Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM

ஆசிரியர் - Editor II

காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண்டு செல்லப்பட்டது 

மேலும், இரவு 12 மணியளவில் இரண்டாவது கட்டமாகவும் காற்றாலை உதிரிகள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பொது மக்கள், அருட்தந்தையர்கள் ஆகியோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர்..

இதன்போது அங்கிருந்த பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி , ஆயுத  முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிபாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

17589412412_1080.jpg

17589412411_1080.jpg

1758941241-1000044948.jpg

555675813_819862003905473_54357913166456

https://jaffnazone.com/news/50768

  • கருத்துக்கள உறவுகள்

IMG_5733-scaled.jpeg?resize=750%2C375&ss

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்- பொதுமக்கள் , பொலிஸார் இடையில் பதற்றம்!

மன்னார் பகுதியில் நேற்று இரவு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னர் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கழகம் அடக்கும் பொலிஸார் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில்வண்ணார் நகரை நோக்கி கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் அங்கு ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

கழகம் அடக்கும் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

1001124794.jpg?resize=600%2C450&ssl=1 1001124821.jpg?resize=528%2C600&ssl=1

https://athavannews.com/2025/1448699

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரம் அமைப்பதற்கான பொருட்கள் மன்னாரை நோக்கி : மக்கள்,  அருட்தந்தையர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

27 Sep, 2025 | 06:16 AM

image

( மன்னார் செய்தியாளர் )

மக்களின் எதிர்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரின் துணையுடன் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்கள் பாரிய வாகனங்களில் மன்னார் நகரை நோக்கி கொண்டு வெள்ளிக்கிழமை (26) இரவு முதல் இன்று (27) அதிகாலை வரை வரப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஒன்று கூடிய பல நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து மன்னார் நுழைவு பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

கலகம் அடக்கம் பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த காற்றாலை கோபுரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது . இதனால் மன்னார் நகர பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

மன்னாரில் நேற்று (26) வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல்  காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிசார் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலர் காயமடைந்திருக்கின்றனர்.

மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடிவருகின்ற நிலையில்  மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றது.

இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மக்களின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் செயற்படுத்த மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி கடந்த மாதம் குழு ஒன்றை அமைத்து மக்களின் கருத்துக்களை உள்வாங்கி நல்ல ஒரு தீர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னனியில் ஜனாதிபதி மக்களின் எதிர்பை மீறியும் மக்களின் கருத்துக்களை மதிக்காது தொடர்சியாக காற்றாலை செயற்திட்டங்களை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சனிக்கிழமை (26) இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக அமைதியான முறையில் காற்றாலை உதிரிப்பாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்டது .

அதனை தொடர்ந்து 12 மணியளவில் இரண்டாவது காற்றாலை உதிரிப்பாகங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பொது மக்கள் மற்றும் அருட்தந்தையர்கள் வீதிகளில் இறங்கி தடுக்க முற்பட்ட நிலையில் பொலிஸார் கொடூரமாக பெண்கள் அருட்தந்தையர்கள் என அனைவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கூட்டத்தை கலைக்க முற்பட்டனர்.

அதே நேரம் போராட்டகாரர்களை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்தி ஆயுத முனையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி தாக்கி காற்றாலை உதிரிப்பாகங்களை கொண்டு சென்றுள்ளனர்.

குறிப்பாக சில பெண்கள் மீது கால்களால் மிதித்தும் தடிகலால் அடித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சிகிச்சைகாக மன்னார் பொது வைத்திய சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

IMG-20250927-WA0008.jpg

IMG-20250926-WA0303.jpg

IMG-20250927-WA0007.jpg

IMG-20250927-WA0006.jpg

IMG-20250927-WA0005.jpg

IMG-20250927-WA0004.jpg

IMG-20250927-WA0002.jpg

IMG_5708.jpeg

IMG_5698.jpeg

1001124794.jpg

https://www.virakesari.lk/article/226209

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.