Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெறும் இலங்கை, நியுசிலாந்து போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது, கிரிகின்போ தகவலினடிப்படையில் இலங்கை அணியில் குசால் பெரேராவிற்கு பதிலாக பையனின் கமில் மிசாரா விளையாடுகிறார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இங்கிலாந்து அணிக்கெதிராக கமிண்டு மென்டிஸ் மற்றும் குசால் மென்டிஸின் பந்து வீச்சாளருக்கே இலகுவான பிடிகொடுத்து ஆட்டமிழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார் , பாதுகாப்பான சிறிய ஓட்டங்களுக்கான அடித்தேர்வுகள் கூட சிக்கலான பிட்சில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது ஆனால் அவர்களின் முயற்சியினை பாராட்டுகிறார்.

அதே வேளை கிரிகின்போ மற்ற வீரர்களின் எத்தனிப்பின்மையினை சுட்டிக்காட்டுகிறது.

நியுசிலாந்து வீரர் சாப்மன் நீண்ட எல்லைகள் கொண்ட கொழும்பு ஆடுகளத்தில் ஒற்றை இலக்கங்களை இரட்டை இலக்கமாக்குவதன் அவசியத்தினை கூறுகிறார், இந்த ஆடுகளம் புது ஆடுகளமாக இருப்பதால் (தொடர்ச்சியாக விளையாடும் போது மேலும் மேலும் மெதுவாகிவிடும்) ஓட்ட எண்ணிக்கையான 170 -175 என்பதினை கடந்து 180 - 185 ஆக இருக்கலாம் என கருதுகிறேன் (இன்று விளையாடவுள்ள ஆடுகளம் புதிய ஆடுகளம் என கிரிகின்போ கூறுகிறது).

நியுசிலாந்து அணிக்காக லொக்கி பேர்குசன் இன்று விளையாடுவார் என கூறப்படுகின்ற நிலையில் ஜேகப் டபி விளையாடமாட்டார் என தற்போதய நிலவரத்தினடிப்படையில் கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது, புதிய பந்தில் சிறப்பாக வேகப்பந்து வீசும் மட் கென்றி உள்ளார், அவருடன் மத்திய ஓவர்களிலிலும் இறுதி ஓவர்களிலும் சிறப்பாகபந்து வீசும் லொக்கி பேர்குசன் உள்ள நிலையில் வேகபந்து அனைத்துதுறை ஆட்டக்காரரான ஜிம்மி நீசமும் விளையாடுவார் என்பதாகவே கிரிகின்போ வீரர்கள் பட்டியல் காணப்படுகிறது.

இந்த உலக கிண்ண போட்டியில்பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் திணறும் ஜிம்மி நீசம் தொடர்ந்தும் நீடிப்பாரா அல்லது அவருக்கு பதிலாக (சுழல் பந்து சகலதுறை ஆட்டக்காரரான பிராஸ்வெல் காயத்தினால் இத்தொடரில் விளையாடவில்லை) வேறு ஒரு சகலதுறை ஆட்டக்காரரை களமிறக்குவார்களா?

இந்த ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதல் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் வாய்ப்புக்கள் அதிகம்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாற்றம் இல்லை நியுசிலாந்து அணியில் லொக்கிபேர்குசனும் இஸ் சோதியும் விளையாடுவார்கள் என கிரிகின்போ வீரர்கள் பட்டியல் கூறுகிறது.

இந்த ஆடுகளத்தில் ஆரம்ப ஓவர்களில் சுழல் பந்து வேகப்பந்து போல ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகின்றது, நியுசிலாந்து ஆரம்ப இணை வலது கை ஆட்டக்காரர்களாக இருப்பதால் இந்த போட்டியிலும் மதுசங்க மற்றும் வெல்லாலெகே ஆரம்ப ஓவர்களை போட வாய்ப்புள்ளது.

1-6 ஓவர்கள் முக்கியமாக உள்ள நிலையில் (50 -55 ஓட்டங்களை எடுத்தாக வேண்டிய நிலையில்) நியுசிலாந்து அணி மட் கென்றியுடன் பந்து வீசுவதற்கு ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர்களை பாவிக்க முடியுமா? சான்ட்னர், சோதி 8 ஓவர்கள் உள்ல நிலையில் கென்றியிற்கு ஆரம்ப ஓவர்களில்3 ஓவர்களை வழங்கப்பட்டுவிடும், பவர் பிளேயில் ஒரு ஓவர் லொக்கி பேர்குசன் வீசுவார் அடுத்த ஒரு ஓவரை ஒரு பகுதி நேர சுழல் பந்து வீச்சாளர்களிடம் தான் செல்லவேண்டும் என நினைக்கிறேன் (ரச்சின் அல்லது பிலிப்ஸ்) அந்த ஒரு ஓவரை இலங்கை அணி இலக்கு வைக்கும்.

இந்த போட்டியில் நியுசிலாந்து அணி இலங்கை அணியினை விட சகலதுறையிலும் சிறப்பான தன்மைகள் கொண்டு காணப்படுவதால் நியுசிலாந்து அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளது, ஆனால் ஜக்கம்மா இலங்கை அணி மாயாயாலம் செய்யும் என கூறியுள்ளது.

கடந்த போட்டியில் இலங்கை அணித்தலைவர் ஓப் ஸ்டம்ப்பிற்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு 3 வீரர்களை பாக்வேர்ட் பொயின்ட், பொயின்ட், கவர் என வைத்து எக்ட்ரா கவர் மிடோப் வைத்து நீண்ட நேரான எல்லைக்கோட்டினை திறந்து வைத்து முடியுமானால் நேரான எல்லைக்கோட்டிற்கு ஓப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்தினை உள் வளையத்தில் உள்ள வீரர்களுக்கு மேலாக அடிக்க இறுதி ஓவர்களில் தூண்டினார், இன்றைய போட்டியிலும் அவ்வாறான ஒரு களத்தடுப்பினை எதிர்பார்க்கலாம்.

Edited by vasee

  • Replies 1.7k
  • Views 52k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வில் இலங்கையின் முக்கிய ஓட்டங்களை பெறும் 3 தொடக்க ஆட்டக்காரர்கள் சுழலுக்கு குறைவான ஓட்ட விகிதங்களை கொண்டிருப்பதனையும் இங்கிலாந்து சுழலில் விக்கெட் எடுத்தது பாற்றி கூறுகிறார்கள், அதனால் மேலே கூறிய எனது கருத்து தவறாக தெரிகிறது நியுசிலாந்து கென்றியுடன் ஒரு முழு நேர சுழல் பந்து வீச்சாளரை பாவிக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

கார்லோஸ் எனும் ஒரு மனித அலுமாரி செய்த வேலையை யார் மறந்தாலும் ஸ்டுவர்ட் போர்ட் மறக்க மாட்டார்😂

#மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே 😂

பந்து போட்டது Ben Stokes இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

க‌ந்த‌ப்பு அண்ணா போர‌ வார‌ இட‌ம் எல்லாம் வெற்றி

நாளைக்கு இல‌ங்கையை தெரிவு செய்து இருக்கிறார் இல‌ங்கை வெல்ல‌க் கூடும் லொள்

சின்ன‌ குருட்டு ந‌ம்பிக்கை ஹா ஹா..................

இந்த t20 உலககோப்பைக்கு முதல் நடந்த தொடர்களில் இலங்கையை இங்கிலாந்து இலங்கை மண்ணில் 3-0 கணக்கில் வீழத்தியது.

பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவை 3-0 கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் பல முக்கிய அவுஸ்திரேலியா வீரர்கள் விளையாடவில்லை

இந்தியா மண்ணில் நியூசிலாந்து இந்தியாவிடம் 4-1 கணக்கில் தோற்றது. இதனால் இந்த சூப்பர் 8 குழு 2 இல் முதலிடம் இங்கிலாந்தும் இரண்டாம் இடம் பாகிஸ்தானும் தெரிவு செய்து விடைகளை எழுதினேன். நியூசிலாந்து இலங்கையை விட பலமான நாடாக இருந்தும் இலங்கையில் போட்டி நடப்பதினால் இலங்கையை 3 வது நாடாக தெரிவு செய்தேன். இதே போல ஆரம்ப சுற்று போட்டிகளிலும் ஒவ்வொரு குழுக்களில் அணிகளை வரிசைப்படுத்தினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

பந்து போட்டது Ben Stokes இல்லையா??

ஓம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.