Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையால் 3 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை

Featured Replies

தமிழ்வின்,

அம்பாறை மாவட்டம் பொத்துவில் - ஊறணிக்குளம் செம்மண்குளம் காட்டுப்பகுதியில் மூன்று சடலங்கள் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

[Monday November 12 2007 07:37:01 AM GMT] [pathma]

நேற்று மீட்கப்பட்ட இந்த மூன்று சடலங்களில் அடையாளம் காணப்பட்ட இரண்டு சடலங்களும் தமிழர்களுடையது மற்றய சடலம் இதுவரை அடையாளம் காணப்படாதுள்ளது. அச்சடலமும் தமிழருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது

பொத்துவில் மருத்துவமனையில் வைக்கப்பட்ட இச்சடலங்களில் சாமித்தம்பி - குணராசா, எஸ்.குணரத்தினம் ஆகியோரது சடலங்களை அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

இவர்கள் விறகு வெட்டச்சென்று வீடுதிரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பொத்துவில் சிறிலங்கா காவல்துறையினர் இச்சடலங்களை மீட்டு பொத்துவில் மருத்துவமனையில் ஒப்படைத்திருக்கின்றனர். அத்துடன் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்த விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews

லங்காடிசென்ட்,

பொத்துவில் பிரதேசத்தில் கொல்லப்பட்ட மூவரின் சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம்

[12-11-2007 2.10pm]

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் - ஊறணிக்குளம், செம்மண்குளம் காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் நடவடிக்கை இன்று (நவ.11) எடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் கடந்த 10ம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இந்த சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இந்த பிரதேசத்தின் பல வியாபார நிலையங்களில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களுக்கான பற்றுச்சீட்டுக்களும் இதன்போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://lankadissent.com/index.php?option=c...20&Itemid=1

Defence.lk

STF confronts LTTE group; three LTTE bodies found - Pothuvil

Police Special Task Force personnel confronted a group of LTTE terrorists roaming inside the jungles of Pothuvil last evening (November 11) defence sources said.

According to the available information, the confrontation had taken place around 7 p.m., at a location inside the jungle in the Senminikulama area. During the subsequent search in situ, STF personnel had found three bodies of LTTE cadres and a tractor, the sources further said.

The three bodies are presently lying at the Pothuvil government hospital. Police investigations are in progress.

Meanwhile, a Muslim civilian was seriously injured in an LTTE claymore mine attack at Vaddan, south of Trincomalee around 7:30 last night (November 11). According to the sources, the LTTE terrorists had triggered the road side bomb targeting the victim's Canter truck.

The victim is presently undergoing treatments at Government hospital in Serunuwara.

http://www.defence.lk/new.asp?fname=20071112_01

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையால் 3 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை

[திங்கட்கிழமை, 12 நவம்பர் 2007, 08:28 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை றொட்டை செம்மணிக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு காட்டுப்பகுதிக்கு உழுவூர்தியில் சென்ற பொதுமக்களை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கடத்திச் சென்று சுட்டுப்படுகொலை செய்துள்ளனர்.

மூவரின் உடல்களை இன்று திங்கட்கிழமை பொத்துவில் மருத்துவமனையில் ஒப்படைத்த சிறிலங்கா அதிரடிப்படையினர், மூன்று உடல்களும் விடுதலைப் புலிகளின் உடல்கள் என்று கூறியுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான கண்ணகிபுரத்தைச்சேர்ந்த சாமித்தம்பி செல்வராசா, மூன்று பிள்ளைகளின் தந்தையான உழுவூர்தி ஓட்டுனரான எஸ்.குணரத்தினம் மற்றும் க.சுதாகரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. செல்வராசாவின் மனைவிக்கு குழந்தை பிறந்து 9 நாட்களே ஆகின்றது.

http://www.puthinam.com/full.php?22ymUcc3o...6D2e2HMC3b34ASe

இந்தச் செய்திகளை எப்படி சர்வதேச ஊடகங்களில வரவைக்கிறது?

இப்படி தமிழிலை மட்டும் எழுதிப்போட்டு விட்டா சரியோ?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜாஎல காட்டில் நடைபெற்ற கொலைகளுக்கு பழி வாங்கல் போலுள்ளது சாணக்கியன்.தமிழ் நெற்றில் இன்னும் இச்செய்தியை காணவில்லை.

படுபாவிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.