Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மான செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்கும் கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

22 Jan, 2026 | 01:03 PM

image

தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல; மாறாக, பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாக கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி World Woman House இல் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

“Women Leading the Changing Global Order”  உயர்மட்ட அமர்வு

“Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய பிரதமர், அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் போதிலும், அவர்களது உழைப்பு – குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா தொழில் மற்றும் விவசாயத் துறைகள் தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அரசியல் கண்ணோட்டத்தில், தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்களை விலக்குவது திட்டமிட்ட, கட்டமைப்பு ரீதியான செயற்பாடாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், தன்மைப் படுகொலை (Character Assassination), திட்டமிட்ட ஓரங்கட்டல்கள் போன்றவை, தலைமைத்துவத்திற்குத் தகுதியான பல பெண்களை அரசியலில் இருந்து விலகச் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான செயல்கள் ஏற்கனவே நிலவி வரும் ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த தடைகளை அகற்றுவது பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல என வலியுறுத்திய பிரதமர், பெண்கள் தன்னம்பிக்கை, அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவம் வழங்கக்கூடிய சூழலை உருவாக்க, நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் அடிப்படையாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் மீண்டெழுதலுக்கான உந்துதலும் அரசியல் அர்ப்பணிப்பும் இணைந்தால் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என பிரதமர் கூறினார்.

தற்போதைய அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதன் முக்கிய எடுத்துக்காட்டாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல; மாறாக, அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில், பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மட்டுமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

WhatsApp_Image_2026-01-22_at_12.51.30_PM

WhatsApp_Image_2026-01-22_at_12.51.29_PM

WhatsApp_Image_2026-01-22_at_12.51.29_PM

WhatsApp_Image_2026-01-22_at_12.51.28_PM

WhatsApp_Image_2026-01-22_at_12.51.27_PM

https://www.virakesari.lk/article/236688

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.