Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-261.jpg?resize=750%2C375&ssl

இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!

தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.

தாய்லாந்து யானைகளான  Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார்.

கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன.

தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. 

விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது.

Thai elephants in Sri Lanka

இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார்.

யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார். 

https://athavannews.com/2025/1451029

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட இரண்டு யானைகளை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

Published By: Digital Desk 3

24 Oct, 2025 | 12:23 PM

image

இலங்கைக்கு பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் கொண்டு செல்ல  தாய்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் இலங்கையுடன் அக்டோபர் 28 ஆம் திகதி தாய்லாந்து கலந்துரையாடல் நடத்த உள்ளது. 

இரு யானைகளின் வாழ்கை நிலை மோசமடைந்துள்ளதாகவும், தவறாக வழி நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அவற்றை மீண்டும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து அராசாங்கம்  தெரிவித்துள்ளது.

ப்ளாய் பிரட்டு பா மற்றும் ப்ளாய் ஸ்ரீனாரோங் ஆகிய யானைகளின் நலன் தொடர்பில் கவனம் அதிகரித்து வருவதால், தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான சுசார்ட் சோம்க்ளின் வியாழக்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இந்த யானைகள் தொடர்பில் தாய் யானை மீட்புக் குழுவால் முதன்முதலில் கவலைகள் எழுப்பப்பட்டன. யானைகளின் வாழ்கை நிலை மோசமடைந்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உத்தியோகபூர்வ கடிதத்தை சமர்ப்பிக்க குழுவின் ஒருங்கிணைப்பாளர் யுவானுச் கியாட்டிவோங், 50 உறுப்பினர்களுடன் துணைப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்துள்ளார்.

அந்த கடிதத்தில், 

தாய்லாந்தால் பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, உடல் நலம் குன்றி உள்ளன. அவைகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக யானைகள் உடனடியாக தாய்லாந்துக்கு அழைத்துவரப்பட வேண்டும் என அந்தக் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் துணைப் பிரதம சுசார்ட், 

தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற அரச நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யானைகளை அழைத்து வருவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ள பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடியதாக  தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கைக்கு சிறிது காலம் எடுக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், துணைப் பிரதமர் சுசார்ட், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்களுடன் யானைகளின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இராஜதந்திர காலந்துரையடால்கள் தொடரும் அதேவேளையில், உள்நாட்டு பராமரிப்பாளர்களுக்கு முறையான பராமரிப்பு வழங்கவும் குழு அறிவுறுத்தவுள்ளது.

தாய்லாந்தின் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் அட்டாஃபோன் சரோயன்சான்சா, சுசார்ட்டுடன் இந்த பயணத்தில் பங்கேற்கவுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் வெற்றிப் பெற்றால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட மற்றொரு யானையான பிளாய் சக் சுரின் திரும்பப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியை அதிகாரிகள் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக அட்டாஃபோன் தெரிவித்துள்ளார்.

தி ஸ்டாண்டர்டின் அறிக்கையில், 

1979 ஆம் ஆண்டு 12 வயதாக இருந்தபோது இலங்கைக்கு அனுப்பப்பட்ட முதல் யானை பிளாய் பிரட்டு பா ஆகும். தற்போது அவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ளது.

ப்ளாய் ஸ்ரீனாரோங் 2001 ஆம் ஆண்டு ப்ளாய் சாக் சுரினுடன் சேர்ந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ப்ளாய் சாக் சுரின் ஏற்கனவே மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும், ப்ளாய் ஸ்ரீனாரோங் கதிர்காமத்தில் உள்ள கிரிவெஹெர விகாரைக்கு அருகிலுள்ள யானைகள் காப்பகத்தில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/228530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcS5P9GQsKDYpskUhVzb6J1Save Elephant Foundation Tikiri the elephant

_108937586_68563852_2361434713925291_633

மேலே உள்ள மூன்று படத்திலும் Tikiri எனப்படும் ஒரே யானைதான்.

70 வயதான அந்த நோய் வாய்ப்பட்ட யானைக்கு, பட்டுத் துணிகளால் போர்த்தி

கண்டி பெரஹரா நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கு பற்ற வைத்தவன்தான் சிங்களவன்.

சிங்களவனிடம்... மனிதாபிமானமும் இல்லை,

மிருக அபிமானமும் இல்லை என உணர்த்திய செயல் அது.

சில வருடங்களுக்கு முன் அந்த யானை இறந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்லாந்து யானைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

Oct 25, 2025 - 08:39 PM -

தாய்லாந்து யானைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிக்கப்பட்ட இரண்டு யானைகள் குறித்து ஆராய்வதற்காக கால்நடை வைத்தியக் குழுவொன்று நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

தாய்லாந்து அரசாங்கத்தினால் அன்பளிக்கப்பட்ட 'தாய் ராஜா' மற்றும் 'கண்டுல' (Kandula) ஆகிய இரண்டு யானைகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களத்தின் கால்நடை வைத்தியர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் கால்நடை வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

தாய் ராஜா என்ற யானை தலதா மாளிகையின் யானைகள் கொட்டிலிலும், கண்டுல என்ற யானை களனி ராஜ மகா விகாரையின் கீழும் உள்ளன. 

இந்த இரண்டு யானைகளுக்கும் துன்புறுத்தல் இழைக்கப்படுவதாகக் கூறி தாய்லாந்து அரசாங்கம் அவற்றை மீண்டும் நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாய்லாந்து தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர், அலுத்கம விகாரையில் இருந்த 'முத்து ராஜா' என்ற யானைக்கும் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதால் தாய்லாந்து அரசாங்கம் அதனை மீளப் பெற்றிருந்தது. 

எவ்வாறாயினும், குறித்த இரண்டு யானைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக இந்தக் கால்நடை வைத்தியக் குழு நியமிக்கப்படும் என சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி 'அத தெரண' செய்திகளுக்கு தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmh6f163a017hqplp3lw1awm9

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.