Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே மோதல்; பிரதமர் ஹரிணியை விலகச் செய்ய சதி!

%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%95%E0

ஜே.வி.பி – தேசிய மக்கள் சக்தி இடையே உருவாகியுள்ள மோதல் நிலைமைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை தானாகவே பதவி விலகச் செய்து தமது பிரதமரை நியமித்துக்கொள்ள ஜே.வி.பியினர் திட்டமிடுகின்றனர் என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது என்னைப் பற்றி கூறியதுடன், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சூழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அதனை தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவர் கூறுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஜனாதிபதி மிகவும் அதிருப்தி நிலையில் இருந்து உரையாற்றுவதை போன்றே இருந்தது. ஜனாதிபதி கூறுவதை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியாக கூறுவது அரசாங்கத்தின் குறைபாடுகளையும், மோசடிகளையும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால் நான் மறைந்து அல்லாமல் வெளிப்படையாகவே அதனை செய்வேன்.

நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்.

இதேவேளை கடந்த 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் சுப்ரீம் சட் செயற்கை கோள் திட்டமானது வெளிநாட்டு முதலீடே தவிர இலங்கையினதோ, ராஜபக்‌ஷக்களினதோ முதலீடு அல்ல என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த கருத்து தவறு என்று பிரதமரின் அரசாங்கத்தில் உள்ள கனிஷ்ட அமைச்சரான வசந்த சமரசிங்க கூறியிருந்தார். அவ்வாறு பிரதமரின் கருத்து தவறு என்றால் பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ அதனை திருத்திக்கொள்ள முடியும். ஆனால் கனிஷ்ட அமைச்சரால் அதனை திருத்த முடியாது. வசந்த சமரசிங்க பிரதமரை உலகின் முன்னால் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார். அது அரசாங்கத்திற்குள் உள்ள திசைக்காட்டி ஜே.வி.பி மோதல் வெடித்துள்ளது என்பதனை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

கூடிய விரையில் அமைச்சரவை மறுசீரமைப்பொன்று இடம்பெறுமென்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மே மாதத்தில் கூறியிருந்தார். அப்போதே நாங்கள் இந்த முறுகல் நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இப்போது ஹரிணியை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி ஜே.வி.பியின் பிரதமராக பிமல் ரத்நாயக்கவை நியமிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஏன் ஹரிணியை நீக்கக்கூடாது என்று அமைச்சரவையில் ஜனாதிபதி 6 காரணங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெருமளவானவை ஜே.வி.பிக்கு உரியது அல்ல. திசைக்காட்டியின் தலைவராக ஹரிணியே இருக்கின்றார். அத்துடன் அரசாங்கத்தின் மேற்குலக நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதியாக ஹரிணியே இருக்கின்றார். அடுத்ததாக பிரபுக்கள் தரப்பு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதியாகவும் அவரே இருக்கின்றார். புத்திஜீவிகள் தொழில்வல்லுனர்கள் துறையிலும் பிரதமரே பிரதிநிதியாக இருக்கின்றார். இதனால் இப்போதைக்கு இவை அனைத்துக்கும் பிரதிநியான ஹரிணியிடமே அந்தப் பதவி இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தியில் இருக்கும் ஜே.வி.பி தலைவர்கள் பிரதமரை அதிருப்திக்குள் தள்ளி அவரை பதவி விலகச் செய்யவே முயற்சிக்கின்றனர் என்றார்.

https://akkinikkunchu.com/?p=336592

  • கருத்துக்கள உறவுகள்

Harini-scaled-1.jpg?resize=750%2C375&ssl

பிரதமர் பதவியில் மாற்றமில்லை! ஜனாதிபதியே பிரதமரைப் பாதுகாத்ததாக உதயகம்மன்பில விளக்கம்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது குறித்து  உதய கம்மன்பில தெரிவித்துள்ளதாவது ”  பிரதமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும்.
அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர்
பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது.

அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல, தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.

இதனை நாம் கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக
அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில்
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்துக் கொண்டுள்ளார்.

ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் பெரும்பாலானவை தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமானது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவராக பிரதமர் உள்ளார். மேற்குலக நாடுகளின் தூதரக பிரதிநிதியாகவும்,
அரசாங்கத்தின் பிரபுக்கள் வகுப்பின் பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார். அரசாங்கத்தை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதியாகவும், பாலின சமத்துவத்தின் பிரதிநிதியாகவும், கல்வி மற்றும் தொழில்துறை பிரதிநிதியாகவும் பிரதமர் உள்ளார்.

ஆகவே அவரை பதவி நீக்க முடியாது என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்துள்ளனர். பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு” இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1442747

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஏதோ ஒரு பிரச்சினை குமையிது....நெருப்பில்லாமல் புகைவராது....பாவம் நம்ம என்.பி .பி வாலுகள்..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

ஏதோ ஒரு பிரச்சினை குமையிது....நெருப்பில்லாமல் புகைவராது....பாவம் நம்ம என்.பி .பி வாலுகள்..

நீங்கள் எதிர்க்கட்சிகளில் இருந்த போது அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கான சூழ்ச்சிகளில் ஈடுபட்டீர்கள். கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலங்களிலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்காமல் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்க முயற்சிகளை செய்தது நீங்களே. இவ்வாறான நிலைமையில் உங்களை போன்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுட்டதை போன்று எங்களை பார்க்க வேண்டாம் என்று கூறுகின்றோம்

5 minutes ago, alvayan said:

பிரச்சினை குமையிது

  • கருத்துக்கள உறவுகள்

531628016_1183776117120692_8898297081320

531873245_1182106403954330_3519327965669

530618818_1182916643873306_5215693647174

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.