Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 05:12 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது.

இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்  (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது.

இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.

குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும்.

5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன.

லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும்.

icc_women_s_world_cup_prize_money.png

https://www.virakesari.lk/article/223953

Edited by ஏராளன்

  • ஏராளன் changed the title to ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு

Published By: Digital Desk 1

11 Sep, 2025 | 12:54 PM

image

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது.

மகளிருக்கான உலகக் கிண்ணப்போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது.

குவஹாத்தியில் நடைபெறும் ஆரம்ப போட்டியில்; இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியின் தலைவராக சாமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துணைத்தலைவராக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவில்,  ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே,ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, இமேஷா துலானி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/224808

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2025 Women's World Cup - இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர் அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 271 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்திய மகளிர் அணி நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிய போது மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதன்படி, இந்திய அணி 47 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய மகளிர் அணி சார்பில் டீப்தி ஷர்மா 53 ஓட்டங்களையும் மற்றும் அமன்ஜோத் கவுர் 57 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இனோகா ரணவீர 4 விக்கெட்டுக்களையும் மற்றும் உதேஷிகா பிரபோதினி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, டக்வோர்த் லூயிஸ் முறைபடி, இலங்கை அணிக்கு 271 என்ற ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmg6o4qq400q9qplpnw7u0sr9

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Live

1st Match (D/N), Guwahati, September 30, 2025, ICC Women's World Cup

India Women FlagIndia Women

(47/47 ov) 269/8

Sri Lanka Women FlagSri Lanka Women

(27/47 ov, T:271) 130/5

SL Women need 141 runs from 20 overs.

Current RR: 4.81

 • Required RR: 7.05  • Last 5 ov (RR): 28/3 (5.60)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

RESULT

2nd Match (D/N), Indore, October 01, 2025, ICC Women's World Cup

PrevNext

Australia Women FlagAustralia Women

326

New Zealand Women FlagNew Zealand Women

(43.2/50 ov, T:327) 237

AUS Women won by 89 runs

Player Of The Match

Ashleigh Gardner, AUS-W

115 (83)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 ; இலங்கை வந்தடைந்தது இந்தியா மற்றும் இலங்கை அணிகள்

02 Oct, 2025 | 10:05 AM

image

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை - 2025 போட்டிகளுக்காக இந்தியா சென்றிருந்த  இலங்கை மற்றும் இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணிகள், நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

அவர்கள் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 08.35 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் 8 D. - 522 இல் இந்தியாவின் குவஹாத்தியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20251002-WA0016.jpg

IMG-20251002-WA0009.jpg

IMG-20251002-WA0014.jpg

IMG-20251002-WA0015.jpg

IMG-20251002-WA0011.jpg

https://www.virakesari.lk/article/226642

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுக்கு 248 ரன்கள் இலக்கு; கைகுலுக்க மறுத்த கேப்டன்கள் - பெண்கள் உலகக் கோப்பையில் என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர்.

100 ரன்களை கடந்த இந்தியா:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது.

அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர்.

அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி.

அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார்.

ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது.

இடையில் நிறுத்தப்பட்ட போட்டி:

மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார்.

35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி.

இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர்.

இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

200 ரன்கள்

தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பரபரப்பான இறுதிகட்டம்

ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார்.

பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார்.

பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது.

கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா.

அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது.

ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார்.

ப்ளேயிங் XI

50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங்

பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா சிமி பின‌லில் தோத்து வெளிய‌ போனால் இந்தியா ம‌ற்ற‌ அணிக‌ள் எதுவாயினும் வென்று விடுவின‌ம்.........................அவுஸ்ரேலியா பின‌லுக்கு வ‌ந்தாலும் க‌ட‌ந்த‌ கால‌ பிழைக‌ளை இந்தியா ச‌ரி செய்து கோப்பைய‌ வெல்ல‌னும்.................இதுவ‌ரை ஒரு உல‌க‌ கோப்பைய‌ கூட‌ இந்தியா வென்ற‌து கிடையாது.................இப்போது இருக்கும் அணி கோப்பை வெல்ல‌ த‌குதியான‌ அணி........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உலகக் கோப்பை; பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பிரமாண்ட வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு

5 அக்டோபர் 2025

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்காதது சர்ச்சையானதை அடுத்து இன்றைய போட்டியிலும் இது பிரதிபலிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதேநிலை மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலும் நீடித்தது. ஆண்கள் அணியைப்போலவே பெண்கள் அணிகளின் கேப்டன்களும் டாஸ்-க்கு பிறகு கைகுலுக்கிக் கொள்ளவில்லை. ஹர்மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கும், பாத்திமா சனா பாகிஸ்தானுக்கும் கேப்டனாக உள்ளனர்.

100 ரன்களை கடந்த இந்தியா:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் ஹர்மன்ப்ரீத் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 32 பந்துகளில் 4 பவுண்டரிகளை விளாசி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு, பேட்டிங் செய்ய வந்த பிரதிகா ராவல், 37 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்த நிலையில் 22 ஓவர் முடிவில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது.

அதன்பின் அணிக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் ஹர்லீன் தியோல், ஜெமிமா களத்தில் நிலையாக ஆட்டத்தை வெளிப்படுத்து வந்தனர்.

அதன்பின் 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 136 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி.

அதன்பிறகு விக்கெட் இழப்பின்றி ஆடி வந்தது. ஹர்லீன் தியோல் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து நம்பிக்கையூட்டி வந்தார். இந்த நிலையில் 33வது ஓவரின் முதல் பந்தில் அவரும் விக்கெட்டை பறிகொடுத்தார். 65 பந்துகளில் 46 ரன்களை சேர்த்திருந்தார்.

ரமீன் ஷமாம் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது நஷ்ரா சாந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இந்த கட்டத்தில இந்திய அணி 154 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து இருந்தது.

இடையில் நிறுத்தப்பட்ட போட்டி:

மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைதானத்தில் பூச்சிகள் பறந்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மைதானத்தில் வீரர்களின் தலைகளுக்கு மேலே அதிகளவில் பூச்சிகள் பறந்து கொண்டே இருந்ததால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட பிறகு மீண்டும் தொடங்கியது.

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் மைதானத்திற்கு திரும்பி ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெமிமா, தீப்தி சர்மா பார்னர்ஷிப்பில் இந்திய அணி விளையாடி வந்த நிலையில், ஜமிமா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். நஷ்ரா சந்து வீசிய பந்தில் LBW முறையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவருக்கு பதிலாக வளது கை பேட்டர் சினே ராணா களத்திற்கு வந்தார்.

35வது ஓவர் சற்று இந்திய அணிக்கு சற்று சவாலானதாகவே அமைந்தது. ரமாம் வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 1 ரன் மட்டுமே எடுத்தது. 36வது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி.

இதனைத் தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா இணைந்து அணிக்காக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். இருவரும் போராடி 43வது ஓவரில் 190 ரன்களை கடக்க உதவினர்.

இதற்கிடையில் கிரீஸ் கோட்டிற்குள் செல்ல முயன்ற ராணாவிற்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

200 ரன்கள்

தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீப்தி சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சினே ராணா, தீப்தி சர்மா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 44.1வது ஓவரில் ராணா அவுட்டானார். 33 பந்துகளில் 20 ரன்கள் விளாசிய நிலையில் ஃபாத்திமா சனா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

பின் அவருக்கு பதிலாக ரிச்சா கோஷ் களமிறங்கினார். அந்த சமயத்தில் களத்திற்கு ஏற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்ட தீப்தி சர்மாவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டையானா வீசிய பந்தை அடிக்க முயன்றபோது சித்ரா நவாஸ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். எனினும் இந்திய அணி 46 ஓவர்களில் 200 ரன்களை கடந்திருந்தது. 7 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

பரபரப்பான இறுதிகட்டம்

ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்தார்.

பின் ரிச்சா கோஷ் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாச ஆட்டம் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்த நிலையில் ஸ்ரீ சரணி அவுட்டாக அவருக்கு பதிலாக கிராந்தி கவுட் களமிறங்கினார். தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார்.

பின் இன்னிங்ஸின் இறுதியில் ரிச்சாவும் பவுண்டரி விளாச, இவர்களின் பாட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது.

கடைசி ஓவரை வீச பாகிஸ்தான் அணியில் இருந்து பெய்க் வந்தார். அவர் வீசிய முதல் பந்தையே பவுண்டரிக்கி அனுப்பினார் ரிச்சா.

அவர் வீசிய 2வது பந்தை ரிச்சா தூக்கி அடித்தபோது விக்கெட்டுக்கான வாய்ப்பு தென்பட்டது. கேட்சாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு பாகிஸ்தான்ல வீரங்கனைகள் மோதி கேட்சை தவறவிட்டனர். இதனால் ரிச்சாவின் விக்கெட் காப்பாற்றப்பட்டது.

ஆனால் இந்த சந்தோஷனம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதற்கடுத்த சில பந்துகளிலேயே கிராந்தி அவுட்டாக, அதன்பின் வந்த ரேணுகா சிங்கும் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 247 ரன்களை சேர்த்தது. ரிச்சா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 35 ரன்களை சேர்த்திருந்தார்.

2வது இன்னிங்ஸில் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை மலமலவென இழந்தது.

50 ஓவர்களில் 278 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில், 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அதன்பிறகு 17.3வது ஒவரில் சித்ரா அமின் சிக்ஸர் அடித்தார். 12 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அடித்த முதல் சிக்ஸர் இது என கிரிக்பஸ் குறிப்பிட்டுள்ளது.

இது பாகிஸ்தான் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தாலும், அதன்பின் அதிக ரன்கள் சேர்க்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான்.

2 விக்கெட்டுகளை இந்திய வீராங்கனை கிராந்தி கைப்பற்றினார்.

அதன்பிறகு சித்ரா, நடாலியா பாட்னர்ஷிப் நிதானமாக விளையாடி வந்தனர்.

அதற்குள் 27.1 ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. 33 ரன்கள் எடுத்திருந்த நடாலியா, கிராந்தி வீசிய பந்தில் அவுட்டானார்.

30 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.

அதே சமயம் இந்திய அணி 22 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்திருந்தது.

இதற்கிடையில் மீண்டும் 30.5வது ஓவரில் மற்றொரு விக்கெட் பறிபோனது. தீப்தி சர்மா வீசிய பந்தில் ஃபாத்திமா சனா அவுட்டானார்.

சித்ரா அமின் 84 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அணிக்காக போராடி பவுண்டரிகளை விளாசினார்.

இதன் பின்னர் ஆட்டம் படிப்படியாக இந்திய அணி பக்கம் திரும்பியது. 43 ஓவர்களிலேயே 159 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்தது.

ப்ளேயிங் XI

50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 247 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ரேணுகா சிங்

பாகிஸ்தான் அணி: முனீபா அலி, சதாப் ஷம்ஸ், சித்ரா அமீன், அலியா ரியாஸ், நடாலியா பர்வேஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், டயானா பெய்க், சித்ரா நவாஸ் (விக்கெட் கீப்பர்), நஷ்ரா சந்து, சாடியா இக்பால்

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62qeejmmlmo

  • கருத்துக்கள உறவுகள்

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை பெத் மூனியின் அபார சதம் மீட்டெடுத்தது; அலானாவும் சிறந்த பங்களிப்பு

08 Oct, 2025 | 09:55 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது.

தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது. 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார்.

அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

0810_beth_mooney_aus_vs_pak.jpg

0810_Fatima_Sana_and_Nashra_Sandhu_were_

https://www.virakesari.lk/article/227265

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை பந்தாடியது நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா

08 Oct, 2025 | 10:15 PM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இறுதியில் 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

இந்தப் போட்டி முடிவுடன் பாகிஸ்தான் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 13ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும் கடைசி 4 விக்கெட்களில் 65 ஓட்டங்கள் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

முன்வரிசையில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சித்ரா ஆமின் 35 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ரமீன் ஷமின் 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 11 ஓட்டங்களையும் பின்வரிசையில் நஷ்ரா சாந்து 11 ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தது.

பந்துவீச்சில் கிம் கார்த் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் ஷூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெகான் ஷூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதிலும் பெத் மூனி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

நஷ்ரா சாந்து, ரமீன் ஷமிம், பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீட்டெடுத்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலனா கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார்.

அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

நோர்த் சிட்னியில் கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த் ஆகியோர் பகிர்ந்த 77 ஓட்டங்களே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பதாவது விக்கெட்டுக்கான முந்தைய சாதனையாக இருந்தது.

பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலனா கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: பெத் மூனி

https://www.virakesari.lk/article/227266

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்பு நாடான இந்தியாவை அதிரவைத்து 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது தென் ஆபிரிக்கா

Published By: Vishnu

10 Oct, 2025 | 03:37 AM

image

(நெவில் அன்தனி)

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்களால்  அபார வெற்றியீட்டியது.

இப் போட்டியில் தோல்வி அடைந்ததால் வரவேற்பு நாடான இந்தியா பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளது.

இந்தியா சார்பாக ரிச்சா கோஷ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் லோரா வுல்வார்ட், நாடியா டி கிளார்க் ஆகியோரின் துடுப்பாட்டங்கள் அதனை விஞ்சியதுடன் தென் ஆபிரிக்காவின் வெற்றிக்கும் வழிவகுத்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதிலும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்கள் வீழ்ந்ததால் (102 - 6 விக்.) அவ்வணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால். ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டனர்.

ஆனால், அவர்களது முயற்சி இறுதியில் வீண் போயிற்று.

ப்ராத்திக்கா ராவல், ஸ்ம்ரித்தி மந்தனா ஆகிய இருவரும் முதலாவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன.

ஸ்ம்ரித்தி மந்தனா 23 ஓட்டங்களையும் ஹார்லீன் டியோல் 13 ஓட்டங்டங்களையும் பெற்றனர். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ராத்திகா ராவல் 37 ஓட்டங்கள் பெற்ற நிலையில் 3ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் (9), ஜெமிமா ரொட்றிகஸ் (0), தீப்தி ஷர்மா (4), அமன்ஜோத் கோர் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினர். (153 - 7 விக்.)

0910_richa_gosh_ind_vs_sa.png

இந் நிலையில் ரிச்சா கோஷ், ஸ்நேஹ் ராணா ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 88 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

அவர்கள் இருவரும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (251 - 9 விக்.)

ஸ்நேஹ் ராணா 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 94 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் க்ளோ ட்ரையொன் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நொன்குலுலேக்கோ மிலபா 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

தென் ஆபிரிக்காவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

தஸ்மின் ப்றிட்ஸ் (0), சுனே லுஸ் (5) ஆகிய இருவரும் முதல் 6 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (18 - 2 விக்.)

தொடர்ந்து மாரிஸ்ஆன் கெப் (20), ஆன்எக் பொஷ் (1), சினாலோ ஜஃப்டா (14) ஆகிய மூவரும் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (81 - 5 விக்.)

0910_laura_wolwardt_sa_vs_ind.png

எனினும் ஒரு புறத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீராங்கனை லோரா வுல்வார்டும் மத்திய வரிசை வீராங்கனை க்ளோ ட்ரையொனும் 6ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு நம்பிக்கையைக் கொடுத்தனர்.

லோரா வுல்வார்ட் 111 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு மேலும் உரமூட்டினர்.

0910_chloe_tryon_sa_vs_ind.png

0910_nadine_de_klerk_sa_vs_ind.png

க்ளோ ட்ரையொன் 49 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து நாடின் டி க்ளார்க், அயாபொங்கா காக்கா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இந்த இணைப்பாட்டத்தில் அயாபொங்கா காக்காவின் பங்களிப்பு வெறும் ஒரு ஓட்டமாகும்.

மறுமுனையில் மிகத் திறமையாக அதிரடியைப் பிரயோகித்த நாடின் டி க்ளார்க் 54 பந்துகளில் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஸ்நேஹ் ராணா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்தி கௌத் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: நாடின் டி க்ளார்க்

https://www.virakesari.lk/article/227364

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்துக்கு அவசியமான வெற்றி

Published By: Vishnu

11 Oct, 2025 | 03:36 AM

image

(நெவில் அன்தனி)

குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

1010_lee_tahuhu__nz_vs_bang.png

பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூஸிலாந்தின் பந்துவீச்சு இலக்கை நோக்கியதாக இருக்கவில்லை.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் 16 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை இனாமாகக் கொடுத்தனர்.

எனினும், அணித் தலைவி சொஃபி டிவைன், ப்றூக் ஹாலிடே ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஜெஸ் கேர், லீ தஹுஹு ஆகியோர் பதிவு செய்த தலா 3 விக்கெட் குவியல்களும்  நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன.

1010_jess_kerr_nz_vs_bang.png

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.

இதில்  ப்றூக்  ஹாலிடே 69 ஓட்டங்களையும் சொஃபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அவர்களைவிட சுசி பேட்ஸ் 29 ஓட்டங்களையும் மெடி க்றீன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

1010_brooke_halliday__nz_vs_bang.png

பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

15 ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

ஆனால் மத்திய வரிசை விராங்கனைகள் பாஹிமா காத்துன் (34), நஹிடா அக்தர் (17), ரபியா கான் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷுக்கு 125 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

உதிரிகளாக 30 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கிடைத்தது.

பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/227445

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கையை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இங்கிலாந்து

Published By: Vishnu

12 Oct, 2025 | 02:43 AM

image

மகளிர் உலகக் கிண்ண தொடரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்தது.

அணியின் தலைவி நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (Nat Sciver-Brunt) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர், 254 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் போராடியபோதும், 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியில் ஹசினி பெரேரா அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/227504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது

Published By: Vishnu

13 Oct, 2025 | 04:42 AM

image

(நெவில் அன்தனி)

விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது.

1210_smriti_mandhana_ind_vs_aus.png

அனாபெல் சதர்லண்ட் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல், அணித் தலைவி அலிசா ஹீலி குவித்த அபார சதம் என்பன அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 331 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

1210_pratika_rawal_ind_vs_aus.png

இதன் மூலம்   உலகக் கிண்ண   அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டதுடன் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத் தொடங்கியுள்ளது.

ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலி மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 107 பந்துகளில் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார்.

1210_alyssa_healy_aus_vs_ind.png

இதனிடையே 40 ஓட்டங்களைப் பெற்ற ஃபோப் லிச்பீல்டுடன் முதலாவது விக்கெட்டில் 85 ஓட்டங்களை அலிசா ஹீலி பகிர்ந்தார்.

மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது எலிஸ் பெரி உபாதைக்குள்ளாகி 32 ஓட்டங்களுடன் தற்காலிய ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் புகுந்த எலிஸ் பெரி 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

மத்திவரிசையில் ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கோர் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்மிரித்தி மந்தனா, ப்ராத்திக்கா ராவல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை  மந்தனா   பூர்த்திசெய்தார்.

ப்ராத்திக்கா ராவல் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களை விட ஹார்லீன் டியோல் 38 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிகஸ் 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

43ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது. இதுவும் அதன் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது.

பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சொஃபி எக்லஸ்டொன் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: அலிசா ஹீலி.

https://www.virakesari.lk/article/227565

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - நியூஸிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது; நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகம்?

Published By: Vishnu

14 Oct, 2025 | 10:12 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி  கடும் மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

அப் போட்டியில் 259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து தயாராகிக்கொண்டிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 9.30 மணிக்கு ஐசிசி போட்டி தீர்ப்பாளர் அறிவித்தார்.

இதற்கு அமைய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ள நிலையில் நியூஸிலாந்தின் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது.

இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன முதல் தடவையாக இன்று ஆரம்ப வீராங்கனையாக களம் இறங்கி அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுடன் 139 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும்

எனினும் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை சார்பாக உலகக் கிண்ணத்தில் குவித்த அதிவேக அரைச் சதமே அவரது அணியை சிறந்த நிலையில் இட்டது.

அவர் 26 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் பெற்ற 55 ஓட்டங்களே இலங்கையை நல்ல நிலையில் இட்டது.

முன்னதாக சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 44 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப் போட்டியில் நியூஸிலாந்தின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக அமையாதது இலங்கைக்கு கைகொடுப்பதாக அமைந்தது.

பந்துவீச்சில் சொஃபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/227744

  • கருத்துக்கள உறவுகள்

இந்ததியா ம‌க‌ளிர் தொட‌ர்ந்து இர‌ண்டு தோல்விக‌ள்

ஏமாற்ற‌ம் அளிக்குது............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது

Published By: Vishnu

14 Oct, 2025 | 01:46 AM

image

(நெவில் அன்தனி)

விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

1310_marizanne_kapp_sa_vs_bang.png

மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.

1310_chloe_tryon__sa_vs_bang.png

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

1310__sharmin_akther_bang_v_sa.png

முதல் 23 ஓவர்களில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களிடம் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 5 விக்கெட்ளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

1310__shorna_akther_bang_v_sa.png

இதன் காரணமாக பங்களாதேஷ் தலைகீழ் வெற்றியை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய மாரிஸ்ஆன் கெப் (56 ஓட்டங்கள்), க்ளோ ட்ரையொன் (62), நாடின் டி க்ளார்க் (37 ஆ.இ.) ஆகியோர் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

அவர்களைவிட அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), ஆன்எக் பொஷ் (28) ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

பந்துவீச்சில் நஹிதா அக்தர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஷொர்னா அக்தர் (51 ஆ.இ.), ஷர்மின் அக்தர் (50), அணித் தலைவி நிகார் சுல்தானா (32), பர்கானா ஹொக் (30) ஆகியோர் திறமைமையை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: க்ளோ ட்ரையொன்

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்தில் கிடடத்ட்ட அரைவாசி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியன தலா 6 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம் இடங்களிலும் இருக்கின்றன.

https://www.virakesari.lk/article/227649

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து - பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழை காரணமாக இடையில் கைவிடப்பட்டது

Published By: Vishnu

16 Oct, 2025 | 03:27 AM

image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது.

1510_omaima_pak_vs_eng.png

மழையினால் தடைப்பட்டு சுமார் 4 மணித்தயாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்த இந்தப் போட்டி அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

1510_pak_celebrate_a_wkt_vs_eng.png

31 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

எனினும் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 31 ஓவர்களில் 113 ஓட்டங்கள் என அறவிக்கப்பட்டது.

பதிலுக்கு திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் இரவு 9.32 மணிக்கு இரண்டாவது தடவையாக தடைப்பட்டது.

ஒமய்மா அலி 19 ஓட்டங்களுடனும் முனீபா அலி 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

சிறு மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்ட தாக இரவு 9.58 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 31 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சுகளில் சரிவு கண்ட இங்கிலாந்து 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் பிற்பகல் 4.43 மணிக்கு ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்த பின்னர் இரவு 8.30 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது அணிக்கு 31 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

எஞ்சிய 6 ஓவர்களில் இங்கிலாந்து மேலும் 2 விக்கெடகளை இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தியது.

மத்திய வரிசையில் சார்ளி டீன் (33), எமி ஆர்லட் (18) ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

அவர்களை விட ஹீதர் நைட் (18), அலிஸ் கெப்சி (16), சொஃபியா டின்க்லி (11) ஆகியோர் 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பந்துவீச்சில் பாத்திமா சானா 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சாடியா இக்பால் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டி கைவிடப்பட்டதை அடுத்து இங்கிலாந்தும் பாகிஸ்தானும் 2 புள்ளிகளைப் பகிர்ந்துகொண்டன.

இதற்கு அமைய இங்கிலாந்து 4 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. அவுஸ்திரேலியாவும் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தென் ஆபிரிக்கா 6 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் வரவேற்பு நாடான இந்தியா 4 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.

https://www.virakesari.lk/article/227842

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹீலி சதத்தின் உதவியுடன் பங்களாதேஷை வீழ்த்தி முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

Published By: Vishnu

17 Oct, 2025 | 03:12 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக விசாகப்பட்டினம் கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

1610_phoebe_litchfield_aus_vs_bang.png

சுழல்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சுகள், அலிசா ஹீலி குவித்த ஆட்டம் இழக்காத சதம், ஃபோப் லிச்ஃபீல்ட் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

1610_healy_celebrating_back_to_back_cent

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 199 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்களைக் குவித்து அபார வெற்றியீட்டியது.

1610_alana_king_aus_vs_bang.png

அலிசா ஹீலி 77 பந்துகளை எதிர்கொண்டு 20 பவுண்டறிகள் உட்பட 113 ஓட்டங்களுடனும் ஃபோப் லிச்ஃபீல்ட் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 84 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் இருவர் 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

மத்திய வரிசை வீராங்கனை சோபனா மோஸ்தரி ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களையும் ரூபியா அக்தர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைவிட ஷர்மின் அக்தர் 19 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அலனா  கிங் 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகி ஆனார்.

ஜோர்ஜியா வெயாஹாம் (22 - 2 விக்.), அனாபெல் சதர்லண்ட் (41 - 2 விக்.), ஏஷ்லி கார்ட்னர் (48 - 2 விக்.) ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இலங்கை - தென் ஆபிரிக்க அணிகள்  இன்று   கொழும்பில் மோதுகின்றன.

https://www.virakesari.lk/article/227932

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கையின் உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் பறியோயுள்ளது

Published By: Vishnu

18 Oct, 2025 | 04:44 AM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) மழையினால் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கையை டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 10 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.

மழையினால் தடைப்பட்டு 5 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்த ஆட்டத்தில் ஈட்டிய வெற்றியுடன் மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிக்குள் நுழைவதற்கான வாயிலை தென் ஆபரிக்கா நெருங்கியுள்ளது.

அதேவேளை, இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் அரை இறுதி வாய்ப்பை இலங்கை  பெரும்பாலும் இழந்துள்ளது.

டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 20 ஓவர்களில் 121 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இந்த வருட மகளிர் உலகக் கிண்ணத்தில் முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா அதன் பின்னர்  நான்காவது தொடர்ச்சியான தடவையாக வெற்றி இலக்கை விரட்டிக் கடந்து வெற்றியீட்டியமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

அணித் தலைவி லோரா வுல்வார்ட், தஸ்மின் ப்றிட்ஸ் ஆகிய இருவரும் வேகமாக அரைச் சதங்களைக் குவித்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுபடுத்தினர்.

லோரா வுல்வார்ட் 47 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 60 ஓட்டங்களுடனும் தன்ஸிம் ப்றிட்ஸ் 42 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.

1710_vishmi_injured.png

ஐந்தாவது ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றரிருந்த இளம் வீராங்கனை விஷ்மி குணரட்ன ஓட்டம் ஒன்றை எடுத்தபோது தென் ஆபிரிக்கா களத்தடுப்பாளர் ஒருவர் எறிந்த பந்து அவரது முழங்காலை தாக்கியது.

இதனால் கடும் உபாதைக்குள்ளான விஷ்மிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தூக்குப் படுக்கையில் கிடத்தப்பட்டு வீராங்கனைகள் தங்குமறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சமரி அத்தப்பத்து 11 ஓட்டங்களுடனும் ஹசினி பெரேரா 4 ஓட்டங்களுடனும் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுடனும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (63 - 4 வி.)

1710_vishmi_sl_vs_sa.png

நான்காவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் களம் புகுந்த விஷ்மி குணரட்ன தனது எண்ணிக்கைக்கு மேலும் 22 ஓட்டங்களை சேர்த்து 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

நிலக்ஷிக்கா சில்வா 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மசாபட்டா க்ளாஸ் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: லோரா வுல்வார்ட்

https://www.virakesari.lk/article/228034

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அதேவேளை, இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் அரை இறுதி வாய்ப்பை இலங்கை  பெரும்பாலும் இழந்துள்ளது.

கடைசி இடத்துக்கு வராமல் இருக்க போராடினாலே காணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து

19 Oct, 2025 | 07:24 PM

image

(நெவில் அன்தனி)
இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.ஹீதர் நைட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.அத்துடன் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்டுடன் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் ஹீதர் நைட் இட்டார்.நைட்டை விட அமி ஜோன்ஸ் 56 ஓட்டங்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 38 ஓட்டங்களையும் டமி போமன்ட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்படும். இந்தியா வெற்றிபெற்றால் இரண்டு அணிகளும் அடுத்த போட்டிகளின் முடிவு வரை காத்திருக்க வேண்டிவரும்.இந்தியா இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே  மகளிர் உலகக் கிண்ண   அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுவிட்டன.

1910__deepthi_sharma.png

1910_amy_jones.png

1910_heather_knight_batting.png

https://www.virakesari.lk/article/228162

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை 4 ஓட்டங்களால் வென்று உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து

20 Oct, 2025 | 01:20 AM

image

(நெவில் அன்தனி)

இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்யில் இந்தியாவை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, அரை இறுதியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டது.

1910_smrithi_mandana_ing_vs_eng.png

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக அரை இறதி வாப்ப்பை இங்கிலாந்து பெற்றுக்கொண்டது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இப் போட்யில் இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர், ஸ்ம்ரித்தி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய மூவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்த போதிலும் அநாவசியமான அடி தெரிவுகளால் தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்ததால் இங்கிலாந்து வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

1910_heather_knight_batting.png

ஹீதர் நைட் குவித்த சதமும் கடைசி ஓவர்களில் பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இங்கிலாந்தை வெற்றிபெறச்செய்தன.

289 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பவர் ப்ளேயில் இந்தியா 2 விக்கெட்களை இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிறு அழுத்தத்தை எதிர்கொண்டது.

ஆனால், ஸ்ம்ரித்தி மந்தனா, ஹார்மன்ப்ரீத் கோர் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

ஹார்மன் ப்ரீத் கோர் 70 பந்துகளில் 10 பவுண்டறிகளுடன் 70 ஓட்டங்களைப் பெற்று தவறான ஆட்டத் தெரிவின்மூலம் விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து மந்தனா, தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு நம்பிக்கை ஊட்டினர்.

மொத்த எண்ணிக்கை 234 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்ம்ரித்தி மந்தனா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து  பிடி கொடுத்து களம் விட்டகன்றார். அவர் 8 பவுண்டறிகளுடன் 88 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் (8), திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த தீப்தி ஷர்மா ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

தீப்தி ஷர்மா 5 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்று விக்கெட்டை பறிகொடுத்தார்.

அத்துடன் இந்தியாவின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு கலைந்துபோனது.

ஆமன்ஜோத் கோர் 18 ஓட்டங்களுடனும் ஸ்நேஹ் ராணா 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நெட் சிவர் - ப்றன்ட் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.

டமி போமன்ட் (22), அமி ஜோன்ஸ் (56) ஆகிய இருவரும் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ஹீதர் நைட், அணித் தலைவி நெட் சிவர் - ப்றன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

நெட் சிவர் - ப்ரன்ட் 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஹீதர் நைட் 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.

மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் துடுப்பாட்டத்தில் பெரியளவில் பிரகாசிக்கவில்லை.

சார்ளி டீன் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஹீதர் நைட்.

https://www.virakesari.lk/article/228164

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.