Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

imran_khan.jpg?resize=720%2C375&ssl=1

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்படாத தகவலை வெளியிட்டுள்ளன.

இது குறித்து ஆப்கான் டைம்ஸ் தனது எக்ஸ் பதிவில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் “கொலை செய்யப்பட்டார்” என்ற ஆதாரங்களில் இருந்து தகவல் கிடைத்ததாகக் கூறியதைத் தொடர்ந்து இந்த வதந்திகள் தொடங்கின. 

எனினும், இந்தக் கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் சரிபார்க்கப்படாதவை – எந்த நம்பகமான நிறுவனத்தாலும் அல்லது துறையாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இம்ரான் கானின் குடும்பத்தினர் சிறையில் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியான சிறிது நேரத்திலேயே இந்த வதந்திகள் வந்துள்ளன. 

அடியாலா சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட அவரது சகோதரிகள், அவரைச் சந்திக்கக் கோரி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இம்ரான் கானின் மூன்று சகோதரிகள் – நோரீன், அலீமா மற்றும் உஸ்மா – அரசியல் தலைவர் அடியாலா சிறைக்குள் “கொடூரமாக தாக்கப்பட்டதாக” குற்றம் சாட்டினர், அங்கு அவர் அடிக்கடி சிறை அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் முறைப்பாடு அளித்துள்ளனர்.

72 வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு 2023 முதல் சிறையில் உள்ளார்.

Athavan News
No image preview

இம்ரான் கான் எங்கே? வதந்திகளால் பாகிஸ்தானில் சர்ச்ச‍ை!

தற்போது ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காவலில் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சமூக ஊடகக் கணக்குகள் உறுதிப்படுத்தப்
  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கான் கொல்லப்பட்டாரா? - அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம் 

27 Nov, 2025 | 01:13 PM

image

கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த  உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் அடியாலா சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டது. 

இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்து, நேற்றை தினம் சிறைச்சாலை வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இம்ரான் கான் சிறைக்குள்தான் இருக்கிறார், அவர் வேறு எங்கும் மாற்றப்படவில்லை, அவர் தொடர்ந்து முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஜியோ நியூஸ், பாகிஸ்தான் டுடே முதலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ati.jpg

g.jpg

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட  இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சில நாட்களாக இம்ரான் கானை சந்திக்கச் சென்ற  அவரது மூன்று சகோதரிகள் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (PTI) கட்சித் தொண்டர்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 

இம்ரான் கானை சந்திக்க சிறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த காரணத்தினால் அவர் சிறைக்குள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்நாட்டில் பரவத் தொடங்கியது. 

இம்ரான் கானை சந்திக்க விடாமல் சிறை நிர்வாகம் தடுப்பதில் சந்தேகம் கொண்டு சகோதரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறைச்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்ரான் கானின் உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று சகோதரிகள் கூறத் தொடங்கினர். 

அதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் சிறைச்சாலையில் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரவத் தொடங்கின.

இந்த சமூக ஊடகப் பதிவுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

44.jpg

இதனையடுத்து, சிறைச்சாலை வளாகத்தில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெருமளவினர் திரண்டு கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிறைச்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இம்ரான் கானின் நிலை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என கட்சித் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். 

கடந்த ஒரு மாத காலமாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ள இதேவேளை, இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்து, பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. எனினும், பாகிஸ்தான் அரசும் சிறை நிர்வாகமும், தற்போது பரவும் செய்திகளை மறுத்து வருகின்றன. 

இச்சூழ்நிலையில் இம்ரான் கானின் தங்கை நோரின் நிாயஸி கூறுகையில், “அண்ணன் இம்ரான் கானை பார்க்கவேண்டும் என்றுதான் சிறைக்கு சென்றோம். நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைக்கு வெளியில் போராடினோம். எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பஞ்சாப் மாகாண பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு 71 வயதாகிறது. எனது தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று என்னை வீதியில் தள்ளிவிட்டனர். இதனால் எனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார். 

இம்ரான் கானை யாரும் சந்திக்காதவாறு அதிகாரபூர்வமற்ற தடையை பாகிஸ்தான் அரசு விதித்திருக்கக்கூடும் என்றும் அதனால்தான் கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

4.jpg

https://www.virakesari.lk/article/231620

  • கருத்துக்கள உறவுகள்

“சிறையில் சித்திரவதை; என் உயிருக்கு ஆபத்து; இராணுவ தளபதி அசிம் முனீர் மனநிலை சரியில்லாதவர்” - இம்ரான் கான் பகிரங்கம் 

04 Dec, 2025 | 06:31 PM

image

பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் சித்திரவதை செய்யப்படுவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அதில் “என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளமை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் 2 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அண்மையில் சிறையில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 

அதனையடுத்து, இம்ரான் கான் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பல தகவல்கள் சமூக ஊடக தளங்களில் பரவின. 

அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்திலும் அந்நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தன. 

அதன் பின்னர், இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதியளித்தது. 

 உஸ்மா சிறையில் இம்ரான் கானை சந்தித்துவிட்டு, வெளியே வந்து, “இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால், அவருக்கு மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது” என தெரிவித்தார். 

சகோதரியை சந்தித்த பின்னர், இம்ரான் கான் அளித்த அறிக்கையினை அவரது தெக்ரிக் இ இன்சாப் கட்சி வெளியிட்டது.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டதாவது:

“எனக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியைப் போன்ற சூழ்நிலையில் நான் அடைக்கப்பட்டுள்ளேன். எனக்கு ஏதாவது நடந்தால், இராணுவத் தலைவரும், உளவுப்பிரிவு டி.ஜியும் பொறுப்பாவார்கள்.

நான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டேன். 5 நாட்கள் என் அறைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 10 நாட்கள் நான் அறையில் அடைக்கப்பட்டேன். இங்குள்ள நிலைமைகள் மனிதாபிமானம் அற்றவைகளாக உள்ளன.

இராணுவ தளபதி அசிம் முனீர் வரலாற்றில் மிகவும் கொடுங்கோல் சர்வாதிகாரி. மனநிலை சரியில்லாதவர். எனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அசிம் முனீர் தான் காரணம்” என இம்ரான் கான் குறிப்பிட்டிருந்தார்.

https://www.virakesari.lk/article/232459

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.