சீனாவுக்கு ட்ரம்ப் நிபந்தனை விதிக்கிறார்!
--- --- ---
*பீஜிங் பயணத்திற்கு முன்னர், ஹார்மூஸ் நீணையை கைப்பற்ற வேண்டும் என்கிறார்...
*ட்ரம்ப், பீஜிங் வருவதற்கான பேச்சு நடப்பதாக சீனா கூறுகிறது...
*பயணம் தாமதமடைந்தால் வர்த்தக பேச்சின் நிலை???
--- --- ---
ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க மறுத்தால் பீஜிங்கிற்கான தனது பயணத்தை நிறுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து சீன அரச ஊடகமான குளோபல் ரைமஸ் (globaltimes) செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், ட்ரம்பின் சீனப் பயணம் குறித்து இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் (Lin Jian) இன்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.
அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) சீன துணை பிரதமர் ஹீ லைஃபெங் (He Lifeng) ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசிய பின்னர், ட்ரம்பின் சீன பயணம் தொடர்பான செய்தி வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், தனது சீன பயணம் தொடர்பாக ட்ரம்ப், சீன அரசிடம் பேரம் பேசுவதாக. குளோபல் ரைமஸ் கூறுகிறது.
ட்ரம்பின் மிரட்டல் குறித்து அமெரிக்க செய்தி நிறுவனமான சீஎன்என் (cnn) செய்தியிலும் விபரிக்கப்பட்டுள்ளது.
பைனான்சியல் ரைம்ஸுக்கு (Financial Times) ட்ரம்ப் வழங்கிய நேர்காணலை மேற்கோள் காண்பித்து சீன்என் இச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்ட மாநாட்டிற்கு முன்னதாக, ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்குமா என்பதை அறிய விரும்புவதாக ட்ரமப் கற்பிதம் செய்கிறார்.
ஆகவே, சீனாவிடம் இருந்து உரிய பதில் கிடைக்காமல் விட்டால், ட்ரம் தனது பயணத்தை தாமதப்படுத்துவர் என்பது தெரிகிறது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் (geopolitical tensions) ட்ரம்பினுடைய சீன பயணத்துக்கு தடை என்பதை விடவும், ஹார்மூஸ் நீணை விவகாரத்தில் சீனா ஒத்துழைக்க வேண்டும் என ட்ரம்ப் எதிர்பார்க்கிறார் என்பது புரிகிறது.
அதாவது, ஹார்மூஸ் நீணையை, அமெரிக்க படைகளினால் தனித்து நின்று கைப்பற்ற முடியாது என்பது புரிகிறது.
ஆனால், ஹார்மூஸ் நீணை பகுதி ஈரான் என்ற ஒரு அரசின் இறைமைக்கு உட்பட பகுதி என ஐரோப்பிய நாடுகள் விபரிக்கின்றன. சீனாவும் அவ்வாறு தான் கூறுகிறது.
அதேநேரம், பரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை சீனாவுடன் இடம்பெற்ற வர்த்தக பேச்சை, ட்ரம்ப சீனாவுக்கு சென்று தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது.
இல்லையேல், ஈரான் போரின் பின்னரான பொருளாதார மூதலீடுகள் பற்றிய விவகாரங்களில், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சீனாவுடன் ஒத்துழைக்கும். அல்லது சீன - ரசிய நாடுகளை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பின் செயற்திறன் மேலும் நீட்சியடையும் எனலாம்.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
https://www.facebook.com/1457391262/posts/pfbid02uwJTXZBfgfyWvwcgYjHKBjnzBzU8qu7nFm8RGjSfoJTQqnvbXsd6HTXqPW7oJe6ml/?mibextid=wwXIfr
By
ஈழப்பிரியன் ·