Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார்.

சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

எக்ஸ் தள பதிவு 

இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் விலங்குகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப் | Trump Shared Racist Video Depicting Obama

இந்த காணொளி பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் கறுப்பின செனட்டருமான டிம் ஸ்கொட், "வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று விமர்சித்ததோடு, உடனடியாக அதனை நீக்க வலியுறுத்தினார்.

அத்துடன் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் "ஜனாதிபதியால் செய்யப்பட்ட அருவருப்பான செயல் இது; ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதனை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதேநேரம் எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ட்ரம்ப் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடும் விமர்சனம் 

ஆரம்பத்தில் இது வெறும் "இன்டர்நெட் மீம் காணொளி" (Internet Meme Video) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வாதிட்டார். ஆனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, "ஊழியர் ஒருவரின் தவறால் அந்த காணொளி பகிரப்பட்டுவிட்டது" என்று கூறி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அதனை நீக்கினார்.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப் | Trump Shared Racist Video Depicting Obama

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே பராக் ஒபாமாவைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். முன்னதாக, ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று ஆதாரமற்ற வாதத்தைத் தூண்டிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய இனவெறிச் சித்திரங்கள் அமெரிக்க அரசியலில் நாகரீகமற்ற போக்கை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 14.4வீத மக்கள் கறுப்பினத்தவர்கள் (Black or African American) ஆவர். இத்தகைய இனவெறிச் சித்தரிப்புகள் கறுப்பின மக்களிடையே பெரும் மனக்காயங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Tamilwin
No image preview

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீ...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை...
  • கருத்துக்கள உறவுகள்

ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ட்றம்புக்கு… 79 ஆகியும், மூளை 10 வயதிற்கு மேல் விருத்தி அடையவில்லை.

இங்கே இது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

குடியரசுக் கட்சியின் தலைவர்களே வெறுத்து பேசுமளவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று

தலைவர் ரம் பேசியுள்ளார்.

அனேகமாக இது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரம்பைக் கிழித்து தொங்கவிடும் ஒபாமா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Trump won’t apologize for sharing since-deleted racist video depicting Obamas as apes on Truth Social.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன்.

தேர்தல் முறைகேடு

அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை - ட்ரம்ப் | Trump Didn T See Scene Depicting Obama As Monkey

அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார்.

இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இழிவுபடுத்தும் காட்சிகள்

2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை - ட்ரம்ப் | Trump Didn T See Scene Depicting Obama As Monkey

இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன்.

அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார்.

மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. 

Tamilwin
No image preview

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்ல...

தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

15trump-news-obama-zfmv-facebookJumbo.jp

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்பின் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொயில், 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் இறுதியில், ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளின் உடலுடன் இணைத்து மிகவும் இழிவாகச் சித்தரிக்கும் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் ‘The Lion Sleeps Tonight” என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.

இந்த காணொளிக்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.குடியரசுக் கட்சியின் ஒரே கறுப்பின செனட்டரான டிம் ஸ்காட் ‘இந்த வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது’ என சாடினார்.

முதலில் இதனை சாதாரண ‘மீம்’ ஒன்று என நியாயப்படுத்திய வெள்ளை மாளிகை, பின்னர் எழுந்த எதிர்ப்பால் அந்தப் பதிவை நீக்கியது. இது ஒரு ஊழியரால் தவறுதலாகப் பகிரப்பட்டது என்று விளக்கம் அளித்தது.

பிரையன் டெய்லர் கோஹன் என்பவரின் பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பராக் ஒபாமா, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்:’பொது வாழ்வில் இருக்க வேண்டிய வெட்கம் மற்றும் கண்ணியம் தற்போது தொலைந்து போய்விட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒருவிதமான ‘கோமாளிக்கூத்து’ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க மக்கள் இன்னும் நேர்மை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.’இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,  ‘நான் அந்த வீடியோவின் ஆரம்பப் பகுதியை மட்டுமே பார்த்தேன். இறுதியில் இருந்த அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை, ‘ என ட்ரம்ப் பதிலளித்தார்.இந்த விவாதங்களுக்கு மத்தியில்,  சிக்காகோவில் அமைக்கப்பட்டு வரும் தனது ஜனாதிபதி நூலகம் தொடர்பில் ஒபாமா உற்சாகமாக உரையாற்றினார். இது வரும் ஜூன் 2026-இல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1465046

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.