Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் பொதுத்தேர்தல்: சானே தகாய்ச்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி!

Published By: Digital Desk 3

09 Feb, 2026 | 11:31 AM

image

ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தலில், பிரதமர் சானே தகாய்ச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான தகாய்ச்சி, தனது அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

ஜப்பானிய பாராளுமன்றத்தின் சக்திவாய்ந்த கீழவையான 'டயட்'-ல் உள்ள மொத்தம் 465 இடங்களில் லிபரல் டெமோக்ரடிக் கட்சி 316 இடங்களை வென்று தனிப்பெரும் பெரும்பான்மையை பெற்றுள்ளது.

இது 1955-ஆம் ஆண்டு கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது.

தகாய்ச்சியின் லிபரல் டெமோக்ரடிக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான 'ஜப்பான் இன்னோவேஷன் பார்ட்டி' (Ishin) இணைந்து மொத்தம் 352 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை (Supermajority) தகாய்ச்சி பெற்றுள்ளதால், மேலவையின் அனுமதி இல்லாமலேயே முக்கிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரத்தை அவர் தற்போது பெற்றுள்ளார்.

பிரிட்டனின் 'இரும்புப் பெண்மணி' மார்கரெட் தாட்சரைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட சானே தகாய்ச்சி, இந்த வெற்றியின் மூலம் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்:

பொருளாதாரத்தை ஊக்குவிக்க வரி குறைப்பு நடவடிக்கைகளை அவர் அறிவிக்கவுள்ளார். இது நிதிச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் இராணுவச் செலவினங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

பெரும்பான்மை கிடைத்துள்ளதால், ஜப்பானின் நீண்டகால அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவரவும் அவர் முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான 'சென்ட்ரிஸ்ட் ரிஃபார்ம் அலையன்ஸ்' பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆளும் கூட்டணியின் அதிரடி செல்வாக்கிற்கு முன்னால் எதிர்க்கட்சிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என அரசியல் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

https://www.virakesari.lk/article/238190

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தெரிவான தகாய்ச்சிக்கு ட்ரம்ப் வாழ்த்து

09 Feb, 2026 | 12:22 PM

image

“ஜப்பானில் நடந்த இந்த தேர்தல் ஜப்பானின் வருங்காலத்துக்கு மிக முக்கியமான ஒன்று. தகாய்ச்சி ஏற்கெனவே வலிமையான, சக்தி படைத்தவர், அறிவாற்றல் கொண்ட தலைவர் என்பதை நிரூபித்திருக்கிறார்” என ஜப்பான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சானே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டை உண்மையாக நேசிப்பவர் தகாய்ச்சி என்றும் கூறிய ட்ரம்ப், எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெள்ளை மாளிகையில் தகாய்ச்சியை வரவேற்க தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜப்பான் நாட்டில் நேற்று (8) நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி (Liberal Democrat Party) 316 இடங்களைப் பெற்று, அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சானே தகைச்சி (Sanae Takaichi), அதிக வாக்குகளைப் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜப்பான் பெண் பிரதமர் என்ற சிறப்பை அடைந்திருக்கிறார்.

இந்நிலையில், தகாய்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ட்ரம்ப், அண்மையில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டபோது, அங்கு தகாய்ச்சியின் நிர்வாகத் திறமையையும் தலைமைப் பண்பையும் கண்டு ட்ரம்ப் பாராட்டியிருந்தார்.

https://www.virakesari.lk/article/238205

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜப்பான் நாடும் சுவிர்ற்சலாந்தும் அடிக்கடி தேர்தல் முறையில் மக்கள் கணிப்பை நடத்துகின்றார்கள். மிக சரியான முறை இதுவே.

நம்பி வாக்களித்த குற்றத்திற்காக நான்கு வருட கொடுங்கோல் ஆட்சி முறை நீக்கப்பட வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.