Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-4-9.jpg?resize=750%2C375&ssl

89,000 இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாநிலத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நீண்டகால குடியுரிமைப் பிரச்சினை மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து குறித்து “மனிதாபிமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற” தீர்வைக் கோரி முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நேற்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின், 

இந்த பிரச்சினை “ஆழ்ந்த மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும் விவரித்தார்.

அத்துடன், சுமார் 89,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாம்களுக்குள்ளும் வெளியேயும் தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிக்கின்றனர்.

அவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள், மேலும் பலர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1983 ஆம் ஆண்டு முதல், அடுத்தடுத்த தமிழக அரசாங்கங்கள், மத்திய அரசின் ஒப்புதலுடன், இலங்கையில் இன மோதலில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு தங்குமிடம், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளன.

இருப்பினும், பலர் குடியுரிமை அல்லது நீண்டகால விசா அந்தஸ்தைப் பெற முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அத்துடன், மாநில ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் குறிப்பிட்டு, குடியுரிமை விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதைத் தடைசெய்யும் முந்தைய நிர்வாக வழிமுறைகளை இரத்து செய்யுமாறும், பொருத்தமான இடங்களில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளைத் தள்ளுபடி செய்யுமாறும், விரைவான செயலாக்கத்திற்காக மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்குமாறும், 2025 ஜனவரி 9 ஆம் திகதி வரை தங்கியிருந்த பதிவுசெய்யப்பட்ட இலங்கைத் தமிழ் நாட்டினரை “சட்டவிரோத குடியேறிகளாக” கருதக்கூடாது என்பதை முறையாக தெளிவுபடுத்துமாறும் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தினார்.

இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக “கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும், ஆழமான கலாச்சார உறவுடனும்” வாழ்ந்ததாக ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், மனிதாபிமான அடிப்படையில் சாதகமான முடிவை எடுக்குமாறும் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டமூலம், 2025 மீதான விவாதங்களின் போது, அகதிகள் பிரச்சினையை திமுக ஒருபோதும் தன்னிடம் எடுத்துச் செல்லவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியபோது, இந்தப் பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது.

இந்தக் கூற்றை திமுக எம்பி கனிமொழி கருணாநிதி மறுத்தார், அவர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதங்களின் விவரங்களை மேற்கோள் காட்டினார்.

இந் நிலையில் அரசியல் ரீதியாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரக் கருப்பொருள்களாக ஆளும் திமுக தமிழ் மொழி, அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி வரும் நேரத்தில் தமிழக முதலமைச்சரின் இந்தக் கடிதம் வந்துள்ளது. 

இந்தக் கடிதம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மற்றும் சட்ட தெளிவுக்காக அழுத்தம் கொடுப்பதன் மூலம், திமுக தமிழ் ஆதரவு வாக்காளர்களையும் இலங்கை அகதிகளின் அனுதாபிகளையும் ஒருங்கிணைக்க முயல்கிறது.

நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், இதுவரை 11 இலங்கை அகதிகளுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் ஒருவர் மட்டுமே வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார், மீதமுள்ள பத்து பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர், இது அவர்களின் நிலையை முறைப்படுத்துவதில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

https://athavannews.com/2026/1465008

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அகதிகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நாமல் வேண்டுகோள்

Feb 16, 2026 - 05:30 PM

இலங்கை அகதிகள் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நாமல் வேண்டுகோள்

தென்னிந்தியாவில் வசிக்கும் 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்துள்ள கோரிக்கை வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

"பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும், ஸ்திரத்தன்மை, கௌரவம் மற்றும் பாதுகாப்பான சட்ட அந்தஸ்தை எதிர்பார்க்கும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு இக்கோரிக்கை நம்பிக்கையளிக்கிறது.

எனினும், இக்கோரிக்கையானது உண்மையான மனிதாபிமான அக்கறையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்றும், வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களை இலக்காகக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் நாங்கள் உண்மையாக நம்புகிறோம். ஏனெனில் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான காலகட்டங்களில் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

30 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பாக நாடு திரும்புவதை எமது அரசாங்கம் தொடர்ந்து எளிதாக்கியது. சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், அவர்கள் தமது தாய்நாட்டில் கௌரவமாகத் தமது வாழ்க்கையைக் மீளக்கட்டியெழுப்புவதற்குப் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது தமிழக முகாம்களில் இருந்து நாடு திரும்ப விரும்புவோர் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. நாடு திரும்ப விரும்புவோரின் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து, தேவையற்ற தடைகளின்றி அவர்கள் சமூகத்துடன் இணைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கையர்கள் இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி, இங்கு உரிமையுள்ள குடிமக்களாக வாழ முடியும்.

இந்த 89,000 இலங்கையர்களும் எமது மக்கள். அவர்களின் நல்வாழ்வு, பாதுகாப்பு மற்றும் கௌரவம் ஆகியவற்றிற்கு நாமே பொறுப்பு. இந்த உணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களையும், தமிழக அரசாங்கத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களினதும் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான தீர்வொன்றை நோக்கி நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்," என நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlp4fwki000t356nztfnqf0x

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.