Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31 Oct, 2025 | 04:03 PM

image

தற்போது சபரிமலையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாசார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பனவும் மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் எடுக்கவேண்டியது அவசியமாகும் என சர்வதேச இந்துமத பீடத்தின் தலைவர் சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். 

பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விரத மாலை அணிவித்து, சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்லும்போது பெற்றோரும் குருசாமிகளும் கவனத்திற்கொள்ள வேண்டிய பிரதான விடயங்கள் அடங்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ள சிவஸ்ரீ. பால ரவிசங்கர சிவாச்சாரியார், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையிலிருந்து சபரிமலை புனித யாத்திரை  மேற்கொள்வது சாதாரணமான ஒரு பயணமாக மாற்றமடைந்து வரும் தற்கால சூழ்நிலையில், 16 வயதிற்குட்பட்ட பாடசாலை கல்வியை மேற்கொள்ளும் மாணவ சிறார்களுக்கு விரத மாலை அணிவித்து சபரிமலை யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முற்படும் பெற்றோர் குறிப்பாக அத்தகைய யாத்திரைக்கு பொறுப்பான குருசுவாமிகள் சில முக்கியமான விடயங்களை பரிசீலித்து அம்முடிவை மேற்கொள்வது அவசியமாகும்.

"மகரஜோதி" தரிசன பருவகால யாத்திரை என்பது நவம்பர், டிசம்பர், ஜனவரியை சார்ந்ததாக, கார்த்திகை, மார்கழி, தை மாதமென 60 தினங்களை கொண்ட விரதகால யாத்திரையாகும்.

இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் அரசாங்க பாடசாலைகளிலும் வருட இறுதிப்பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை என்பவை நடப்பது வழமை. இக்காலப்பகுதியில் விரதமாலை அணியும் நிலையில், மாணவர்களின் கல்வி, பரீட்சை சூழ்நிலைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியமாகும்.

அத்துடன் இன்றைய சூழ்நிலையில் ஒருவர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள சுமார் இரண்டு லட்சம் ரூபாய் அளவில் முழுமையாக தேவைப்படும் நிலையில் 16 வயதிற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களின் உயர்கல்வி, தொழிற்கல்வி என ஏராளமான கல்விச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எதிர்கால சூழ்நிலைக்கு ஏற்ப மாணவ பருவ சிறார்களின் யாத்திரை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாகும். ஏனெனில், சாதாரண குடும்ப பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் நடுத்தர குடும்பத்தவர்கள் திட்டமிட்டு செயற்படவேண்டியது பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உறுதுணையாக அமையும்.

பொதுவாகவே 11 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு இந்து சமய சைவ சமய ரீதியாக தீர்த்த யாத்திரை என்பது சொல்லப்பட்டது அல்ல. ஆனால், பக்தி மார்க்கத்தில், தமது நேர்த்திக்கடன், பிரார்த்தனை என்று அனுப்புவோரும் இத்தகைய விடயங்களை கருத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்படியே அனுப்பினாலும் ஒருமுறை யாத்திரை அனுப்பலாம். தொடர்ந்து மூன்று வருடங்கள், ஐந்து வருடங்கள் ஏன் தொடர்ந்தே செல்ல வேண்டும் என்ற மனநிலையும் பிடிவாதமும் முறையல்ல.

இவ்விடயத்தில் தற்போது சபரிமலை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியிருக்கும் இலங்கை அரசும் சிறுவர் விவகார அமைச்சும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் பிரயாணத்திற்கான விசா அனுமதி வழங்கும் இந்து கலாச்சார திணைக்களம், இந்திய தூதரக விசா பிரிவு என்பன மிக கடுமையான கண்காணிப்பையும் நடைமுறைகளையும் சிறுவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமாகும்.

நமது சமயத்தில் பெற்றோர் குழந்தைகளை நல்ல பிரஜைகளாக, சமய பற்றுள்ளவர்களாக, ஒழுக்க சீலர்களாக, சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கவே கூறுகிறது. அவர்கள் வெறுமனே சாமியார்களாகவோ, 18 வயதில் 18 வருடங்கள் சபரிமலைக்கு சென்ற துறவியாக மட்டுமே உருவாக காரணமாக அமைந்து அவர்களினதும் நமது சமூகத்தினதும் எதிர்காலத்தை பாழ்படுத்தி விடக்கூடாது என்பதே இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/229152

  • கருத்துக்கள உறவுகள்

என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே. மிஞ்சி மிஞ்சி போனால் சாமி படம் பார்க்க திரை அரங்கிற்கு கூட்டி செல்வார்கள். அல்லது அருகில் உள்ள கோயில்கள் ஏதாவதற்கு விசேட நாட்களில் செல்வோம். சபரிமலை கீரிமலைக்கு பக்கத்திலா உள்ளது? கொஞ்சம் பெரிசாய்த்தான் செய்யிறாங்கள். எல்லாரையும் ஐயப்பன் தான் காப்பாற்ற வேண்டும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Nov 16, 2025 - 03:40 PM

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்துள்ளமையை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில்  அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவம் நாளை (17)தொடங்கி ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை 65 நாட்கள் நடக்கிறது. 

இதனை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். 

அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம் போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. 

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநில சுகாதாரத்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என்றும், குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை இருப்பதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து சபரிமலைக்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmi1k1beg01nro29n4srza1bj

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2025 at 03:32, நியாயம் said:

என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே.

இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும்

10 hours ago, ஏராளன் said:

தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்

  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியா மதீனா மெக்கா புனித யாத்திரை சென்ற குறைந்தது 45 இந்திய பக்தர்கள் டீசல் லொறியுடன் பேருந்து மோதியதில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் கடவுளை கும்பிட்டு முடித்த பின்பு தான் இது நடைபெற்றுள்ளது. 10 சிறுவர்கள் 18 பெண்கள்.😟

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2025 at 11:54, ஏராளன் said:

அதேபோல், பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும் என்றும்

அப்ப அவர்களின் மலையாளிகளின் பதிமுகம் தண்ணி எனப்படும் மூலிகை தண்ணி டுபாக்கூர் தானா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2025 at 17:36, விளங்க நினைப்பவன் said:

இப்போ இந்தியா இலங்கையில் ஆன்மீக சகாப்தம் நடைபெறுகின்றது அத்துடன் ஆன்மீகத்தில் உலகிலேயே சிறந்தது இந்தியாவா அல்லது இலங்கையா என்ற போட்டியும்

அப்படி கவலபடவே பயப்படுவதற்கோ எதுவும் இல்லை. ஐயப்ப கடவுள் பக்தர்களை காப்பாற்றுவார்

நானும் ஐயப்பனை வழிபடுகின்றேன். அறியா பருவ பிள்ளைகளிற்கு ஐயப்ப சுவாமிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துவது எல்லாம் சரி. கற்கும் வயதில் நாடு தாண்டி பயணம் செய்யும் அளவுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமா? கடவுளை எமக்குள் காண வேண்டும் என்பதை தானே இந்து மதம் போதிக்கின்றது. இப்போதே காடு, மலை ஏறிச்சென்று கடவுளை தரிசிக்கும் ஆர்வத்தை சிறுவர்களிற்கு ஏற்படுத்தினால் அவர்கள் கடைசியில் சாமியாராக போகவேண்டியது தானா? ஐயப்பன் அனைவரையும் காக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

நானும் ஐயப்பனை வழிபடுகின்றேன்.

நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன்.

முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே

On 1/11/2025 at 03:32, நியாயம் said:

என்னைய்யா புதுசாய் கிடக்கிது. நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி எல்லாம் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்ப சாமி உண்மையோ பொய்யோ தெரியாது நண்பர் ஒருத்தர் கடந்த கொர்னோ காலத்தை விட 28 வருடமாய் சென்று வருகிறார் அப்படி சென்று வரும்போது அவரின் சுகர் பிரசர் போன்றவை கட்டுப்பாட்டில் ஒரு சில மாதம்களுக்கு இருக்கும் காரணம் அங்குள்ள காலநிலை நடந்து திரிந்து மலை ஏறுதல் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் .ஆனால் இன்னும் சில புதிய சாமிகளின் அலப்பறை தாங்க முடியாது விமானத்தில் செல்லும்போது விமானத்தின் கதிரையில் இருக்காமல் தரையில் வாழையிலை போட்டு கறுத்த உடுப்புடன் கூட்டமாக உணவு உண்ணுகிறார்கள் அவர்களுக்கு யார் அப்படி செய்ய சொல்லிய வர்கள் என்று தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன்.

முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே

எங்கெல்லாம் பணவசதி பெருகிய மக்களும் அறியாமையும் சேர்ந்து தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயப்பன் மட்டுமல்ல எல்லா சாமிகளும் எழுந்தருளுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் பின்பு தான் ஆரம்பித்தீர்களா அறிந்து கொள்ள தான் கேட்கின்றேன்.

முன்னைய காலங்களில் எல்லாம் ஐயப்பர் அனுமார் இலங்கையில் கிடையாது என்றார்களே

ஐயனார் கோயில்கள் முன்பே பரவலாக உள்ளன. ஐயப்பன் கோயில்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது உள்ளதாக தேடல் மூலம் அறிந்தேன். இலங்கையை விட்டு வெளியேறிய பின்பே ஐயப்பன் ஆலயம் அவ்வப்போது செல்கின்றேன். வழமையான சுவாமி தரிசனம் பெறுகின்றேன். ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் முறைகளை பின்பற்றுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

ஐயப்ப சாமி உண்மையோ பொய்யோ தெரியாது நண்பர் ஒருத்தர் கடந்த கொர்னோ காலத்தை விட 28 வருடமாய் சென்று வருகிறார் அப்படி சென்று வரும்போது அவரின் சுகர் பிரசர் போன்றவை கட்டுப்பாட்டில் ஒரு சில மாதம்களுக்கு இருக்கும் காரணம் அங்குள்ள காலநிலை நடந்து திரிந்து மலை ஏறுதல் காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன் .ஆனால் இன்னும் சில புதிய சாமிகளின் அலப்பறை தாங்க முடியாது விமானத்தில் செல்லும்போது விமானத்தின் கதிரையில் இருக்காமல் தரையில் வாழையிலை போட்டு கறுத்த உடுப்புடன் கூட்டமாக உணவு உண்ணுகிறார்கள் அவர்களுக்கு யார் அப்படி செய்ய சொல்லிய வர்கள் என்று தெரியவில்லை .

எனக்கு ஒரு உறவினர் அனுமான் பக்தர் ஒரு 10 வருடமாக தான் அவர் அனுமார் கும்பிட தொடங்கியவர் . அதீத சக்தி கொண்டவர் அனுமான் கடவுள் நீ வந்து பாரேன் என்பார். எனக்கு தெரியும் தானே இராமாயணம் கதையில் வருகின்ற குரங்கு பாத்திரம் தான் இந்த அனுமான் என்பது 🤣

- ----

இலங்கையில் பரவலாக உள்ள ஐயனார் கடவுள் வேறு.

இந்திய கேரளாவில் இருந்து அறிமுகபடுத்தபடும் ஐயப்பன் கடவுள் வேறு.

ஐயனார் கடவுளுக்கு இரண்டு மனைவிகள். ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர். அதனால் தான் இந்திய பெரியவர்கள் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கட்டுபாடுகளை வைத்திருந்தனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.