Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

459542465.jpg

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான அத்தியாயமாகவே உள்ளது என கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கறுப்புஜூலையை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு இனப்படுகொலை வெடித்தது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்  குடும்பங்கள் உடைந்தன எண்ணற்றோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

தமிழ்-கனடியர்களின் ஆதரவால் உந்தப்பட்டு 1983 ஆம் ஆண்டு துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடும் 1800க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை செயல்படுத்தியது மேலும் 2022 ஆம் ஆண்டில் கனடா நாடாளுமன்றம் மே 18 ஆம் தேதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒருமனதாக அறிவித்தது - இது உண்மைஇ நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நீடித்த அர்ப்பணிப்பாகும்.

இந்தக் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களையும் உயிர் பிழைத்தவர்களையும் நினைவு கூர்வதில் கனடா தமிழ்-கனடியர்களுடன் நிற்கிறது. இந்தப்  நாளில் இழந்த உயிர்களை நாங்கள் போற்றுகிறோம் அர்த்தமுள்ள நீதி மற்றும் பொறுப்புக்கூறலுடன் கூடிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான எங்கள் பணியை உறுதிப்படுத்துகிறோம்.

https://newuthayan.com/article/கறுப்பு_ஜூலை_இலங்கையின்_வரலாற்றில்_ஒரு_சோகமான_பகுதி__-_கனடா_பிரதமர்_கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன - கனடாவின் எதிர்கட்சி தலைவர்

Published By: RAJEEBAN

24 JUL, 2025 | 11:23 AM

image

தமிழ் மக்களிற்கு  எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர்  தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலையை குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இலங்கையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றது. இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் என கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் உயிர்கள் கௌவரத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன.

வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது - நடுங்கவைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது- தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர்.

நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள், கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிகொண்ட பாதிப்புகள் - விளையாட்டுப்பொருட்கள், புத்தகபைகள், ஆடைகள் - தெரியவந்துள்ளன.

ஈவிரக்கமற்ற தன்மை ஆழம் காணமுடியாதது,

தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை - அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல்போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை- செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது.

அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் - மௌனமாக்கப்பட்டார்கள் - இரகசியமாக புதைக்கப்பட்டார்கள்.

உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டிய, பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும, நீதிக்கான தேடலில் உறுதியாகயிருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது.

மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது.

https://www.virakesari.lk/article/220788

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை, அப்படி கதைப்பவர்களுக்கு எதிராக சட்டம் பாயும் என்று ஒரு பகுதி அச்சுறுத்துகிறது. இன்னொரு பகுதி அதற்கான ஆதாரங்கள் போதாது நிறுவுவதற்கு என்று வாதாடுகிறது. இத்தனைக்கும் காரணமான தாய் நாடு என்று இன்றும் நம்மவர் நம்பும் நாடு மௌனம் காக்கிறது. ஆனால் எங்கோ இருந்து ஒரு நாடு, இங்கு நடந்தது இனப்படுகொலைதான், தமிழரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று உரத்து சொல்கிறது. வழமைபோல் இது தேர்தல் உத்தி என்று கடந்து போகுமா இலங்கை?

  • கருத்துக்கள உறவுகள்

கலவரம் என்ற போர்வையில் இலங்கை அரசுகளால் வகை தொகையின்றித் தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட வருடங்கள்.

1958 கலவரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கை இனக் கலவரம், 1958

58 கலவரம் என அறியப்பட்ட இக்கலவரம் சிங்கள் தமிழ் இனத்தவரிடையே பொலனறுவை கொழும்புப் பகுதிகளில் ஏற்பட்டது.[6]

1977 கலவரம்

முதன்மைக் கட்டுரை: இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களை இலக்கு வைத்து, இக்கலவரம் நடத்தப்பட்டது.[2][7]

1983 கலவரம்

முதன்மைக் கட்டுரை: கறுப்பு ஜூலை

Tamil youth who attacked by the Sinhalese mobs, stripped naked on Colombo, 23 July 1983

கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது.[3]

2000 கலவரங்கள்பிந்துனுவெவை கலவரம்

முதன்மைக் கட்டுரை: பிந்துனுவேவா படுகொலைகள்

பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிரமாத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலை செய்யப்பட்டனர்.[4]

தலவாக்கலை-கொட்டகலை-அட்டன்-கினிகத்தனை

பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை,  கொட்டகலை, அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.[5][6][7][8][9][10][11]

2001 மாவனல்லை கலவரம்

2001 ஆம் ஆண்டு மாவனல்லை நகரிலும் அதற்கு அண்மையில் இருந்தப் பகுதிகளிலும் இருந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்டக் கலவரமாகும்.[12][13]

2006 கலவரங்கள்திருகோணமலை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.