Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்

ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று(21.11.2025) ஆரம்பமாகின்றது.

இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

புலம்பெயர் நாடுகளிலும்..

1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளியான லெப். சங்கர் முதல் வித்தாக வீரமரணமடைந்தார்.

அந்த நாளையே மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அறிவிக்கப்பட்டது. 

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் | Maaveerar Week Begins Today

தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள்

மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில், நவம்பர் 21 ஆம் நாள் மாவீரர் வாரம் ஆரம்பமாகும். இந்த நாட்களில் தமிழ் மக்களால் வணக்க நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும்.

இறுதி மாவீரர் நிகழ்வுகள் நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறும். அந்நாளில் தமிழ் மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடர் ஏற்றுவார்கள்.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் | Maaveerar Week Begins Today

பொதுவாக, தமிழர் தாயகத்தில் மாவீரர் வாரம் முழுவதும் மஞ்சள், சிவப்பு நிறக் கொடிகள் பறக்கவிட்டு, மாவீரர்களுக்கான பாடல்கள் ஒலிக்கவிட்டு துயிலும் இல்லங்களில் வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதேபோல், புலம்பெயர் தேசங்களிலும் இவ்வகையான வணக்க நிகழ்வுகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/maaveerar-week-begins-today-1763677607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஈகைச் சுடரேற்றலுடன் ஆரம்பமானது மாவீரர் வாரம்

21 Nov, 2025 | 12:14 PM

image

தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை  நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (21)  வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.

சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு  ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (21)  ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள்  உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

இதனிடையே சனிக்கிழமை (22)  காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளர்கள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

1000198124.png

1000198125.png

IMG-20251121-WA0002.jpg

https://www.virakesari.lk/article/230993

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

21 Nov, 2025 | 04:52 PM

image

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான  வெள்ளிக்கிழமை (21) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 

பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள நினைவு தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு , மாணவர்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

1001206433.jpg

1001206439__1_.jpg

1001206448__1_.jpg

https://www.virakesari.lk/article/231025

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் முதல்நாள் நிகழ்வு

21 Nov, 2025 | 02:02 PM

image

மாவீரர் நினைவு வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் நினைவு நாளின் வாரத்தின் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை (21) மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. 

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள அவர்களுடைய அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்கள் நினைவாக அஞ்சலி செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-20251121-WA0024.jpg

IMG-20251121-WA0020.jpg

IMG-20251121-WA0022.jpg

IMG-20251121-WA0023.jpg

IMG-20251121-WA0025.jpg

https://www.virakesari.lk/article/231006

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு!

Vhg நவம்பர் 22, 2025

AVvXsEj1-wnxAA09TI97bdrFZc07LSYBe2GxNQufRTf042uzplfxNommyF3AXsm-j9r31uOPqolSPbAETG6P8CJm0gMDjm68ov6KvsT32GIiomKZXFog3qHwcGTMSermcZx28tHmXsDchsEj6JKRIo1Lclx8ImTf1E8B32OAzogZ7TDzA70yU-phyFNcubGNaAI3

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (21.11.2025) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நேற்று (21.11.2025)மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

AVvXsEgHoPySSi24dCF7kBTxKQPqIyjENNvw0aNCJ7QsTtivIA3jbFb2Xz2DfzdU_WvzHxJehq52PLWSypa7zEbMMEQdRoQGpyVcWFRMtLDvX-bkcRKCmZWjfxwpn1XFsjxbhrCaM5QEQumznFLNdnEeo-akHqeEFLyD7iBPNUgO6JiKquZG2d-SyNAZZsa6Ox_k

பெற்றோரின் பங்கேற்புடன் கண்ணீர்ப்பூ அஞ்சலி

AVvXsEjitEObHQFJbTk417jK_RYRauq-JTfBWEOypj4z9J005IIruhTKfqUxXHWp9JDoI3Xb2QOHAjH9-awILhsm5RaYXd5yBRWtaVfxk1DLKv7CsNZ8aQclgg8MBKLC9f0dZZG4qc898sZxBLOTWVu9E_X_7pplo0PNugUPIU8mR6hnWz1AUZ1k3MDsOl4ayiEv

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் பொதுச் சுடரை, மாவீரர் ஒருவரின் உறவினர் ஏற்றி வைத்து, தியாக மைந்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பலரும் கண்கலங்க மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தத் தியாக நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவைப் போற்றினர்.

AVvXsEjNinxmWvNx8ioWUtdS1Mu1PECxchzQ0tUNHIetrDYy2WWIwaxWcjffOFez6VgpL7ZKLDfu2wS9tQX9h9SlRji6BrVlYoI5L68u7CH4t2Oa7hD-M777cmJVfKsbvno_0mUTQSvvzXU3Xr6H9VX9jOTRneP3xrNvXEVsROd3IBsd6QroXyvvka4gjPw4EXkj

https://www.battinatham.com/2025/11/blog-post_22.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள்

Published By: Vishnu

22 Nov, 2025 | 05:09 AM

image

மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால், துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.

ஈகைச்சுடரினை, இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. 

5__7_.jpeg

5__6_.jpeg

5__8_.jpeg

5__3_.jpeg

5__1_.jpeg

5__5_.jpeg

https://www.virakesari.lk/article/231065

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

22 Nov, 2025 | 04:23 PM

image

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. 

அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.

1000725513.jpg

1000725534__1_.jpg

1000725520__1_.jpg

1000725521.jpg

https://www.virakesari.lk/article/231126

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, கிருபன் said:

உணர்வுபூர்வமாக மாவீரர் வாரம் ஆரம்பம்! மாவீரர் கல்வெட்டு திறப்பு!

Vhg நவம்பர் 22, 2025

AVvXsEj1-wnxAA09TI97bdrFZc07LSYBe2GxNQufRTf042uzplfxNommyF3AXsm-j9r31uOPqolSPbAETG6P8CJm0gMDjm68ov6KvsT32GIiomKZXFog3qHwcGTMSermcZx28tHmXsDchsEj6JKRIo1Lclx8ImTf1E8B32OAzogZ7TDzA70yU-phyFNcubGNaAI3

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் தியாகச் சுடர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று (21.11.2025) யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

இதையொட்டி, யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக, போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று நேற்று (21.11.2025)மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

AVvXsEgHoPySSi24dCF7kBTxKQPqIyjENNvw0aNCJ7QsTtivIA3jbFb2Xz2DfzdU_WvzHxJehq52PLWSypa7zEbMMEQdRoQGpyVcWFRMtLDvX-bkcRKCmZWjfxwpn1XFsjxbhrCaM5QEQumznFLNdnEeo-akHqeEFLyD7iBPNUgO6JiKquZG2d-SyNAZZsa6Ox_k

பெற்றோரின் பங்கேற்புடன் கண்ணீர்ப்பூ அஞ்சலி

AVvXsEjitEObHQFJbTk417jK_RYRauq-JTfBWEOypj4z9J005IIruhTKfqUxXHWp9JDoI3Xb2QOHAjH9-awILhsm5RaYXd5yBRWtaVfxk1DLKv7CsNZ8aQclgg8MBKLC9f0dZZG4qc898sZxBLOTWVu9E_X_7pplo0PNugUPIU8mR6hnWz1AUZ1k3MDsOl4ayiEv

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் பொதுச் சுடரை, மாவீரர் ஒருவரின் உறவினர் ஏற்றி வைத்து, தியாக மைந்தர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பலரும் கண்கலங்க மலர்களைச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தத் தியாக நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள், அரசியல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவைப் போற்றினர்.

AVvXsEjNinxmWvNx8ioWUtdS1Mu1PECxchzQ0tUNHIetrDYy2WWIwaxWcjffOFez6VgpL7ZKLDfu2wS9tQX9h9SlRji6BrVlYoI5L68u7CH4t2Oa7hD-M777cmJVfKsbvno_0mUTQSvvzXU3Xr6H9VX9jOTRneP3xrNvXEVsROd3IBsd6QroXyvvka4gjPw4EXkj

https://www.battinatham.com/2025/11/blog-post_22.html

இதில் சில முதல் மாவீரர்களின் பெயர் விரிப்புகளும் மாவீரர் துயிலுமில்லங்கள் தொடர்பான தகவல்களும் பிழையாக உள்ளன.

எல்லைப்படை முதல் பெண் மாவீரர் வீரவேங்கை ரதி (1999). எனினும் இதில் 2000ம் ஆண்டு வீ. ஒரு பெண் போராளியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவீரர் துயிலுமில்ல முகப்புகளும் பிழையாக உள்ளன...

யாரேனும் எடுத்துச் சொல்லுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள்

பச்சிலைப்பள்ளி 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் இன்றையதினம் (26.11.2025) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

இந்த கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்.

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

செய்தி - எரிமலை

யாழில் கட்டப்பட்டுள்ள கொடிகள்

மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். நகர் பகுதி எங்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் இன்று வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் | The Sixth Day Of Maaveerar Work

செய்தி - தீபன்

https://tamilwin.com/article/the-sixth-day-of-maaveerar-work-1764159995

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதனுக்கு யாழில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதனுக்கு ஈகைச்சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஈகை சுடர்

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதல் மாவீரர் சங்கர் சத்தியநாதனுக்கு யாழில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி | Tribute First Hero Shankar Satyanathan In Jaffna

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை முன்னாள் நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/tribute-first-hero-shankar-satyanathan-in-jaffna-1764246419

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்!

மாவீரர் நாள் நினைவேந்தலானது இன்றையதினம் நல்லூரடியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சரியாக 06.05 மணிக்கு மணி ஒலிக்க, 06.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கேப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டு, "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே" என்ற துயிலும் இல்ல கீதம் ஒலிக்கப்பட்டது.

இதன்போது மண்ணின் விடுதலைக்காக வித்தாகியோரது பெற்றோரும், உரித்துடையோரும் கூறி அழுததை அவதானிக்க முடிந்தது.

நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுகளையும் மக்கள் பார்வையிட்டனர்.

25-69284a8da2b50.webp

25-69284a8e576fa.webp

25-69284a8f0aaee.webp

25-69284a8fb2233.webp

25-69284a90662e7.webp

https://tamilwin.com/article/maaveerar-naal-2025-nallur-1764248204

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் முதன்முறையாக மாவீரர்களுடன் விடுதலை புலிகளின் தலைவருக்கும் அஞ்சலி..!

தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதன் போது மாவீரர்களின் உருவப் படங்களுக்கு தீபமேற்றியதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

https://tamilwin.com/article/mulankavil-maaveerar-thinam-1764247643

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களுக்கு முள்ளியவளை துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

முல்லைத்தீவு - முள்ளியவளை துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

இதனையடுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர்.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

https://tamilwin.com/article/maveerar-ninaivendhal-mulliyavalai-2025-1764249093

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல்கள்!

மட்டக்களப்பிலும் பெருந்திரளான மக்களுக்கு மத்தியில் மாவீரர் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாறு நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25-692859005a125.webp

25-69285900ea665.webp

https://ibctamil.com/article/maaveerar-day-remembrance-event-2025-batticaloa-1764251903#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்

திருகோணமலை ,தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27)கொட்டும் கனமழைக்கு மத்தியிலும் இடம் பெற்றது.

வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூரும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை இந்த நேரத்தில் அக வணக்கத்துடன் இயற்கையின் பேரிடரை கூட பொருட்படத்தாமல் இளைஞர்கள் நினைவேந்தலை முன்னெடுத்தனர்.

https://ibctamil.com/article/trincomale-maaveerar-naal-1764252908

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர்நீத்த மாவீரர்களுக்கு நல்லூரில் நினைவேந்தல் 

27 Nov, 2025 | 07:10 PM

image

மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27) நல்லூரியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

சரியாக 6.05 மணிக்கு மணி ஒலிக்க, 6.06 மணிக்கு மௌன வணக்கம் செலுத்தப்பட்டு, கெப்டன் பண்டிதரின் தாயார் பொதுச் சுடர் ஏற்றி வைக்க, அதேவேளை துயிலும் இல்ல கீதம் இசைக்க, ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டது. 

உள்நாட்டுப் போரில் உயிர்நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

 நல்லூர் வளாகத்தில் அமைக்கப்பட்ட மாவீரர்களின் கல்வெட்டுக்களையும் இதன்போது மக்கள் பார்வையிட்டனர்.

IMG-20251127-WA0077.jpg

IMG-20251127-WA0081.jpg

IMG-20251127-WA0084.jpg

IMG-20251127-WA0074.jpg

IMG-20251127-WA0075.jpg

IMG-20251127-WA0071.jpg

IMG-20251127-WA0068.jpg

https://www.virakesari.lk/article/231698

வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வு!

Published By: Vishnu

27 Nov, 2025 | 07:40 PM

image

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவீரர் தின நிகழ்வு வியாழக்கிழமை (நவ.27) இடம்பெற்றிருந்தது.

வவுனியா தமிழரசுக் கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், பிரதான திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மலர் அஞ்சலியும் இடம்பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் பிரதான திருவுருவ படங்களுக்கு தீபமேற்றியும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். 

IMG_20251127_181238.jpg

IMG_20251127_181233.jpg

IMG_20251127_181224.jpg

IMG_20251127_181133.jpg

IMG_20251127_181108.jpg

IMG_20251127_180813.jpg

IMG_20251127_181010.jpg

IMG_20251127_180741.jpg

IMG_20251127_180715.jpg

IMG_20251127_180726.jpg

https://www.virakesari.lk/article/231702

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனமழையிலும் தம்பலகாமத்தில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

Published By: Vishnu

27 Nov, 2025 | 08:16 PM

image

திருகோணமலை, தம்பலகாமம் நான்கு வாசல் பிள்ளையார் ஆலய முன்றலில் தம்பலகாம இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை (27)கொட்டும் கனமழையிலும் இடம் பெற்றது.

வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழினத்தின் விடுதலைக்காக போராடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை இந்த நேரத்தில் அக வணக்கத்துடன் இயற்கையின் பேரிடரை கூட பாராமல் நினைவேந்தலை முன்னெடுத்தனர். வடகிழக்கின் மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தின நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டது.

IMG-20251127-WA0089.jpg

IMG-20251127-WA0095.jpg

IMG-20251127-WA0103.jpg

IMG-20251127-WA0102.jpg

IMG-20251127-WA0100.jpg

IMG-20251127-WA0099.jpg

IMG-20251127-WA0098.jpg

https://www.virakesari.lk/article/231705

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

Published By: Vishnu

27 Nov, 2025 | 08:28 PM

image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியில் மாலை6.05 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவீரர்கள் நினைவாக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

IMG-20251127-WA0008.jpg

IMG-20251127-WA0015.jpg

IMG-20251127-WA0007.jpg

IMG-20251127-WA0009.jpg

IMG-20251127-WA0016.jpg

IMG-20251127-WA0011.jpg

IMG-20251127-WA0010.jpg

https://www.virakesari.lk/article/231707

அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையையும் மீறி உணர்வுபூர்வமான மாவீரர் நாள் நினைவேந்தல்

Published By: Vishnu

27 Nov, 2025 | 10:11 PM

image

வடக்கு, கிழக்கில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் சீரற்ற வானிலை நிலவுகின்றபோதிலும் கொட்டும் மழைக்கும் மத்தியில் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில்  27 இல் மாவீரர் நினைவேந்தல் நடைபெற்றன.

இதன்படி இன்று இம்மாவீரர் துயிலும் இல்லத்தில்  நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாலை   தமிழரின் தேசிய மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக   முன்னெடுக்கப்பட்டன.இன்று மாலை 6.05 நிமிடத்தில் மாவீரர்களுக்கான  பொதுச் சுடர் ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

அத்துடன் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு இடமளிக்கும் வகையில் எதுவித இடையூறும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் நினைவேந்தல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டது.

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள், அரசியல்வாதிகள் என பெருந்திரளானவர்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு தமிழ் மக்களின் உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிபரப்பாகியது. இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்ததுடன் பெருந்திரளான பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தி இருந்தனர்.

 அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்துள்ளது.அம்பாறை மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட மாவீரர்களின் நினைவுச்சுடர்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.கஞ்சிகுடிச்சாறு மாவீரர்கள்; துயிலும் இல்லத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் தீபம் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளது.

tt__37_.jpeg

tt__33_.jpeg

tt__32_.jpeg

tt__30_.jpeg

tt__27_.jpeg

tt__25_.jpeg

tt__24_.jpeg

tt__23_.jpeg

tt__22_.jpeg

tt__20_.jpeg

tt__19_.jpeg

tt__1_.jpeg

tt__11_.jpeg

tt__5_.jpeg

tt__4_.jpeg

tt__3_.jpeg

https://www.virakesari.lk/article/231715

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற வளாகத்தில் மாவீரர் நாள் குகதாசன், சணக்கியன் இணைந்து நினைவுகூரல்

Published By: Vishnu

27 Nov, 2025 | 08:54 PM

image

தமிழர் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு வியாழக்கிழமை (27) மாலை பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன் மற்றும் சாணக்கியன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்றைய தினம் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் மகாவலி மற்றும் நீர்பாசன அமைச்சின் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றிருந்ததால், தமிழரசுக் கட்சியின் பல்வேறு மக்களின் கோரிக்கைகள், காலநிலை மாற்றத்தால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் அங்கு பதிவு செய்யப்பட்டன.

இதனாலேயே துயிலும் இல்லங்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாததை இருவரும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இருப்பினும், போராட்டங்களின் வடிவம் மாறினாலும், தமிழர் விடுதலைக்கான இலக்கு மற்றும் உறுதி எப்போதும் மாறாது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

https://www.virakesari.lk/article/231708

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்!

adminNovember 27, 2025

3-4.jpeg?fit=1170%2C658&ssl=1

 யாழ். பல்கலையில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

4-8.jpeg?resize=800%2C450&ssl=1

கொடிகாமம் துயிலுமில்லம்
Kodikam2.jpeg?resize=800%2C450&ssl=1Kodikamam1.jpeg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின்  தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கோப்பாய் துயிலுமில்லம்!

Kopay1.jpg?resize=800%2C450&ssl=1Kopay2.jpg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

நல்லூர் நினைவாலயத்தில்

Nallur1.jpg?resize=800%2C533&ssl=1Nallur2.jpg?resize=800%2C317&ssl=1

யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

எள்ளங்குளம் துயிலுமில்லம்

Elankulam1.jpg?resize=800%2C450&ssl=1

யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

சாட்டி துயிலுமில்லம்
3-3.jpeg?resize=800%2C600&ssl=1

யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி  துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று  (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

-தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது.

Mannar2.jpeg?resize=800%2C450&ssl=1

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று  (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது .

மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர்  ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

https://globaltamilnews.net/2025/223152/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கோப்பாயில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நினைவேந்தல் !

Published By: Vishnu

28 Nov, 2025 | 12:36 AM

image

யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார்.

கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி நினைவேந்தலில் ஈடுட்டனர்.

2025_11_27_19_42_IMG_1809.JPG

2025_11_27_19_42_IMG_1808.JPG

2025_11_27_18_32_IMG_1775.JPG

2025_11_27_18_23_IMG_1758.JPG

2025_11_27_18_18_IMG_1749.JPG

2025_11_27_18_07_IMG_1743.JPG

2025_11_27_17_52_IMG_1720.JPG

2025_11_27_17_56_IMG_1725.JPG

01__7_.jpg

2025_11_27_17_43_IMG_1688.JPG

01__5_.jpg

01__4_.jpg

01__3_.jpg

01__2_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/231729

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகள் இல்லாமல் மாவீரர் தினம் பழைய காலம் போல அமைதியாக உணர்ச்சிபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

கிருபன் ஜி வழமைபோல் மாவீரர் தின உரையை எங்கோ தேடிப்பிடித்து இணைத்துள்ளார்.

தலைவரின் புதல்வி என உரிமை கோரும் ஒருவரின் மாவீரர் தின உரையும் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.

Edited by நியாயம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.