Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகளுக்கு யூனிசெஃப் நிதியுதவி: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஹெயிட்டியில் சிறுமிகளை கெடுத்தவர்கள் என்று இலங்கை இராணுவக்காரர் 108 பேர் திருப்பி அனுப்பப்பட்டால் அது ஐ.நாவின் சதி என்பார். இப்போ இது. இவர் போன்றவர்கள் இருக்கும்வரை.. அவ்வளவுதான்..

கள விதிகளுக்கமைய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

இங்கிருக்கும் நிறுவனங்களையெல்லாம் ஒவ்வொன்றாகக் கழற்றிவிடுகிறார்கள். புலிகளுக்கு உதவி என்பது தமிழர்களுக்கு செய்கின்ற உதவியெல்லாவற்றையும் சேர்த்தே இந்த வீரவன்ச கணக்கிலெடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

"யுனிசெவ்' ஆறு ஆண்டுகளில் புலிகளுக்கு ரூ.10 கோடி உதவி விமல் வீரவன்ச நாடாளுமன்றில் விசேட அறிக்கை

ஐ.நாவின் சிறுவர்களுக்கான நிதியம் (யுனிசெவ்) கடந்த ஆறு ஆண்டு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குப் பல சந்தர்ப்பங்களில் மொத்தமாக பத்துக்கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை வழங்கியிருக் கின்றது.

இவ்வாறு நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து குற்றம் சுமத்தியிருக்கிறார் ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ஸ.

நேற்று நாடாளுமன்றம் கூடியபோது விமல் வீரவன்ஸ எம்.பி. இவ்விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் அனுமதியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியிருப்பவை வருமாறு:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிக்கையை வாசிப்பதற்கு அனுமதியளித்ததையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த வார இறுதியில் வெளிவந்த சிங்களப் பத்திரிகையொன்றில் பிரசுரமான "யுனிசெவ்' அமைப்பு தொடர்பான விடயங்களில் இந்த அதியுயர் சபை கவனம் செலுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நிதியம் அல்லது "யுனிசெவ்' நிறுவனம். ஏனைய உறுப்பினர் நாடுகளில் போன்றே இலங்கையிலும் சிறுவர்களுக்காகவே செயல்படுவதாகக் கூறிக் கொள்கிறது. என்றாலும், இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் திகதியிலிருந்து 2006 ஜுலை 22 ஆம் திகதி வரையிலான காலத்தில் புலிகள் இயக்கத்துக்கு பத்துக்கோடி மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 784 ரூபாவை பல சந்தர்ப்பங்களில் பெற்றுக் கொடுத்துள்ளது. "ரி.ஆர்.ஓ' என்ற புலிகளின் இயக்கத்தின் கூலிக்காக சேவையாற்றும் அரச சார்பற்ற தன்னார்வ அமைப்பின் ஊடாகவே இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆழிப்பேரலை ஏற்பட்ட சமயத்தில் ஆழிப்பேரலை உதவிகளைக் கொண்டு வந்து பிடிபட்டதும் இந்த ரி.ஆர்.ஓ. அமைப்புதான். அது புலிப் பயரங்கவாதிகளின் "கைக்கூலியே' என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, ரி.ஆர்.ஓ. ஊடாக புலி பயங்கரவாதத்துக்கு பணம் பெற்றுக்கொடுத்திருப்பதை இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தென்னைமரம் வெட்ட 4 லட்சம் ரூபா

யுனிசெவ் நிறுவனம் ஏதாவதொரு அமைப்புக்கு நிதி உதவி வழங்கும் போது முதல் முறை வழங்கிய நிதி செலவு செய்யப்பட்டவிதம் தொடர் பான முறையான அறிக்கை ஒன்று இல் லாமல் இரண்டாம் முறை நிதி வழங் காது. தமக்குக் கிடைத்த பணம் செல வழிக்கப்பட்ட விதம் தொடர் பாக ஒப் படைத்திருந்த அறிக்கையொன் றில் தென்னை மரமொன்றை வெட்டுவதற் காக ரூபா 4 லட்சம் செலவிடப்பட்ட தாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நகைப் புக்குரிய ஒரு விடயமாக "யுனிசெவ்' அமைப் புக்குள் பேசப்பட்டது. என்றாலும் "யுனிசெவ்' அதிகாரிகள் என்ன செய்தனர்? ரி.ஆர்.ஓ.வின் ஊடாக புலிப்பயங்கரவாதிகளுக் குத் தாம் பெற்றுக் கொடுத்த நிதி தொடர்பாக செயல் படுவதற்கு கிளிநொச்சியை வதிவிட மாகக் கொண்ட ஒருவரையே அதா வது புலி உறுப்பினர் ஒருவரையே கொழும்பு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அது தொடக்கம் ரி.ஆர்.ஓ. பெற்றுக் கொண்ட பணம், செலவு செய்யப்பட்ட விதத்தை தெரிவிக்கும் அறிக்கைகளில் உள்ள நகைப்புக்கிடமான விடயங்கள் "யுனிசெவ்' நிறுவனத்துக்குள் கதைக் கப்படுவது தவிர்க்கப்பட்டது.

உளவுபார்க்கும் நிறுவனமாக

அது மாத்திரமல்ல. தமக்குச் சொந் தமான ஙிகஎ/1074,இலக்கத்தைக் கொண்ட "லாண்ட் குரூசர்' வாகனத்தை ரி.ஆர்.ஓ. ஊடக புலிகள் அமைப்பின் பயனீட்டுக் காக "யுனிசெவ்' பெற்றுக் கொடுத்துள் ளது. தற்போது கூட அந்த வாகனம் "யுனிசெவ்' விடம் இல்லை. அறிந்து கொள்ளப்பட்ட புலி உறுப்பினர் களுக்கு தொழில் வழங்கும்உளவு பார்ப் பதற்காக அவர்களுக்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாக "யுனிசெவ்' மாறி யுள்ளது. விடயங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்த பின்னரே நாம் இதனைத் தெரி விக்கின்றோம்.

ஐ.நா. சபைக்கு உரித்தான நிர்வாகச் செயல்பாடுகளையும் மீறி, ஓய்வு பெறும் வயதையும் கடந்த பெனி பு×ன் என்ற பெண்மணி, கிளிநொச்சி யிலுள்ள ஐ.நா. சபைக்குச் சொந்தமான இணை அலுவல கத்தில் கடமையாற் றுகிறார் என இதற்கு முன்னரும் நான் இந்தச் சபையில் கூறியுள் ளேன். அவர் புலிகள் இயக்கத்துக்காக பகிரங்க மாகவே செயல்படுவதையும் நான் குறிப்பிட்டுள்ளேன். இந்த விடயத்தை நாம் அம்பலப்படுத்தியதன் பின்னர், இந்த பெனி பு×ன் என்ற புலிகள் சார்பு சர்வதேச "ஏஜெண்ட்' ஐ.நா.சபை மூலம் இரகசியமாக சூடானுக்கு மாற்றம் செய்யப்பட்டார். தற்போது "யுனிசெவ்' நிறுவனத்தில் இருக்கும் ஜெனிபர் டேலர் என்ற பெண்மணியும் கூட பெனிபு×னின் பாத்திரத்தையே நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பெற்றுக் கொடுத்த பணம் செலவழிக் கப்பட்டதற்கான முறையான பற்றுச் சீட்டுக்கள், வங்கி அறிக்கைகள், கோவைகள் ஆகியவற்றைச் சமர்ப் பித்து நிரூபிக்கும் ஒழுங்கு முறையைக் கூட கவனிக்காது, ரி.ஆர்.ஓ. ஊடாக புலிப்பயங் கரவாத்துக்கு பணத்தை வாரி வழங்கு பவர் தற்போதைய பெனி பு×ன் அவர்தான்.

புலி உறுப்பினர்களால்

நிறைந்துள்ளது யுனிசெவ்

"யுனிசெவ்' அலுவலகத்தை புலி உறுப்பினர்களால் ஏற்கனவே நிறைத்து விட்டார் ஜெனிபர் டேலர்.

அருள்ராஜ் ஸ்கந்தராஜா. தர்ஷனி, கிருபாகரன், தயாளதேவி துவாரகா, அபராஜித என்.தியாகராஜா, ரவிந் திரகுமார் குஞ்சிதபாதம், வினோராஜ் ரட்ணராஜ் ஆகியோர் அவர்களில் சிலராவர். நாம் அவர்களைப் புலி உறுப் பினர்கள் என அழைப்பது அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற காரணத் தினாலல்ல. அவ்வாறு அழைப்ப தாயிருந்தால் "யுனிசெவ்' நிறு வனத் தில் கடமையாற்றும் எழுபது வீத மானோரை புலி உறுப்பினர்கள் என்றே நாம் அழைக்க நேரிடும். அவ்வாறான தொரு அபாண்டத்தைச் சுமத்த நாம் தயா ராயில்லை. எனினும்,மேலே பெயர் குறிப் பிட்ட நபர்கள் தொடர்பான விடயங்களை ஆதாரங்களுடனேயே நாம் வெளிப்படுத் தினோம்.

நாம் மேலே பெயர் குறிப்பிட்ட நபர் களில் ரவீந்திரகுமார் குஞ்சிதபாதம், ரி.ஆர்.ஓ மூலம் சமர்ப்பிக்கப்படும் பற்றுச் சீட்டுக்களை பரிசீலனை செய்வதற் காகவே நியமிக்கப்பட்டார். கிளிநொச் சியை வதி விடமாகக் கொண்ட அவருக்கு அவ்வாறான தொரு பொறுப்பு வழங் கப்பட்டதற்கான காரணம், ரி.ஆர்.ஓ அனுப்பும் அறிக்கையில் இருக்கும் ""பொய்கள்''நிறுவனத் தில் கதைக் கப் படுவதைத் தடுப்ப தற்காகவேயாகும்.

சிங்களம் தெரியாதவர் தென்பகுதிக்கு

தயாளதேவி துவாரகா என்பவரும் கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்ட வராவார். சிங்களம் கதைக்கத் தெரியாத அவர் தென்பகுதிக்கான "யுனிசெவ்' நடவடிக்கைகளுக்காகவே நியமிக் கப்பட்டுள்ளார். சிங்கள தெரியாத இந்தப் பெண்மணி தெற்கின் நடவடிக் கைகளுக் காக நியமிக்கப்பட்டமை ஏன்? "யுனிசெவ்வின்' அறிமுக அட்டையை வைத் திருக்கும் அவரால் எந்த இடத் துக்கும் சுதந்திரமாகப் போய்வர முடியும். இன் னொருவரான அருள்ராஜ் ஸ்கந்தராஜா என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தில் பயிலும் போதே புலிகள் இயக்கத் தின் மாணவர் செயல் வீரராக இருந்தவரா வார். தர்ஷினி கிருபாகரன் என்பவர் கூட கிளிநொச்சி யின் நடவடிக்கைகளுக்காக இணைத் துக் கொள்ளப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினராவார். இப்படியானவர் கள்தான் ""யுனிசெவ்'' நிறுவனத்தின் ஜெனிபர்களால் நியமித்துக் கொள்ளப் பட்டுள்ளனர்.

பொதுவாகப் பார்க்கப்போனால், ஐ.நா. சபையில் சேவையாற்றுபவர்கள் எவருக்கும் சார்பாகவோ,எதிராகவோ செயல்படக் கூடாது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனை ஐ.நா. சபையின் செயலாளரும் உறுதிபடக் கூறியிருந்தார். அந்தக் கொள்கையை அப்பட்டமாக மீறும் விதத்திலேயே ஜெனிபர் டேலர் உள்ளிட்ட குழுவினர் செயல்படுகின்றனர். செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்களில் சிலர் கொல் லப்பட்ட சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப் புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங் களில் "யுனிசெவ்' அடையாள அட்டை சகிதம் ஜெனிபர் டேலர் கலந்துக் கொண்டுள்ளார். அவர் களுக்கிடையில் பெட்ரீஸியா பர்வேஸ், லாராஸ்கோட ரேவல், மெகினி, தர்ஷனீ கிருபாகரன் ஆகியோரும் இருந் தனர்.

கிளிநொச்சி செல்லும்போதும் வரும்போதும் வாகனங்கள் சோதிக்கப்படுவதில்லை

பொதுவாக "யுனிசெவ்' போன்ற நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப் படுவதில்லை. கிளிநொச் சியை நோக்கிச் செல்லும் "யுனிசெவ்' வாகனங்களில் பெரிய பார்சல்களும் அநேகமாக அனுப்பப் படுகின்றன. கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு வரும் அவ்வாறான பார்சல்களும் இருக் கின்றன. இவற்றால் என்னென்ன பரிமாறப்படுகின்றன என்பது யாருக்கும் தெரியாது. ரி.ஆர்.ஓ ஊடாகலட்சக்கணக்கான பணத் தைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங் கிய அமைப்பொன்று அதைவிட அதிக மான உதவிகளை வழங்காது என்று கூற முடியுமா?

இவை வெளிவந்திருக்கும் சிறு தக வல்கள் மாத்திரமே. உண்மையான நிலைமை இதனை விட மோசமான தாகும். எனவே இது தொடர்பாக அரசு கடுமையாகக் கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்துக்கு பணம் வழங்கல். இலங்கையில் கடுமை யான தண்டனைக்குரிய குற்றமாகும். ஐ.நா. சபையின் இணக்கத்தோடு அது தொடர்பான சட்ட மூலமொன்று எல் லோரது ஏகோபித்த ஆதரவோடு இந்த அதியுயர் சபையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஆனால், ரி.ஆர்.ஓ. மூலம் புலிப் பயங் கரவாதிகளுக்கு பணம், வாகனம் மற்றும் வேறு அநேகமானவற்றை ஐ.நா. சபையே வழங்கும்போது எங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் வலு வற்றதாகும் போது அதன் பயன் என்ன? பிரிவினைவாதப் பயங்கர வாதத்தின் கடுமையான அச்சுறுத் தலுக்குள்ளாகியிருக்கும் நாட்டில், ஐ.நா. சபைக்குச் சொந்தமான சிறப்புரிமைகள் இவ்வாறு பயங்கரவாதத் துக்குச் சார் பாகப் பயன்படுத்த இடமளிக்க முடியுமா? அவர்கள் இடமளித்து விட்டு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? இந்தப் பிரச்சினைகளுக்கு நாமே பதிலைத் தேடிக்கொள்ள வேண்டும். இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக இம்மாதம் 13 ஆம் திகதி (இன்று) பிரித்தானிய நாடாளுமன்றத் தில் மீண்டும் கலந்துரையாடுவதற்குத் தயாராவதாகக் கூறப்படும் இச் சந் தர்ப்பத்தில், மேற்கத்திய ஏகாதிபத்தியத் தின் கைக் கூலியாக மாறியிருக்கும் ஐ.நா. சபையின் இந்தநடவடிக்கை தொடர்பாக இதனையும் விட அவதா னிப்போடு கலந்துரையாடி தீர்மானங் களுக்கு வரவேண்டுமல்லவா? இது தொடர்பான வெளிநாட்டமைச் சரின் நிலைப்பாடு என்ன? இந்த நாட்டை நேசிக்கும் மக்களுக்கு இது தொடர்பான பதில் கட்டாயமாகத் தேவை என்றார் அவர்.

-உதயன்

யூனிசெப் அமைப்பில் பணிபுரியும் அத்தனை தமிழ் ஊழியர்களின் பெயர்களையும் பட்டியல் போட்டு புலி என்ற புரளியை கிளப்பி விட்டதற்கு, இனவாதத்தின் பெயரால் தொழிற் போட்டி காரணம் என்று அறிய முடிகிறது. மேற்படி ஊழியர்கள் சிலர் மிகவும் அச்சமடைந்து காணப்படுவதுடன், வெளிநாட்டுக்கு குடிபெயரவும் ஆலோசித்துவருகின்றனர். இதனைத்தான் இந்த சதிநடவடிக்கைக்கு பின்னால் இருப்பவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இதைப் போன்றே சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்திலும், உள்ள இளம் தமிழ் உயரதிகாரி ஒருவர் காரணம் எதுவுமின்றி அண்மையில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சரளமாக சிங்களம் பேசும் கரும்புலிகள் தென்னிலங்கையில் என்று கூறி சாதாரண சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிடும் சூழ்சியை சிரிலங்கா இனவாத அரசும் அதனோடு இணைந்த ஜே.வி.பி போன்ற அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான தமிழர்களுக்கு எதிரான ஜே.வி.பி. யின் நடவடிக்கைகளுக்கு அதில் முண்டு கொடுக்கும் தமிழ் மற்றும் முஸ்லீம் உறுப்பினர்கள் பதில் தருவார்களா?

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.