Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maamanithar-Raviraaj-600x849-1.jpg

raviraj.jpg

ஈழத்தமிழருக்காக தனது இறுதி மூச்சுவரை அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு இளம் அரசியல்வாதியை இழந்து இன்றோடு 19 ஆண்டுகள் கடந்தது.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ்.

Babu Babugi

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQRYtjw1UHxu-vVP_d4GeY

சிங்கள பேரிவாத அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 19 ஆவது நினைவில்...

சிறிலங்கா சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட இளம் அரசியல் தலைவர்

யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான மாமனிதர் நடராசா ரவிராஜ்

மாமனிதர் நடராசா ரவிராஜ் 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடிய ரவிராஜ் கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் அவருடை தந்தையாரின் சகோதரர் சட்டத்தரணி கணேசலிங்கத்தின் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் விடுதலை கூட்டணியில் ( உதயசூரியன் ) இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் பதவி ஏற்றார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க உறுதியுடன் செயற்பட்டார்.

போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவர் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார். உண்மையை சிங்கள உலகம் அகிலமும் அறிந்து கொள்வது இராணுவத்துக்கும் அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்குரிய முதன்மைக் காரணியாக இருந்தது.

ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நேரமான காலை 8.30 மணிக்கு முன்னதாக காலை 7 மணி தொடக்கம் 8 மணிவரை அவர் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் அளித்தார். அந்த இறுதி நேர்காணலில் தமிழ்த் தேசிய இனத்தின் பல்வேறு பிரச்சனை பற்றியும் தனது ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்தார். அந்த நேர்காணலை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

Kunalan Karunagaran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

578939455_122276777234238160_88011377348

images?q=tbn:ANd9GcQckHBW4aID5ZZYw1B84dl

ரவிராஜ் அவர்களின் கொடூரக் கொலை நிகழ்ந்த போது நான் கொழும்புக்கு வந்து இரண்டு மாதங்கள்.கொலை நடந்த இடம் மிகப் பெரிய பாதுக்காப்பு நிறைந்த இடம். சிங்களப் பேரினவாதம் எமக்காக அனைத்து மக்களோடும் இணைந்து போராடிய ஒருவரை கொடூரமாக கொன்று தீர்த்தது.

கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள் ஐவரும் 2015இல் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைக்கு இன்றுவரை நீதி நிலை நாட்டப்படவில்லை.

இந்தக் கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைதானவர் தான் இன்று பாரிய ஐஸ் போதைப் பொருள் மூலப்பொருளை வைத்திருந்தாக கைதாகியிருந்த சம்பத் மனம்பெரி. ரவிராஜ் கொலையில் அவர் பின்னர் அரச தரப்பு சாட்சியாகவும் மாறியிருந்தார்.

இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் NPP/JVPயின் தமிழ் உறுப்பினர்கள் இந்தக் கொலைக்கு முதலைக் கண்ணீர் வடிப்பது தான் பெரும் ஆச்சர்யம்.

இன்று தடுத்து வைத்திருக்கும் மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று அழும் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா?

அன்று இந்தக் கொலையின் பின்னர் JVP வெளியிட்ட மோசமான அறிக்கையை நாம் மறக்கவில்லை.

The JVP: "We don't agree with the political views of Mr. Raviraj. However, we respect the democratic right he has to hold such views. It is the political heritage of murderous separatist Tiger terrorists to savagely murder their political enemies".

ஜே.வி.பி: "திரு. ரவிராஜ்சின் அரசியல் கருத்துக்களுடன் நாங்கள் உடன்படவில்லை. இருப்பினும், அத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்க அவருக்கு உள்ள ஜனநாயக உரிமையை நாங்கள் மதிக்கிறோம். கொலைகார பிரிவினைவாத புலி பயங்கரவாதிகளின் அரசியல் பாரம்பரியம், அவர்களின் அரசியல் எதிரிகளை கொடூரமாக கொலை செய்வது"

Vaishu Pusparaj 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் ரவிராஜுக்கு நினைவு வணக்கம். சிறந்த ஆற்றல் உள்ள ரவிராஜ் போன்றவர்கள் தமிழர் அரசியலுக்கும் தலைமை வகிக்க தகுதியானவர். அன்றைய பேச்சுவார்ததை குழுவில் இவர் போன்றவர்கள் திரு அன்ரன் பாலசிங்கத்தோடு இணைந்து அவருக்கு பலம் சேர்த்திருந்தால், பேச்சுவாத்தை முடிவுகளை எடுக்கும் குழுவில் அங்கம் வகித்து பேச்சுவார்ததை முன்னேற்றம் காண வாய்புகள் இருந்திருக்கும். உலகளாவிய அரசியல் பாரவை கொண்ட இவர் போன்றவர்கள் வெறும் பிரச்சாரத்துக்கு பயன்பட்டனே தவிர இவர்களது அரசியல் ஆற்றல்கள் பயன்படுத்தப் படவில்லை. இவரது பங்குபற்றுதல் தமிழர் தரப்பின் தவறான அரசியல் தீர்மானங்களை தடுத்து நிறுத்த உதவியிருக்கும்.

1998 ல் மேயர் சிவபாலன் விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட வேளையில் உதவி மேயராக இருந்த ரவிராஜ். அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அதிஷ்ரவசமாக தப்பினார். அன்று கொல்லப்பட்டிருந்தால் மாமனிதர் விருது கிடைத்திருக்காது. துரோகி என்ற பட்டத்துடன் இன்று மறக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆகியிருப்பார். ஆனால் அவரது அதிஷரம் அவர் இன்று மாமனிதர்.

தமிழர் அரசியலில் துரோகிக்கும் தியாகிக்கும் நூலிழை தான் வித்தியாசம். அவரவர் அதிஷரமும் அடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் கனத்த நினைவஞ்சலிகள்.

தன்னடக்கத்தின் சிகரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.