Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

sumanthiran.jpg

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

https://akkinikkunchu.com/359979/

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcTfjTRDWuM--cJTZPAQ_Aw M._A._Sumanthiran.jpg

முதலில் சுத்துமாத்து சுமந்திரன் மீதுதான், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.சு*மந்திரனும் சம்பந்தனும் சிறீலங்காவின் சுதந்திர தினத்துக்கு போகவில்லையா?

2.சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்த தமிழர்களை பார்த்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றுசொல்லி கேலி கிண்டல் செய்யவில்லையா?

3.தமிழர்களை அழித்த இராணுவத்தின் வெற்றி விழாவிற்கு பொப்பி மலருடன் போகவில்லையா?

4.சம்பந்தனுடன் நின்று சிங்ககொடியை தூக்கி ஆட்டி காட்டவில்லையா?

5.சு*மந்திரன் தமிழ் மக்களை சந்திக்க வரும்போது Stf பாதுகாப்பு புடைசூழ வரவில்லையா?

6.தமிழரசு கட்சி தமிழர் மீது யுத்தம் செய்த பொன்சேகாவை ஆதரித்து வாக்கு கேட்கவில்லையா?

7.சு*மந்திரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் செய்ய சீவிகே சயந்தன் போன்றவர்களை பயன்படுத்தி விக்னேஸ்வரனை முடக்கவில்லையா?

8.சு*மந்திரன் யுத்த குற்ற விசாரனையை நீர்த்து போக செய்யவில்லையா?

சு*மந்திரன் இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்லவில்லையா?

9.சு*மந்திரன் புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்தீகரிப்பு செய்தார்கள் என்றுசொல்லவில்லையா?

10.சு*மந்திரன் சிங்கள அரச தலைவர்களுடன் தேனீலவு கொண்டாடவில்லையா?

11.சு*மந்திரன் ஏக்கிய ராஜ்ஜியவை வைத்து அது சமஸ்டி தான் என்று சொல்ல வில்லையா?

12.சு*மந்திரன் கடந்த பொது தேர்தலில் தான் வெல்வதற்காக கட்சிக்காக செயல்பட்ட வாக்கு அதிகம் பெறக்கூடிய வேட்பாளர்களை தவிர்த்து தனது அடியாட்களை மட்டும் தேர்தலில் போட்டியிட வைக்கவில்லையா?

13.சு*மந்திரன் தனக்கு புலிகளின் போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லவில்லையா?

14.சு*மந்திரன் சிறீதரனுடன் சேர்ந்து தனக்கான வாக்குகளை சேகரிக்கவில்லையா?

15.தமிழரசு கட்சியின் தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் வென்ற. சிறீதரனை சு*மந்திரன் தனது பினாமிகள் மூலம் சட்ட சாவாலுக்கு உட்படுத்தி முடக்கவில்லையா ?

16.கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் பொது வேட்பாள் அரியநேத்திரனை நிராகரித்து சஜித்திற்கு வாக்கு சேகரிக்கவில்லையா?

17.புலிகள் கூடாது ஆனால் புலிகளால் உருவாக்ப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சு*மந்திரன் தேர்தல் கேட்டு வெல்லவில்லையா?

18.மகிந்தவின் கட்சியில் இருந்த மகிந்தவின் விசுவாசி சாணக்கியனை தமிழரசு கட்சியில் சேர்க்கவில்லையா?

19.வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது அரசியல் வெற்றிகளுக்காக உடைக்கவில்லையா சு*மந்திரன்?

20.தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று கூறிய சு*மந்திரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காக தனது வெற்றியை உறுதிப்படுத்த தேர்தலில் தோற்றவர்களை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லையா?

21.கடந்த பாராளுமன்ற தேர்ரலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிலே தனது கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் ஆக போட்டியிட முயற்சிப்பது சரியானதா?

22.தமிழின விரோதியும் தமிழரை காட்டி கொடுத்து கடத்தி கப்பம் வாங்கி படுகொலை செய்த தீவுப்பகுதியில் வைத்து மாவை சேனாதிராஜா சிவாஜிலிங்கம் போன்றவர்களை அடித்து மண்டை உடைத்து காலை முறித்த ட*க்ளசிடம் மாநகர சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்கவில்லையா?

23.சு*மந்திரன் போலி முகநூல் கணக்கு வைத்து அவதூறு செய்யவில்லையா?

24.சு*மந்திரன், க*பி வித்தியாதரனுக்கு பணம் கொடுத்து கா*லைக்கதிரில் தனது புகழ் பாடி எழுத சொல்ல வில்லையா?

25.சு*மந்திரன் தான் தனது சிறுவயதில் இருந்தே சிங்களவர்களுடன் வாழ்வதையிட்டு பெருமையாக நினைக்கிறேன் என்று சொல்லவில்லையா?

26.சு*மந்திரன் தனது பிள்ளைகளுக்கு சிங்களவர்களை திருமணம் செய்து வைக்கவில்லையா?

27.சு*மந்திரன் தமிழரசு கட்சியின் பிரதி பொதுச்செயளாளர் ஆக சுத்துமாத்து செய்து பின்கதவால் வந்தாரா இல்லையா?

28. சு*மந்திரன் கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்கு எதிராக சிறீதரனுக்கு எதிராக வண்டில் சின்னத்தில் தனது ஆட்களை தேர்தல் கேட்க நிறுத்தவில்லையா.

Roy Roy

#####################################

எல்லாம் பதவி பறிபோனதால் வந்த சுடலை ஞானமோ அல்லது சந்தர்ப்பவாதமோ?

எப்படி ரணில் காலத்தில்... ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் வேட்டி கட்டிக் கொண்டு ஜோடியாக போயிருந்து கொண்டு மக்களால் நிராகரிக்கபட்டவர்கள் கறுப்பு நாளாக அனுஸ்டிக்கிறார்கள் என்று கொச்சை படுத்தி விட்டு,

பின்பு தேர்தலில் தோற்ற பின்... கறுப்பு நாளாக நாடகம் ஆடிய சுத்துமாத்து சுமந்திரன்.

Tharan Kulam

#####################################

அதுமட்டுமா... இராணுவ தளபதி சரத்துக்கு வாக்களிக்கும்படி, தமிழ் மக்களிடம் பிரச்சாரம் செய்த ஒருவர் தான் சுமந்திரன்.

Allai Sri

#####################################

மற்றவர்களை முட்டாகள் என, சுமி எண்ணிக் கொள்கின்றார் போலும்.. கடந்த 16 வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பை பாதுகாத்தே வந்துள்ளார். இன்று தான் சிறிதரனின் நடவடிக்கைதான் தான் சிங்கள தேசத்தின் இராணுவமயமாக்கம் என்பதை கண்டு கொண்டார்.

Tholar Velan

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSX9CnUv8iaVyY-6OznEYa

நல்லாட்சி (?) அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடிகளை நீர்த்து போக செய்யும் நோக்கில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஒன்றை உருவாக்கினார்

இவ்வாறு உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு (OMP) மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி உட்பட ஏழு ஆணையாளர்களை நியமித்தார்கள்

அதாவது இராணுவத்தின் Legal Department யின் பணிப்பாளர் நாயகமாக கடைமையாற்றிய மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris என்பவர் குறித்த OMP அலுவலகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார்

வடக்கு கிழக்கில் பெரும்தொகையாக அப்பாவி பொதுமக்கள் காணாமலாக்கப்பட்ட 2007-2010 காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவிருந்த மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris இராணுவத்தின் பிரதான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டிருந்தார்

இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு விசுவாசமான மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris OMP ற்கு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டதை சர்வதேச ரீதியாக International Truth and Justice Project (ITJP) உட்பட பலவேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முழுமையாக நிராகரித்து கண்டனம் தெரிவித்தன

ஆனால் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் மிக நெருங்கிய சகாவாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் அரச நிறுவனமான OMP இற்கு இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை ஆதரித்தார்

ஜனாதிபதி சட்டத்தரணியான திரு சுமந்திரன் அவர்கள் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டதா, இல்லையென்றால் ஏன் விசாரிக்கப்படவில்லை, யார் அதை விசாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக OMP இற்கு சாட்சியாளராக (Witness) மட்டுமே மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris வை அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்

ஆனால் மிக தெளிவாக OMP ஐயும் அரச அலுவலகமான OMP யில் இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதையும் ஆதரித்தார்

விசேடமாக OMP யால் கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட மீறல் சம்பந்தமான எவ்வித குற்றத்திற்கும் வழிவகுக்காத வகையில் உருவாக்கப்பட்ட போதிலும் இந்த அலுவலகம் நிறுவுவது தொடர்பான சட்டமூலத்தை பாதிக்கப்பட்டோரின் எந்தவிதமான ஆலோசனைகளுமின்றி திரு சுமந்திரன் ஆதரித்தார்

இது போதாதென்று OMP ஐ ஆதரித்து... 'வேண்டும் வேண்டும் OMP வேண்டும்' என போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் .

குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை கூட சுமந்திரன் ஆட்கள் தாக்கினார்கள்

இது மாத்திரமின்றி திரு சுமந்திரன் அவர்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் செல்லப்பிள்ளையாக அதிகாரத்தோடு இருந்த போது தான் செம்மணி புதைகுழி பிரதான சந்தேகநபர் பிரிகேடியர் லலித் ஹேவா உட்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது

நாவற்குழியில் 24 க்கு மேற்பட்டவர்களை கடத்தி காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது

யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவின் தலையீட்டுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திலேயே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டார்கள்

இது போன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அப்போது அதிகாரம்மிக்க நபராகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் வாய் மூடி அமைதியாகவே இருந்து அத்தனை அத்துமீறல்களுக்கும் ஒத்துழைத்தார்

ஆனால் அதே திரு சுமந்திரன் அவர்கள் தற்போது பதவி இழந்த நிலையில் இராணுவமயமாக்கல் பற்றி பேசுகின்றார்

கொந்தளிக்கின்றார்

உளறுகின்றார்

அச்சுறுத்துகின்றார்

இனமொன்றின் குரல்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசின் அசிங்கமான அரசியல் குழு.

இதில் இருப்பதில் இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு யார் யார் என்பதை பார்ப்போம்?

1. சுமந்திரன் -கட்சியில் யுத்தம் முடிவடைந்த பிறகு UNP கட்சியில் இருந்து தேசியபட்டியல் ஊடாக ரணில் உள்ள அனுப்பப்பட்டவர்

2. துரைராசசிங்கம் -1994 ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட MP யாக தெரிவு செய்யப்பட்டு கொழும்பில் இலவசமாக வீடு பெற்று கொண்டவர் .அக்காலத்தில் இயக்கம் ஒரு தேவைக்காக வீட்டை பயண்படுத்த கேட்ட நேரம் தரமுடியாது என்று சொன்னதால் இவரை அன்று அழைத்து அடைத்து வைத்தார்கள்.

பின்னர் அவருடைய மச்சான் பாதர் இயங்கத்தின் பழைய போராளி என்பதால் அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க இனிமேல் எந்த தேர்தலும் கேட்க கூடாது என்று விடுவிக்கப்பட்டார்.

பின்னர் எந்த தேர்தலும் கேட்காத அவரை 2010 ஆண்டு மட்டக்களப்பில் பயங்கரமான சூழ்நிலையில் தேர்தல் கேட்க ஆட்கள் இல்லாத போது துறைராசசிங்கம் ஓம் என்று அரியம் செல்வராஜா ஐயா போன்றவர்கள் கேட்க ஏற்று கொண்டு இறுதி நேரத்தில் உயிருக்கு பயந்து கதவை பூட்டிவிட்டு மனைவியின் சொந்த ஊராண யாழ்ப்பாணம் ஓடி ஓழித்து விட்டார்.

அதன் பிற்படு தங்கள் உயிரையும் மதிக்காது தமிழரசுக்கட்சிக்காக அரியம், செல்வராஜா.யோகேஸபரன் போன்றவர்கள் தேர்தல் கேட்டு கட்சியை பலப்படுத்த

2012கிழக்கு சுமுகமாக மாகாணசபை தேர்தல் கேட்டு அதில் விவசாய அமைச்சர் ஆனார் அதனுடாக மண்டூரில் தொழில் சாலை அமைத்த நேரம் மண்டூரில் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு வேலை கொடுக்காது அதனது உறவுகாரர்களுக்கு வந்தாறுமூலையில் கொடுத்தார்.

பிற்பாடு சுமந்திரனுடன் இணைந்து கட்சி யாப்பையும் மீறி தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்பதவியை கட்சியின் செயலாளர் தான் என்பதால் தன்னிச்சையாக சுமந்திரனுடன் இணைந்து கலையரசனுக்கு கொடுத்தார்.

அதனால் ஏற்பட்ட பிரச்சணையால் தனது செயலாளர் பதவியை துறந்தார் இப்போதும் அரசியல் குழு என்று சொல்லி சுமந்திரனுடன் இணைந்து கட்சியை சீரழிப்பதில் இவர் சிறந்தவர் (நீங்கள் மனதில் கேட்பது புரிகின்றது கொழும்பு வீட்டை சுமந்திரனின் உதவியுடன் 33 கோடிக்கு விற்றவர்

3. கலையரசன் -பலதேர்தல்களில் தோற்றாலும் சுமந்திரன் விசுவாசி அதனால் அவருக்கு மத்திய குழு முடிவின்றி தான்தோன்றி தனமாக கலையரசனுக்கு துறையராச்சிங்கம் கையொப்பத்துடன் MP பதவி கொடுத்தார்.

4. சாணக்கியன் -2012 மட்டக்களப்பு களுவாஞ்சி குடியில் இராசமாணிக்கத்தாரின் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டில் இருந்து வந்த இவன் .குருக்கல் மடம் வடிவேல் அண்ணன் களுவாஞ்சிகுடியில் நடத்திவந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை தனதாக்குவதற்காக மகிந்த கம்பனியில் பட்டிருப்பு அமைப்பாளர் ஆனார்.

அதை எதிர்த்து வடிவேல் அண்ணன் நீதிமன்றம் செல்ல இறுதியில் 30வருடம் நடத்திய வடிவேல் அண்ணனுக்கும் இல்லை இவனுக்கும் இல்லை என்ற நிலையை ஏற்படுதினான் பாவம் அந்த மனிசன் .அதன்பிற்பாடு மகிந்த கம்பனியூடாக 15ஏக்கரில் கொட்டல்,110ஏக்கரில் தென்னம் தோப்பு,களுவாஞ்சிகுடியில் மிகபெரிய ஆடம்பர காரியாலயம், களுவாஞ்சிகுடி பிரதேச்செயலகத்திற்கு முன் மக பெரிய மண்டபம் கட்டுவதற்கு உழைத்து கொண்டார்.

2015 மகிந்த கட்சியில் இணைந்து தேர்தல்கேட்டார் அந்த நேரம் தமிழரசுக்கு தேர்தல் காரியாலயம் அமைக்க களுவாஞ்சி குடியில் கடை கொடுத்தமைக்காக அந்த கடையை ஆட்கள் வைத்து உடைத்து எறியூட்டினார்.

அந்த தேர்தலில் வெறும் 850வாக்குகள் மட்டுமே

2019 தமிழரசு கட்சில் கொஞ்ச பணத்தை சுமோ போன்றவர்களுக்கு கொடுத்து தமிழரசில் இணைந்தார் இப்போ பதவி மோகத்தில் கட்சியை சீரழிக்கின்றார்

5. குகதாசன் -அவருக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியாது பாவம் அந்த மனிசன்

6. குலநாயகம் 40வருடமாக கட்சியில் என்ன நடக்கின்றது என்று தெரியாத மத்திய குழு நிருவாக செயலாளர் கஞ்சா செழியனின் (கட்சியை நீதிமன்றில் நிறுத்தியவர் மாமா)சுமந்திரன் சொன்னா தலையாட்டித்து வருவேர்

7. CVK சிவஞானம் ஆரம்ப காலத்தில் சுமத்திரனுக்கு எதிராக இந்த பிசாசை சம்மந்தரும் சேனாதியும் தான் கொண்டு வந்தவர்கள் என்று கூறியவர் பின்னர் தனக்கு பதில் தலைமை என்றவுடன் வாயடைத்தவர் மன்னிக்க வேண்டும் இவர் அந்த காலத்தில் டக்கிலஸ் ஊடாக தன்னுடைய மகளுக்கு வங்கியில் வேலை எடுத்து கொடுத்தவர்.

இப்போது வரைக்கும் மாகாண சபை அவைத்தலைவராக இருந்தமையால் மாதம் அவருக்கு இரண்டு லட்டத்திற்கு அதிகமாகவும் 6உத்தியோகத்தர்கலாக தன்னுடைய உறவுகளை போட்டு அவர்களுக்கான சம்பளத்தையும் எடுப்பவர்(ஆனால் கட்சிக்கு சாப்பிட்ட கையால காகம் திறத்த மாட்டார் )தற்போது சுமந்திரனின் தலையாட்டி மொம்மை

8. சத்தியலிங்கம் -பெயர்தான் லிங்கம் ஆனால் இது பெரிய அசிங்கம் துரையர் பதவி பறிபோனதும் பதில் நியமனத்தில் வந்து சுமோ சொல்வதை எல்லாம் செய்பவர் வ்வுனியாவில் 4000 வாக்குகலை பெற்ற சத்தியலிங்கத்துக்கு சுமோ டீல் வைத்தார் உனக்கு தேசியபட்டியல் எனக்கு பதில் செயலாளர் என்று அதற்கமைய அடிக்கடி கூட்டத்தை கூட்டுவார் சுகம் இல்லை என்று ஒழித்திடுவார் சுகம் இல்லாதவருக்கு அவரே கையொப்பம் வைத்து தேசியபட்டியல் MP ஆகினார் பின்னர் இரண்டையும் பார்க்க தனக்கு சுகம் இல்லை என்று அடுத்த பதிலை சுமோக்கு கொடுத்தார் .

இப்ப எந்த கூட்டத்தையும் தவறவிடமாட்டார்

இந்த அரசியல் குழு எப்படி நியாயமான ஜனநாயகமாக முடிவு எடுக்கும் சுமந்திரன் சொல்வதை அப்படியோ நடைமுறை படுத்துவார்.

இது கட்சி அரசியல் குழு இல்லை. "சுமோ கம்பனி" மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாண புலனாய்வு

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

635119205_122295632768238160_72273427562

images?q=tbn:ANd9GcRw9tCTRVkBYIwcrhau0Fd images?q=tbn:ANd9GcQrKklN5lQU0_eTZV6JrkT

21-618e6c886dae2.webp

சுமந்தரனிடம் பல கேள்வி,

1. கட்சியின் தலைவர் தேர்வில் தோற்ற பின் புதிய தலைவரின் செயற்பாட்டுக்கு ஏன் வழக்கு போட்டு தடுத்தீர்கள் ?

2. நீங்க நல்லாட்சி காலத்தில் இறுதி யுத்த காலம் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பேற்று வழிநடாத்திய மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்தமை ஏன் ?

3. முப்படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்க நீங்கள் சம்மந்தன் ஐயா காலத்தில் அந்த குழுவில் பங்கு பற்றி ஆதரவளித்தது ஏன் ?

4. எத்தனை தடவை அரசுக்கு ஆதரவாக வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்காமல் நழுவி வெளி நடப்பு செய்தீர்கள், முதுகெலும்பு இருந்தால் எதிர்த்து வாக்களித்திருக்கலாம் ஏன் ?

5. பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக ஏன் உங்களால் வாக்களிக்க முடியவில்லை ?

6. இலங்கை சுதந்திர தினத்தை தமிழர் தேசம் கரிநாளாக பிரகடனம் செய்து போராடிய போது அரசுக்கு ஆதரவாக உங்களின் மனைவியோடு ஆதரவாக ஏன் போனீர்கள் ?

7. இறுதி யுத்த வெற்றி விழா இராணுவம் கொண்டாடிய போது பொப்பி மலர் அணிந்து பாராளுமன்றம் சென்று அரசுக்கு இராணுவத்திற்கு ஆதரவளித்தது ஏன் ?

8. இன்று வரை இராணுவத்தின் ஆதரவோடு அவர்களின் பாதுகாப்பை பெற்று திரிவது ஏன் ?

9. கட்சியில் நீங்களும், சம்மந்தன் ஐயாவும் தான் சிங்க கொடியை ஏற்று நடப்பவர்கள் என்று சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஏன் ?

10. எமது விடுதலைப் போராட்டத்தையும் தலைமையையும் கடுமையாக பொதுவெளியில் விமர்சித்து அறிக்கை விட்டது ஏன் ?

11. எமது மக்கள் கொத்து கொத்தாக இனவழிப்பு செய்த போது இனப்படுகொலைக்கான சாட்சியம் போதாது, சர்வதேச விசாரணை முடிந்து விட்டது என காலத்தை இழுத்தடித்து போர்குற்ற விசாரணை நீத்து போக அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது எங்ஙனம் ?

12. கடந்த ஐனாதிபதித் தேர்தலில் தமிழினத்திற்கு எந்த விமோசனமும் தரமுடியாத சஜித் பிரேமதாசவிடம் கோடி பணம் பெற்று ஆதரவளித்தது ஏன் ? எத்தனை கோடி பணம் பெற்று யார் யாருக்கு பஙாகிடப்பட்டது என்ற விளக்கத்தை சொல்ல முடியுமா ?

13. JVP கட்சி யாழ்ப்பாணத்தில் நடாத்திய மேதின நிகழ் அனுர குமார திசநாயக்காவோடு சிவப்பு சேட் அணிந்து முன் வரிசையில் கலந்து கொண்டது ஏன் ?

14. இராணுவ மயமாக்கலுக்கு எதிராக மக்கள் போராட்டகளத்தில் பங்கெடுக்காமல் போராடிய மக்களை மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் நாடகம் என ஏளனம் செய்தது ஏன் ?

15. கடந்த காலங்களில் ரணிலோடு சேர்ந்து அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு அந்த அரசியல் அமைச்சராக இருந்த விஜயகலா அக்காவோடு விமானப்படையில் கூதூகலமாக பயணித்து இராணுவ அதிகாரிகளோடு உறவாடி ஆதரவளித்து சுகபோகம் அனுபவித்தது எப்படி மீள நினைப்பதில்லையா ?

16. இன்று உங்களுடைய காழ்ப்புணர்சிக்காக கெளரவ சிறீதரன் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டினை விட பன் மடங்கு நீங்களும் உங்கள் தரப்பும் 200% இந்த இனத்திற்கு எதிராகவே செய்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும், இந்த விஷயங்களுக்காக ஒரு நீதி விசாரணையை ஏன் உங்களால் செய்ய முடியாதுள்ளது ?

கூட்ட அறிக்கைகளை உங்களால் வெளிப்படுத்தலாமே ?

படங்கள் காட்டி கதை சொல்வதை விட, அவருடன் போட்டி போடும் தரப்பை விடுத்து... நீதி விசாரணை குழுவை அல்லது கட்சியின் பொது சபையை கூட்டி இந்த பிணக்குகள் ஏன் தீர்க்கப்படாமல் நீடித்து செல்கின்றீர்கள் ?

Vaishu Pusparaj 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.