Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்

Published By: Vishnu

09 Feb, 2026 | 08:17 PM

image

நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/238259

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளொன்றுக்கு 100 புற்றுநோயாளர்கள்; 40 பேர் உயிரிழப்பு - பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி

10 Feb, 2026 | 04:48 PM

image

(செ.சுபதர்ஷனி)

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது இந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார சவாலாக மாறியுள்ளது. அந்த வகையில் நாளாந்தம் நாடளாவிய ரீதியில் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தைத் தழுவுகின்றனர். நோயாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளி பிரிவு வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் மத்திய நிலையத்தை திங்கட்கிழமை (09) பிரதியமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது இந்நாட்டில் புற்றுநோய் ஒரு பிரதான சுகாதாரப் நெறுக்கடியாக உருவெடுத்துள்ளது. சிகிச்சைகளுக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக நாட்டிள் உள்ள பெரும்பாலான நோயாளர்கள் புற்றுநோயின் இறுதி நிலைகளிலேயே சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் அவர்களுக்குப் பலதரப்பட்ட சிகிச்சை முறைகளை வழங்க வேண்டியுள்ளது. அத்தோடு நாட்டில் பதிவாகும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது.

நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 40 பேர் புற்றுநோயால் மரணத்தை தழுவுகின்றனர். அந்தவகையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் மத்திய நிலையங்களை நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய 6 பிரதான வைத்தியசாலைகளில் இத்தகைய நிலையங்கள் இயங்கி வருகின்றன. புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மத்திய நிலையத்தில் மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் ஆகியவற்றைக் கண்டறியும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. அரச விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் இங்கு பரிசோதனைகளைச் செய்துகொள்ள முடியும்.

ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளான உணவுப் பாதுகாப்பு, சூழல் காரணிகள் மற்றும் விவசாய இரசாயனப் பயன்பாடு குறித்து அமைச்சு மட்டத்திலான விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகளவில் காணப்படுகிறது.

வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/238330

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

வெற்றிலை, புகையிலை மற்றும் பாக்கு மெல்லுதல் காரணமாக நாளாந்தம் 10 வாய்ப் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் மூவர் உயிரிழக்கின்றனர். அதேபோல், பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க முறையான விழிப்புணர்வும், ஆரம்பக்கட்ட பரிசோதனைகளும் அவசியம் என்றார்.

https://www.virakesari.lk/article/238330

வாய்ப் புற்று நோய்க்கு பிரதான காரணமாக வெற்றிலை, பாக்கு, புகையிலை மெல்லுதல் தெளிவாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது. மார்பகப் புற்று நோய் தடுப்பிற்கு வருடாந்த மார்பகப் பரிசோதனை (mammogram) மிகச் சிறந்த தடுப்பு முறை. கருப்பைவாயில் (cervix) புற்று நோய்க்கு Human Papillomavirus (HPV) என்ற வைரஸ் சில சமயங்களில் காரணமாக இருப்பதால், பெண் குழந்தைகளுக்கு பதின்ம வயதில் HPV தடுப்பூசி போட வேண்டும். இலங்கையில் இது நடைமுறையில் இருக்கிறதா தெரியவில்லை. மேற்கு நாடுகளில் HPV தடுப்பூசி ஆண், பெண் இருபாலாருக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. வாய் மூலப் பாலியல் (oral sex) நடவடிக்கைகளில் ஈடு பட்டால், ஆண்களில் வாய், தொண்டையில் புற்று நோய் ஏற்படவும் HPV காரணமாகலாம் என்பதால் இந்தப் பரிந்துரை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

கருப்பைவாயில் (cervix) புற்று நோய்க்கு Human Papillomavirus (HPV) என்ற வைரஸ் சில சமயங்களில் காரணமாக இருப்பதால், பெண் குழந்தைகளுக்கு பதின்ம வயதில் HPV தடுப்பூசி போட வேண்டும். இலங்கையில் இது நடைமுறையில் இருக்கிறதா தெரியவில்லை. மேற்கு நாடுகளில் HPV தடுப்பூசி ஆண், பெண் இருபாலாருக்கும் பரிந்துரைக்கப் படுகிறது. வாய் மூலப் பாலியல் (oral sex) நடவடிக்கைகளில் ஈடு பட்டால், ஆண்களில் வாய், தொண்டையில் புற்று நோய் ஏற்படவும் HPV காரணமாகலாம் என்பதால் இந்தப் பரிந்துரை.

இலங்கையில் HPV தடுப்பூசி மாணவிகளுக்கு இலவசமாக போடப்படுகிறது அண்ணா.

HPV1.jpg

HPV2.jpg

HPV3.jpg

HPV4.jpg

PDF இணைப்பு 👇

http://old.epid.gov.lk/web/images/pdf/HPV/Leaflet/information_leaflet_tamil.pdf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.