது.

இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இயக்குநர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி 2006 ஆம் ஆண்டு சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களான கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான கிளேமோர் தாக்குதல் மற்றும் வெலிக்கந்தை விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து அன்றைய அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் குறித்து தமக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இத்தாக்குதல்களின் பின்னணியில் அரச உயர்மட்டத்தின் சில புள்ளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் போன்றோர் இருக்கலாம் என்று கூறியிருப்பதுடன், இத்தாக்குதல்களால் புலிகள் அடைந்த நலன்களைக் காட்டிலும் மகிந்தவும் பிள்ளையானும் மிக அதிகளவான நலன்களை அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

"எல்லையோர பிரதேசத்தின் பேய்கள்" எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது குற்றங்களுக்கான தண்டனைகள் அனைத்திலும் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பிள்ளையானின் வன்முறைகள் குறித்து பேசியிருக்கும் அநுருத்த, இப்படுகொலைகளுக்கான காரணத்தை ஆராய்வதோடு இக்கொலைகளை நீண்டகாலமாகவே மகிந்த அரசு புலிகள் மீது சுமத்தியிருந்தமை குறித்தும் தனது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறார். ஜனாதிபதி அநுரவின் சர்வதேச ஊடகத்துறையின் இயக்குநராகவும், மூலோபாய தொலைத்தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும் அநுருத்தை மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

"இப்படுகொலைகள் இரண்டுமே உடனடியாக புலிகள் மீது சுமத்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அப்போது வரிந்திருந்த முற்றான போர் எனும் முயற்சிக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் காரணியாக இத்தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனாலும் இருபது வருடங்களுக்குப் பின்னர் மகிந்தவின் இத்தாக்குதல்கள் தொடர்பான விவரணங்கள் மீது மிகக் கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது.இத்தாக்குதல்களை உண்மையாகவே திட்டமிட்டது யார்? போரிற்குப் பின்னரான அரசியல் கட்டமைப்பில் இக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் த‌ண்டணைக்குப் பதிலாக அரசியற் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது எங்கணம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 ஆம் ஆண்டு வைகாசியில் வெலிக்கந்தைப் பகுதியில் வயல்களில் வேலைசெய்த 13 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதேயாண்டு ஆனியில் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் ஆகியவற்றில் சுமார் 75 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இலங்கையில் அப்போது இடபெற்றுவந்த போரிற்கான சர்வதேசத்தினதும், உள்நாட்டினதும் நிலைப்பாடுகளை தீர்மானித்த மிக முக்கியமான சம்பவங்கள் என்று இவற்றைக் கூறினால் அது மிகையாகாது.

இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிவித்திருந்தபோதிலும், இத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை அன்றிருந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவினால் அழுத்தம் திருத்தமாக வழங்க முடியாது போயிருந்தது.

ஆனாலும், அநுருத்த இதுபற்றிக் கூறுகையில், அக்காலத்தில் இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் பிரமுகர்களான கருணா மற்றும் பிள்ளையானின் செயற்பாடுகள் இத்தாக்குதல்களின் பின்னால் இருந்திருக்கின்றன என்று சந்தேகிக்கின்றார். மிகவும் பாதுகாப்பானதும், இராணுவ மயப்படுத்தப்பட்டதுமான சிங்களப் பிரதேசங்களுக்குள் இராணுவத்தினரினதும், அவர்களோடு சேர்ந்தியங்கும் கருணா ‍ பிள்ளையான் ஆயுதத் தாரிகளினதும் அனுமதியின்றியோ, அவர்களின் ஆதரவு இன்றியோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலோ புலிகளாலோ அல்லது வேறு எவராலுமோ இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதென்பது மிகவும் கடிணமானது என்று அவர் வாதிடுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்தாக்குதல்களால் பயனடைந்தது யார்?

இத்தாக்குதல்களை யார் நடத்தினார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, இத்தாக்குதல்களால் பயன்பெற்றது யாரென்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று வாசகர்களிடம் அவர் கோருகிறார் .

"மகிந்தவைப் பொறுத்தவரை இத்தாக்குதல்கள் சிங்களத் தேசியவாதத்தினை உருவேற்றி விட்டதுடன், அவரது கனவான முற்றான போர் மூலம் தீர்க்கமான வெற்றி எனும் குறிக்கோளிற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆதரவினை பெருமளவில் திரட்ட முடிந்திருந்தது".

"பிள்ளையானையும் அவரது துணை ராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரையில் இத்தாக்குதல்கள் அவர்களை மகிந்தவிற்கு மிகவும் விசுவாசமானவர்கள் எனும் அந்தஸ்த்தினை வழங்கியதுடன், அவர்களுக்கான அரசியல் நியாயப்பட்டினையும் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது".

"ஆனால் புலிகளைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு சர்வதேசத்தில் இருந்த நியாயப்பட்டினையும், அனுதாபத்தினையும் இத்தாக்குதல்கள் கடுமையாகச் சிதைவடையச் செய்திருந்ததுடன், அரசுசார்பான நிலைப்பாட்டினை சர்வதேசம் எடுக்கவும் காரணமாகியிருந்தது".

இத்தாக்குதல்களில் பிள்ளையான் ஆற்றியிருக்கும் பங்கு என்பது அவரது திடீர் அரசியல் எழுச்சியுடனும், மகிந்தவின் மீள்வருகையின் பின்னர் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் அந்தஸ்த்தினைப் பெற்றுக்கொண்டதுடனும் இணைத்துப் பார்க்கப்படல் அவசியம் என்று அநுருத்த கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு கொழும்பு உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் பிள்ளையானின் ஒருங்கிணைப்புச் செயலாளரைப் படுகொலை செய்தது, பிள்ளையானை ஒரு காலத்தில் வளர்த்துவிட்டதுமான அதே அரச புலநாய்வுக்கட்டமைப்பு தான் என்று கருதும் அநுருத்தை, அப்படுகொலையின் மூலம் அது பிள்ளையானுக்கு வழங்கிய செய்தி , "நீ எனக்குக் கீழ் சேவை செய்யலாம், ஆனால் ஒருபோதும் என்னை மீறி நடக்கமுடியாது" என்பதுதான் என்றும் அநுருத்த கூறுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்தான முற்றான விலக்கு எனும் கொள்கை

2005 ஆம் ஆண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை முதல் மிக அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள் வரை பல படுகொலைகள் மற்றும் வன்முறைகளுடன் நேரடியான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும்கூட இன்றுவரை பிள்ளையானினால் அரசியலில் தொடர்ச்சியாகத் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்க முடிவது குறித்து அநுருத்த கேள்வியெழுப்புகிறார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையினையடுத்து 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் 2020 ஆம் ஆண்டு முக்கிய சாட்சியம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமையினையடுத்து சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். பின்னாட்களில் பிள்ளையானை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் குறித்து அவ்வப்போது விசாரித்திருந்த‌போதிலும் ஒருபோதும் அவர்மீது சட்டபூர்வாமான குற்றச்சாட்டினைப் பதியவில்லை.

"பிள்ளையான் போன்ற நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களிடம் வெகு சாதாரணமாக நட்புப் பாராட்டி வரும் நிலையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும். மேலும் நீதி என்பது வசதிக்காகப் பாவிக்கப்படும் கருவியாகவே தெரியும்" என்றும் அவர் கூறுகிறார்.

அநுருத்தவின் அறிக்கையூடாக எழுப்பப்படும் கேள்விகள்.

குறிப்பாக கெப்பிட்டிக்கொல்லாவைப் படுகொலைகள் குறித்த அன்றைய அரசின் வெளிப்படுத்தலினை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிக்கையில் எழுதிய ரொஜர் ஞானேந்திரன், "பட்டப்பகலில், முற்றான இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களப் பிரதேசத்தினுள், அதிலும் 45 நிமிட நேரத்திற்கு முன்னர்தான் இராணுவத்தினரால் சல்லடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வீதியின் ஓரத்தில் கிளேமோர்க் குண்டுகளை வெடிக்கவைப்பதென்பது புலிகளுக்குச் சாத்தியமானதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும், அரச இராணுவத்தினரால் அல்லது அவர்களால் இயக்கப்படும் இன்னொரு குழுவினரால் அன்றி இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று அவ்வறிக்கை அன்று கூறியிருந்தது. தாக்குதல் நடந்தவிடத்திற்கு மகிந்த அதிரடியாகப் பிரசன்னமாகியிருந்தமை, கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கிற்கான செயற்பாடுகள் உடனடியாகவே செய்துகொடுக்கப்பட்டமை, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாகவே சர்வதேச ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை, தாக்குதல் நடந்த மறுகணமே வன்னியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரமான விமானக் குண்டுவிச்சு என்பவற்றைப் பார்க்கும்போது இத்தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலிகள் மீது வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தலினை கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலைத் தானே நடத்தியதன் மூலம் அரசு செய்துகொண்டது.

"மேலும், இப்படுகொலைக்கான பழியினை புலிகள் மீது போட்டுவிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இத்தாக்குதலுக்கான சாட்சியங்களை முன்வைப்பதை விடுத்து, "சிங்கள மக்களைக் கொல்லும் தேவையும், அதனைச் செய்யும் ஆற்றலும் புலிகளுக்கு மட்டுமே இருப்பதால், இத்தாக்குதலினை அவர்களே செய்தார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தமையானது புலிகள் மீதான சந்தேகம் என்பது எவ்வித விசாரணைக்கும் அப்பாற்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது என்பதைத்தான் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள்; தங்கள் போரினை நிஞாயப்படுத்தி, மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, ஆதரவைப்பெறவும், சர்வதேச நாடுகளிடம் நிதி, அனுதாபம், ஆலோசனைகளை பெறவும் நிகழ்த்தப்பட்டன. பொன்சேகாவே கூறியிருந்தார், தன்மீதும் கோத்தா மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டவும் போரின் தாக்குதலை அதிகரிக்கவும் செய்யபட்ட தந்திரம் என்று. இன்னும் பல எதிர்பார்க்கிறோம்! இதில் முஸ்லிமகளின் பங்கும் வெளிவர வேண்டும். வானுயர உயர்த்தப்பட்டு பாராட்டப்பட்டவர்கள் பாதாளம் வரை தாழ்த்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த அழிவு வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். இல்லையேல், மௌனமாக்கப்பட வாய்ப்புண்டு. இன்னும் சிறிது நேரத்தில் உதயன் கம்மன் பில கூப்பாடு போட்டுகொண்டு வருவார் சிங்களத்தை துயிலெழுப்ப.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?

முப்பத்தியொண்ணு புள்ளி மூணு நாலு ஏழு பர்சண்ட்டுங்க .. 😀 (31.347%)

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, ரஞ்சித் said:

குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்தான முற்றான விலக்கு எனும் கொள்கை

2005 ஆம் ஆண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை முதல் மிக அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள் வரை பல படுகொலைகள் மற்றும் வன்முறைகளுடன் நேரடியான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும்கூட இன்றுவரை பிள்ளையானினால் அரசியலில் தொடர்ச்சியாகத் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்க முடிவது குறித்து அநுருத்த கேள்வியெழுப்புகிறார்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையினையடுத்து 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் 2020 ஆம் ஆண்டு முக்கிய சாட்சியம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமையினையடுத்து சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். பின்னாட்களில் பிள்ளையானை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் குறித்து அவ்வப்போது விசாரித்திருந்த‌போதிலும் ஒருபோதும் அவர்மீது சட்டபூர்வாமான குற்றச்சாட்டினைப் பதியவில்லை.

"பிள்ளையான் போன்ற நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களிடம் வெகு சாதாரணமாக நட்புப் பாராட்டி வரும் நிலையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும். மேலும் நீதி என்பது வசதிக்காகப் பாவிக்கப்படும் கருவியாகவே தெரியும்" என்றும் அவர் கூறுகிறார்.

அநுருத்தவின் அறிக்கையூடாக எழுப்பப்படும் கேள்விகள்.

குறிப்பாக கெப்பிட்டிக்கொல்லாவைப் படுகொலைகள் குறித்த அன்றைய அரசின் வெளிப்படுத்தலினை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிக்கையில் எழுதிய ரொஜர் ஞானேந்திரன், "பட்டப்பகலில், முற்றான இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களப் பிரதேசத்தினுள், அதிலும் 45 நிமிட நேரத்திற்கு முன்னர்தான் இராணுவத்தினரால் சல்லடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வீதியின் ஓரத்தில் கிளேமோர்க் குண்டுகளை வெடிக்கவைப்பதென்பது புலிகளுக்குச் சாத்தியமானதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

மேலும், அரச இராணுவத்தினரால் அல்லது அவர்களால் இயக்கப்படும் இன்னொரு குழுவினரால் அன்றி இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று அவ்வறிக்கை அன்று கூறியிருந்தது. தாக்குதல் நடந்தவிடத்திற்கு மகிந்த அதிரடியாகப் பிரசன்னமாகியிருந்தமை, கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கிற்கான செயற்பாடுகள் உடனடியாகவே செய்துகொடுக்கப்பட்டமை, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாகவே சர்வதேச ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை, தாக்குதல் நடந்த மறுகணமே வன்னியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரமான விமானக் குண்டுவிச்சு என்பவற்றைப் பார்க்கும்போது இத்தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலிகள் மீது வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தலினை கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலைத் தானே நடத்தியதன் மூலம் அரசு செய்துகொண்டது.

"மேலும், இப்படுகொலைக்கான பழியினை புலிகள் மீது போட்டுவிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இத்தாக்குதலுக்கான சாட்சியங்களை முன்வைப்பதை விடுத்து, "சிங்கள மக்களைக் கொல்லும் தேவையும், அதனைச் செய்யும் ஆற்றலும் புலிகளுக்கு மட்டுமே இருப்பதால், இத்தாக்குதலினை அவர்களே செய்தார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தமையானது புலிகள் மீதான சந்தேகம் என்பது எவ்வித விசாரணைக்கும் அப்பாற்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது என்பதைத்தான் காட்டுகின்றது.

இந்த செய்திகளுக்கான மூலம் இருந்தால் பகிர்வும் ஐயனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

இந்த செய்திகளுக்கான மூலம் இருந்தால் பகிர்வும் ஐயனே

அரசில் அதிகாரத்தில் இன்று உள்ளவர்களும், அன்றிருந்த சில புலநாய்வார்களும் கெப்பிட்டிக்கொல்லாவை மற்றும் வெலிக்கந்தைத் தாக்குதல்களை மகிந்தவுக்காக பிள்ளையானே நடத்தினான் என்று கூறும்போதும் எம்மவர்களில் சிலர் இதனை நம்பத் தயாராக இல்லை. அதாவது புலிகளே இதனைச் செய்யக் கூடியவர்கள், அவர்களுக்கே இத்தேவை இருந்தது எனும் புலிகள் குறித்த தமது இயல்பான கணிப்பீட்டில் இருந்து இவற்றினை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பவில்லை என்பதற்காக இவை நடைபெறவில்லை என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை.

2019 இல் தாம் மீண்டும் பதவிக்கு வருவதற்காக 270 அப்பாவிகளைக் கொன்றவர்கள் 2006 இல் தமது யுத்தம் மூலமான தீர்விற்கு நாட்டையும், சர்வதேசத்தையும் தயார்ப்படுத்துவதற்காகவே தமது இனத்தில் பலரைக் கொன்றார்கள் என்பதை எம்மவர்களில் பலருக்கு நம்பக் கடிண‌மாக இருப்பது வியப்பே.

நீங்கள் கேட்டுக்கொண்டமையினால் தமிழ் கார்டியன் இணையத்தில் வந்த இணைப்பினைத் தருகிறேன். இத்தாக்குதல்கள் குறித்து செய்தியாளர் நிலாம்டீன் இரு யூடியூப் காணொளிகளை அண்மையில் பதிந்திருக்கிறார். அவற்றையும் முடிந்தால் இணைத்துவிடுகிறேன். கேளுங்கள்.

Sri Lankan presidential media official questions LTTE’s role in 2006 massacres | Tamil Guardian

https://youtu.be/uiR9yw5W3Q4?si=38FeGveyJXsjyX1V

https://youtu.be/ujr1w3faxEo?si=b5hIBMPgv0md2ngl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2006 ஆம் ஆண்டு ஆனி மாதம் 1 ஆம் திகதி வெலிக்கந்தையில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த 13 சிங்கள விவசாயிகளை அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த துணை ராணுவக்குழுவினரான கருணா குழுவினரே கொன்றார்கள் என்று கூறி அம்முகாமினை அகற்றுமாறு பல சிங்களவர்கள் ஏ 11 நெடுஞ்சாலையினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் இக்கொலைகளையும் மகிந்தவின் அரசு புலிகள் மீதே அன்று போட்டது.

Sinhala goons flock to A11 road in Welikanda

[TamilNet, Thursday, 01 June 2006, 14:47 GMT]
Hundreds of armed Sinhala goons flocked to the A-11 road in Welikanda around 7:45 p.m. Thursday, after a protest against the presence of the paramilitary group camps and the massacre of 13 Sinhala workers on Monday in the village of Omadiyamadu, once used by the paramilitary Karuna group. Senior Police officer in Batticaloa, S.M. Keerigala, has requested the police stations to block the traffic along A11 till normalcy until normalcy returned to the area, Police sources said. The traffic between Colombo and Batticaloa remains cancelled and Welikanda remains tense.

Hundreds of Sinhala villagers earlier demonstrated against the presence of paramilitary camps and the killings of 13 Sinhala workers on Monday.

Further details are not available at the moment.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?

64 killed, 94 wounded in Claymore blast in Kebitigollawe

[TamilNet, Thursday, 15 June 2006, 03:30 GMT]
64 passengers, including fifteen children and a Buddhist monk, were killed and around 94 wounded when a civilian bus was caught in a claymore mine blast near Kebitigollawe, 23 km southeast of Vavuniya, around 7:50 a.m. Thursday, police sources said. Wounded survivors were rushed to Kepitigollawe and Anuradhapura hospitals. The majority of victims are Sinhalese, officials said.

A Sri Lanka Army soldier and a homeguard were among the victims. Around 70 wounded persons were rushed to Anuradhapura hospital. 9 persons, including 2 children and 3 women, were transferred to Colombo hospital, medical sources said.

Five children were wounded.

Two claymore mines were used in the attack on the bus carrying 150 passengers, police said.

Sri Lankan Government officials blamed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the deadly attack.

"Denying the accusations, the Director of LTTE's Peace Secretariat, S. Puleedevan, said the LTTE condemned the attack on civilians in the strongest possible terms.

Mr. Puleedevan said the deadly attack, coming just after the return of an LTTE delegation which went to Norway, was a planned act carried out by paramilitary elements to destroy efforts to resume the stalled peace process.

The attack could be the work of forces seeking to create ethnic tension between Sinhalese and Tamils, as has occurred in Trincomalee, a police official in Vavuniya said".

One week ago, ten Tamil civilians, including three children, were killed and ten others, including two infants aged 3 and 8 months, were wounded when a pressure mine destroyed the tractor they were riding on.

The LTTE blamed deep penetration units of the Sri Lanka Army (SLA) for the attack inside a LTTE-controlled border village at Nedunkal in Vadamunai in Batticaloa. The military denied theaccusation.

The Sri Lankan Air Force (SLAF) has launched retaliatory airstrikes on Mullaithivu using Kfir bombers and fired artillery and rockets from multi-barrel launchers towards LTTE controlled areas in Muttur East in Trincomalee district.

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த தினமே சில மணிநேரத்திற்குள் முல்லைத்தீவு, சம்பூர், கிளிநொச்சி ஆகிய புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது கடுமையான விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்கள் நடந்த வேகத்தைப் பார்க்கின்றபோது, கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலின் விபரங்கள் முற்றாக வெளிவருமுன்னமே வன்னி மீதும், சம்பூர் மீது விமானத் தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஆக, யுத்தத்தினை வலிந்து ஆரம்பிக்கும் நோக்கத்திற்காகவே கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடத்தப்பட்டு, அது புலிகள் மீது சுமத்தப்பட்டு, பதிலடி வழங்குகிறோம் என்கிற போர்வையில் முழு அளவிலான யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

இம்மாதத்திலேயே ஐரோப்பிய ஒன்றியமும் புலிகள் மீதான தடையினைக் கொண்டு வந்திருந்தது. ஆக, சர்வதேசத்தினையும், உள்நாட்டில் சிங்களவர்களையும் தனது யுத்த முஸ்தீபிற்கு சம்மதிக்க வைக்கவே மகிந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலை நடத்தி அதன் பழியினை புலிகள் மீது போட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?

Kebitigollawe attack, senseless violence used for political ends - LTTE

[TamilNet, Thursday, 15 June 2006, 06:34 GMT]
The Claymore attack on Sinhala civilians in Kebitigollawe Thursday morning was "senseless violence used for political ends," the Liberation Tigers condemning the attack said in press release issued from Kilinochchi. Armed acts targeting civilians "cannot be justified under any circumstances," the press release said and charged Sri Lankan armed elements who have intensified their attacks on Tamil civilians for political ends, have also begun targeting Sinhala civilians with the aim of blaming the Tigers. The LTTE has urged the International media "not to fall prey for the reprehensible propaganda tactic."

"The attack in Kebitigollawe timed to occur immediately after the arrival of the LTTE delegation from Europe is a reprehensible act of murders with the sole aim of blaming the LTTE for the attack," the LTTE Press release said.

Since Geneva talks in February 250 civilians including 24 children have been murdered by GoSL operative forces in the NorthEast, the press release said.

கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் மூலம் மகிந்த டைய நினைத்த சர்வதேச ஆதரவினை வழங்க நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தன. அதற்கான சான்று ஒன்று,

Japan, Switzerland condemn claymore attack on passenger bus

[TamilNet, Thursday, 15 June 2006, 11:37 GMT]
Embassies of Japan and Switzerland in Colombo, in press releases issued Thursday, strongly condemned the attack on passenger bus in the region of Anuradhapura which killed several dozens of civilians including children and expressed condolences to the Sri Lankan people and the authorities.

Full text of the press release from the Swiss Embassy follows:

Switzerland strongly condemns the attack in Sri Lanka

The Federal Department of Foreign Affairs (DFA) was shocked to learn of the attack perpetrated on Thursday morning against a bus in the region of Anuradhapura in Sri Lanka, which killed several dozen people, including a large number of children. The DFA very strongly condemns this attack which has plunged the population of the entire region into mourning and which endangers a fragile ceasefire. Switzerland expresses its condolences to the Sri Lankan population and authorities. It hopes that the perpetrators of this act will be rapidly identified and brought to justice.

Switzerland is worried by the progressive deterioration of the situation in Sri Lanka, which is making the ceasefire between the Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) increasingly fragile. The terrorist attack on a civilian bus perpetrated this Thursday is unjustifiable. As well as being a personal tragedy for many families, it is a serious violation of the ceasefire agreement.

The Federal Department of Foreign Affairs calls on the parties to take urgent action to avoid an escalation that could have tragic results for the future of Sri Lanka and first and foremost for the civilian population, which is already severely affected. In this context, the DFA deplores that the LTTE's and the Sri Lankan Government's delegations did not meet in Oslo last week. The DFA reiterates its support for the Norwegian facilitator and expects the parties to return to the negotiating table as soon as possible to save the ceasefire, as this is an indispensable prerequisite for any peace talks.

Full text of the press release from Japanese Embassy follows:

Japan strongly condemns terrorist claymore attack on civilian bus

On behalf of the Government of Japan, Ambassador Akio Suda expressed his strongest condemnation of the terrorist claymore attack on a civilian bus on the morning of 15th June 2006 at Kebitigollewa in the Anuradhapura District, deliberately targeting common people. Such dastardly terrorist attacks particularly targeting innocent common people are never accepted by any community in this country or the international community.

Japan is deeply concerned about the recent increase in the incidents of violence and terrorist attacks in Sri Lanka and rejects any form of violence particularly acts of terrorism.

While condemning this attack in the strongest possible terms Japan hopes that despite this provocative terrorist attack a further deterioration of the situation would be avoided by all peace loving people of Sri Lanka.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதரங்களுக்கு நன்றி ரஞ்சித்.

9 hours ago, சாமானியன் said:

முப்பத்தியொண்ணு புள்ளி மூணு நாலு ஏழு பர்சண்ட்டுங்க .. 😀 (31.347%)

ஜோக்குகளுக்கு அப்பால்…

இப்படியானவற்றை சும்மா புலித்தேவனை வைத்து பொத்தாம் பொதுவாக மறுப்பறிக்கை விடாமல் - இதை விட வலுவாக புலிகள் ஆணித்தரமான மறுத்திருக்க வேண்டும்.

இதையே நான் அப்போதும் நினைத்தேன். இப்போதும் நம்புகிறேன்.

  1. இந்த தாக்குதல் நடந்த சமயம் - தலைவர் பிபிசியையோ அல்லது சி என் என் நையோ அழைத்து - திட்டவட்டமாக இதை தாம் செய்யவில்லை என ஒரு பேட்டி கொடுத்திருக்கலாம்.

  2. தம்மிடம் இருக்கும் ஆதாரங்களை பகிரங்கபடுத்தி - இதில் தமக்கு சம்பந்தம் இல்லை, யாருக்கும் சம்பந்தம் என கூறி இருக்கலாம்.

  3. இராஜதந்திர விடயத்தில் “குற்றம் சொன்னவர்தான் நிரூபிக்க வேண்டும்” என்ற கதை எடுபடாது. ஏலவே பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட, அல்லது அப்படி முத்திரை குத்தப்பட்ட இயக்கம், நடக்கும் சதியை புரிந்து கொண்டு, இந்த களங்கத்தை துடைக்க வலுவாக உழைத்திருக்க வேண்டும்.

  4. எவனை பற்றியும் எனக்கு கவலை இல்லை, எனது ஊரில் நாந்தான் ராஜா என்ற ஏண்டாப்பில், அல்லது யுத்தம் எப்படியாவது தொடங்கட்டும் (மகிந்தவை வெல்ல வைத்த அணுகுமுறை) போன்ற காரணங்களுக்காக இவற்றை இயக்கம் சும்மா ஒப்புக்கு ஒரு அறிக்கை என்ற அளவில் நிறுத்தி கொண்டது.

  5. இதனால் மகிந்தவின் சதி திட்டம் வெற்றியாகியது.

  6. இதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, ரஞ்சித் said:

அரசில் அதிகாரத்தில் இன்று உள்ளவர்களும், அன்றிருந்த சில புலநாய்வார்களும் கெப்பிட்டிக்கொல்லாவை மற்றும் வெலிக்கந்தைத் தாக்குதல்களை மகிந்தவுக்காக பிள்ளையானே நடத்தினான் என்று கூறும்போதும் எம்மவர்களில் சிலர் இதனை நம்பத் தயாராக இல்லை. அதாவது புலிகளே இதனைச் செய்யக் கூடியவர்கள், அவர்களுக்கே இத்தேவை இருந்தது எனும் புலிகள் குறித்த தமது இயல்பான கணிப்பீட்டில் இருந்து இவற்றினை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பவில்லை என்பதற்காக இவை நடைபெறவில்லை என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை.

2019 இல் தாம் மீண்டும் பதவிக்கு வருவதற்காக 270 அப்பாவிகளைக் கொன்றவர்கள் 2006 இல் தமது யுத்தம் மூலமான தீர்விற்கு நாட்டையும், சர்வதேசத்தையும் தயார்ப்படுத்துவதற்காகவே தமது இனத்தில் பலரைக் கொன்றார்கள் என்பதை எம்மவர்களில் பலருக்கு நம்பக் கடிண‌மாக இருப்பது வியப்பே.

நீங்கள் கேட்டுக்கொண்டமையினால் தமிழ் கார்டியன் இணையத்தில் வந்த இணைப்பினைத் தருகிறேன். இத்தாக்குதல்கள் குறித்து செய்தியாளர் நிலாம்டீன் இரு யூடியூப் காணொளிகளை அண்மையில் பதிந்திருக்கிறார். அவற்றையும் முடிந்தால் இணைத்துவிடுகிறேன். கேளுங்கள்.

Sri Lankan presidential media official questions LTTE’s role in 2006 massacres | Tamil Guardian

https://youtu.be/uiR9yw5W3Q4?si=38FeGveyJXsjyX1V

https://youtu.be/ujr1w3faxEo?si=b5hIBMPgv0md2ngl

தகவலுக்கு நன்றி ஐயனே.

கட்டுரைகள் எழுதும் போது ஆதாரங்கள் இணைத்தல் தகவல்கள் சரிபார்ப்பிற்கு உதவியாக இருக்கும்.

நன்றி

https://yarl.com/forum3/topic/304036-2006-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.