Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!

Vhg அக்டோபர் 31, 2025

AVvXsEhYs01RgKQYvhG2HV7zFpvi_Y7lqmFDPffCVa6VMLyZO0W5JbdzUybP8TdvXFE7Lg4WPdkQ5Zpxt4oCVUVVpx8hbPrmrN8SpzsAv0nCnhK1jpVRnAg7mTfF1Eu1Dwp8c8g-h_Mn39Qj61rYXlrqjtScNtZTEkINAhaTirw1mBaZu49MV5ZGIDrXsb3klita

இன்றைய (31.10.2025)தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  மட்டக்களப்பில்  இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் சென்றனர்.

அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்கு ஆகும். குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M A சுமந்திரன் அவர்கள் இதற்கான வழக்கினை வாதாடி இருந்தார் . 

AVvXsEiFlgO65AeHiXKNpZ1ctxL8ri5xEFlr9Tr3jmJAOhKYsxzyOtEixD61shO5j8YYRC9Z0Bgsqu5VLACEf3HUOL03hduU8JHUEmnFyKEMl3PcaRdO_4Fyz7SR3o_uh2i8z81OwTviCxAErMNDzN06-PT9D3E87nIX0e2hiI1Q1IHYlZXxZRNyeprl_FMD-rEK

AVvXsEiGLomS-q3m1R6l4dIzCfVBlfV9xoJAquRX26q_xVgy4l6oUJNpYOl3AoyRoS25K52OuHfMdCFueVfvoFDZGKLSA9g-m52piohDVmxrOMrTrdUX8t9kEna3Jbs0AEwIcUQ2xL_75XjDpCIVFAppX-joC-oHdVD1VQEaysyv5GUBxu7xHmXuzQihlPoc8nbv

விஹாராதிபதி அவர்கள் எனக்கு எழுத்து மூலமான ஓர் கடிதத்தை வழங்கி இருந்தார். அதில் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் (21.07.2025 )முறைப்பாட்டின் பிரதி ஆகும். அதில் அவர் பெயர் குறிப்பிட்டு  தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அட்சத்தராக செயல்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார். 

AVvXsEggA2bCsV8f7jhI-oC7BGJvkRsuLjC5YbPHKne662JtZBrPu0ej6EwMcdyoV3ItLdegH-bu-eqCfUiS0aZTY-NMcdfB5jCfcyPcKdQWumqggDIGFxciFPIJA5jti_rdpej3LPZxuwF5u4GOZ9Xa7wZpEU_jD1Lo_xFYfX1j7I3lP0Sf_POO-f5BlFexed_D

AVvXsEiWZJ84SegRS6_ZFIO9vuWZ3v_O8Lxi9Mj93NoVhNxyjyEhMlcqWaX5DTp_zi8QYGIxcdldY4Pdlb24TeY2uXpQkgVC4gmA0NOld0luXP4A0m8QBkvrVz9LF0ml3ynnsCZB1yL0VFKNGrIzR_Zk7sdk5464DFdh-_YRQtLY0oNCOldtuoB4BbTRBFOFGFZV

பெளத்த துறவியான இவர் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ் ஆவணத்தை என்னிடம் தருவதற்காக என்னை அழைத்திருந்தார்.

அத்துடன் அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார். இவ் நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும்  படிப்பிக்க வேண்டும் என்பதனை தெரிவித்திருந்தார்.

https://www.battinatham.com/2025/10/blog-post_773.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு சம்பவம் உண்மையிலேயே நடந்திருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், சாணக்கியன் முதலில் தமிழரசுக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியபோது, தூஷண பிக்கரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றி மக்களை பயங்காட்டி வெற்றிபெற்றார். இப்போ, மாகாணத்தேர்தல் வரப்போகிறது, முதலமைச்சர் கனவு வேறு இவரை ஆட்டிப்படைக்கிறது. அதற்காக இன்னொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய தேவை இவருக்கு. இந்தச்செய்தி இவரது முகநூலிலேயே பகிரப்படுள்ளது. வடக்கில் சுமந்திரன், யார் யாரையோ ஓடி ஓடி சந்தித்து, அறிக்கை விட்டு, பேச்சுக்கு அழைத்து தயாராகிறார். பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மக்களுக்கு செய்த சேவை காணாதாம், இனி முதலமைச்சர் பதவியில் தமிழருக்கு எல்லா தீர்வும் பெற்றுத்தந்துதான் ஓய்வார்களாம் இருவரும்.

பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின்பேரில் சந்திக்கிறார், ஒரு ஊடகவியலாளர் அல்லது இவருக்கு பின்னால் அலையும் பட்டாளம் எதையும் காணோம். சும்மா ஒரு கருத்து சொல்வதனாலும் ஊடகவியலாளரும் கூட்டமுமாக வலம் வரும் இவருக்கு. உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவருமே கண்ணில் படவில்லையா?

14 hours ago, கிருபன் said:

இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M A சுமந்திரன் அவர்கள் இதற்கான வழக்கினை வாதாடி இருந்தார் . 

சரியாகத்தானே சமன்பாடு காட்டியிருக்கிறார் தான் போட்ட கணக்கிற்கு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.