Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

February 17, 2026 12:33 pm

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர்.

தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

” கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச் சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும்.

முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும். மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும். இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.” – என்றார்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://oruvan.com/draft-new-constitution-with-thimpu-principles-tamil-parties-in-jaffna-unanimously-decide/

செயற்கை நுண்ணறிவிடம் திம்பு கோட்பாடுகள் எவை என்று கேட்டபோது :

திம்பு கோட்பாடுகள் – 4 அடிப்படை முன்வைப்புகள்

  1. தமிழர் ஒரு தனித்த இனமாக அங்கீகாரம் பெறுதல்
    (Recognition of the Tamils of Sri Lanka as a distinct nationality)

  2. வடகிழக்கு பகுதிகள் தமிழர் தாயகமாக அங்கீகாரம் பெறுதல்
    (Recognition of the existence of a traditional homeland for the Tamils in the North and East)

  3. தமிழர் தன்னாட்சியுரிமை (Self-determination) பெறுதல்
    (Recognition of the right of self-determination of the Tamil nation)

  4. இலங்கையில் வாழும் அனைத்து தமிழருக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்படுதல்
    (Recognition of full citizenship and other fundamental democratic rights of all Tamils who look upon the island as their country)

இவற்றில் மூன்றாவதான 'தமிழர் தன்னாட்சியுரிமை' என்பதைச் சிங்களவர் ஒருபோதும் தரப் போவதில்லை என்று நினைக்கிறேன். குறைந்தபட்சத் தீர்வு ஒன்று வேண்டுமானால் இதற்கு மாற்றீடாகத் தமிழர்களுக்கு மேலதிக உரிமைகள் கிடைக்கத்தக்கவாறு வேறு கோரிக்கைகளை முன்வைக்கலாம். இல்லாவிட்டால் சரணாகதி அரசியலை மேலும் பல தசாப்தங்களுக்குத் தொடர வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் என்பதை இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று எழுத்து மூலம் அங்கீகரித்தது. அதை அன்று ஏற்றுக் கொண்டு, அதை பலப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் எமது பங்களிப்பை வழங்கி, தொடர்ந்து அதில் இருந்த போதாமைகளுக்காக அரசியல் ரீதியில் போராடியிருந்தால், வட கிழக்கு தமிழரின் தாயகம் என்பது நடைமுறையில் உருவாகியிருக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. அதை அடியோடு நிராகரித்த நாம் அதில் இருந்த நல்ல விடயங்களைக்கூட இழந்து இன்று அதை விட பலமடங்கு பின்னோக்கி சென்றிருக்கிறோம்.

சொற்களிலும் வசனங்களிலும் தொங்கிக் கொண்டு பிடிவாதம் பிடித்து ஈகோ பிரச்சனைகளை உருவாக்காமல் நடைமுறையில் தமிழர் பிரதேசங்களை தக்க வைக்க தந்திரோபாய நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு உடனடித்தேவை. அரசியல்வாதிகளுக்கு தேவைகள் வேறு இருக்கலாம்.

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.