Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

South Africa vs New Zealand, 1st Semi-Final at Kolkata, T20 World Cup, Mar 04 2026 - Live Cricket Score

Innings break

1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup

PrevNext

South Africa FlagSouth Africa

(20 ov) 169/8

New Zealand FlagNew Zealand

New Zealand chose to field.Stats view

Current RR: 8.45

 • Last 5 ov (RR): 61/3 (12.20)

  • Replies 1.9k
  • Views 61.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டத்தின் படி 170 ஒரு நல்ல இலக்கு. நியுசிலாந்து ஆரம்ப துடுப்பர்கள் நல்ல தொடக்கம் குடுக்காட்டி, கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவும் பிடிகளை எல்லாம் விடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பவர் பிளேயில, 84 ஓட்டங்கள். அலன் ஆறாவது பந்துப் பரிமாற்றத்தில் ஐந்து பந்துகளை எல்லைக்கு அனுப்பி விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புள்ளிகளை கணக்குப் பார்க்கும் வேலை இன்று இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

குழு நிலைப் போட்டிகளில், நியுசிலாந்து 175 அடிக்க தெ.ஆ 17 பந்துப் பரிமாற்றங்களிலேயே துரத்திப் பிடிச்சவை. இப்போ நிசி, அதைத் திருப்பிச் செய்யினம்

  • கருத்துக்கள உறவுகள்

நிசியின் இருவரும், இணைப்பாட்டமாக, இதுவரை 463 ஓட்டங்கள் மொத்தமாக அடித்துவிட்டார்கள். இன்று இரண்டாவது 100 ஓட்ட இணைப்பாட்டம்.

எல்லா உலகக் கோப்பையிலும், இதுதான் அதிகூடிய இணைப்பாட்டமும்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

1st Semi-Final (N), Eden Gardens, March 04, 2026, ICC Men's T20 World Cup

South Africa FlagSouth Africa

169/8

New Zealand FlagNew Zealand

(12.5/20 ov, T:170) 173/1

New Zealand won by 9 wickets (with 43 balls remaining)

Finn Allen* rhb

100

33

10

8

303.03

31 (7b)

24 (5b)

Rachin Ravindra lhb

13

11

2

0

118.18

10 minutes ago, செம்பாட்டான் said:

33 பந்துகள்.

ஒரே வீரன். பிஃன் அலன்.

finn.jpg

அடுத்த பக்கம் சம்பியன் கனவில் இருப்பவர்கள் பீதியாகப்போகிறார்கள் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்

ப்பா. பாத்துக் கொண்டு இருந்த எங்களுக்கே மூச்சு முட்டுதே. ஆடின அவங்களுக்கு. என்னா அடி. இம்மை மறுமை இல்லா அடி.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செம்பாட்டான் said:

ப்பா. பாத்துக் கொண்டு இருந்த எங்களுக்கே மூச்சு முட்டுதே. ஆடின அவங்களுக்கு. என்னா அடி. இம்மை மறுமை இல்லா அடி.

மீண்டும் ஒரு முறை தமது வழமையான பெயரை தென்னாபிரிக்கா உறுதிப்படுத்தியது!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

மீண்டும் ஒரு முறை தமது வழமையான பெயரை தென்னாபிரிக்கா உறுதிப்படுத்தியது!

நான் அவர்கள் அதைக் கடந்துவிட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால், பிஃன் அடிச்ச அடிக்கு, 250ஐயே அடிச்சு முடிச்சிருப்பாங்கள். அதுவும் அந்தக் கடைசிப் பரிமாற்றத்தில், அடிச்சானே. அவனுக்கு தொடையில் பிடிப்பு வேற. நின்டால்த் தானே, ஓட வேணும். ஓடாம நின்று, முடிச்சுவிட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடாததால் ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களில் நின்றது. எனினும் மார்கோ ஜன்சனின் ஆட்டமிழக்காமல் அதிரடியாக எடுத்த 55 (30 பந்துகள்) ஓட்டங்களுடனும், டெவால்ட் பிறெவிஸின் நிதானமான 34 (27 பந்துகள்) ஓட்டங்களுடன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸின் 29 (24 பந்துகள்) ஓட்டங்களோடும் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்துகளைச் சிதறடித்து தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம் பார்த்தனர். ஃபின் அலென்னின் அபாரமான மரண அடியுடன் ஆட்டமிழக்காமல் எடுத்த செஞ்சுரியான 100 (33 பந்துகள்) ஓட்டங்களுடனும், டிம் செய்ஃபேர்ட்டின் புயல்வேக 58 (33 பந்துகள்) ஓட்டங்களோடும் 12.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்தோடு இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றது.

யாழ் களப் போட்டியாளர்களில் எவரும் நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வெல்லும் எனக் கணிக்காததால், ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!

முதலாவது அரையிறுதிப் போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):

large.IMG_5836.jpeg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.