Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்

26 Dec, 2025 | 10:41 AM

image

தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவரை தொடர்புகொண்டு வினவியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி திஸ்ஸ விகாரை தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம்  ஏற்கிறோம். ஆனால் குறித்த விகாரை எமது ஆட்சிக்காலத்தில் அமைக்கப்படவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம். 

ஆனால் அரசாங்கம் என்ற வகையில்  குறித்த பிரச்சினையை நீடிக்காமல் முடிறுத்தவே எதிர்பார்க்கின்ற நிலையில் விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு உரிய மாற்றுக்காணிகளை வழங்குவது அல்லது தற்போதைய சூழ்நிலைக் கேற்ற அவர்களுக்கான இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. 

இழப்பீடு அல்லது மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு கூட எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க குறித்த பிரச்சனையை அரசியல் ரீதியாக மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். 

நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு  இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.

ஆகவே அரசாங்கம் திடமான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே  என்றார்.

https://www.virakesari.lk/article/234447

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

எத்தனை பேரிடம் ஆவணங்கள் சரியாக இருக்கிறது என்பது ஒருபுறம்

ஆவணங்கள் இல்லாமற் போனதற்கும் மக்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்ததற்கும் யார் காரணம் என்பதையும் விளக்கலாம்.

40 minutes ago, ஏராளன் said:

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடு அல்லது மாற்றுக்காணியே  என்றார்.

அனுமதி பெறாமல் கட்டிய தனியார் கட்டிடங்களை இடிக்க மட்டும் உங்களுக்கு உரிமை சட்டம் உண்டா?

49 minutes ago, ஏராளன் said:

நாட்டின் மூவினங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மதம் மற்றும் இனங்களுக்கு  இடையில் மோதல்களை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.

யார் மோதல்களை உருவாக்குவது? தம்புள்ள நகரிலிருந்து முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக பௌத்த பிக்குகள்செய்த முறைபாட்டுக்கமைய இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு ஒரே இரவில், முழுமையாக கோவிலை மூடுவதற்குமுன் செய்ய வேண்டிய மதச்சடங்குகளை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் மறுத்து இடிக்கப்பட்டது ஏன்? எந்த கட்சிஆட்சியமைத்தாலும் , மதமானாலும் இனமானாலும் சட்டம் ஒன்றுதான், யாவருக்கும் சமந்தான். திருகோணமலையில் விட்ட தவறு இப்போ திஸ்ஸ விகாரையில் வந்து நிற்கிறது, இது தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பில் முடியும். அவர்கள் சோதனையில் வென்று விட்டார்கள். அனுரா தோற்றுவிட்டார் இது ஒன்றே போதும் இவரின் தோற்றுப்போன அரசியலுக்கு. இந, மத விரோதிகளுக்கு அடிபணிந்து விட்டார். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை, பின் மக்களுக்கு எப்படி முன்மாதிரி காட்டுவார்? முன்னைய அரசாங்கங்களை விமர்சிக்க, தண்டிக்க இவருக்கு தகுதியுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது? கருணாநிதியின் முரசொலி கேள்வி பதில் போல் உள்ளது 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விகாரை மொட்டுக்கட்சியினருக்கு கௌரவப்பிரச்சனை. அவர்களே இதை பின்னின்று நடத்துகிறார்கள். இவர்களது கட்சியை சேர்ந்த 02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியே இதன் பின்னால் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டால் பொறுமையாய் இருக்க மாட்டோம் என சரத் வீர சேகர எச்சரிக்கிறார், அனுரா புலம்பெயர்ந்தவர்களுடன் உடன்பாடு செய்து இராணுவ முகாம்களை அகற்றுகிறார், திஸ்ஸ விகாரையை அகற்றப்போகிறார், நாட்டில் பௌத்தத்துக்கு சுதந்திரமில்லை, கொழும்பில் சைவ ஆலயங்கள் இருக்கின்றன, வடக்கில் பௌத்தத்திற்கு சுதந்திரமில்லை என இன்னொரு மொட்டுக்கட்சி அமைச்சர் அப்பட்டமான பொய் கூறுகிறார். சஜித்தும், அரசும் சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாராதிபதிக்கு உயரிய அதிகாரங்களை வழங்கும் தலைமைச்சங்க நாயகராக தெரிவு செய்கின்றனர். கொழும்பில் சைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தங்கள் காசில் நிலம் வேண்டி உரிய அனுமதி பெற்று ஆலயங்களை அமைக்கிறார்கள் வழிபடுகிறார்கள். வடக்கில் எழும் விகாரைகள் அப்படியா? தையிட்டியில் நிலைமை அப்படியா? அங்கு பௌத்தர்கள் வாழ்கிறார்களா? எதற்காக மக்கள் காணியில் விகாரை, யாருக்காக? இராணுவ நிலங்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள நிலங்கள் சரத் வீரசேகரவுடையதா? அல்லது மொட்டுக்கட்சியுடையதா? அதைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி புலம்பெயர் தமிழரை சொன்னால் அனுரா கேட்டுக்கொண்டு அடாவடியாக நடக்கமுடியுமா? சட்டம், நீதி சொல்வதை செய்வதற்கு புலம்பெயர் தமிழர் கதை எதற்கு? பயங்கரவாதச் சட்டம் எதற்கு இன்னும் அமுலில் இருக்கிறது? அது தமிழருக்கு, உரிமையை கேட்பவருக்கு எதிராகவா? இப்படி ஒற்றுமையை அழிக்கும் பேச்சுக்களை பேசும் நபர்களுக்கு எதிராக ஏன் பாவிக்கவில்லை? அப்போ திஸ்ஸ விகாரை அகற்றப்படாதென்றால், இன்னும் பல விகாரைகள் வடக்கில் எழும். அனுரவுக்கெதிராக எல்லா அரசியல் கட்சிகளும் செயற்படுவதால், இவர் பயந்து விட்டாரா? அல்லது தமிழருக்கெதிராக இவரும் மற்றைய கட்சிகளோடு இணைந்துவிட்டாரா? ஒரு இனத்தை அடக்கி, அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு எப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ முடியும் என அனுராதான் விளக்க வேண்டும். ஒரு இனத்தின் உரிமைகளை, நிலங்களை பறிப்பது நல்லிணக்கத்திற்கு குந்தகமா? அல்லது அடாத்தாக பறித்ததை திருப்பி கேட்பதால் நல்லிணக்கம் கெடுகிறதா என இவர்களது ஆசிரியர்கள், சட்டம், நீதி இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களது மதமோ, இனமோ, சட்டமோ, நீதியோ எதற்குமே எது சரி என தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என்ன இது? கருணாநிதியின் முரசொலி கேள்வி பதில் போல் உள்ளது 😂

இது வேறு இருக்கா நீங்கள் இவை எல்லாம் கற்று தெளிந்து தான் வத்திருக்கிறீர்கள் 😂

நாங்கள் இப்போ இருக்கின்ற கேள்வி பதில்களை படித்து தான் அறிந்து கொள்கின்றோம்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இந்த விகாரை மொட்டுக்கட்சியினருக்கு கௌரவப்பிரச்சனை. அவர்களே இதை பின்னின்று நடத்துகிறார்கள். இவர்களது கட்சியை சேர்ந்த 02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியே இதன் பின்னால் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டால் பொறுமையாய் இருக்க மாட்டோம் என சரத் வீர சேகர எச்சரிக்கிறார், அனுரா புலம்பெயர்ந்தவர்களுடன் உடன்பாடு செய்து இராணுவ முகாம்களை அகற்றுகிறார், திஸ்ஸ விகாரையை அகற்றப்போகிறார், நாட்டில் பௌத்தத்துக்கு சுதந்திரமில்லை, கொழும்பில் சைவ ஆலயங்கள் இருக்கின்றன, வடக்கில் பௌத்தத்திற்கு சுதந்திரமில்லை என இன்னொரு மொட்டுக்கட்சி அமைச்சர் அப்பட்டமான பொய் கூறுகிறார். சஜித்தும், அரசும் சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாராதிபதிக்கு உயரிய அதிகாரங்களை வழங்கும் தலைமைச்சங்க நாயகராக தெரிவு செய்கின்றனர். கொழும்பில் சைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தங்கள் காசில் நிலம் வேண்டி உரிய அனுமதி பெற்று ஆலயங்களை அமைக்கிறார்கள் வழிபடுகிறார்கள். வடக்கில் எழும் விகாரைகள் அப்படியா? தையிட்டியில் நிலைமை அப்படியா? அங்கு பௌத்தர்கள் வாழ்கிறார்களா? எதற்காக மக்கள் காணியில் விகாரை, யாருக்காக? இராணுவ நிலங்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள நிலங்கள் சரத் வீரசேகரவுடையதா? அல்லது மொட்டுக்கட்சியுடையதா? அதைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி புலம்பெயர் தமிழரை சொன்னால் அனுரா கேட்டுக்கொண்டு அடாவடியாக நடக்கமுடியுமா? சட்டம், நீதி சொல்வதை செய்வதற்கு புலம்பெயர் தமிழர் கதை எதற்கு? பயங்கரவாதச் சட்டம் எதற்கு இன்னும் அமுலில் இருக்கிறது? அது தமிழருக்கு, உரிமையை கேட்பவருக்கு எதிராகவா? இப்படி ஒற்றுமையை அழிக்கும் பேச்சுக்களை பேசும் நபர்களுக்கு எதிராக ஏன் பாவிக்கவில்லை? அப்போ திஸ்ஸ விகாரை அகற்றப்படாதென்றால், இன்னும் பல விகாரைகள் வடக்கில் எழும். அனுரவுக்கெதிராக எல்லா அரசியல் கட்சிகளும் செயற்படுவதால், இவர் பயந்து விட்டாரா? அல்லது தமிழருக்கெதிராக இவரும் மற்றைய கட்சிகளோடு இணைந்துவிட்டாரா? ஒரு இனத்தை அடக்கி, அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு எப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ முடியும் என அனுராதான் விளக்க வேண்டும். ஒரு இனத்தின் உரிமைகளை, நிலங்களை பறிப்பது நல்லிணக்கத்திற்கு குந்தகமா? அல்லது அடாத்தாக பறித்ததை திருப்பி கேட்பதால் நல்லிணக்கம் கெடுகிறதா என இவர்களது ஆசிரியர்கள், சட்டம், நீதி இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களது மதமோ, இனமோ, சட்டமோ, நீதியோ எதற்குமே எது சரி என தெரியாது.

அமைதியாக கழிக்க வேண்டிய கிறிஸ்மஸ் விடுமுறையில் ஒரு கிறிஸ்தவ உறவு இப்படி பதட்டப்படுவதை பார்க்க எனக்கே மனம் கேட்கவில்லை😂.

சரி ஒரே ஒரு கேள்வி?

புத்தசாசன அமைச்சு ஜனாதிபதி அனுரவுக்கு கீழேதான் வருகிறது. இந்த பிரச்சனையில் இவர்களுக்கு இனவாத எண்ணம் இல்லை எனில், மொட்டு கட்சி காலத்தில், ரணில் காலத்தில் கூட செய்யாத அரச அங்கீகாரம், பதவிநிலைகளை இந்த விகாரைக்கும், தேரருக்கும் ஏன் அனுரா இப்போ கொடுத்தார்?

சும்மா இருந்திருக்கலாமே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.